. ١:٩٠ لا أُقسِمُ بِهٰذَا البَلَدِ
. ٢:٩٠ وَأَنتَ حِلٌّ بِهٰذَا البَلَدِ
. ٣:٩٠ وَوالِدٍ وَما وَلَدَ
. ٤:٩٠ لَقَد خَلَقنَا الإِنسٰنَ فى كَبَدٍ
. ٥:٩٠ أَيَحسَبُ أَن لَن يَقدِرَ عَلَيهِ أَحَدٌ
. ٦:٩٠ يَقولُ أَهلَكتُ مالًا لُبَدًا
. ٧:٩٠ أَيَحسَبُ أَن لَم يَرَهُ أَحَدٌ
. ٨:٩٠ أَلَم نَجعَل لَهُ عَينَينِ
. ٩:٩٠ وَلِسانًا وَشَفَتَينِ
. ١٠:٩٠ وَهَدَينٰهُ النَّجدَينِ
. ١١:٩٠ فَلَا اقتَحَمَ العَقَبَةَ
. ١٢:٩٠ وَما أَدرىٰكَ مَا العَقَبَةُ
. ١٣:٩٠ فَكُّ رَقَبَةٍ
. ١٤:٩٠ أَو إِطعٰمٌ فى يَومٍ ذى مَسغَبَةٍ
. ١٥:٩٠ يَتيمًا ذا مَقرَبَةٍ
. ١٦:٩٠ أَو مِسكينًا ذا مَترَبَةٍ
. ١٧:٩٠ ثُمَّ كانَ مِنَ الَّذينَ ءامَنوا وَتَواصَوا بِالصَّبرِ وَتَواصَوا بِالمَرحَمَةِ
. ١٨:٩٠ أُولٰئِكَ أَصحٰبُ المَيمَنَةِ
. ١٩:٩٠ وَالَّذينَ كَفَروا بِـٔايٰتِنا هُم أَصحٰبُ المَشـَٔمَةِ
. ٢٠:٩٠ عَلَيهِم نارٌ مُؤصَدَةٌ
90:1. I solemnly swear by this town.
90:2. The town where you live.
90:3. The begetting and the begotten.
90:4. We created the human being to work hard (to redeem himself).*
*90:4 See the Introduction and Appendix 7 for the purpose behind our creation.
90:5. Does he think that no one will ever call him to account?
90:6. He boasts, "I spent so much money!"
90:7. Does he think that no one sees him?
90:8. Did we not give him two eyes?
90:9. A tongue and two lips?
90:10. Did we not show him the two paths?
90:11. He should choose the difficult path.
90:12. Which one is the difficult path?
90:13. The freeing of slaves.
90:14. Feeding, during the time of hardship.
90:15. Orphans who are related.
90:16. Or the poor who is in need.
90:17. And being one of those who believe, and exhorting one another to be steadfast, and exhorting one another to be kind.
90:18. These have deserved happiness.
90:19. As for those who disbelieved in our revelations, they have incurred misery.
90:20. They will be confined in the Hellfire.
90:1. இந்த நகரத்தின் மீது நான் பவித்திரமான ஆணையிடுகின்றேன்.
90:2. நீர் வசிக்கின்ற அந்நகரம்.
90:3. பெற்றெடுப்பவர்கள் மற்றும் பெறப்பட்டவர்கள்.
90:4. (தன்னையே மீட்டுக் கொள்வதற்கு) மிகவும் கடினமாக உழைப்பதற்காக மானிடனை நாம் படைத்தோம்.*
*90:4 நம்முடைய படைப்பிற்குப் பின்னாலுள்ள நோக்கத்திற்கு அறிமுகவுரையையும் பின் இணைப்பு 7ஐயும் பார்க்கவும்
90:5. கணக்குக் கொடுக்க அவனை எவரும் அழைக்க மாட்டார் என்று அவன் எண்ணிக் கொண்டானா?
90:6. அவன் தற்பெருமையடித்துக் கொள்கின்றான், மிகவும் ஏராளமான பணத்தை நான் செலவு செய்து விட்டேன்!
90:7. எவரும் அவனைப் பார்க்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானா?
90:8. இரு கண்களை நாம் அவனுக்குத் தரவில்லையா?
90:9. ஒரு நாவும் இரு உதடுகளும்?
90:10. இரண்டு பாதைகளை நாம் அவனுக்குக் காட்ட வில்லையா?
90:11. கடினமான பாதையை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
90:12. எது கடினமான பாதை?
90:13. அடிமைகளை விடுவித்தல்.
90:14. கஷ்ட காலத்தின் போதும், உணவளித்தல்.
90:15. உறவினர்களான அனாதைகளுக்கு.
90:16. அல்லது தேவையுடையவர்களான ஏழைகளுக்கு.
90:17. அத்துடன் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவனாக, ஒருவர் மற்றவரிடம் உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும், ஒருவர் மற்றவரிடம் கனிவுடன் இருக்குமாறு உபதேசித்துக் கொண்டும் இருத்தல்.
90:18. இவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதியடைந்து விட்டனர்.
90:19. நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கடுந்துன்பத்திற்கு உள்ளாகி விட்டார்கள்.
90:20. நரகநெருப்பில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.