Who Is Your God?
Most people are outraged upon hearing this question. "What do you mean, `Who is your god?' they ask, `My god is the Creator of the heavens and the earth.' " And most of these people will be shocked to find out that their proclamation that their god is the Creator of the heavens and the earth is no more than lip service, and that they are in fact destined for Hell (12:106).
Your god is whoever or whatever occupies your mind most of the time.
Your god can be your children (7:190), your spouse (9:24), your business (18:35), or your ego (25:43). This is why we note that one of the most important and most repeated commandments in the Quran is:
[Quran 33:41] O you who believe, you shall remember God frequently; glorify Him day and night.
To put this commandment into practice, we must establish certain habits whereby we guarantee that God occupies our minds more than anything else. The Quran helps us establish such soul saving habits:
[Quran 18:24] "You shall not say, `I will do this or that tomorrow,' without saying, `God willing' (IN SHAA ALLAH). If you forget to do this, then apologize and say, `May my Lord guide me to do better next time.'"
This is a direct commandment that we must carry out, no matter who we are talking with.உங்களுடைய கடவுள் யார்?
அதிகமான மக்கள் இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் கொந்தளித்து விடுகின்றனர். "உங்களுடைய தெய்வம் யார் என்றால், நீங்கள் கூற வருவதென்ன?" என்று அவர்கள் கேட்கின்றனர். வானங்கள் மற்றும் பூமியின் படைப்பாளர்தான் என் தெய்வம்." ஆனால் இந்த மக்களில் அதிகமானோர் வானங்கள் மற்றும் பூமியின் படைப்பாளர்தான் அவர்களுடைய தெய்வம் என்ற தங்களுடைய பிரகடனம் உதட்டளவில் என்பதை விட அதிகம் எதுவுமில்லை, மேலும் உண்மையில் அவர்கள் நரகத்திற்கென விதிக்கப்பட்டு விட்டவர்களாக இருக்கின்றனர், என்பதை கண்டு கொள்ளும் போது அதிர்ந்து போனவர்களாக இருப்பார்கள்(12:106).
உங்களுடைய நினைவில் அதிகமான நேரத்தினை ஆக்கிரமித்திருக்கின்ற எவராயினும் அல்லது எதுவாயினும் அதுவே உங்கள் தெய்வமாகும்.
உங்களுடைய குழந்தைகள் (7:190) உங்களுடைய வாழ்க்கைத் துணை [9:24), உங்களுடைய தொழில் [18:35]. அல்லது உங்கள் அகந்தை [25:43] உங்களுடைய தெய்வமாக இருக்கக் கூடும். அதனால் தான் இக்குர்ஆனில் மிகவும் முக்கியமானதும் அதிகமாக மீண்டும் மீண்டும் கூறப்படுவதுமாக உள்ள கட்டளைகளில் ஒன்றாக இது இருப்பதை நாம் கவனிக்கின்றோம்.
நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், நீங்கள் கடவுளை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும்; பகலும் இரவும் அவரைத் துதியுங்கள். (33:41
இந்த கட்டளையைச் செயல்பாட்டில் கொண்டுவருவதற்கு, வேறு எந்த ஒன்றையும் விட அதிகமாக நமது மனங்களில் கடவுளே நிறைந்திருக்கின்றார் என்று நாம் உத்தரவாதம் கொள்ளும் விதமாக குறிப்பிட்ட பழக்கங்களை நாம் நிலைப்படுத்திக் கொண்டாக வேண்டும். ஆத்மாவைக் காப்பாற்றுகின்ற இத்தகைய பழக்கங்களை நிலைப்படுத்திக்கொள்ள இக்குர்ஆன் நமக்கு உதவுகின்றது.
1. தொடர்பு தொழுகைகள் (ஸ்லாத்): 5 அன்றாடத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றவர்கள், தங்களுடைய விழித்திருக்கும் நேரங்களில் கணிசமானதொரு விகிதம் கடவுளை நினைவு கூர்வதன் பால் நெடுந்தொலைவு வந்து விட்டனர். தொழுகையின் போதான அந்த சில நிமிடங்கள் மட்டுமென்றில்லாமல், அதனை எதிர்பார்த்திருக்கின்ற நேரங்களிலும் கூட கடவுளை நினைவில் கொள்ள ஸலாத் நமக்கு உதவுகின்றது. முற்பகல் 11.00 மணிக்கு ஒருவர் நண்பகல் தொழுகைக்குரிய நேரம் வந்து விட்டதா என்பதைக் காண்பதற்காக அவனுடைய அல்லது அவளுடைய கடிகாரத்தினை நோக்கக் கூடும். அந்நபர் கடவுளைப் பற்றி நினைக்க இச்செயல் காரணமாகின்றது, மேலும் அந்நபர் அதற்கேற்றவாறு நன்மையளிக்கப்படுகின்றார் (20:14).
