Find
Chapter 67: Al-Mulk
67:0-30
30 verses Revelation order 77
سورة الملك

. ١:٦٧ تَبٰرَكَ الَّذى بِيَدِهِ المُلكُ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

. ٢:٦٧ الَّذى خَلَقَ المَوتَ وَالحَيوٰةَ لِيَبلُوَكُم أَيُّكُم أَحسَنُ عَمَلًا وَهُوَ العَزيزُ الغَفورُ

. ٣:٦٧ الَّذى خَلَقَ سَبعَ سَمٰوٰتٍ طِباقًا ما تَرىٰ فى خَلقِ الرَّحمٰنِ مِن تَفٰوُتٍ فَارجِعِ البَصَرَ هَل تَرىٰ مِن فُطورٍ

. ٤:٦٧ ثُمَّ ارجِعِ البَصَرَ كَرَّتَينِ يَنقَلِب إِلَيكَ البَصَرُ خاسِئًا وَهُوَ حَسيرٌ

. ٥:٦٧ وَلَقَد زَيَّنَّا السَّماءَ الدُّنيا بِمَصٰبيحَ وَجَعَلنٰها رُجومًا لِلشَّيٰطينِ وَأَعتَدنا لَهُم عَذابَ السَّعيرِ

. ٦:٦٧ وَلِلَّذينَ كَفَروا بِرَبِّهِم عَذابُ جَهَنَّمَ وَبِئسَ المَصيرُ

. ٧:٦٧ إِذا أُلقوا فيها سَمِعوا لَها شَهيقًا وَهِىَ تَفورُ

. ٨:٦٧ تَكادُ تَمَيَّزُ مِنَ الغَيظِ كُلَّما أُلقِىَ فيها فَوجٌ سَأَلَهُم خَزَنَتُها أَلَم يَأتِكُم نَذيرٌ

. ٩:٦٧ قالوا بَلىٰ قَد جاءَنا نَذيرٌ فَكَذَّبنا وَقُلنا ما نَزَّلَ اللَّهُ مِن شَىءٍ إِن أَنتُم إِلّا فى ضَلٰلٍ كَبيرٍ

. ١٠:٦٧ وَقالوا لَو كُنّا نَسمَعُ أَو نَعقِلُ ما كُنّا فى أَصحٰبِ السَّعيرِ

. ١١:٦٧ فَاعتَرَفوا بِذَنبِهِم فَسُحقًا لِأَصحٰبِ السَّعيرِ

. ١٢:٦٧ إِنَّ الَّذينَ يَخشَونَ رَبَّهُم بِالغَيبِ لَهُم مَغفِرَةٌ وَأَجرٌ كَبيرٌ

. ١٣:٦٧ وَأَسِرّوا قَولَكُم أَوِ اجهَروا بِهِ إِنَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

. ١٤:٦٧ أَلا يَعلَمُ مَن خَلَقَ وَهُوَ اللَّطيفُ الخَبيرُ

. ١٥:٦٧ هُوَ الَّذى جَعَلَ لَكُمُ الأَرضَ ذَلولًا فَامشوا فى مَناكِبِها وَكُلوا مِن رِزقِهِ وَإِلَيهِ النُّشورُ

. ١٦:٦٧ ءَأَمِنتُم مَن فِى السَّماءِ أَن يَخسِفَ بِكُمُ الأَرضَ فَإِذا هِىَ تَمورُ

. ١٧:٦٧ أَم أَمِنتُم مَن فِى السَّماءِ أَن يُرسِلَ عَلَيكُم حاصِبًا فَسَتَعلَمونَ كَيفَ نَذيرِ

. ١٨:٦٧ وَلَقَد كَذَّبَ الَّذينَ مِن قَبلِهِم فَكَيفَ كانَ نَكيرِ

. ١٩:٦٧ أَوَلَم يَرَوا إِلَى الطَّيرِ فَوقَهُم صٰفّٰتٍ وَيَقبِضنَ ما يُمسِكُهُنَّ إِلَّا الرَّحمٰنُ إِنَّهُ بِكُلِّ شَىءٍ بَصيرٌ

. ٢٠:٦٧ أَمَّن هٰذَا الَّذى هُوَ جُندٌ لَكُم يَنصُرُكُم مِن دونِ الرَّحمٰنِ إِنِ الكٰفِرونَ إِلّا فى غُرورٍ

. ٢١:٦٧ أَمَّن هٰذَا الَّذى يَرزُقُكُم إِن أَمسَكَ رِزقَهُ بَل لَجّوا فى عُتُوٍّ وَنُفورٍ

