Heaven and Hell
The descriptions of Heaven and Hell throughout the Quran are allegorical. And the Quran tells us so whenever such descriptions occur as independent statements, not within a general subject. See 2:24-26, 13:35, and 47:15.The word "Mathal" (allegory) is used in these verses. Linguistically, the word "Mathal" in these verses can be removed, and we still have perfect sentences. But it is there because the descriptions of Heaven and Hell are allegorical. What Heaven and Hell are really like is far beyond our comprehension. Hence the need for allegory.
How can one describe, for example, the taste of chocolate to a person who never tasted chocolate? Allegory will have to be used. The person has to wait to actually taste chocolate in order to know what chocolate tastes like. Whatever allegory we use to describe the taste of chocolate can never approximate the real thing.
Heaven already exists, since Adam and Eve were placed in it during their days of innocence(2:35). We learn from Sura 55 that there are two "High Heavens" - one for the humans and one for the jinns - and two "Lower Heavens" - one for the humans and one for the jinns (see Appendix 11 for more details).
Hell is not created yet. It will be created on the Day of Judgment (69:17 & 89:23) More details are given in Appendix 11.
The High Heaven vs The Lower Heaven
There are profound differences between the High Heaven and the Lower Heaven. Allegorically, water in the High Heaven flows freely (55:50), while the water of the Lower Heaven needs to be pumped out (55:66).
Allegorically, the High Heaven has all kinds of fruit (55:52), while the Lower Heaven has a limited variety of fruits (55:68).
Allegorically, the pure spouses readily join their spouses in the High Heaven (55:56), while the dwellers of the Lower Heaven must go fetch their spouses (55:72).
Yet, even the Lower Heaven is an incredibly fantastic prize for those who are fortunate enough to escape Hell and end up in the Lower Heaven (3:185)- going to the Lower Heaven is a great triumph. People who depart this life before reaching their 40th birthday, and did not sufficiently develop their souls, will go to the Lower Heaven (46:15, Appendix 11 & 32).The High Heaven is reserved for those who believed, led a righteous life, and developed their souls sufficiently.
[Quran 3:185] .....Whoever misses Hell, barely, and makes it to Paradise, has attained a great triumph. The life of this world is no more than an illusion.
சுவனம் மற்றும் நரகம்
இந்தக் குர்ஆள் முழுவதிலும் சுவனம் மற்றும் நரகத்தின் வர்ணனைகள் உவமானரீதியிலேயே உள்ளன. பொதுவானதொரு விஷயத்திற்குள் அல்லாது, இத்தகைய வர்ணணைகள் தனி வாக்கியங்களாக இடம்பெறுகின்றபொழுதெல்லாம் இக்குர்ஆன் நமக்கு அவ்வாறு கூறுகின்றது. பார்க்க 2:24-26, 13:35, மற்றும் 47:15. "மஸல்" (உதாரணம்] எனும் வார்த்தை இந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொழி வழக்கில், இந்த வசனங்களில் உள்ள "மஸல்" எனும் வார்த்தை நீக்கப்பட்டு விட்ட போதிலும், அப்போதும் மிகச்சரியான வாசகங்களையே நாம் கிடைக்கப்பெறுவோம். எனினும் சுவனம் மற்றும் நரகத்தின் வர்ணனைகள் உவமானரீதியிலேயே உள்ள காரணத்தினால் அது அங்கு உள்ளது.
சுவனம் மற்றும் நரகம் ஆகியவை மெய்யாகவே எப்படி இருக்கின்றன என்பது நமது கிரகிப்புக்கு மிகவும் அப்பாற்பட்டதாக உள்ளது. எனவேதான் உவமானம் அவசியம் ஆகின்றது.
உதாரணத்திற்கு, சாக்லேட்டினை ஒருபோதும் சுவைத்திராத ஒரு நபருக்கு. சாக்லேட்டின் அச்சுவையினை ஒருவர் எவ்வாறு விவரிக்க இயலும்? உவமானம் பயன்படுத்தப்பட வேண்டியது உள்ளது. சாக்லேட்டின் சுவை என்ன என்று தெரிந்து கொள்வதற்கு அந்நபர் உண்மையில் சாக்லேட்டிளைச் சுவைப்பதற்காகக் காத்திருக்க வேண்டும். சாக்லேட்டின் சுவையை விவரிக்க நாம் பயன்படுத்துகின்ற உவமானம் எதுவாயினும் ஒருபோதும் உண்மையான விஷயத்திற்குப் பொருத்தமாகிவிட இயலாது.
