. ١:٨٩ وَالفَجرِ
. ٢:٨٩ وَلَيالٍ عَشرٍ
. ٣:٨٩ وَالشَّفعِ وَالوَترِ
. ٤:٨٩ وَالَّيلِ إِذا يَسرِ
. ٥:٨٩ هَل فى ذٰلِكَ قَسَمٌ لِذى حِجرٍ
. ٦:٨٩ أَلَم تَرَ كَيفَ فَعَلَ رَبُّكَ بِعادٍ
. ٧:٨٩ إِرَمَ ذاتِ العِمادِ
. ٨:٨٩ الَّتى لَم يُخلَق مِثلُها فِى البِلٰدِ
. ٩:٨٩ وَثَمودَ الَّذينَ جابُوا الصَّخرَ بِالوادِ
. ١٠:٨٩ وَفِرعَونَ ذِى الأَوتادِ
. ١١:٨٩ الَّذينَ طَغَوا فِى البِلٰدِ
. ١٢:٨٩ فَأَكثَروا فيهَا الفَسادَ
. ١٣:٨٩ فَصَبَّ عَلَيهِم رَبُّكَ سَوطَ عَذابٍ
. ١٤:٨٩ إِنَّ رَبَّكَ لَبِالمِرصادِ
. ١٥:٨٩ فَأَمَّا الإِنسٰنُ إِذا مَا ابتَلىٰهُ رَبُّهُ فَأَكرَمَهُ وَنَعَّمَهُ فَيَقولُ رَبّى أَكرَمَنِ
. ١٦:٨٩ وَأَمّا إِذا مَا ابتَلىٰهُ فَقَدَرَ عَلَيهِ رِزقَهُ فَيَقولُ رَبّى أَهٰنَنِ
. ١٧:٨٩ كَلّا بَل لا تُكرِمونَ اليَتيمَ
. ١٨:٨٩ وَلا تَحٰضّونَ عَلىٰ طَعامِ المِسكينِ
. ١٩:٨٩ وَتَأكُلونَ التُّراثَ أَكلًا لَمًّا
. ٢٠:٨٩ وَتُحِبّونَ المالَ حُبًّا جَمًّا
. ٢١:٨٩ كَلّا إِذا دُكَّتِ الأَرضُ دَكًّا دَكًّا
. ٢٢:٨٩ وَجاءَ رَبُّكَ وَالمَلَكُ صَفًّا صَفًّا
. ٢٣:٨٩ وَجِا۟ىءَ يَومَئِذٍ بِجَهَنَّمَ يَومَئِذٍ يَتَذَكَّرُ الإِنسٰنُ وَأَنّىٰ لَهُ الذِّكرىٰ
. ٢٤:٨٩ يَقولُ يٰلَيتَنى قَدَّمتُ لِحَياتى
. ٢٥:٨٩ فَيَومَئِذٍ لا يُعَذِّبُ عَذابَهُ أَحَدٌ
. ٢٦:٨٩ وَلا يوثِقُ وَثاقَهُ أَحَدٌ
. ٢٧:٨٩ يٰأَيَّتُهَا النَّفسُ المُطمَئِنَّةُ
. ٢٨:٨٩ ارجِعى إِلىٰ رَبِّكِ راضِيَةً مَرضِيَّةً
. ٢٩:٨٩ فَادخُلى فى عِبٰدى
. ٣٠:٨٩ وَادخُلى جَنَّتى
89:1. By the dawn.
89:2. And the ten nights.*
*89:2 The last ten nights of Ramadan, wherein many believers retreat to the masjids (2:187).
89:3. By the even and the odd.*
*89:3 See Appendix 1 for the role of the even numbers and the odd numbers.
89:4. By the night as it passes.
89:5. A profound oath, for one who possesses intelligence.
89:6. Have you noted what your Lord did to `Ãd?
89:7. Erum; the town with tall buildings.
89:8. There was nothing like it anywhere.
89:9. Also Thamoud, who carved the rocks in their valley.
89:10. And Pharaoh who possessed might.
89:11. They all transgressed in the land.
89:12. They spread evil throughout.
89:13. Consequently, your Lord poured upon them a whipping retribution.
89:14. Your Lord is ever watchful.
89:15. When the human being is tested by his Lord, through blessings and joy, he says, "My Lord is generous towards me."
89:16. But if He tests him through reduction in provisions, he says, "My Lord is humiliating me!"
89:17. Wrong! It is you who brought it on yourselves by not regarding the orphan.
89:18. And not advocating charity towards the poor.
89:19. And consuming the inheritance of helpless orphans.
89:20. And loving the money too much.
89:21. Indeed, when the earth is crushed, utterly crushed.
89:22. And your Lord comes, together with the angels in row after row.
89:23. On that day, Gehenna will be brought forth. On that day, the human being will remember - but what a remembrance - it will be too late.
