Find
Chapter 77: Al-Mursalaat
77:0-50
50 verses Revelation order 33
سورة المرسلاة

. ١:٧٧ وَالمُرسَلٰتِ عُرفًا

. ٢:٧٧ فَالعٰصِفٰتِ عَصفًا

. ٣:٧٧ وَالنّٰشِرٰتِ نَشرًا

. ٤:٧٧ فَالفٰرِقٰتِ فَرقًا

. ٥:٧٧ فَالمُلقِيٰتِ ذِكرًا

. ٦:٧٧ عُذرًا أَو نُذرًا

. ٧:٧٧ إِنَّما توعَدونَ لَوٰقِعٌ

. ٨:٧٧ فَإِذَا النُّجومُ طُمِسَت

. ٩:٧٧ وَإِذَا السَّماءُ فُرِجَت

. ١٠:٧٧ وَإِذَا الجِبالُ نُسِفَت

. ١١:٧٧ وَإِذَا الرُّسُلُ أُقِّتَت

. ١٢:٧٧ لِأَىِّ يَومٍ أُجِّلَت

. ١٣:٧٧ لِيَومِ الفَصلِ

. ١٤:٧٧ وَما أَدرىٰكَ ما يَومُ الفَصلِ

. ١٥:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ١٦:٧٧ أَلَم نُهلِكِ الأَوَّلينَ

. ١٧:٧٧ ثُمَّ نُتبِعُهُمُ الـٔاخِرينَ

. ١٨:٧٧ كَذٰلِكَ نَفعَلُ بِالمُجرِمينَ

. ١٩:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٢٠:٧٧ أَلَم نَخلُقكُم مِن ماءٍ مَهينٍ

. ٢١:٧٧ فَجَعَلنٰهُ فى قَرارٍ مَكينٍ

. ٢٢:٧٧ إِلىٰ قَدَرٍ مَعلومٍ

. ٢٣:٧٧ فَقَدَرنا فَنِعمَ القٰدِرونَ

. ٢٤:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٢٥:٧٧ أَلَم نَجعَلِ الأَرضَ كِفاتًا

. ٢٦:٧٧ أَحياءً وَأَموٰتًا

. ٢٧:٧٧ وَجَعَلنا فيها رَوٰسِىَ شٰمِخٰتٍ وَأَسقَينٰكُم ماءً فُراتًا

. ٢٨:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٢٩:٧٧ انطَلِقوا إِلىٰ ما كُنتُم بِهِ تُكَذِّبونَ

. ٣٠:٧٧ انطَلِقوا إِلىٰ ظِلٍّ ذى ثَلٰثِ شُعَبٍ

. ٣١:٧٧ لا ظَليلٍ وَلا يُغنى مِنَ اللَّهَبِ

. ٣٢:٧٧ إِنَّها تَرمى بِشَرَرٍ كَالقَصرِ

. ٣٣:٧٧ كَأَنَّهُ جِمٰلَتٌ صُفرٌ

. ٣٤:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٣٥:٧٧ هٰذا يَومُ لا يَنطِقونَ

. ٣٦:٧٧ وَلا يُؤذَنُ لَهُم فَيَعتَذِرونَ

. ٣٧:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٣٨:٧٧ هٰذا يَومُ الفَصلِ جَمَعنٰكُم وَالأَوَّلينَ

. ٣٩:٧٧ فَإِن كانَ لَكُم كَيدٌ فَكيدونِ

. ٤٠:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٤١:٧٧ إِنَّ المُتَّقينَ فى ظِلٰلٍ وَعُيونٍ

. ٤٢:٧٧ وَفَوٰكِهَ مِمّا يَشتَهونَ

. ٤٣:٧٧ كُلوا وَاشرَبوا هَنيـًٔا بِما كُنتُم تَعمَلونَ

. ٤٤:٧٧ إِنّا كَذٰلِكَ نَجزِى المُحسِنينَ

. ٤٥:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٤٦:٧٧ كُلوا وَتَمَتَّعوا قَليلًا إِنَّكُم مُجرِمونَ

. ٤٧:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٤٨:٧٧ وَإِذا قيلَ لَهُمُ اركَعوا لا يَركَعونَ

. ٤٩:٧٧ وَيلٌ يَومَئِذٍ لِلمُكَذِّبينَ

. ٥٠:٧٧ فَبِأَىِّ حَديثٍ بَعدَهُ يُؤمِنونَ

Dispatched

77:1. (Angels) dispatched in succession.

