Appendices
Appendix 32

The Crucial Age of 40

What is the age of responsibility? If a child dies at the age of 12, without even hearing about God, does this child go to Heaven or Hell? What if the child is 15 years old, or 21, or 25? At what age will the human being be held responsible for his or her beliefs? This question has puzzled researchers of all religions for a long time.

The Quran sets the age of responsibility at 40; anyone who dies before this age goes to Heaven (46:15). If the person believed in God and benefitted from belief by nourishing and developing the soul (see Appendix 15), he or she goes to the High Heaven. Otherwise, the person goes to the Lower Heaven.

Your first reaction to this piece of information is objection: "What if the person was really bad, evil, and an atheist, will he go to Heaven if he died before the age of 40?" This is because you are mean, while God is the Most Merciful. Our tendency is to "put them all in Hell."

People who objected strongly to this Divine mercy cannot come up with a cut-off age of responsibility. They ask questions like, "What if the person was really wicked?" The answer is, "Does God know that this person was wicked?" "Yes." "Does God know that this person does not deserve to go to Heaven?" "Yes." "Therefore, this person will not die before the age of 40." As simple as that. God is the only one who terminates our lives on this earth. He knows exactly who deserves to go Heaven and who deserves to go to Hell.

Early in 1989 a man by the name of Theodore Robert Bundy was executed for killing a number of women. The whole nation agreed that he was one of the most vicious criminals in history. So much so that his execution was one of the rare occasions where the opponents of capital punishment did not protest. On the contrary, many people actually celebrated his execution. Numerous journalists, editorials, and politicians lamented the fact that justice took eleven years to execute Ted Bundy. They stated that Bundy should have been executed within a maximum of six years after his conviction. According to the Quran, this would have been the greatest favor anyone could have done to Bundy. He was 42 years old when executed. Had he been executed five years earlier, at the age of 37, he would have gone straight to Heaven, and he did not deserve that.

As it turns out, Bundy was one of the signs God has given us to confirm that anyone who dies before 40 goes to Heaven. Bundy's name, Theodore Robert Bundy, consists of 19 letters, and he confessed to killing 19 women just one day before his execution. There were many other signs from God.

Delivering this important piece of information is one of the responsibilities given to me as God's Messenger of the Covenant. It is not my personal opinion. It is noteworthy that both Martin Luther King and Malcolm X were assassinated just a couple of months before their 40th birthdays.

Appendix 32

தீர்மானிக்கின்ற வயதான 40

பொறுப்பேற்படுதலுக்கு உரிய வயது என்ன? கடவுளைப் பற்றிக் கேள்விப்படாமலேயே, 12 வயதில் ஒரு குழந்தை இறந்து விட்டால், இந்தக் குழந்தை சுவனத்திற்குச் செல்லுமா, அல்லது நரகத்திற்கா? அக்குழந்தை 15 அல்லது 21. அல்லது 25 வயதில் இருந்தால் அப்போது என்ன நிலை? எத்தனை வயதில் மானிட இனத்தவர் அவனுடைய அல்லது அவளுடைய நம்பிக்கைக்குப் பொறுப்பாகப் பிடிக்கப்படுவார்? நீண்டதொரு காலமாக இந்தக் கேள்வி அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைப் புதிரில் ஆழ்த்தி வந்துள்ளது.

பொறுப்பிற்கு உரிய வயதாக இக்குர்ஆன் 40-ஐ விதிக்கின்றது; இந்த வயதிற்கு முன்னர் மரணிக்கின்ற எவரொருவரும் சுவனத்திற்குச் செல்கின்றார் [46:15]. அந்நபர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் அந்த ஆத்மாவை ஊட்டப்படுத்தி முன்னேற்றிக் கொள்வதன்மூலம் நம்பிக்கையில் இருந்து பயனடைந்து கொண்டால் [பார்க்க பின் இணைப்பு 15], அவன் அல்லது அவன் மேலான சுவனத்திற்குச் செல்கின்றார். இல்லையேல், அந்நபர் தாழ்வான சுவனத்திற்குச் செல்கின்றார்.

இந்த தகவல் துணுக்கிற்கு உங்களுடைய முதல் எதிர்வினை ஆட்சேபனையேயாகும் : "அந்நபர் உண்மையில் கெட்டவனாக, பாவியாக, மேலும் ஒரு நாத்திகளாகவும் இருந்தால் என்ன நிலை,40 வயதுக்கு முன்னர் இவர் மரணித்து விட்டால் அவர் சுவனத்திற்குச் செல்வாரோ?" இது ஏனெனில் நீங்கள் பெருந்தன்மையற்றவர்களாக இருப்பதே, அதே சமயம் கடவுளோ மிக்க கருணையாளராக இருக்கின்றார். நம்முடைய சுபாவமோ "அவர்கள் அனைவரையும் நரகத்தில் போடுங்கள்" என்பதேயாகும்.

