Appendices
Appendix 4

Why Was the Quran Revealed in Arabic?

We learn from 41:44 that the sincere believers have access to the Quran, regardless of their mother tongue. The disbelievers, on the other hand, are not permitted access to the Quran, even if they are professors of the Arabic language (17:45, 18:57, 41:44, & 56:79).

Arabic is the most efficient language in the world, especially when it comes to the precise statement of laws. Since the Quran is a Statute Book, it was crucial that such laws must be clearly stated. God chose Arabic for His Final Testament because of the obvious reason that it is the most suitable language for that purpose. Arabic is unique in its efficiency and accuracy. For example, the word "they" in English does not tell you if "they" are males or females. In Arabic there is a "they" for the males, "HUM," and a "they" for the females, "HUNNA." There is even a "they" for two males, "HUMAA," and a "they" for two females, "HAATAAN." This feature does not exist in any other language in the world.

I came to appreciate this efficiency of the Arabic language when I translated, for example, 2:228. This verse enjoins the divorcee to give up her own wishes to divorce her husband, if she discovers that she is pregnant, and the husband wishes to reconcile the welfare of the child takes a priority. The efficiency of the Arabic language was extremely helpful in stating this law. Any other language would have made it almost impossible to point out whose wishes are to be superseded, at least not in such a few words as we see in 2:228

The word "Qaalataa" of 28:23, for example, translates into four English words: "the two women said." Such is the efficiency of the Arabic language.

Another possible reason for choosing Arabic is the fact that "He" and "She" do not necessarily imply natural gender. Thus, when God is referred to as "He," this does not imply gender at all. God be glorified; He is neither male, nor female. The usage of "He" to refer to God in the English language, for example, has contributed to a false image of God. This was not helped by such distorted expressions as "Father" when referring to God. You never find such a reference to God in the Quran.

Appendix 4

ஏன் இந்தக் குர்ஆன் அரபியில் வெளிப்படுத்தப்பட்டது?

41:44-ல் இருந்து உண்மையான நம்பிக்கையாளர்கள் அவர்களுடைய தாய்மொழி எதுவாயினும் பொருட்டின்றி இந்தக் குர்ஆனை அணுகிடும் வழிவகையைப் பெற்றிருக்கின்றனர் என்று நாம் கற்றுக் கொள்கின்றோம். மற்றொரு புறமோ, நம்பமறுப்பவர்கள். அரபி மொழியில் அவர்கள் பேராசிரியர்களாக இருந்தாலும் இக்குர்ஆனை அணுகிட அனுமதிக்கப்படுவதில்லை (17:45, 18:57, 41:44 & 56:79).

உலகிலேயே மிகத்திறன்வாய்ந்த மொழி அரபியே ஆகும். குறிப்பாகச் சட்டங்களின் துல்லியமான கூற்றுக்கள் என்று வரும் பொழுது. இந்தக் குர்ஆன் ஒரு சட்டப்புத்தகமாக உள்ளதனால், அத்தகைய சட்டங்கள் மிகத்தெளிவாகக் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். கடவுள் தன்னுடைய இறுதி ஏற்பாட்டிற்கு அரபியைத் தேர்ந்தெடுத்தது அந்த நோக்கத்திற்கு மிகவும் பொருத்தமான மொழியாக அது உள்ளது என்ற வெளிப்படையான காரணத்தினாலேயாகும். அரபிமொழியானது அதன் திறனிலும் பிழையின்மையிலும் ஒப்பற்றதாகும். உதாரணத்திற்கு, தமிழில் "அவர்கள்" எனும் வார்த்தை "அவர்கள்" ஆண்களா அல்லது பெண்களா என உங்களுக்குக் கூறுவதில்லை. அரபியில், ஆண்களுக்கு உரியதொரு "அவர்கள்" "ஹும்", மற்றும்  பெண்களுக்குரிய "அவர்கள்" "ஹுன்ன" என உண்டு. இரண்டு ஆண்களுக்குரியதொரு "அவர்கள்" "ஹுமா", மற்றும் இரண்டு பெண்களுக்குரிய "அவர்கள்" "ஹாதான்" கூட உண்டு. இந்த விசேஷமான அம்சம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. நான் மொழிபெயர்ப்பு செய்தபோது அரபிமொழியின் இந்த திறனை மிகவும் மெச்சும் நிலையினை அடைந்தேன், உதாரணத்திற்கு, 2:228. இந்த வசனமானது விவாகரத்து செய்யப்பட்டவளை, அவள் கர்ப்பமாக இருக்கின்றாள் என்பதை அவன் அறிந்து கொண்டால், அவளுடைய கணவனை விவாக விலக்குச் செய்வதற்கான அவளுடைய சொந்த விருப்புகளை, அக்கணவன் இணக்கமாகிவிட விரும்புகையில் விட்டுக்கொடுத்துவிடுமாறு ஏவுகின்றது - அக்குழந்தையின் நலனானது ஒரு முன்னுரிமை பெறுகின்றது. அரபி மொழியின் திறனானது இந்தச் சட்டத்தை எடுத்துரைப்பதில் பெருமளவில் உதவிகரமாக இருந்தது.வேறு எந்த மொழியும் எவருடைய விருப்பங்கள் மாற்றியமைத்துக் கொள்ளப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டுவதைக் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகவே ஆக்கியிருக்கும், குறைந்தபட்சம் 2:228-ல் நாம் காண்பது போல இவ்வளவு ஒரு சில வார்த்தைகளில் அல்ல.

28:23-ன் "காலத்தா" எனும் வார்த்தை, உதாரணத்திற்கு தமிழில் நான்கு வார்த்தைகளால் மொழி பெயர்க்கப்படுகின்றது: "அந்த இரு பெண்கள் சொன்னார்கள்". அரபி மொழியின் திறன் இவ்விதமானதாகும்.

"அவன்" மற்றும் "அவள்" இயல்பான பால் வகையைக் குறிப்பதாகக் கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை என்ற உண்மையானது அரபியைத் தேர்ந்தெடுத்ததற்குரிய மற்றொரு சாத்தியமான காரணமாக உள்ளது. எனவே கடவுளை "அவன்" என குறிப்பிடப்படுகின்ற போது இது சற்றும் பால்வகையைக் குறிப்பிடுவதாக இல்லை. கடவுள் துதிப்பிற்குரியவர்; அவர் ஆணாகவோ அன்றிப் பெண்ணாகவோ இல்லை.

ஆங்கில மொழியில் கடவுளைக் குறிப்பதற்கு "He" என்பதன் பயன்பாடானது, உதாரணத்திற்கு, கடவுளின் ஒரு தவறான பிரதிபிம்பத்திற்குக் காரணமாகியுள்ளது. கடவுளைக் குறிக்கும்பொழுது "தந்தை" போன்ற சிதைக்கப்பட்ட இத்தகைய வார்த்தைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்கின்றது. இந்தக் குர்ஆனில் கடவுளுக்கு அத்தகையதொரு குறிப்புரையை நீங்கள் ஒருபோதும் காண்பதில்லை.