The Missing Basmalah
Every sura in the Quran opens with the statement "In the name of God, Most Gracious, Most Merciful," known as the Basmalah, with the exception of Sura 9. This conspicuous absence of the Basmalah from Sura 9 has been an intriguing feature of the Quran for 14 centuries. Many theories have been advanced to explain this phenomenon. Now we learn that the missing Basmalah plays a significant role as
Both roles of the missing Basmalah were revealed with the discovery of the Quran's mathematical code. The following list of factual observations illustrate the miraculous features of the missing Basmalah:
[1] Since the Basmalah consists of 19 Arabic letters, and prefixes all the suras except one, it can be considered the foundation upon which the Quran's 19-based code is built. But the absence of the Basmalah from Sura 9 causes the number of this crucial opening statement to be 113, a number that does not conform with the Quran's code. However, we find that this deficiency is compensated for in Sura 27. Two Basmalahs occur in Sura 27, one as an opener and one in Verse 30. This restores the total number of Basmalahs in the Quran to 114, 19x6.
[2] From the missing Basmalah of Sura 9 to the extra Basmalah of Sura 27, there are 19 suras.
[3] The sum of sura numbers from the missing Basmalah (Sura 9) to the extra Basmalah (Sura 27) is 9+10+11+12+ ... +25+26+27 = 342, 19x18.
This is a mathematical property, any consecutive 19 numbers will add up to a multiple of 19. But the miraculous phenomenon is that this number, 342, equals the number of words from the first Basmalah of Sura 27 to the second Basmalah in 27:30.
[4] The occurrence of the extra Basmalah in 27:30 conforms with the Quran's code in that the sura number, plus the verse number is a multiple of 19 (27+30 = 57 = 19x3).
[5] The occurrence of the extra Basmalah in Verse 30 compares with the occurrence of the number 19 itself in Verse 30 (Sura 74).
[6] The Quran contains 6234 numbered verses. The absence of the Basmalah from Sura 9, and compensating for it in Verse 30 of Sura 27 gives us two numbered Basmalahs, 1:1 & 27:30, and 112 un-numbered Basmalahs. This causes the total number of verses in the Quran to be 6234+112 = 6346, 19x334.
[7] From the missing Basmalah to the extra Basmalah, the number of verses containing the word "Allah" is 513, 19x27. Note that 27 is the sura number where the extra Basmalah occurs. The data are in Table 1.
[8] The sum of verse numbers (1+2+3+ ... +n), plus the number of verses, from the missing Basmalah to the extra Basmalah is 119624, 19x6296. See Table 2:
Sura | Verses | Sum of Verse # |
---|---|---|
9 | 127 | 8128 |
10 | 109 | 5995 |
11 | 123 | 7626 |
12 | 111 | 6216 |
13 | 43 | 946 |
14 | 52 | 1378 |
15 | 99 | 4950 |
16 | 128 | 8256 |
17 | 111 | 6216 |
18 | 110 | 6105 |
19 | 98 | 4851 |
20 | 135 | 9180 |
21 | 112 | 6328 |
22 | 78 | 3081 |
23 | 118 | 7021 |
24 | 64 | 2080 |
25 | 77 | 3003 |
26 | 227 | 25878 |
27 | 29 | 435 |
--- | --- | --- |
342 | 1951 | 117673 |
1951+117673=119624=19x6296 |
Sura Number | Verses w/ "Allah" |
---|---|
9 | 100 |
10 | 49 |
11 | 33 |
12 | 34 |
13 | 23 |
14 | 28 |
15 | 2 |
16 | 64 |
17 | 10 |
18 | 14 |
19 | 8 |
20 | 6 |
21 | 5 |
22 | 50 |
23 | 12 |
24 | 50 |
25 | 6 |
26 | 13 |
27 | 6 |
--- | --- |
342 (19x18) | 513 (19x27) |
[9] This item also proves that Sura 9 consists of 127 verses, not 129 (see Appendix 24). The sum of digits of 127 is 1+2+7=10. By finding all the verses whose digits add up to 10, from the missing Basmalah of Sura 9 to the extra Basmalah of Sura 27, then adding the number of these verses to the total number of verses from the missing Basmalah to the extra Basmalah, we get 2128, or 19x112 (Table 3).
