Find
Chapter 55: Al-Rahmaan
55:0-78
78 verses Revelation order 97
سورة الرحمن

. ١:٥٥ الرَّحمٰنُ

. ٢:٥٥ عَلَّمَ القُرءانَ

. ٣:٥٥ خَلَقَ الإِنسٰنَ

. ٤:٥٥ عَلَّمَهُ البَيانَ

. ٥:٥٥ الشَّمسُ وَالقَمَرُ بِحُسبانٍ

. ٦:٥٥ وَالنَّجمُ وَالشَّجَرُ يَسجُدانِ

. ٧:٥٥ وَالسَّماءَ رَفَعَها وَوَضَعَ الميزانَ

. ٨:٥٥ أَلّا تَطغَوا فِى الميزانِ

. ٩:٥٥ وَأَقيمُوا الوَزنَ بِالقِسطِ وَلا تُخسِرُوا الميزانَ

. ١٠:٥٥ وَالأَرضَ وَضَعَها لِلأَنامِ

. ١١:٥٥ فيها فٰكِهَةٌ وَالنَّخلُ ذاتُ الأَكمامِ

. ١٢:٥٥ وَالحَبُّ ذُو العَصفِ وَالرَّيحانُ

. ١٣:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ١٤:٥٥ خَلَقَ الإِنسٰنَ مِن صَلصٰلٍ كَالفَخّارِ

. ١٥:٥٥ وَخَلَقَ الجانَّ مِن مارِجٍ مِن نارٍ

. ١٦:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ١٧:٥٥ رَبُّ المَشرِقَينِ وَرَبُّ المَغرِبَينِ

. ١٨:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ١٩:٥٥ مَرَجَ البَحرَينِ يَلتَقِيانِ

. ٢٠:٥٥ بَينَهُما بَرزَخٌ لا يَبغِيانِ

. ٢١:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٢٢:٥٥ يَخرُجُ مِنهُمَا اللُّؤلُؤُ وَالمَرجانُ

. ٢٣:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٢٤:٥٥ وَلَهُ الجَوارِ المُنشَـٔاتُ فِى البَحرِ كَالأَعلٰمِ

. ٢٥:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٢٦:٥٥ كُلُّ مَن عَلَيها فانٍ

. ٢٧:٥٥ وَيَبقىٰ وَجهُ رَبِّكَ ذُو الجَلٰلِ وَالإِكرامِ

. ٢٨:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٢٩:٥٥ يَسـَٔلُهُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ كُلَّ يَومٍ هُوَ فى شَأنٍ

. ٣٠:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٣١:٥٥ سَنَفرُغُ لَكُم أَيُّهَ الثَّقَلانِ

. ٣٢:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٣٣:٥٥ يٰمَعشَرَ الجِنِّ وَالإِنسِ إِنِ استَطَعتُم أَن تَنفُذوا مِن أَقطارِ السَّمٰوٰتِ وَالأَرضِ فَانفُذوا لا تَنفُذونَ إِلّا بِسُلطٰنٍ

. ٣٤:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٣٥:٥٥ يُرسَلُ عَلَيكُما شُواظٌ مِن نارٍ وَنُحاسٌ فَلا تَنتَصِرانِ

. ٣٦:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٣٧:٥٥ فَإِذَا انشَقَّتِ السَّماءُ فَكانَت وَردَةً كَالدِّهانِ

. ٣٨:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٣٩:٥٥ فَيَومَئِذٍ لا يُسـَٔلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلا جانٌّ

. ٤٠:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٤١:٥٥ يُعرَفُ المُجرِمونَ بِسيمٰهُم فَيُؤخَذُ بِالنَّوٰصى وَالأَقدامِ

. ٤٢:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٤٣:٥٥ هٰذِهِ جَهَنَّمُ الَّتى يُكَذِّبُ بِهَا المُجرِمونَ

. ٤٤:٥٥ يَطوفونَ بَينَها وَبَينَ حَميمٍ ءانٍ

. ٤٥:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٤٦:٥٥ وَلِمَن خافَ مَقامَ رَبِّهِ جَنَّتانِ

. ٤٧:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٤٨:٥٥ ذَواتا أَفنانٍ

. ٤٩:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٥٠:٥٥ فيهِما عَينانِ تَجرِيانِ

. ٥١:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٥٢:٥٥ فيهِما مِن كُلِّ فٰكِهَةٍ زَوجانِ

. ٥٣:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٥٤:٥٥ مُتَّكِـٔينَ عَلىٰ فُرُشٍ بَطائِنُها مِن إِستَبرَقٍ وَجَنَى الجَنَّتَينِ دانٍ

