Appendices
Appendix 11

The day of Resurrection

[Quran 39:68] The horn will be blown, whereupon everyone in the heavens and the earth will be struck unconscious, except those who will be spared by God. Then it will be blown another time, whereupon they will all rise up, looking.

All generations of humans and jinns will be resurrected on this earth;about 150 billion of them. But we will not be earthbound. God teaches us through the example of the caterpillar; it turns into a pupa in the cocoon (grave), then exits the cocoon as an airborne butterfly. Similarly, we live here on earth, and when we exit the grave on the Day of Resurrection we will not be earthbound; like the butterfly (101:4).

The earth will shine with the light of God (39:69) as He comes to our universe, together with the angels (89:22). Since our universe is a temporary dominion for Satan, it cannot stand the physical presence of God (7:143). As the Almighty approaches, the stars will crash into one another (77:8, 81:2), and the earth will shatter under our feet (69:14, 89:21). These horrors will not worry the believers (21:103).

The High Heaven

Upon arrival of Almighty God, all the humans and jinns will be automatically stratified according to their degree of growth and development. Those who nourished their souls through worshiping God alone, believing in the Hereafter, and leading a righteous life will be strong enough to stay close to God; they will occupy the highest ranks (see Appendix 5).

The Lower Heaven

Those who developed their souls to a lesser degree, as well as those who die before the age of forty, will move downward to the Lower Heaven. They will go to the location where they can be as close to God as their degree of growth and development permits them to be.

The Purgatory

There will be people who nourished their souls just enough to spare them Hell, but not enough to enter the Lower Heaven. They are neither in Hell, nor in Heaven. They will implore God to admit them into the Lower Heaven (7:46-50). God will have mercy on them, and will merge the Purgatory into the Lower Heaven.

Hell

A new, eighth universe will be created to house those who run away from God due to their weakness; they failed to nourish and develop their souls (69:17). God does not put a single being in Hell; theygo to it on their own volition (Appendix 5).

Appendix 11

உயிர்த்தெழுப்பப்படுகின்ற அந்நாள்

கொம்பு ஊதப்படுகின்றது. உடனே கடவுளால் விலக்களிக்கப்பட்டவர்களை தவிர, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். பின்னர் அது இரண்டாவது முறை ஊதப்படுகின்றது. உடனே அவர்கள் எழுந்து நிற்கின்றனர். (39:68)

மனிதர்கள் மற்றும் ஜின்களின் அனைத்துத் தலைமுறைகளும் இந்தப் பூமியின் மீது உயிர்த்தெழுப்பப் படுவார்கள்; கிட்டத்தட்ட 150 பில்லியன். ஆனால் நாம் பூமியுடன் பிணைக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டோம். கடவுள் ஒரு முட்டைப்புழுவின் உதாரணத்தின் மூலம் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்; அதன் புழுக் கூட்டில் [கல்லறை] அது ஒரு கூட்டுப்புழுவாக மாறுகின்றது. பின்னர் காற்றில் பறக்கின்ற ஒரு பட்டாம்பூச்சியாக அந்தப்புழுக்கூட்டில் இருந்து வெளியேறுகின்றது. அப்து போலவே, நாம் இங்கே பூமியின் மீது வாழ்கின்றோம், ஆனால் உயிர்த்தெழுப்பப்படுகின்ற அந்நாளில். சமாதிகளில் இருந்து நாம் வெளியேறும் பொழுது நாம் பூமியுடன் பிணைக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டோம்; அந்தப் பட்டாம் பூச்சியை போல (101:4).

வானவர்களுடன் சேர்ந்து நம்முடைய பிரபஞ்சத்திற்கு அவர் வருகின்ற போது (89:22). பூமியானது கடவுளின் ஒளியினால் பிரகாசிக்கும் (39:69). நம்முடைய பிரபஞ்சம் சாத்தானுக்குரிய தற்காலிகமானதொரு சாம்ராஜ்யமாக இருப்பதனால், அது கடவுளின் நேரடி இருப்பினைத் தாங்க இயலாது (7:143). எல்லாம் வல்லவர் நெருங்கி வருகையில், நட்சத்திரங்கள் ஒன்று மற்றொன்றிற்குள் மோதி நொறுங்கும் (77:8, 81:2), அத்துடன் பூமியானது நமது பாதங்களுக்குக் கீழ் அதிரும் (69:14,89:21]. இந்தப் பயங்கரங்கள் நம்பிக்கையாளர்களைக் கவலை கொள்ளச் செய்யாது [21:103).

மேலான சுவனம்

எல்லாம் வல்ல கடவுளின் வருகையின் போது, மானிடர்கள் மற்றும் ஜின்கள் அனைவரும் தங்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அளவினைப் பொறுத்து தாங்களாகவே வகைப்படுத்தப் படுவார்கள். கடவுளை மட்டும் வழிபட்டு, மறுவுலகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அத்துடன் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துதலின் மூலம் தங்களுடைய ஆன்மாக்களை ஊட்டப்படுத்திக் கொண்டவர்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருப்பதற்குப் போதுமான வலிமையுடன் இருப்பார்கள்; அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்துக்களை சொந்தமாக்கிக் கொள்வார்கள் (பார்க்க பின் இணைப்பு 5).

தாழ்வான சுவனம்

குறைவானதோர் அளவுக்குத் தங்களுடைய ஆத்மாக்களை வளர்த்துக் கொண்டவர்கள். அவ்வண்ணமே நாற்பது வயதுக்கு முன்னர் மரணித்து விட்டவர்கள், தாழ்வான சுவனத்திற்குக் கீழ்நோக்கி நகர்வார்கள். அவர்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அவர்களை அனுமதிக்கின்ற அளவு கடவுளுக்கு நெருக்கமாக அவர்கள் இருக்கக் கூடிய அந்த இடத்திற்கு அவர்கள் செல்வார்கள்.

ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலம்

நரகத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அளவுக்கு. ஆனால் தாழ்வான சுவனத்திற்குள் நுழைவதற்குப் போதுமான அளவு இல்லாது தங்களுடைய ஆன்மாக்களை ஊட்டப்படுத்திக் கொண்டவர்களும் அங்கிருப்பார்கள். அவர்கள் நரகத்திலும் இல்லை, அன்றி சுவனத்திலும் இல்லை. தாழ்வான சுவனத்திற்குள் அவர்களை நுழைய அனுமதிக்குமாறு அவர்கள் கடவுளை இறைஞ்சுவார்கள் (7:46-50). கடவுள் அவர்கள் மீது கருணை கொன்வார், மேலும் ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலத்தினைத் தாழ்வான சுவனத்திற்குள் ஒன்று கலந்திடுவார்.

நரகம்

தங்களுடைய நலிவின் காரணத்தினால் கடவுளிடமிருந்து விரண்டோடி விடுபவர்களைத் தங்க வைப்பதற்காக ஒரு புதிய, எட்டாவது பிரபஞ்சம் படைக்கப்படும். அவர்கள் தங்களுடைய ஆத்மாக்களை ஊட்டப்படுத்தவும் வளர்த்துக் கொள்ளவும் தவறியிட்டனர் (69:17). கடவுள் ஒருவரையும் நரகத்தில் போட மாட்டார்: அவர்களுடைய சுயமான தேர்வினால் அவர்களே அதன்பால் செல்வார்கள் [பின் இணைப்பு 5).