. ٢٢:٦٧ أَفَمَن يَمشى مُكِبًّا عَلىٰ وَجهِهِ أَهدىٰ أَمَّن يَمشى سَوِيًّا عَلىٰ صِرٰطٍ مُستَقيمٍ

. ٢٣:٦٧ قُل هُوَ الَّذى أَنشَأَكُم وَجَعَلَ لَكُمُ السَّمعَ وَالأَبصٰرَ وَالأَفـِٔدَةَ قَليلًا ما تَشكُرونَ

. ٢٤:٦٧ قُل هُوَ الَّذى ذَرَأَكُم فِى الأَرضِ وَإِلَيهِ تُحشَرونَ

. ٢٥:٦٧ وَيَقولونَ مَتىٰ هٰذَا الوَعدُ إِن كُنتُم صٰدِقينَ

. ٢٦:٦٧ قُل إِنَّمَا العِلمُ عِندَ اللَّهِ وَإِنَّما أَنا۠ نَذيرٌ مُبينٌ

. ٢٧:٦٧ فَلَمّا رَأَوهُ زُلفَةً سيـَٔت وُجوهُ الَّذينَ كَفَروا وَقيلَ هٰذَا الَّذى كُنتُم بِهِ تَدَّعونَ

. ٢٨:٦٧ قُل أَرَءَيتُم إِن أَهلَكَنِىَ اللَّهُ وَمَن مَعِىَ أَو رَحِمَنا فَمَن يُجيرُ الكٰفِرينَ مِن عَذابٍ أَليمٍ

. ٢٩:٦٧ قُل هُوَ الرَّحمٰنُ ءامَنّا بِهِ وَعَلَيهِ تَوَكَّلنا فَسَتَعلَمونَ مَن هُوَ فى ضَلٰلٍ مُبينٍ

. ٣٠:٦٧ قُل أَرَءَيتُم إِن أَصبَحَ ماؤُكُم غَورًا فَمَن يَأتيكُم بِماءٍ مَعينٍ

Kingship

67:1. Most exalted is the One in whose hands is all kingship, and He is Omnipotent.

67:2. The One who created death and life for the purpose of distinguishing those among you who would do better. He is the Almighty, the Forgiving.

*67:2 See the Introduction and Appendix 7 for details of the purpose behind this world.

67:3. He created seven universes in layers. You do not see any imperfection in the creation by the Most Gracious. Keep looking; do you see any flaw?

67:4. Look again and again; your eyes will come back stumped and conquered.

67:5. We adorned the lowest universe with lamps, and guarded its borders with projectiles against the devils; we prepared for them a retribution in Hell.

67:6. For those who disbelieved in their Lord, the retribution of Gehenna. What a miserable destiny.

67:7. When they get thrown therein, they hear its furor as it fumes.

67:8. It almost explodes from rage. Whenever a group is thrown therein, its guards would ask them, "Did you not receive a warner?"

67:9. They would answer, "Yes indeed; a warner did come to us, but we disbelieved and said, `God did not reveal anything. You are totally astray.' "

67:10. They also say, "If we heard or understood, we would not be among the dwellers of Hell!"

67:11. Thus, they confessed their sins. Woe to the dwellers of Hell.

67:12. As for those who reverence their Lord, when alone in their privacy, they have attained forgiveness and a great recompense.

67:13. Whether you keep your utterances secret, or declare them, He is fully aware of the innermost thoughts.

67:14. Should He not know what He created? He is the Sublime, Most Cognizant.

67:15. He is the One who put the Earth at your service. Roam its corners, and eat from His provisions. To Him is the final summoning.

67:16. Have you guaranteed that the One in heaven will not strike the earth and cause it to tumble?

67:17. Have you guaranteed that the One in heaven will not send upon you a violent storm? Will you then appreciate the value of My warning?

67:18. Others before them have disbelieved; how terrible was My requital!

67:19. Have they not seen the birds above them lined up in columns and spreading their wings? The Most Gracious is the One who holds them in the air. He is Seer of all things.

67:20. Where are those soldiers who can help you against the Most Gracious? Indeed, the disbelievers are deceived.

67:21. Who is there to provide for you, if He withholds His provisions? Indeed, they have plunged deep into transgression and aversion.

67:22. Is one who walks while slumped over on his face better guided, or one who walks straight on the right path?

67:23. Say, "He is the One who initiated you, and granted you the hearing, the eyes, and the brains. Rarely are you appreciative."

67:24. Say, "He is the One who placed you on earth, and before Him you will be summoned."

