Appendices
Appendix 18

Quran is All you Need

Quran: All You Need for Salvation

 

The words of the Quran speak in 19:64, saying,

 

[Quran 19:64] We do not come down except by the command of your Lord. To Him belongs our past, our future, and everything between them. Your Lord is never forgetful.

 

God did not forget, for example, to tell us how to sleep (18:109, 31:27). Yet, the fabricators of such false doctrine as Hadith & Sunna have come up with religious teachings dictating to their followers how to sleep, and even how to cut your nails.

 

The Sacred Mosque in Mecca and the illegal "Sacred Mosque" of Medina, hire some individuals to seek out the exhausted visitors and beat them with a stick if they fall asleep on the wrong side!

 

The Quran proclaims that the Quran is complete, perfect, and fully detailed (6:19, 38, 114, 115; 50:45), and that religious regulations not specifically instituted in the Quran constitute a religion other than Islam, i.e., Submisssion (42:21, 17:46).

 

The true believers uphold the Quran, the whole Quran, and nothing but the Quran. This principle is confirmed by the Quran's mathematical code. Verse 46 of Sura 17 proclaims that we shall uphold the Quran ALONE. The word "ALONE" occurs in the Quran 6 times: 7:70, 17:46, 39:45, 40:12, 40:84, and 60:4. All these occurrences refer to God, except 17:46. When we add the numbers of suras and verses which refer to "GOD ALONE," we get 361, 19x19. This proves that 17:46 refers to "the Quran ALONE."

 

Appendix 18

இக்குர்ஆன்: மீட்சிக்கென உங்களுக்குத் தேவையான அனைத்தும்

19:64ல் குர்ஆனின் வார்த்தைகள் பேசுகின்றன. அது கூறுவதாவது, "உம்முடைய இரட்சகரின் கட்டளைகளுக்கேற்பவே நாங்கள் இறங்கி வருகின்றோம். கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் அவருக்கே உரியதாகும். உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறப்பதில்லை." உதாரணத்திற்கு, எப்படித் தூங்குவது என நமக்குச் சொல்ல, கடவுள் மறந்து விடவில்லை (18:109, 31:27), ஆயினும், ஹதீஸ் & சுன்னா போன்ற போலிக் கொள்கைகளின் புனைந்துரையாளர்கள் தங்களுடைய சீடர்களுக்கு எப்படித் தூங்குவது. மற்றும் உங்களுடைய நகங்களை எப்படி வெட்டிக் கொள்வது என்றும் கூட கட்டளையிடுகின்ற மார்க்கப் போதனைகளுடன் வந்துவிட்டனர். மக்காவில் உள்ள புனிதப்பள்ளியும் மதினாவின் சட்டவிரோதமான "புனிதப்பள்ளி"யும், களைத்துப்போன தரிசிக்க வந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் குப்புறப் படுத்துத் தூங்கி விட்டால் அவர்களை ஒரு குச்சியால் அடிப்பதற்காகச் சில தனிநபர்களைப் பணிக்கமர்த்துகின்றன!

இந்தக் குர்ஆன் முழுமையானது, குறையற்றது, மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உள்ளது (6:19. 38, 114, 115; 50:45] என்றும், மேலும் இந்தக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டு ஸ்தாபிக்கப்படாத மார்க்க வரையறைகள் இஸ்லாம், அதாவது, சரணடைதல் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தை உண்டாக்குகின்றது (42:21, 17:46) என்றும் இக்குர்ஆன் பிரகடனிக்கின்றது. உண்மையான நம்பிக்கையாளர்கள் இக்குர்ஆனை ஆதரிக்கின்றனர், முழுமையான இக்குர்ஆனை, மேலும் குர்ஆனையன்றி எந்த ஒன்றையும் அல்ல, இந்தக் கோட்பாடு குர்ஆனுடைய கணிதக்குறியீட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. சூரா 17-ன் வசனம் 46 நாம் குர்ஆனை மட்டுமே ஆதரிக்க வேண்டும் எனப் பிரகடனிக்கின்றது. "மட்டும்" எனும் வார்த்தை இக்குர்ஆனில் 6 முறைகள் இடம்பெறுகின்றது: 7:70, 17:46, 39:45, 40:12 & 84 மற்றும் 60:4. இந்த இடம்பெறுதல்கள் அனைத்தும் கடவுளைக் குறிக்கின்றன. 17:46-ஐத் தவிர. "கடவுள் மட்டும்" எனக் குறிக்கின்ற சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்களை நாம் கூட்டினால். நாம் பெறுவது 361, 19 × 19. "இந்தக் குர்ஆன் மட்டும் என்பதையே 17:46 குறிக்கின்றது என இது நிரூபிக்கின்றது.