Greatness of God
We learn from Verse 39:67 that God's greatness is far beyond human comprehension - the verse states that all seven universes are "folded within God's hand."
Supported by the Quran's formidable mathematical code, we are taught that our universe is the smallest and innermost of seven universes (41:12, 55:33, 67:5, & 72:8-12). Meanwhile, our scientific advances have shown us that our galaxy, the Milky Way, is 100, 000 light years across, and that our universe contains a billion such galaxies and a billion trillion stars, plus countless decillions of heavenly bodies. Our universe is estimated to span distances in excess of 20, 000, 000, 000 light years.
Count the Stars!
If we take only a quintillion [1, 000, 000, 000, 000, 000, 000] of the stars and simply count them [from 0 to quintillion] one count per second, day and night, this will take 32 billion years (more than the age of the universe). That is how long it will take to just "count" them; but God "created" them. Such is the greatness of God.
We can appreciate the vastness of our universe if we imagine going on a space odyssey. When we leave the planet Earth towards the sun, at the speed of light, we reach the sun after 93, 000, 000 miles and 8 minutes. It will take us more than 50, 000 years at the speed of light to exit our galaxy. From the outer limit of the Milky Way, our planet Earth is invisible. Not even the most powerful telescope can detect our tiny "Earth."
We have to spend more than 2, 000, 000 years at the speed of light to reach our next-door galaxy. At least 10, 000, 000, 000 years, at the speed of light, must be spent to reach the outer limit of our universe. From the outer limit of our universe, even the Milky Way is like a speck of dust in a large room.
The second universe surrounds our universe. The third universe is larger than the second, and so on. More accurately, our universe should be considered the seventh universe, surrounded by the sixthuniverse, which is surrounded by the fifth universe, and so on. Can you imagine the vastness of the first, outermost universe? No number exists to describe the circumference of the first universe. This incomprehensible vastness is "within the fist of God's hand." From the outer limit of the outermost universe, where is the planet Earth? How significant is it? On the infinitesimal mote called Earth, such minuscule creatures as Mary, Jesus, and Muhammad lived. Yet, some people set up these powerless humans as gods!
God's greatness is represented not only by the fact that He holds the seven universes in His hand, but also by the fact that He fully controls every atom, even subatomic components, everywhere in the greater universe (6:59, 10:61, & 34:3).
கடவுளின் மகத்துவம்
வசனம் 39:67ல் இருந்து கடவுளின் மகத்துவமானது மானிட கிரகிப்புக்கு மிகவும் அப்பாற்பட்டதாக உள்ளது என்று நாம் அறிந்து கொள்கின்றோம் - அவ்வசனம் ஏழு பிரபஞ்சங்கள் முழுவதும் "கடவுளின் கைக்குள் மடித்து வைக்கப்பட்டுள்ளன” என்று கூறுகின்றது.
குர்ஆனுடைய பிரமிப்பூட்டுகின்ற கணிதக் குறியீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, ஏழு பிரபஞ்சங் களிலேயே மிகச்சிறியதாகவும் மிகவும் உள்ளார்ந்ததாகவும் இருப்பது நமது பிரபஞ்சமே என்று நாம் கற்றுக் கொடுக்கப்படுகின்றோம் (41:12, 55:33, 67:5, & 72:8-12). இதற்கிடையில், பால்வீதி எனும் நமது நட்சத்திர மண்டலம் 100,000 ஒளி வருடங்கள் குறுக்களவு கொண்டதாக உள்ளது. அத்துடன் நமது பிரபஞ்சம் இத்தகைய ஒரு பில்லியன் நட்சத்திர மண்டலங்களும் ஒரு பில்லியன் ட்ரில்லியன் நட்சத்திரங்களும், இன்னும் எண்ணற்ற டெசில்லியன் விண்ணகப் பொருட்களும் கொண்டுள்ளது என்று நம்முடைய விஞ்ஞான முன்னேற்றங்கள் காட்டியுள்ளன. நமது பிரபஞ்சம் 20,000 000 000 ஒளி வருடங்களினும் அதிகமான தொலைவுகள் விரிந்திருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.
நட்சத்திரங்களை எண்ணுங்கள் !
நட்சத்திரங்களில் ஒரு குவிண்டில்லியன் (1,000,000,000,000,000,000)-ஐ மட்டும் நாம் எடுத்துக்கொண்டு ஒரு நொடிக்கு ஓர் எண் என்று பகலும் இரவும் வெறுமனே அவற்றை நாம் எண்ணிக்கொண்டே சென்றால் (0 முதல் குவிண்டில்லியன் வரை] அதற்கு 32 பில்லியன் வருடங்கள் எடுத்துக்கொள்ளும் (நமது பிரபஞ்சத்தின் ஆயுளை விட அதிகம்). அவற்றை "எண்ணுவதற்கு" மட்டுமே அத்தனை நீண்டகாலம் அது எடுத்துக்கொள்ளும், ஆனால் கடவுள் அவற்றைப் "படைத்தார்". கடவுளின் மகத்துவமானது இத்தகையதேயாகும்.
