Appendices
Appendix 36

What Price A Great Nation

If the people of the scripture (Jews, Christians, and Muslims) believe and maintain a righteous life, we will remit their sins and admit them into the blissful Heaven. Had they observed the Torah, the Gospel, and what is revealed herein from their Lord, they would have enjoyed provisions from above them, and from beneath their feet. Some of them righteous, but most of them are evil doers. [5:65-66]

If only the people of the various communities believed and maintained a righteous life, we would have showered them with blessings from the heaven and the earth. [7:96]

God is the One who controls your happiness, or misery. God is the One who makes you rich or poor. [53:43]

A nation that upholds God's laws is guaranteed prominence among the nations of the world, victory, prosperity, and happiness (10:62-64, 16:97, 24:55, 41:30-31). On the other hand, a nation that violates God's laws incurs a miserable life (20:124). A nation that upholds God's laws is guaranteed to be a great nation. This is not a mere idealistic dream; since God is in full control (10:61), His guarantees and promises are done. A nation that upholds God's laws is characterized by:

  1. Maximum freedom for the people - freedom of religion, freedom of expression, freedom to travel, and freedom of economy (2:256, 10:99, 88:21-22).
  2. Guaranteed human rights for all the people, regardless of their race, color, creed, social status, financial situation, or political affiliation (5:8, 49:13).
  3. Prosperity for all the people. God's economic system is based on constant circulation of wealth, no usury, and productive investment. Non-productive economy such as gambling, lottery, and high interest loans are not permitted (2:275-7, 59:7).
  4. Social justice for all. Because of the obligatory charity (Zakat), no one will go hungry or un-sheltered (2:215, 70:24-25, 107:1-7).
  5. A political system that is based on unanimous consensus. Through mutual consultation and freedom of expression, one side of any given issue convinces all participants in the discussion. The end result is a unanimous agreement, not the opinion of a 51% majority rammed down the throat of the 49% minority (42:38).
  6. A society that upholds and maintains the highest standards of moral behavior. There will be a strong family, no alcoholism, no illicit drugs, no illegitimate pregnancies, no abortions, and practically no divorce.
  7. Maximum regard for people's lives and properties. Therefore, there will be no crime against the people's lives or properties.
  8. Prevalence of love, courtesy, peace, and mutual respect among the people, and between this nation and other world communities (3:110, 60:8-9).
  9. Environmental protection is guaranteed through conservation and prohibition of wasteful practices (30:41).

Appendix 36

மகத்தானதொரு தேசத்திற்கு என்ன விலை

வேதத்தையுடைய மக்கள் (யூதர்கள்,கிறிஸ்துவர்கள்,முஸ்லிம்கள்) நம்பிக்கை கொண்டு அத்துடன் நன்னெறியானதொரு வாழ்வைத் தொடர்ந்தால்,நாம் அவர்களுடைய பாவங்களைப் பிழைபொறுப்பதுடன் பேரானந்தமயமான சுவர்க்கத்திற்குள் அவர்களை நுழைய அனுமதிப்போம்.தோரா, சுவிசேஷம், மற்றும் இதிலே அவர்களுடைய இரட்சகரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றை அவர்கள் கடைப்பிடித்திருந்தால், அவர்களுக்கு மேலிருந்தும், அத்துடன் அவர்களுடைய பாதங்களுக்கு கீழிருந்தும் வாழ்வாதாரங்களை அவர்கள் மகிழ்ந்து அலுபவித்திருப்பார்கள். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக உள்ளனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் தீமை புரிபவர்களாகவே உள்ளனர். [5:65-66)

பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மட்டும் நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வினைத் தொடர்ந்திருந்தால், வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் அவர்களை ஆசீர்வாதங்களால் நாம் பொழிந்திருப்போம். (7:06)

கடவுள் ஒருவர்தான் உங்களுடைய மகிழ்ச்சியையோ, அல்லது துன்பத்தையோ கட்டுப்படுத்துகின்றவர். ...கடவுள் ஒருவர்தான் உங்களைச் செல்வந்தராகவோ அல்லது ஏழையாகவோ ஆக்குகின்றவர். (53:43,48)