ஆதமும் ஏவாளும் அவர்களுடைய குற்றமற்ற நாட்களின் போது அதனில் அமர்த்தப்பட்டத்தில் இருந்து சுவனமானது ஏற்கெனவே உள்ளது [2:35). சூரா 55-ல் இருந்து இரண்டு "உயர்ந்த சுவனங்கள்" உள்ளன மானிடர்களுக்கு ஒன்று. மற்றும் ஜின்களுக்கென ஒன்று மேலும் இரண்டு "தாழ்வான சுவனங்கள்"- மானிடர்களுக்கென ஒன்று, மற்றும் ஜின்களுக்கென ஒன்று உள்ளன என நாம் அறிந்து கொள்கின்றோம் (அதிகமான விபரங்களுக்குப் பின் இணைப்பு 11-ஐப் பார்க்கவும்).
நரகம் இன்னும் படைக்கப்படவில்லை. தீர்ப்பு நாள் அன்று அது படைக்கப்படும் (69:17 & 89:23). அதிகமான விபரங்கள் பின் இணைப்பு 11-ல் கொடுக்கப்பட்டுள்ளன.
உயர்ந்த சுவனமும் தாழ்வான சுவனமும்
உயர்ந்த சுவனத்திற்கும் தாழ்வான சுவனத்திற்குமிடையே ஆழ்ந்த வித்தியாசங்கள் உள்ளன. உவமானரீதியில், உயர்ந்த சுவனத்தில் தண்ணீரானது தங்குதடையின்றிப் பாய்கின்றது [55:50], அதே சமயம் தாழ்வான சுவனத்தின் தண்ணீர் இறைத்து எடுக்கப்பட வேண்டும் (55:66).
உவமானரீதியில், உயர்ந்த சுவனம் அனைத்துக் கனிவர்க்கங்களையும் கொண்டுள்ளது [55:52), அதே சமயம் தாழ்வான சுவனமானது ஓர் எல்லைக்குட்பட்ட கனிவகைகளையே கொண்டுள்ளது [55:68). உவமானரீதியில், உயர்ந்த சுவனத்தில் தூய்மையான ஜோடிகள் தங்களுடைய ஜோடிகளுடன்
உடனடியாகச் சேர்ந்து கொள்வர் [55:56], அதே சமயம் தாழ்வான சுவனத்தில் வசிப்பவர்கள் சென்று தங்களுடைய துணைகளை அழைத்து வரவேண்டும் (55:72).
இருப்பினும், நரகத்தை விட்டுத் தப்பித்து தாழ்வான சுவனத்தைச் சென்றடைகின்ற அளவுக்குப் பாக்கியமுள்ளவர்களுக்குத் தாழ்வான சுவனமுமே கூட நம்ப இயலாத அளவுக்குப் பிரமாதமானதொரு பரிசாக உள்ளது (3:185) - தாழ்வான சுவனத்திற்கு செல்வதும் மகத்தானதொரு பெருவெற்றியாகும். தங்களுடைய 40-வது பிறந்த நாளை அடைவதற்கு முன் இந்த வாழ்வை விட்டுச் சென்று விடுகின்ற. மேலும் போதுமான அளவுக்குத் தங்களுடைய ஆத்மாக்களை வளர்த்துக் கொள்ளாத மக்கள் தாழ்வான சுவனத்திற்குச் செல்வார்கள் (46:15, பின் இணைப்புகள் 11 & 32). நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, அத்துடன் தங்களுடைய ஆத்மாக்களைப் போதுமான அளவுக்கு வளர்த்துக் கொண்டவர்களுக்காக உயர்ந்த சுவனம் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நூலிழையிலேனும் நரகத்தை விட்டுத் தப்புவதில் வெற்றிபெற்று, சுவனத்தில் அனுமதிக்கப்படுகின்ற எவராயினும் மகத்தானதோர் பெருவெற்றியை அடைந்து விட்டார். (3:185)