67:25. They challenge: "When will that prophecy come to pass, if you are truthful?"

67:26. Say, "Such knowledge is with God; I am no more than a manifest warner."

67:27. When they see it happening, the faces of those who disbelieved will turn miserable, and it will be proclaimed: "This is what you used to mock."

67:28. Say, "Whether God decides to annihilate me and those with me, or to shower us with His mercy, who is there to protect the disbelievers from a painful retribution?"

67:29. Say, "He is the Most Gracious; we believe in Him, and we trust in Him. You will surely find out who is really far astray."

67:30. Say, "What if your water sinks away, who will provide you with pure water?"

அரசுரிமை

67:1. அரசுரிமை அனைத்தும் எவருடைய கரங்களில் உள்ளதோ அந்த ஒருவர் மிகவும் மேன்மையானவர், மேலும் அவர் சர்வசக்தியுடையவர்.

67:2. உங்களுக்கிடையில் சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள் யார் என்பதை பிரித்தறியும் நோக்கத்திற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்த அந்த ஒருவர்.* அவர்தான் எல்லாம் வல்லவர், மன்னிக்கின்றவர்.

*67:2 இவ்வுலகத்திற்குப் பின்னாலுள்ள நோக்கத்தின் விபரங்களுக்கு அறிமுகவுரை மற்றும் பின் இணைப்பு 7 ஆகியவற் றைக் காண்க.

67:3. அவர் ஏழு பிரபஞ்சங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தார். மிக்க அருளாளரால் படைக்கப்பட்டவற்றில் எவ்விதமான குறைபாட்டையும் நீர் காண்பதில்லை. தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பீராக; ஏதேனும் விரிசலை நீர் காண்கின்றீரா?

67:4. மீண்டும் மீண்டும் உற்றுப்பார்ப்பீராக; ஸ்தம்பித்துப் போய் தோல்வியுற்றவையாக உம்முடைய கண்கள் திரும்பி வரும்.

67:5. மிகக் கீழுள்ள பிரபஞ்சத்தை விளக்குகளைக் கொண்டு நாம் அலங்கரித்தோம், மேலும் சாத்தான்களுக்கெதிராக அதன் எல்லைகளை ஏவுகணைகளைக் கொண்டு பாதுகாத்தோம்; நரகத்தில் ஒரு தண்டனையை நாம் அவர்களுக்காகத் தயாரித்தோம்.

67:6. தங்களுடைய இரட்சகரின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்கு, எரிகிடங்கின் தண்டனை. என்ன ஒரு துன்பகரமான விதி.

67:7. அதிலே அவர்கள் வீசப்படும் போது, அதன் புகைச்சலால், அதன் சீற்றத்தை அவர்கள் செவியுறுவார்கள்.

67:8. கோபாவேசத்தில் அது கிட்டத்தட்ட வெடிக்கின்றது. ஒரு கூட்டம் அதிலே வீசப்படுகின்ற பொழுதெல்லாம், அதன் பாதுகாவலர்கள் அவர்களைக் கேட்பார்கள், "எச்சரிப்பவர் ஒருவரை நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லையா?"

67:9. அவர்கள் பதிலளிப்பார்கள், "ஆம் மெய்யாக; எச்சரிப்பவர் ஒருவர் எங்களிடம் வரவே செய்தார், ஆனால் நாங்கள் நம்பமறுத்தோம், மேலும் கூறினோம், ‘கடவுள் எந்த ஒன்றையும் வெளிப்படுத்தவில்லை. நீங்கள் முற்றிலும் வழிதவறியவர்களாக இருக்கின்றீர்கள்.’"

67:10. அத்துடன் அவர்கள் கூறுவர், "நாங்கள் செவியேற்றிருந்தால் அல்லது புரிந்து கொண்டிருந்தால், நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்!"

67:11. இவ்விதமாக, அவர்கள் தங்களுடைய பாவங்களை ஒப்புக் கொண்டனர். நரகவாசிகளுக்குக் கேடுதான்.

67:12. தங்களுடைய தனிமையில் தனித்து இருக்கும் பொழுது, தங்கள் இரட்சகரிடம் பக்தியோடிருப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் மன்னிப்பையும் மகத்தானதொரு பிரதிபலனையும் அடைந்து விட்டனர்.

67:13. உங்களுடைய கூற்றுகளை நீங்கள் இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது அவற்றை அறிவித்தாலும், உள்ளார்ந்த எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

67:14. அவர் படைத்தவற்றை அவர் அறியாமலிருப்பாரா? அவர் மகிமை மிக்கவர், மிகவும் நன்கறிந்தவர்.

