Find
Chapter 8: Al-Anfal
8:0-75
75 verses Revelation order 88
سورة الأنفال

. ١:٨ يَسـَٔلونَكَ عَنِ الأَنفالِ قُلِ الأَنفالُ لِلَّهِ وَالرَّسولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصلِحوا ذاتَ بَينِكُم وَأَطيعُوا اللَّهَ وَرَسولَهُ إِن كُنتُم مُؤمِنينَ

. ٢:٨ إِنَّمَا المُؤمِنونَ الَّذينَ إِذا ذُكِرَ اللَّهُ وَجِلَت قُلوبُهُم وَإِذا تُلِيَت عَلَيهِم ءايٰتُهُ زادَتهُم إيمٰنًا وَعَلىٰ رَبِّهِم يَتَوَكَّلونَ

. ٣:٨ الَّذينَ يُقيمونَ الصَّلوٰةَ وَمِمّا رَزَقنٰهُم يُنفِقونَ

. ٤:٨ أُولٰئِكَ هُمُ المُؤمِنونَ حَقًّا لَهُم دَرَجٰتٌ عِندَ رَبِّهِم وَمَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

. ٥:٨ كَما أَخرَجَكَ رَبُّكَ مِن بَيتِكَ بِالحَقِّ وَإِنَّ فَريقًا مِنَ المُؤمِنينَ لَكٰرِهونَ

. ٦:٨ يُجٰدِلونَكَ فِى الحَقِّ بَعدَما تَبَيَّنَ كَأَنَّما يُساقونَ إِلَى المَوتِ وَهُم يَنظُرونَ

. ٧:٨ وَإِذ يَعِدُكُمُ اللَّهُ إِحدَى الطّائِفَتَينِ أَنَّها لَكُم وَتَوَدّونَ أَنَّ غَيرَ ذاتِ الشَّوكَةِ تَكونُ لَكُم وَيُريدُ اللَّهُ أَن يُحِقَّ الحَقَّ بِكَلِمٰتِهِ وَيَقطَعَ دابِرَ الكٰفِرينَ

. ٨:٨ لِيُحِقَّ الحَقَّ وَيُبطِلَ البٰطِلَ وَلَو كَرِهَ المُجرِمونَ

. ٩:٨ إِذ تَستَغيثونَ رَبَّكُم فَاستَجابَ لَكُم أَنّى مُمِدُّكُم بِأَلفٍ مِنَ المَلٰئِكَةِ مُردِفينَ

. ١٠:٨ وَما جَعَلَهُ اللَّهُ إِلّا بُشرىٰ وَلِتَطمَئِنَّ بِهِ قُلوبُكُم وَمَا النَّصرُ إِلّا مِن عِندِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزيزٌ حَكيمٌ

. ١١:٨ إِذ يُغَشّيكُمُ النُّعاسَ أَمَنَةً مِنهُ وَيُنَزِّلُ عَلَيكُم مِنَ السَّماءِ ماءً لِيُطَهِّرَكُم بِهِ وَيُذهِبَ عَنكُم رِجزَ الشَّيطٰنِ وَلِيَربِطَ عَلىٰ قُلوبِكُم وَيُثَبِّتَ بِهِ الأَقدامَ

. ١٢:٨ إِذ يوحى رَبُّكَ إِلَى المَلٰئِكَةِ أَنّى مَعَكُم فَثَبِّتُوا الَّذينَ ءامَنوا سَأُلقى فى قُلوبِ الَّذينَ كَفَرُوا الرُّعبَ فَاضرِبوا فَوقَ الأَعناقِ وَاضرِبوا مِنهُم كُلَّ بَنانٍ

. ١٣:٨ ذٰلِكَ بِأَنَّهُم شاقُّوا اللَّهَ وَرَسولَهُ وَمَن يُشاقِقِ اللَّهَ وَرَسولَهُ فَإِنَّ اللَّهَ شَديدُ العِقابِ

. ١٤:٨ ذٰلِكُم فَذوقوهُ وَأَنَّ لِلكٰفِرينَ عَذابَ النّارِ

. ١٥:٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا لَقيتُمُ الَّذينَ كَفَروا زَحفًا فَلا تُوَلّوهُمُ الأَدبارَ

. ١٦:٨ وَمَن يُوَلِّهِم يَومَئِذٍ دُبُرَهُ إِلّا مُتَحَرِّفًا لِقِتالٍ أَو مُتَحَيِّزًا إِلىٰ فِئَةٍ فَقَد باءَ بِغَضَبٍ مِنَ اللَّهِ وَمَأوىٰهُ جَهَنَّمُ وَبِئسَ المَصيرُ

. ١٧:٨ فَلَم تَقتُلوهُم وَلٰكِنَّ اللَّهَ قَتَلَهُم وَما رَمَيتَ إِذ رَمَيتَ وَلٰكِنَّ اللَّهَ رَمىٰ وَلِيُبلِىَ المُؤمِنينَ مِنهُ بَلاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَميعٌ عَليمٌ

. ١٨:٨ ذٰلِكُم وَأَنَّ اللَّهَ موهِنُ كَيدِ الكٰفِرينَ

. ١٩:٨ إِن تَستَفتِحوا فَقَد جاءَكُمُ الفَتحُ وَإِن تَنتَهوا فَهُوَ خَيرٌ لَكُم وَإِن تَعودوا نَعُد وَلَن تُغنِىَ عَنكُم فِئَتُكُم شَيـًٔا وَلَو كَثُرَت وَأَنَّ اللَّهَ مَعَ المُؤمِنينَ

. ٢٠:٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا أَطيعُوا اللَّهَ وَرَسولَهُ وَلا تَوَلَّوا عَنهُ وَأَنتُم تَسمَعونَ

. ٢١:٨ وَلا تَكونوا كَالَّذينَ قالوا سَمِعنا وَهُم لا يَسمَعونَ

. ٢٢:٨ إِنَّ شَرَّ الدَّوابِّ عِندَ اللَّهِ الصُّمُّ البُكمُ الَّذينَ لا يَعقِلونَ

. ٢٣:٨ وَلَو عَلِمَ اللَّهُ فيهِم خَيرًا لَأَسمَعَهُم وَلَو أَسمَعَهُم لَتَوَلَّوا وَهُم مُعرِضونَ

. ٢٤:٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا استَجيبوا لِلَّهِ وَلِلرَّسولِ إِذا دَعاكُم لِما يُحييكُم وَاعلَموا أَنَّ اللَّهَ يَحولُ بَينَ المَرءِ وَقَلبِهِ وَأَنَّهُ إِلَيهِ تُحشَرونَ

. ٢٥:٨ وَاتَّقوا فِتنَةً لا تُصيبَنَّ الَّذينَ ظَلَموا مِنكُم خاصَّةً وَاعلَموا أَنَّ اللَّهَ شَديدُ العِقابِ

. ٢٦:٨ وَاذكُروا إِذ أَنتُم قَليلٌ مُستَضعَفونَ فِى الأَرضِ تَخافونَ أَن يَتَخَطَّفَكُمُ النّاسُ فَـٔاوىٰكُم وَأَيَّدَكُم بِنَصرِهِ وَرَزَقَكُم مِنَ الطَّيِّبٰتِ لَعَلَّكُم تَشكُرونَ

. ٢٧:٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَخونُوا اللَّهَ وَالرَّسولَ وَتَخونوا أَمٰنٰتِكُم وَأَنتُم تَعلَمونَ

. ٢٨:٨ وَاعلَموا أَنَّما أَموٰلُكُم وَأَولٰدُكُم فِتنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجرٌ عَظيمٌ

. ٢٩:٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِن تَتَّقُوا اللَّهَ يَجعَل لَكُم فُرقانًا وَيُكَفِّر عَنكُم سَيِّـٔاتِكُم وَيَغفِر لَكُم وَاللَّهُ ذُو الفَضلِ العَظيمِ

. ٣٠:٨ وَإِذ يَمكُرُ بِكَ الَّذينَ كَفَروا لِيُثبِتوكَ أَو يَقتُلوكَ أَو يُخرِجوكَ وَيَمكُرونَ وَيَمكُرُ اللَّهُ وَاللَّهُ خَيرُ المٰكِرينَ

. ٣١:٨ وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا قالوا قَد سَمِعنا لَو نَشاءُ لَقُلنا مِثلَ هٰذا إِن هٰذا إِلّا أَسٰطيرُ الأَوَّلينَ

. ٣٢:٨ وَإِذ قالُوا اللَّهُمَّ إِن كانَ هٰذا هُوَ الحَقَّ مِن عِندِكَ فَأَمطِر عَلَينا حِجارَةً مِنَ السَّماءِ أَوِ ائتِنا بِعَذابٍ أَليمٍ

. ٣٣:٨ وَما كانَ اللَّهُ لِيُعَذِّبَهُم وَأَنتَ فيهِم وَما كانَ اللَّهُ مُعَذِّبَهُم وَهُم يَستَغفِرونَ

