Find
Chapter 60: Al-Mumtahanah
60:0-13
13 verses Revelation order 91
سورة الممتحنة

. ١:٦٠ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَتَّخِذوا عَدُوّى وَعَدُوَّكُم أَولِياءَ تُلقونَ إِلَيهِم بِالمَوَدَّةِ وَقَد كَفَروا بِما جاءَكُم مِنَ الحَقِّ يُخرِجونَ الرَّسولَ وَإِيّاكُم أَن تُؤمِنوا بِاللَّهِ رَبِّكُم إِن كُنتُم خَرَجتُم جِهٰدًا فى سَبيلى وَابتِغاءَ مَرضاتى تُسِرّونَ إِلَيهِم بِالمَوَدَّةِ وَأَنا۠ أَعلَمُ بِما أَخفَيتُم وَما أَعلَنتُم وَمَن يَفعَلهُ مِنكُم فَقَد ضَلَّ سَواءَ السَّبيلِ

. ٢:٦٠ إِن يَثقَفوكُم يَكونوا لَكُم أَعداءً وَيَبسُطوا إِلَيكُم أَيدِيَهُم وَأَلسِنَتَهُم بِالسّوءِ وَوَدّوا لَو تَكفُرونَ

. ٣:٦٠ لَن تَنفَعَكُم أَرحامُكُم وَلا أَولٰدُكُم يَومَ القِيٰمَةِ يَفصِلُ بَينَكُم وَاللَّهُ بِما تَعمَلونَ بَصيرٌ

. ٤:٦٠ قَد كانَت لَكُم أُسوَةٌ حَسَنَةٌ فى إِبرٰهيمَ وَالَّذينَ مَعَهُ إِذ قالوا لِقَومِهِم إِنّا بُرَءٰؤُا۟ مِنكُم وَمِمّا تَعبُدونَ مِن دونِ اللَّهِ كَفَرنا بِكُم وَبَدا بَينَنا وَبَينَكُمُ العَدٰوَةُ وَالبَغضاءُ أَبَدًا حَتّىٰ تُؤمِنوا بِاللَّهِ وَحدَهُ إِلّا قَولَ إِبرٰهيمَ لِأَبيهِ لَأَستَغفِرَنَّ لَكَ وَما أَملِكُ لَكَ مِنَ اللَّهِ مِن شَىءٍ رَبَّنا عَلَيكَ تَوَكَّلنا وَإِلَيكَ أَنَبنا وَإِلَيكَ المَصيرُ

. ٥:٦٠ رَبَّنا لا تَجعَلنا فِتنَةً لِلَّذينَ كَفَروا وَاغفِر لَنا رَبَّنا إِنَّكَ أَنتَ العَزيزُ الحَكيمُ

. ٦:٦٠ لَقَد كانَ لَكُم فيهِم أُسوَةٌ حَسَنَةٌ لِمَن كانَ يَرجُوا اللَّهَ وَاليَومَ الـٔاخِرَ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الغَنِىُّ الحَميدُ

. ٧:٦٠ عَسَى اللَّهُ أَن يَجعَلَ بَينَكُم وَبَينَ الَّذينَ عادَيتُم مِنهُم مَوَدَّةً وَاللَّهُ قَديرٌ وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

. ٨:٦٠ لا يَنهىٰكُمُ اللَّهُ عَنِ الَّذينَ لَم يُقٰتِلوكُم فِى الدّينِ وَلَم يُخرِجوكُم مِن دِيٰرِكُم أَن تَبَرّوهُم وَتُقسِطوا إِلَيهِم إِنَّ اللَّهَ يُحِبُّ المُقسِطينَ

. ٩:٦٠ إِنَّما يَنهىٰكُمُ اللَّهُ عَنِ الَّذينَ قٰتَلوكُم فِى الدّينِ وَأَخرَجوكُم مِن دِيٰرِكُم وَظٰهَروا عَلىٰ إِخراجِكُم أَن تَوَلَّوهُم وَمَن يَتَوَلَّهُم فَأُولٰئِكَ هُمُ الظّٰلِمونَ

. ١٠:٦٠ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا جاءَكُمُ المُؤمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامتَحِنوهُنَّ اللَّهُ أَعلَمُ بِإيمٰنِهِنَّ فَإِن عَلِمتُموهُنَّ مُؤمِنٰتٍ فَلا تَرجِعوهُنَّ إِلَى الكُفّارِ لا هُنَّ حِلٌّ لَهُم وَلا هُم يَحِلّونَ لَهُنَّ وَءاتوهُم ما أَنفَقوا وَلا جُناحَ عَلَيكُم أَن تَنكِحوهُنَّ إِذا ءاتَيتُموهُنَّ أُجورَهُنَّ وَلا تُمسِكوا بِعِصَمِ الكَوافِرِ وَسـَٔلوا ما أَنفَقتُم وَليَسـَٔلوا ما أَنفَقوا ذٰلِكُم حُكمُ اللَّهِ يَحكُمُ بَينَكُم وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