இந்த தெய்வீகக் கருணையை கடுமையாக ஆட்சேபிக்கின்ற மக்களால் பொறுப்பிற்குரிய குறிப்பான வயதைக் கொண்டு வர முடிவதில்லை."உண்மையில் அந்நபர் தீயவராக இருந்தால் அப்போது என்ன நிலை?" போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர். அதற்கு விடையாவது."இந்த நபர் தீயவராக இருந்தார் என்பது கடவுளுக்குத் தெரியுமல்லவா?" "ஆம்". "இந்த நபர் சுவனத்திற்குச் செல்லத் தகுதியானவர் அல்ல என்பது கடவுளுக்குத் தெரியுமல்லவா?" "ஆம்". "எனவே, இந்த நபர் 40 வயதுக்கு முன்னர் மரணிக்க மாட்டார். அந்த அளவு எளிதானது தான். இந்த பூமியில் நமது வாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருகின்ற ஒரே ஒருவர் கடவுளாகத்தான் இருக்கின்றார். சுவனத்திற்குச் செல்கின்ற தகுதியுடையவர் யார் என்றும் நரகத்திற்குச் செல்கின்ற தகுதியுடையவர் யார் என்றும் அவர் மிகச்சரியாக அறிந்திருக்கின்றார்.

சமீபமாக 1989-ல் (Theodore Robert Bundy) தியோடர் ராபர்ட் பன்டி எனும் பெயர் கொண்ட ஒரு மனிதன் பல பெண்களைக் கொன்றதற்காக மரணதண்டனை அளிக்கப்பட்டான். சரித்திரத்தில் மிகக் கொடூரமான குற்றவாளிகளில் ஒருவனாக அவன் இருந்தான் என்பதை தேசம் முழுமையும் ஒப்புக்கொண்டது. எந்த அளவுக்கெனில் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் கூட அவனுடைய மரண தண்டனையை ஆட்சேபிக்காத அரிய சம்பவங்களில் ஒன்றாக அது இருந்தது. அதற்கு மாறாக, ஏராளமான மக்கள் உண்மையில் அவனுடைய மரண தண்டனையைக் கொண்டாடினர். எண்ணற்ற பத்திரிகையாளர்கள், தலையங்கங்கள், மற்றும் அரசியல்வாதிகள் டெட் பண்டிக்கு மரணதண்டனை அளிப்பதற்கு நீதி பரிபாலனம் பதினொரு வருடங்கள் எடுத்துக் கொண்டது எனும் நிதர்சனத்திற்காகப் புலம்பினர். அவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு அதிகபட்சம் ஆறு வருடங்களுக்குள் பண்டிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இக்குர்ஆனைப் பொறுத்தவரை, அது பண்டிக்கு எவரொருவரும் செய்திருக்கக் கூடிய மிகப்பெரிய சலுகையாக இருந்திருக்கும். மரணதண்டனை நிறைவேற்றப்பட்டபோது அவன் 42 வயதுடையவனாக இருந்தான். ஐந்து வருடங்கள் முன்னதாக, 37 வயதில் அவனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டிருந்தால், அவன் நேரடியாகச் சுவனத்திற்குச் சென்றிருப்பான், ஆனால் அவன் அதற்குத் தகுதியானவனாக இருக்கவில்லை.

இப்போது வெளிப்பட்டுள்ளபடி, 40 வயதுக்கு முன்னர் மரணிக்கின்ற எவரொருவரும் சுவனத்திற்குச் செல்கின்றார் என்பதை உறுதிப்படுத்துவதற்காகக் கடவுள் நமக்குத் தந்துள்ள அத்தாட்சிகளில் ஒன்றாக பண்டி இருந்தான். பண்டியின் பெயர். Theodore Robert Bundy, 19 எழுத்துக்களைக் கொண்டுள்ளது, அத்துடன் அவனுடைய மரண தண்டனைக்குச் சரியாக ஒரு நாள் முன்னர் 19 பெண்களைக் கொன்றதாக அவன் ஒப்புக் கொண்டான். கடவுளிடமிருந்து மற்ற பல அத்தாட்சிகளும் இருந்தன.

முக்கியமான இந்தத் தகவல் துணுக்கினைச் சேர்ப்பித்தல் கடவுளின் உடன்படிக்கைத் தூதர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களில் ஒன்றாக உள்ளது. இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் அல்ல.

மார்ட்டின் லூதர் கிங் மற்றும் மால்கம் X இருவரும் அவர்களுடைய 40-வது பிறந்த நாளுக்குச் சரியாக சில மாதங்களுக்கு முன்னர்தான் கொல்லப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.