Find
Chapter 65: Al-Talaaq
65:0-12
12 verses Revelation order 99
سورة الطلاق

. ١:٦٥ يٰأَيُّهَا النَّبِىُّ إِذا طَلَّقتُمُ النِّساءَ فَطَلِّقوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحصُوا العِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُم لا تُخرِجوهُنَّ مِن بُيوتِهِنَّ وَلا يَخرُجنَ إِلّا أَن يَأتينَ بِفٰحِشَةٍ مُبَيِّنَةٍ وَتِلكَ حُدودُ اللَّهِ وَمَن يَتَعَدَّ حُدودَ اللَّهِ فَقَد ظَلَمَ نَفسَهُ لا تَدرى لَعَلَّ اللَّهَ يُحدِثُ بَعدَ ذٰلِكَ أَمرًا

. ٢:٦٥ فَإِذا بَلَغنَ أَجَلَهُنَّ فَأَمسِكوهُنَّ بِمَعروفٍ أَو فارِقوهُنَّ بِمَعروفٍ وَأَشهِدوا ذَوَى عَدلٍ مِنكُم وَأَقيمُوا الشَّهٰدَةَ لِلَّهِ ذٰلِكُم يوعَظُ بِهِ مَن كانَ يُؤمِنُ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ وَمَن يَتَّقِ اللَّهَ يَجعَل لَهُ مَخرَجًا

. ٣:٦٥ وَيَرزُقهُ مِن حَيثُ لا يَحتَسِبُ وَمَن يَتَوَكَّل عَلَى اللَّهِ فَهُوَ حَسبُهُ إِنَّ اللَّهَ بٰلِغُ أَمرِهِ قَد جَعَلَ اللَّهُ لِكُلِّ شَىءٍ قَدرًا

. ٤:٦٥ وَالّٰـٔى يَئِسنَ مِنَ المَحيضِ مِن نِسائِكُم إِنِ ارتَبتُم فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ أَشهُرٍ وَالّٰـٔى لَم يَحِضنَ وَأُولٰتُ الأَحمالِ أَجَلُهُنَّ أَن يَضَعنَ حَملَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجعَل لَهُ مِن أَمرِهِ يُسرًا

. ٥:٦٥ ذٰلِكَ أَمرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيكُم وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّر عَنهُ سَيِّـٔاتِهِ وَيُعظِم لَهُ أَجرًا

. ٦:٦٥ أَسكِنوهُنَّ مِن حَيثُ سَكَنتُم مِن وُجدِكُم وَلا تُضارّوهُنَّ لِتُضَيِّقوا عَلَيهِنَّ وَإِن كُنَّ أُولٰتِ حَملٍ فَأَنفِقوا عَلَيهِنَّ حَتّىٰ يَضَعنَ حَملَهُنَّ فَإِن أَرضَعنَ لَكُم فَـٔاتوهُنَّ أُجورَهُنَّ وَأتَمِروا بَينَكُم بِمَعروفٍ وَإِن تَعاسَرتُم فَسَتُرضِعُ لَهُ أُخرىٰ

. ٧:٦٥ لِيُنفِق ذو سَعَةٍ مِن سَعَتِهِ وَمَن قُدِرَ عَلَيهِ رِزقُهُ فَليُنفِق مِمّا ءاتىٰهُ اللَّهُ لا يُكَلِّفُ اللَّهُ نَفسًا إِلّا ما ءاتىٰها سَيَجعَلُ اللَّهُ بَعدَ عُسرٍ يُسرًا

. ٨:٦٥ وَكَأَيِّن مِن قَريَةٍ عَتَت عَن أَمرِ رَبِّها وَرُسُلِهِ فَحاسَبنٰها حِسابًا شَديدًا وَعَذَّبنٰها عَذابًا نُكرًا

. ٩:٦٥ فَذاقَت وَبالَ أَمرِها وَكانَ عٰقِبَةُ أَمرِها خُسرًا

. ١٠:٦٥ أَعَدَّ اللَّهُ لَهُم عَذابًا شَديدًا فَاتَّقُوا اللَّهَ يٰأُولِى الأَلبٰبِ الَّذينَ ءامَنوا قَد أَنزَلَ اللَّهُ إِلَيكُم ذِكرًا

