The Myth of Intercession
To believe that anyone, other than God, can intercede on our behalf to have our sins forgiven or our wishes fulfilled, is to set up partners with God. This is idolatry. The Quran proclaims that "All intercession belongs to God" (39:44), and that there will be "no intercession on the Day of Judgment" (2:254).
The myth of intercession is one of Satan's most effective tricks to dupe millions of people into idol worship. Millions of Christians believe that Jesus will intercede for them at God, and millions of Muslims believe that Muhammad will intercede on their behalf. Consequently, these people idolize Jesus and Muhammad.
The concept of intercession is utterly illogical. Those who believe in Muhammad's intercession, for example, claim that he will ask God to forgive them and admit them into Paradise. They imagine Muhammad on the Day of Judgment choosing the candidates for his intercession. If you ask those who believe in intercession: "How will Muhammad recognize those who deserve his intercession?" they tell you, "God will tell him!" According to this concept, a person will go to Muhammad and request his intercession. Muhammad will then ask God whether this person deserves his intercession or not. God will inform Muhammad that the person deserves to go to Paradise. Muhammad will then turn around and tell God that the person deserves to go to Paradise! The blasphemy is obvious; those who believe in intercession make God a secretary of their idol Muhammad. God be glorified.
Since the Quran is the most accurate book, it acknowledges that everyone in Paradise will intercede on behalf of his or her loved ones: "Please God, admit my mother into Paradise." This intercession will work if the person's mother deserves to go to Paradise (2:255, 20:109, 21:28). Thus, intercession, though it will take place in this manner, is utterly useless.
We learn from the Quran that Abraham, God's beloved servant, could not intercede on behalf of his father (9:114). Noah could not intercede on behalf of his son (11:46). Muhammad could not intercede on behalf of his uncle (111:1-3) or relatives (9:80). What makes anyone think that a prophet or a saint will intercede on behalf of a perfect stranger?! See 2:48, 2:123; 6:51, 6:70, 6:94; 7:53; 10:3; 19:87; 26:100; 30:13; 32:4; 36:23; 39:44; 40:18; 43:86; 53:26 & 74:48. Muhammad's intercession is in 25:30.
பரிந்துரை எனும் புராணம்
கடவுளை விடுத்து, நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கோ அல்லது நம்முடைய விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படுவதற்கோ நம் சார்பாக எவரொருவரும் பரிந்துரைக்க இயலும் என்று நம்புதல், கடவுளுடன் பங்குதாரர்களை அமைத்துக் கொள்வது ஆகும். இது போலித்தெய்வ வழிபாடே ஆகும். "அனைத்துப் பரிந்துரையும் கடவுளுக்குரியது" (39: 44) என்றும், மேலும் "தீர்ப்பு நாள் அன்று பரிந்துரை எதுவும் இல்லை" [2:254] என்றும் இக்குர்ஆன் பிரகடனிக்கின்றது.
கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி போலித் தெய்வ வழிபாட்டிற்குள் கொண்டு செல்வதற்கு சாத்தானின் மிகவும் திறன்வாய்ந்த யுக்திகளில் பரிந்துரை எனும் புராணமும் ஒன்றாகும். கோடிக்கணக்கான கிறிஸ்துவர்கள் தங்களுக்காகக் கடவுளிடம் ஜீஸஸ் பரிந்துரைப்பார் என்று நம்புகின்றார்கள், அத்துடன் கோடிக்கணக்கான முஸ்லிம்களும் அவர்களுடைய சார்பில் முஹம்மத் பரிந்துரைப்பார் என்று நம்புகின்றார்கள். எனவே, இந்த மக்கள் ஜீஸஸ் மற்றும் முஹம்மதை இணை வழிபாடு செய்கின்றனர்.
