Appendices
Appendix 9

Abraham: Original Messenger of Islam

One of the prevalent myths is that Muhammad was the founder of Islam. Although Islam, total submission to God alone, is the only religion recognized by God since the time of Adam (3:19, 3:85), Abraham is reported in the Quran as the first user of the word "Islam" and the one who called us "Muslims" (22:78). Abraham's exemplary submission to God is demonstrated by his famous willingness to sacrifice his only son, Ismail, when he thought that that was God's command. As it turns out, such a command was in fact from Satan.

God Never Ordered Abraham to Sacrifice His Son

God is the Most Merciful. He never violates His own law (7:28). Any person who believes that the Most Merciful ordered Abraham to kill his son cannot possibly make it to God's Heaven. Such evil thought about God is grossly blasphemous. Nowhere in the Quran do we see that God ordered Abraham to kill his son. On the contrary, God intervened to save Abraham and Ismail from Satan's plot (37:107), and He told Abraham: "You believed the dream" (37:105). Undoubtedly, it was a dream inspired by Satan. God's irrevocable law is: "God never advocates sin" (7:28)

Millat Ibrahim

Islam is called "Millat Ibrahim" (The Religion of Abraham) throughout the Quran (2:130, 2:135; 3:95; 4:125; 6:161; 12:37-38; 16:123; 21:73; 22:78). Moreover, the Quran informs us that Muhammad was a follower of Abraham (16:123).

Due to a general unawareness of the fact that Abraham was the original messenger of Islam, many so-called Muslims challenge God: "If the Quran is complete and fully detailed (as claimed by God), where can we find the number of Rak`ahs (units) in each contact prayer (Salat)?" We learn from the Quran that all religious practices of Islam were already established before the Quran's revelation (8:35, 9:54, 16:123, 21:73, 22:27, 28:27). Verse 16:123 is direct proof that all religious practices in Islam were intact when Muhammad was born. Muhammad was enjoined to "follow the religion of Abraham." If I ask you to buy a color TV, it is assumed that you know what a color TV is. Similarly, when God enjoined Muhammad to follow the practices of Abraham (16:123), such practices must have been well known.

Another proof of divine preservation of the Islamic practices given to Abraham is the "Universal Acceptance" of such practices. There is no dispute concerning the number of Rak`ahs in all five daily prayers. This proves the divine preservation of Salat. The Quran's mathematical code confirms the number of Rak`ahs in the five prayers 2, 4, 4, 3, and 4, respectively. The number 24434 is a multiple of 19.

The Quran deals only with practices that were distorted. For example, the distorted ablution is restored in 5:6 to its original four steps. The tone of voice during the contact prayers (Salat) was distorted - many Muslims pray silently. This was corrected in the Quran, 17:110. The fasting during Ramadan was modified in the Quran to allow intercourse during the night (2:187). Zakat is restored in 6:141, and Hajj is restored to the four correct months (see Appendix 15).

Appendix 9

ஆப்ரஹாம்: இஸ்லாமின் ஆதித்தூதர்

இஸ்லாமின் ஸ்தாபகர் முஹம்மத் ஆவார் என்பது எங்கும் வியாபித்திருக்கின்ற புராணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதமின் காலத்தில் இருந்து கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கமாக இஸ்லாம். கடவுளுக்கு மட்டுமே முற்றிலும் சரணடைதல், இருந்த போதிலும் [3:19, 85], "இஸ்லாம்" [சரணடைதல்) எனும் வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் ஆப்ரஹாம்தான் என்றும், மேலும் நமக்கு "முஸ்லிம்கள்", அதாவது சரணடைந்தோர் என பெயரிட்டவர் என்றும் இந்தக் குர்ஆனில் விவரித்துக் கூறப்படுகின்றது [22:78). ஆப்ரஹாமின் கடவுளுக்கான முன்மாதிரியான சரணடைதல், அது கடவுளின் கட்டளை என்று அவர் நினைத்தபோது, அவருடைய ஒரே மகனான இஸ்மாயிலைப் பலியிடுவதற்கு, பிரசித்திபெற்ற அவருடைய தயார் நிலையின் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றது. இப்போது வெளிப்பட்டுள்ளபடி, அத்தகையதொரு கட்டளை உண்மையில் சாத்தானிடம் இருந்து வந்ததாகும்.

ஆப்ரஹாமிடம் அவருடைய மகனைப் பலியிடுமாறு கடவுள் ஒருபோதும் கட்டளையிடவில்லை

கடவுள் மிக்க கருணையாளராக இருக்கின்றார். தன்னுடைய சொந்தச் சட்டத்தை அவர் ஒருபோதும் மீறுவதில்லை (7:28). மிக்க கருணையாளர் ஆப்ரஹாமிடம் அவருடைய மகனைக் கொல்லுமாறு கட்டளையிட்டார் என்று நம்புகின்ற எந்த நபரும் கடவுளின் சுவனத்தை அடைவது சாத்தியமானதாக இல்லை. கடவுளைப்பற்றிய இத்தகைய தீய எண்ணம் மிகப்பெருமளவில் இறைநிந்தனை நிறைந்ததாகும். சுடவுள் ஆப்ரஹாமிடம் அவருடைய மகனைக் கொல்லுமாறு கட்டளையிட்டதாக இந்த குர்ஆனில் எந்த இடத்திலும் நாம் காணவில்லை. மாறாக, சாத்தானின் சதியில் இருந்து ஆப்ரஹாமையும் இஸ்மாயீலையும் காப்பாற்றுவதற்காகத்தான் கடவுள் குறுக்கிட்டார் (37:107), மேலும் அவர் ஆப்ரஹாமிடம் கூறினார்: "நீர் அந்தக் கனவை நம்பி விட்டீர்" [37:105]. சந்தேகத்திற்கிடமின்றி, அது சாத்தானால் உந்தப்பட்ட ஒரு கனவாக இருந்தது. கடவுளின் மாற்ற முடியாத சட்டமாவது : "கடவுள் ஒருபோதும் பாவத்தை ஆதரிப்பதில்லை" (7:28).