. ١١:٦٥ رَسولًا يَتلوا عَلَيكُم ءايٰتِ اللَّهِ مُبَيِّنٰتٍ لِيُخرِجَ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ إِلَى النّورِ وَمَن يُؤمِن بِاللَّهِ وَيَعمَل صٰلِحًا يُدخِلهُ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا قَد أَحسَنَ اللَّهُ لَهُ رِزقًا

. ١٢:٦٥ اللَّهُ الَّذى خَلَقَ سَبعَ سَمٰوٰتٍ وَمِنَ الأَرضِ مِثلَهُنَّ يَتَنَزَّلُ الأَمرُ بَينَهُنَّ لِتَعلَموا أَنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ وَأَنَّ اللَّهَ قَد أَحاطَ بِكُلِّ شَىءٍ عِلمًا

Divorce

65:1. O you prophet, when you people divorce the women, you shall ensure that a divorce interim is fulfilled. You shall measure such an interim precisely.* You shall reverence God your Lord. Do not evict them from their homes, nor shall you make life miserable for them, to force them to leave on their own, unless they commit a proven adultery. These are God's laws. Anyone who transgresses God's laws commits an injustice against himself. You never know; maybe God wills something good to come out of this.

*65:1 The divorcee's interim, before becoming eligible for remarriage, is a waiting period of three menstruations. This ensures that the divorcee was not pregnant (2:228).

65:2. Once the interim is fulfilled, you may reconcile with them equitably, or go through with the separation equitably. You shall have two equitable witnesses witness the divorce before God. This is to enlighten those who believe in God and the Last Day. Anyone who reverences God, He will create an exit for him.

65:3. And will provide for him whence he never expected. Anyone who trusts in God, He suffices him. God's commands are done. God has decreed for everything its fate.

65:4. As for the women who have reached menopause, if you have any doubts, their interim shall be three months. As for those who do not menstruate, and discover that they are pregnant, their interim ends upon giving birth. Anyone who reverences God, He makes everything easy for him.

65:5. This is God's command that He sends down to you. Anyone who reverences God, He remits his sins, and rewards him generously.

65:6. You shall allow them to live in the same home in which they lived with you, and do not make life so miserable for them that they leave on their own. If they are pregnant, you shall spend on them until they give birth. If they nurse the infant, you shall pay them for this service. You shall maintain the amicable relations among you. If you disagree, you may hire another woman to nurse the child.

65:7. The rich husband shall provide support in accordance with his means, and the poor shall provide according to the means that God bestowed upon him. God does not impose on any soul more than He has given it. God will provide ease after difficulty.

65:8. Many a community rebelled against the commands of its Lord and against His messengers. Consequently, we held them strictly accountable, and requited them a terrible requital.

65:9. They suffered the consequences of their decisions; a profound loss.

65:10. God has prepared for them severe retribution. Therefore, you shall reverence God, O you who possess intelligence and believed. God has sent down to you a message -*

65:11. a messenger* who recites to you God's revelations, clearly, to lead those who believe and work righteousness out of the darkness into the light. Anyone who believes in God and leads a righteous life, He will admit him into gardens with flowing streams; they abide therein forever. God will generously reward him.

*65:10-11 The ``Messenger'' here is clearly the Quran. Verse 10 talks about ``sending down a message,'' and this points to the Quran as the messenger in 65:11 (Appendix 20).

65:12. God created seven universes and the same number of earths. The commands flow among them. This is to let you know that God is Omnipotent, and that God is fully aware of all things.

*65:12 Although God created six other planets that are identical to our Earth, there is life only on our planet. Thus, the evolutionists will be shown on the Day of Judgment that life did not just ``evolve'' on the planet because of its particular circumstances.