77:2. To drive the wind.

77:3. Stir up clouds.

77:4. Distribute the provisions.

77:5. Deliver messages.

77:6. Good news, as well as warnings.

77:7. What is promised will come to pass.

77:8. Thus, when the stars are put out.

77:9. The sky is opened up.

77:10. The mountains are blown up.

77:11. The messengers are summoned.

77:12. That is the appointed day.

77:13. The Day of Decision.

77:14. What a Day of Decision!

77:15. Woe on that day to the rejectors.

77:16. Did we not annihilate the earlier generations?

77:17. Then we made others follow them?

77:18. This is what we do to the criminals.

77:19. Woe on that day to the rejectors.

77:20. Did we not create you from a lowly liquid?*

*77:20-23 According to Langman's Medical Embryology, by T. W. Sadler (Fifth Edition, Page 88): ``In general the length of pregnancy for a full term fetus is 266 days or 38 weeks after fertilization.'' Both 266 and 38 are multiples of 19 (Appendix 1).

77:21. Then we placed it in a well-protected repository.

77:22. For a specific period.

77:23. We measured it precisely.* We are the best designers.

*77:20-23 According to Langman's Medical Embryology, by T. W. Sadler (Fifth Edition, Page 88): ``In general the length of pregnancy for a full term fetus is 266 days or 38 weeks after fertilization.'' Both 266 and 38 are multiples of 19 (Appendix 1).

77:24. Woe on that day to the rejectors.

77:25. Did we not make the earth an abode?

77:26. For the living and the dead?

77:27. We placed on it high mountains, and provided you with fresh water to drink.

77:28. Woe on that day to the rejectors.

77:29. Go to what you used to disbelieve in.

77:30. Go to a shade of three different densities.

77:31. Yet, it provides neither coolness, nor protection from the heat.

77:32. It throws sparks as big as mansions.

77:33. As yellow as the color of camels.

77:34. Woe on that day to the rejectors.

77:35. That is the day they do not speak.

77:36. Nor are they given permission to apologize.

77:37. Woe on that day to the rejectors.

77:38. This is the Day of Decision. We have summoned you and the previous generations.

77:39. If you have any schemes, go ahead and scheme.

77:40. Woe on that day to the rejectors.

77:41. The righteous will enjoy shade and springs.

77:42. And fruits that they desire.

77:43. Eat and drink happily in return for your works.

77:44. We thus reward the virtuous.

77:45. Woe on that day to the rejectors.

77:46. Eat and enjoy temporarily; you are guilty.

77:47. Woe on that day to the rejectors.

77:48. When they are told, "Bow down," they do not bow down.

77:49. Woe on that day to the rejectors.

77:50. Which Hadith, other than this, do they uphold?

அனுப்பப்படுகின்றவர்கள்

77:1. தொடர்ந்து அனுப்பப்படுகின்ற (வானவர்கள்).

77:2. காற்றை ஓட்டுவதற்காக.

77:3. மேகங்களை எழுப்புவதற்காக.

77:4. வாழ்வாதாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக.

77:5. தூதுச் செய்திகளைச் சேர்ப்பிப்பதற்காக.

77:6. நற்செய்திகளை, அவ்வண்ணமே எச்சரிக்கைகளை.

77:7. வாக்களிக்கப்பட்டவை நிகழ்ந்தேறும்.

77:8. எனவே, நட்சத்திரங்கள் அணைக்கப்படும் போது.

77:9. வானமானது திறந்து விடப்படுகின்றது.

77:10. மலைகளானவை வெடித்துச் சிதறச் செய்யப்படுகின்றன.

77:11. தூதர்களானவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

77:12. அதுதான் நிர்ணயிக்கப்பட்ட நாளாகும்.

77:13. தீர்மானத்தின் நாள்.

77:14. எத்தகையதொரு தீர்மானத்தின் நாள்!

77:15. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:16. முந்திய தலைமுறையினரை நாம் அழித்தொழிக்கவில்லையா?