. ٣٤:٨ وَما لَهُم أَلّا يُعَذِّبَهُمُ اللَّهُ وَهُم يَصُدّونَ عَنِ المَسجِدِ الحَرامِ وَما كانوا أَولِياءَهُ إِن أَولِياؤُهُ إِلَّا المُتَّقونَ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ

. ٣٥:٨ وَما كانَ صَلاتُهُم عِندَ البَيتِ إِلّا مُكاءً وَتَصدِيَةً فَذوقُوا العَذابَ بِما كُنتُم تَكفُرونَ

. ٣٦:٨ إِنَّ الَّذينَ كَفَروا يُنفِقونَ أَموٰلَهُم لِيَصُدّوا عَن سَبيلِ اللَّهِ فَسَيُنفِقونَها ثُمَّ تَكونُ عَلَيهِم حَسرَةً ثُمَّ يُغلَبونَ وَالَّذينَ كَفَروا إِلىٰ جَهَنَّمَ يُحشَرونَ

. ٣٧:٨ لِيَميزَ اللَّهُ الخَبيثَ مِنَ الطَّيِّبِ وَيَجعَلَ الخَبيثَ بَعضَهُ عَلىٰ بَعضٍ فَيَركُمَهُ جَميعًا فَيَجعَلَهُ فى جَهَنَّمَ أُولٰئِكَ هُمُ الخٰسِرونَ

. ٣٨:٨ قُل لِلَّذينَ كَفَروا إِن يَنتَهوا يُغفَر لَهُم ما قَد سَلَفَ وَإِن يَعودوا فَقَد مَضَت سُنَّتُ الأَوَّلينَ

. ٣٩:٨ وَقٰتِلوهُم حَتّىٰ لا تَكونَ فِتنَةٌ وَيَكونَ الدّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انتَهَوا فَإِنَّ اللَّهَ بِما يَعمَلونَ بَصيرٌ

. ٤٠:٨ وَإِن تَوَلَّوا فَاعلَموا أَنَّ اللَّهَ مَولىٰكُم نِعمَ المَولىٰ وَنِعمَ النَّصيرُ

. ٤١:٨ وَاعلَموا أَنَّما غَنِمتُم مِن شَىءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسولِ وَلِذِى القُربىٰ وَاليَتٰمىٰ وَالمَسٰكينِ وَابنِ السَّبيلِ إِن كُنتُم ءامَنتُم بِاللَّهِ وَما أَنزَلنا عَلىٰ عَبدِنا يَومَ الفُرقانِ يَومَ التَقَى الجَمعانِ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

. ٤٢:٨ إِذ أَنتُم بِالعُدوَةِ الدُّنيا وَهُم بِالعُدوَةِ القُصوىٰ وَالرَّكبُ أَسفَلَ مِنكُم وَلَو تَواعَدتُم لَاختَلَفتُم فِى الميعٰدِ وَلٰكِن لِيَقضِىَ اللَّهُ أَمرًا كانَ مَفعولًا لِيَهلِكَ مَن هَلَكَ عَن بَيِّنَةٍ وَيَحيىٰ مَن حَىَّ عَن بَيِّنَةٍ وَإِنَّ اللَّهَ لَسَميعٌ عَليمٌ

. ٤٣:٨ إِذ يُريكَهُمُ اللَّهُ فى مَنامِكَ قَليلًا وَلَو أَرىٰكَهُم كَثيرًا لَفَشِلتُم وَلَتَنٰزَعتُم فِى الأَمرِ وَلٰكِنَّ اللَّهَ سَلَّمَ إِنَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

. ٤٤:٨ وَإِذ يُريكُموهُم إِذِ التَقَيتُم فى أَعيُنِكُم قَليلًا وَيُقَلِّلُكُم فى أَعيُنِهِم لِيَقضِىَ اللَّهُ أَمرًا كانَ مَفعولًا وَإِلَى اللَّهِ تُرجَعُ الأُمورُ

. ٤٥:٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا لَقيتُم فِئَةً فَاثبُتوا وَاذكُرُوا اللَّهَ كَثيرًا لَعَلَّكُم تُفلِحونَ

. ٤٦:٨ وَأَطيعُوا اللَّهَ وَرَسولَهُ وَلا تَنٰزَعوا فَتَفشَلوا وَتَذهَبَ ريحُكُم وَاصبِروا إِنَّ اللَّهَ مَعَ الصّٰبِرينَ

. ٤٧:٨ وَلا تَكونوا كَالَّذينَ خَرَجوا مِن دِيٰرِهِم بَطَرًا وَرِئاءَ النّاسِ وَيَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَاللَّهُ بِما يَعمَلونَ مُحيطٌ

. ٤٨:٨ وَإِذ زَيَّنَ لَهُمُ الشَّيطٰنُ أَعمٰلَهُم وَقالَ لا غالِبَ لَكُمُ اليَومَ مِنَ النّاسِ وَإِنّى جارٌ لَكُم فَلَمّا تَراءَتِ الفِئَتانِ نَكَصَ عَلىٰ عَقِبَيهِ وَقالَ إِنّى بَرىءٌ مِنكُم إِنّى أَرىٰ ما لا تَرَونَ إِنّى أَخافُ اللَّهَ وَاللَّهُ شَديدُ العِقابِ

. ٤٩:٨ إِذ يَقولُ المُنٰفِقونَ وَالَّذينَ فى قُلوبِهِم مَرَضٌ غَرَّ هٰؤُلاءِ دينُهُم وَمَن يَتَوَكَّل عَلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ عَزيزٌ حَكيمٌ

. ٥٠:٨ وَلَو تَرىٰ إِذ يَتَوَفَّى الَّذينَ كَفَرُوا المَلٰئِكَةُ يَضرِبونَ وُجوهَهُم وَأَدبٰرَهُم وَذوقوا عَذابَ الحَريقِ

. ٥١:٨ ذٰلِكَ بِما قَدَّمَت أَيديكُم وَأَنَّ اللَّهَ لَيسَ بِظَلّٰمٍ لِلعَبيدِ

. ٥٢:٨ كَدَأبِ ءالِ فِرعَونَ وَالَّذينَ مِن قَبلِهِم كَفَروا بِـٔايٰتِ اللَّهِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنوبِهِم إِنَّ اللَّهَ قَوِىٌّ شَديدُ العِقابِ

. ٥٣:٨ ذٰلِكَ بِأَنَّ اللَّهَ لَم يَكُ مُغَيِّرًا نِعمَةً أَنعَمَها عَلىٰ قَومٍ حَتّىٰ يُغَيِّروا ما بِأَنفُسِهِم وَأَنَّ اللَّهَ سَميعٌ عَليمٌ

. ٥٤:٨ كَدَأبِ ءالِ فِرعَونَ وَالَّذينَ مِن قَبلِهِم كَذَّبوا بِـٔايٰتِ رَبِّهِم فَأَهلَكنٰهُم بِذُنوبِهِم وَأَغرَقنا ءالَ فِرعَونَ وَكُلٌّ كانوا ظٰلِمينَ

. ٥٥:٨ إِنَّ شَرَّ الدَّوابِّ عِندَ اللَّهِ الَّذينَ كَفَروا فَهُم لا يُؤمِنونَ

. ٥٦:٨ الَّذينَ عٰهَدتَ مِنهُم ثُمَّ يَنقُضونَ عَهدَهُم فى كُلِّ مَرَّةٍ وَهُم لا يَتَّقونَ

. ٥٧:٨ فَإِمّا تَثقَفَنَّهُم فِى الحَربِ فَشَرِّد بِهِم مَن خَلفَهُم لَعَلَّهُم يَذَّكَّرونَ

. ٥٨:٨ وَإِمّا تَخافَنَّ مِن قَومٍ خِيانَةً فَانبِذ إِلَيهِم عَلىٰ سَواءٍ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الخائِنينَ

. ٥٩:٨ وَلا يَحسَبَنَّ الَّذينَ كَفَروا سَبَقوا إِنَّهُم لا يُعجِزونَ

. ٦٠:٨ وَأَعِدّوا لَهُم مَا استَطَعتُم مِن قُوَّةٍ وَمِن رِباطِ الخَيلِ تُرهِبونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُم وَءاخَرينَ مِن دونِهِم لا تَعلَمونَهُمُ اللَّهُ يَعلَمُهُم وَما تُنفِقوا مِن شَىءٍ فى سَبيلِ اللَّهِ يُوَفَّ إِلَيكُم وَأَنتُم لا تُظلَمونَ

. ٦١:٨ وَإِن جَنَحوا لِلسَّلمِ فَاجنَح لَها وَتَوَكَّل عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ

