Find
Chapter 70: Al-Ma'aarej
70:0-44
44 verses Revelation order 79
سورة المعارج

. ١:٧٠ سَأَلَ سائِلٌ بِعَذابٍ واقِعٍ

. ٢:٧٠ لِلكٰفِرينَ لَيسَ لَهُ دافِعٌ

. ٣:٧٠ مِنَ اللَّهِ ذِى المَعارِجِ

. ٤:٧٠ تَعرُجُ المَلٰئِكَةُ وَالرّوحُ إِلَيهِ فى يَومٍ كانَ مِقدارُهُ خَمسينَ أَلفَ سَنَةٍ

. ٥:٧٠ فَاصبِر صَبرًا جَميلًا

. ٦:٧٠ إِنَّهُم يَرَونَهُ بَعيدًا

. ٧:٧٠ وَنَرىٰهُ قَريبًا

. ٨:٧٠ يَومَ تَكونُ السَّماءُ كَالمُهلِ

. ٩:٧٠ وَتَكونُ الجِبالُ كَالعِهنِ

. ١٠:٧٠ وَلا يَسـَٔلُ حَميمٌ حَميمًا

. ١١:٧٠ يُبَصَّرونَهُم يَوَدُّ المُجرِمُ لَو يَفتَدى مِن عَذابِ يَومِئِذٍ بِبَنيهِ

. ١٢:٧٠ وَصٰحِبَتِهِ وَأَخيهِ

. ١٣:٧٠ وَفَصيلَتِهِ الَّتى تُـٔويهِ

. ١٤:٧٠ وَمَن فِى الأَرضِ جَميعًا ثُمَّ يُنجيهِ

. ١٥:٧٠ كَلّا إِنَّها لَظىٰ

. ١٦:٧٠ نَزّاعَةً لِلشَّوىٰ

. ١٧:٧٠ تَدعوا مَن أَدبَرَ وَتَوَلّىٰ

. ١٨:٧٠ وَجَمَعَ فَأَوعىٰ

. ١٩:٧٠ إِنَّ الإِنسٰنَ خُلِقَ هَلوعًا

. ٢٠:٧٠ إِذا مَسَّهُ الشَّرُّ جَزوعًا

. ٢١:٧٠ وَإِذا مَسَّهُ الخَيرُ مَنوعًا

. ٢٢:٧٠ إِلَّا المُصَلّينَ

. ٢٣:٧٠ الَّذينَ هُم عَلىٰ صَلاتِهِم دائِمونَ

. ٢٤:٧٠ وَالَّذينَ فى أَموٰلِهِم حَقٌّ مَعلومٌ

. ٢٥:٧٠ لِلسّائِلِ وَالمَحرومِ

. ٢٦:٧٠ وَالَّذينَ يُصَدِّقونَ بِيَومِ الدّينِ

. ٢٧:٧٠ وَالَّذينَ هُم مِن عَذابِ رَبِّهِم مُشفِقونَ

. ٢٨:٧٠ إِنَّ عَذابَ رَبِّهِم غَيرُ مَأمونٍ

. ٢٩:٧٠ وَالَّذينَ هُم لِفُروجِهِم حٰفِظونَ

. ٣٠:٧٠ إِلّا عَلىٰ أَزوٰجِهِم أَو ما مَلَكَت أَيمٰنُهُم فَإِنَّهُم غَيرُ مَلومينَ

