Appendices
Appendix 31

Evolution: Divinely Controlled

We learn from the Quran that evolution is a divinely designed fact:

Life began in water: "From water we initiated all living things." [21:30, 24:45]

Humans are not descendants of monkeys: "He started the creation of man from mud." [32:7]

Man created from "aged" mud: "I am creating the human being from 'aged' clay." [15:28]

Evolution is possible only within a given species. For example, the navel orange evolved from seeded oranges, not from apples. The laws of probablity preclude the possibility of haphazard evolution between species. A fish cannot evolve into a bird; a monkey can never evolve into a human.

Probability Laws Preclude Darwin's Evolution

In this computer age, we have mathematical laws that tell us whether a certain event is probable or not. If we throw five numbered cubes up in the air and let them fall into a guided straight line, the probability laws tell us the number of possible combinations we can get: 1x2x3x4x5=120 combinations. Thus, the probability of obtaining any combination is 1 in 120, or 1/120, or 0.0086. This probability diminishes fast when we increase the number of cubes. If we increase them by one, the number of combinations becomes 1x2x3x4x5x6=720, and the robability of getting any combination diminishes to 1/720, 0.0014. Mathematicians, who are very exacting scientists, have agreed that the probability diminishes to "Zero" when we increase the number of cubes to 84. If we work with 84 cubes, the probability diminishes to 209x10 (raised to the power of) -50, or

0.00000000000000000000000000000000000000000000000000209

Darwin's famous statement that "life began as a `simple' cell" is laughable.

As recently as 50 years ago, Wells, Huxley, and Wells wrote in their classic textbook that "nothing can be seen inside the nucleus but clear fluid." We know now that the cell, is an extremely complex unit, with billions of nucleotides in the gene material inside the nucleus, and millions of biochemical reactions. The probability laws tell us that the probability of the haphazard creation of the exacting sequences of nucleotides into DNA is Zero, many times over. We are not talking about 84 nucleotides; we are talking about billions of nucleotides that must be arranged in a specific sequence.

Some evolutionists have stated that the human gene and the monkey's gene are 90% similar. However, even if the similarity was 99%, we are still talking about 300, 000, 000 nucleotides that must be haphazardly re-arranged to change the monkey into a human. The probability laws preclude this as an utter impossibility. The human gene contains 30, 000, 000, 000 nucleotides; 1% of that is 300, 000, 000.

A fitting quote here is that of Professor Edwin Conklin; he stated:

"The probability of life originating from accident is comparable to the probability of the Unabridged Dictionary resulting from an explosion in a printing factory."

Appendix 31

பரிணாம வளர்ச்சி: தெய்வீகமாகக் கட்டுப்படுத்தப்பட்டது

பரிணாம வளர்ச்சியானது தெய்வீகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும் என்று நாம் இக்குர்ஆனில் இருந்து கற்றுக் கொள்கிறோம்:

நீரில் இருந்து உயிர் தோன்றியது:    

 "உயிருள்ளவை அனைத்தையும் நாம் நீரில் இருந்து துவங்கினோம்."    ( 21: 30, 24:45 )

மானிடர்கள் குரங்குகளின் வழி வந்தவர்கள் அல்லர்:

"மனிதனின் படைப்பினை அவர் களிமண்ணில்

இருந்து துவக்கிளார்" (32:7)

மனிதன் "முற்றிய" களிமண்ணில் இருந்து படைக்கப்பட்டான்:

"முற்றிய களிமண்ணில் இருந்து மானிட இனத்தவரை நான் படைக்கின்றேன்"[15:28]

பரிணாம வளர்ச்சி குறிப்பிட்டதொரு இனங்களுக்குள் மட்டுமே சாத்தியமானதாகும். உதாரணத்திற்கு,கொட்டையுள்ள ஆரஞ்சில் இருந்தே கொட்டையில்லாத ஆரஞ்சு பரிணாமம் அடைந்தது. ஆப்பிள்களில் இருந்து அல்ல, சாத்தியக்கூறினுடைய சட்டங்கள் இனங்களுக்கிடையில் யதேச்சையான பரிணாம வளர்ச்சியின் சாத்தியத்தை விலக்கி விடுகின்றன.ஒரு மீன் ஆனது ஒரு பறவையாகப் பரிணாமம் அடைய இயலாது; ஒரு குரங்கு ஒரு போதும் ஒரு மானிடனாகப் பரிணாமம் அடைய இயலாது.

