Find
Chapter 75: Al-Qeyaamah
75:0-40
40 verses Revelation order 31
سورة القيامة

. ١:٧٥ لا أُقسِمُ بِيَومِ القِيٰمَةِ

. ٢:٧٥ وَلا أُقسِمُ بِالنَّفسِ اللَّوّامَةِ

. ٣:٧٥ أَيَحسَبُ الإِنسٰنُ أَلَّن نَجمَعَ عِظامَهُ

. ٤:٧٥ بَلىٰ قٰدِرينَ عَلىٰ أَن نُسَوِّىَ بَنانَهُ

. ٥:٧٥ بَل يُريدُ الإِنسٰنُ لِيَفجُرَ أَمامَهُ

. ٦:٧٥ يَسـَٔلُ أَيّانَ يَومُ القِيٰمَةِ

. ٧:٧٥ فَإِذا بَرِقَ البَصَرُ

. ٨:٧٥ وَخَسَفَ القَمَرُ

. ٩:٧٥ وَجُمِعَ الشَّمسُ وَالقَمَرُ

. ١٠:٧٥ يَقولُ الإِنسٰنُ يَومَئِذٍ أَينَ المَفَرُّ

. ١١:٧٥ كَلّا لا وَزَرَ

. ١٢:٧٥ إِلىٰ رَبِّكَ يَومَئِذٍ المُستَقَرُّ

. ١٣:٧٥ يُنَبَّؤُا۟ الإِنسٰنُ يَومَئِذٍ بِما قَدَّمَ وَأَخَّرَ

. ١٤:٧٥ بَلِ الإِنسٰنُ عَلىٰ نَفسِهِ بَصيرَةٌ

. ١٥:٧٥ وَلَو أَلقىٰ مَعاذيرَهُ

. ١٦:٧٥ لا تُحَرِّك بِهِ لِسانَكَ لِتَعجَلَ بِهِ

. ١٧:٧٥ إِنَّ عَلَينا جَمعَهُ وَقُرءانَهُ

. ١٨:٧٥ فَإِذا قَرَأنٰهُ فَاتَّبِع قُرءانَهُ

. ١٩:٧٥ ثُمَّ إِنَّ عَلَينا بَيانَهُ

. ٢٠:٧٥ كَلّا بَل تُحِبّونَ العاجِلَةَ

. ٢١:٧٥ وَتَذَرونَ الـٔاخِرَةَ

. ٢٢:٧٥ وُجوهٌ يَومَئِذٍ ناضِرَةٌ

. ٢٣:٧٥ إِلىٰ رَبِّها ناظِرَةٌ

. ٢٤:٧٥ وَوُجوهٌ يَومَئِذٍ باسِرَةٌ

. ٢٥:٧٥ تَظُنُّ أَن يُفعَلَ بِها فاقِرَةٌ

. ٢٦:٧٥ كَلّا إِذا بَلَغَتِ التَّراقِىَ

. ٢٧:٧٥ وَقيلَ مَن راقٍ

. ٢٨:٧٥ وَظَنَّ أَنَّهُ الفِراقُ

. ٢٩:٧٥ وَالتَفَّتِ السّاقُ بِالسّاقِ

. ٣٠:٧٥ إِلىٰ رَبِّكَ يَومَئِذٍ المَساقُ

. ٣١:٧٥ فَلا صَدَّقَ وَلا صَلّىٰ

. ٣٢:٧٥ وَلٰكِن كَذَّبَ وَتَوَلّىٰ

. ٣٣:٧٥ ثُمَّ ذَهَبَ إِلىٰ أَهلِهِ يَتَمَطّىٰ

. ٣٤:٧٥ أَولىٰ لَكَ فَأَولىٰ

. ٣٥:٧٥ ثُمَّ أَولىٰ لَكَ فَأَولىٰ

. ٣٦:٧٥ أَيَحسَبُ الإِنسٰنُ أَن يُترَكَ سُدًى

. ٣٧:٧٥ أَلَم يَكُ نُطفَةً مِن مَنِىٍّ يُمنىٰ

. ٣٨:٧٥ ثُمَّ كانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّىٰ

. ٣٩:٧٥ فَجَعَلَ مِنهُ الزَّوجَينِ الذَّكَرَ وَالأُنثىٰ

. ٤٠:٧٥ أَلَيسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلىٰ أَن يُحـِۧىَ المَوتىٰ

Resurrection

75:1. I swear by the Day of Resurrection.

75:2. And I swear by the blaming soul.

75:3. Does the human being think that we will not reconstruct his bones?

75:4. Yes indeed; we are able to reconstruct his finger tip.

75:5. But the human being tends to believe only what he sees in front of him.

75:6. He doubts the Day of Resurrection!

75:7. Once the vision is sharpened.

75:8. And the moon is eclipsed.

75:9. And the sun and the moon crash into one another.

75:10. The human being will say on that day, "Where is the escape?"

75:11. Absolutely, there is no escape.

75:12. To your Lord, on that day, is the final destiny.

75:13. The human being will be informed, on that day, of everything he did to advance himself, and everything he did to regress himself.

75:14. The human being will be his own judge.

75:15. No excuses will be accepted.

75:16. Do not move your tongue to hasten it.

75:17. It is we who will collect it into Quran.

75:18. Once we recite it, you shall follow such a Quran.

75:19. Then it is we who will explain it.

