Find
Chapter 58: Al-Mujaadalah
58:0-22
22 verses Revelation order 105
سورة المجادلة

. ١:٥٨ قَد سَمِعَ اللَّهُ قَولَ الَّتى تُجٰدِلُكَ فى زَوجِها وَتَشتَكى إِلَى اللَّهِ وَاللَّهُ يَسمَعُ تَحاوُرَكُما إِنَّ اللَّهَ سَميعٌ بَصيرٌ

. ٢:٥٨ الَّذينَ يُظٰهِرونَ مِنكُم مِن نِسائِهِم ما هُنَّ أُمَّهٰتِهِم إِن أُمَّهٰتُهُم إِلَّا الّٰـٔى وَلَدنَهُم وَإِنَّهُم لَيَقولونَ مُنكَرًا مِنَ القَولِ وَزورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفورٌ

. ٣:٥٨ وَالَّذينَ يُظٰهِرونَ مِن نِسائِهِم ثُمَّ يَعودونَ لِما قالوا فَتَحريرُ رَقَبَةٍ مِن قَبلِ أَن يَتَماسّا ذٰلِكُم توعَظونَ بِهِ وَاللَّهُ بِما تَعمَلونَ خَبيرٌ

. ٤:٥٨ فَمَن لَم يَجِد فَصِيامُ شَهرَينِ مُتَتابِعَينِ مِن قَبلِ أَن يَتَماسّا فَمَن لَم يَستَطِع فَإِطعامُ سِتّينَ مِسكينًا ذٰلِكَ لِتُؤمِنوا بِاللَّهِ وَرَسولِهِ وَتِلكَ حُدودُ اللَّهِ وَلِلكٰفِرينَ عَذابٌ أَليمٌ

. ٥:٥٨ إِنَّ الَّذينَ يُحادّونَ اللَّهَ وَرَسولَهُ كُبِتوا كَما كُبِتَ الَّذينَ مِن قَبلِهِم وَقَد أَنزَلنا ءايٰتٍ بَيِّنٰتٍ وَلِلكٰفِرينَ عَذابٌ مُهينٌ

. ٦:٥٨ يَومَ يَبعَثُهُمُ اللَّهُ جَميعًا فَيُنَبِّئُهُم بِما عَمِلوا أَحصىٰهُ اللَّهُ وَنَسوهُ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدٌ

. ٧:٥٨ أَلَم تَرَ أَنَّ اللَّهَ يَعلَمُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ ما يَكونُ مِن نَجوىٰ ثَلٰثَةٍ إِلّا هُوَ رابِعُهُم وَلا خَمسَةٍ إِلّا هُوَ سادِسُهُم وَلا أَدنىٰ مِن ذٰلِكَ وَلا أَكثَرَ إِلّا هُوَ مَعَهُم أَينَ ما كانوا ثُمَّ يُنَبِّئُهُم بِما عَمِلوا يَومَ القِيٰمَةِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَىءٍ عَليمٌ

. ٨:٥٨ أَلَم تَرَ إِلَى الَّذينَ نُهوا عَنِ النَّجوىٰ ثُمَّ يَعودونَ لِما نُهوا عَنهُ وَيَتَنٰجَونَ بِالإِثمِ وَالعُدوٰنِ وَمَعصِيَتِ الرَّسولِ وَإِذا جاءوكَ حَيَّوكَ بِما لَم يُحَيِّكَ بِهِ اللَّهُ وَيَقولونَ فى أَنفُسِهِم لَولا يُعَذِّبُنَا اللَّهُ بِما نَقولُ حَسبُهُم جَهَنَّمُ يَصلَونَها فَبِئسَ المَصيرُ

. ٩:٥٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا تَنٰجَيتُم فَلا تَتَنٰجَوا بِالإِثمِ وَالعُدوٰنِ وَمَعصِيَتِ الرَّسولِ وَتَنٰجَوا بِالبِرِّ وَالتَّقوىٰ وَاتَّقُوا اللَّهَ الَّذى إِلَيهِ تُحشَرونَ

. ١٠:٥٨ إِنَّمَا النَّجوىٰ مِنَ الشَّيطٰنِ لِيَحزُنَ الَّذينَ ءامَنوا وَلَيسَ بِضارِّهِم شَيـًٔا إِلّا بِإِذنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَليَتَوَكَّلِ المُؤمِنونَ

