Find
Chapter 76: Al-Insaan
76:0-31
31 verses Revelation order 98
سورة الإنسان

. ١:٧٦ هَل أَتىٰ عَلَى الإِنسٰنِ حينٌ مِنَ الدَّهرِ لَم يَكُن شَيـًٔا مَذكورًا

. ٢:٧٦ إِنّا خَلَقنَا الإِنسٰنَ مِن نُطفَةٍ أَمشاجٍ نَبتَليهِ فَجَعَلنٰهُ سَميعًا بَصيرًا

. ٣:٧٦ إِنّا هَدَينٰهُ السَّبيلَ إِمّا شاكِرًا وَإِمّا كَفورًا

. ٤:٧٦ إِنّا أَعتَدنا لِلكٰفِرينَ سَلٰسِلَا۟ وَأَغلٰلًا وَسَعيرًا

. ٥:٧٦ إِنَّ الأَبرارَ يَشرَبونَ مِن كَأسٍ كانَ مِزاجُها كافورًا

. ٦:٧٦ عَينًا يَشرَبُ بِها عِبادُ اللَّهِ يُفَجِّرونَها تَفجيرًا

. ٧:٧٦ يوفونَ بِالنَّذرِ وَيَخافونَ يَومًا كانَ شَرُّهُ مُستَطيرًا

. ٨:٧٦ وَيُطعِمونَ الطَّعامَ عَلىٰ حُبِّهِ مِسكينًا وَيَتيمًا وَأَسيرًا

. ٩:٧٦ إِنَّما نُطعِمُكُم لِوَجهِ اللَّهِ لا نُريدُ مِنكُم جَزاءً وَلا شُكورًا

. ١٠:٧٦ إِنّا نَخافُ مِن رَبِّنا يَومًا عَبوسًا قَمطَريرًا

. ١١:٧٦ فَوَقىٰهُمُ اللَّهُ شَرَّ ذٰلِكَ اليَومِ وَلَقّىٰهُم نَضرَةً وَسُرورًا

. ١٢:٧٦ وَجَزىٰهُم بِما صَبَروا جَنَّةً وَحَريرًا

. ١٣:٧٦ مُتَّكِـٔينَ فيها عَلَى الأَرائِكِ لا يَرَونَ فيها شَمسًا وَلا زَمهَريرًا

. ١٤:٧٦ وَدانِيَةً عَلَيهِم ظِلٰلُها وَذُلِّلَت قُطوفُها تَذليلًا

. ١٥:٧٦ وَيُطافُ عَلَيهِم بِـٔانِيَةٍ مِن فِضَّةٍ وَأَكوابٍ كانَت قَواريرا۠

. ١٦:٧٦ قَواريرَا۟ مِن فِضَّةٍ قَدَّروها تَقديرًا

. ١٧:٧٦ وَيُسقَونَ فيها كَأسًا كانَ مِزاجُها زَنجَبيلًا

. ١٨:٧٦ عَينًا فيها تُسَمّىٰ سَلسَبيلًا

. ١٩:٧٦ وَيَطوفُ عَلَيهِم وِلدٰنٌ مُخَلَّدونَ إِذا رَأَيتَهُم حَسِبتَهُم لُؤلُؤًا مَنثورًا

. ٢٠:٧٦ وَإِذا رَأَيتَ ثَمَّ رَأَيتَ نَعيمًا وَمُلكًا كَبيرًا

. ٢١:٧٦ عٰلِيَهُم ثِيابُ سُندُسٍ خُضرٌ وَإِستَبرَقٌ وَحُلّوا أَساوِرَ مِن فِضَّةٍ وَسَقىٰهُم رَبُّهُم شَرابًا طَهورًا

. ٢٢:٧٦ إِنَّ هٰذا كانَ لَكُم جَزاءً وَكانَ سَعيُكُم مَشكورًا

. ٢٣:٧٦ إِنّا نَحنُ نَزَّلنا عَلَيكَ القُرءانَ تَنزيلًا

. ٢٤:٧٦ فَاصبِر لِحُكمِ رَبِّكَ وَلا تُطِع مِنهُم ءاثِمًا أَو كَفورًا

. ٢٥:٧٦ وَاذكُرِ اسمَ رَبِّكَ بُكرَةً وَأَصيلًا

. ٢٦:٧٦ وَمِنَ الَّيلِ فَاسجُد لَهُ وَسَبِّحهُ لَيلًا طَويلًا

. ٢٧:٧٦ إِنَّ هٰؤُلاءِ يُحِبّونَ العاجِلَةَ وَيَذَرونَ وَراءَهُم يَومًا ثَقيلًا

. ٢٨:٧٦ نَحنُ خَلَقنٰهُم وَشَدَدنا أَسرَهُم وَإِذا شِئنا بَدَّلنا أَمثٰلَهُم تَبديلًا

. ٢٩:٧٦ إِنَّ هٰذِهِ تَذكِرَةٌ فَمَن شاءَ اتَّخَذَ إِلىٰ رَبِّهِ سَبيلًا

. ٣٠:٧٦ وَما تَشاءونَ إِلّا أَن يَشاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كانَ عَليمًا حَكيمًا

. ٣١:٧٦ يُدخِلُ مَن يَشاءُ فى رَحمَتِهِ وَالظّٰلِمينَ أَعَدَّ لَهُم عَذابًا أَليمًا

The Human

76:1. Is it not a fact that there was a time when the human being was nothing to be mentioned?

