Find
Chapter 62: Al-Jumu`ah
62:0-11
11 verses Revelation order 110
سورة الجمعة

. ١:٦٢ يُسَبِّحُ لِلَّهِ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ المَلِكِ القُدّوسِ العَزيزِ الحَكيمِ

. ٢:٦٢ هُوَ الَّذى بَعَثَ فِى الأُمِّيّـۧنَ رَسولًا مِنهُم يَتلوا عَلَيهِم ءايٰتِهِ وَيُزَكّيهِم وَيُعَلِّمُهُمُ الكِتٰبَ وَالحِكمَةَ وَإِن كانوا مِن قَبلُ لَفى ضَلٰلٍ مُبينٍ

. ٣:٦٢ وَءاخَرينَ مِنهُم لَمّا يَلحَقوا بِهِم وَهُوَ العَزيزُ الحَكيمُ

. ٤:٦٢ ذٰلِكَ فَضلُ اللَّهِ يُؤتيهِ مَن يَشاءُ وَاللَّهُ ذُو الفَضلِ العَظيمِ

. ٥:٦٢ مَثَلُ الَّذينَ حُمِّلُوا التَّورىٰةَ ثُمَّ لَم يَحمِلوها كَمَثَلِ الحِمارِ يَحمِلُ أَسفارًا بِئسَ مَثَلُ القَومِ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِ اللَّهِ وَاللَّهُ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ

. ٦:٦٢ قُل يٰأَيُّهَا الَّذينَ هادوا إِن زَعَمتُم أَنَّكُم أَولِياءُ لِلَّهِ مِن دونِ النّاسِ فَتَمَنَّوُا المَوتَ إِن كُنتُم صٰدِقينَ

. ٧:٦٢ وَلا يَتَمَنَّونَهُ أَبَدًا بِما قَدَّمَت أَيديهِم وَاللَّهُ عَليمٌ بِالظّٰلِمينَ

. ٨:٦٢ قُل إِنَّ المَوتَ الَّذى تَفِرّونَ مِنهُ فَإِنَّهُ مُلٰقيكُم ثُمَّ تُرَدّونَ إِلىٰ عٰلِمِ الغَيبِ وَالشَّهٰدَةِ فَيُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ

. ٩:٦٢ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا نودِىَ لِلصَّلوٰةِ مِن يَومِ الجُمُعَةِ فَاسعَوا إِلىٰ ذِكرِ اللَّهِ وَذَرُوا البَيعَ ذٰلِكُم خَيرٌ لَكُم إِن كُنتُم تَعلَمونَ

. ١٠:٦٢ فَإِذا قُضِيَتِ الصَّلوٰةُ فَانتَشِروا فِى الأَرضِ وَابتَغوا مِن فَضلِ اللَّهِ وَاذكُرُوا اللَّهَ كَثيرًا لَعَلَّكُم تُفلِحونَ

. ١١:٦٢ وَإِذا رَأَوا تِجٰرَةً أَو لَهوًا انفَضّوا إِلَيها وَتَرَكوكَ قائِمًا قُل ما عِندَ اللَّهِ خَيرٌ مِنَ اللَّهوِ وَمِنَ التِّجٰرَةِ وَاللَّهُ خَيرُ الرّٰزِقينَ

Friday

62:1. Glorifying God is everything in the heavens and everything on earth; the King, the Most Sacred, the Almighty, the Most Wise.

62:2. He is the One who sent to the gentiles a messenger from among them, to recite to them His revelations, purify them, and teach them the scripture and wisdom. Before this, they had gone far astray.

62:3. And to many generations subsequent to them. He is the Almighty, Most Wise.

62:4. Such is God's grace that He bestows upon whomever He wills. God is Possessor of Infinite Grace.

62:5. The example of those who were given the Torah, then failed to uphold it, is like the donkey carrying great works of literature. Miserable indeed is the example of people who rejected God's revelations. God does not guide the wicked people.

62:6. Say, "O you who are Jewish, if you claim that you are God's chosen, to the exclusion of all other people, then you should long for death if you are truthful!"

62:7. They will never long for it, because of what they have committed. God is fully aware of the wicked.

62:8. Say, "The death that you are trying to evade will catch up with you sooner or later. Then you will be returned to the Knower of all secrets and declarations, then He will inform you of everything you had done."

