We made the Quran Easy [54:17]
Verse 11:1 informs us that the Quran's Miracle involves [1] the superhuman mathematical design of its physical structure and [2] the simultaneous composition of a literary work of extraordinary excellence.
One may be able to meet the numerical distribution requirements of a simple mathematical pattern. However, this is invariably accomplished at the expense of the literary quality. The simultaneous control of the literary style and the intricate mathematical distribution of individual letters throughout the Quran (Appendix 1) is evident in the fact that the Quran is made easyto memorize, understand, and enjoy. Unlike a human-made book, the Quran is enjoyable to read over and over, infinitely.
The title of this Appendix is repeated in Sura 54, verses 17, 22, 32, and 40. As it turns out, the Quran's Arabic text is composed in such a way as to remind the reader or the memorizer of the next correct expression, or the next verse. God created us and He knows the most efficient way for fixing literary materials into our memory. Memorization of the Quran has played a vital role in preserving the original text generation after generation at a time when written books were a rarity.
Without even realizing it, the person who memorizes the Quran is divinely helped by an intricate literary system as he utters the sounds of the Quranic words. Almost every verse in the Quran contains what I call "Memory Bells." Their function is to remind the reader of what comes next. This system is so vast, I will give only two illustrative examples:
In Sura 2, Verses 127, 128, and 129 end with two different names of God each. These pairs of names are "Al-Samee` Al-`Aleem (The Hearer, the Omniscient)," "Al-Tawwaab Al-Raheem (The Redeemer, Most Merciful)", and "Al-`Azeez Al-Hakeem (The Almighty, Most Wise)," respectively. If this were a regular book, one would easily mis-match these six names. Not so in the Quran. Each one of these pairs is preceded in the same verse by a "Memory Bell" that reminds us of the correct pair of names. Thus, Verse 127 talks about Abraham and Ismail raising the foundations of the Ka`abah. The verse ends with the names "Al-Samee` Al-`Aleem." The prominent sounds here are the "S," "M," and " `Ayn."
These three letters are prominent in the word "Ismail." We find that this word is conspicuously delayed in the sentence, while improving its literary quality. Thus, we find that the verse goes like this: "When Abraham raised the foundations of the Ka`abah, together with Ismail ..." Normally, a human writer would say, "When Abraham and Ismail raised the foundations of the Ka`abah...."
But delaying the sounds in "Ismail" brings them closer to the end of the verse, and thus reminds us that the correct names of God in this verse are "Al-Samee` Al-`Aleem." Verse 128 has the prominent word "Tubb" just before the names "Al- Tawwaab Al-Raheem." The word "Tubb" thus serves as the memory bell. The names of God at the end of 2:129 are "Azeez, Hakeem." The prominent sounds here are "Z" and "K." Obviously, the memory bell in this verse is the word "Yuzakkeehim."
Another good example is found in 3:176, 177, & 178, where the retribution for disbelievers is described as "Azeem (Terrible)," "Aleem (Painful)," and "Muheen (Humiliating)," respectively.
In a human-made book, the memorizer could easily mix up these three descriptions. But we find that each of these adjectives is preceded by powerful memory bells that prevent such a mix-up. The word "Azeem" of Verse 176 is preceded by the word "Huzzun," which is characterized by a stressed letter "Z."
This serves to remind us of the particular adjective at the end of this verse. The word "Aleem" of Verse 177 is preceded by the sound of the word "Iman" to serve as a memory bell, and the word "Muheen" of 3:178 is preceded by an abundance of "M" and "H" throughout this verse.
Other examples of memory bells include: the ending of 3:173 and the beginning of 3:174, the ending of 4:52 and the beginning of 4:53, the ending of 4:61 and the beginning of 4:62, the ending of 18:53 and the beginning of 18:54, and many more.
இக்குர்ஆனை நாம் இலகுவாக ஆக்கினோம் (54:17)
குர்ஆனுடைய அற்புதமானது [1] மானிட சக்திக்கு அப்பாற்பட்ட அதன் பௌதிகக் கட்டமைப்பின் கணித ரீதியிலான வடிவமைப்பு மற்றும் (2] அதே சமயத்தில் அசாதாரணமான தலைசிறந்ததொரு இலக்கியக் கிரந்தத்தின் தொகுப்புதளையும் உட்படுத்தியுள்ளது என வசனம் 11:1 நமக்குத் தெரிவிக்கின்றது.