77:17. பின்னர் மற்றவர்கள் அவர்களைப் பின் தொடரும்படி நாம் செய்தோமல்லவா?

77:18. இதுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வது.

77:19. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

77:20. தாழ்ந்ததொரு திரவத்திலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?*

*77:20-23 T.W. சாட்லரின் லாங்மன்ஸ் மெடிக்கல் எம்ப்ரையாலஜி என்ற புத்தகத்தில் உள்ளபடி (ஐந்தாம் பதிப்பு, பக்கம் 88): பொதுவாக முழு வளர்ச்சியடைந்த ஒரு கருவுக்குரிய கர்ப்ப கால அளவு கருத்தரித்த பின்னர் 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள் ஆகும். 266 மற்றும் 38 ஆகிய இரண்டும் 19ன் பெருக்குத் தொகைகளாகும் (பின் இணைப்பு1).

77:21. பின்னர் அதனை நன்கு பாதுகாக்கப்பட்டதொரு பெட்டகத்தில் நாம் வைத்தோம்.

77:22. குறிப்பிட்டதொரு காலத்திற்கு.

77:23. மிகச்சரியாக நாம் அதனை அளவிட்டோம்.* வடிவமைப்பவர்களில் நாமே மிகச்சிறந்தவர்களாவோம்.

77:24. ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

77:25. ஒரு தங்குமிடமாக இந்தப் பூமியை நாம் ஆக்க வில்லையா?

77:26. வாழ்பவர்களுக்கும் மரணித்தவர்களுக்கும்?

77:27. உயர்ந்த மலைகளை அதன் மீது நாம் அமைத்தோம், மேலும் அருந்துவதற்காகப் புத்துணர்வூட்டுகின்ற தண்ணீரை வழங்கினோம்.

77:28. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:29. நீங்கள் நம்பமறுத்துக் கொண்டிருந்தவற்றை நோக்கிச் செல்லுங்கள்.

77:30. மூன்று வெவ்வேறு அடர்த்திகளைக் கொண்ட நிழலை நோக்கிச் செல்லுங்கள்.

77:31. ஆயினும், அது குளிர்ச்சியையோ, அன்றி வெப்பத்திலிருந்து பாதுகாப்பையோ அளிக்காது.

77:32. மாளிகைகளை ஒத்த பெரிய அளவு தீப்பொறிகளை அது எறியும்.

77:33. ஒட்டகங்களின் நிறத்தை ஒத்த மஞ்சள் வண்ணத்தில்.

77:34. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:35. அதுதான் அவர்கள் பேசாதிருக்கும் நாளாகும்.

77:36. அன்றி மன்னிப்புக் கோருவதற்கும் அவர்கள் அனுமதியளிக்கப்பட மாட்டார்கள்.

77:37. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:38. இதுதான் தீர்மானத்தின் நாளாகும். நாம் உங்களையும் முந்திய தலைமுறையினரையும் ஒன்று திரட்டியுள்ளோம்.

77:39. சூழ்ச்சிகள் ஏதேனும் உங்களிடம் இருக்குமாயின், தயங்காமல் சென்று சூழ்ச்சி செய்யுங்கள்.

77:40. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:41. நன்னெறியாளர்கள் நிழலையும் ஊற்றுகளையும் மகிழ்ந்து அனுபவிப்பார்கள்.

77:42. மேலும் அவர்கள் ஆசைப்படுகின்ற பழங்களை.

77:43. உங்களுடைய காரியங்களுக்குரிய பிரதிபலனாக மகிழ்வுடன் உண்ணுங்கள், மேலும் பருகுங்கள்.

77:44. நற்குணங்களையுடையவர்களுக்கு இவ்விதமாகவே நாம் வெகுமதியளிப்போம்.

77:45. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:46. தற்காலிகமாக உண்ணுங்கள், மேலும் சுகமனுவியுங்கள்; நீங்கள் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.

77:47. ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடு தான்.

77:48. குனிந்து வழிபடுங்கள், என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வழிபடுபவதில்லை.

77:49. ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

77:50. இதனை விடுத்து, வேறு எந்த ஹதீஸை, அவர்கள் ஆதரிக்கின்றனர்?