. ٦٢:٨ وَإِن يُريدوا أَن يَخدَعوكَ فَإِنَّ حَسبَكَ اللَّهُ هُوَ الَّذى أَيَّدَكَ بِنَصرِهِ وَبِالمُؤمِنينَ

. ٦٣:٨ وَأَلَّفَ بَينَ قُلوبِهِم لَو أَنفَقتَ ما فِى الأَرضِ جَميعًا ما أَلَّفتَ بَينَ قُلوبِهِم وَلٰكِنَّ اللَّهَ أَلَّفَ بَينَهُم إِنَّهُ عَزيزٌ حَكيمٌ

. ٦٤:٨ يٰأَيُّهَا النَّبِىُّ حَسبُكَ اللَّهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ المُؤمِنينَ

. ٦٥:٨ يٰأَيُّهَا النَّبِىُّ حَرِّضِ المُؤمِنينَ عَلَى القِتالِ إِن يَكُن مِنكُم عِشرونَ صٰبِرونَ يَغلِبوا مِا۟ئَتَينِ وَإِن يَكُن مِنكُم مِا۟ئَةٌ يَغلِبوا أَلفًا مِنَ الَّذينَ كَفَروا بِأَنَّهُم قَومٌ لا يَفقَهونَ

. ٦٦:٨ الـٰٔنَ خَفَّفَ اللَّهُ عَنكُم وَعَلِمَ أَنَّ فيكُم ضَعفًا فَإِن يَكُن مِنكُم مِا۟ئَةٌ صابِرَةٌ يَغلِبوا مِا۟ئَتَينِ وَإِن يَكُن مِنكُم أَلفٌ يَغلِبوا أَلفَينِ بِإِذنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصّٰبِرينَ

. ٦٧:٨ ما كانَ لِنَبِىٍّ أَن يَكونَ لَهُ أَسرىٰ حَتّىٰ يُثخِنَ فِى الأَرضِ تُريدونَ عَرَضَ الدُّنيا وَاللَّهُ يُريدُ الـٔاخِرَةَ وَاللَّهُ عَزيزٌ حَكيمٌ

. ٦٨:٨ لَولا كِتٰبٌ مِنَ اللَّهِ سَبَقَ لَمَسَّكُم فيما أَخَذتُم عَذابٌ عَظيمٌ

. ٦٩:٨ فَكُلوا مِمّا غَنِمتُم حَلٰلًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

. ٧٠:٨ يٰأَيُّهَا النَّبِىُّ قُل لِمَن فى أَيديكُم مِنَ الأَسرىٰ إِن يَعلَمِ اللَّهُ فى قُلوبِكُم خَيرًا يُؤتِكُم خَيرًا مِمّا أُخِذَ مِنكُم وَيَغفِر لَكُم وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

. ٧١:٨ وَإِن يُريدوا خِيانَتَكَ فَقَد خانُوا اللَّهَ مِن قَبلُ فَأَمكَنَ مِنهُم وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

. ٧٢:٨ إِنَّ الَّذينَ ءامَنوا وَهاجَروا وَجٰهَدوا بِأَموٰلِهِم وَأَنفُسِهِم فى سَبيلِ اللَّهِ وَالَّذينَ ءاوَوا وَنَصَروا أُولٰئِكَ بَعضُهُم أَولِياءُ بَعضٍ وَالَّذينَ ءامَنوا وَلَم يُهاجِروا ما لَكُم مِن وَلٰيَتِهِم مِن شَىءٍ حَتّىٰ يُهاجِروا وَإِنِ استَنصَروكُم فِى الدّينِ فَعَلَيكُمُ النَّصرُ إِلّا عَلىٰ قَومٍ بَينَكُم وَبَينَهُم ميثٰقٌ وَاللَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ

. ٧٣:٨ وَالَّذينَ كَفَروا بَعضُهُم أَولِياءُ بَعضٍ إِلّا تَفعَلوهُ تَكُن فِتنَةٌ فِى الأَرضِ وَفَسادٌ كَبيرٌ

. ٧٤:٨ وَالَّذينَ ءامَنوا وَهاجَروا وَجٰهَدوا فى سَبيلِ اللَّهِ وَالَّذينَ ءاوَوا وَنَصَروا أُولٰئِكَ هُمُ المُؤمِنونَ حَقًّا لَهُم مَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

. ٧٥:٨ وَالَّذينَ ءامَنوا مِن بَعدُ وَهاجَروا وَجٰهَدوا مَعَكُم فَأُولٰئِكَ مِنكُم وَأُولُوا الأَرحامِ بَعضُهُم أَولىٰ بِبَعضٍ فى كِتٰبِ اللَّهِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَىءٍ عَليمٌ

The Spoils of War

8:1. They consult you about the spoils of war. Say, "The spoils of war belong to God and the messenger." You shall observe God, exhort one another to be righteous, and obey God and His messenger, if you are believers.

8:2. The true believers are those whose hearts tremble when God is mentioned, and when His revelations are recited to them, their faith is strengthened, and they trust in their Lord.

8:3. They observe the Contact Prayers (Salat), and from our provisions to them, they give to charity.

8:4. Such are the true believers. They attain high ranks at their Lord, as well as forgiveness and a generous provision.

8:5. When your Lord willed that you leave your home, to fulfill a specific plan, some believers became exposed as reluctant believers.

8:6. They argued with you against the truth, even after everything was explained to them. They acted as if they were being driven to certain death.

8:7. Recall that God promised you victory over a certain group, but you still wanted to face the weaker group. It was God's plan to establish the truth with His words, and to defeat the disbelievers.

8:8. For He has decreed that the truth shall prevail, and the falsehood shall vanish, in spite of the evildoers.

8:9. Thus, when you implored your Lord to come to the rescue, He responded to you: "I am supporting you with one thousand angels in succession."

8:10. God gave you this good news to strengthen your hearts. Victory comes only from God. God is Almighty, Most Wise.

8:11. He caused peaceful slumber to overtake you and pacify you, and He sent down water from the sky to clean you therewith. He protected you from the devil's curse, reassured your hearts and strengthened your foothold.

8:12. Recall that your Lord inspired the angels: "I am with you; so support those who believed. I will throw terror into the hearts of those who disbelieved. You may strike them above the necks, and you may strike even every finger."

*8:12-16 All wars are governed by the basic rule in 60:8-9.

8:13. This is what they have justly incurred by fighting God and His messenger. For those who fight against God and His messenger, God's retribution is severe.

8:14. This is to punish the disbelievers; they have incurred the retribution of Hell.

8:15. O you who believe, if you encounter the disbelievers who have mobilized against you, do not turn back and flee.

8:16. Anyone who turns back on that day, except to carry out a battle plan, or to join his group, has incurred wrath from God, and his abode is Hell; what a miserable destiny!

8:17. It was not you who killed them; God is the One who killed them. It was not you who threw when you threw; God is the One who threw. But He thus gives the believers a chance to earn a lot of credit. God is Hearer, Omniscient.

*8:17 Believing in God necessitates believing in His qualities, one of which is that He is doing everything. Without knowing God, there is no belief (23:84-90). Bad things are incurred by us, and executed by Satan, in accordance with God's laws (4:78-79, 42:30).

8:18. Additionally, God thus nullifies the schemes of the disbelievers.

8:19. You sought victory (O disbelievers), and victory did come; it belonged to the believers. If you refrain (from aggression) it would be better for you, but if you return, so will we. Your armies will never help you, no matter how great. For God is on the side of the believers.

8:20. O you who believe, obey God and His messenger, and do not disregard him while you hear.

8:21. Do not be like those who say, "We hear," when they do not hear.

8:22. The worst creatures in the sight of God are the deaf and dumb, who do not understand.

8:23. Had God known of any good in them, He would have made them hearers. Even if He made them hearers, they still would turn away in aversion.

8:24. O you who believe, you shall respond to God and to the messenger when he invites you to what gives you life.* You should know that God is closer to you than your heart, and that before Him you will be summoned.

*8:24 See Appendix 17. When the righteous exit their bodies, they go straight to Heaven.

8:25. Beware of a retribution that may not be limited to the evildoers among you.* You should know that God's retribution is severe.

*8:25 A community that tolerates homosexuality, for example, may be hit by an earthquake.

8:26. Remember that you used to be few and oppressed, fearing that the people may snatch you, and He granted you a secure sanctuary, supported you with His victory, and provided you with good provisions, that you may be appreciative.

8:27. O you who believe, do not betray God and the messenger, and do not betray those who trust you, now that you know.

8:28. You should know that your money and your children are a test, and that God possesses a great recompense.

8:29. O you who believe, if you reverence God, He will enlighten you, remit your sins, and forgive you. God possesses infinite grace.

8:30. The disbelievers plot and scheme to neutralize you, or kill you, or banish you. However, they plot and scheme, but so does God. God is the best schemer.

