Find
Chapter 69: Al-Haaqqah
69:0-52
52 verses Revelation order 78
سورة الحاقة

. ١:٦٩ الحاقَّةُ

. ٢:٦٩ مَا الحاقَّةُ

. ٣:٦٩ وَما أَدرىٰكَ مَا الحاقَّةُ

. ٤:٦٩ كَذَّبَت ثَمودُ وَعادٌ بِالقارِعَةِ

. ٥:٦٩ فَأَمّا ثَمودُ فَأُهلِكوا بِالطّاغِيَةِ

. ٦:٦٩ وَأَمّا عادٌ فَأُهلِكوا بِريحٍ صَرصَرٍ عاتِيَةٍ

. ٧:٦٩ سَخَّرَها عَلَيهِم سَبعَ لَيالٍ وَثَمٰنِيَةَ أَيّامٍ حُسومًا فَتَرَى القَومَ فيها صَرعىٰ كَأَنَّهُم أَعجازُ نَخلٍ خاوِيَةٍ

. ٨:٦٩ فَهَل تَرىٰ لَهُم مِن باقِيَةٍ

. ٩:٦٩ وَجاءَ فِرعَونُ وَمَن قَبلَهُ وَالمُؤتَفِكٰتُ بِالخاطِئَةِ

. ١٠:٦٩ فَعَصَوا رَسولَ رَبِّهِم فَأَخَذَهُم أَخذَةً رابِيَةً

. ١١:٦٩ إِنّا لَمّا طَغَا الماءُ حَمَلنٰكُم فِى الجارِيَةِ

. ١٢:٦٩ لِنَجعَلَها لَكُم تَذكِرَةً وَتَعِيَها أُذُنٌ وٰعِيَةٌ

. ١٣:٦٩ فَإِذا نُفِخَ فِى الصّورِ نَفخَةٌ وٰحِدَةٌ

. ١٤:٦٩ وَحُمِلَتِ الأَرضُ وَالجِبالُ فَدُكَّتا دَكَّةً وٰحِدَةً

. ١٥:٦٩ فَيَومَئِذٍ وَقَعَتِ الواقِعَةُ

. ١٦:٦٩ وَانشَقَّتِ السَّماءُ فَهِىَ يَومَئِذٍ واهِيَةٌ

. ١٧:٦٩ وَالمَلَكُ عَلىٰ أَرجائِها وَيَحمِلُ عَرشَ رَبِّكَ فَوقَهُم يَومَئِذٍ ثَمٰنِيَةٌ

. ١٨:٦٩ يَومَئِذٍ تُعرَضونَ لا تَخفىٰ مِنكُم خافِيَةٌ

. ١٩:٦٩ فَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ بِيَمينِهِ فَيَقولُ هاؤُمُ اقرَءوا كِتٰبِيَه

. ٢٠:٦٩ إِنّى ظَنَنتُ أَنّى مُلٰقٍ حِسابِيَه

. ٢١:٦٩ فَهُوَ فى عيشَةٍ راضِيَةٍ

. ٢٢:٦٩ فى جَنَّةٍ عالِيَةٍ

. ٢٣:٦٩ قُطوفُها دانِيَةٌ

. ٢٤:٦٩ كُلوا وَاشرَبوا هَنيـًٔا بِما أَسلَفتُم فِى الأَيّامِ الخالِيَةِ

. ٢٥:٦٩ وَأَمّا مَن أوتِىَ كِتٰبَهُ بِشِمالِهِ فَيَقولُ يٰلَيتَنى لَم أوتَ كِتٰبِيَه

