Appendices
Appendix 28

Muhammad Wrote God's Revelations With His own Hand

The first revelation was "Read," and included the statement "God teaches by means of the pen" (96:1-4), and the second revelation was "The Pen" (68:1). The only function of the pen is to write.

Ignorant Muslim scholars of the first two centuries after the Quran could not understand the Quran's challenge to produce anything like it. They had no idea about the Quran's mathematical composition, and they knew that many literary giants could have composed works comparable to the Quran.

In fact, many such literary giants did claim the ability to produce a literary work as excellent as the Quran. The latest claim came from Taha Hussein, the renowned Egyptian writer.

The ignorant Muslim scholars then decided to proclaim Muhammad an illiterate man! They figured that this would make the Quran's extraordinary literary excellence truly miraculous. The word they relied on to bestow illiteracy upon the Prophet was "UMMY." Unfortunately for those "scholars," this word clearly means "Gentile," or one who does not follow any scripture (Torah, Injeel, or Quran) [see 2:78, 3:20, 3:75, 62:2]; it does NOT mean "illiterate."

The Prophet was a successful merchant. The "Muslim scholars" who fabricated the illiteracy lie forgot that there were no numbers during the Prophet's time; the letters of the alphabet were used as numbers. As a merchant dealing with numbers every day, the Prophet had to know the alphabet, from one to one-thousand. The Quran tells us that Muhammad wrote down the Quran - Muhammad's contemporaries are quoted as saying,

[Quran 25:5] They also said, "Tales from the past that he wrote down; they were dictated to him day and night."

You cannot "dictate" to an illiterate person. The Prophet's enemies who accuse him of illiteracy abuse Verse 29:48, which relates specifically to previous scriptures.

On the 27th night of Ramadan 13 B.H. (Before Hijerah), Muhammad the soul, the real person, not the body, was summoned to the highest universe and the Quran was given to him (2:97, 17:1, 44:3, 53:1-18, 97:1-5).

Subsequently, the angel Gabriel helped Muhammad release a few verses of the Quran at a time, from the soul to Muhammad's memory. The Prophet wrote down and memorized the verses just released into his mind.

When the Prophet died, he left the complete Quran written down with his own hand in the chronological order of revelation, along with specific instructions as to where to place every verse. The divine instructions recorded by the Prophet were designed to put the Quran together into the final format intended for God's Final Testament to the world (75:17).

The early Muslims did not get around to putting the Quran together until the time of Khalifa Rashed `Uthmaan. A committee was appointed to carry out this task. Read Appendix 24 for the details.

Appendix 28

முஹம்மத் தன் சொந்தக் கரத்தால் கடவுளின் வெளிப்பாடுகளை எழுதினார் முதல் வெளிப்பாடானது "

படிப்பீராக", என்பதாக இருந்தது, அத்துடன் “பேனாவெனும் சாதனத்தின் மூலம் கடவுள் கற்றுக் கொடுக்கின்றார்" (96:1-4) என்ற வாக்குமூலத்தை உள்ளடக்கியதாகவும் இருந்தது, மேலும் இரண்டாவது வெளிப்பாடும் "பேனா"(68:1) ஆகவே இருந்தது. பேனாவின் ஒரே பயன்பாடு எழுதுவதேயாகும்.

இக்குர்ஆனுக்குப் பின்னரான முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த அறியாமை நிறைந்த முஸ்லிம் அறிஞர்களால் இதனைப் போன்ற ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருமாறு இக்குர்ஆன் விடுத்த அறைகூவலைப் புரிந்து கொள்ள இயலவில்லை. இக்குர்ஆனுடைய கணிதரீதியிலான தொகுப்பினைப் பற்றி அவர்கள் எந்த சிந்தனையையும் கொண்டிருக்கவில்லை, அத்துடன் பல இலக்கிய மேதைகள் இக்குர்ஆனுடன் ஒப்பிடக்கூடிய இலக்கியப்படைப்புக்களைத் தொகுத்திட இயலும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். உண்மையில், அத்தகைய பல இலக்கிய மேதைகள் இக்குர்ஆனைப் போல மிகச் சிறப்பானதோர் இலக்கிய படைப்பினைக் கொண்டு வருகின்ற திறமை இருப்பதாகக் கோரவே செய்தனர். சமீபத்திய கோரிக்கை பிரசித்தி பெற்ற எகிப்திய எழுத்தாளரான, தாஹா ஹுசைனிடமிருந்து வந்தது.