. ١١:٥٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا قيلَ لَكُم تَفَسَّحوا فِى المَجٰلِسِ فَافسَحوا يَفسَحِ اللَّهُ لَكُم وَإِذا قيلَ انشُزوا فَانشُزوا يَرفَعِ اللَّهُ الَّذينَ ءامَنوا مِنكُم وَالَّذينَ أوتُوا العِلمَ دَرَجٰتٍ وَاللَّهُ بِما تَعمَلونَ خَبيرٌ

. ١٢:٥٨ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِذا نٰجَيتُمُ الرَّسولَ فَقَدِّموا بَينَ يَدَى نَجوىٰكُم صَدَقَةً ذٰلِكَ خَيرٌ لَكُم وَأَطهَرُ فَإِن لَم تَجِدوا فَإِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

. ١٣:٥٨ ءَأَشفَقتُم أَن تُقَدِّموا بَينَ يَدَى نَجوىٰكُم صَدَقٰتٍ فَإِذ لَم تَفعَلوا وَتابَ اللَّهُ عَلَيكُم فَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَأَطيعُوا اللَّهَ وَرَسولَهُ وَاللَّهُ خَبيرٌ بِما تَعمَلونَ

. ١٤:٥٨ أَلَم تَرَ إِلَى الَّذينَ تَوَلَّوا قَومًا غَضِبَ اللَّهُ عَلَيهِم ما هُم مِنكُم وَلا مِنهُم وَيَحلِفونَ عَلَى الكَذِبِ وَهُم يَعلَمونَ

. ١٥:٥٨ أَعَدَّ اللَّهُ لَهُم عَذابًا شَديدًا إِنَّهُم ساءَ ما كانوا يَعمَلونَ

. ١٦:٥٨ اتَّخَذوا أَيمٰنَهُم جُنَّةً فَصَدّوا عَن سَبيلِ اللَّهِ فَلَهُم عَذابٌ مُهينٌ

. ١٧:٥٨ لَن تُغنِىَ عَنهُم أَموٰلُهُم وَلا أَولٰدُهُم مِنَ اللَّهِ شَيـًٔا أُولٰئِكَ أَصحٰبُ النّارِ هُم فيها خٰلِدونَ

. ١٨:٥٨ يَومَ يَبعَثُهُمُ اللَّهُ جَميعًا فَيَحلِفونَ لَهُ كَما يَحلِفونَ لَكُم وَيَحسَبونَ أَنَّهُم عَلىٰ شَىءٍ أَلا إِنَّهُم هُمُ الكٰذِبونَ

. ١٩:٥٨ استَحوَذَ عَلَيهِمُ الشَّيطٰنُ فَأَنسىٰهُم ذِكرَ اللَّهِ أُولٰئِكَ حِزبُ الشَّيطٰنِ أَلا إِنَّ حِزبَ الشَّيطٰنِ هُمُ الخٰسِرونَ

. ٢٠:٥٨ إِنَّ الَّذينَ يُحادّونَ اللَّهَ وَرَسولَهُ أُولٰئِكَ فِى الأَذَلّينَ

. ٢١:٥٨ كَتَبَ اللَّهُ لَأَغلِبَنَّ أَنا۠ وَرُسُلى إِنَّ اللَّهَ قَوِىٌّ عَزيزٌ

. ٢٢:٥٨ لا تَجِدُ قَومًا يُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الـٔاخِرِ يُوادّونَ مَن حادَّ اللَّهَ وَرَسولَهُ وَلَو كانوا ءاباءَهُم أَو أَبناءَهُم أَو إِخوٰنَهُم أَو عَشيرَتَهُم أُولٰئِكَ كَتَبَ فى قُلوبِهِمُ الإيمٰنَ وَأَيَّدَهُم بِروحٍ مِنهُ وَيُدخِلُهُم جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ خٰلِدينَ فيها رَضِىَ اللَّهُ عَنهُم وَرَضوا عَنهُ أُولٰئِكَ حِزبُ اللَّهِ أَلا إِنَّ حِزبَ اللَّهِ هُمُ المُفلِحونَ

The Debate

58:1. God has heard the woman who debated with you about her husband, and complained to God. God heard everything the two of you discussed. God is Hearer, Seer.

58:2. Those among you who estrange their wives (by declaring them as forbidden in sex) as their mothers know full well that they are not their mothers. Their mothers are the women who gave birth to them. Indeed, they are committing a blasphemy and a falsehood. God is Pardoner, Forgiver.

*58:2 Estranging a wife by declaring that she is like one's mother was an ancient tradition in Arabia. This is the only sura where the word ``Allah'' occurs in every verse.

58:3. Those who estrange their wives in this manner, then reconcile thereafter, shall atone by freeing a slave before resuming their sexual relations. This is to enlighten you. God is Cognizant of everything you do.