[10] Sura 9 is an odd-numbered sura whose number of verses (127) is also odd. From the missing Basmalah to the extra Basmalah, there are 7 suras that possess this property; they are odd-numbered suras whose numbers of verses are also odd. As detailed in Table 4, these are Suras 9, 11, 13, 15, 17, 25, and 27. By adding the digits that make up the sura numbers and the numbers of verses, the grand total is 114, 19x6.
Sura No. | Sum of Digits | No of Verses | Sum of Digits |
---|---|---|---|
9 | 9 | 127 | 10 |
11 | 2 | 123 | 6 |
13 | 4 | 43 | 7 |
15 | 6 | 99 | 18 |
17 | 8 | 111 | 3 |
25 | 7 | 77 | 14 |
27 | 9 | 29 | 11 |
-- | -- | ||
45 | 69 | ||
45+69 = 114 = 19x6 |
Sura No. | No. of Verses | No. of Occurences |
---|---|---|
9 | 127 | 12 |
10 | 109 | 10 |
11 | 123 | 11 |
12 | 111 | 10 |
13 | 43 | 3 |
14 | 52 | 4 |
15 | 99 | 9 |
16 | 128 | 12 |
17 | 111 | 10 |
18 | 110 | 10 |
19 | 98 | 9 |
20 | 135 | 12 |
21 | 112 | 10 |
22 | 78 | 7 |
23 | 118 | 11 |
24 | 64 | 6 |
25 | 77 | 7 |
26 | 227 | 22 |
27 | 29 | 2 |
--- | --- | --- |
342 | 1951 | 177 |
(19x18) & 1951+177=2128=19x112 |
[11] The next two features authenticate both the missing Basmalah and he number of verses in Sura 9 (where two false verses had been injected).
If we take the same suras listed in Table 4, odd-numbered suras whose numbers of verses are also odd, and write down the number of every sura, followed by its number of verses, the resulting long number (30 digits) is a multiple of 19 (Figure 1).
9 127 11 123 13 43 15 99 17 111 25 77 27 29
Every sura number is followed by the number of verses in that sura.
This long number equals 19 x 48037427533385052195322409091.
[Figure 1]
[12] Let us take the last digit of all the verses from the missing Basmalah to the extra Basmalah. If we write down the number of every sura, followed by the last digit in every verse in that sura, we end up with a long number, of 1988 digits, which is divisible by 19 (Figure 2).
9 1234567890123... ... 27 1234567890 ... 789
The sura number is followed by the last digit in every verse number
from Sura 9 to Sura 27, Verse 29. [Figure 2]
இடம் பெறாத பஸ்மலஹ்
இக்குர்ஆனில் உள்ள ஒவ்வொரு சூராவும் பஸ்மலஹ் என்று அறியப்படுகின்ற, "கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்". எனும் வாசகத்துடன் துவங்குகின்றது. சூரா 9-ஐத் தவிர. சூரா 9-ல் கவனத்தை ஈர்க்கின்ற பஸ்மலஹ்வின் இந்த இடம் பெறாமை, 14 நூற்றாண்டுகளாக இக்குர்ஆனின் ஆர்வம் தூண்டுகின்ற ஒரு முக்கிய அம்சமாகவே இருந்து வந்துள்ளது. இந்த வினோத நிகழ்வினை விவரிக்க ஏராளமான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இடம் பெறாத பஸ்மலஹ்வானது [1] இக்குர்ஆனுடைய கணித அற்புதத்தின் பொருள் பொதிந்ததோர் அங்கமாகவும், அத்துடன் [2] சூரா 9 சீர்குலைக்கப்பட்டுள்ளதுடன் தூய்மைப்படுத்தப்பட்டாக வேண்டும் என்று மிக்க அருளாளர், மிக்க கருணையாளர் வசமிருந்து ஒரு பளிச்சிடுகின்ற அத்தாட்சியாகவும் குறிப்பிடத்தக்கதொரு பங்காற்றுகின்றது என்பதை இப்போது நாம் அறிந்து கொள்கின்றோம் (பின் இணைப்பு 24]. இடம்பெறாத இந்த பஸ்மலஹ்வின் இரண்டு பணிகளும் குர்ஆனுடைய கணிதக் குறியீட்டின் கண்டுபிடிப்புடன் வெளிப்படுத்தப்பட்டது.
உண்மைகளின் அடிப்படையிலான முடிவுகளின் கீழ்க்கண்ட பட்டியல் இடம்பெறாத பஸ்மலஹ்வின் அற்புதமயமான முக்கிய அம்சங்களைச் சித்தரிக்கின்றது.