. ١١:٦٠ وَإِن فاتَكُم شَىءٌ مِن أَزوٰجِكُم إِلَى الكُفّارِ فَعاقَبتُم فَـٔاتُوا الَّذينَ ذَهَبَت أَزوٰجُهُم مِثلَ ما أَنفَقوا وَاتَّقُوا اللَّهَ الَّذى أَنتُم بِهِ مُؤمِنونَ

. ١٢:٦٠ يٰأَيُّهَا النَّبِىُّ إِذا جاءَكَ المُؤمِنٰتُ يُبايِعنَكَ عَلىٰ أَن لا يُشرِكنَ بِاللَّهِ شَيـًٔا وَلا يَسرِقنَ وَلا يَزنينَ وَلا يَقتُلنَ أَولٰدَهُنَّ وَلا يَأتينَ بِبُهتٰنٍ يَفتَرينَهُ بَينَ أَيديهِنَّ وَأَرجُلِهِنَّ وَلا يَعصينَكَ فى مَعروفٍ فَبايِعهُنَّ وَاستَغفِر لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

. ١٣:٦٠ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَتَوَلَّوا قَومًا غَضِبَ اللَّهُ عَلَيهِم قَد يَئِسوا مِنَ الـٔاخِرَةِ كَما يَئِسَ الكُفّارُ مِن أَصحٰبِ القُبورِ

The Test

60:1. O you who believe, you shall not befriend My enemies and your enemies, extending love and friendship to them, even though they have disbelieved in the truth that has come to you. They persecute the messenger, and you, just because you believe in God, your Lord. If you mobilize to struggle in My cause, seeking My blessings, how can you secretly love them? I am fully aware of everything you conceal, and everything you declare. Those among you who do this have indeed strayed off the right path.

60:2. Whenever they encounter you, they treat you as enemies, and hurt you with their hands and tongues. They want you to disbelieve.

60:3. Your relatives and your [children]* can never help you. On the Day of Resurrection, He will judge among you. God is Seer of everything you do.

*60:3 The Arabic word "awladukum", [children], occurs in the Arabic text of the above verse and was translated as "your money".

60:4. A good example has been set for you by Abraham and those with him. They said to their people, "We disown you and the idols that you worship besides God. We denounce you, and you will see nothing from us except animosity and hatred until you believe in God ALONE."* However, a mistake was committed by Abraham when he said to his father, "I will pray for your forgiveness,** but I possess no power to protect you from God." "Our Lord, we trust in You, and submit to You; to You is the final destiny.

*60:4 The Arabic word for ``ALONE'' (WAHDAHU) occurs only six times in the Quran, one of them refers to upholding the Quran ALONE (17:46). The reference to God ALONE occurs in 7:70, 39:45, 40:12 & 84, and 60:4. The sum of these numbers (7+70+39+45+40+ 12+84+60+4) equals 361, or 19x19. This emphasizes that the main theme of the Quran is ``Worship God ALONE.'' See Appendix 1. **60:4 We can pray for guidance for the idolators, not forgiveness, since God's law is that idolatry is the only unforgivable offense (4:48 & 116).

60:5. "Our Lord, let us not be oppressed by those who disbelieved, and forgive us. You are the Almighty, Most Wise."

60:6. A good example has been set by them for those who seek God and the Last Day. As for those who turn away, God is in no need (of them), Most Praiseworthy.

60:7. God may change the animosity between you and them into love. God is Omnipotent. God is Forgiver, Most Merciful.

60:8. God does not enjoin you from befriending those who do not fight you because of religion, and do not evict you from your homes. You may befriend them and be equitable towards them. God loves the equitable.

60:9. God enjoins you only from befriending those who fight you because of religion, evict you from your homes, and band together with others to banish you. You shall not befriend them. Those who befriend them are the transgressors.

60:10. O you who believe, when believing women (abandon the enemy and) ask for asylum with you, you shall test them. God is fully aware of their belief. Once you establish that they are believers, you shall not return them to the disbelievers. They are not lawful to remain married to them, nor shall the disbelievers be allowed to marry them. Give back the dowries that the disbelievers have paid. You commit no error by marrying them, so long as you pay them their due dowries. Do not keep disbelieving wives (if they wish to join the enemy). You may ask them for the dowry you had paid, and they may ask for what they paid. This is God's rule; He rules among you. God is Omniscient, Most Wise.

60:11. If any of your wives join the enemies' camp, and you are forced to fight, you shall force the enemy to compensate the men who lost their wives, by giving them what they spent on their wives. You shall reverence God, in whom you believe.