*8:30 God chose His final prophet, Muhammad, from the strongest tribe of Arabia. It was tribal law and traditions that prevented the disbelievers - by God's leave - from killing Muhammad. Similarly, it was God's will to move His Messenger of the Covenant from the Middle East, where he would have been killed, to the U.S.A. where God's message can flourish and reach every corner of the globe. This is mathematically confirmed: the sura & verse numbers= 8+30=19x2.

8:31. When our revelations are recited to them, they say, "We have heard. If we wanted to, we could have said the same things. These are no more than tales from the past!"

8:32. They also said, "Our god, if this is really the truth from You, then shower us with rocks from the sky, or pour upon us a painful punishment."

8:33. However, God is not to punish them while you are in their midst; God is not to punish them while they are seeking forgiveness.

8:34. Have they not deserved God's retribution, by repelling others from the Sacred Masjid, even though they are not the custodians thereof? The true custodians thereof are the righteous, but most of them do not know.

8:35. Their Contact Prayers (Salat) at the shrine (Ka`bah) were no more than a mockery and a means of repelling the people (by crowding them out). Therefore, suffer the retribution for your disbelief.

*8:35 All religious practices in Islam came to us through Abraham; when the Quran was revealed, all rites in "Submission" were already in existence (21:73, 22:78).

8:36. Those who disbelieve spend their money to repel others from the way of God. They will spend it, then it will turn into sorrow and remorse for them. Ultimately, they will be defeated, and all disbelievers will be summoned to Hell.

*8:36 The idol worshiping leaders of corrupted Islam, Saudi Arabia, have allocated huge sums of money annually to fight God and His miracle. For example, the famous Lebanese publisher Dr Al-`Ilm Lil-Malyn (Knowledge for the Millions) published the Arabic version of "The Miracle of the Quran" in March, 1983. The Saudis bought all the copies and destroyed them.

8:37. God will sift away the bad from the good, then pile the bad on top of each other, all in one pile, then throw it in Hell. Such are the losers.

8:38. Tell those who disbelieved: if they stop, all their past will be forgiven. But if they return, they will incur the same fate as their previous counterparts.

8:39. You shall fight them to ward off oppression, and to practice your religion devoted to God alone. If they refrain from aggression, then God is fully Seer of everything they do.

8:40. If they turn away, then you should know that God is your Lord and Master; the best Lord and Master, the best supporter.

8:41. You should know that if you gain any spoils in war, one-fifth shall go to God and the messenger, to be given to the relatives, the orphans, the poor, and the traveling alien. You will do this if you believe in God and in what we revealed to our servant on the day of decision, the day the two armies clashed. God is Omnipotent.

8:42. Recall that you were on this side of the valley, while they were on the other side. Then their caravan had to move to lower ground. Had you planned it this way, you could not have done it. But God was to carry out a predetermined matter, whereby those destined to be annihilated were annihilated for an obvious reason, and those destined to be saved were saved for an obvious reason. God is Hearer, Omniscient.

8:43. God made them appear in your dream (O Muhammad) fewer in number. Had He made them appear more numerous, you would have failed, and you would have disputed among yourselves. But God saved the situation. He is Knower of the innermost thoughts.

8:44. And when the time came and you faced them, He made them appear fewer in your eyes, and made you appear fewer in their eyes as well. For God willed to carry out a certain plan. All decisions are made by God.

8:45. O you who believe, when you encounter an army, you shall hold fast and commemorate God frequently, that you may succeed.

8:46. You shall obey God and His messenger, and do not dispute among yourselves, lest you fail and scatter your strength. You shall steadfastly persevere. God is with those who steadfastly persevere.

8:47. Do not be like those who left their homes grudgingly, only to show off, and in fact discouraged others from following the path of God. God is fully aware of everything they do.

8:48. The devil had adorned their works in their eyes, and said, "You cannot be defeated by any people today," and "I will be fighting along with you." But as soon as the two armies faced each other, he turned back on his heels and fled, saying, "I disown you. I see what you do not see. I am afraid of God. God's retribution is awesome."

8:49. The hypocrites and those who harbored doubt in their hearts said, "These people are deceived by their religion." However, if one puts his trust in God, then God is Almighty, Most Wise.

8:50. If you could only see those who disbelieved when the angels put them to death! They will beat them on their faces and their rear ends: "Taste the retribution of Hell.

8:51. "This is a consequence of what your hands have sent forth. God is never unjust towards the creatures."

8:52. This is the same fate as that of Pharaoh's people and those who disbelieved before them. They rejected God's revelations, and God punished them for their sins. God is powerful, and His retribution is severe.

8:53. God does not change a blessing He has bestowed upon any people unless they themselves decide to change. God is Hearer, Omniscient.

8:54. Such was the case with the people of Pharaoh and others before them. They first rejected the signs of their Lord. Consequently, we annihilated them for their sins. We drowned Pharaoh's people; the wicked were consistently punished.

8:55. The worst creatures in the sight of God are those who disbelieved; they cannot believe.

8:56. You reach agreements with them, but they violate their agreements every time; they are not righteous.

8:57. Therefore, if you encounter them in war, you shall set them up as a deterrent example for those who come after them, that they may take heed.

8:58. When you are betrayed by a group of people, you shall mobilize against them in the same manner. God does not love the betrayers.

8:59. Let not those who disbelieve think that they can get away with it; they can never escape.

8:60. You shall prepare for them all the power you can muster, and all the equipment you can mobilize, that you may frighten the enemies of God, your enemies, as well as others who are not known to you; God knows them. Whatever you spend in the cause of God will be repaid to you generously, without the least injustice.

8:61. If they resort to peace, so shall you, and put your trust in God. He is the Hearer, the Omniscient.

8:62. If they want to deceive you, then God will suffice you. He will help you with His support, and with the believers.

8:63. He has reconciled the hearts (of the believers). Had you spent all the money on earth, you could not reconcile their hearts. But God did reconcile them. He is Almighty, Most Wise.

8:64. O you prophet, sufficient for you is God and the believers who have followed you.

8:65. O you prophet, you shall exhort the believers to fight. If there are twenty of you who are steadfast, they can defeat two hundred, and a hundred of you can defeat a thousand of those who disbelieved. That is because they are people who do not understand.

8:66. Now (that many new people have joined you) God has made it easier for you, for He knows that you are not as strong as you used to be. Henceforth, a hundred steadfast believers can defeat two hundred, and a thousand of you can defeat two thousand by God's leave. God is with those who steadfastly persevere.

8:67. No prophet shall acquire captives, unless he participates in the fighting. You people are seeking the materials of this world, while God advocates the Hereafter. God is Almighty, Most Wise.

8:68. If it were not for a predetermined decree from God, you would have suffered, on account of what you took, a terrible retribution.

8:69. Therefore, eat from the spoils you have earned, that which is lawful and good, and observe God. God is Forgiver, Most Merciful.

8:70. O you prophet, tell the prisoners of war in your hands, "If God knew of anything good in your hearts, He would have given you better than anything you have lost, and would have forgiven you. God is Forgiver, Most Merciful."

8:71. And if they want to betray you, they have already betrayed God. This is why He made them the losers. God is Omniscient, Most Wise.

8:72. Surely, those who believed, and emigrated, and strove with their money and their lives in the cause of God, as well as those who hosted them and gave them refuge, and supported them, they are allies of one another. As for those who believe, but do not emigrate with you, you do not owe them any support, until they do emigrate. However, if they need your help, as brethren in faith, you shall help them, except against people with whom you have signed a peace treaty. God is Seer of everything you do.

8:73. Those who disbelieved are allies of one another. Unless you keep these commandments, there will be chaos on earth, and terrible corruption.

8:74. Those who believed and emigrated, and strove in the cause of God, as well as those who hosted them and gave them refuge, and supported them, these are the true believers. They have deserved forgiveness and a generous recompense.

8:75. Those who believed afterwards, and emigrated, and strove with you, they belong with you. Those who are related to each other shall be the first to support each other, in accordance with God's commandments. God is fully aware of all things.

போரில் கைப்பற்றிய பொருட்கள்

8:1. போரின் வெற்றிப் பொருட்களைப் பற்றி அவர்கள் உம்மிடம் ஆலோசிக்கின்றனர். கூறுவீராக, போரின் வெற்றிப் பொருட்கள் கடவுள் மற்றும் தூதருக்கு உரியவையாகும். "நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நீங்கள் கடவுள்-ஐக் கருத்தில் கொள்ளவும், நன்னெறியுடன் இருக்கும்படி ஒருவர் மற்றவரைத் தூண்டிக் கொள்ளவும், கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

8:2. உண்மையான நம்பிக்கையாளர்கள் எவர்களெனில், எவர்களுடைய இதயங்கள் கடவுள்-ஐக் குறிப்பிடும் போது நடுநடுங்கி விடுகின்றதோ, மேலும் அவருடைய வெளிப்பாடுகள் அவர்களுக்கு எடுத்துரைக் கப்படுகின்ற போது, அவர்களுடைய நம்பிக்கை வலுப்படுகின்றதோ, மேலும் தங்களுடைய இரட்சகரின் மீது பொறுப்பேற்படுத்துகின்றனரோ அவர்களேயாவர்.