76:2. We created the human from a liquid mixture, from two parents, in order to test him. Thus, we made him a hearer and a seer.

76:3. We showed him the two paths, then, he is either appreciative, or unappreciative.

76:4. We prepared for the disbelievers chains, shackles, and a blazing Hell.

76:5. As for the virtuous, they will drink from cups spiced with nectar.

76:6. A spring that is reserved for God's servants; it will gush out as they will.

76:7. They fulfill their pledges, and reverence a day that is extremely difficult.

76:8. They donate their favorite food to the poor, the orphan, and the captive.

76:9. "We feed you for the sake of God; we expect no reward from you, nor thanks.

76:10. "We fear from our Lord a day that is full of misery and trouble."

76:11. Consequently, God protects them from the evils of that day, and rewards them with joy and contentment.

76:12. He rewards them for their steadfastness with Paradise, and silk.

76:13. They relax therein on luxurious furnishings. They suffer neither the heat of the sun, nor any cold.

76:14. The shade covers them therein, and the fruits are brought within reach.

76:15. They are served drinks in silver containers and cups that are translucent.

76:16. Translucent cups, though made of silver; they rightly deserved all this.

76:17. They enjoy drinks of delicious flavors.

76:18. From a spring therein known as "Salsabeel."

76:19. Serving them will be immortal servants. When you see them, they will look like scattered pearls.

76:20. Wherever you look, you will see bliss, and a wonderful dominion.

76:21. On them will be clothes of green velvet, satin, and silver ornaments. Their Lord will provide them with pure drinks.

76:22. This is the reward that awaits you, for your efforts have been appreciated.

76:23. We have revealed to you this Quran; a special revelation from us.

76:24. You shall steadfastly carry out your Lord's commandments, and do not obey any sinful disbeliever among them.

76:25. And commemorate the name of your Lord day and night.

76:26. During the night, fall prostrate before Him, and glorify Him many a long night.

76:27. These people are preoccupied with this fleeting life, while disregarding - just ahead of them - a heavy day.

76:28. We created them, and established them, and, whenever we will, we can substitute others in their place.

76:29. This is a reminder: whoever wills shall choose the path to his Lord.

76:30. Whatever you will is in accordance with God's will. God is Omniscient, Wise.

76:31. He admits whomever He wills into His mercy. As for the transgressors, He has prepared for them a painful retribution.

மனிதர்

76:1. குறிப்பிடப்படுவதற்கு என எந்த ஒன்றுமாக மானிடன் இல்லாதிருந்த ஒரு காலம் இருந்தது என்பது ஒரு நிதர்சனம் அல்லவா?

76:2. அவனைச் சோதனை செய்யும் பொருட்டு, பெற்றோர்கள் இருவருடைய, ஒரு திரவக் கலவையிலிருந்து மானிடனை நாம் படைத்தோம். இவ்வாறாக, செவியுறக் கூடியவனாகவும் பார்க்கக்கூடியவனாகவும் அவனை நாம் ஆக்கினோம்.

76:3. இரண்டு பாதைகளை அவனுக்கு நாம் காட்டினோம், பின்னர், அவன் நன்றியுடையவனாகவோ, அல்லது நன்றி கெட்டவனாகவோ இருக்கின்றான்.

76:4. நம்பமறுப்பவர்களுக்காகச் சங்கிலிகளையும், தளைகளையும், மேலும் கொழுந்து விட்டெரிகின்ற ஒரு நரகத்தையும் நாம் தயாரித்தோம்.

76:5. நற்குணங்களையுடையவர்களைப் பொறுத்த வரை, அமுதத்தைக் கொண்டு வாசனையூட்டப்பட்ட கோப்பைகளிலிருந்து அவர்கள் அருந்துவார்கள்.

76:6. கடவுள்-ன் ஊழியர்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற ஓர் ஊற்று; அவர்கள் நாடியவாறு அது பொங்கி எழும்.

76:7. அவர்கள் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுகின்றனர், மேலும் அதிகபட்ச சிரமமான அந்த ஒரு நாளை அஞ்சுகின்றனர்.

76:8. அவர்கள் தங்களுக்குப் பிரியமான உணவை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், மேலும் சிறைப்பிடிக்கப்பட்டோருக்கும் தானமளிக்கின்றனர்.

