Polygamy
Polygamy was a way of life until the Quran was revealed 1400 years ago. When the earth was young and under-populated, polygamy was one way of populating it and bringing in the human beings needed to carry out God's plan. By the time the Quran was revealed, the world had been sufficiently populated, and the Quran put down the first limitations against polygamy.
Polygamy is permitted in the Quran, but under strictly observed circumstances. Any abuse of this divine permission incurs severe retribution. Thus, although polygamy is permitted by God, it behooves us to examine our circumstances carefully before saying that a particular polygamous relationship is permissible.
Our perfect example here is the prophet Muhammad. He was married to one wife, Khadijah, until she died. He had all his children, except one, from Khadijah. Thus, she and her children enjoyed the Prophet's full attention for as long as she was married to him; twenty-five years. For all practical purposes, Muhammad had one wife - from the age of 25 to 50. During the remaining 13 years of his life, he married the aged widows of his friends who left many children. The children needed a complete home, with a fatherly figure, and the Prophetprovided that. Providing a fatherly figure for orphans is the only specific circumstance in support of polygamy mentioned in the Quran (4:3).
Other than marrying widowed mothers of orphans, there were three political marriages in the Prophet's life. His close friends Abu Bakr and Omar insisted that he marry their daughters, Aisha and Hafsah, to establish traditional family ties among them. The third marriage was to Maria the Egyptian; she was given to him as a political gesture of friendship from the ruler of Egypt.
This perfect example tells us that a man must give his full attentionand loyalty in marriage to his wife and children in order to raise a happy and wholesome family. The Quran emphasizes the limitations against polygamy in very strong words:"If you fear lest you may not be perfectly equitable in treating more than one wife, then you shall be content with one." (4:3) "You cannot be equitable in a polygamous relationship, no matter how hard you try." (4:129)
The Quranic limitations against polygamy point out the possibility of abusing God's law. Therefore, unless we are absolutely sure that God's law will not be abused, we had better resist our lust and stay away from polygamy. If the circumstances do not dictate polygamy, we had better give our full attention to one wife and one set of children.
The children's psychological and social well-being, especially in countries where polygamy is prohibited, almost invariably dictate monogamy. A few basic criteria must be observed in contemplating polygamy:
பலதார மணம்
1400 வருடங்களுக்கு முன்னர் இக்குர்ஆன் வெளிப்படுத்தப்படுகின்ற வரை பலதார மணம் ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்தது. இந்த பூமி இளமையானதாகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டதாகவும் இருந்த போது, அதன் மக்கள் தொகையைப் பெருக்கி கடவுளின் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அவசியமான மானிட இனத்தவர்களைக் கொண்டுவருவதற்கு, பலதார மணம் ஒரு வழியாக இருந்தது. இக்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட நேரத்தில், இவ்வுலகம் போதுமான அளவு மக்கள் தொகையுடையதாக ஆகி இருந்தது. எனவே இக்குர்ஆன் பலதாரமணத்திற்கு எதிரான முதல் வரையறைகளை விதிக்கின்றது.
இக்குர்ஆனில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படுகின்ற சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே. இந்தத் தெய்வீக அனுமதியின் எந்த துஷ்பிரயோகமும் கடும் தண்டனைக்கு உள்ளாக்குகின்றது. எனவே, பலதாரமணம் கடவுளால் அனுமதிக்கப்பட்டதாக இருந்த போதிலும், குறிப்பிட்டதொரு பலதார உறவுமுறை அனுமதிக்கப்பட்டதுதான் என்று கூறுவதற்கு முன் நமது சூழ்நிலைகளை கவனத்துடன் ஆராய்வதை அது நமக்கு அவசியமாக்குகின்றது.
இங்கே நமக்கு மிகச்சரியான உதாரணம் முஹம்மத் நபி ஆவார். கதீஜா எனும் ஒரே மனைவிக்கே, அவர் மரணிக்கின்ற வரை, அவர் மணம் முடிக்கப்பட்டிருந்தார். அவர் தன்னுடைய குழந்தைகள் அனைவரையும், ஒருவரைத் தவிர, கதீஜாவின் மூலமாகவே பெற்றிருந்தார். இவ்விதமாக, அவருடன் அவர் மணம் முடிக்கப்பெற்றிருந்த காலம் எல்லாம், இருபத்தி ஐந்து ஆண்டுகள், அவரும் அவருடைய குழந்தைகளும் நபியின் முழுமையான கவனிப்பை மகிழ்வுடன் அனுபவித்தனர். நடைமுறைக் காரணங்கள் அனைத்திற்கும், முஹம்மத் ஒரு மனைவியையே கொண்டிருந்தார் -25 வயதில் இருந்து 50 வயது வரை. அவருடைய வாழ்வின் எஞ்சிய 13 வருடங்களின் போது, பல குழந்தைகளை விட்டுச் சென்ற அவருடைய நண்பர்களின் வயதான விதவையரை அவர் மணந்து கொண்டார். அக்குழந்தைகளுக்கு ஒரு தந்தையின் வடிவுடன் கூடிய, முழுமையானதொரு இல்லம் தேவைப்பட்டது. எனவே நபி அதனை வழங்கினார். இக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள பலதார மணத்திற்கு ஆதரவான குறிப்பிட்ட ஒரே சூழ்நிலையானது அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு தந்தையின் வடிவத்தை வழங்குவதேயாகும் (4:3).
