Appendices
Appendix 16

Dietary Prohibitions

The Quran teaches that God is extremely displeased with those who prohibit anything that was not specifically prohibited in the Quran (16:112-116).The upholding of any prohibitions not specifically mentioned in the Quran is tantamount to idolatry (6:142-152). Such prohibitions represent some other god(s) besides God. If you worship God ALONE, you will uphold His teachings ALONE and honor the commandments and prohibitions instituted only by Him.

 

 

The absolute specificity of dietary prohibitions in the Quran is best illustrated in 6:145-146.We learn from these two verses that when God prohibits "meat," He prohibits "meat" and nothing else, and when He prohibits "fat," that is what He specifically prohibits. These two verses inform us that "the meat" of pigs is prohibited, not "the fat." Obviously, God knew that in many countries, lard would be used in baked goods and other food products, and that such usage does not render the foods Haraam (prohibited). The Quran specifically prohibits four meats (2:173, 5:3, 6:142-145, and 16:112):

 

 

[Quran 6:145] Say, "I do not find in the revelations given to me any food that is prohibited for any eater except: (1) carrion, (2) running blood, (3) the meat* of pigs, for it is contaminated, and (4) the meat of animals blasphemously dedicated to other than God." If one is forced (to eat these), without being deliberate or malicious, then your Lord is Forgiver, Most Merciful.

Appendix 16

உணவுத் தடைகள்

இக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுத் தடுக்கப்பட்டிராத எந்த ஒன்றையும் தடுப்பவர்கள் மீது கடவுள் மிகவும் அதிருப்தியுள்ளவராக இருக்கின்றார் என்று இக்குர்ஆன் போதிக்கின்றது (16:112-116). இக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுக் கூறப்படாத தடைகள் எதனையும் மேற்கொள்வது போலித் தெய்வ வழிபாட்டிற்கு நிகரானதாகும் (6:142-152). இத்தகைய தடைகள் கடவுளுடன் மற்ற தெய்வங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. நீங்கள் கடவுளை மட்டும் வழிபடுவீர்களாயின், நீங்கள் அவருடைய போதனைகளை மட்டும் மேற்கொள்வீர்கள், அத்துடன் அவரால் மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டளைகளையும் தடைகளையுமே செயல்படுத்துவீர்கள்.

இக்குர்ஆனில் உணவுத் தடைகளை எடுத்துரைக்கும் குறிப்பான தன்மை 6:145-146-ல் சிறப்பாக எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்த இரு வசனங்களில் இருந்து கடவுள் "இறைச்சி"தனைத் தடைசெய்கின்றபோது அவர் "இறைச்சி" யைத்தான் தடைசெய்கின்றார், வேறு எந்த ஒன்றையும் அல்ல, மேலும் அவர் "கொழுப்பு" தனைத் தடைசெய்கின்றபோது அவர் தடைசெய்வது குறிப்பாக அதனைத்தான் என்று நாம் கற்றுக்கொள் கின்றோம். இந்த இருவசனங்களும் பன்றியின் "இறைச்சி"தான் தடை செய்யப்பட்டுள்ளது. "கொழுப்பு" அல்ல என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன. மிகத் தெளிவாக, பல நாடுகளில் பன்றிக்கொழுப்பு சுடப்பட்ட உணவுகளிலும் மற்ற உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படும் என்பதைக் கடவுள் அறிந்தேயிருந்தார், மேலும் இத்தகைய பயன்பாடு அந்த உணவுகளை ஹராம் (தடுக்கப்பட்டவை) ஆக ஆக்கி விடுவதில்லை. இக்குர்ஆன் குறிப்பாக நான்கு உணவுகளை மட்டுமே தடைசெய்கின்றது (2:173, 5:3, 6:142-145 மற்றும் 16:112):

கூறுவீராக, "எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றில் உண்ணுபவர் எவருக்கும் எந்த ஒன்றும் தடுக்கப்பட்டிருக்க நான் காணவில்லை.

அது [1] செத்தவை, (2) வடிகின்ற ரத்தம், [3] பன்றிகளின் இறைச்சி, ஏனெனில் இது தூய்மையற்றதாக உள்ளது. மேலும் [4] இறைநிந்தனையாக கடவுளை விடுத்து மற்றவர்க்கு அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியாக இருந்தாலேயன்றி." வன்மத்துடனோ அல்லது வீம்புக்காகவோ அல்லாமல் இவற்றை உண்ணுவதற்கு ஒருவர் நிர்பந்திக்கப்படுவாராயின், பின்னர் உம்முடைய இரட்சகர் மன்னிப்பவர். மிக்க கருணையாளர்.  (6:145)