. ٢٦:٦٩ وَلَم أَدرِ ما حِسابِيَه

. ٢٧:٦٩ يٰلَيتَها كانَتِ القاضِيَةَ

. ٢٨:٦٩ ما أَغنىٰ عَنّى مالِيَه

. ٢٩:٦٩ هَلَكَ عَنّى سُلطٰنِيَه

. ٣٠:٦٩ خُذوهُ فَغُلّوهُ

. ٣١:٦٩ ثُمَّ الجَحيمَ صَلّوهُ

. ٣٢:٦٩ ثُمَّ فى سِلسِلَةٍ ذَرعُها سَبعونَ ذِراعًا فَاسلُكوهُ

. ٣٣:٦٩ إِنَّهُ كانَ لا يُؤمِنُ بِاللَّهِ العَظيمِ

. ٣٤:٦٩ وَلا يَحُضُّ عَلىٰ طَعامِ المِسكينِ

. ٣٥:٦٩ فَلَيسَ لَهُ اليَومَ هٰهُنا حَميمٌ

. ٣٦:٦٩ وَلا طَعامٌ إِلّا مِن غِسلينٍ

. ٣٧:٦٩ لا يَأكُلُهُ إِلَّا الخٰطِـٔونَ

. ٣٨:٦٩ فَلا أُقسِمُ بِما تُبصِرونَ

. ٣٩:٦٩ وَما لا تُبصِرونَ

. ٤٠:٦٩ إِنَّهُ لَقَولُ رَسولٍ كَريمٍ

. ٤١:٦٩ وَما هُوَ بِقَولِ شاعِرٍ قَليلًا ما تُؤمِنونَ

. ٤٢:٦٩ وَلا بِقَولِ كاهِنٍ قَليلًا ما تَذَكَّرونَ

. ٤٣:٦٩ تَنزيلٌ مِن رَبِّ العٰلَمينَ

. ٤٤:٦٩ وَلَو تَقَوَّلَ عَلَينا بَعضَ الأَقاويلِ

. ٤٥:٦٩ لَأَخَذنا مِنهُ بِاليَمينِ

. ٤٦:٦٩ ثُمَّ لَقَطَعنا مِنهُ الوَتينَ

. ٤٧:٦٩ فَما مِنكُم مِن أَحَدٍ عَنهُ حٰجِزينَ

. ٤٨:٦٩ وَإِنَّهُ لَتَذكِرَةٌ لِلمُتَّقينَ

. ٤٩:٦٩ وَإِنّا لَنَعلَمُ أَنَّ مِنكُم مُكَذِّبينَ

. ٥٠:٦٩ وَإِنَّهُ لَحَسرَةٌ عَلَى الكٰفِرينَ

. ٥١:٦٩ وَإِنَّهُ لَحَقُّ اليَقينِ

. ٥٢:٦٩ فَسَبِّح بِاسمِ رَبِّكَ العَظيمِ

Incontestable

69:1. The incontestable (event).

69:2. What an incontestable (event)!

69:3. It is truly incontestable.

69:4. Thamoud and `Ãd disbelieved in the Shocker.

69:5. As for Thamoud, they were annihilated by the devastating (quake).

69:6. As for `Ãd, they were annihilated by a persistent, violent storm.

69:7. He unleashed it upon them for seven nights and eight days, violently. You could see the people tossed around like decayed palm trunks.

69:8. Can you find any trace of them?

69:9. Pharaoh, others before him, and the sinners (of Sodom) were wicked.

69:10. They disobeyed the messenger of their Lord. Consequently, He requited them a devastating requital.

69:11. The flood was devastating, so we carried you on the floating (ark).

69:12. We rendered it a lesson for you, that any listening ear may understand.

69:13. When the horn is blown once.

69:14. The earth and the mountains will be carried off and crushed; utterly crushed.

69:15. That is the day when the inevitable event will come to pass.

69:16. The heaven will crack, and fall apart.

69:17. The angels will be all around, and Your Lord's dominion will then encompass eight (universes).*

*69:17 This earth is full of misery because of its physical distance from God, since it is in the seventh universe (7:143). In the Hereafter, an eighth universe will be created that will be even farther than our seventh universe; it will be called ``Hell'' (89:23).

69:18. On that day, you will be exposed, nothing of you can be hidden.

69:19. As for the one who receives his record with his right hand, he will say, "Come read my record.

69:20. "I did believe that I was going to be held accountable."

69:21. He has deserved a happy life.

69:22. In an exalted Paradise.

69:23. Its fruits are within reach.

69:24. Eat and drink happily in return for your works in days past.

69:25. As for him who is given his record in his left hand, he will say, "Oh, I wish I never received my record.

69:26. "I wish I never knew my account.

69:27. "I wish my death was eternal.

69:28. "My money cannot help me.

69:29. "All my power is gone."

69:30. Take him and shackle him.

69:31. Burn him in Hell.

69:32. In a chain that is seventy arms long, tie him up.

69:33. For he did not believe in God, Most Great.

69:34. Nor did he advocate the feeding of the poor.

69:35. Consequently, he has no friend here.