58:4. If you cannot find a slave to free, you shall fast two consecutive months before resuming sexual relations. If you cannot fast, then you shall feed sixty poor people. You shall believe in God and His messenger. These are God's laws. The disbelievers have incurred a painful retribution.

58:5. Surely, those who fight God and His messenger are committed to defeat, like their previous counterparts were committed to defeat. We have sent down clear proofs, and the rejectors have incurred a shameful retribution.

58:6. The day will come when God will resurrect them all, then inform them of everything they had done. God has recorded everything, while they have forgotten it. God witnesses all things.

58:7. Do you not realize that God knows everything in the heavens and everything on earth? No three people can conspire secretly without Him being their fourth, nor five without Him being the sixth, nor less than that, nor more, without Him being there with them wherever they may be. Then, on the Day of Resurrection, He will inform them of everything they had done. God is fully aware of all things.

58:8. Have you noted those who were enjoined from conspiring secretly, then insist on conspiring? They conspire to commit sin, transgression, and disobedience of the messenger. When they come to you, they greet you with a greeting other than that decreed by God. They say inside themselves, "God will not punish us for our utterances." Their only requital is Gehenna, wherein they burn; what a miserable destiny.

58:9. O you who believe, if you have to confer secretly, you shall not confer to commit sin, transgression, and to disobey the messenger. You shall confer to work righteousness and piety. You shall reverence God, before whom you will be summoned.

58:10. Secret conspiracy is the devil's idea, through which he seeks to hurt those who believed. However, he cannot hurt them against God's will. In God the believers shall trust.

58:11. O you who believe, if you are told, "Please make room," you shall make room for each other to sit. God will then make room for you. If you are asked to get up and move, get up and move. God raises those among you who believe, and those who acquire knowledge to higher ranks. God is fully Cognizant of everything you do.

58:12. O you who believe, when you wish to confer with the messenger, you shall offer a charity (to the poor) before you do so. This is better for you, and purer. If you cannot afford it, then God is Forgiver, Most Merciful.

58:13. If you failed to give to charity before conferring, then repented thereafter, God accepts your repentance. You shall observe the contact prayers (Salat), give the obligatory charity (Zakat), and obey God and His messenger. God is fully Cognizant of everything you do.

58:14. Have you noted those who befriended people with whom God is angry? They neither belong with you, nor with them. They deliberately swear lies!

58:15. God has prepared for them a severe retribution. Miserable indeed is what they used to do.

58:16. They used their oaths as a means of repelling from the path of God. Consequently, they have incurred a shameful retribution.

58:17. Neither their money, nor their children will help them against God. They have incurred the hellfire, wherein they abide forever.

58:18. The Day will come when God resurrects them all. They will swear to Him then, just as they swear to you now, thinking that they really are right! Indeed, they are the real liars.

58:19. The devil has possessed them, and has caused them to disregard God's message. These are the party of the devil. Absolutely, the party of the devil are the losers.

58:20. Surely, those who oppose God and His messenger will be with the lowliest.

58:21. God has decreed: "I and My messengers will most assuredly win." God is Powerful, Almighty.

58:22. You will not find people who believe in God and the Last Day befriending those who oppose God and His messenger, even if they were their parents, or their children, or their siblings, or their tribe. For these, He decrees faith into their hearts, and supports them with inspiration from Him, and admits them into gardens with flowing streams wherein they abide forever. God is pleased with them, and they are pleased with Him. These are the party of God. Most assuredly, God's party are the winners.

தர்க்கம்

58:1. தன்னுடைய கணவனைப் பற்றி உம்முடன் தர்க்கித்து, கடவுள்-யிடம் புகார் கொடுத்த அப்பெண்மணியைக் கடவுள் செவியேற்றுக் கொண்டார். நீங்கள் இருவரும் விவாதித்த ஒவ்வொன்றையும் கடவுள் செவியேற்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

58:2. தங்களுடைய தாய்மார்களை போன்றவர்கள் என (தாம்பத்யத்திற்கு தடை செய்யப்பட்டவர்களாக அவர்களை அறிவிப்பதன் மூலம்) தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொள்ளும் உங்களில் உள்ளவர்கள், அவர்கள் தங்களுடைய தாய்மார்கள் அல்லர் என்பதை முற்றிலும் நன்கறிந்தே இருக்கின்றனர்.* அவர்களைப் பெற்றெடுத்த பெண்களே அவர்களுடைய தாய்மார்கள் ஆவார்கள். மெய்யாகவே, அவர்கள் ஓர் அவதூறையும் ஒரு பொய்மையையுமே புரிகின்றனர். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

*58:2 மனைவியைத் தன்னுடைய தாயைப் போன்றவள் என்று அறிவித்து விட்டு அவளைப் பிணையறுத்துக் கொள்வது அரேபியாவில் பண்டைய பாரம்பர்ய வழக்கங்களில் ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்ற வார்த்தை இடம் பெறுகின்ற ஒரே சூரா இதுவேயாகும்.