(1) பஸ்மலஹ் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டிருப்பதனாலும், ஒன்றைத் தவிர அனைத்து சூராக்களிலும் முன்வைக்கப்பட்டிருப்பத னாலும், இக்குர்ஆனின் 19-ன் அடிப்படையில் ஆன குறியீடு கட்டப் பட்டுள்ள அஸ்திவாரமாக அது கருதப்பட வேண்டும். ஆனால் சூரா 9-ல் பஸ்மலஹ்வின் இந்த இடம் பெறாமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் துவக்க வாசகத்தின் எண்ணிக்கையை, குர்ஆனுடைய கணிதக் குறியீட்டுடன் ஒத்துப் போகாத ஓர் எண்ணான 113 ஆக்கக் காரணமா கின்றது. ஆயினும், இந்தப் பற்றாக்குறையானது சூரா 27-ல் ஈடுசெய்யப் பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். சூரா-27ல் ஒரு துவக்கமாகவும் வசனம் 30-ல் ஒன்றாகவும் இரண்டு பஸ்மலஹ்கள் இடம் பெறுகின்றன. இது குர்ஆனில் பஸ்மலஹ்களின் மொத்த எண்ணிக்கையை 114, 19X6- க்கு மீட்டுக் கொண்டுவருகின்றது.
(2) சூரா 9-ல் இடம் பெறாத பஸ்மலஹ்வில் இருந்து சூரா 27-ன் அதிகப்படியான பஸ்மலஹ் வரை, அங்கு 19 சூராக்கள் உள்ளன.
(3) இடம் பெறாத பஸ்மலஹ்வில் இருந்து, அதிகப்படியான பஸ்மலஹ்வரை (சூரா 27) உள்ள சூரா எண்களின் கூட்டுத் தொகையானது 9+10+11+12+25 +26 + 27 = 342, 19x18. இது ஒரு கணிதவியல் தன்மை யாகும், தொடர்ச்சியான 19 எண்கள் எதுவும் கூட்டப்பட்டால் விளை வது 19-ன் பெருக்குத் தொகையாகவே இருக்கும். ஆனால் இங்கு அற்புதமயமான வினோத நிகழ்வு என்னவென்றால், இந்த எண், 342, சூரா 27-ன் முதல் பஸ்மலஹ்வில் இருந்து 27:30-ல் உள்ள இரண்டாவது பஸ்மலஹ் வரையுள்ள வார்த்தைகளின் எண்ணிக் கைக்குச் சமமானதாக உள்ளது,
(4) 27:30-ல் அதிகப்படியான பஸ்மலஹ் இடம்பெறுவதானது, அந்த சூரா எண்ணுடன் வசன எண்ணைக் கூட்ட கிடைப்பது 19-ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது என்பதில் குர்ஆனின் குறியீட்டுடன் ஒத்துப் போகின்றது (27+30=57=19x3).
(5) அதிகப்படியான பஸ்மலஹ் வசனம் 27:30 - ல் இடம் பெறுதல், வசனம் 30 ல் தான் (சூரா 74) 19 எனும் எண்ணே இடம் பெறுகின்றது என்பதுடன் ஒத்ததாக உள்ளது.
(6) இக்குர்ஆன் 6234 எண் இடப்பட்ட வசனங்களைக் கொண்டுள்ளது. சூரா 9-ல் பஸ்மலஹ் வின் இடம் பெறாமையும், அத்துடன் சூரா 27 ன் வசனம் 30-ல் அது ஈடு செய்யப்படுவதுமாக எண் இடப்பட்ட பஸ்மலஹ்கள் இரண்டினையும், 1:1 & 27;30, மற்றும் 112 எண் இடப்படாத பஸ்மலஹ்களையும் நமக்குத் தருகின்றது. இது இக்குர்ஆனில் உள்ள வசனங்களின் மொத்த எண்ணிக்கையை 6234+112=6346, 19 × 334 என்றாக்கக் காரணமாகின்றது.
(7) இடம்பெறாத பஸ்மலஹ் வில் இருந்து உபரியான பஸ்மலஹ் வரை அல்லாஹ்" எனும் வார்த்தையைக் கொண்டிருக்கின்ற வசனங்களின் எண்ணிக்கை 513, 19x27 ஆகும். உபரியான பஸ்மலஹ் இடம்பெறுகின்ற சூராவின் எண் 27 ஆக உள்ளது என்பதைக் கவனிக்கவும். விவரங்கள் அட்டவணை 1ல் உள்ளன.