8:3. அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்றனர், மேலும் அவர்களுக்குரிய நம்முடைய வாழ்வாதாரங்களில் இருந்து, அவர்கள் தர்மத்திற்கெனக் கொடுக்கின்றனர்.

8:4. இத்தகையவர்கள்தான் உண்மையான நம்பிக்கை யாளர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய இரட்சகரிடம் உயர் அந்தஸ்துகளையும், அவ்வண்ண மே மன்னிப்பு மற்றும் தாராளமானதொரு வாழ் வாதாரத்தையும் அடைகின்றனர்.

8:5. குறிப்பிட்டதொரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, உம்முடைய வீட்டை விட்டு நீர் வெளியேற உம்முடைய இரட்சகர் நாடிய பொழுது, சில நம்பிக்கையாளர்கள் தயக்கமுள்ள நம்பிக்கையாளர்களென வெளிப்படுத்தப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்.

8:6. ஒவ்வொன்றும் அவர்களுக்கு விவரிக்கப்பட்டு விட்ட பின்னரும் கூட, சத்தியத்திற்கெதிராக அவர்கள் உம்மிடம் வாதித்தனர். நிச்சயமாகி விட்ட மரணத்தின் பால் அவர்கள் செலுத்தப்படுபவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டனர்.

8:7. குறிப்பிட்டதொரு கூட்டத்தின் மீது கடவுள் உங்களுக்கு வெற்றியை வாக்களித்தார் என்பதை நினைவு கூர்ந்திடுங்கள், ஆனால் அவ்வாறிருந்தும் நீங்கள் பலவீனமான கூட்டத்தையே எதிர் கொள்ள விரும்பினீர்கள். தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலைநாட்டுவதும், நம்பமறுப்பவர்களைத் தோற்கடிப்பதும் கடவுள்-ன் திட்டமாக இருந்தது.

8:8. ஏனெனில் தீமை செய்பவர்கள் வெறுத்த போதிலும், சத்தியமானது மிகைத்திட வேண்டும், அத்துடன் பொய்மையானது ஒழிந்திட வேண்டும் என்று அவர் தீர்ப்பளித்துள்ளார்.

8:9. எனவே, காப்பாற்ற வருமாறு உங்களுடைய இரட்சகரை நீங்கள் இறைஞ்சிய போது, அவர் உங்களுக்கு பதிலளித்தார்: "ஒருவர் பின் ஒருவராக ஓராயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்"

8:10. உங்களுடைய இதயங்களை வலுப்படுத்துவதற்காக இந்த நற்செய்தியைக் கடவுள் உங்களுக்கு அளித்தார். வெற்றி கடவுள்-யிடமிருந்து மட்டுமே வருகின்றது. கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:11. அமைதி நிறைந்த தூக்கம் உங்களை ஆட்கொண்டு உங்களை சாந்தப்படுத்தும்படி அவர் செய்தார், மேலும் விண்ணில் இருந்து தண்ணீரை அவர் இறக்கி அனுப்பினார், அதன் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காக. சாத்தானின் சாபத்தில் இருந்து உங்களை அவர் பாதுகாத்தார், உங்களுடைய இதயங்களை மறு உறுதி செய்து உங்களுடைய நிலைகளைப் பலப்படுத்தினார்.

8:12. உம்முடைய இரட்சகர் வானவர்களுக்கு உள்ளுணர்வளித்ததை நினைவு கூர்ந்திடுங்கள்: "நான் உங்களுடன் இருக்கின்றேன்; எனவே நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆதரவளியுங்கள். நம்பமறுத்து விட்டவர்களின் இதயங்களுக்குள் நான் திகிலை எறிவேன். கழுத்துகளின் மேலே அவர்களை நீங்கள் தாக்கலாம், மேலும் ஒவ்வொரு விரலையும் கூட நீங்கள் தாக்கலாம்."

*8:12-16 போர்கள் அனைத்தும் (60:8-9)ல் உள்ள அடிப்படைச் சட்டத்தின்படி நெறிமுறைப்படுத்தப்படுகின்றன.

8:13. கடவுள் மற்றும் அவருடைய தூதருடன் சண்டையிடுவதன் மூலம் அவர்கள் நியாயமாக ஆட்பட்டது இதற்குத்தான். கடவுள் மற்றும் அவருடைய தூதருக் கெதிராகச் சண்டையிடுபவர்களுக்குக் கடவுள்-ன் தண்டனை கடுமையானதாகும்.

8:14. இது, நம்பமறுப்பவர்களைத் தண்டிப்பதற்கேயாகும்; அவர்கள் நரகத்தின் தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

8:15. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங்களுக்கெதிராக ஒன்று திரண்டு விட்ட நம்பமறுப்பவர்களை நீங்கள் எதிர்கொள்வீர்களாயின், புறங்காட்டித் திரும்பி விரண்டோடி விடாதீர்கள்.

8:16. ஒரு யுத்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவோ அல்லது தன்னுடைய குழுமத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோ தவிர, எவரேனும் அந்நாளில் புறங்காட்டித் திரும்பி விட்டால், கடவுள்-யிடமிருந்து கடுங்கோபத்திற்கு உள்ளாகி விட்டார், மேலும் அவருடைய தங்குமிடம் நரகமேயாகும்; என்ன ஒரு துன்பகரமான விதி!

*8:12-16 போர்கள் அனைத்தும் (60:8-9)ல் உள்ள அடிப்படைச் சட்டத்தின்படி நெறிமுறைப்படுத்தப்படுகின்றன.

8:17. அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் அல்லர்; கடவுள் தான் அவர்களைக் கொன்றவர். நீர் எறிந்த போது எறிந்தவர் நீர் அல்லர்; எறிந்தவர் கடவுள்-யே ஆவார். ஆனால் அவர் இவ்விதமாக ஏராளமானதொரு வரவுதனைச் சம்பாதிப்பதற்கு நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கின்றார். கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

*8:17 கடவுள் மீது நம்பிக்கை கொள்ளுதல் அவருடைய தன்மைகளை நம்புதலை அவசியமாக்குகின்றது, அவற்றில் ஒன்று எல்லாவற்றையும் அவர் செய்கின்றார் என்பதாகும். கடவுளை அறிந்து கொள்ளாமல், அங்கு நம்பிக்கை இல்லை (23:84-90). கெட்ட விஷயங்களானவை கடவுளின் விதிகளுக்கேற்ப, நம்மாலேயே அடைந்து கொள்ளப்படுகின்றன, மேலும் சாத்தானால் நிறைவேற்றப்படுகின்றன (4:78-79, 42:30).

8:18. கூடுதலாக, கடவுள் இவ்விதமாக நம்பமறுப்பவர்களின் சூழ்ச்சிகளைப் பயனற்றதாக்கி விடுகின்றார்.

8:19. (நம்பமறுப்பவர்களே), நீங்கள் வெற்றியைத் தேடினீர்கள், மேலும் வெற்றியும் வரவே செய்தது; அது நம்பிக்கையாளர்களுக்கு உரியதாக இருந்தது. (வலுச்சண்டையில் இருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களாயின் அது உங்களுக்கு மேலானதாக இருக்கும், ஆனால் நீங்கள் திரும்புவீர்களாயின், நாமும் அவ்வாறே செய்வோம். உங்களுடைய இராணுவங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவிடாது, எவ்வளவு பெரியதென்பது பொருட்டல்ல. ஏனெனில் நம்பிக்கையாளர்களின் பக்கம் கடவுள் இருக்கின்றார்.

8:20. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியுங்கள், மேலும் நீங்கள் செவியேற்றுக் கொண்டிருக்கின்ற அதே சமயம் அவரை அலட்சியம் செய்திடாதீர்கள்.

8:21. அவர்கள் செவியேற்காதபோதே, "நாங்கள் செவியேற்கின்றோம்," என்று கூறுபவர்களைப் போல் இருக்காதீர்கள்.

8:22. கடவுள்-ன் பார்வையில் மோசமான படைப்பினங்கள், புரிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமையர்களுமேயாவார்.

8:23. அவர்களிடம் எந்த நன்மையையேனும் கடவுள் அறிந்திருப்பாராயின், செவியேற்கக்கூடியவர்களாக அவர்களை அவர் ஆக்கியிருப்பார். செவியேற்கக் கூடியவர்களாக அவர்களை அவர் ஆக்கியிருந்தாலும், அப்போதும் அவர்கள் வெறுப்பில் திரும்பிச் சென்றிருப்பார்கள்.