62:9. O you who believe, when the Congregational Prayer (Salat Al-Jumu`ah) is announced on Friday, you shall hasten to the commemoration of God, and drop all business. This is better for you, if you only knew.

62:10. Once the prayer is completed, you may spread through the land to seek God's bounties, and continue to remember God frequently, that you may succeed.

62:11. When some of them come across a business deal, or some entertainment, they rush to it and leave you standing! Say, "What God possesses is far better than the entertainment or the business. God is the best Provider."

வெள்ளிக்கிழமை

62:1. வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன; அரசர், மிகப் புனிதமானவர், எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

62:2. அவர்தான் வேதம் வழங்கப்படாத மக்களுக்கு அவர்களுக்கிடையிலிருந்தே ஒரு தூதரை, தன்னுடைய வெளிப்பாடுகளை அவர்களுக்கு எடுத்துரைக்கவும், அவர்களைத் தூய்மைப்படுத்தவும், மேலும் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கவும் அனுப்பியவர். இதற்கு முன்னர், அவர்கள் மிக நெடிய வழி கேட்டில் சென்று விட்டிருந்தனர்.

62:3. மேலும் அவர்களுக்குப் பின்னர் ஏராளமான தலை முறையினர்களுக்கும். அவர்தான் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

62:4. தான் நாடுகின்ற எவர் மீதும் அவர் அருள்கின்ற கடவுள்-ன் அருட்கொடை இத்தகையதேயாகும். கடவுள் எல்லையற்ற கருணையை உடையவர்.

62:5. தோராவைக் கொடுக்கப் பெற்று, பின்னர் அதனை ஆதரிக்கத் தவறியவர்களுக்குரிய உதாரணமாவது, மாபெரும் இலக்கிய நூல்களை சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கின்ற மக்களின் உதாரணம் உண்மையில் இழிவானதேயாகும். தீய மக்களைக் கடவுள் வழி நடத்துவதில்லை.

62:6. கூறுவீராக, "யூதர்களாக இருப்பவர்களே உங்களைத்தான், மற்ற மக்கள் அனைவரையும் தவிர்த்து, நீங்கள் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று நீங்கள் கோருவீர்களாயின், பின்னர் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் மரணத்தை விரும்ப வேண்டும்!"

62:7. அவர்கள் செய்தவற்றின் காரணத்தால், அவர்கள் ஒருபோதும் அதனை விரும்ப மாட்டார்கள். கடவுள் தீயவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

62:8. கூறுவீராக, நீங்கள் தவிர்த்து விட முயல்கின்ற அந்த மரணமானது, விரைவிலோ அல்லது தாமதமாகவோ உங்களை வந்தடைந்து விடும். பின்னர் அனைத்து இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.

62:9. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், வெள்ளிக்கிழமை அன்று கூட்டுத்தொழுகை (ஸலாத் அல்-ஜுமுஆ) அறிவிக்கப்படும் பொழுது, கடவுள்-ஐ நினைவு கூர்வதற்காக நீங்கள் விரைந்து செல்லவும், வேலைகள் அனைத்தையும் போட்டு விடவும் வேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் சிறந்ததாகும்.

62:10. தொழுகை முடிந்து விட்டவுடன், கடவுள்-ன் அருட் கொடைகளைத் தேடுவதற்காக பூமி முழுவதும் நீங்கள் பரவிச் செல்லலாம், மேலும் நீங்கள் வெற்றி பெறுவதற்காக, தொடர்ந்து கடவுள்-ஐ அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள்.

62:11. அவர்களில் சிலர் ஒரு வியாபாரப் பரிவர்த்தனையையோ, அல்லது ஏதேனும் பொழுது போக்கினையோ காண நேரும் போது, உம்மை நின்று கொண்டிருக்க விட்டுவிட்டு அவர்கள் அதன்பால் விரைந்து சென்று விடுகின்றனர்! கூறுவீராக, "கடவுள் வசமிருப்பது பொழுது போக்கினையோ அல்லது வியாபாரத்தையோ விட மிகவும் மேலானதாகும். கடவுள்தான் வழங்குபவர்களில் மிகச் சிறந்தவர்."