. ٥٥:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٥٦:٥٥ فيهِنَّ قٰصِرٰتُ الطَّرفِ لَم يَطمِثهُنَّ إِنسٌ قَبلَهُم وَلا جانٌّ

. ٥٧:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٥٨:٥٥ كَأَنَّهُنَّ الياقوتُ وَالمَرجانُ

. ٥٩:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٦٠:٥٥ هَل جَزاءُ الإِحسٰنِ إِلَّا الإِحسٰنُ

. ٦١:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٦٢:٥٥ وَمِن دونِهِما جَنَّتانِ

. ٦٣:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٦٤:٥٥ مُدهامَّتانِ

. ٦٥:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٦٦:٥٥ فيهِما عَينانِ نَضّاخَتانِ

. ٦٧:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٦٨:٥٥ فيهِما فٰكِهَةٌ وَنَخلٌ وَرُمّانٌ

. ٦٩:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٧٠:٥٥ فيهِنَّ خَيرٰتٌ حِسانٌ

. ٧١:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٧٢:٥٥ حورٌ مَقصورٰتٌ فِى الخِيامِ

. ٧٣:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٧٤:٥٥ لَم يَطمِثهُنَّ إِنسٌ قَبلَهُم وَلا جانٌّ

. ٧٥:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٧٦:٥٥ مُتَّكِـٔينَ عَلىٰ رَفرَفٍ خُضرٍ وَعَبقَرِىٍّ حِسانٍ

. ٧٧:٥٥ فَبِأَىِّ ءالاءِ رَبِّكُما تُكَذِّبانِ

. ٧٨:٥٥ تَبٰرَكَ اسمُ رَبِّكَ ذِى الجَلٰلِ وَالإِكرامِ

Most Gracious

55:1. The Most Gracious.

55:2. Teacher of the Quran.

55:3. Creator of the human beings.

55:4. He taught them how to distinguish.

55:5. The sun and the moon are perfectly calculated.

55:6. The stars and the trees prostrate.

55:7. He constructed the sky and established the law.

55:8. You shall not transgress the law.

55:9. You shall establish justice; do not violate the law.

55:10. He created the earth for all creatures.

55:11. In it there are fruits, and date palms with their hanging fruit.*

*55:11 Compare the spaceship Earth's renewable systems and reproducing astronauts with the most sophisticated spaceships that we launch into space. God be glorified.

55:12. Also grains and the spices.

55:13. (O humans and jinns,) which of your Lord's marvels can you deny?

55:14. He created the human from aged clay, like the potter's clay.

55:15. And created the jinns from blazing fire.

55:16. (O humans and jinns,) which of your Lord's marvels can you deny?

55:17. Lord of the two easts and the two wests.

55:18. Which of your Lord's marvels can you deny?

55:19. He separates the two seas where they meet.

55:20. A barrier is placed between them, to prevent them from transgressing.

55:21. Which of your Lord's marvels can you deny?

55:22. Out of both of them you get pearls and coral.

55:23. Which of your Lord's marvels can you deny?

55:24. He gave you ships that roam the sea like flags.

55:25. Which of your Lord's marvels can you deny?

55:26. Everyone on earth perishes.

55:27. Only the presence of your Lord lasts. Possessor of Majesty and Honor.

55:28. Which of your Lord's marvels can you deny?

55:29. Imploring Him is everyone in the heavens and the earth. Every day He is in full control.

55:30. Which of your Lord's marvels can you deny?

55:31. We will call you to account, O humans and jinns.

55:32. Which of your Lord's marvels can you deny?

55:33. O you jinns and humans, if you can penetrate the outer limits of the heavens and the earth, go ahead and penetrate. You cannot penetrate without authorization.

55:34. Which of your Lord's marvels can you deny?

55:35. You get bombarded with projectiles of fire and metal, and you cannot win.

55:36. Which of your Lord's marvels can you deny?

55:37. When the sky disintegrates, and turns rose colored like paint.

55:38. Which of your Lord's marvels can you deny?

55:39. On that day, no human, nor a jinn, will be asked about his sins.

55:40. Which of your Lord's marvels can you deny?

55:41. (This is because) the guilty will be recognized by their looks; they will be taken by the forelocks and the feet.

55:42. Which of your Lord's marvels can you deny?

55:43. This is Gehenna that the guilty used to deny.

55:44. They will circulate between it and an intolerable inferno.*

*55:44 Full details about the High Heaven, Low Heaven, the Purgatory, Hell, and the intolerable inferno are given in Appendices 5 and 11.

55:45. Which of your Lord's marvels can you deny?

55:46. For those who reverence the majesty of their Lord, two gardens (one for the jinns and one for the humans).

55:47. Which of your Lord's marvels can you deny?

55:48. Full of provisions.

55:49. Which of your Lord's marvels can you deny?