89:24. He will say, "Oh, I wish I prepared for my (eternal) life."
89:25. On that day, no retribution could be worse than His retribution.
89:26. And no confinement is as effective as His confinement.
89:27. As for you, O content soul.
89:28. Return to your Lord, pleased and pleasing.
89:29. Welcome into My servants.
89:30. Welcome into My Paradise.
89:1. விடியலின் மீது.
89:2. மேலும் பத்து இரவுகள்* மீது.
*89:2 நம்பிக்கையாளர்கள் பலர் பள்ளிவாசல்களில் அடைக்கலமாகிக் கொள்கின்ற, ரமளானின் கடைசிப் பத்து இரவுகள் 2:187.
89:3. இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையின் மீது.*
*89:3 இரட்டைப்படை எண்கள் மற்றும் ஒற்றைப்படை எண்களின் பங்கென்ன என்பதற்குப் பின் இணைப்பு 1 ஐப் பார்க்கவும்.
89:4. இரவின் மீது அது கடந்து செல்கின்ற போது.
89:5. அறிவுத்திறன் உடைய ஒருவனுக்கு, ஆழ்ந்ததொரு பிரமாணம்.
89:6. ஆதுகளை உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்தீரா?
89:7. இரம்; உயர்ந்த கட்டடங்களையுடைய நகரம்.
89:8. அதனைப் போன்ற எந்த ஒன்றும் எங்கேயும் இருந்ததில்லை.
89:9. அத்துடன் தங்களுடைய பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்துகொண்ட, தமூதுகள்.
89:10. மேலும் பலம் பொருந்திய ஃபேரோ.
89:11. அவர்கள் அனைவரும் பூமியின் மீது வரம்பு மீறினார்கள்.
89:12. தீமைகளை அவர்கள் எங்கெங்கிலும் பரப்பினார்கள்.
89:13. அதன் விளைவாக, சவுக்கடியின் ஒரு தண்டனையை உம்முடைய இரட்சகர் அவர்கள் மீது ஊற்றினார்.
89:14. உம்முடைய இரட்சகர் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கின்றார்.
89:15. தன்னுடைய இரட்சகரால் ஆசிகள் மற்றும் உல்லாசத்தைக் கொண்டு மானிடன் சோதிக்கப்படுகின்ற பொழுது, அவன் கூறுகின்றான், "என் இரட்சகர் என் பால் தாராளமானவராக இருக்கின்றார்."
89:16. ஆனால் வாழ்வாதாரங்களைக் குறைத்தலின் மூலம் அவனை அவர் சோதித்தால், அவன் கூறுகின்றான், "என் இரட்சகர் என்னை இழிவுபடுத்துகின்றார்!"
89:17. தவறு! அனாதையை மதிக்காததன் மூலம் நீ தான் அதனை உன் மீதே வரவழைத்துக் கொண்டாய்.
89:18. மேலும் ஏழைகளின் பால் தர்மத்தை ஆதரிக்காததாலும்.
89:19. மேலும் நாதியற்ற அனாதைகளின் சொத்துகளை விழுங்கியதாலும்.
89:20. மேலும் பணத்தை மிகவும் அதிகமாக நேசித்ததாலும்.
89:21. உண்மையில், பூமியானது பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்ற, முற்றிலும் பொடிப்பொடியாக நொறுக்கப் படுகின்றபொழுது.
89:22. மேலும் அணி அணியாக வானவர்களுடன், உம்முடைய இரட்சகர் வருகின்றார்.
89:23. அந்நாளில், எரிகிடங்கு முன்னால் கொண்டு வரப்படும். அந்நாளில், மானிடன் நினைவு கூர்வான்-ஆனால், என்ன ஒரு நினைவு கூர்தல் - அது மிகவும் தாமதமானதாக இருக்கும்.
89:24. அவன் கூறுவான், "ஐயோ, (நிரந்தரமான) என்னுடைய வாழ்வுக்காக நான் தயாராக இருந்திருக்க வேண்டுமே என்று நான் விரும்புகின்றேன்."
89:25. அந்நாளில், அவர் தருகின்ற தண்டனையை விட மிகவும் மோசமான எந்தத் தண்டனையும் இருக்க இயலாது.
89:26. அவர் அடைப்பதைப் போல சக்தி மிக்கதாக எந்த அடைப்பும் இருக்காது.
89:27. திருப்தியடைந்த ஆத்மாவே, உன்னைப் பொறுத்த வரை.
89:28. திருப்தியுற்றதாகவும் திருப்தியளிப்பதாகவும், உன்னுடைய இரட்சகரிடம் திரும்பி விடு.
89:29. என்னுடைய ஊழியர்களுக்குள் நல்வரவாகுக.
89:30. என்னுடைய சுவனத்திற்குள் நல்வரவாகுக.