ஓர் எளிமையான கணித வடிவமைப்பின் எண் சார்ந்த பங்கீட்டின் நிபந்தனைகளை ஒருவர் எட்டிவிட இயலக்கூடும். ஆயினும், இது எப்பொழுதும் மாறுதலின்றி இலக்கியத்தரத்தினைத் தியாகம் செய்தே பெறப்படுகின்றது. ஒத்த சமயத்தில் அதன் இலக்கிய நடை மற்றும் குர்ஆன் முழுவதிலும் தனித்தனி எழுத்துக்களின் சிக்கல் வாய்ந்த கணித ரீதியிலான பங்கீட்டின் கட்டுப்பாடானது [பின் இணைப்பு 1] இக்குர்ஆன் மனனம் செய்வதற்கும், புரிந்து கொள்வதற்கும், அனுபவித்து மகிழ்வதற்கும் எளிதாக்கப்பட்டுள்ளது எனும் உண்மையில் தெளிவாகின்றது. மானிடர் எழுதிய ஒரு புத்தகத்தைப் போல் அல்லாமல், இக்குர்ஆளானது மீண்டும் மீண்டும். எண்ணற்ற முறைகள் படித்து மகிழத்தக்கதாக உள்ளது.
இந்தப் பின் இணைப்பின் தலைப்பானது சூரா 54-ல் வசனங்கள் 17, 22, 32 மற்றும் 40-ல் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. இப்போது வெளிப்பட்டுள்ளபடி, இக்குர்ஆனின் அரபி உரைப் பகுதியானது வாசகர் அல்லது மனனம் செய்பவருக்கு சரியான அடுத்த வாசகம் அல்லது அடுத்த வசனத்தை நினைவூட்டுகின்ற விதமானதோர் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. கடவுளே நம்மைப் படைத்தார் என்பதுடன் இலக்கிய வடிவங்களை நமது நினைவில் நிறுத்துவதற்குரிய மிகத் திறன்வாய்ந்த வழியையும் அவர் அறிவார். எழுதப்பட்ட புத்தகங்கள் அரிதான ஒன்றாக இருந்த அக்காலத்தின்போது இக்குர்ஆனை மனனம் செய்தலானது தலைமுறைக்குப் பின் தலைமுறையாக அந்த மூல உரைப்பகுதியைப் பாதுகாப்பதில் ஓர் இன்றியமையாப் பங்கினை ஆற்றியுள்ளது.
குர்ஆனை மனனம் செய்கின்ற நபர் குர்ஆனுடைய வார்த்தைகளின் சப்தங்களை உச்சரிக்கின்றபோதே பின்னிப்பிணைந்ததொரு இலக்கிய ஒழுங்கமைப்பின் மூலமாக, அதனை அடையாளம் கண்டு கொள்ளாமலே கூட, தெய்வீகமான முறையில் உதவி செய்யப்படுகின்றார். "நினைவூட்டும் மணிகள்" என நான் அழைப்பதைக் கிட்டத்தட்டக் குர்ஆனில் உள்ள ஒவ்வொரு வசனமும் கொண்டுள்ளது. அடுத்து வருவது என்ன என்பதை வாசகருக்கு நினைவூட்டுவதே அவற்றின் பணியாகும். இந்த ஒழுங்கமைப்பு மிகவும் விரிந்ததாக உள்ளது. எடுத்துக்காட்டுகின்ற உதாரணங்கள் இரண்டை மட்டும் நான் தருகின்றேன்:
1. சூரா 2ல், வசனங்கள் 127. 128 மற்றும் 129 ஒவ்வொன்றும் கடவுளின் இரண்டு வெவ்வேறு பெயர்களுடன் முடிவடைகின்றன. இந்தப் பெயர்களின் ஜோடிகள் முறையே "அல்-ஸமீ அல்-அலீம் [செவியேற்பவர். சர்வமும் அறிந்தவர்]," "அல்-தவ்வாப் அல்-ரஹிம் (மீட்பவர், மிக்க கருணையாளர்)" மற்றும் "அல்-அஸீஸ் அல்-ஹகீம் (எல்லாம் வல்லவர். ஞானம் மிகுந்தவர்)" ஆகியனவாகும். வழக்கமானதொரு புத்தகமாக இது இருந்திருந்தால், இந்த ஆறு பெயர்களையும் இயல்பாக ஒருவர் பொருந்தாமல் ஜோடி சேர்த்து விட்டிருக்கக்கூடும். இக்குர்ஆனில் அவ்வாறல்ல. இந்த ஜோடிகளில் ஒவ்வொன்றும் சரியான பெயர்களின் ஜோடியை நமக்கு நினைவூட்டுகின்ற ஒரு நினைவூட்டும் மணி"யை அதே வசனத்தில் முன்னால் கொண்டுள்ளது. இவ்விதமாக. வசனம் 127ஆனது ஆப்ரஹாம் மற்றும் இஸ்மாயில் கஅபாவின் அஸ்திவாரங்களை உயர்த்துவதைப் பற்றிப் பேசுகின்றது. இவ்வசனம் "அல்-ஸமீ அல்- அலீம்" எனும் பெயர்களுடன் முடிவடைகின்றது. இங்கே கவனத்தை ஈர்க்கின்ற சப்தங்கள் "ஸ". "ம" மற்றும் "அய்ன்" ஆகியனவாகும். "இஸ்மாயில்" எனும் வார்த்தையில் இந்த மூன்று எழுத்துக்களும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளன. அந்த வாக்கியத்தில் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த வார்த்தை தாமதப்படுத்தப்படுகின்ற அதே சமயம், அதன் இலக்கியத் தரத்தினையும் அது செம்மைப்படுத்துகின்றது என்பதை நாம் காண்கின்றோம். எனவே, அவ்வசனம் இவ்வாறு செல்வதை நாம் காண்கிறோம்: கஅபாவின் அஸ்திவாரங்களை ஆப்ரஹாம் உயர்த்தியபோது, இஸ்மாயீலுடன் சேர்ந்து...." வழக்கமாக ஒரு மானிட எழுத்தாளர் "கஅபாவின் அஸ்திவாரங்களை ஆப்ரஹாமும் இஸ்மாயீலும் உயர்த்தியபோது...." என்றே கூறுவார். ஆனால் இஸ்மாயீலில் உள்ள சப்தங்களைத் தாமதப்படுத்துதல் அவற்றை வசனத்தின் இறுதிக்குக் கொண்டு வருகின்றது, மேலும் இவ்விதமாக இந்த வசனத்தில் உன்ன கடவுளின் பொருத்தமான பெயர்கள் "அல்-ஸமீ அல்-அலீம்" என்பதை நமக்கு நினைவூட்டுகின்றது.
வசனம் 126 ஆனது "அல்-தவ்வாப் அல்-ரஹிம்" எனும் பெயர்களுக்கு சற்றே முன்னர் “துப்" எனும் கவனத்தை ஈர்க்கின்ற வார்த்தையைக் கொண்டுள்ளது. "துப்" எனும் வார்த்தை இவ்விதமாக நினைவூட்டும் மணியாகத் திகழ்கின்றது. 2:129ன் இறுதியில் கடவுளின் பெயர்களாவன "அஜீஸ், ஹகீம்" ஆகியவையாகும். இங்கே கவனத்தை ஈர்க்கின்ற சப்தங்கள் "ஐ" மற்றும் "க" ஆகியவையாகும். கண்கூடாக, இந்த வசனத்தில் நினைவூட்டும் மணியாவது "யுஜக்கீஹிம்" எனும் வார்த்தை ஆகும்.
2. மற்றொரு நல்ல உதாரணம் நம்பமறுப்பவர்களுக்குரிய தண்டனை முறையே "அஜீம் [பயங்கரமானது)", "அனீர் [வலி நிறைந்தது]" மற்றும் முஹின் (இழிவு படுத்துவது)" என்று வர்ணிக்கப்படுகின்ற 3:176, 177, 178-ல் காணப்படுகின்றது. ஒரு மானிடர் படைத்த புத்தகத்தில், மனனம் செய்பவர் இந்த மூன்று வர்ணணைகளையும் எளிதில் குழப்பிக் கொள்ளக்கூடும். ஆனால் இத்தகையதொரு குழப்பத்தைத் தடுக்கின்ற சக்தி வாய்ந்த நினைவூட்டும் மணிகள் இந்த அடைமொழிகள் ஒவ்வொன்றுக்கும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் காண்கின்றோம். வசனம் 176-ல் உள்ள "அஜீம்" எனும் வார்த்தை "ஜ" எனும் எழுத்தில் ஓர் அழுந்தத்தால் தனிப்பண்புடையதாக உள்ள, "ஹஜ்ஜுன்" எனும் வார்த்தையால் முந்தப்படுகின்றது. இது இந்த வசனத்தின் இறுதியில் உள்ள குறிப்பிட்ட அந்த அடைமொழியைப் பற்றி நமக்கு நினைவூட்டுகின்ற பணியைச் செய்கின்றது. வசனம் 177-ன் "அலீம்" எனும் வார்த்தைக்கு ஒரு நினைவூட்டும் மணியாகப் பணியாற்று வதற்காக, "ஈமான்" எனும் வார்த்தையின் சப்தம் முன்னால் வைக்கப்படுகின்றது. மேலும் 3:178ன் "முஹீன்" எனும் வார்த்தையானது, இந்த வசனம் முழுவதிலும் தாரளமான "ம" மற்றும் "ஹ" ஆகியவற்றால் முன் வைக்கப்படுகின்றது.
நினைவூட்டும் மணிகளின் மற்ற உதாரணங்களில் 3:173-ன் முடிவும் 3:174-ன் துவக்கமும், 4:52ன் முடிவும் 4:53-ன் துவக்கமும், 4:61ன் முடிவும் 4:62-ன் துவக்கமும், 18:53-ன் முடிவும் 18:54-ன் துவக்கமும், இன்னும் அதிகமான பற்பலவும் உள்ளடங்கும்.