55:50. Two springs are in them, flowing.

55:51. Which of your Lord's marvels can you deny?

55:52. Of every fruit in them, two kinds.

55:53. Which of your Lord's marvels can you deny?

55:54. While relaxing on furnishings lined with satin, the fruits are within reach.

55:55. Which of your Lord's marvels can you deny?

55:56. Their beautiful mates were never touched by any human or jinn.

55:57. Which of your Lord's marvels can you deny?

55:58. They look like gems and coral.

55:59. Which of your Lord's marvels can you deny?

55:60. Is the reward of goodness anything but goodness?

55:61. Which of your Lord's marvels can you deny?

55:62. Below them are two gardens (one for the jinns and one for the humans).

55:63. Which of your Lord's marvels can you deny?

55:64. Side by side.

55:65. Which of your Lord's marvels can you deny?

55:66. In them, wells to be pumped.

55:67. Which of your Lord's marvels can you deny?

55:68. In them are fruits, date palms, and pomegranate.

55:69. Which of your Lord's marvels can you deny?

55:70. In them are beautiful mates.

55:71. Which of your Lord's marvels can you deny?

55:72. Confined in the tents.

55:73. Which of your Lord's marvels can you deny?

55:74. No human ever touched them, nor a jinn.

55:75. Which of your Lord's marvels can you deny?

55:76. They relax on green carpets, in beautiful surroundings.

55:77. Which of your Lord's marvels can you deny?

55:78. Most exalted is the name of your Lord, Possessor of Majesty and Honor.

மிக்க அருளாளர்

55:1. மிக்க அருளாளர்.

55:2. குர்ஆனின் ஆசிரியர்.

55:3. மானிடர்களின் படைப்பாளர்.

55:4. பகுத்தறிவது எப்படியென அவர்களுக்கு அவர் கற்றுக் கொடுத்தார்.

55:5. சூரியனும் சந்திரனும் மிகச் சரியாகக் கணக்கிடப் பட்டுள்ளன.

55:6. நட்சத்திரங்களும் மரங்களும் சிரம் பணிகின்றன.

55:7. வானத்தை அவர் நிர்மாணித்தார், மேலும் விதிமுறையினை நிலைநாட்டினார்.

55:8. நீங்கள் விதிமுறையினை மீறவேண்டாம்.

55:9. நீங்கள் நீதியை நிலைநாட்ட வேண்டும்; விதிமுறையினை மீறக் கூடாது.

55:10. அனைத்துப் படைப்புகளுக்காகவும் பூமியை அவர் படைத்தார்.

55:11. அதிலே பழங்களும், தொங்குகின்ற பழக்குலைகளுடன் கூடிய பேரீத்தம் பனைகளும் உள்ளன.*

*55:11 பூமியெனும் விண்வெளிக்கலத்தின் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய வழிமுறைகளையும் இனப்பெருக்கம் செய்கின்ற விண்வெளிப் பயணிகளையும், நாம் அண்டவெளிக்குள் மிதக்க விடுகின்ற அதிநவீன விண்வெளிக்கலங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கடவுள் துதிப்பிற்குரியவர்.

55:12. அத்துடன் தானியங்களும் வாசனைப் பொருட்களும்.

55:13. (மானிடர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட் சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:14. குயவனின் களிமண்ணைப் போன்ற, முற்றிய களி மண்ணிலிருந்து மானிடனை அவர் படைத்தார்.

55:15. மேலும் கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து ஜின்களைப் படைத்தார்.

55:16. (மானிடர்கள் மற்றும் ஜின்களே,) உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:17. இரு கிழக்குகள் மற்றும் இரு மேற்குகளின் இரட்சகர்.

55:18. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:19. இரு கடல்களையும் அவை சந்திக்குமிடத்தில் அவர் பிரிக்கின்றார்.

55:20. எல்லை மீறுவதை விட்டு அவற்றைத் தடுக்கும் வண்ணம், அவற்றிற்கிடையில் ஒரு தடுப்பு அமைக்கப் பட்டுள்ளது.

55:21. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:22. அவை இரண்டிலிருந்தும் முத்துகளும் பவளங்களும் உங்களுக்குக் கிடைக்கின்றன.

55:23. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:24. கொடிகளைப் போல கடலில் சுற்றிவரும் கப்பல்களை அவர் உங்களுக்குத் தந்தார்.

55:25. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:26. பூமியிலுள்ள ஒவ்வொருவரும் அழிந்து விடுவார்கள்.

55:27. உம்முடைய இரட்சகரின் இருப்பு மட்டுமே நிலைத் திருக்கும். மாட்சிமை மற்றும் கண்ணியம் உடையவர்.

