. ١:٦٤ يُسَبِّحُ لِلَّهِ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ لَهُ المُلكُ وَلَهُ الحَمدُ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ
. ٢:٦٤ هُوَ الَّذى خَلَقَكُم فَمِنكُم كافِرٌ وَمِنكُم مُؤمِنٌ وَاللَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ
. ٣:٦٤ خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ بِالحَقِّ وَصَوَّرَكُم فَأَحسَنَ صُوَرَكُم وَإِلَيهِ المَصيرُ
. ٤:٦٤ يَعلَمُ ما فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَيَعلَمُ ما تُسِرّونَ وَما تُعلِنونَ وَاللَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ
. ٥:٦٤ أَلَم يَأتِكُم نَبَؤُا۟ الَّذينَ كَفَروا مِن قَبلُ فَذاقوا وَبالَ أَمرِهِم وَلَهُم عَذابٌ أَليمٌ
. ٦:٦٤ ذٰلِكَ بِأَنَّهُ كانَت تَأتيهِم رُسُلُهُم بِالبَيِّنٰتِ فَقالوا أَبَشَرٌ يَهدونَنا فَكَفَروا وَتَوَلَّوا وَاستَغنَى اللَّهُ وَاللَّهُ غَنِىٌّ حَميدٌ
. ٧:٦٤ زَعَمَ الَّذينَ كَفَروا أَن لَن يُبعَثوا قُل بَلىٰ وَرَبّى لَتُبعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِما عَمِلتُم وَذٰلِكَ عَلَى اللَّهِ يَسيرٌ
. ٨:٦٤ فَـٔامِنوا بِاللَّهِ وَرَسولِهِ وَالنّورِ الَّذى أَنزَلنا وَاللَّهُ بِما تَعمَلونَ خَبيرٌ
. ٩:٦٤ يَومَ يَجمَعُكُم لِيَومِ الجَمعِ ذٰلِكَ يَومُ التَّغابُنِ وَمَن يُؤمِن بِاللَّهِ وَيَعمَل صٰلِحًا يُكَفِّر عَنهُ سَيِّـٔاتِهِ وَيُدخِلهُ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها أَبَدًا ذٰلِكَ الفَوزُ العَظيمُ
. ١٠:٦٤ وَالَّذينَ كَفَروا وَكَذَّبوا بِـٔايٰتِنا أُولٰئِكَ أَصحٰبُ النّارِ خٰلِدينَ فيها وَبِئسَ المَصيرُ
. ١١:٦٤ ما أَصابَ مِن مُصيبَةٍ إِلّا بِإِذنِ اللَّهِ وَمَن يُؤمِن بِاللَّهِ يَهدِ قَلبَهُ وَاللَّهُ بِكُلِّ شَىءٍ عَليمٌ
. ١٢:٦٤ وَأَطيعُوا اللَّهَ وَأَطيعُوا الرَّسولَ فَإِن تَوَلَّيتُم فَإِنَّما عَلىٰ رَسولِنَا البَلٰغُ المُبينُ
. ١٣:٦٤ اللَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ وَعَلَى اللَّهِ فَليَتَوَكَّلِ المُؤمِنونَ
. ١٤:٦٤ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِنَّ مِن أَزوٰجِكُم وَأَولٰدِكُم عَدُوًّا لَكُم فَاحذَروهُم وَإِن تَعفوا وَتَصفَحوا وَتَغفِروا فَإِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ
. ١٥:٦٤ إِنَّما أَموٰلُكُم وَأَولٰدُكُم فِتنَةٌ وَاللَّهُ عِندَهُ أَجرٌ عَظيمٌ
. ١٦:٦٤ فَاتَّقُوا اللَّهَ مَا استَطَعتُم وَاسمَعوا وَأَطيعوا وَأَنفِقوا خَيرًا لِأَنفُسِكُم وَمَن يوقَ شُحَّ نَفسِهِ فَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ
. ١٧:٦٤ إِن تُقرِضُوا اللَّهَ قَرضًا حَسَنًا يُضٰعِفهُ لَكُم وَيَغفِر لَكُم وَاللَّهُ شَكورٌ حَليمٌ
. ١٨:٦٤ عٰلِمُ الغَيبِ وَالشَّهٰدَةِ العَزيزُ الحَكيمُ
64:1. Glorifying God is everything in the heavens and everything on earth. To Him belongs all kingship, and to Him belongs all praise, and He is Omnipotent.
64:2. He is the One who created you, then among you there is the disbeliever, and the believer. God is fully Seer of everything you do.
64:3. He created the heavens and the earth for a specific purpose,* designed you and perfected your design, then to Him is the final destiny.
*64:3 We are in this world due to God's immense mercy. The Most Gracious has given us a chance to redeem ourselves. See the Introduction and Appendix 7.
64:4. He knows everything in the heavens and the earth, and He knows everything you conceal and everything you declare. God is fully aware of the innermost thoughts.
64:5. Have you noted those who disbelieved in the past, then suffered the consequences of their decision? They incurred a painful retribution.
64:6. This is because their messengers went to them with clear proofs, but they said, "Shall we follow humans like us?" They disbelieved and turned away. God does not need them; God is in no need, Praiseworthy.
64:7. Those who disbelieved claim that they will not be resurrected! Yes indeed, by my Lord, you will be resurrected, and you will be held accountable for everything you have done. This is easy for God to do.
64:8. Therefore, you shall believe in God and His messenger, and the light that we have revealed herein. God is fully Cognizant of everything you do.
64:9. The day will come when He summons you to the Day of Summoning. That is the Day of Mutual Blaming. Anyone who believes in God and leads a righteous life, He will remit his sins, and will admit him into gardens with flowing streams. They abide therein forever. This is the greatest triumph.
64:10. As for those who disbelieve and reject our revelations, they are the dwellers of the Hellfire; they abide therein forever. What a miserable destiny!
64:11. Nothing happens to you except in accordance with God's will. Anyone who believes in God, He will guide his heart. God is fully aware of all things.
64:12. You shall obey God and you shall obey the messenger. If you turn away, then the sole mission of our messenger is to deliver the message.
64:13. God: there is no other god besides Him. In God the believers shall trust.
64:14. O you who believe, your spouses and your children can be your enemies; beware. If you pardon, forget, and forgive, then God is Forgiver, Most Merciful.
64:15. Your money and children are a test, and God possesses a great recompense.
64:16. Therefore, you shall reverence God as much as you can, and listen, and obey, and give (to charity) for your own good. Anyone who is protected from his own stinginess, these are the successful ones.
64:17. If you lend God a loan of righteousness, He will multiply the reward for you manifold, and forgive you. God is Appreciative, Clement.
64:18. The Knower of all secrets and declarations; the Almighty, Most Wise.
64:1. வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசுரிமையும் அவருக்கேயுரியது, மேலும் அனைத்துப் புகழும் அவருக்கேயுரியது, மேலும் அவர் சர்வசக்தியுடையவர்.
64:2. அவர்தான் உங்களைப் படைத்தவர், பின்னர் உங்களுக்கிடையில் நம்பமறுப்பவரும் நம்பிக்கையாளரும் இருக்கின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.
64:3. வானங்களையும் பூமியையும் குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே* அவர் படைத்தார், உங்களை வடிவமைத்தார், மேலும் உங்களுடைய வடிவத்தை மிகச் சரியாக அமைத்தார், பின்னர் உங்களுடைய இறுதி விதி அவரிடமே உள்ளது.
*64:3 கடவுளின் அளவற்ற கருணையின் காரணமாகவே நாம் இவ்வுலகில் இருக்கின்றோம். மிக்க அருளாளர் நம்மை மீட்டுக் கொள்வதற்காகவே நமக்கு ஒரு வாய்ப்புத் தந்திருக்கின்றார். அறிமுகவுரை மற்றும் பின்இணைப்பு 7ஐப் பார்க்க.
64:4. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார், மேலும் நீங்கள் மறைக்கின்ற ஒவ்வொன்றையும் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். உள்ளார்ந்த எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
64:5. கடந்த காலத்தில் நம்பமறுத்து, பின்னர் தங்களுடைய தீர்மானங்களின் பின் விளைவுகளை அனுபவித்தவர்களை நீங்கள் கவனித்தீர்களா? வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.
64:6. இது ஏனெனில், அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள் கூறினர், "நம்மைப் போன்ற மானிடர்களையா நாம் பின்பற்ற வேண்டும்?" அவர்கள் நம்பமறுத்தனர், மேலும் திரும்பிச் சென்று விட்டனர். அவர்களின் தேவை கடவுள்-க்கு இல்லை; கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
64:7. நம்பமறுப்பவர்கள் தாங்கள் உயிர்த்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், மெய்யாகவே, என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் உயிர்த்தெழுப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றுக்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.
64:8. ஆகவே, நீங்கள் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீதும், மேலும் இதிலே நாம் வெளிப்படுத்தியுள்ள இந்த ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.
64:9. ஒன்று திரட்டுகின்ற அந்நாளுக்காக அவர் உங்களை ஒன்று திரட்டுகின்ற அந்நாள் வரும். அது தான் பரஸ்பரம் பழித்துக் கொள்கின்ற நாளாகும். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் நீக்கி விடுவார், மேலும் ஆறுகள் பாயும் தோட்டங்களுக்குள் அவரை அனுமதிப்பார். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான பெரு வெற்றியாகும்.
64:10. நம்பமறுத்து நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தான் நரக நெருப்பில் வசிப்பவர்கள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். என்ன ஒரு துன்பகரமான விதி!
64:11. கடவுள்-ன் நாட்டத்திற்கு ஏற்பவே தவிர எந்த ஒன்றும் உங்களுக்கு நிகழ்வதில்லை. எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய இதயத்தை அவர் வழிநடத்துவார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
64:12. நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிய வேண்டும், அத்துடன் நீங்கள் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே இறைப்பணி தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதேயாகும்.
64:13. கடவுள்: அவருடன் வேறு தெய்வம் இல்லை. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
64:14. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் உங்களுடைய பிள்ளைகளும் உங்களுடைய விரோதிகளாக இருக்கக்கூடும்; எச்சரிக்கை. நீங்கள் பிழை பொறுத்து, மறந்து, மன்னித்து விட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
64:15. உங்களுடைய பணமும் பிள்ளைகளும் ஒரு சோதனையாகும், மேலும் மகத்தானதொரு பிரதிபலன் கடவுள் வசமுள்ளது.
64:16. ஆகையால், நீங்கள் உங்களால் இயன்றவரை கடவுள் -யிடம் பக்தியோடிருக்கவும், கவனத்துடன் செவியேற்கவும், கீழ்ப்படியவும், மேலும் உங்களுடைய சொந்த நலனுக்காக (தர்மம்) கொடுக்கவும் வேண்டும். எவரொருவர் தன் சொந்தக் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றாரோ, இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
64:17. நீங்கள் நன்னெறியின் கடனைக் கடவுள்-க்கு கடனளித்தால், அவர் உங்களுக்குரிய வெகுமதியைப் பன்மடங்காகப் பெருக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் நன்றி பாராட்டுபவர், கனிவானவர்.
64:18. அனைத்து இரகசியங்களையும் அறிவிப்புக்களையும் அறிந்தவர்; எல்லாம் வல்லவர். ஞானம் மிகுந்தவர்.