67:15. அவர்தான் பூமியை உங்களுடைய பணிக்கென அமைத்தவர். அதன் மூலைகளில் சுற்றித்திரியுங்கள், மேலும் அவருடைய வாழ்வாதாரங்களிலிருந்து உண்ணுங்கள். இறுதியான அழைப்பு ஆணை அவருக்குரியது.

67:16. வானத்தில் உள்ள அந்த ஒருவர் பூமியைத் தாக்கி அதனைத் தடுமாறி விழும்படிச் செய்துவிட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா?

67:17. வானத்தில் உள்ள அந்த ஒருவர் உக்கிரமானதொரு புயலை உங்கள் மீது அனுப்பி விட மாட்டார் என்று நீங்கள் உத்தரவாதம் கொண்டிருக்கின்றீர்களா? அப்போதாவது என்னுடைய எச்சரிக்கையின் முக்கியத்துவத்தை நீங்கள் சரியாக மதிப்பிடுவீர்களா?

67:18. அவர்களுக்கு முன்னர் மற்றவர்களும் நம்பமறுத்துள்ளனர்; என்னுடைய பழி தீர்த்தல் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது!

67:19. வரிசைகளில் அணிவகுத்தவாறும் தம்முடைய இறக்கைகளை விரித்தவாறும் அவர்களுக்கு மேலே பறவைகளை அவர்கள் பார்த்ததில்லையா? மிக்க அருளாளர்தான் அவற்றைக் காற்றில் தாங்கிக் கொண்டிருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களையும் பார்ப்பவராக இருக்கின்றார்.

67:20. மிக்க அருளாளருக்கெதிராக உங்களுக்கு உதவக் கூடிய அந்தப் படைவீரர்கள் எங்கே? உண்மையில், நம்பமறுப்பவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.

67:21. தன்னுடைய வாழ்வாதாரங்களை அவர் நிறுத்தி வைத்துக் கொண்டால், உங்களுக்கு வழங்குவதற்கு யார் இருக்கின்றார்? உண்மையில், அவர்கள் வரம்புமீறலிலும் வெறுப்பிலும் ஆழமாக மூழ்கி விட்டனர்.

67:22. தன்னுடைய முகத்தால் குப்புற வீழ்ந்தவாறு நடக்கின்ற ஒருவன் சிறப்பாக வழி நடத்தப்பட்டவனா, அல்லது சரியான பாதையில் நேராக நடக்கின்ற ஒருவனா?

67:23. கூறுவீராக, "அவர்தான் உங்களைத் துவக்கியவர், மேலும் செவிப்புலனையும் கண்களையும் மூளைகளையும் உங்களுக்கு அளித்தவர். அரிதாகவே நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்கள்.

67:24. கூறுவீராக, "அவர்தான் பூமியின் மீது உங்களை அமைத்தவர், மேலும் அவர் முன் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்."

67:25. அவர்கள் சவால் விடுகின்றனர்: நீர் உண்மையாளராக இருந்தால், அந்த முன்னறிவிப்பு எப்போது நிகழ்ந்தேறும்?

67:26. கூறுவீராக, "அதனைப் பற்றிய அறிவு கடவுள்-யிடம் உள்ளது; நான் தெளிவானதொரு எச்சரிப்பவன் என்பதை விட அதிகம் எதுவுமில்லை."

67:27. அது நிகழ்வதை அவர்கள் காணும்பொழுது, நம்பமறுத்தவர்களின் முகங்கள் துன்பகரமானதாக மாறி விடும், மேலும் பிரகடனிக்கப்படும்: "இதுதான் நீங்கள் கேலி செய்து கொண்டிருந்தது."

67:28. கூறுவீராக, "என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் அழித்துவிடவோ, அல்லது அவருடைய கருணையைக் கொண்டு எங்கள் மீது பொழியவோ கடவுள் தீர்மானித்த போதிலும், வலி நிறைந்ததொரு தண்டனையிலிருந்து நம்பமறுப்பவர்களைக் பாதுகாக்க யார் இருக்கின்றார்?"

67:29. கூறுவீராக, "அவர்தான் மிக்க அருளாளர்; நாங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் அவர் மீது பொறுப்பேற்படுத்துகின்றோம். மெய்யாகவே நெடிய வழிகேட்டில் இருப்பவர்கள் யார் என நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்."

67:30. கூறுவீராக, "உங்களுடைய தண்ணீர் ஆழத்திற்குச் சென்று விட்டால், தூய்மையான தண்ணீரை உங்களுக்கு யார் வழங்குவார்?"