. ٣١:٧٠ فَمَنِ ابتَغىٰ وَراءَ ذٰلِكَ فَأُولٰئِكَ هُمُ العادونَ

. ٣٢:٧٠ وَالَّذينَ هُم لِأَمٰنٰتِهِم وَعَهدِهِم رٰعونَ

. ٣٣:٧٠ وَالَّذينَ هُم بِشَهٰدٰتِهِم قائِمونَ

. ٣٤:٧٠ وَالَّذينَ هُم عَلىٰ صَلاتِهِم يُحافِظونَ

. ٣٥:٧٠ أُولٰئِكَ فى جَنّٰتٍ مُكرَمونَ

. ٣٦:٧٠ فَمالِ الَّذينَ كَفَروا قِبَلَكَ مُهطِعينَ

. ٣٧:٧٠ عَنِ اليَمينِ وَعَنِ الشِّمالِ عِزينَ

. ٣٨:٧٠ أَيَطمَعُ كُلُّ امرِئٍ مِنهُم أَن يُدخَلَ جَنَّةَ نَعيمٍ

. ٣٩:٧٠ كَلّا إِنّا خَلَقنٰهُم مِمّا يَعلَمونَ

. ٤٠:٧٠ فَلا أُقسِمُ بِرَبِّ المَشٰرِقِ وَالمَغٰرِبِ إِنّا لَقٰدِرونَ

. ٤١:٧٠ عَلىٰ أَن نُبَدِّلَ خَيرًا مِنهُم وَما نَحنُ بِمَسبوقينَ

. ٤٢:٧٠ فَذَرهُم يَخوضوا وَيَلعَبوا حَتّىٰ يُلٰقوا يَومَهُمُ الَّذى يوعَدونَ

. ٤٣:٧٠ يَومَ يَخرُجونَ مِنَ الأَجداثِ سِراعًا كَأَنَّهُم إِلىٰ نُصُبٍ يوفِضونَ

. ٤٤:٧٠ خٰشِعَةً أَبصٰرُهُم تَرهَقُهُم ذِلَّةٌ ذٰلِكَ اليَومُ الَّذى كانوا يوعَدونَ

The Heights

70:1. A questioner may question the inevitable retribution.

70:2. For the disbelievers, none can stop it.

70:3. From God; Possessor of the highest Height.

70:4. The angels, with their reports, climb to Him in a day that equals fifty thousand years.

70:5. Therefore, you shall resort to a gracious patience.

70:6. For they see it far away.

70:7. While we see it very close.

70:8. The day will come when the sky will be like molten rocks.

70:9. The mountains will be like fluffy wool.

70:10. No friend will care about his close friend.

70:11. When they see them, the guilty will wish he could give his own children as ransom, to spare him the retribution of that day.

70:12. Also his spouse, and his brother.

70:13. Even his whole tribe that raised him.

70:14. Even all the people on earth, if it would save him.

70:15. No; it is aflame.

70:16. Eager to burn.

70:17. It calls on those who turned away.

70:18. Those who hoarded and counted.

70:19. Indeed, the human being is anxious.

70:20. If touched by adversity, despondent.

70:21. If blessed by wealth, stingy.

70:22. Except for the worshipers.

70:23. Who always observe their contact prayers (Salat).

70:24. Part of their money is set aside.

70:25. For the poor and the needy.

70:26. They believe in the Day of Judgment.

70:27. They reverence their Lord's requital.

70:28. Their Lord's requital is not taken for granted.

70:29. They keep their chastity.

70:30. (They have relations) only with their spouses, or what is legally theirs -

70:31. anyone who transgresses these limits is a sinner.

70:32. And the believers keep their word; they are trustworthy.

70:33. Their testimony is truthful.

70:34. They consistently observe their contact prayers (Salat) on time.

70:35. They have deserved a position of honor in Paradise.

70:36. What is keeping those who disbelieved from joining you?

70:37. To the right, and to the left, they flee.

70:38. How can any of them expect to enter the blissful Paradise?

70:39. Never; we created them, and they know from what.

70:40. I solemnly swear by the Lord of the easts and the wests; we are able -

70:41. to substitute better people in your place; we can never be defeated.

70:42. Therefore, let them blunder and play, until they meet the day that is awaiting them.

70:43. That is the day they come out of the graves in a hurry, as if herded to the (sacrificial) altars.

70:44. With their eyes subdued, shame will cover them. That is the day that is awaiting them.

உயரங்கள்

70:1. வினா எழுப்புகின்ற ஒருவன் தவிர்த்து விட முடியாத அத்தண்டனையைப் பற்றி வினவக் கூடும்.

70:2. நம்பமறுப்பவர்களுக்கு, அதனைத் தடுத்து விடக் கூடியவர் எவருமில்லை.

70:3. கடவுள்-யிடமிருந்து; மிகவும் உயர்வான உயரத்தையுடையவர்.

70:4. வானவர்கள் தங்களுடைய அறிக்கைகளுடன், ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானதொரு நாளில் அவரிடம் மேலேறுகின்றனர்.

70:5. எனவே, அழகியதொரு பொறுமையை நீர் கைக் கொள்ள வேண்டும்.

70:6. ஏனெனில் அவர்கள் அதனை மிகத் தொலைவாகக் காண்கின்றனர்.

70:7. அதே சமயம் நாமோ அதனை மிக அருகில் காண்கின்றோம்.

70:8. வானமானது உருக்கப்பட்ட பாறைகளைப் போல ஆகிவிடும் அந்நாள் வரும்.

70:9. மலைகள் கம்பளிப் பொதி போல் ஆகி விடும்.

70:10. எந்த நண்பனும் தன் நெருங்கிய நண்பனைப் பற்றி அக்கறை கொள்ள மாட்டான்.