அனாதைகளின் விதவைத் தாய்மார்களை மணந்து கொண்டதற்கு அப்பால், நபியின் வாழ்வில் மூன்று அரசியல் திருமணங்கள் இருந்தன. அவருடைய நெருங்கிய நண்பர்களான அபூபக்ரும், உமரும், தங்களுக்கிடையில் பரம்பரைக் கடும்ப உறவுகளை நிலைப்படுத்திக் கொள்ள. தங்களுடைய மகள்களான ஆயிஷா மற்றும் ஹஃப்ஸாவை அவர் மணமுடித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினர். மூன்றாம் திருமணம் மரியா எனும் எகிப்தியருடன் ஆனது; அவர் எகிப்தின் ஆட்சியாளரிடமிருந்து அரசியல் நட்பின் ஒரு சமிக்ஞையாக அவருக்குக் கொடுக்கப்பட்டார்.
மகிழ்ச்சியான மற்றும் நலம் பயக்கின்ற ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்காக, திருமணத்தில் ஓர் ஆண் தன்னுடைய முழுமையான கவனம் மற்றும் விசுவாசத்தைத் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்குக் கொடுத்தாக வேண்டும். என்பதை மிகச் சரியான இந்த உதாரணம் நமக்குச் சொல்கிறது.
பலதாரமணத்திற்கு எதிரான வரையறைகளை இக்குர்ஆன் மிக அழுத்தமான வார்த்தைகளில் வலியுறுத்திக் கூறுகின்றது: "ஒரு மனைவிக்கும் அதிகமானவர்களை நடத்துவதில் உங்களால் பூரணமான நீதத்துடன் இருக்க முடியாமல் ஆகிவிடக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால், அப்போது நீங்கள் ஒன்றுடன் திருப்தியடைந்தவராக இருக்க வேண்டும்." (4:3) "நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் சரியே, பலதார உறவுமுறை ஒன்றில் நீங்கள் நீதத்துடன் இருக்க இயலாது." [4:129]
பலதார மணத்திற்கு எதிரான இக்குர்ஆனின் வரையறைகள் கடவுளின் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற சாத்தியத்தை கவனத்திற்குக் கொண்டு வருகின்றது. எனவே, கடவுளின் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படாது என்பதில் பரிபூரணமான நிச்சயத்துடன் நாம் இருந்தாலேயன்றி, நமது காமத்தைத் தடுத்துக் கொண்டு பலதாரமணத்தில் இருந்து விலகியிருப்பதே நமக்கு நலமாகும். சூழ்நிலைகளானவை பலதாரமணத்திற்குக் கட்டளையிடவில்லையென்றால், ஒரு மனைவிக்கும், குழந்தைகளின் ஒரு குழுமத்திற்கும் நமது முழுமையான கவனத்தைத் தருவதே நமக்கு நலமாகும். குறிப்பாக பலதார மணம் தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில், குழந்தைகளின் மனோரீதியான மற்றும் சமூக நல்வாழ்வு, கிட்டத்தட்ட ஒரே சீராக ஒரு தார மணத்தையே கட்டளையிடுகின்றது. பலதார மணத்தைப் பற்றிச் சிந்திக்கையில் ஒரு சில அடிப்படை அளவுகோல்கள் கடைப்பிடிக்கப்பட்டாக வேண்டும்.
1. அது வலியையும் கஷ்டத்தையும் நிவர்த்திப்பதாக இருக்க வேண்டுமேயன்றி எந்த வலிக்கோ அல்லது கஷ்டத்திற்கோ காரணமாகக் கூடாது.
2. இளம் குடும்பம் ஒன்று உங்களுக்கு இருக்குமாயின், பலதார மணம் ஒரு துஷ்பிரயோகம் என்பது கிட்டத்தட்ட நிச்சயமே.
3. இளமையான ஒரு மனைவியை மாற்றியமைத்துக் கொள்வதற்காகப் பலதாரமணம் செய்து கொள்ளுதல் கடவுளுடைய சட்டத்தின் ஒரு துஷ்பிரயோகமேயாகும் (4:19).