55:28. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:29. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு வரும் அவரை இறைஞ்சுகின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவர் முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்.

55:30. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:31. கணக்குக் கொடுப்பதற்காக உங்களை நாம் அழைப்போம், மானிடர்கள் மற்றும் ஜின்களே.

55:32. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:33. ஜின்கள் மற்றும் மானிடர்களே, வானங்கள் மற்றும் பூமியின் வெளிப்புற எல்லைகளை உங்களால் ஊடுருவ இயலுமானால், தொடர்ந்து சென்று ஊடுருவிக் கொள்ளுங்கள். அதிகாரம் இன்றி உங்களால் ஊடுருவ இயலாது.

55:34. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:35. நெருப்பு மற்றும் உலோகத்தினாலான ஏவுகணைகளால், நீங்கள் தொடர்ந்து தாக்கப்படுவீர்கள், மேலும் உங்களால் ஜெயிக்க இயலாது.

55:36. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:37. வானம் உடைந்து சிதறி, இளஞ்சிகப்பு சாயம் போல நிறம் மாறி விடும்போது.

55:38. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:39. அந்நாளில், எந்த மானிடனிடமோ அன்றி எந்த ஜின்னிடமோ அவனுடைய பாவங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கப்படாது.

55:40. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:41. (இது ஏனெனில்) குற்றவாளிகள் அவர்களுடைய தோற்றங்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள்; முன்குடுமிகள் மற்றும் பாதங்களால் அவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்.

55:42. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:43. இதுதான் குற்றவாளிகள் மறுத்துக் கொண்டிருந்த எரிகிடங்காகும்.

55:44. சகிக்க முடியாததொரு தீக்கனலுக்கும் அதற்கும் இடையில் அவர்கள் சுழன்று வருவார்கள்.*

*55:44 மேல் சொர்க்கம், தாழ்வான சொர்க்கம், ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலம், நரகம், மற்றும் சகிக்க இயலாத தீக்கனல் ஆகியன பற்றிய முழு விபரங்கள் பின் இணைப்பு 5 மற்றும் 11ல் கொடுக்கப்பட்டுள்ளன.

55:45. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:46. தங்களுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சுபவர்களுக்கு, இருதோட்டங்கள் (ஜின்களுக்கு ஒன்று மேலும் மானிடர்களுக்கு ஒன்று).

55:47. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களின் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:48. வாழ்வாதாரங்கள் நிரம்பியவை.

55:49. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:50. அவற்றில் இரு ஊற்றுகள், பாய்ந்தோடிக் கொண்டு இருக்கின்றன.

55:51. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:52. அவற்றில் ஒவ்வொரு பழங்களிலும், இரு வகைகள்.

55:53. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:54. பளபளக்கும் பட்டால் சுற்றிலும் அழகூட்டப்பட்ட ஆசனங்களில் அவர்கள் ஓய்வெடுக்கின்ற அச்சமயம், பழங்களோ கைக்கெட்டக் கூடியவையாக இருக்கும்.

55:55. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:56. எந்த மனிதர்களாலோ அல்லது ஜின்களாலோ அவர்களுடைய அழகிய ஜோடிகள் ஒருபோதும் தொடப் பட்டிருக்கவில்லை.

55:57. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:58. இரத்தினங்களையும் பவளங்களையும் போன்று அவர்கள் இருப்பார்கள்.

55:59. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:60. நன்மைக்குரிய வெகுமதி நன்மையைத் தவிர வேறெதுவும் உண்டா?

55:61. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:62. அவர்களுக்குக் கீழே இரு தோட்டங்கள் இருக்கின்றன (ஜின்களுக்கு ஒன்று மேலும் மானிடர்களுக்கு ஒன்று).

55:63. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:64. அருகருகே.

55:65. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:66. அவற்றில், இறைக்கப்பட வேண்டிய கிணறுகள்.

55:67. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:68. அவற்றில் பழங்கள், பேரீத்தம் பனைகள் மற்றும் மாதுளை.

55:69. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:70. அவற்றில் அழகிய ஜோடிகள் உள்ளன.

55:71. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:72. கூடாரங்களில் தடுக்கப்பட்டு.

55:73. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:74. மானிடர் எவருமோ அன்றி ஒரு ஜின்னோ, எக்காலத்திலும் அவர்களைத் தொட்டதில்லை.

55:75. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:76. பச்சை நிறக் கம்பளங்களின் மீது, அழகிய சூழல்களில் அவர்கள் பொழுது போக்குவார்கள்.

55:77. உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை உங்களால் மறுக்க இயலும்?

55:78. உம்முடைய இரட்சகரின் திருப்பெயர் மிகவும் உயர்வானது, மாட்சிமை மற்றும் கண்ணியம் உடையவர்.