அட்டவணை 1: இடம்பெறத் தவறுகின்ற பஸ்மலஹ் முதல் உபரியான பஸ்மலஹ் வரை "அல்லாஹ்" எனும் வார்த்தையைக் கொண்டுள்ள வசனங்கள்.
சூரா எண் |
"அல்லாஹ்" இ/பே வசனங்கள் |
9 |
100 |
10 |
49 |
11 |
33 |
12 |
34 |
13 |
23 |
14 |
28 |
15 |
2 |
16 |
64 |
17 |
10 |
18 |
14 |
19 |
8 |
20 |
6 |
21 |
5 |
22 |
50 |
23 |
12 |
24 |
50 |
25 |
6 |
26 |
13 |
27 |
6 |
342 |
513 |
19 X 18 |
19 X 27 |
(8) இடம் பெறாத பஸ்மலஹ்வில் இருந்து உபரியான பஸ்மலஹ் வரையுள்ள வசன எண்களின் கூட்டுத் தொகையுடன் (1+2+3+......+n), வசனங்களின் எண்ணிக்கையைக் கூட்ட 119624, 19x6296 ஆகும். பார்க்க அட்டவணை 2.
அட்டவணை 2: இடம்பெறத் தவறுகின்ற பஸ்மலஹ் முதல் உபரியான பஸ்மலஹ் வரை உள்ள சூராக்கள் & வசனங்கள்.
சூரா எண் |
வசனங்களின் எண்ணிக்கை |
வசன எண்களின் கூட்டுத்தொகை |
9 |
127 |
8128 |
10 |
109 |
5995 |
11 |
123 |
7626 |
12 |
111 |
6216 |
13 |
43 |
946 |
14 |
52 |
1378 |
15 |
99 |
4950 |
16 |
123 |
8256 |
17 |
111 |
6216 |
18 |
110 |
6105 |
19 |
98 |
4851 |
20 |
135 |
9180 |
21 |
112 |
6328 |
22 |
78 |
3081 |
23 |
118 |
7021 |
24 |
64 |
2080 |
25 |
77 |
3003 |
26 |
227 |
25878 |
27 |
29 |
435 |
342 |
1951 |
117673 |
1951 + 117673 = 119624 = 19 X 6296
(9) சூரா 9 கொண்டிருப்பது 127 வசனங்களே, 129 அல்ல என்பதையும் கூட இந்தக் தகவல் நிரூபிக்கின்றது (பார்க்க பின் இணைப்பு 24). 127 ன் இலக்கங்களுடைய கூட்டுத் தொகை 1+2+7=10 ஆகும். சூரா 9 -ன் இடம் பெறாத பஸ்மலஹ்வில் இருந்து சூரா 27 - ன் உபரியான பஸ்மலஹ் வரை, அவற்றின் இலக்கங்கள் கூட்டப்பட்டால் 10 வருகின்ற அனைத்து வசனங்களையும் கண்டெடுத்து, பின்னர் இந்த வசனங்களின் எண்ணிக்கையை, இடம் பெறாத பஸ்மலஹ் வில் இருந்து அதிகப்படியான பஸ்மலஹ் வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கையுடன் கூட்டுவதன் மூலம், நாம் பெறுவது 2128, அல்லது 19x112. (அட்டவணை 3.)