அறியாமை நிறைந்த இந்த முஸ்லிம் அறிஞர்கள் பின்னர் முஹம்மதை எழுத்தறிவற்ற ஒரு மனிதர் எனப் பிரகடனிக்கத் தீர்மானித்தனர்! இது குர்ஆனுடைய அசாதாரணமான இலக்கிய நேர்த்தியிணை மெய்யாகவே அற்புதமானதாக ஆக்கி விடும் என்று அவர்கள் கருதிக் கொண்டனர். நபியின் மீது கல்லாமையைச் சுமத்துவதற்கு அவர்கள் சார்ந்திருந்தது “உம்மி" எனும் வார்த்தையாகவே இருந்தது. அந்த முஸ்லிம் "அறிஞர்களின் துரதிர்ஷ்டமாக இந்த வார்த்தை மிகத் தெளிவாக "புற சமயத்தவர்" அல்லது வேதம் (தோரா, இன்ஜீல் அல்லது குர்ஆன்) எதனையும் பின்பற்றாத ஒருவர் என்று அர்த்தம் தருகின்றது [பார்க்க 2:78,3:20 & 75,62:2]; அதன் அர்த்தம் "எழுத்தறிவற்றவர்" என்பது அல்ல.

நபியானவர் வெற்றிகரமான ஒரு வியாபாரியாக இருந்தார். இந்தக் கல்லாமைப் பொய்யினைப் புனைந்துரைத்த அந்த “முஸ்லிம் அறிஞர்கள்" நபியின் காலத்தில் எண்கள் எதுவும் இருக்கவில்லை என்பதை மறந்து விட்டனர்; அகர வரிசையின் எழுத்துக்களே எண்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஒவ்வொரு நாளும் எண்களுடன் புழங்குகின்ற ஒரு வியாபாரியாக, ஒன்று முதல் ஓராயிரம் வரை, அகரவரிசையை நபி அறிந்திருக்க வேண்டியது இருந்தது.

முஹம்மத் இக்குர்ஆனை எழுதிக்கொண்டார் என்று இக்குர்ஆன் நமக்குச் சொல்கின்றது - முஹம்மதின் சமகாலத்தவர்கள் கூறுவதாக மேற்கோள் காட்டப்படுகின்றது. “இவை இவர் எழுதிக் கொண்ட கடந்த காலத்திய கட்டுக்கதைகளேயாகும். அவருக்கு அவை பகலும் இரவும் படித்துக்காட்டப்படுகின்றன" (25:5]. எழுத்தறிவற்ற ஒரு நபரிடம் நீங்கள் எழுதிக் கொள்வதற்காகப் "படித்துக்காட்ட இயலாது". கல்லாமை கொண்டு அவரைக் குற்றஞ்சாட்டுகின்ற வர்களான நபியின் விரோதிகள், குறிப்பிடப்பட்டு முந்திய வேதங்களுடன் தொடர்புடைய வசனம் 29:48 -ஐத் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.

ஹி.மு. 13-ல் (ஹிஜ்ரத்திற்கு முன்னர்) ரமளானின் 27-வது இரவின் போது, முஹம்மத் எனும் ஆன்மா, உண்மையான அந்நபர், அந்த உடல் அல்ல, மிகவும் மேலான பிரபஞ்சத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன் குர்ஆன் அவருக்கு கொடுக்கப்பட்டது (2:97,17:1,44:3,53:1-18,97:1-5). அதனைத் தொடர்ந்து, அந்த ஆன்மாவில் இருந்து முஹம்மதின் நினைவிற்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குர்ஆனின் ஒரு சில வசனங்களை வெளியிடுவதற்கு வானவர் கேப்ரியேல் முஹம்மதுக்கு உதவினார். நபியானவர் அப்போதுதான் அவருடைய மனதிற்குள் வெளியிடப்பட்ட வசனங்களை எழுதிக்கொண்டதுடன் மனப்பாடமும் செய்து கொண்டார். நபி மரணித்த போது, ஒவ்வொரு வசனத்தையும் எங்கு அமைக்க வேண்டுமென்ற குறிப்பிட்ட அறிவுறுத்தல்களுடன் கூடிய, வெளிப்பாட்டின் வரிசை முறையில் தன்னுடைய சொந்த கரத்தினால் எழுதப்பட்ட, முழுமையான குர்ஆனை அவர் விட்டுச் சென்றார், நபியினால் பதியப்பட்டிருந்த தெய்வீக அறிவுறுத்தல்கள், இவ்வுலகிற்குரிய கடவுளின் இறுதி ஏற்பாட்டிற்கென உத்தேசிக்கப் பட்டிருந்த இறுதி வடிவத்திற்கு இக்குர்ஆனை ஒன்று சேர்த்து அமைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தன (75:17) ஆரம்பகால முஸ்லிம்கள் கலீஃபா ரஷீத் உத்மானின் காலம் வரை இக்குர்ஆனை ஒன்றுபடுத்தி அமைக்க முன்வரவில்லை. இந்தக் கடினமான பணியை செயல் வடிவில் கொண்டு வர ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. விபரங்களுக்கு பிள் இணைப்பு 24-ஐப் பார்க்கவும்.