70:11. அவர்களை அவர்கள் காணும் பொழுது, குற்றவாளியானவன் அந்நாளின் தண்டனையிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்ள, தன் சொந்தப் பிள்ளைளைக் கூட ஈடாகக் கொடுத்து விட விரும்புவான்.

70:12. அத்துடன் தன்னுடைய வாழ்க்கைத் துணையையும், தன்னுடைய சகோதரனையும்.

70:13. அவனை வளர்த்தெடுத்த குலத்தினர் அனைவரையும் கூட.

70:14. அது அவனைக் காப்பாற்றுமானால், பூமியிலுள்ள அனைத்து மக்களையும் கூட.

70:15. அல்ல; அது கொழுந்து விட்டு எரிகின்றது.

70:16. கருக்குவதற்கு ஆர்வமாக.

70:17. திரும்பிச் சென்று விட்டவர்களை அது அழைக்கின்றது.

70:18. சேர்த்து வைத்துக் கொண்டும் எண்ணி வைத்துக் கொண்டும் இருந்தவர்களை.

70:19. உண்மையில், மானிடன் பதற்றமுடையவனாக இருக்கின்றான்.

70:20. துன்பத்தால் தீண்டப்பட்டால், விரக்தியடைந்தவனாகின்றான்.

70:21. வளம் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டால், கஞ்சத்தனம் கொண்டவனாகின்றான்.

70:22. வழிபடுபவர்களைத் தவிர.

70:23. அவர்கள் எப்பொழுதும், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பவர்கள்.

70:24. அவர்களுடைய பணத்தில் ஒரு பாகம் ஒதுக்கி வைக்கப்படுகின்றது.

70:25. ஏழைகள் மற்றும் தேவையுடையவர்களுக்காக.

70:26. தீர்ப்பு நாளின் மீது நம்பிக்கை அவர்கள் கொள்கின்றனர்.

70:27. தங்களுடைய இரட்சகரின் பழிதீர்த்தலை அஞ்சுபவர்கள்.

70:28. அவர்களுடைய இரட்சகரின் தண்டனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

70:29. அவர்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றுவார்கள்.

70:30. தங்களுடைய வாழ்க்கைத் துணைகளுடனோ, அல்லது சட்டபூர்வமாக அவர்களுக்குரியவர்களுடனோ மட்டுமே (அவர்கள் உறவு கொள்வார்கள் ) -

70:31. எவரொருவர் இந்த எல்லைகளுக்கப்பால் வரம்பு மீறுகின்றாரோ அவர் ஒரு பாவியாவார்.

70:32. மேலும் நம்பிக்கையாளர்கள் தங்களுடைய வாக்குறுதிகளைக் காப்பார்கள்; அவர்கள் நம்பகத்திற்குரியவர்களாக இருக்கின்றனர்.

70:33. அவர்களுடைய சாட்சியம் சத்தியம் நிறைந்ததாக உள்ளது.

70:34. அவர்கள் தங்களுடைய (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை, சரியான நேரத்தில் சீராகக் கடைப்பிடிக் கின்றனர்.

70:35. சுவனத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்துக்கு அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.

70:36. உங்களுடன் சேர்ந்து கொள்வதிலிருந்து நம்பமறுத்தவர்களைத் தடுப்பது எது?

70:37. வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அவர்கள் விரண்டோடுகின்றனர்.

70:38. பேரானந்தமயமான சுவனத்தில் நுழைவதை அவர்களில் எவரும் எவ்வாறு எதிர்பார்க்க இயலும்?

70:39. ஒருபோதுமில்லை; அவர்களை நாம் படைத்தோம், எதிலிருந்து என்பதை அவர்கள் அறிவார்கள்.

70:40. கிழக்குகள் மற்றும் மேற்குகளின் இரட்சகர் மீது நான் பவித்திரமான சத்தியமிடுகின்றேன்; நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கின்றோம் -

70:41. உங்களுடைய இடத்தில் மேலான மக்களை மாற்றியமைப்பதற்கு; நாம் ஒருபோதும் தோற்கடிக்கப் பட மாட்டோம்.

70:42. எனவே, அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்நாளை அவர்கள் சந்திக்கும் வரை, மூடத்தனமான தவறுகள் செய்யவும் விளையாடிக் கொண்டிருக்கவும் அவர்களை விட்டு விடும்.

70:43. (பலியிடும்) பீடங்களுக்கு ஓட்டி வரப்படுவதைப் போல, சமாதிகளிலிருந்து விரைவாக அவர்கள் வெளியில் வருகின்ற நாள் அதுவாகும்.

70:44. அவர்களுடைய கண்கள் பணிந்தவையாக, இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அதுதான் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அந்நாளாகும்.