2. உண்பதற்கு முன்னர் கடவுளை நினைவு கூர்ந்திடுங்கள்: வசனம் 6:121 நாம் உண்பதற்கு முன்னர் கடவுளின் பெயரினை மொழியுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது. "கடவுளின் பெயர் மொழியப் படாதவற்றிலிருந்து நீங்கள் உண்ண வேண்டாம்".
3. கடவுள் நாடினால், (இன்ஷா அல்லாஹ்): "கடவுள் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) என்று கூறாமல், 'இதனையோ அல்லது அதனையோ நான் நாளை செய்வேன்' என்று நீர் கூற வேண்டாம். இதனைச் செய்ய நீர் மறந்து விட்டால், பின்னர் பிழை பொறுக்கத் தேடியவாறு கூறுவீராக, 'அடுத்தமுறை சிறப்பாகச் செய்வதற்கு என் இரட்சகர் என்னை வழிநடத்துவாராக' " [18:24).நாம் எவருடன் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்பது பொருட்டல்ல, நாம் செயல்படுத்தியாக வேண்டியதொரு நேரடிக் கட்டளையாக இது உள்ளது.
4. கடவுளின் பரிசு (மா ஷா அல்லாஹ்): நமக்கு மிகவும் விருப்பமான விஷயங்களுக்கு - நம் பிள்ளைகள், நம்முடைய வாகனங்கள், நமது வீடுகள், போன்றவற்றுக்கு கடவுளின் பாதுகாப்பினை வேண்டுவதற்கு, "மா ஷா அல்லாஹ்" (இது கடவுளின் பரிசாகும்] என்று கூறுமாறு 18:39-ல் நாம் ஏவப்படுகின்றோம்.
5. பகலும் இரவும் கடவுளைத் துதியுங்கள்: எந்த ஒன்றையும் நாம் உண்ணும் பொழுது, நாம் விலங்குகளைப் போல் இருக்கக்கூடாது; நாம் உண்ணுகின்ற உணவின் கடவுளுடைய அந்தப் படைப்பைப் பற்றி நாம் சிந்திக்க
வேண்டும் - அதன் மணம், கடவுள் நமக்குத் தந்திருக்கின்ற புலன்களின் காரணத்தால் நம்முடைய மகிழ்வான அனுபவம், ஆரஞ்ச் அல்லது வாழைப்பழத்தின் கச்சிதமான உறையிடல், கடவுளால் படைக்கப்பட்ட வெவ்வேறு விதமான கடல் உணவுகள், போன்றவற்றை-மேலும் அவருடைய வாழ்வாதாரங்களை நாம் மகிழ்ந்து அனுபவித்தவாறு அவரைத் துதித்திடவும் வேண்டும். அழகியதொரு மலரையோ, அல்லது விலங்கினையோ அல்லது சூரிய அஸ்தமனங்களையோ நாம் காண்கின்ற போது, நாம் கடவுளைத் துதித்திட வேண்டும். கடவுள் நம்முடைய கடவுளாக இருக்கும் பொருட்டு, கடவுளை நினைப்பதற்கும் துதிப்பதற்குமுரிய சாத்தியமான ஒவ்வொரு வாய்ப்பினையும் நாம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.
6. முதல் கூற்று: ஒவ்வொரு காலையிலும் நீங்கள் விழித்தெழுகின்ற அக்கணமே, "கடவுளின் பெயரால். மிக்க அருளாளர்,மிக்க கருணையாளர். கடவுளுடன் வேறு தெய்வம் எதுவுமில்லை." என்று கூறுவதை ஒரு வழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த நல்ல பழக்கத்தை நீங்கள் நிலைப்படுத்திக் கொண்டால், நீங்கள் உயிர்த்தெழுப்பப்படுகின்ற பொழுது இதனைத்தான் நீங்கள் கூறுவீர்கள்.