Appendices
Appendix 37

Criminal Justice

If a thief steals a thousand dollars from you, and they put him in prison, what do you get? If the thief has a wife and children, what is their crime? Why should they be deprived of their father?

The Quran solves this problem, as well as the problems associated with the criminal justice systems prevalent in today's world.

Equivalence is the Law [2:178-179]

According to the Quranic criminal justice, the thief who is convicted of stealing a thousand dollars from you must work for you until you are fully paid for the thousand dollars you lost, plus any other damage and inconvenience the theft may have caused you. At the same time, the thief's innocent wife and children are not deprived of their man, and the expensive prison system is eliminated. Imprisonment is a cruel and inhumane punishment that has proven useless to all concerned.

Contrary to common belief, the thief's hand shall not be cut off. Thank God for His mercy and His mathematical miracle in the Quran, we know now that the thief's hand is to be marked. Marking the hand of the thief is stated in 5:38. The sura and verse numbers add up to 5+38 = 43. The other place in the Quran where "the hand is cut" is found in 12:31. This is where we see the women who admired Joseph so much, they "cut" their hands. Obviously, they did not sever their hands; no one can do that. The sura and verse numbers add up to 12+31=43, the same total as in 5:38. This gives mathematical confirmation that the Quranic law calls for marking the hand of the thief, not severing it. Additional mathematical confirmation is provided: 19 verses after 12:31, we see the "cutting of the hand" again. Punishment in Islam (Submission) is based on equivalence and social pressure (2:178, 5:38, 24:2).

The blasphemy called "Hadith & Sunna" has instituted stoning to death as the punishment for married adulterers. This is not God's law. As stated in 24:2, the punishment for adultery is whipping in public; a hundred symbolic lashes. As pointed out above, the basic punishment is social pressure and scandalizing the criminal. Whipping in public achieves this goal.

In dealing with murder, the Quran definitely discourages capital punishment (2:179). "The free for the free, the slave for the slave, and the female for the female" (2:178). Due to human meanness and injustice, many people cannot even imagine what this Quranic law says. They refuse to accept the clear injunctions that strict equivalence must be observed - if a woman kills a man, or a man kills a woman, or a slave kills a free person, or a free person kills a slave, capital punishment cannot be applied.

The Quran prefers that the murderer compensate the victim's family. Killing the murderer does not bring the victim back, nor does the family of the victim benefit from executing the murderer. The compensation, however, must be sufficient to be a deterrent for others. In Islam (Submission), the victim and/or the victim's family are the judges for all crimes; they decide what the punishment shall be under the supervision of a person who knows the Quran.

Appendix 37

குற்றவியல் நீதிமுறை

ஒரு திருடன் உங்களிடமிருந்து ஓர் ஆயிரம் ரூபாயைத் திருடிவிடுகின்றான். உடனே அவர்கள் அவனைச் சிறையிலிட்டு விட்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? அத்திருடன் ஒரு மனைவியையும் பிள்ளைகளையும் கொண்டிருந்தால், அவர்களுடைய குற்றம் என்ன? அவர்கள் ஏன் தந்தையை இழந்தவர்களாக இருக்க வேண்டும்? இந்தப் பிரச்சனையையும், அவ்வண்ணமே இன்றைய உலகில் நிலவுகின்ற குற்றவியல் நீதிமுறையுடன் தொடர்பு கொண்ட பிரச்சனைகளையும் இக்குர்ஆன் தீர்த்து வைக்கின்றது.

சமநீதியே சட்டம் ஆகும் (2:178-179)

இக்குர்ஆனுடைய குற்றவியல் நீதிமுறையின் படி, உங்களிடம் இருந்து ஓர் ஆயிரம் ரூபாயைத் திருடியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர் நீங்கள் இழந்த அந்த ஆயிரம் ரூபாய்க்கும், அத்துடன் அத்திருட்டு உங்களுக்கு உண்டாக்கி இருக்கக் கூடிய வேறு எந்த நஷ்டத்திற்கு அசௌகரியத்திற்கும், நீங்கள் முழுமையாகச் செலுத்தப்படுகின்ற வரை உங்களுக்காகப் பணி செய்தல் வேண்டும். அதே நேரத்தில், அத்திருடனின் குற்றமற்ற மனைவியும் பிள்ளைகளும் அவர்களுடைய குடும்பத்தலைவனை இழந்தவர்களாக இருப்பதில்லை, அத்துடன் செலவு மிகுந்த சிறைச்சாலை அமைப்பும் நீக்கப்பட்டு விடுகின்றது. சிறையிலடைத்தல், சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் பயனற்றதென நிரூபிக்கப்பட்டுள்ள ஒரு கொடூரமான, மேலும் மனிதத்தன்மையற்ற தண்டனையாக உள்ளது.