76:9. "கடவுள்-க்காகவே நாங்கள் உங்களுக்கு உணவளிக்கின்றோம்; உங்களிடமிருந்து எந்தக் கைம்மாறையோ அல்லது நன்றியையோ நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

76:10. "எங்கள் இரட்சகரிடமிருந்து துன்பமும் சங்கடமும் நிறைந்த அந்த நாளை நாங்கள் பயப்படுகின்றோம்."

76:11. அதன் விளைவாக, அந்ந நாளின் தீங்குகளிலிருந்து கடவுள் அவர்களைப் பாதுகாக்கின்றார், மேலும் இன்பத்தையும் திருப்தியையும் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக்கின்றார்.

76:12. அவர்களுடைய உறுதிப்பாட்டுக்காக சுவனத்தையும் பட்டையும் கொண்டு அவர்களுக்கு வெகுமதியளிக்கின்றார்.

76:13. அங்கே அவர்கள் ஆடம்பரமான ஆசனங்களின் மீது பொழுது போக்குவார்கள். அவர்கள் சூரியனின் வெப்பத்தையோ, அன்றி எந்த குளிரையோ அனுபவிக்க மாட்டார்கள்.

76:14. நிழல் அங்கே அவர்களை மூடிக்கொள்ளும், மேலும் பழங்கள் கைக்கெட்டும் தூரத்திற்குக் கொண்டு வரப்படும்.

76:15. ஒளி ஊடுருவுகின்ற வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் கோப்பைகளில் அவர்கள் பானங்கள் பரிமாறப்படுகின்றனர்.

76:16. வெள்ளியில் செய்யப்பட்ட போதிலும், ஒளி ஊடுருவுகின்ற கோப்பைகள்; இது அனைத்திற்கும் மிகச் சரியாகத் தகுதி பெற்று விட்டனர்.

76:17. மதுரமான சுவையூட்டப்பட்ட பானங்களை அவர்கள் மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.

76:18. அங்கே ஸல்ஸபீல் என்று அறியப்பட்ட ஓர் ஊற்றில் இருந்து.

76:19. அமரத்துவம் வாய்ந்த ஊழியர்கள் அவர்களுக்குப் பரிமாறுவார்கள். அவர்களை நீங்கள் காணும் போது, சிதறிய முத்துகளைப் போல் அவர்கள் தோன்றுவார்கள்.

76:20. நீங்கள் எங்கு நோக்கினாலும், பேரானந்தத்தையும், அற்புதமானதொரு சாம்ராஜ்யத்தையுமே நீங்கள் காண்பீர்கள்.

76:21. அவர்கள் மீது பச்சை வெல்வெட்டு மற்றும் பளபளக்கும் பட்டில் ஆன ஆடைகளும் மேலும் வெள்ளி ஆபரணங்களும் இருக்கும். அவர்களுடைய இரட்சகர் தூய்மையான பானங்களை அவர்களுக்கு வழங்குவார்.

76:22. இதுவே உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற வெகுமதியாகும், ஏனெனில் உங்களுடைய பிரயத்தனங்கள் பராட்டப்பட்டவையாக உள்ளன.

76:23. இந்தக் குர்ஆனை நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளோம்; நம்மிடமிருந்து தனிச்சிறப்பானதொரு வெளிப்பாடு.

76:24. உம்முடைய இரட்சகரின் கட்டளைகளை உறுதிப்பாட்டுடன் நீர் செயல்படுத்த வேண்டும், மேலும் அவர்களில் உள்ள பாவம் நிறைந்த நம்பமறுப்பவன் எவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.

76:25. மேலும் பகலும் இரவும் உம்முடைய இரட்சகரின் பெயரை நினைவு கூர்வீராக.

76:26. இரவுப் பொழுதுகளில், அவர் முன் சிரம் பணிந்து வீழ்வீராக, மேலும் பல நீண்டதோர் இரவு அவரைத் துதிப்பீராக.

76:27. இந்த மக்கள் விரைந்தோடும் இந்த வாழ்வில் மூழ்கி விட்டனர், அதே சமயம் - அவர்களுக்குச் சற்றே முன்னிருக்கின்ற - கனமானதொரு நாளை அலட்சியம் செய்கின்றனர்.

76:28. நாம் அவர்களைப் படைத்தோம், மேலும் அவர்களை ஸ்தாபித்தோம், மேலும், எப்பொழுது நாம் நாடினாலும், அவர்களுடைய இடத்தில் மற்றவர்களை மாற்றி அமைத்து விட நம்மால் இயலும்.

76:29. இது ஒரு நினைவூட்டலாகும்: நாடுகின்ற எவரும் தன் னுடைய இரட்சகரை நோக்கிய பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

76:30. நீங்கள் நாடுவது எதுவானாலும் கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவேயாகும். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானமுள்ளவர்.

76:31. தான் நாடுகின்ற எவரையும் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர் அனுமதிக்கின்றார். வரம்புமீறுபவர்களைப் பொறுத்தவரை, வலி நிறைந்ததொரு தண்டனையை அவர்களுக்காக அவர் தயாரித்துள்ளார்.