8:24. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்களுக்கு வாழ்வளிக்கக்* கூடியவற்றின் பால் அவர் உங்களை அழைக்கின்ற பொழுது நீங்கள் கடவுள்-க்கும் தூதருக்கும், மறுமொழியளிக்க வேண்டும். உங்களுடைய இதயத்தை விடவும் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராகக் கடவுள் இருக்கின்றார் என்பதையும், அவர் முன்னர் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

*8:24 பார்க்க பின் இணைப்பு 17. நன்னெறியாளர்கள் தங்களுடைய உடல்களிலிருந்து வெளியேறுகையில், அவர்கள் நேரடியாகச் சுவனத்திற்குச் செல்கின்றார்கள்.

8:25. உங்களில் உள்ள தீமைபுரிவோருக்கென வரையறுக்கப்படாமல் இருக்கக் கூடியதொரு தண்டனை குறித்து எச்சரிக்கையுடனிருங்கள்.* கடவுள்-ன் தண்டனை கடுமையானதாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

*8:25 உதாரணத்திற்கு, ஓரினச் சேர்க்கையை சகித்துக் கொள்கின்ற ஒரு சமுதாயம், நில அதிர்வு ஒன்றால் தாக்கப்படக் கூடும்.

8:26. மக்கள் உங்களை வாரிச் சென்று விடக்கூடும் என்று அஞ்சியவர்களாக, மிகச்சிலராகவும் அடக்குமுறைக் குள்ளானவர்களாகவும் நீங்கள் இருந்து வந்தீர்கள், மேலும் அவர் பாதுகாப்பானதொரு புகலிடத்தை உங்களுக்கு அளித்தார், தன்னுடைய வெற்றியைக் கொண்டு உங்களுக்கு ஆதரவளித்தார், மேலும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, நல்ல வாழ்வாதாரங்களை உங்களுக்கு வழங்கினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

8:27. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், இப்பொழுது நீங்கள் அறிந்தவர்களாக இருப்பதால், கடவுள் மற்றும் தூதருக்குத் துரோகமிழைக்காதீர்கள், மேலும் உங்களிடம் பொறுப்பை ஒப்படைப்பவர்களுக்கும் துரோகமிழைக்காதீர்கள்.

8:28. உங்களுடைய பணமும் உங்களுடைய பிள்ளைகளும் ஒரு சோதனையாகவே இருக்கின்றன என்பதையும், கடவுள் மகத்தானதொரு பிரதி பலனை வைத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

8:29. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நீங்கள் கடவுள் மீது பக்தியோடிருந்தால், அவர் உங்களுக்கு அறிவொளியூட்டுவார், உங்களுடைய பாவங்களை நீக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் எல்லையற்ற அருளைக் கொண்டிருக்கின்றார்.

8:30. உம்மை மட்டுப்படுத்துவதற்கோ, அல்லது உம்மைக் கொல்வதற்கோ, அல்லது நாடு கடத்துவதற்கோ நம்பமறுப்பவர்கள் திட்டமும் சூழ்ச்சியும் செய்கின்றனர். எவ்விதமாக அவர்கள் திட்டமும் சூழ்ச்சியும் செய்த போதிலும், கடவுள்-ம் அவ்வாறே செய்கின்றார். திட்டமிடுபவர்களில் சிறந்தவராகக் கடவுள் இருக்கின்றார்.

*8:30 கடவுள் தன்னுடைய இறுதி நபியான, முஹம்மதை அரேபியாவின் மிகவும் வலிமை வாய்ந்த குலத்திலிருந்து தேர்ந்தெடுத்தார். முஹம்மதைக் கொன்று விடுவதிலிருந்து-கடவுளின் அனுமதிப்படி-நம்பமறுப்பவர்களைத் தடுத்தவை குலச்சட்டங்களும் பாரம்பர்யப் பழக்க வழக்கங்களுமாகவே இருந்தன. அது போலவே, தன்னுடைய உடன்படிக்கைத் தூதரை அங்கே அவர் கொல்லப்பட்டிருக்கக் கூடிய, மத்தியக் கிழக்கில் இருந்து, கடவுளின் தூதுச் செய்தி செழித்து வளர்ந்து பூகோளத்தின் ஒவ்வொரு மூலையையும் அடையக்கூடிய, அமெரிக்காவிற்கு இடம்பெயரச் செய்வது கடவுளின் நாட்டமாக இருந்தது. இது கணிதரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: இந்த சூரா & வசன எண்கள்= 8+30=38=19x2.

8:31. நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் எடுத்துரைக்கப்படுகின்ற போது, அவர்கள் கூறுகின்றனர், நாங்கள் செவியேற்றுக் கொண்டோம். நாங்கள் விரும்பினால், இதே விஷயங்களை எங்களாலும் கூறியிருக்க இயலும். இவை கடந்த காலத்தில் இருந்துள்ள கட்டுக் கதைகள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை!

8:32. இவ்வாறு கூட அவர்கள் கூறினர், "எங்கள் இறைவா, இது மெய்யாகவே உம்மிடமிருந்துள்ள சத்தியமாக இருக்குமாயின், அப்போது விண்ணில் இருந்து பாறைகளை எங்கள் மேல் பொழிவீராக, அல்லது வலி நிறைந்ததொரு தண்டனையை எங்கள் மீது கொட்டுவீராக."

8:33. ஆயினும், நீர் அவர்கள் மத்தியில் இருக்கின்ற சமயம் கடவுள் அவர்களைத் தண்டிப்பதாக இல்லை; அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கையிலும் கடவுள் அவர்களைத் தண்டிப்பதாக இல்லை.

8:34. அவர்கள் புனிதப்பள்ளியின் காப்பாளர்களாக இல்லாத போதிலும், அதிலிருந்து மற்றவர்களை விரட்டுவதன் மூலமாக அவர்கள் கடவுள்-ன் தண்டனைக்குத் தகுதியாகி விட்டனர் அல்லவா? நன்னெறியாளர்களே அதனுடைய உண்மையான காப்பாளர்கள் ஆவர், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

8:35. அந்த ஆலயத்தில் (கஅபா) அவர்களுடைய (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளானது கேலித்தனமான ஒன்றாகவும், அத்துடன் மக்களை, (அவர்களை நெருக்கியடித்துத் தள்ளுவதன் மூலம் வெளியே) விரட்டுகின்ற ஓர் உபாயமாகவும் இருந்தது என்பதை விட அதிகம் எதுவுமில்லை. எனவே, உங்களுடைய நம்பமறுத்தலுக்குரிய தண்டனையால் துன்புறுங்கள்.

* 8:35 இஸ்லாமில் உள்ள மார்க்க அனுஷ்டானங்கள் அனைத்தும் ஆப்ரஹாம் rnமூலமாகவே நம்மிடம் வந்தன; குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட போது, "சரணடைதலில்" உள்ள அனைத்துச் சடங்குகளும் ஏற்கெனவே வழக்கத்தில் இருந்து வந்தன (21:73, 22:78)

8:36. நம்பமறுப்பவர்கள் கடவுள்-ன் பாதையிலிருந்து மற்றவர்களை விரட்டுவதற்காகத் தங்களுடைய பணத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவிடுவார்கள், பின்னர் அது அவர்களுக்குத் துக்கமாகவும் குற்றவுணர்வாகவும் மாறிவிடும். இறுதியாக, அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், அத்துடன் நம்ப மறுப்பவர்கள் அனைவரும் நரகத்திற்கு ஒன்று திரட்டப்படுவார்கள்.

*8:36 சவூதி அரேபியாவின், போலித் தெய்வ வழிபாடு செய்கின்ற சீர்கெட்டுப்போன இஸ்லாமின் தலைவர்கள், கடவுள் மற்றும் அவருடைய அற்புதத்தை எதிர்க்க வருடாவருடம் பெருந்தொகையிலான பணத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். உதாரணத்திற்கு பிரசித்தி பெற்ற லெபனீய பதிப்பகம் தார் அல் - இல்ம் லில் - மலாயீன் (இலட்சக்கணக்கானவர்களுக்குரிய அறிவு) "குர்ஆனுடைய அற்புதம்" என்பதன் அரபி வடிவத்தை 1983, மார்ச்சில் பிரசுரித்தனர், சவூதியினர் அனைத்துப் பிரதி களையும் வாங்கி அவற்றை அழித்து விட்டனர்.

8:37. கடவுள் நல்லவர்களில் இருந்து கெட்டவர்களைச் சலித்தெடுப்பார், பின்னர் கெட்டவர்களை ஒருவர் மேல் மற்றவராக அடுக்குவார், அனைவரும் ஒரே அடுக்கு, பின்னர் அதனை நரகத்தில் வீசி விடுவார். இத்தகையவர்களே நஷ்டவாளிகள் ஆவர்.

