Find
Chapter 85: Al-Burooj
85:0-22
22 verses Revelation order 27
سورة البروج

. ١:٨٥ وَالسَّماءِ ذاتِ البُروجِ

. ٢:٨٥ وَاليَومِ المَوعودِ

. ٣:٨٥ وَشاهِدٍ وَمَشهودٍ

. ٤:٨٥ قُتِلَ أَصحٰبُ الأُخدودِ

. ٥:٨٥ النّارِ ذاتِ الوَقودِ

. ٦:٨٥ إِذ هُم عَلَيها قُعودٌ

. ٧:٨٥ وَهُم عَلىٰ ما يَفعَلونَ بِالمُؤمِنينَ شُهودٌ

. ٨:٨٥ وَما نَقَموا مِنهُم إِلّا أَن يُؤمِنوا بِاللَّهِ العَزيزِ الحَميدِ

. ٩:٨٥ الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدٌ

. ١٠:٨٥ إِنَّ الَّذينَ فَتَنُوا المُؤمِنينَ وَالمُؤمِنٰتِ ثُمَّ لَم يَتوبوا فَلَهُم عَذابُ جَهَنَّمَ وَلَهُم عَذابُ الحَريقِ

. ١١:٨٥ إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ ذٰلِكَ الفَوزُ الكَبيرُ

. ١٢:٨٥ إِنَّ بَطشَ رَبِّكَ لَشَديدٌ

. ١٣:٨٥ إِنَّهُ هُوَ يُبدِئُ وَيُعيدُ

. ١٤:٨٥ وَهُوَ الغَفورُ الوَدودُ

. ١٥:٨٥ ذُو العَرشِ المَجيدُ

. ١٦:٨٥ فَعّالٌ لِما يُريدُ

. ١٧:٨٥ هَل أَتىٰكَ حَديثُ الجُنودِ

. ١٨:٨٥ فِرعَونَ وَثَمودَ

. ١٩:٨٥ بَلِ الَّذينَ كَفَروا فى تَكذيبٍ

. ٢٠:٨٥ وَاللَّهُ مِن وَرائِهِم مُحيطٌ

. ٢١:٨٥ بَل هُوَ قُرءانٌ مَجيدٌ

. ٢٢:٨٥ فى لَوحٍ مَحفوظٍ

The Galaxies

85:1. The sky and its galaxies.

85:2. The promised day.

85:3. The witness and the witnessed.

85:4. Woe to the people of the canyon.

85:5. They ignited a blazing fire.

85:6. Then sat around it.

85:7. To watch the burning of the believers.

85:8. They hated them for no other reason than believing in God, the Almighty, the Praiseworthy.

85:9. To Him belongs the kingship of the heavens and the earth. And God witnesses all things.

85:10. Surely, those who persecute the believing men and women, then fail to repent, have incurred the retribution of Gehenna; they have incurred the retribution of burning.

85:11. Surely, those who believed and led a righteous life, have deserved gardens with flowing streams. This is the greatest triumph.

85:12. Indeed, your Lord's blow is severe.

85:13. He is the One who initiates and repeats.

85:14. And He is the Forgiving, Most Kind.

85:15. Possessor of the glorious throne.

85:16. Doer of whatever He wills.

85:17. Did you note the history of the troops?

85:18. Pharaoh and Thamoud?

85:19. Those who disbelieve are plagued with denial.

85:20. God is fully aware of them.

85:21. Indeed, it is a glorious Quran.

85:22. In a preserved master tablet.

வானிலுள்ள பால்வீதி

85:1. ஆகாயமும் அதன் நட்சத்திர மண்டலங்களும்.

85:2. வாக்களிக்கப்பட்டுள்ள அந்நாள்.

85:3. சாட்சியும் சாட்சி சொல்லப்படுவதும்.

85:4. செங்குத்துப் பள்ளத்தாக்கின் மக்களுக்குக் கேடுதான்.

85:5. கொழுந்து விட்டெரியும் ஒரு நெருப்பை அவர்கள் மூட்டினர்.

85:6. பின்னர் அதனைச் சுற்றிலும் அவர்கள் அமர்ந்து கொண்டனர்.

85:7. நம்பிக்கையாளர்கள் கருகுவதை ரசிப்பதற்காக.

85:8. எல்லாம் வல்லவரும், புகழுக்குத் தகுதியானவருமான கடவுள் மீது நம்பிக்கை கொண்டனர் என்பதைத் தவிர, வேறு காரணம் எதற்காகவும் அவர்களை அவர்கள் வெறுக்கவில்லை.

85:9. வானங்கள் மற்றும் பூமியின் அரசுரிமை அவருக்கே உரியது. மேலும் கடவுள் எல்லா விஷயங்களுக்கும் சாட்சியாகின்றார்.

85:10. நிச்சயமாக, நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் வன்கொடுமை செய்து, பின்னர் வருந்தத் தவறி விட்டவர்கள், எரிகிடங்கின் தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்; கருகுதலின் தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.

85:11. நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்கள், ஆறுகள் பாயும் தோட் டங்களுக்குத் தகுதியடைந்து விட்டனர். இதுவே மகத்தான பெருவெற்றியாகும்.

85:12. உண்மையில், உம்முடைய இரட்சகரின் அடி கடுமை யானதாகும்.

85:13. அவர்தான் துவக்குகின்றவர், மேலும் அதனைமீண் டும் செய்கின்றவர்.

85:14. மேலும் அவர்தான் மன்னிக்கின்றவர், மிகுந்த கனிவுடையவர்.

85:15. மகிமைமிக்க அந்த அரியாசனத்தின் உரிமையாளர்.

85:16. அவர் நாடுகின்ற எதனையும் செய்கின்றவர்.

85:17. சேனைகளின் வரலாற்றை நீர் கவனித்தீரா?

85:18. ஃபேரோ மற்றும் தமூதுடையவை?

85:19. நம்பமறுப்பவர்கள் ஏற்கமறுத்தலால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

85:20. கடவுள் அவர்களைப் பற்றி முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

85:21. உண்மையில், இது மகத்தானதொரு குர்ஆனாகும்.

85:22. பாதுகாக்கப்பட்டதொரு மூலப் பலகையில்.