Appendices
Appendix 17

Death

Death is a great mystery to most people. Not so for the students of the Quran. We learn that death is exactly like sleeping; complete with dreams (6:60, 40:46). The period between death and resurrection passes like one night of sleep (2:259; 6:60; 10:45; 16:21; 18:11, 18:19, 18:25; 30:55).

 

 

At the moment of death, everyone knows his or her destiny; Heaven or Hell. For the disbelievers, death is a horrible event; the angels beat them on the faces and rear ends as they snatch away their souls (8:50, 47:27, 79:1).

 

Consistently, the Quran talks about two deaths, the first death took place when we failed to make a stand with God's absolute authority (Appendix 7). That first death lasted until we were born into this world. The second death terminates our life in this world (2:28, 22:66, 40:11).

 

Note: The following is a reproduction of the lead article from the February, 1990 issue of the Submitters Perspective, the monthly bulletin of United Submitters International. This was the second to last issue that was written by Dr. Khalifa. It was completed and mailed ahead of time, in December, 1989. Dr. Khalifa was martyred on January 31, 1990 and his soul was taken directly to Paradise.

 

The Righteous Do Not Really Die
They Go Straight to Heaven

 

[Quran 2:25] Give good news to those who believe and lead a righteous life that they will have gardens with flowing streams. When provided with a provision of fruits therein, they will say, "This is what was provided for us previously." Thus, they are given allegorical descriptions. They will have pure spouses therein, and they abide therein forever.

 

[Quran 3:169] Do not think that those who are killed in the cause of God are dead; they are alive at their Lord, enjoying His provisions.

[Quran 2:154] Do not say of those who are killed in the cause of God, "They are dead." They are alive at their Lord, but you do not perceive.

[Quran 8:24] O you who believe, you shall respond to God and to the messenger when he invites you to what gives you life.* You should know that God is closer to you than your heart, and that before Him you will be summoned.

 

[Quran 22:58] Those who emigrate for the sake of God, then get killed, or die, God will surely shower them with good provisions. God is certainly the best Provider.

 

[Quran 44:56] They do not taste death therein - beyond the first death - and He has spared them the retribution of Hell.

[Quran 36:26] (At the time of his death) he was told, "Enter Paradise." He said, "Oh, I wish my people knew.


[Quran 36:27] "That my Lord has forgiven me, and made me honorable."

 

The wages of sin is death [Romans 6:23]

As stated in 3:81 and 46:9, God's Messenger of the Covenant does not bring anything new; everything I receive and pass on to you is already in the Quran.

However, the Quran is full of information that is kept by Almighty God for revelation at a specific time. Now is the time tolook at the verses shown above and learn the great news: THE RIGHTEOUS DO NOT DIE; when their lives on this earth come to the predetermined end, the angel of death simply invites them to leave their earthly bodies and move on to Heaven, the same Paradise where Adam and Eve once lived. Heaven has been in existence since Adam and Eve. We learn from 89:27-30 that God invites the believers' souls: "Enter My Paradise."

 

MY OWN EXPERIENCE

When God's covenant with the prophets was fulfilled in accordance with 3:81, I was taken to Heaven where the righteous live NOW (4:69).While my body was down here on earth, I was in the same Paradise of Adam & Eve.

THE DISBELIEVERS

As for the disbelievers, they know at the moment of death that they are destined for Hell. The angels beat them up on the faces and rear ends (8:50 & 47:27), order them to evict their souls (6:93), then "snatch their souls" (79:1).

The Quran teaches that the disbelievers go through 2 deaths (2:28 & 40:11). They will be put to death - a state of nothingness during which they see Hell day and night in a continuous nightmare that lasts until the Day of Judgment (40:46). Hell is not yet in existence (40:46, 89:23).

Of Course, the Righteous Depart

As far as people are concerned, the righteous "die." People do not realize that the righteous simply leave their bodies, and move on toParadise. The verses shown above are self explanatory. They tell us that the righteous die only once - the one death we have already experienced as a consequence of the great fued (38:69). In 36:26-27, we see the best evidence that the righteous go to Paradise, while their friends and relatives are still living on earth. Like going to Hawaii and waiting for us there.

See also 16:32 & 6:60-62.

Appendix 17

மரணம்

பெருவாரியான மக்களுக்கு மரணம் ஒரு மாபெரும் மர்மமாகவே உள்ளது. இக்குர்ஆனுடைய மாணவர்களுக்கு அவ்வாறல்ல. மரணம் மிகச் சரியாகத் தூக்கத்தைப் போன்றதாகும் என்று நாம் கற்றுக் கொள்கின்றோம்; கனவுகளுடன் கூடியது (6:60, 40:46). மரணம் மற்றும் உயிர்த்தெழுப்பப்படுதலுக்கு இடையே உள்ள கால அளவு ஓர் இரவுத் தூக்கத்தைப்போல் கடந்து சென்று விடுகின்றது [2:259: 6:60: 10:45:16:21; 18:11, 19, 25; 30:55).