அட்டவணை 3: இடம் பெறத் தவறுகின்ற பஸ்மலஹ் முதல் உபரியான பஸ்மலஹ் வரை, அவற்றின் இலக்கங்கள் கூட்டப்பட்டால் 10 வருகின்ற வசனங்கள்
சூரா எண் |
வசனங்களின் எண்ணிக்கை |
இடம் பெறுதல்களின் எண்ணிக்கை |
9 |
127 |
12 |
10 |
109 |
10 |
11 |
123 |
11 |
12 |
111 |
10 |
13 |
43 |
3 |
14 |
52 |
4 |
15 |
99 |
9 |
16 |
123 |
12 |
17 |
111 |
10 |
18 |
110 |
10 |
19 |
98 |
9 |
20 |
135 |
12 |
21 |
112 |
10 |
22 |
78 |
7 |
23 |
118 |
11 |
24 |
64 |
6 |
25 |
77 |
7 |
26 |
227 |
22 |
27 |
29 |
2 |
342 |
1951 |
177 |
( 19 X 18 ) X 1951 + 177= 2128=19 X 112
(10) சூரா 9, அதன் வசனங்களின் எண்ணிக்கையும் கூட (127) ஒற்றைப்படை எண்ணாகவே உள்ள ஓர் ஒற்றைப்படை எண் இடப்பட்ட சூராவாகும். இடம் பெறாத பஸ்மலஹ்வில் இருந்து உபரியான பஸ்மலஹ் வரை இந்தத் தனித்தன்மையைப் பெற்றிருக்கின்ற 7 சூராக்கள் உள்ளன; அவற்றின் வசனங்களின் எண்ணிக்கைகளும்கூட ஒற்றைப்படை எண்ணாகவே உள்ள ஒற்றைப்படை எண் இடப்பட்ட சூராக்களாக அவை உள்ளன. அட்டவணை 4-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி இவை சூராக்கள் 9, 11, 13, 15, 17, 25 5 27 ஆகியனவாகும், இந்த சூரா எண்களிலும் வசனங் களின் எண்ணிக்கையிலும் அங்கமாகவுள்ள இலக் கங்களைக் கூட்டுவதன் மூலம், முழுமையான மொத்த எண்ணிக்கை 114, 19x6 ஆகும்.
அட்டவணை 4: அவற்றின் வசனங்களின் எண்ணிக்கையும் கூட ஒற்றைப்படையாகவே உள்ள ஒற்றைப்படை எண் இடப்பட்ட சூராக்கள்
சூரா எண் |
இலக்கங்களின் கூட்டுத்தொகை |
வசனங்களின் எண்ணிக்கை |
இலக்கங்களின் கூட்டுத்தொகை |
9 |
9 |
127 |
10 |
11 |
2 |
123 |
6 |
13 |
4 |
43 |
7 |
15 |
6 |
99 |
18 |
17 |
8 |
111 |
3 |
25 |
7 |
77 |
14 |
27 |
9 |
29 |
11 |
|
45 |
|
69 |
45 + 69 = 114 = 19 X 6
(11) அடுத்த இரு விசேஷ அம்சங்கள், இடம்பெறாத பஸ்மலஹ் மற்றும் (இரண்டு போலி வசனங்கள் திணிக்கப்பட்ட) சூரா 9 -ல் உள்ள வசனங்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டின் உண்மையையும் நிரூபிக்கின்றது. அட்டவணை 4-ல் பட்டியலிடப்பட்டுள்ள அதே சூராக்களை, அவற்றின் வசனங்களின் எண்ணிக்கையும் கூட ஒற்றைப்படை எண்ணாகவே உள்ள ஒற்றப்படை எண் இடப்பட்ட சூராக்களை நாம் எடுத்து. ஒவ்வொரு சூரா எண்ணையும், தொடர்ந்து அதன் வசனங்களின் எண்ணிக்கையையும் எழுதினால், விளைகின்ற நீண்ட எண் [30 இலக்கங்கள்) 19-ன் ஒரு பெருக்குத் தொகையாக உள்ளது (படம் 1).
(12) இடம் பெறாத பஸ்மலாவில் இருந்து உபரியான பஸ்மலஹ் வரையுள்ள அனைத்து வசனங்களின் கடைசி இலக்கத்தை நாம் எடுத்துக் கொள்வோம். ஒவ்வொரு சூராவின் எண்ணையும், தொடர்ந்து அந்த சூராவில் உள்ள ஒவ்வொரு வசனத்தினுடைய கடைசி இலக்கத்தையும் நாம் எழுதினால், 19-ஆல் வகுபடுகின்ற. 1988 இலக்கங்கள் கொண்ட, நீண்டதோர் எண்ணை நாம் அடைகின்றோம் (படம் 2).
9 127 11 123 13 43 15 99 17 111 25 77 27 29
ஒவ்வொரு சூரா எண்ணும் அந்த சூராவில் உள்ள வசனங்களின் எண்ணிக்கையைக் கொண்டு தொடரப்படுகின்றது. இந்த நீண்ட எண் 19 x 48037427533385052195322409091 - க்குச் சமமாகின்றது. (படம் 1)
9 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3… ...27 1 2 3 4 5 6 7 8 9 0...789
சூரா 9-ல் இருந்து சூரா 27, வசனம் 29 வரை சூராயின் எண்ணானது ஒவ்வொரு வசன எண்ணிலும் உள்ள கடைசி இலக்கத்தினைக் கொண்டு தொடரப்படுகின்றது.
(படம் 2)