ஒரு விண்வெளிப் பயணத்தில் செல்வதாக நாம் கற்பனை செய்து கொண்டால் நம்முடைய பிரபஞ்சத்தின் விரிந்த தன்மையை நம்மால் மெச்சிட இயலும். ஒளியின் வேகத்தில், பூமிக்கிரகத்தில் இருந்து சூரியனை நோக்கி நாம் புறப்பட்டுச் சென்றால், 93,000,000 மைல்கள் மற்றும் 8 நிமிடங்களுக்கு அப்பால் நாம் சூரியனை அடைகின்றோம், நம்முடைய நட்சத்திர மண்டலத்தை விட்டு வெளியேறுவதற்கு நமக்கு ஒளியின் வேகத்தில் 50,000-த்திற்கும் அதிகமான வருடங்கள் எடுத்துக் கொள்ளும். பால் வீதியின் வெளிப்புற எல்லையில் இருந்து நமது கிரகமான பூமி கண்களுக்குத் தென்படாததாக உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கி கூட நமது மிகச்சிறிய "பூமி"யை கண்டுபிடிக்க இயலாது.
நம்முடைய அடுத்த வாசல் நட்சத்திர மண்டலத்தை அடைய ஒளியின் வேகத்தில் 2,000,000 வருடங்களுக்கும் அதிகமாக நாம் செலவிட வேண்டும், நமது பிரபஞ்சத்தின் வெளிப்புற எல்லையை அடைய ஒளியின் வேகத்தில், குறைந்த பட்சம் 10,000,000,000 வருடங்கள் செலவிட வேண்டும். நமது பிரபஞ்சத்தின் வெளிப்புற எல்லையில் இருந்து, பால் வீதி கூட பெரியதோர் அறையில் உள்ள தூசியின் ஒரு துகளைப் போன்றதேயாகும்.
இரண்டாவது பிரபஞ்சம் நமது பிரபஞ்சத்தைச் சூழ்ந்துள்ளது. மூன்றாவது பிரபஞ்சமானது இரண்டாவதை விடவும் பெரியதாக உள்ளது. அப்படியே தொடர்கின்றது. இன்னும் மிகச்சரியாக. ஐந்தாவது பிரபஞ்சத்தால் சூழப்பட்டு அவ்வாறே தொடர்ந்து அந்த ஆறாவது பிரபஞ்சத்தால் சூழப்பட்டிருக்கின்ற ஏழாவது பிரபஞ்சமாக நமது பிரபஞ்சம் கருதப்படவேண்டும். முதலாவதான, அனைத்திற்கும் வெளியிலுள்ள, அந்த முதல் பிரபஞ்சத்தின் விஸ்தீரணத்தை உங்களால் கற்பனை செய்ய இயலுமா? முதல் பிரபஞ்சத்தின் சுற்றளவை வர்ணிக்க எண்கள் எதுவும் வழக்கில் இல்லை. கிரகித்துக் கொள்ள இயலாத இந்த விஸ்தீரணம் "கடவுளுடைய உள்ளங்கையினுள்" உள்ளது. அனைத்திற்கும் வெளியிலுள்ள அப்பிரபஞ்சத்தின் வெளிப்புற எல்லையில் இருந்து பூமி எனும் கிரகம் எங்குள்ளது? என்ன முக்கியத்துவம் உள்ளது அதற்கு? பூமி என்றழைக்கப்படுகின்ற அளவிடற்கரிய மிகச்சிறிய துகளின் மீது, மேரி, ஜீஸஸ், முஹம்மத் போன்ற சின்னஞ்சிறிய படைப்புக்கள் வாழ்ந்தனர். இருப்பினும், சில மக்கள் சக்தியற்ற இந்த மானிடர்களை தெய்வங்களாக அமைத்துக்கொள்கின்றனர்!
கடவுளின் மகத்துவம் ஏழுபிரபஞ்சங்களையும் தன்னுடைய கரத்தில் அவர் பிடித்துக் கொண்டிருக்கின்றார் எனும் உண்மையின் மூலம் மட்டுமல்ல, அத்துடன் மிகப்பெரும் பிரபஞ்சம் எங்கிலும், அவர் ஒவ்வொரு அணுவினையும், அணுவிற்குள் பொதிந்துள்ள கூறுகளையும் கூட அவர் முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றார் எனும் உண்மையின் மூலமும் சித்தரிக்கப்படுகின்றது (6:59. 10:61 & 34:3).