69:36. Nor any food, except the bitter variety.

69:37. Food for the sinners.

69:38. I swear by what you see.

69:39. And what you do not see.

69:40. This is the utterance of an honorable messenger.

69:41. Not the utterance of a poet; rarely do you believe.

69:42. Nor the utterance of a soothsayer; rarely do you take heed.

69:43. A revelation from the Lord of the universe.

69:44. Had he uttered any other teachings.

69:45. We would have punished him.

69:46. We would have stopped the revelations to him.

69:47. None of you could have helped him.

69:48. This is a reminder for the righteous.

69:49. We know; some of you are rejectors.

69:50. It is but sorrow for the disbelievers.

69:51. It is the absolute truth.

69:52. Therefore, you shall glorify the name of your Lord, Most Great.

மறுக்க இயலாதது

69:1. எதிர்க்க இயலாததான (நிகழ்வு).

69:2. எத்தகையதொரு எதிர்க்க இயலாததான (நிகழ்வு)!

69:3. மெய்யாகவே அது எதிர்க்க இயலாதது.

69:4. தமூது மற்றும் ஆத் அதிர்ச்சியூட்டுவதை நம்ப மறுத்தனர்.

69:5. தமூதைப் பொறுத்தவரை, (நில அதிர்வெனும்) பேரழிவால் அவர்கள் அழிக்கப்பட்டனர்.

69:6. ஆதைப் பொறுத்த வரை, தொடர்ந்திருந்ததொரு, உக்கிரமான புயலால் அழிக்கப்பட்டனர்.

69:7. ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும், உக்கிரமாக அவர்கள் மீது அவர் அதனைக் கட்டவிழ்த்து விட்டார். உலுத்துப் போன பனைமரத்தண்டுகளைப் போல சுற்றிலும் வீசியெறியப்படுகின்றவர்களாக மக்களை நீர் கண்டிருப்பீர்.

69:8. அவர்களுடைய சுவடுகளில் எதையேனும் நீர் காண முடிகின்றதா?

69:9. ஃபேரோ, அவனுக்கு முந்தியிருந்த மற்றவர்கள், மேலும் (ஸாடமின்) பாவிகள், தீயவர்களாக இருந்தனர்.

69:10. தங்களுடைய இரட்சகரின் தூதருக்கு அவர்கள் கீழ்ப்படிய மறுத்தனர். அதன் விளைவாக, பேரழிவானதொரு பழி தீர்த்தலாக அவர்களை அவர் பழி தீர்த்தார்.

69:11. அவ்வெள்ளம் பெரு நாசம் விளைவிப்பதாக இருந்தது, எனவே நாம் உங்களை மிதக்கின்ற (மரக் கலத்தில்) சுமந்து கொண்டோம்.

69:12. செவியேற்கின்ற எந்தச் செவியும் புரிந்து கொள்ளக் கூடும் என்பதற்காக, அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்கினோம்.

69:13. கொம்பு ஒரு முறை ஊதப்படும் பொழுது.

69:14. பூமியும் மலைகளும் தூக்கியெறியப்பட்டு மேலும் தூள்தூளாக ஆக்கப்படும்; முற்றிலும் தூள் தூளாக்கப்படும்.

69:15. அந்த நாளின் போதுதான் தவிர்த்துவிட இயலாத அந்நிகழ்வு நிகழ்ந்தேறும்.

69:16. வானம் பிளந்து விடும், துண்டு துண்டாக விழுந்து விடும்.

69:17. வானவர்கள் முற்றிலும் சூழ்ந்திருப்பார்கள், மேலும் அப்போது உம்முடைய இரட்சகரின் சாம்ராஜ்யமானது (பிரபஞ்சங்கள்)* எட்டினை உள்ளடக்கியதாக இருக்கும்.

*69:17 பௌதிக ரீதியாக கடவுளிடமிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால் தான் இந்தப்பூமி துன்பம் நிறைந்ததாக இருக் கின்றது, ஏனெனில் இது ஏழாவது பிரபஞ்சத்தில் உள்ளது 7:143. மறுவுலகில் நம்முடைய ஏழாவது பிரபஞ்சத்தை விடவும், இன்னும் மிகத் தொலைவில் இருக்கின்ற ஓர் எட்டாவது பிரபஞ்சம் படைக்கப்படும்; அதுவே நரகம் என்றழைக்கப்படும் (89:23).