58:3. இந்த முறையில் தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொண்டு விட்டவுடன், அதற்குப் பின்னர் இணக்கமாகிக் கொள்பவர்கள், தங்களுடைய தாம்பத்யத் தொடர்புகளை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். இது உங்களுக்கு அறிவூட்டுவதற்காகவேயாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

58:4. விடுதலை செய்வதற்கு ஓர் அடிமையை நீங்கள் காண இயலாமற்போனால், தாம்பத்யத் தொடர்புகளை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் தொடர்ச்சியான இரு மாதங்களுக்கு நீங்கள் நோன்பிருக்க வேண்டும். உங்களால் நோன்பிருக்க இயலாவிட்டால், பின்னர் நீங்கள் அறுபது ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவை கடவுள்-ன் சட்டங்களாகும். நம்பமறுப்பவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

58:5. நிச்சயமாக, கடவுள் மற்றும் அவருடைய தூதருடன் சண்டையிடுபவர்கள், முன்னிருந்த அவர்களுடைய சகாக்கள் தோல்வியடையுமாறு செய்யப்பட்டதைப் போல் தோல்வியடையுமாறு செய்யப்படுகின்றனர். தெளிவான சான்றுகளை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம், மேலும் ஏற்கமறுப்பவர்கள் இழிவு நிறைந்த தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

58:6. கடவுள் அவர்கள் அனைவரையும் உயிர்த்தெழுப்பி, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிக்கின்ற அந்நாள் வரும். அவர்கள் அதனை மறந்துவிட்ட அதே சமயம், கடவுள் ஒவ்வொன்றையும் பதிவு செய்துள்ளார். எல்லா விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாக இருக்கின்றார்.

58:7. வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? மூன்று மனிதர்கள் எவரும் நான்காமவராக அவர் இல்லாமல், அன்றி ஐவர், ஆறாமவராக அவர் இல்லாமல், அன்றி அதற்குக் குறைவாகவோ, அன்றி அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்த போதிலும் அங்கே அவர்களுடன் அவர் இல்லாமல் இரகசியமாகச் சூழ்ச்சி செய்ய இயலாது. பின்னர், உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார். அனைத்து விஷயங்களையும் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்

58:8. இரகசியமாகச் சூழ்ச்சி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டவர்களாக இருந்தும், பின்னர் சூழ்ச்சி செய்தலை வலியுறுத்துபவர்களை நீர் கவனித்தீரா? பாவம், வரம்புமீறல், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியாமை, ஆகியவற்றைப் புரிவதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். உம்மிடம் அவர்கள் வரும் போது, கடவுள்-ஆல் கட்டளையிடப்பட்டதை விடுத்து வேறு ஒரு வாழ்த்தைக் கொண்டு உம்மை அவர்கள் வாழ்த்துகின்றனர். அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொள்கின்றனர், நம்முடைய கூற்றுகளுக்காகக் கடவுள் நம்மைத் தண்டிக்க மாட்டார். அவர்களுக்குரிய ஒரே கைம்மாறு எரி கிடங்கேயாகும், அதிலே அவர்கள் கருகுவார்கள்; எத்தகையதொரு துன்பகரமான விதி.

58:9. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், நீங்கள் இரகசியமாகக் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால், பாவகாரியம், வரம்புமீறல் மற்றும் தூதருக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றுக்காகக் கலந்தாலோசிக்கக் கூடாது. நன்னெறி மற்றும் பக்தி ஆகியவற்றைப் புரிவதற்காகவே நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். எவர் முன்னர் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-க்கு நீங்கள் பக்தியோடிருக்க வேண்டும்.

58:10. இரகசியச் சூழ்ச்சியானது சாத்தானின் யோசனையாகும், அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்களைப் புண்படுத்த அவன் முயலுகின்றான். எப்படியிருப்பினும், கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்களை அவன் புண்படுத்த இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

58:11. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், தயவு செய்து இடமளியுங்கள், என்று உங்களிடம் கூறப் பட்டால், நீங்கள் ஒருவருக்கொருவர் அமர்வதற்கு இடமளிக்க வேண்டும். கடவுள் அப்போது உங்களுக்கு இடமளிப்பார்; எழுந்து நகரும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டால், எழுந்து நகர்ந்திடுங்கள். உங்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களையும், அறிவு பெற்றவர்களையும் உயர் அந்தஸ்துகளுக்குக் கடவுள் உயர்த்துகின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.