மரணத் தருவாயின் போது. ஒவ்வொருவரும் அவனுடைய அல்லது அவளுடைய விதியை அறிந்து கொள்வர்; சுவனம் அல்லது நரகம். நம்பமறுப்பவர்களுக்கு, மரணம் பயங்கரமானதொரு நிகழ்வாக உள்ளது: வானவர்கள் அவர்களை முகங்களிலும் விலாப்புறங்களிலும் அடித்தவாறு அவர்களுடைய ஆன்மாக்களைப் பறித்துச் செல்கின்றனர் (8:50, 47:27, 79:1).

ஒரே சீராக, இக்குர்ஆன் இரண்டு மரணங்களைப் பற்றிப் பேசுகின்றது, முதல் மரணமானது கடவுளின் பரிபூரண அதிகாரத்தில் ஒரு நிலையை எடுக்க நாம் தவறிய போது நிகழ்ந்தது [பின் இணைப்பு 7). இந்த உலகிற்குள் நாம் பிறக்கின்றவரை அந்த முதல் மரணம் நீடித்திருந்தது. இரண்டாம் மரணமானது இந்த உலகத்தில் நம் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருகின்றது [2:28, 22:66, 40:11].

குறிப்பு : பின் வருவது United Submitters international-ன் மாதாந்திரச் சிறுபிரசுரமான, Submitters Perspective-ன் ஃபிப்ரவரி 1990 வெளியீட்டில் இருந்து அதன் தலையங்கத்தின் ஒரு மறு பதிப்பு ஆகும். இது Dr. ரஷாத் கலீஃபாவால் எழுதப்பட்ட கடைசி இதழுக்கு முந்தியதாக இருந்தது. இது டிசம்பர் 1989-ல் குறித்த காலத்திற்கு முன்னரே பூர்த்தி செய்யப்பட்டு அஞ்சல் செய்யப்பட்டிருந்தது. Dr. கலீஃபா 1990, ஜனவரி 31 அன்று வீர மரணம் அடைந்தார், மேலும் அவரது ஆன்மாவானது நேரடியாகச் சுவலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நன்னெறியாளர்கள் உண்மையில் பரணிப்பதில்லை அர்கள் நேராகச் சுவணத்திற்குச் செல்கின்றனர்.

நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிகின்றவர்களுக்கு அவர்கள் பாய்கின்ற ஆறுகளுடன் கூடிய தோட்டங்களைப் பெற்றிருப்பார்கள் என்ற நற்செய்தியைக் கொடுப்பீராக. அங்கே பழங்களினால் ஆன வாழ்வாதாரங்கள் வழங்கப்படுகின்ற பொழுது, அவர்கள் கூறுவார்கள், “கடந்த காலத்திலும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது இதுவாகத்தான் இருந்தது.” ஒப்பான வாழ்வாதாரங்களே அவர்களுக்குக் கொடுக்கப்படும், மேலும் அங்கே அவர்கள் தூய்மையான வாழ்க்கைத் துணைகளைப் பெற்றிருப்பார்கள். அங்கே அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள் (2:25).

கடவுளின் நிமித்தமாகக் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்காதீர்கள்; வாழ்வாதாரம் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களாக, தங்களுடைய இரட்சகரிடம் அவர்கள் உயிருடன் இருக்கின்றனர் (3:169). கடவுளின் நிமித்தம் கொல்லப்பட்டு விட்டவர்களைப் பற்றி “அவர்கள் இறந்து விட்டவர்கள்” என்று கூறக் கூடாது. ஏனெனில் அவர்கள் உயிருடன் உள்ளனர், ஆனால் நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் (2:154).

நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நீங்கள் கடவுளுக்கும் அத்துடன் தூதருக்கும், உங்களை உயிருள்ளவர்களாக வைத்திருக்கக் கூடியவற்றின் பால் அவர் உங்களை அழைக்கின்ற பொழுது மறுமொழியளிக்க வேண்டும் (8:24).

கடவுளின் நிமித்தம் புலம் பெயர்ந்து, பின்னர் கொல்லப்பட்டோ அல்லது மரணித்தோ விடுபவர்கள், நிச்சயமாகக் கடவுள் அவர்களுக்கொரு நல்ல வாழ்வாதாரத்தை வழங்குவார் (22:58).

முதல் மரணத்திற்கு அப்பால், அவர்கள் மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள், அத்துடன் கடவுள் அவர்களுக்கு நரகத்தின் தண்டனையைத் தவிர்த்து விடுவார் (44:56).

அவரிடம் கூறப்பட்டது, “சொர்க்கத்திற்குள் நுழைவீராக.” அவர் கூறினார்." என்னுடைய இரட்சகர் - என்னை மன்னித்து விட்டார், மேலும் என்னைக் கண்ணியப்படுத்தினார் என்பதை; [பூமியின் மீது) என்னுடைய சமூகத்தார் அறிந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன்” (36:26-27).