69:18. அந்நாளில், நீங்கள் அம்பலப்படுத்தப்படுவீர்கள், உங்களுடையதில் எந்த ஒன்றும் மறைக்கப்பட்டதாக இருக்காது.

69:19. தன்னுடைய வலக்கரத்தால் தன்னுடைய பதிவேட்டைப் பெறுகின்றவனைப் பொறுத்த வரை, அவன் கூறுவான், "வாருங்கள், என் பதிவேட்டைப் படியுங்கள்.

69:20. "நான் பதிலளிக்க வேண்டியவனாக இருக்கின்றேன் என்பதை நம்பியவனாகவே நான் இருந்தேன்."

69:21. மகிழ்ச்சியானதொரு வாழ்வுக்கு அவன் தகுதியானவனாகி விட்டான்.

69:22. மேன்மையானதொரு சுவனத்தில்.

69:23. அதன் பழங்கள் அடையக்கூடிய தூரத்திற்குள் உள்ளன.

69:24. கடந்துபோன நாட்களில் உங்களுடைய காரியங்களுக்கான பலனாக மகிழ்வுடன் உண்ணுங்கள் மேலும் பருகுங்கள்.

69:25. தன்னுடைய பதிவேட்டை அவனுடைய இடக்கரத்தில் கொடுக்கப்படுபவனைப் பொறுத்தவரை, அவன் கூறுவான், ஐயோ என்னுடைய பதிவேட்டை நான் ஒருபோதும், பெறாதிருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகின்றேன்.

69:26. "என்னுடைய கணக்கை நான் ஒருபோதும் அறியாதிருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.

69:27. "என்னுடைய மரணம் நிரந்தரமானதாக இருந்திருக்க வேண்டுமே என நான் விரும்புகிறேன்.

69:28. "என்னுடைய பணம் எனக்கு உதவ இயலவில்லை.

69:29. "என்னுடைய சக்தி அனைத்தும் நீங்கி விட்டது.

69:30. பிடியுங்கள் அவனை, மேலும் அவனுக்கு விலங்கிடுங்கள்.

69:31. நரகத்தில் அவனைக் கருகச் செய்யுங்கள்.

69:32. எழுபது முழம் நீளமான ஒரு சங்கிலியால், அவனைக் கட்டிப்போடுங்கள்.

69:33. ஏனெனில், மிகவும் மகத்தானவரான, கடவுள் மீது அவன் நம்பிக்கை கொள்ளாதிருந்தான்.

69:34. அன்றி ஏழைகளுக்கு உணவளிப்பதையும் அவன் ஆதரிக்கவில்லை.

69:35. அதன் விளைவாக, இங்கே அவனுக்கு நண்பர்கள் எவருமில்லை.

69:36. அன்றி கசப்பான வகைகளைத் தவிர, எந்த உணவு மில்லை.

69:37. பாவிகளுக்குரிய உணவு.

69:38. நீங்கள் காண்பவற்றின் மீது நான் சத்தியமிடுகின்றேன்.

69:39. மேலும் நீங்கள் காணாதவற்றின் மீதும்.

69:40. இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றாகும்.

69:41. ஒரு கவிஞனின் கூற்றல்ல; அரிதாகவே நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்கள்.

69:42. அன்றி ஒரு ஜோசியக்காரனின் கூற்றுமல்ல; அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.

69:43. பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.

69:44. வேறு எந்தப் போதனைகளையும் அவர் கூறியிருப்பாராயின்.

69:45. நாம் அவரைத் தண்டித்திருப்போம்.

69:46. வெளிப்பாடுகளை நாம் அவருக்கு நிறுத்தியிருப்போம்.

69:47. உங்களில் எவரும் அவருக்கு உதவி செய்திருக்க இயலாது.

69:48. இது நன்னெறியாளர்களுக்குரியதொரு நினைவூட்ட லாகும்.

69:49. நாம் அறிவோம்; உங்களில் சிலர் ஏற்க மறுப்பவர்கள்.

69:50. நம்பமறுப்பவர்களுக்கு இது துக்கத்தைத் தவிர வேறில்லை.

69:51. இதுவே பரிபூரணமான சத்தியமாகும்.

69:52. எனவே, மிகவும் மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீர் துதிக்க வேண்டும்.