58:12. நம்பிக்கை கொண்டோரே உங்களைத்தான், தூதருடன் கலந்தாலோசிக்க நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு முன்னர், நீங்கள் (ஏழைகளுக்கு) ஒரு தர்மத்தை முன்வைக்க வேண்டும். இது உங்களுக்கு மேலானதும், தூய்மையானதும் ஆகும். உங்களால் அது இயலாவிட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

58:13. கலந்தாலோசிப்பதற்கு முன்னர் நீங்கள் தர்மம் கொடுக்கத் தவறிவிட்டு, அதற்குப் பின்னர் வருந்தினால், கடவுள் உங்களுடைய வருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார். நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.

58:14. எவர்கள் மீது கடவுள் கோபம் கொண்டிருக்கின்றாரோ, அவர்களுடன் நட்புக்கொண்ட மக்களை நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களோ, அன்றி அவர்களைச் சேர்ந்தவர்களோ அல்லர். அவர்கள் நன்கறிந்து கொண்டே பொய்களால் சத்தியமிடுகின்றனர்!

58:15. கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்துள்ளார். அவர்கள் செய்து கொண்டிருந்தவை உண்மையில் மிகவும் துக்ககர மானவையாகும்.

58:16. தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை கடவுள்-ன் பாதையிலிருந்து தடுக்கின்ற ஓர் உபாயமாக அவர்கள் பயன்படுத்தினர். அதன் விளைவாக, இழிவுநிறைந்த தொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.

58:17. அவர்களுடைய பணமோ, அன்றி அவர்களுடைய பிள்ளைகளோ கடவுள்-க்கெதிராக அவர்களுக்கு உதவி செய்யாது. அவர்கள் நரகநெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

58:18. அவர்கள் அனைவரையும் கடவுள் உயிர்த்தெழுப்புகின்ற அந்நாள் வரும். தாங்கள் மெய்யாகவே சரியானவர்கள் என்றெண்ணிக் கொண்டு, இப்பொழுது உங்களிடம் அவர்கள் சத்தியமிடுவதைப் போல, அவரிடமும் அப்போது அவர்கள் சத்தியமிடுவார்கள்! உண்மையில், அவர்கள்தான் அசலான பொய்யர்கள்.

58:19. சாத்தான் அவர்களைக் கையகப்படுத்திக் கொண்டான், மேலும் கடவுள்-ன் தூதுச் செய்தியை அவர்கள் அலட்சியப்படுத்துமாறு செய்துவிட்டான். இவர்கள்தான் சாத்தானின் கட்சியினர். மிக நிச்சயமாக, சாத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள்.

58:20. நிச்சயமாக, கடவுள்-ஐயும் அவருடைய தூதர்களையும் எதிர்ப்பவர்கள் மிகக் கீழ்மையானவர்களுடன் இருப்பார்கள்.

58:21. கடவுள் விதித்துள்ளார்: நானும் என்னுடைய தூதர்களும் மிக நிச்சயமாக வெற்றி பெறுவோம். கடவுள் சக்தி நிறைந்தவர், எல்லாம் வல்லவர்.

58:22. கடவுள் மற்றும் இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்போர் தங்கள் பெற்றோர்களாகவோ, தங்கள் பிள்ளைகளாகவோ, தங்கள் உடன்பிறப்புக்களாகவோ, தங்களுடைய குலத்தவராகவோ இருந்த போதிலும் அவர்களுடன் நட்புக்கொள்வதை நீர் காணமாட்டீர். இத்தகையோருக்கு, அவர்களுடைய இதயங்களில் விசுவாசத்தை அவர் விதிக்கின்றார், மேலும் தன்னிடமிருந்து உள்ளுணர்வைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார், மேலும் அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருக்கும் ஆறுகள்பாயும் தோட்டங்களுக்குள் அவர்களை அனுமதிக்கின்றார். கடவுள் அவர்கள் மீது திருப்தி கொண்டார், மேலும் அவர்கள் அவர் மீது திருப்தி கொண்டனர். இவர்கள்தான் கடவுள்-ன் கட்சியினர். மிக நிச்சயமாக, கடவுள்-ன் கட்சியினர்தான் வெற்றியாளர்கள்.