Find
Chapter 71: Noah
71:0-28
28 verses Revelation order 71
سورة نوح

. ١:٧١ إِنّا أَرسَلنا نوحًا إِلىٰ قَومِهِ أَن أَنذِر قَومَكَ مِن قَبلِ أَن يَأتِيَهُم عَذابٌ أَليمٌ

. ٢:٧١ قالَ يٰقَومِ إِنّى لَكُم نَذيرٌ مُبينٌ

. ٣:٧١ أَنِ اعبُدُوا اللَّهَ وَاتَّقوهُ وَأَطيعونِ

. ٤:٧١ يَغفِر لَكُم مِن ذُنوبِكُم وَيُؤَخِّركُم إِلىٰ أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذا جاءَ لا يُؤَخَّرُ لَو كُنتُم تَعلَمونَ

. ٥:٧١ قالَ رَبِّ إِنّى دَعَوتُ قَومى لَيلًا وَنَهارًا

. ٦:٧١ فَلَم يَزِدهُم دُعاءى إِلّا فِرارًا

. ٧:٧١ وَإِنّى كُلَّما دَعَوتُهُم لِتَغفِرَ لَهُم جَعَلوا أَصٰبِعَهُم فى ءاذانِهِم وَاستَغشَوا ثِيابَهُم وَأَصَرّوا وَاستَكبَرُوا استِكبارًا

. ٨:٧١ ثُمَّ إِنّى دَعَوتُهُم جِهارًا

. ٩:٧١ ثُمَّ إِنّى أَعلَنتُ لَهُم وَأَسرَرتُ لَهُم إِسرارًا

. ١٠:٧١ فَقُلتُ استَغفِروا رَبَّكُم إِنَّهُ كانَ غَفّارًا

. ١١:٧١ يُرسِلِ السَّماءَ عَلَيكُم مِدرارًا

. ١٢:٧١ وَيُمدِدكُم بِأَموٰلٍ وَبَنينَ وَيَجعَل لَكُم جَنّٰتٍ وَيَجعَل لَكُم أَنهٰرًا

. ١٣:٧١ ما لَكُم لا تَرجونَ لِلَّهِ وَقارًا

. ١٤:٧١ وَقَد خَلَقَكُم أَطوارًا

. ١٥:٧١ أَلَم تَرَوا كَيفَ خَلَقَ اللَّهُ سَبعَ سَمٰوٰتٍ طِباقًا

. ١٦:٧١ وَجَعَلَ القَمَرَ فيهِنَّ نورًا وَجَعَلَ الشَّمسَ سِراجًا

. ١٧:٧١ وَاللَّهُ أَنبَتَكُم مِنَ الأَرضِ نَباتًا

. ١٨:٧١ ثُمَّ يُعيدُكُم فيها وَيُخرِجُكُم إِخراجًا

. ١٩:٧١ وَاللَّهُ جَعَلَ لَكُمُ الأَرضَ بِساطًا

. ٢٠:٧١ لِتَسلُكوا مِنها سُبُلًا فِجاجًا

. ٢١:٧١ قالَ نوحٌ رَبِّ إِنَّهُم عَصَونى وَاتَّبَعوا مَن لَم يَزِدهُ مالُهُ وَوَلَدُهُ إِلّا خَسارًا

. ٢٢:٧١ وَمَكَروا مَكرًا كُبّارًا

. ٢٣:٧١ وَقالوا لا تَذَرُنَّ ءالِهَتَكُم وَلا تَذَرُنَّ وَدًّا وَلا سُواعًا وَلا يَغوثَ وَيَعوقَ وَنَسرًا

. ٢٤:٧١ وَقَد أَضَلّوا كَثيرًا وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا ضَلٰلًا

. ٢٥:٧١ مِمّا خَطيـٰٔتِهِم أُغرِقوا فَأُدخِلوا نارًا فَلَم يَجِدوا لَهُم مِن دونِ اللَّهِ أَنصارًا

. ٢٦:٧١ وَقالَ نوحٌ رَبِّ لا تَذَر عَلَى الأَرضِ مِنَ الكٰفِرينَ دَيّارًا

. ٢٧:٧١ إِنَّكَ إِن تَذَرهُم يُضِلّوا عِبادَكَ وَلا يَلِدوا إِلّا فاجِرًا كَفّارًا

. ٢٨:٧١ رَبِّ اغفِر لى وَلِوٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيتِىَ مُؤمِنًا وَلِلمُؤمِنينَ وَالمُؤمِنٰتِ وَلا تَزِدِ الظّٰلِمينَ إِلّا تَبارًا

Noah

71:1. We sent Noah to his people: "You shall warn your people before a painful retribution afflicts them."