மில்லத் இப்ராஹிம்

இக்குர்ஆன் முழுவதிலும் இஸ்லாம் "மில்லத் இப்ராஹிர்" [ஆப்ரஹாமின் மார்க்கம்) என்று அழைக்கப்படுகின்றது (2:130, 135; 3:95; 4:125; 6:161; 12:37-38; 16:123: 21:73: 22:78). இன்னும் அதிகமாக, முஹம்மத் ஆப்ரஹாமைப் பின்பற்றியவராக இருந்தார் என்பதை இக்குர்ஆன் நமக்குத் தெரிவிக்கின்றது [16:123).

இஸ்லாமின் ஆதித்தூதராக இருந்தவர் ஆப்ரஹாம்தான் என்ற உண்மையைக் குறித்த பொதுவானதோர் அறியாமையின் காரணத்தால், பெயர்தாங்கி முஸ்லிம்கள் பலர் கடவுளுக்குச் சவால் விடுகின்றனர்: "(கடவுளால் உறுதியாகக் கூறப்பட்டுள்ளபடி இந்தக் குர்ஆன் முழுமையானதாகவும் முற்றிலும் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் இருந்தால், ஒவ்வொரு (ஸலாத்) தொடர்புத் தொழுகையின் ரக அத்துகளின் (தொகுதிகளின்) எண்ணிக்கையை எங்கே நாம் காண்பது?" இஸ்லாமின் [சரணடைதல்] அனைத்து வழிபாட்டு அநுஷ்டானங்களும் இக்குர்ஆனின் வெளிப்பாட்டிற்கு முன்னர் ஏற்கனவே நிலைநாட்டப்பட்டிருந்தன என்பதை நாம் இக்குர்ஆனில் இருந்து அறிந்து கொள்கின்றோம் (8:35; 9:54; 16:123; 21:73; 22:27; 28:27). முஹம்மத் பிறந்தபோது இஸ்லாமின் வழிபாட்டு அனுஷ்டானங்கள் அனைத்தும் சிதையாமல் இருந்தன என்பதற்கு வசனம் 16:123 நேரடியான சான்றாகும். "ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு" முஹம்மத் கட்டளையிடப்பட்டிருந்தார். வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை வாங்குமாறு நான் உங்களிடம் கூறினால், உங்களுக்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்றால் என்ன என்று தெரியும் என்பது புரிந்துக்கொள்ளப்படுகிறது. அதுபோலவே, ஆப்ரஹாமின் அநுஷ்டானங்களைப் பின்பற்றுமாறு கடவுள் முஹம்மதுக்குக் கட்டளையிட்ட பொழுது [16:123], இத்தகைய அநுஷ்டானங்கள் நன்கு அறியப்பட்டவையாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

ஆப்ரஹாமுக்குக் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய அநுஷ்டானங்களின் தெய்வீகப் பாதுகாவலுக்கான மற்றொரு சான்று இத்தகைய சடங்குகளின் "உலகளாவிய அங்கீகாரம்" ஆகும். ஐந்து அன்றாடத் தொழுகைகள் அனைத்திலுமுள்ள ரக்கஅத்துகளின் எண்ணிக்கையைக் குறித்து எந்தத் தர்க்கமும் இல்லை. ஸலாத்தின் தெய்வீகப் பாதுகாவலை இது நிரூபிக்கின்றது. முறையே. ஐந்து தொழுகைகளிலும் உள்ள 2.4,4,3,4 ரக்கஅத்துகளின் எண்ணிக்கையை இக்குர்ஆனின் கணிதக் குறியீடு உறுதிப்படுத்துகின்றது. 24434 எனும் எண் 19ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது.

சிதைக்கப்பட்டிருந்த அநுஷ்டானங்களுக்கு எதிராக மட்டுமே இக்குர்ஆன் நடவடிக்கை எடுக்கின்றது. உதாரணத்திற்கு, சிதைக்கப்பட்டுவிட்ட அங்கசுத்தியானது 5:6-ல் அதன் அசலான நான்கு படிகளுடன் பழைய நிலைக்கு மீட்கப்படுகின்றது. (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளின்போது குரலின் தொனி சிதைக்கப்பட்டது முஸ்லிம்கள் பலர் சப்தமின்றித் தொழுகின்றனர். இந்தக் குர்ஆனில் இது சீர்செய்யப்பட்டது. 17:110. இரவுப் பொழுதுகளில் தாம்பத்ய உறவை அனுமதிக்கும் வண்ணம் ரமளானின் போது நோன்பிருத்தல் தளர்த்தப்பட்டது [2:187), 6:141ல் ஐகாத் புதுப்பிக்கப்படுகின்றது, அத்துடன் ஹஜ் சரியான நான்கு மாதங்களுக்கு மீட்கப்படுகின்றது (பார்க்க பின் இணைப்பு 15].