பரிந்துரை எனும் எண்ணம் முற்றிலும் அறிவுக்குப்புறம்பானதாகும். உதாரணத்திற்கு, முஹம்மதின் பரிந்துரையில் நம்பிக்கை கொண்டவர்கள், அவர் கடவுளிடம் அவர்களை மன்னிக்குமாறு கேட்டு அவர்களைச்சுவனத்திற்குள்ளும் புகுத்தி விடுவார் என்று கோருகின்றனர். தீர்ப்பு நாள் அன்று முஹம்மத் தன்னுடைய பரிந்துரையை வேண்டுவோரைத் தேர்ந்தெடுப்பார் என்று அவர்கள் கற்பனை செய்கின்றார்கள். பரிந்துரையை நம்புபவர்களிடம். "முஹம்மத் தனது பரிந்துரைக்குத் தகுதியானவர் யார் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வார்?" என்று நீங்கள் கேட்டால், அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். "கடவுள் அவருக்குச் சொல்வார்!" இந்த எண்ணத்தின்படி ஒரு நபர் முஹம்மதிடம் சென்று அவருடைய பரிந்துரையை வேண்டிக் கேட்பார். முஹம்மத் பின்னர் கடவுளிடம் இந்த நபர் அவருடைய பரிந்துரைக்குத் தகுதியானவரா அல்லவா எனக் கேட்பார். அந்த நபர் சுவனத்திற்குச் செல்லத் தகுதிபெறுகின்றார் என்று கடவுள் முஹம்மதுக்குத் தெரிவிப்பார். முஹம்மத் பின்னர் சுற்றித் திரும்பி சுவனத்திற்குச் செல்வதற்கு அந்த நபர் தகுதிபெறுகின்றார் என்று கடவுளிடம் சொல்வார் இறைநிந்தனையானது வெளிப்படையானதாக உள்ளது; பரிந்துரையின் மீது நம்பிக்கை கொள்கின்றவர்கள், அவர்களுடைய போலித்தெய்வமான முஹம்மதுக்குக் கடவுளை ஒரு காரியதரிசியாக ஆக்குகின்றனர். கடவுள் துதிப்பிற்குரியவர்.
இந்தக் குர்ஆன் மிகவும் துல்லியமான புத்தகமாக இருப்பதனால், சுவனத்திலுள்ள ஒவ்வொருவரும் அவனுடைய அல்லது அவளுடைய நேசத்திற்கு உரியவர்கள் சார்பாகப் பரிந்துரைப்பார்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றது : "தயவு செய்து, கடவுளே, என்னுடைய தாயாரை சுவனத்திற்குள் அனுமதிப்பீராக". அந்நபரின் தாயார் சுவனத்திற்குச் செல்லும் தகுதியுடையவராக இருந்தால் இந்தப் பரிந்துரை பலனளிக்கும் (2:255, 20:109, 21:28). எனவே, பரிந்துரையானது. இந்த விதத்தில் நடைபெற்ற போதிலும் அது, முற்றிலும் பயனற்றதாக உள்ளது.
ஆப்ரஹாம், கடவுளின் நேசத்திற்குரிய ஊழியர், தன் தந்தையின் சார்பாக பரிந்துரைக்க இயலவில்லை என்பதை நாம் குர்ஆனில் இருந்து அறிந்து கொள்கின்றோம் (9:114), நோவாவினால் அவருடைய மகன் சார்பாக பரிந்துரைக்க இயலவில்லை (11:46). முஹம்மத் தன்னுடைய சிறிய தந்தையாரின் சார்பாகவோ (111:1-3] அல்லது உறவினர்களுக்கோ [9:80] பரிந்துரைக்க இயலவில்லை. இவ்வாறிருக்க ஒரு நபியோ அல்லது ஒரு மகானோ முற்றிலும் அந்நியர் ஒருவருக்காகப் பரிந்துரைப்பார் என்று எவரொருவரையும் எண்ணச் செய்வது எது? பார்க்க 2:48, 123; 6:51, 70, 94; 7:53; 10:3; 19:87; 26:100; 30:13; 32:4; 36:23; 39:44; 40:18; 43:88; 53:26. & 74:48. முஹம்மதின் பரிந்துரை 25:30-ல் உள்ளது.