60:12. O you prophet, when the believing women (who abandoned the disbelievers) to seek asylum with you pledge to you that they will not set up any idols besides God, nor steal, nor commit adultery, nor kill their children, nor fabricate any falsehood, nor disobey your righteous orders, you shall accept their pledge, and pray to God to forgive them. God is Forgiver, Most Merciful.

60:13. O you who believe, do not befriend people with whom God is angry, and who are hopelessly stuck in disbelief; they are just as hopeless as the disbelievers who are already in the graves.

பரிசோதனை

60:1. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், உங்களிடம் வந்திருக்கின்ற சத்தியத்தை அவர்கள் நம்ப மறுத்துவிட்ட போதிலும், நேசத்தையும் நட்பையும் அவர்கள்பால் காட்டியவர்களாக, என்னுடைய விரோதிகளுடனும் உங்களுடைய விரோதிகளுடனும் நீங்கள் நட்புக் கொள்ள வேண்டாம். உங்கள் இரட்சகரான, கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டதற்காக மட்டுமே, தூதரையும், உங்களையும் அவர்கள் வன்கொடுமை செய்கின்றனர். என்னுடைய ஆசீர் வாதங்களைத் தேடியவர்களாக, என் நிமித்தம் போராடுவதற்காக நீங்கள் புறப்பட்டால், எவ்வாறு நீங்கள் அவர்களை இரகசியமாக நேசிக்க முடியும்? நீங்கள் மறைத்துக் கொள்கின்ற ஒவ்வொன்றையும் நீங்கள் அறிவிக்கின்ற ஒவ்வொன்றையும் நான் முற்றிலும் அறிந்திருக்கின்றேன். உங்களுக்கிடையில் இதனைச் செய்கின்றவர்கள் உண்மையில் சரியான பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டனர்.

60:2. உங்களை அவர்கள் எதிர்கொள்ளும் பொழுதெல்லாம், விரோதிகளைப் போல் அவர்கள் உங்கiளை நடத்துகின்றனர், மேலும் தங்களுடைய கரங்களாலும் நாவுகளாலும் உங்களைத் துன்புறுத்துகின்றனர். நீங்கள் நம்பமறுக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

60:3. உங்களுடைய உறவினர்களும், உங்களுடைய பணமும் ஒருபோதும் உங்களுக்கு உதவ இயலாது. உயிர்த் தெழுப்பப்படுகின்ற நாளில், உங்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.

60:4. ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய சமூகத்தாரிடம் கூறினர், "உங்களையும் கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபடுபவற்றையும் விட்டு நாங்கள் விலகிக் கொண்டோம். உங்களை நாங்கள் கண்டனம் செய்கின்றோம், மேலும் கடவுள் மட்டும்* என்பதில் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, எங்களிடமிருந்து பகைமையையும் வெறுப்பையும் தவிர எந்த ஒன்றையும் நீங்கள் காணமாட்டீர்கள்." ஆயினும், அவர் தன் தந்தையிடம் "உம்முடைய பாவமன்னிப்பிற்காக நான் பிரார்த்திப்பேன்,** ஆனாலும் கடவுள்-யிடமிருந்து உம்மைக்காக்கின்ற எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை," என்று கூறிய பொழுது ஆப்ரஹாம் ஒரு தவறு புரிந்துவிட்டார். "எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்துகின்றோம், மேலும் உமக்குச் சரணடைகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.

*60:4 மட்டும் என்பதற்குரிய அரபி வார்த்தை (வஹ்தஹு) ஆறுமுறைகள் மட்டுமே குர்ஆனில் இடம் பெறுகின்றன, அவற்றில் ஒன்று குர்ஆனை மட்டும் உயர்த்திப் பிடிப்பதைக் குறிக்கின்றது 17:46. கடவுள் மட்டும் என்பதைக் குறிப்பவை 7:70 39:45 40:12,84 மற்றும் 60:4 ஆகியவற்றில் இடம் பெறுகின்றன. இந்த எண்களின் கூட்டுத் தொகை யானது (7+70+ 39+ 45+40+12+84+60+4) 361க்குச் சமமாகின்றது, அல்லது 19x19. குர்ஆனின் பிரதான மூலக்கரு, கடவுளை மட்டும் வழிபடுங் கள், என்பதேயாகும் என இது அழுத்தமாகக் கூறுகின்றது. பார்க்க பின் இணைப்பு 1.rnrn**60:4 போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களுடைய வழிகாட்டலுக்காக நாம் பிரார்த்திக்கலாம், மன்னிப்பிற்கல்ல, ஏனெ னில் மன்னிக்கப்பட மாட்டாத ஒரேபாவம் இணை வழிபாடேயாகும் என்பது கடவுளின் சட்டமாகும் 4:48 &116).