பொதுவான நம்பிக்கைக்கு மாற்றமாக, திருடனின் கை வெட்டி எடுக்கப்படக் கூடாது.அவருடைய கருணைக்காகவும் இக்குர்ஆனில் உள்ள அவருடைய கணித அற்புதத்திற்காகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக, திருடனின் கை அடையாளமிடப்பட வேண்டும் என்பதை இப்போது நாம் அறிந்திருக்கின்றோம்.திருடனின் கை அடையாளமிடப்படுவது 5:38-ல் கூறப்படுகின்றது. இந்த சூரா மற்றும் வசனத்தின் எண்கள் கூட்டப்பட வருவது 5+38=43. இக்குர்ஆனில் "கை வெட்டப்படுகின்ற" மற்றொரு இடம் 12:31-ல் காணப்படுகின்றது. இங்குதான் தங்கள் கைகளை "வெட்டிக் கொள்ளும்" அளவுக்கு, ஜோஸஃபை வியந்த பெண்களை நாம் காண்கின்றோம். கண்கூடாக, அவர்கள் தங்களுடைய கைகளைத் துண்டாக்கிக் கொள்ளவில்லை; எவர் ஒருவரும் அதனைச் செய்ய இயலாது. அந்த சூரா மற்றும் வசனத்தின் எண்கள் கூட்டப்பட வருவது 12+31-43,5:38-ல் உள்ளது போன்ற அதே கூட்டுத்தொகை. இக்குர்ஆனின் சட்டம் திருடனின் கையில் அடையாளமிடுவதைத்தான் ஆதரிக்கின்றது. அதனைத் துண்டாக்குவதை அல்ல என்பதற்கான கணிதரீதியான ஆதாரத்தை இது தருகின்றது. கூடுதலான கணிதரீதியான ஆதாரமும் வழங்கப்படுகின்றது: 12:31-க்கு 19 வசனங்களுக்குப் பின்னர், "கையை வெட்டிக் கொள்ளுதலை "நாம் மீண்டும் காண்கின்றோம். இஸ்லாமில் (சரணடைதல்] தண்டனையானது சமநீதி மற்றும் சமூக நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஆனது (2:178,5:38,24:2).

"ஹதீஸ் & சுன்னா" என்றழைக்கப்படுகின்ற இறைநிந்தனையானது திருமணமானபின் விபசாரம் புரிகின்றவர்களுக்குரிய தண்டனையாக கல்லால் அடித்துக் கொல்வதை நிறுவியுள்ளது. இது கடவுளின் சட்டம் அல்ல.24:2-ல் கூறப்பட்டுள்ளபடி, விபசாரத்திற்குரிய தண்டனையாவது பகிரங்கமாகச் சாட்டையால் அடிப்பதாகும்: அடையாளபூர்வமான ஒரு நூறு சாட்டையடிகள். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அடிப்படைத் தண்டனையாவது சமூக நிர்ப்பந்தம் மற்றும் குற்றவாளியை அவமானப்படுத்துவதுமேயாகும். பகிரங்கமாகச் சாட்டையாலடித்தல் இந்தக் குறிக்கோளை நிறைவேற்றுகின்றது.

கொலைக்கான நடவடிக்கையில், இக்குர்ஆள் நிச்சயமாக மரண தண்டனையை ஊக்குவிக்கவில்லை [2:179). "சுதந்திரமானவருக்கு சுதந்திரமானவர். அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண்" [2:178). மானிட அற்பத்தனத்தினாலும் அநீதத்தினாலும் ஏராளமான மக்கள் இந்தக் குர்ஆனியச் சட்டம் கூறுவது என்ன என்பதைக் கற்பனை கூடச் செய்ய இயலாமல் இருக்கின்றனர். கண்டிப்பான சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று இத்தெளிவான உத்தரவினை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஒரு பெண் ஓர் ஆணைக் கொன்றாலோ, அல்லது ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கொன்றாலோ, அல்லது ஓர் அடிமை சுதந்திரமான ஒரு நபரைக் கொன்றாலோ, அல்லது சுதந்திரமான ஒரு நபர் ஓர் அடிமையைக் கொன்றாலோ, மரண தண்டனை பிரயோகிக்கப்பட இயலாது. கொலையாளி பலியானவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு செய்வதையே இக்குர்ஆன் தேர்ந்தெடுக்கின்றது. கொலையாளியைக் கொன்று விடுதல் பலியானவரைத் திரும்பக் கொண்டு வருவதில்லை, அன்றி கொலையாளிக்கு மரணதண்டனை அளிப்பதன் மூலம் பலியானவரின் குடும்பத்தார் பலனடைவதுமில்லை. நஷ்டஈடானது, எப்படியிருப்பினும், மற்றவர்களுக்கு ஓர் அச்சுறுத்தலாக இருக்கப் போதுமான அளவுக்கு அமைய வேண்டும். இஸ்லாமில் (சரணடைதல்), பலியானவர் மற்றும்/அல்லது பலியானவரின் குடும்பத்தாரே அனைத்துக் குற்றங்களுக்கும் நீதிபதிகளாக உள்ளனர்: அவர்கள் குர்ஆனை அறிந்திருக்கின்ற ஒரு நபருடைய மேற்பார்வையின் கீழ் தண்டனை என்னவாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள்.