71:2. He said, "O my people, I am a manifest warner to you.

71:3. "To alert you that you shall worship God, reverence Him, and obey me.

71:4. "He will then forgive you your sins and respite you for a predetermined period. Most assuredly, God's appointment can never be delayed, once it is due, if you only knew."

71:5. He said, "My Lord, I have invited my people night and day.

71:6. "But my invitation only increased their aversion.

71:7. "Whenever I invited them to be forgiven by You, they placed their fingers in their ears, covered themselves with their clothes, insisted, and turned arrogant.

71:8. "Then I invited them publicly.

71:9. "Then I proclaimed to them loudly, and I spoke to them privately.

71:10. "I said, `Implore your Lord for forgiveness; He is Forgiving.

71:11. " `He will then shower you generously with rain.

71:12. " `And provide you with money and children, and orchards, and streams.' "

71:13. Why should you not strive to reverence God?

71:14. He is the One who created you in stages.

71:15. Do you not realize that God created seven universes in layers?

71:16. He designed the moon therein to be a light, and placed the sun to be a lamp.

71:17. And God germinated you from the earth like plants.

71:18. Then He returns you into it, and He will surely bring you out.

71:19. God made the earth habitable for you.

71:20. That you may build roads therein.

71:21. Noah said, "My Lord, they disobeyed me, and followed those who were even more corrupted when blessed with money and children.

71:22. "They schemed terrible schemes.

71:23. "They said, `Do not abandon your gods. Do not abandon Wadd, Suwaa`, Yaghouth, Ya`ooq, and Nasr.'

71:24. "They misled many. Therefore, let the wicked plunge deeper into loss."

71:25. Because of their sins they were drowned and assigned to the hellfire. They found no helpers to protect them from God.

71:26. Noah also said, "My Lord, do not leave a single disbeliever on earth.

71:27. "For if you let them, they will only mislead your servants and give birth to nothing but wicked disbelievers.

71:28. "My Lord, forgive me and my parents, and anyone who enters my home as a believer, and all the believing men and women. But do not give the disbelievers anything but annihilation."

நோவா

71:1. நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் நாம் அனுப்பினோம்: "வலி நிறைந்ததொரு தண்டனை அவர்களை வருத்துவதற்கு முன்னர் உம்முடைய மக்களை நீர் எச்சரிக்க வேண்டும்."

71:2. அவர் கூறினார், என் சமூகத்தாரே, நான் உங்களுக்குத் தெளிவானதொரு எச்சரிப்பவனாக இருக்கின்றேன்.

71:3. "நீங்கள் கடவுள்-ஐ வழிபடவும், அவரிடம் பக்தியோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும் என்று உங்களை எச்சரிப்பதற்காக.

71:4. "அப்போது அவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்து விடுவார், மேலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு காலத்திற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பார். மிக நிச்சயமாக, கடவுள்-ன் நிர்ணயமானது, அதற்குரிய நேரம் வந்து விட்டவுடன், ஒருபோதும் தாமதிக்கப் பட இயலாது, நீங்கள் மட்டும் அறிந்திருந்தால்."

71:5. அவர் கூறினார், என் இரட்சகரே, இரவும் பகலும் என் சமூகத்தாரை நான் அழைத்து விட்டேன்.

71:6. "ஆனால் என்னுடைய அழைப்பு அவர்களுடைய வெறுப்பை அதிகரிக்க மட்டுமே செய்தது.

71:7. "உம்மால் மன்னிக்கப்படுவதற்காக அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம், அவர்கள் தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை வைத்துக் கொண்டனர், தங்களுடைய ஆடைகளினால் தங்களை மூடிக் கொண்டனர், பிடிவாதம் செய்தனர், மேலும் ஆணவம் கொண்டவர்களானார்கள்.