விவாகரத்து

65:1. நபியே உம்மைத்தான், மனிதர்களாகிய நீங்கள் பெண்களை விவாகரத்துச் செய்தால், விவாகரத்திற் குரியதோர் இடைக்காலத் தவணை பூர்த்தியாகி விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தகையதோர் இடைக்காலத்தவணையை மிகத் துல்லியமாகக் நீங்கள் கணக்கிட வேண்டும்.* உங்கள் இரட்சகரான கடவுள்-யிடம் நீங்கள் பக்தியோடிருக்க வேண்டும். அவர்களுடைய வீடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றி விடாதீர்கள், அன்றி அவர்கள் நிரூபிக்கப்பட்டதொரு விபசாரம் புரிந்தாலேயன்றி, அவர்களாகவே வெளியேறி விடுவதற்காக அவர்களை நிர்ப்பந்தித்து, வாழ்க்கையை அவர்களுக்குத் துன்பகரமானதாக ஆக்கி விடவும் வேண்டாம். இவை கடவுள்-ன் சட்டங்களாகும். எவரொருவர் கடவுள்-வுடைய விதி முறைகளின் வரம்புகளை மீறுகின்றாரோ, அவர் தனக்கெதிராகவே ஓர் அநீதம் புரிந்து கொள்கின்றார். நீங்கள் சற்றும் அறியமாட்டீர்கள்; இதிலிருந்து நல்லது ஏதேனும் வெளிவரக் கடவுள் நாடுவதாய் இருக்கக்கூடும்.

*65:1 மறுமணத்திற்குத் தகுதியாகும் முன்னர் , விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்ணுக்குரிய இடைக்காலத் தவணையாவது மூன்று மாதவிடாய்க் காலங்கள் காத்திருப்பதாகும். விவாகரத்துச் செய்யப்பட்ட பெண் கர்ப்பவதியாக இல்லை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது 2:228.

65:2. இடைக்காலத் தவணை பூர்த்தியடைந்தவுடன், நியாயமாக அவர்களுடன் நீங்கள் இணக்கம் செய்து கொள்ளலாம், அல்லது நியாயமாக முழுவதும் பிரிந்து சென்று விடலாம். கடவுள்-ன் முன்பு விவாகரத்திற்குச் சாட்சியாக நீங்கள் இரு நீதமான சாட்சிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது, கடவுள் மற்றும் இறுதி நாளின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு அறிவூட்டுவதற்காகவேயாகும். எவரொருவர் கடவுள் -யிடம் பக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு வெளியேறுகின்ற ஒரு வழியை அவர் உருவாக்குவார்.

65:3. மேலும் அவர் ஒருபோதும் எதிர்பாராப் புறத்திலிருந்து அவருக்கு வழங்குவார். எவரொருவர் கடவுள் மீது பொறுப்பேற்படுத்துகின்றாரோ, அவருக்கு அவர் போதுமானவர். கடவுள்-ன் கட்டளைகள் நிறைவேற்றப்படும். ஒவ்வொன்றுக்கும் அதன் தலைவிதியைக் கடவுள் தீர்மானித்திருக்கின்றார்.

65:4. மாதவிடாய் நிறுத்தத்தை அடைந்து விட்ட பெண்களைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவர்களுடைய இடைக்காலத் தவணை மூன்று மாதங்களாக இருத்தல் வேண்டும். மாதவிடாய் வராமல், அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனர் என்று தெரிய வரும் பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் பிரசவிப்பதுடன் அவர்களுடைய இடைக்காலத் தவணை முடிவடைகின்றது. எவரொருவர் கடவுள்-யிடம் பக்தியோடிருக்கின்றாரோ, அவருக்கு அவர் ஒவ்வொன்றையும் இலகுவாக்கி விடுவார்.

65:5. இது, அவர் உங்களுக்கு இறக்கியனுப்புகின்ற கடவுள்-ன் கட்டளையாகும். எவரொருவர் கடவுள்-யிடம் பக்தியோடிருக்கின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் நீக்குகின்றார், மேலும் தாராளமாக அவருக்கு வெகுமதியளிக்கின்றார்.

65:6. உங்களுடன் அவர்கள் வசித்து வந்த அதே வீட்டில் அவர்கள் வசிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், மேலும் அவர்களாகவே வெளியேறி விடும்படி வாழ்க்கையை அவர்களுக்கு மிகவும் துன்பகரமானதாக ஆக்கி விடாதீர்கள். அவர்கள் கர்ப்பமாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்ய வேண்டும். அச்சிசுவுக்கு அவர்கள் பாலூட்டினால், அவர்களுடைய இந்தப் பணிக்கென நீங்கள் ஊதியமளிக்க வேண்டும். உங்களுக்கிடையில் இணக்கமான உறவுகளை நீங்கள் பராமரிக்க வேண்டும். நீங்கள் மனவேற்றுமை கொண்டால், குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக மற்றொரு பெண்ணை நீங்கள் பணிக்கமர்த்திக் கொள்ளலாம்.

