Appendices
Appendix 19

Hadith and Sunna: Satanic Innovations

 

Which Hadith other than GOD and His revelations do they believe? [45:6]

 

The Quran is not fabricated Hadith; ...It details everything. [12:111]

 

Some people uphold vain Hadith to divert others from the path of God [31:6]

 

The Only Sunna to follow shall be God's Sunna [17:77, 33:62, 48:23, 6:114]

 

The Quran informs us that some enemies of the Prophet, described as"human and jinn devils," will fabricate lies and attribute them to the Prophet (6:112, 25:31).This is precisely what happened after the prophet Muhammad's death; Hadith (oral) and Sunna (actions) were invented and attributed to the Prophet. Hadith and Sunna are satanic innovations because they:

 

  1. defy the divine assertions that the Quran is complete, perfect, fully detailed, and shall be the only source of religious guidance (6:19, 6:38, 6:114 & 45:6-7),
  2. blaspheme against the Prophet and depict him as a vicious tyrant who did not uphold the Quran, and
  3. create false doctrines based on superstition, ignorance, and indefensible nonsensical traditions. The prophet Muhammad was enjoined, in very strong words, from issuing any religious teachings besides the Quran (69:38-48).
  4. Some Muslims compromise: "If a Hadith agrees with the Quran we will accept it, and if it contradicts the Quran, we will reject it!" Such premise proves that these people do not believe God's assertions that the Quran is"complete, perfect and fully detailed." The moment they seek guidance from anything besides the Quran, no matter how "right" it seems, they fall into Satan's trap (see 63:1). For they have rejected God's word and set up another god besides God (18:57). See Appendix 33.

 

The Quran's mathematical miracle provides mathematical evidence that the Quran shall be our only source of religious teachings. Here are just 2 examples:

 

  1. "مَا فَرَّطْنَا فِي الْكِتَبِ مِنْ شَيْءٍ = We did not leave anything out of this book," is in Verse 38 (19x2) and consists of 19 Arabic letters (6:38).
  2. "أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا = He sent down this book fully detailed," is in Verse 114 (19x6) and consists of 19 Arabic letters (6:114).

Appendix 19

ஹதீஸ் & சுன்னா: சாத்தானியக் கண்டுபிடிப்புக்கள்

கடவுள் மற்றும் அவருடைய வெளிப்பாடுகளை விடுத்து வேறு எந்த ஹதீஸ் தனை அவர்கள் ஆதரிக்கின்றனர்? [45:6]

இந்தக் குர்ஆன் புனைந்துரைக்கப்பட்ட ஒரு ஹதீஸ் அல்ல.. இது ஒவ்வொன்றையும் விவரிக்கின்றது. (12:111)

கடவுளின் பாதையில் இருந்து மற்றவர்களைத் திசை திருப்ப சில மனிதர்கள் வீனான ஹதீஸ் தனை ஆதரிக்கின்றனர். (3:18)

பின்பற்றுவதற்குரிய ஒரே சுன்னா கடவுளின் சுன்னா ஆகவே இருத்தல் வேண்டும். (17:77, 33:62, 48:23, 6:114]

நபியின் சில விரோதிகள், "மானிட மற்றும் ஜின் சாத்தான்கள்" என வர்ணிக்கப்படுகின்றவர்கள் பொய்களைப் புனைந்து அத்துடன் அவற்றை நபியின் மீது சாட்டுவார்கள் என்று இக்குர்ஆன் நமக்குத் தெரிவிக்கின்றது (6:112, 25:31). முஹம்மது நபியின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது மிகச்சரியாக இதுவேயாகும்; ஹதீஸ் [சொற்கள்] மற்றும் சுன்னா [செயல்கள்] கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவை நபியின் மீது சாட்டப்பட்டன. ஹதீஸ் மற்றும் சுன்னா ஆகியவை சாத்தானியக் கண்டுபிடிப்புக்களாகும். ஏனெனில் அவை: [1] இக்குர்ஆன் முழுமையானது, குறையற்றது, முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உள்ளது. மேலும் மார்க்க வழிகாட்டலின் ஒரே மூலாதாரமாக இருக்க வேண்டியது (6:19, 38, 114, & 45 : 6-7) எனும் உறுதியான தெய்வீகக் கூற்றுகளை எதிர்க்கின்றன. [2] நபியான முஹம்மதுக்கு எதிராக நிந்தனை செய்வதுடன் இந்தக் குர்ஆனை உயர்த்திப்பிடிக்காத மிகக் கெட்ட கொடுங்கோலானாக அவரைச் சித்தரிக்கின்றன, (3) மூட நம்பிக்கை, அறியாமை, மற்றும் நியாயப்படுத்த இயலாத, அறிவுக்கு முரணான, பாரம்பர்யப் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலான போலிக் கொள்கைளை உருவாக்குகின்றன. நபி முஹம்மத். குர்ஆனுடன் எந்த மார்க்கப் போதனைகளையும் வெளியிடுவதில் இருந்து மிகக் கடுமையான வார்த்தைகளால் தடுக்கப்பட்டிருந்தார் (69:38-48).

சில முஸ்லிம்கள் சமரசம் செய்கின்றனர் : "ஒரு ஹதீஸ் குர்ஆனுடன் ஒத்துப்போனால் அதனை நாம் ஏற்றுக்கொள்வோம், ஆனால் அது குர்ஆனுக்கு முரண்பாட்டால் நாம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விடுவோம்!" இத்தகைய வாதங்கள் இக்குர்ஆன் "முழுமையானது, குறையற்றது. அத்துடன் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உள்ளது" என்ற கடவுளின் உறுதி கூறல்களை இந்த மக்கள் நம்பவில்லை என்பதை நிரூபிக்கின்றது. குர்ஆனுடன் எந்த ஒன்றிலிருந்தும் வழிகாட்டலைத் தேடுகின்ற அக்கணமே, எவ்வளவு "சரியானதாக" அது தோன்றுகின்றது என்பது ஒரு பொருட்டல்ல, அவர்கள் சாத்தானின் பொறிக்குள் விழுந்து விடுகின்றனர் (பார்க்க 63:1]. ஏனெனில் அவர்கள் கடவுளின் வார்த்தைகளை ஏற்க மறுத்து விட்டதுடன் கடவுளோடு மற்றொரு தெய்வத்தை அமைத்துக் கொண்டு விட்டனர் [18:57). பார்க்க பின் இணைப்பு 33.

இக்குர்ஆன்தான் நம்முடைய மார்க்கப் போதனைகளின் ஒரே மூலாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்குரிய கணித ரீதியான சாட்சியத்தை இக்குர்ஆனுடைய கணித அற்புதம் வழங்குகின்றது. 2 உதாரணங்கள் மட்டுமே இங்கே உள்ளன:

1.."مَا فَرَّطْنَا فِي الْكِتَبِ مِنْ شَيْءٍ = இந்தப் புத்தகத்திற்கு அப்பால் எந்த ஒன்றையும் நாம் விட்டுவிடல்லை,"வசனம் 38 [19 × 2)ல் உள்ளது. அத்துடன் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டுள்ளது (6:38).

2."أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا =இந்தப் புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக அவர் இறக்கி அனுப்பினார் ", வசனம் 114 (19 × 6)ல் உள்ளது. அத்துடன் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டுள்ளது (6:114).