8:38. நம்பமறுத்துவிட்டவர்களிடம் சொல்வீராக: அவர்கள் நிறுத்திக்கொள்வார்களாயின், அவர்களுடைய கடந்த காலம் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். ஆனால் அவர்கள் திரும்புவார்களாயின், அவர்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஒப்பானவர்களைப் போல் அதே தலைவிதிக்கு அவர்கள் உள்ளாவார்கள்.

8:39. அடக்குமுறையைக் களைவதற்கும், கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்ட உங்களுடைய மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும். வலுச்சண்டையில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வார்களாயின், பின்னர் கடவுள் அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.

8:40. அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப்போது கடவுள் தான் உங்களுடைய இரட்சகராகவும் அதிபதியாகவும் இருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; மிகச்சிறந்த இரட்சகர் மற்றும் அதிபதி, மிகச் சிறந்த ஆதரவாளர்.

8:41. போரில் ஏதேனும் வெற்றிப் பொருட்களை நீங்கள் அடைந்தால், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், மற்றும் பயணத்தில் இருக்கின்ற அந்நியர்களுக்குக் கொடுக்கப்படுவதற்காக, ஐந்தில் ஒரு பாகம் கடவுள் மற்றும் தூதரைச் சென்றடைய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். கடவுள் மீதும் இரு படைகளும் மோதிக்கொண்ட நாளான, தீர்மானத்தின் நாள் அன்று நம் ஊழியருக்கு நாம் வெளிப்படுத்தியவற்றின் மீதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் இதனைச் செய்வீர்கள். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

8:42. பள்ளத்தாக்கின் இந்தப்பக்கத்தில் நீங்கள் இருந்த அதே சமயம், அந்தப் பக்கத்தில் அவர்கள் இருந்ததை நினைவு கூர்ந்திடுங்கள். அப்போது அவர்களுடைய கூடார வாகனம் தாழ்வான நிலத்திற்கு நகர்ந்து வர வேண்டியிருந்தது. நீங்கள் இந்த விதமாக அதனைத் திட்டமிட்டிருந்தால், உங்களால் அதனைச் செய்திருக்க இயலாது. ஆனால் கடவுள் முன்னரே தீர்மானிக்கப் பட்டு விட்ட ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க இருந்தார், அதன் மூலம் அழித்தொழிக்கப்பட விதிக்கப் பட்டிருந்தவர்கள் தெளிவானதொரு காரணத்திற்காக அழித்தொழிக்கப்பட்டனர், மேலும் காப்பாற்றப்பட விதிக்கப்பட்டிருந்தவர்கள் தெளிவானதொரு காரணத்திற்காகக் காப்பாற்றப்பட்டனர். கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:43. (முஹம்மதே) கடவுள் உம்முடைய கனவில் அவர்களை எண்ணிக்கையில் மிகச் சிலராகத் தோன்றும்படிச் செய்தார். மிகவும் ஏராளமானவர்களாக அவர்கள் தோன்றும்படி அவர் செய்திருந்தால், நீங்கள் தோற்றிருப்பீர்கள், அத்துடன் உங்களுக்கிடையிலேயே நீங்கள் தர்க்கித்துக் கொண்டு இருந்திருப்பீர்கள். ஆனால் கடவுள் அந்நிலையிலிருந்து காத்தார். உள்ளார்ந்த எண்ணங்களைப் பற்றி அறிந்தவராக அவர் இருக்கின்றார்.

8:44. அத்துடன் அந்த நேரம் வந்தவுடன் நீங்கள் அவர்களை எதிர்கொண்ட பொழுது, உங்களுடைய கண்களில் அவர்களை மிகச்சிலராகத் தோன்றுமாறு அவர் செய்தார், மேலும் அவ்வாறே அவர்களுடைய கண்களில் உங்களை மிகச்சிலராகத் தோன்றுமாறும் செய்தார். ஏனெனில் குறிப்பிட்டதொரு திட்டத்தைச் செய்து முடிக்கக் கடவுள் நாடினார். அனைத்துத் தீர்மானங்களும் கடவுள்-ஆல் செய்யப்படுகின்றன.

8:45. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், ஓர் இராணுவத்தினை நீங்கள் எதிர்கொள்ளும் போது, நீங்கள் உறுதியுடன் நிற்கவும் அத்துடன் கடவுள்-ஐ அடிக்கடி நினைவு கூர்ந்திடவும் வேண்டும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு.

8:46. நீங்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தோல்வியுற்று உங்களுடைய சக்தியைச் சிதறடித்து விடாதிருக்கும் பொருட்டு, உங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்ய வேண்டும். உறுதிப்பாட்டுடன் விடாமுயற்சி செய்வோருடன் கடவுள் இருக்கின்றார்.

8:47. அரைமனத்துடன், காட்டிக்கொள்வதற்காக மட்டும், தங்களுடைய வீடுகளை விட்டுக் கிளம்பி, உண்மையில் கடவுள்-ன் பாதையைப் பின்பற்றுவதிலிருந்து மற்றவர்களை ஊக்கமிழக்கச் செய்தவர்களைப் போன்று இருக்காதீர்கள். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றைப் பற்றியும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

8:48. அவர்களுடைய காரியங்களை சாத்தான் அவர்களுடைய கண்களுக்கு அழகுபடுத்தி விட்டான், மேலும் கூறினான், "இன்றைய தினம் எந்த மக்களாலும் உங்களைத் தோற்கடித்து விட இயலாது" அத்துடன் "உங்களுடன் சேர்ந்து நானும் சண்டையிடுவேன்." ஆனால் இரண்டு படைகளும் ஒன்றையொன்று எதிர் கொண்ட உடன், "நான் உங்களைக் கைவிடுகின்றேன். நீங்கள் பார்க்காதவற்றை நான் பார்க்கின்றேன். நான் கடவுள்-ஐக் குறித்து பயப்படுகின்றேன். கடவுள்-ன் தண்டனை அச்சுறுத்தக்கூடியதாகும்," எனக்கூறியவனாக, தன் குதிங்கால்கள் மீது புறங்காட்டித் திரும்பி விரண்டோடிவிட்டான்.

8:49. நயவஞ்சகர்களும் தங்களுடைய இதயங்களில் சந்தேகத்தைத் தாங்கியிருந்தவர்களும் கூறினார்கள், "இந்த மக்கள் அவர்களுடைய மார்க்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டவர்களாக இருக்கின்றனர்." ஆயினும், ஒருவர் கடவுள்-யிடம் தன்னுடைய பொறுப்பை ஒப்படைத்து வைப்பாராயின், பின்னர் கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:50. நம்பமறுத்துவிட்டவர்களை வானவர்கள் மரணத்தில் ஆழ்த்தும் போது உம்மால் அவர்களைப் பார்க்க மட்டும் இயன்றால்! அவர்கள் அவர்களுடைய முகங்களிலும் அவர்களுடைய விலாப்புறங்களிலும் அவர்களை அடிப்பார்கள்: "நரகத்தின் தண்டனையைச் சுவையுங்கள்.

8:51. "இது உங்களுடைய கரங்கள் முற்படுத்தி அனுப்பி வைத்தவற்றின் ஒரு விளைவேயாகும். படைப்பினங்களின் பால் கடவுள் ஒருபோதும் அநீதமானவர் அல்லர்."

8:52. இது ஃபேரோவின் சமூகத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னர் நம்பமறுத்துவிட்டவர்களுடைய அதே தலைவிதியாகும். கடவுள்-ன் வெளிப்பாடுகளை அவர்கள் ஏற்கமறுத்தனர், எனவே அவர்களுடைய பாவங்களுக்காகக் கடவுள் அவர்களைத் தண்டித்தார். கடவுள் சக்தி நிறைந்தவர், மேலும் அவருடைய தண்டனை கடுமையானதாகும்.

8:53. எந்த மக்கள் மீதும் அவர் அருளிய ஓர் ஆசீர்வாதத்தைத் தாங்களாகவே மாற்றிக் கொள்ள அவர்கள் முடிவெடுத்தாலேயன்றிக் கடவுள் மாற்றுவதில்லை. கடவுள் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:54. ஃபேரோவின் சமூகத்தார் மற்றும் அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களுடைய நிலையும் இத்தகையதாகவே இருந்தது. முதலில் அவர்கள் தங்களுடைய இரட்சகரின் அத்தாட்சிகளை ஏற்கமறுத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை நாம் அழித்தொழித்தோம். ஃபேரோவின் சமூகத்தாரை நாம் மூழ்கடித்தோம்; தீயவர்கள் எப்பொழுதும் தண்டிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.

8:55. நம்பமறுத்துவிட்டவர்கள்தான் கடவுள்-ன் பார்வையில் மோசமான படைப்பினங்களாக இருக்கின்றனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ள இயலாது.

8:56. அவர்களுடன் நீங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றீர்கள், ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்களுடைய ஒப்பந்தங்களை அவர்கள் மீறுகின்றனர்; அவர்கள் நன்னெறியாளர்கள் அல்லர்.