பாவத்தின் சம்பளம் மரணம் ஆகும் (ரோமர்கள் 6:23)

 

3:81 மற்றும் 46:9-ல் கூறப்பட்டுள்ள படி கடவுளின் உடன்படிக்கைத் தூதரானவர் புதியதான எதனையும் கொண்டு வருவ தில்லை; நான் பெற்றுக்கொண்டு உங்களிடம் அனுப்புகின்ற ஒவ்வொன்றும் இக்குர்ஆனில் ஏற்கனவே உள்ளன. இருப்பினும், எல்லாம் வல்ல கடவுளால் குறிப்பிட்டதொரு நேரத்தில் வெளிப்படுத்தப்படுவதற்காக வைக்கப்பட் டுள்ள தகவல்கள் நிறைந்ததாக இக்குர்ஆன் உள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள வசனங் களை நோக்கி இந்த மகத்தான செய்தியை அறிந்து கொள்ளும் நேரம் இதுவேயாகும்:

நன்னெறியாளர்கள் மரணிப்பதில்லை;

இந்தப் பூமியின் மீது அவர்களுடைய வாழ்வு கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு வருகின்றபொழுது, அவர்களுடைய இவ்வுலக உடம்புகளை விட்டு விலகி முன்னர் ஆதமும் ஏவாளும் வசித்திருந்த அதே சொர்க்கத்திற்கு இடம் மாறும்படி மரணத்தின் வானவர்கள் அவர்களை அழைக்க மட்டுமே செய்கின்றனர். ஆதம் மற்றும் ஏவாளின் காலத்தில் இருந்தே சுவனம் இருப்பு நிலையில் இருந்து வந்துள்ளது. 89:27-30-ல் இருந்து நம்பிக் கையாளர்களின் ஆன்மாக்களைக் கடவுள் வரவேற்கின்றார் என்று நாம் கற்றுக் கொள்கின்றோம்: "என்னுடைய சொர்க்கத் திற்குள் நுழைவாயாக”.

என்னுடைய சொந்த அனுபவம்

3:81-ல் உள்ளதற்கேற்ப நபிமார் களுடைய கடவுளின் உடன்படிக்கை நிறை வேற்றப்பட்டபோது, நன்னெறியாளர்கள் இப்போது (4:69) வசிக்கின்ற சுவனத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். என்னுடைய உடம்பு இங்கே கீழே பூமியில் இருந்தபோது, ஆதம் மற்றும் ஏவாளின் அதே சொர்க்கத்தில் நான் இருந்தேன்.

நம்பமறுப்பவர்கள்

நம்ப மறுப்பவர்களைப் பொறுத்த வரை, மரணத் தருவாயின் போது அவர்கள் நரகத்திற்கென விதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். அவ்வானவர்கள் அவர்களை முகங்களின் மீதும் விலாப்புறங்களிலும் கடுமையாக அடிக் கின்றனர் (8:50 & 47:27), அவர்களுடைய ஆத்மாக்களை வெளியேற்றுமாறு உத்தர விடுகின்றனர் (6:93), பின்னர் “அவர் களுடைய ஆத்மாக்களைப் பறிக்கின்றனர்” (79:1), நம்பமறுப்பவர்கள் இரண்டு மரணங்களை அனுபவிக்கின்றனர் என்று இக்குர்ஆன் போதிக்கின்றது (2:28 & 40:11). அவர்கள் மரணத்தில் ஆழ்த்தப் படுகின்றனர் -தீர்ப்பு நாள் வரை நீடித்திருக்கின்ற தொடர்ந்ததொரு கெட்ட கனவில் இரவும் பகலும் நரகத்தினைக்காண்கின்ற ஒன்றுமற்ற ஒரு நிலை (40:46). நரகம் இன்னும் இருப்பு நிலைக்கு வரவில்லை [40:46,89:23).

ஆம், நிச்சயமாக நன்னெறியாளர்கள் புறப்படுகின்றனர்

பூமியின் மீதுள்ள மக்களைப் பொறுத்த வரை, நன்னெறியாளர்கள் "மரணிக்கின் றனர்”. நன்னெறியாளர்கள் தங்களுடைய உடம்புகளை விட்டு வெறுமனே வெளியேறி, சொர்க்கத்திற்கு இடம் மாறுகின்றனர் என்பதை மக்கள் அறிந்து கொள்வதில்லை. மேலே காட்டப்பட்டுள்ள வசனங்கள் தாமாகவே விளக்கமளிக் கின்றவையாக உள்ளன. அவை நன்னெறி யாளர்கள் ஒரு முறை மட்டுமே மரணிக்கின்றனர் - மாபெரும் கலகத்தின் ஒரு விளைவாக நாம் ஏற்கனவே அனுபவித்த அந்த மரணம் - என்று நமக்குக் கூறுகின்றன [38:69). 36:26-27-ல் நன்னெறியாளர்கள், அவர்களுடைய நண்பர் களும் உறவினர்களும் அப்போதும் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே சமயம் சொர்க்கத்திற்குச் செல்கின்றனர் என்பதற் கான மிகச் சிறந்த ஆதாரத்தினை நாம் காண்கிறோம். ஹவாய்க்குச் சென்று அங்கு நமக்காகக் காத்திருப்பதைப் போல்.

மேலும் பார்க்க 16:32 & 6:60-62