சாத்தியக் கூறினுடைய சட்டங்கள் டார்வினின்

பரிணாமத்தை சாத்தியமற்றது என்கின்றன

இந்தக் கணிணி யுகத்தில் குறிப்பிட்டதொரு நிகழ்வு சாத்தியமானதா இல்லையா என்பதை நமக்குக் கூறுகின்ற கணிதரீதியான விதிகள் நம்மிடம் உள்ளன. எண் இடப்பட்ட ஐந்து பகடைகளை மேல் நோக்கிக் காற்றில் நாம் வீசி அவற்றை ஒரு நேர்க்கோட்டில் விழும்படிச் செலுத்தினால், நமக்கு கிடைக்கூடிய கலவைகளின் சாத்தியமான எண்ணிக்கையை சாத்தியக்கூறினுடைய விதிகள் நமக்குச் சொல்கின்றன : 1×2×3X4X 5 120 கலவைகள். எனவே எந்தக் கலவையையும் அடைவதற்குரிய சாத்தியக்கூறானது 120-ல் 1 ஆகும். அல்லது 1/120, அல்லது 0.0086 பகடைகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் போது சாத்தியக்கூறானது வேகமாகக் குறைகின்றது. அவற்றில் ஒன்றினை நாம் அதிகரித்தால், கலவைகளின் எண்ணிக்கை 1×2× 3× 4 X 5 X 6 -720 ஆகின்றது, எனவே எந்தக் கலவையும் கிடைப்பதற்குரிய சாத்தியக்கூறானது 1/720, 0.0014-க்குக் குறைகின்றது. மிகவும் துல்லியமான விஞ்ஞானிகளான, கணிதவியலாளர்கள், பகடைகளின் எண்ணிக்கையை 84 ஆக நாம் அதிகரித்தால், அதன் சாத்தியக்கூறு "பூஜ்யம்" ஆகக் குறைந்து விடுகின்றது என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். 84 பகடைகளைக் கொண்டு நாம் செய்தால், சாத்தியக்கூறானது 209 × 10 அல்லது 0. 0000000000000000000000000000000000000000 000000000209-க்குக் குறைகின்றது.

“உயிர் ஆனது ஒரு 'தனித்த' உயிரணுவாகத் துவங்கியது." என்ற டார்வினின் பிரசித்தி பெற்ற கூற்று நகைக்கத்தக்கதாக உள்ளது. மிகச் சமீபமாக 50 வருடங்கள் முன்னர் கூட, வெல்ஸ், ஹக்ஸ்லி மற்றும் வெல்ஸ் தங்களுடைய தரமிகு பாடப்புத்தகத்தில் “தெளிந்த நீர்மத்தைத் தவிர, மையக்கருவின் உள்ளே எந்த ஒன்றும் காணப்பட இயலாது." என்று எழுதினர். இப்போது நாம் உயிரணுவானது, மையக்கருவின் உள்ளே உயிர்மப் பொருளில் பில்லியன் கணக்கில் நியூக்ளியோடைட்கள் மற்றும் மில்லியன் கணக்கில் உயிர் வேதியியல் எதிர்விளைவுகளுடன், உச்சபட்சச் சிக்கலான ஒன்றாக உள்ளது என்பதை அறிந்திருக்கின்றோம். DNA-க்களுக்குள் உள்ள நியூக்ளியோடைட்களுடைய துல்லியமான வரிசைகளின் யதேச்சையான படைப்பிற்கான சாத்தியக்கூறு பூஜ்யமாகும். பற்பல மடங்குகள் அதிகமாக, என்பதை சாத்தியக்கூறினுடைய விதிகள் நமக்குச் சொல்கின்றன. நாம் 84 நியூக்ளியோடைட்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கவில்லை; ஒரு குறிப்பிட்ட வரிசையில் கட்டமைக்கப்பட வேண்டிய பில்லியன் கணக்கான நியூக்ளியோ டைட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

பரிணாமவாதிகள் சிலர் மானிட உயிர்மமும் குரங்கினுடைய உயிர்மமும் 90% ஒப்பானதாக உள்ளன என்று கூறியுள்ளனர்.எப்படியிருப்பினும், அந்த ஒற்றுமையானது99% ஆக இருந்தாலும் கூட, அப்போதும் நாம் ஒரு குரங்கினை ஒரு மானிடனாக மாற்றுவதற்கு ஏறுமாறாக மறுவரிசைப்படுத்தப்பட வேண்டிய 300,000,000 நியூக்ளியோடைட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றோம்.சாத்தியக் கூறினுடைய விதிகள் இதனை முற்றிலும் சாத்தியமற்றது என விலக்கி விடுகின்றன.மானிட உயிர்மம் 30,000,000,000 நியூக்ளியோடைட்களைக் கொண்டுள்ளது; அதன் 1% தான் 300,000,000 ஆகும்.

இங்கே மிகப் பொருத்தமான ஒரு மேற்கோள் பேராசிரியர் எட்வின் கான்க்ளின் உடையதாகும் அவர் கூறினார்:

தற்செயல் நிகழ்வில் இருந்து உயிர் துவங்கியது என்பதன் சாத்தியக்கூறானது ஓர் அச்சுத் தொழிற்சாலையில் நிகழ்ந்த ஒரு வெடிப்பினில் இருந்து சுருக்கப்படாத ஒரு சொல்லகராதி வெளி வருவதன் சாத்தியக்கூறுடன் ஒப்பிடக்கூடியதாகும்.