8:57. ஆகவே, போரில் அவர்களை நீங்கள் எதிர் கொள்வீர்களாயின், அவர்களுக்குப் பின்னால் வருபவர்களையும் அச்சுறுத்தித்தடுக்கின்றதொரு முன்னுதாரணமாக அவர்களை நீங்கள் அமைத்திட வேண்டும், அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு.

8:58. மக்களின் ஒரு கூட்டத்தாரால் நீங்கள் துரோக மிழைக்கப்படுகின்ற பொழுது, அவர்களுக்கெதிராக அதே விதமாக நீங்கள் ஒன்று திரளவேண்டும். துரோகமிழைப்பவர்களைக் கடவுள் விரும்புவதில்லை.

8:59. நம்பமறுப்பவர்களாகிய அவர்கள் அப்படியே தப்பிச் சென்று விடலாம் என்று நினைத்துக் கொள்ளாதிருக் கட்டும்; அவர்கள் ஒருபோதும் தப்பித்துக் கொள்ள இயலாது.

8:60. உங்களால் சேர்க்க இயன்ற அனைத்துச் சக்திகளையும், உங்களால் ஒன்று திரட்ட இயன்ற அனைத்துச் சாதனங்களையும், அவர்களுக்கெதிராக நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டும், அதனால் கடவுள்-ன் விரோதிகள், உங்களுடைய விரோதிகள், அவ்வண்ணமே நீங்கள் அறிந்திராத மற்றவர்களையும் நீங்கள் அச்சுறுத்தலாம் என்பதற்காக; கடவுள் அவர்களை அறிவார். கடவுள்-ன் நிமித்தம் நீங்கள் செலவிடுகின்ற எதுவாயினும், சிறிதளவும் அநீத மின்றி, தாராளமாக உங்களுக்குத் திருப்பிச் செலுத் தப்படும்.

8:61. அவர்கள் சமாதானத்தின்பால் தஞ்சமடைந்தால், நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும், மேலும் கடவுள் மீது உங்களுடைய பொறுப்பை வையுங்கள். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.

8:62. அவர்கள் உம்மை வஞ்சிக்க விரும்பினால், அப்போது கடவுள் உமக்குப் போதுமானவர், தன்னுடைய ஆதரவைக் கொண்டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் அவர் உமக்கு உதவியளிப்பார்.

8:63. (நம்பிக்கையாளர்களுடைய) இதயங்களை அவர் இணக்கப்படுத்தி விட்டார், பூமியின் மீதுள்ள அத்தனை பணத்தையும் நீர் செலவிட்டிருந்தாலும், அவர்களுடைய இதயங்களை இணக்கப்படுத்தியிருக்க உம்மால் இயலாது. ஆனால் கடவுள் அவர்களை இணக்கப்படுத்தவே செய்தார். அவர் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:64. நபியே உம்மைத்தான், கடவுள் உமக்குப் போதுமானவர், மேலும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்கள்.

8:65. நபியே உம்மைத்தான், சண்டையிடுவதற்கு நம்பிக்கையாளர்களை நீர் ஆர்வமூட்ட வேண்டும். உங்களில் உறுதிப்பாடுடைய இருபது நபர்கள் இருப்பார்களாயின், இருநூறு நபர்களை அவர்கள் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களில் ஒரு நூறு நபர்கள், நம்ப மறுத்து விட்டவர்களில் ஓராயிரம் நபர்களைத் தோற்கடிக்க இயலும். அது ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர் என்பதேயாகும்.

8:66. இப்போது (புதிய ஆட்கள் பலர் உங்களுடன்சேர்ந்து விட்டதனால்) கடவுள் இதனை உங்களுக்கு மிகவும் எளிதாக ஆக்கிவிட்டார், ஏனெனில் நீங்கள் முன்னிருந்தது போல் அவ்வளவு வலிமையானவர்களாக இல்லை என்பதை அவர் அறிந்திருக்கின்றார். இது முதற்கொண்டு, உறுதிப்பாடுடைய ஒரு நூறு நம்பிக்கையாளர்கள் இருநூறு நபர்களைத் தோற்கடிக்க இயலும், மேலும் உங்களில் ஓராயிரம் நபர்கள், கடவுள்-ன் அனுமதி கொண்டு இரண்டாயிரம் நபர்களைத் தோற்கடிக்க இயலும். உறுதிப்பாட்டோடு தொடர்ந்திருப்பவர்களுடன் கடவுள் இருக்கின்றார்.

8:67. எந்த நபியும், சண்டையில் அவர் கலந்து கொண்டாலேயன்றி, கைதிகளைக் கையகப்படுத்திக் கொள்ளாதிருக்க வேண்டும். மக்களாகிய நீங்கள் இந்த உலகத்தின் பொருட்களைத் தேடுகின்றீர்கள், அதே சமயம் கடவுள் மறுவுலகத்தைப் பரிந்துரைக்கின்றார். கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

8:68. கடவுள்-யிடமிருந்து முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு கட்டளை இல்லாதிருந்தால், நீங்கள் கையகப்படுத்திக் கொண்டதன் பொருட்டு பயங்கரமானதொரு தண்டனையில் நீங்கள் துன்புற்றிருப்பீர்கள்.

8:69. ஆகவே, நீங்கள் சம்பாதித்த போரின் வெற்றிப் பொருட்களில் அனுமதிக்கப்பட்டதும் நல்லதும் ஆனவற்றில் இருந்து உண்ணுங்கள், அத்துடன் கடவுள்-ஐக் கருத்தில் கொள்ளுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

8:70. நபியே உம்மைத்தான், உங்கள் வசம் உள்ள போர்க் கைதிகளிடம் கூறுவீராக, "உங்கள் இதயங்களில் ஏதேனும் நல்லதைக் கடவுள் அறிந்திருப்பாராயின், நீங்கள் இழந்து விட்ட எந்த ஒன்றையும் விட மேலானதை அவர் உங்களுக்குத் தந்திருப்பார், அத்துடன் உங்களை மன்னித்தும் இருப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்."

8:71. அன்றி அவர்கள் உமக்குத் துரோகமிழைக்க நாடினால், அவர்கள் ஏற்கெனவே கடவுள்-க்குத் துரோக மிழைத்து விட்டனர். இதனால்தான் அவர்களை நஷ்டவாளிகளாக அவர் ஆக்கினார். கடவுள் சர்வமும் அறிந்தவர். ஞானம் மிகுந்தவர்.

8:72. நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு, மேலும் புலம் பெயர்ந்து, அத்துடன் rnகடவுள்-ன் நிமித்தம் தங்களுடைய பணம் மற்றும் தங்களுடைய வாழ்வுகளால் பாடுபடுகின்றவர்களும், அவ்வண்ணமே அவர்களை உபசரித்து அடைக்கலம் தந்தவர்களும், அத்துடன் அவர்களுக்கு ஆதரவளித்தவர்களுமாகிய, அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகள் ஆவர். நம்பிக்கை கொண்டு, ஆனால் உங்களுடன் புலம் பெயராதவர்களைப் பொறுத்தவரை, அவர்களும் புலம் பெயர்கின்றவரை, அவர்களுக்கு எந்த ஆதரவும் தர நீங்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர். ஆயினும், உங்களுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டால், உங்கள் மார்க்க சகோதரர்கள் என்ற முறையில், நீங்கள் அவர்களுக்கு உதவ வேண்டும், நீங்கள் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளவர்களுக்கு எதிராகவே தவிர. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராகக் கடவுள் இருக்கின்றார்.

8:73. நம்பமறுத்தவர்கள் ஒருவர் மற்றொருவருக்குக் கூட்டாளிகளாக உள்ளனர். இந்தக் கட்டளைகளை நீங்கள் கடைப்பிடித்தாலேயன்றி, அங்கே பூமியில் கலவரமும் பயங்கரமான சீர்கேடுமே இருக்கும்.

8:74. நம்பிக்கை கொண்டு மேலும் புலம்பெயர்ந்தவர்கள், அத்துடன் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட்டவர்கள், மேலும் அவர்களை உபசரித்ததுடன் அவர்களுக்கு அடைக்கலமும் தந்தவர்கள், அன்றியும் அவர்களுக்கு ஆதரவளித்தவர்கள், இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்களாக உள்ளனர். அவர்கள் மன்னிப்பிற்கும் தாராளமானதொரு பிரதிபலனுக்கும் தகுதி பெற்றுவிட்டனர்.

8:75. அதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, மேலும் புலம் பெயர்ந்து அத்துடன் உங்களோடு பாடுபட்ட அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. கடவுள்-ன் கட் டளைகளின் பிரகாரம் ஒருவருக்கொருவர் உறவினராக இருப்பவர்கள்தான் ஒருவர் மற்றவருக்கு ஆதரவளிப்பதில் முதன்மையாக இருத்தல் வேண்டும். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.