71:8. "பின்னர் அவர்களை நான் பகிரங்கமாக அழைத்தேன்.

71:9. "பின்னர் அவர்களுக்கு நான் உரக்கப் பிரகடனித்தேன். மேலும் அந்தரங்கமாகவும் நான் அவர்களிடம் பேசினேன்.

71:10. "நான் கூறினேன், ‘உங்கள் இரட்சகரிடம் பாவ மன்னிப்பிற்காக இறைஞ்சுங்கள்; அவர் மன்னிக்கின்றவர்.

71:11. "‘பின்னர் அவர் உங்கள் மீது தாராளமாக மழையைப் பொழிவார்.

71:12. "‘மேலும் பணத்தையும் பிள்ளைகளையும், மேலும் பழத் தோட்டங்களையும்,ஊற்றுகளையும் உங்களுக்கு வழங்குவார்."

71:13. நீங்கள் ஏன் கடவுள்-யிடம் பக்தியோடிருக்க முனையக்கூடாது?

71:14. அவர்தான் உங்களைப் பல கட்டங்களில் படைத்தவர்.

71:15. ஏழு பிரபஞ்சங்களைக் கடவுள் அடுக்கடுக்காகப் படைத்தார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?

71:16. அதிலே ஒரு வெளிச்சமாக இருப்பதற்காகச் சந்திரனை அவர் வடிவமைத்தார், மேலும் ஒரு விளக்காக இருப்பதற்காகச் சூரியனை அமைத்தார்.

71:17. மேலும் பூமியிலிருந்து செடிகளைப் போல் கடவுள் உங்களை முளைவிடச் செய்தார்.

71:18. பின்னர் அதற்குள்ளேயே உங்களை அவர் திருப்புகின்றார், மேலும் நிச்சயமாக அவர் உங்களை வெளியில் கொண்டு வருவார்.

71:19. பூமியைக் கடவுள் உங்களுக்கு வசிக்கத்தக்கதாக ஆக்கினார்.

71:20. அதிலே நீங்கள் சாலைகளை அமைத்துக் கொள்ளும் வண்ணம்.

71:21. நோவா கூறினார், "என் இரட்சகரே, அவர்கள் எனக்குக் கீழ்ப்படிய மறுத்தனர், மேலும் பணமும் பிள்ளைகளும் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்ட போது, இன்னும் அதிகமாகச் சீர்கெட்டுப் போனவர்களைப் பின் பற்றினர்.

71:22. "பயங்கரமான சூழ்ச்சிகளை அவர்கள் தீட்டினர்

71:23. "அவர்கள் கூறினர், ‘உங்களுடைய தெய்வங்களைக் கைவிட்டு விடாதீர்கள். வத், சுவாஆ, யாகூத், யாஊக், மற்றும் நஸ்ரைக் கைவிட்டு விடாதீர்கள்.’

71:24. "அவர்கள் ஏராளமானோரை வழிதவறச் செய்தனர். எனவே, தீயவர்களை ஆழமாக நஷ்டத்தில் மூழ்கடித்து விடுவீராக."

71:25. அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அவர்கள் மூழ்கடிக்கப்பட்டனர், மேலும் நரகநெருப்பிற்கென நியமிக்கப்பட்டனர். கடவுள்-யிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற உதவியாளர்கள் எவரையும் அவர்கள் காணவில்லை.

71:26. நோவா மேலும் கூறினார், "என் இரட்சகரே, பூமியில் ஒரே ஒரு நம்பமறுப்பவனைக் கூட விட்டு விடாதீர்.

71:27. "ஏனெனில், நீர் அவர்களை விட்டு வைத்தால், அவர்கள் உம்முடைய ஊழியர்களை வழிகெடுக்க மட்டுமே செய்வார்கள், மேலும் தீயோரான நம்பமறுப்பவர்களைத் தவிர வேறு எந்த ஒன்றையும் பெற்றெடுக்க மாட்டார்கள்.

71:28. "என் இரட்சகரே, என்னையும் என் பெற்றோரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொருவரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக. ஆனால் நம்பமறுப்பவர்களுக்கு அழிவைத் தவிர எந்த ஒன்றையும் தந்து விடாதீர்.”