65:7. செல்வந்தரான கணவர் தன்னுடைய வருவாய்க் கேற்ப ஜீவனாம்சம் வழங்க வேண்டும், மேலும் ஏழ்மையானவர் கடவுள் அவருக்கு அளித்த வருவாய்க் கேற்ப வழங்கிட வேண்டும். கடவுள் எந்த ஆத்மாவுக்கும் அவர் கொடுத்திருப்பதை விடவும் அதிகமாகச் சுமத்துவதில்லை. கஷ்டத்திற்குப் பின்னர் எளிதானதை கடவுள் வழங்குவார்.

65:8. எத்தனையோ ஒரு சமூகம் அதன் இரட்சகரின் கட்டளைகளுக்கெதிராகவும் அவருடைய தூதர்களுக்கெ திராகவும் கலகம் செய்தது. அதன் விளைவாக, கண்டிப்புடன் அவர்களை நாம் பொறுப்பாக்கிப் பிடித்தோம், மேலும் பயங்கரமானதொரு பழியாக அவர்களைப் பழி தீர்த்தோம்.

65:9. அவர்களுடைய தீர்மானங்களின் விளைவுகளால் அவர்கள் துன்பப்பட்டார்கள்; ஆழந்ததொரு நஷ்டம்.

*65:10-11 தெளிவாக, இங்கே தூதர் என்பது குர்ஆன்தான். வசனம் 10, ஒரு தூதுச் செய்தியை இறக்கி அனுப்புவதைப் பற்றிப் பேசுகின்றது, மேலும்65:11ல் இது குர்ஆனைத்தான் தூதராகச் சுட்டிக் காட்டுகின்றது (பின் இணைப்பு 20).

65:10. கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். ஆகவே, அறிவுத் திறன் கொண்டுள்ள நம்பிக்கையுடையவர்களே, நீங்கள் கடவுள்-யிடம் பக்தியோடிருக்க வேண்டும். கடவுள் உங்களுக்கொரு தூதுச் செய்தியை* இறக்கி அனுப்பியுள்ளார் -

65:11. நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியங்கள் புரிவோரை, இருளில் இருந்து வெளியேற்றி ஒளிக்குள் வழிநடத்துவதற்காக, கடவுள்-ன் வெளிப்பாடுகளை, தெளிவாக உங்களுக்கு ஓதிக் காட்டுகின்ற ஒரு தூதர்.* எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவரை பாயும் ஆறுகள் கொண்ட தோட்டங்களுக்குள் அவர் அனுமதிப்பார்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் தாராளமாக அவருக்கு வெகுமதியளிப்பார்.

65:10-11 தெளிவாக, இங்கே "தூதர்" என்பது குர்ஆன்தான். வசனம் 10, "ஒரு தூதுச் செய்தியை இறக்கி அனுப்புவதைப்" பற்றிப் பேசுகின்றது, மேலும் 65.11ல் இது குர்ஆனைத்தான் தூதராகச் சுட்டிக் காட்டுகின்றது (பின் இணைப்பு 20)

65:12. ஏழு பிரபஞ்சங்களையும் அதே எண்ணிக்கையிலான பூமிகளையும் கடவுள் படைத்தார். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன. இது, கடவுள் சர்வசக்தியுடையவர் என்பதையும், மேலும் கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார் என்பதையும் உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே.

*65:12 நம்முடைய பூமியை ஒத்த மற்ற ஆறு கிரகங்களைக் கடவுள் படைத்துள்ள போதிலும், நம்முடைய கிரகத்தில் மட்டுமே ஜீவராசிகள் உள்ளன. எனவே, இக்கிரகத்தின் மீது அதன் விசேஷமான சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மட்டுமே உயிர்கள் பரிணாமம் அடைந்து விடவில்லை என்று பரிணாமவாதிகளுக்கு தீர்ப்பு நாளன்று எடுத்துக்காட்டப்படும்.