75:20. Indeed, you love this fleeting life.

75:21. While disregarding the Hereafter.

75:22. Some faces, on that day, will be happy.

75:23. Looking at their Lord.

75:24. Other faces will be, on that day, miserable.

75:25. Expecting the worst.

75:26. Indeed, when (the soul) reaches the throat.

75:27. And it is ordered: "Let go!"

75:28. He knows it is the end.

75:29. Each leg will lay motionless next to the other leg.

75:30. To your Lord, on that day, is the summoning.

75:31. For he observed neither the charity, nor the contact prayers (Salat).

75:32. But he disbelieved and turned away.

75:33. With his family, he acted arrogantly.

75:34. You have deserved this.

75:35. Indeed, you have deserved this.

75:36. Does the human being think that he will go to nothing?

75:37. Was he not a drop of ejected semen?

75:38. Then He created an embryo out of it!

75:39. He made it into male or female!

75:40. Is He then unable to revive the dead?

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புதல்

75:1. உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

75:2. மேலும் பழிபோடுகின்ற ஆன்மாவின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

75:3. அவனுடைய எலும்புகளை நாம் மீண்டும் கட்டமைக்க மாட்டோம் என்று மானிடன் நினைக்கின்றானா?

75:4. ஆம், மெய்யாக; அவனுடைய விரல் நுனியையும் மீண்டும் கட்டமைக்கின்ற ஆற்றலுடையவர்களாக நாம் இருக்கின்றோம்.

75:5. ஆனால் மானிடனானவன் தன் முன்னால் அவன் காண்பவற்றை மட்டுமே நம்புகின்ற மனப்பாங்குடையவனாக இருக்கின்றான்.

75:6. உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளை அவன் சந்தேகிக்கின்றான்!

75:7. பார்வை கண்கூர்மையானவுடன்.

75:8. மேலும் சந்திரன் கிரகணமானவுடன்.

75:9. மேலும் சூரியனும் சந்திரனும் ஒன்று மற்றொன்றுடன் மோதியவுடன்.

75:10. அந்த நாளில் மானிடன் கூறுவான், "எங்கே தப்பிப்பது?"

75:11. நிச்சயமாக, தப்பித்தல் எதுவுமில்லை.

75:12. அந்நாளில், உம்முடைய இரட்சகரிடம்தான் இறுதி விதி உள்ளது.

75:13. அந்த நாளில், மானிடனானவன் தன்னை முற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும், மேலும் தன்னைப் பிற்படுத்திக் கொள்ள அவன் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் தெரியப்படுத்தப்படுவான்.

75:14. மானிடனானவன் தனக்கே நீதிபதியாக இருப்பான்.

75:15. மன்னிப்புக் கோரல் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

75:16. அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.

75:17. குர்ஆனாக அதனை ஒன்று சேர்க்கப்போவது நாம் தாம்.

75:18. அதனை நாம் ஓதிக்காட்டியவுடன், அந்தக் குர்ஆனை நீர் பின்பற்ற வேண்டும்.

75:19. பின்னர் அதனை நாமே விளக்குவோம்.

75:20. உண்மையில், விரைந்தோடும் இந்த வாழ்வை நீங்கள் நேசிக்கின்றீர்கள்.

75:21. அதே சமயம் மறுவுலகை அலட்சியம் செய்கின்றீர்கள்.

75:22. சில முகங்கள், அந்நாளில், மகிழ்ச்சியுடன் இருக்கும்.

75:23. தங்களுடைய இரட்சகரை நோக்கியவாறு.

75:24. மற்ற முகங்கள், அந்நாளில், துன்பகரமாக இருக்கும்.

75:25. மோசமானதை எதிர்பார்த்தவாறு.

75:26. உண்மையில், (ஆன்மாவானது) தொண்டையை அடையும் போது.

75:27. மேலும் அதற்கு உத்தரவிடப்படுகின்றது: "சென்று விடட்டும்!"

75:28. அதுதான் முடிவு என்பதை அவன் அறிவான்.

75:29. ஒரு காலானது மறு காலின் அருகே அசைவற்றுக் கிடக்கும்.

75:30. அந்நாளில், உம்முடைய இரட்சகரிடம்தான், ஒன்று திரட்டுதல் உள்ளது.

75:31. ஏனெனில், அவன் தர்மத்தையோ, அன்றி (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையோ கடைபிடிக்கவில்லை.

75:32. ஆனால் அவன் நம்பமறுத்தான், மேலும் திரும்பிச் சென்றான்.

75:33. தன்னுடைய குடும்பத்தாருடன், அவன் ஆணவமாக நடந்து கொண்டான்.

75:34. நீ இதற்கு தகுதியானவனாகி விட்டாய்.

75:35. மெய்யாகவே, நீ இதற்குத் தகுதியானவனாகி விட்டாய்.

75:36. மானிடனானவன் தான் ஒன்றுமேயில்லாமல் போய் விடுவோம் என்று நினைக்கின்றானா?

75:37. பீய்ச்சப்பட்ட விந்தின் ஒரு துளியாக அவன் இருக்க வில்லையா?

75:38. பின்னர் அவர் அதிலிருந்து ஒரு கருவை உருவாக்கினார்!

75:39. ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அதனை அவர் ஆக்கினார்!

75:40. பின்னர் அவர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் திறனற்று இருக்கின்றாரா?