Appendices
Appendix 10

God's Usage of the Plural Tense

In the English speaking world, where the trinity doctrine is prevalent, some people are intrigued by God's usage of the plural tense in the Quran. The overwhelming message of the Quran, where there is absolutely no compromise is that "GOD IS ONE" (2:133, 2:163; 4:171; 5:73; 6:19; 9:31; 12:39; 13:16; 14:48, 14:52; 16:22, 16:51; 18:110; 21:108; 22:34; 37:4; 38:65; 39:4; 40:16; 41:6; 112:1).

Whenever the first person plural form is used by the Almighty, it invariably indicates participation of other entities, such as the angels. For example, the revelation of this Quran involved participation of the angel Gabriel and the prophet Muhammad. Hence the use of the plural form in 15:9: "We revealed this scripture, and we will preserve it." The plural form here simply reflects the fact that the angel Gabriel and the prophet Muhammad participated in the processof delivering the Quran.

Another example has to do with blowing the breath of life into Adam and Jesus. The creation of Adam took place in heaven and God directly blew into him the breath of life. Thus, the first person singular form is consistently used: "I blew into Adam from My spirit" (15:29, 38:72). The creation of Jesus, on the other hand, took place on earth,and Gabriel carried God's "word" to Mary. The plural form is consistently used when referring to the creation of Jesus (21:91, 66:12).

When God spoke to Moses directly, without the mediation of angels, we see that God is speaking exclusively in the singular tense:

[Quran 20:14] "I am God; there is no other god beside Me. You shall worship Me alone, and observe the Contact Prayers (Salat) to remember Me.

Whenever the worship of God is mentioned, the singular tense is used (51:56).

Appendix 10

பன்மைப் பதத்தில் கடவுளுடைய பிரயோகம்

திரித்துவக் கொள்கை மிகைத்திருக்கின்ற, ஆங்கிலம் பேசும் இவ்வுலகில், இந்தக் குர்ஆனில் பன்மைப் பதத்தின் கடவுளுடைய பிரயோகத்தின் மூலம் சில மக்கள் வியப்படைகின்றனர். இந்தக் குர்ஆனின் மகத்தான தூதுச் செய்தியானது, எந்தச் சமரசத்திற்கும் நிச்சயம் இடமில்லாத, "கடவுள் ஒருவரேயாவார்" என்பதேயாகும் [2:133, 163; 4:171; 5:73; 6:19; 9:31; 12:39; 13:16; 14:48,52; 16:22, 51; 18:110; 21:108; 22:34; 37:4; 38:65: 39:4; 40:16; 41:6; 112:1).

எல்லாம் வல்லவரால் தன்மையில் பன்மை வடிவம் பயன்படுத்தப்படுகின்ற பொழுதெல்லாம், அது ஒரே சீராக வானவர்கள் முதலான மற்றப் படைப்புகளின் பங்கெடுப்பினைக் குறிக்கின்றது. உதாரணத்திற்கு, இந்தக் குர்ஆனின் வெளிப்பாட்டில் வானவர் கேப்ரியேல் மற்றும் நபி முஹம்மதின் பங்களிப்பு உள்ளடங்கியுள்ளது. எனவேதான் 15:9-ல் பன்மை வடிவத்தின் பிரயோகம் : "நாமே இந்த வேதத்தை வெளிப்படுத்தினோம், மேலும் நாமே அதனைப் பாதுகாப்போம்." இங்கே பன்மை வடிவமானது இக்குர்ஆனைச் சேர்ப்பிக்கின்ற செயல்பாட்டினில் வானவர் கேப்ரியேல் மற்றும் நபி முஹம்மதின் பங்கெடுப்பினை நேரடியாகப் பிரதிபலிக்கின்றது.

ஆதம் மற்றும் ஜீஸஸினுள் உயிர்மூச்சு ஊதப்படுதல் இத்துடன் தொடர்பு கொண்ட மற்றோர் உதாரணமாகும். ஆதமுடைய படைப்பு விண்ணில் நடைபெற்றதால் கடவுள் அவருக்குள் உயிர் மூச்சை நேரடியாக ஊதினார். எனவே மாறுதலின்றி ஒருமைப் பதம் தன்மையில் பயன்படுத்தப்படுகின்றது:

"என்னுடைய ஆவியில் இருந்து ஆதமுக்குள் நான் ஊதினேன்" (15:29, 38:72). மற்றொருபுறம், ஜீஸஸின் படைப்பானது பூமியில் நடைபெற்றது, எனவே மேரியிடம் கடவுளின் "வார்த்தையை" கேப்ரியேல் எடுத்துச் சென்றார். இயேசுவின் படைப்பை குறிக்கின்றபோதெல்லாம் மாறுதலின்றி பன்மை வடிவம் பயன்படுத்தப் படுகின்றது [21:91,66:12).

கடவுள் மோஸஸுடன் நேரடியாக வானவர்களின் இடையீடு இன்றிப் பேசியபோது, கடவுள் பிரத்தியேகமாக ஒருமைப் பதத்தில் பேசுவதை நாம் காண்கின்றோம்: தான் தான் கடவுள். என்னை அன்றி தெய்வம் இல்லை. நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும். மேலும் (ஸலாத்] அன்றாடத் தொடர்புத் தொழுகைகளை என்னை நினைவு கூர்வதற்காகக் கடைப்பிடியுங்கள்" (20:12-14).

கடவுளின் வழிபாட்டைப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றபோதெல்லாம். ஒருமைப் பதம் பயன்படுத்தப் படுகின்றது [51:56).