கடவுளின் சட்டங்களை ஆதரிக்கின்ற ஒரு தேசம் உலகத்து நாடுகளுக்கிடையில் முக்கியத்துவத்திற்கும், வெற்றி, பொருளாதார வளம், மற்றும் மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது(10:62-64,16:97,24:55,41:30-31). மற்றொரு புறம், கடவுளின் சட்டங்களை மீறுகின்ற ஒரு தேசம் துன்பகரமானதொரு வாழ்வுக்கு உள்ளாகின்றது(20:124) கடவுளின் சட்டங்களை ஆதரிக்கின்ற ஒரு தேசம் மகத்தானதொரு தேசமாக இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது. இது நடைமுறை சாத்தியமற்ற கற்பனையான வெறும் கனவு அல்ல; கடவுள் முழுமையான கட்டுப்பாட்டினைக் கொண்டிருப்பதனால் [10:61), அவருடைய உத்தரவாதங்களும் வாக்குறுதிகளும் செய்து முடிக்கப்படுகின்றன. கடவுளுடைய சட்டங்களை ஆதரிக்கின்ற ஒரு தேசத்தின் சிறப்பியல்புகளாவன:

1. மக்களுக்கு அதிகபட்ச சுதந்திரம்- மதச்சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பிரயாணிப்பதற்குச் சுதந்திரம், மற்றும் பொருளாதாரச் சுதந்தரம்(2:256,10:99,88:21-22).

2. அனைத்து மக்களுக்கும், அவர்களுடைய இனம், நிறம், மதம், சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, அல்லது

அரசியல் சார்பினைப் பொருட்படுத்தாது, உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமைகள் [6:8,49:13).

3. அனைத்து மக்களுக்கும் பொருளாதார வனம். கடவுளின் பொருளாதார ஒழுங்குமுறையானது செல்வத்தின்

இடையறாத சுழற்சி, அதீத வட்டி இன்மை. மற்றும் பலன்தருகின்ற முதலீடுகளின் அடிப்படையில் ஆனதாகும். சூதாட்டம்.

குலுக்கல் சீட்டு, மற்றும் உயர் வட்டிக் கடன்கள் போன்ற பலன்தராப் பொருளாதாரம் அனுமதிக்கப்படுவதில்லை (2:276-7,59:7).

4. அனைவருக்கும் சமூகநீதி. கடமையான தர்மத்தின் (ஜகாத்) காரணத்தால். எவர் ஒருவரும் பசியுடனோ அல்லது வசிப்பிடமின்றியோ போய்விட மாட்டார்கள்(2:215, 70:24-25,107:1-7).

5. ஒருமித்த சம்மதத்தின் அடிப்படையிலானதோர் அரசியல் அமைப்பு.பரஸ்பரக் கலந்தாலோசனை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மூலமாக, குறிப்பிட்ட ஏதேனும் பிரச்சினையின் ஒரு பக்கம் விவாதத்தில் பங்கு பெறுகின்றவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்துகின்றது.அதன் இறுதி விளைவு ஓர் ஒருமித்த உடன்பாடு, 49% சிறுபான்மையினரின் தொண்டையை நெருக்குகின்ற 51% பெரும்பான்மையினரின் கருத்து அல்ல(42:38).

6. ஒழுக்க நடத்தையின் மிக உயர்ந்த நியமங்களைப் பராமரிக்கின்ற அத்துடன் ஆதரிக்கின்ற ஒரு சமூகம். அங்கே பலமானதோர் குடும்ப அமைப்பு இருக்கும், மதுப்பழக்கம் இருக்காது, சட்ட விரோதமான போதை மருந்துகள் இருக்காது. முறை தவறிய கருத்தரிப்புகள் இருக்காது. கருக்கலைப்புக்கள் இருக்காது, அத்துடன் விவாகரத்தும் கிட்டதட்ட இருக்காது.

7. மக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உச்சபட்ச மரியாதை.எனவே மக்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் எதிரான எந்தக் குற்றமும் அங்கு இருக்காது.

8. அதன் மக்கள் மத்தியிலும், அத்துடன் அந்த தேசம் மற்றும் உலகத்தின் இதர சமூகங்களுக்கிடையிலும் நேசம், உபச்சாரம், அமைதி, மற்றும் பரஸ்பர மரியாதை நிலவுதல்[3:110,60:8-9).

9. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன் வீண் நிறைந்த பழக்கங்களை தடை செய்தலின் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்படுகின்றது(30:41).