60:5. "எங்கள் இரட்சகரே, நம்பமறுத்து விட்டவர்களால் அடக்கு முறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்."

60:6. கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. திரும்பிச் சென்று விடுபவர்களைப் பொறுத்தவரை(அவர்களிடம்) கடவுள் எந்தத் தேவையுமற்றவர், மிகவும் புகழுக்குத் தகுதியானவர்.

60:7. கடவுள் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பகைமையை நேசமாக மாற்றி விடக் கூடும். கடவுள் சர்வசக்தியுடையவர். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

60:8. உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிடாதவர்கள், மேலும் உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து கடவுள் உங்களைத் தடுக்கவில்லை. நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளலாம், மேலும் அவர்கள்பால் நீதத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீதிமான்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

60:9. உங்களுடைய மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் சண்டையிட்டு, உங்களுடைய வீடுகளை விட்டு உங்களை வெளியேற்றி, மேலும் உங்களை வெளியேற்றுவதற்காக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்பவர்களுடன் நட்புக் கொள்வதிலிருந்து மட்டுமே கடவுள் உங்களைத் தடுக்கின்றார். நீங்கள் அவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம். அவர்களுடன் நட்புக் கொள்பவர்கள்தான் வரம்புமீறுபவர்கள்.

60:10. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நம்பிக்கை கொண்ட பெண்கள் (எதிரியைக் கைவிட்டு விட்டு வந்து) உங்களிடம் அபயம் கோரினால், நீங்கள் அவர்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய நம்பிக்கையைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர்கள் நம்பிக்கையாளர்கள் தான் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், நம்பமறுப்பவர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விட வேண்டாம். அவர்களுடன் திருமண உறவில் தொடர்ந்திருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர், அன்றி அவர்களை மணந்து கொள்ள நம்பமறுப்பவர்களை அனுமதிக்கவும் வேண்டாம். நம்பமறுப்பவர்கள் செலுத்திய சீதனத்தைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். அவர்களுக்குரிய சீதனத்தை நீங்கள் செலுத்தி விட்டால், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதன் மூலம் நீங்கள் தவறெதுவும் செய்து விடவில்லை. நம்பமறுக்கின்ற மனைவியரை (அவர்கள் எதிரியுடன் சேர்ந்து கொள்ள விரும்பினால்) நீங்கள் தடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் செலுத்திய சீதனத் தொகையை நீங்கள் கேட்கலாம், மேலும் அவர்கள் கொடுத்தவற்றை அவர்கள் கேட்கலாம். இது கடவுள்-ன் தீர்ப்பாகும்; அவர் உங்களுக்கிடையில் தீர்ப்பளிக்கின்றார். கடவுள் சர்வமும் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

60:11. உங்கள் மனைவியரில் எவரேனும் எதிரிகளின் பாசறையில் சேர்ந்து கொண்டால், மேலும் சண்டையிடுவதற்கு நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால், தங்கள் மனைவியரை இழந்த அந்த ஆண்களுக்கு, அவர்கள் தங்கள் மனைவியருக்காகச் செலவு செய்ததைக் கொடுப்பதன் மூலம் நஷ்டஈடு செய்ய எதிரியை நீங்கள் நிர்ப்பந்திக்க வேண்டும். எவர் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களோ, அந்தக் கடவுள்-யிடம் நீங்கள் பக்தியோடிருக்க வேண்டும்.

60:12. நபியே உம்மைத்தான், (நம்பமறுப்பவர்களைக்கை விட்டு விட்டவர்களான) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் அபயம் தேடுவதற்காக வந்து, அவர்கள், கடவுள்-வுடன் எந்த போலித் தெய்வங்களையும் அமைத்துக் கொள்ள மாட்டோம், அன்றித் திருடமாட்டோம், அன்றி விபசாரம் செய்ய மாட்டோம், அன்றித் தங்களுடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், அன்றிப் பொய்மை எதனையும் புனைந்துரைக்க மாட்டோம், அன்றி உம்முடைய நன்னெறியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதிருக்கமாட்டோம் என்று உம்மிடம் உறுதி மொழி செய்தால், நீர் அவர்களுடைய உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளவும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கடவுள்-ஐப் பிரார்த்திக்கவும் வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

60:13. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், கடவுள் கோபம் கொண்டிருக்கின்ற, மேலும் எதிர்பார்க்கவே முடியாதவாறு நம்பமறுப்பில் ஒட்டிக் கொண்டு விட்ட மக்களுடன் நீங்கள் நட்புக் கொள்ளக் கூடாது; ஏற்கனவே சமாதிகளில் இருக்கின்ற நம்பமறுப்பவர்களைப் போல் அதேவிதமாக அவர்கள் எதிர்பார்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.