Find
Chapter 49: Al-Hujurat
49:0-18
18 verses Revelation order 106
سورة الحجرات

. ١:٤٩ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تُقَدِّموا بَينَ يَدَىِ اللَّهِ وَرَسولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَميعٌ عَليمٌ

. ٢:٤٩ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا تَرفَعوا أَصوٰتَكُم فَوقَ صَوتِ النَّبِىِّ وَلا تَجهَروا لَهُ بِالقَولِ كَجَهرِ بَعضِكُم لِبَعضٍ أَن تَحبَطَ أَعمٰلُكُم وَأَنتُم لا تَشعُرونَ

. ٣:٤٩ إِنَّ الَّذينَ يَغُضّونَ أَصوٰتَهُم عِندَ رَسولِ اللَّهِ أُولٰئِكَ الَّذينَ امتَحَنَ اللَّهُ قُلوبَهُم لِلتَّقوىٰ لَهُم مَغفِرَةٌ وَأَجرٌ عَظيمٌ

. ٤:٤٩ إِنَّ الَّذينَ يُنادونَكَ مِن وَراءِ الحُجُرٰتِ أَكثَرُهُم لا يَعقِلونَ

. ٥:٤٩ وَلَو أَنَّهُم صَبَروا حَتّىٰ تَخرُجَ إِلَيهِم لَكانَ خَيرًا لَهُم وَاللَّهُ غَفورٌ رَحيمٌ

. ٦:٤٩ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا إِن جاءَكُم فاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنوا أَن تُصيبوا قَومًا بِجَهٰلَةٍ فَتُصبِحوا عَلىٰ ما فَعَلتُم نٰدِمينَ

. ٧:٤٩ وَاعلَموا أَنَّ فيكُم رَسولَ اللَّهِ لَو يُطيعُكُم فى كَثيرٍ مِنَ الأَمرِ لَعَنِتُّم وَلٰكِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيكُمُ الإيمٰنَ وَزَيَّنَهُ فى قُلوبِكُم وَكَرَّهَ إِلَيكُمُ الكُفرَ وَالفُسوقَ وَالعِصيانَ أُولٰئِكَ هُمُ الرّٰشِدونَ

. ٨:٤٩ فَضلًا مِنَ اللَّهِ وَنِعمَةً وَاللَّهُ عَليمٌ حَكيمٌ

. ٩:٤٩ وَإِن طائِفَتانِ مِنَ المُؤمِنينَ اقتَتَلوا فَأَصلِحوا بَينَهُما فَإِن بَغَت إِحدىٰهُما عَلَى الأُخرىٰ فَقٰتِلُوا الَّتى تَبغى حَتّىٰ تَفىءَ إِلىٰ أَمرِ اللَّهِ فَإِن فاءَت فَأَصلِحوا بَينَهُما بِالعَدلِ وَأَقسِطوا إِنَّ اللَّهَ يُحِبُّ المُقسِطينَ

. ١٠:٤٩ إِنَّمَا المُؤمِنونَ إِخوَةٌ فَأَصلِحوا بَينَ أَخَوَيكُم وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُم تُرحَمونَ

. ١١:٤٩ يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا لا يَسخَر قَومٌ مِن قَومٍ عَسىٰ أَن يَكونوا خَيرًا مِنهُم وَلا نِساءٌ مِن نِساءٍ عَسىٰ أَن يَكُنَّ خَيرًا مِنهُنَّ وَلا تَلمِزوا أَنفُسَكُم وَلا تَنابَزوا بِالأَلقٰبِ بِئسَ الِاسمُ الفُسوقُ بَعدَ الإيمٰنِ وَمَن لَم يَتُب فَأُولٰئِكَ هُمُ الظّٰلِمونَ

. ١٢:٤٩ يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اجتَنِبوا كَثيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعضَ الظَّنِّ إِثمٌ وَلا تَجَسَّسوا وَلا يَغتَب بَعضُكُم بَعضًا أَيُحِبُّ أَحَدُكُم أَن يَأكُلَ لَحمَ أَخيهِ مَيتًا فَكَرِهتُموهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوّابٌ رَحيمٌ

. ١٣:٤٩ يٰأَيُّهَا النّاسُ إِنّا خَلَقنٰكُم مِن ذَكَرٍ وَأُنثىٰ وَجَعَلنٰكُم شُعوبًا وَقَبائِلَ لِتَعارَفوا إِنَّ أَكرَمَكُم عِندَ اللَّهِ أَتقىٰكُم إِنَّ اللَّهَ عَليمٌ خَبيرٌ

. ١٤:٤٩ قالَتِ الأَعرابُ ءامَنّا قُل لَم تُؤمِنوا وَلٰكِن قولوا أَسلَمنا وَلَمّا يَدخُلِ الإيمٰنُ فى قُلوبِكُم وَإِن تُطيعُوا اللَّهَ وَرَسولَهُ لا يَلِتكُم مِن أَعمٰلِكُم شَيـًٔا إِنَّ اللَّهَ غَفورٌ رَحيمٌ

. ١٥:٤٩ إِنَّمَا المُؤمِنونَ الَّذينَ ءامَنوا بِاللَّهِ وَرَسولِهِ ثُمَّ لَم يَرتابوا وَجٰهَدوا بِأَموٰلِهِم وَأَنفُسِهِم فى سَبيلِ اللَّهِ أُولٰئِكَ هُمُ الصّٰدِقونَ

. ١٦:٤٩ قُل أَتُعَلِّمونَ اللَّهَ بِدينِكُم وَاللَّهُ يَعلَمُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ وَاللَّهُ بِكُلِّ شَىءٍ عَليمٌ

. ١٧:٤٩ يَمُنّونَ عَلَيكَ أَن أَسلَموا قُل لا تَمُنّوا عَلَىَّ إِسلٰمَكُم بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيكُم أَن هَدىٰكُم لِلإيمٰنِ إِن كُنتُم صٰدِقينَ

. ١٨:٤٩ إِنَّ اللَّهَ يَعلَمُ غَيبَ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاللَّهُ بَصيرٌ بِما تَعمَلونَ

The Walls

49:1. O you who believe, do not place your opinion above that of God and His messenger. You shall reverence God. God is Hearer, Omniscient.

49:2. O you who believe, do not raise your voices above the voice of the prophet,* nor shall you shout at him as you shout at each other, lest your works become nullified while you do not perceive.

*49:2 Whenever the word ``prophet'' (Nabi) is used in reference to Muhammad, it invariably refers to him during his life, not after his death. Obviously, we cannot possibly raise our voices above Muhammad's voice, now that he is dead. See also 33:56.

49:3. Surely, those who lower their voices at the messenger of God are the ones whose hearts are prepared by God to become righteous.* They have deserved forgiveness and a great recompense.

*49:3 Respecting the messenger helps outsiders and visitors in coming to God's message.

49:4. As for those who call on you from outside the walls, most of them do not understand.

49:5. Had they been patient until you came out to them, it would have been better for them. God is Forgiver, Most Merciful.

49:6. O you who believe, if a wicked person brings any news to you, you shall first investigate, lest you commit injustice towards some people, out of ignorance, then become sorry and remorseful for what you have done.

49:7. And know that God's messenger has come in your midst. Had he listened to you in many things, you would have made things difficult for yourselves. But God made you love faith and adorned it in your hearts, and He made you abhor disbelief, wickedness, and disobedience. These are the guided ones.

49:8. Such is grace from God and His blessings. God is Omniscient, Most Wise.

49:9. If two groups of believers fought with each other, you shall reconcile them. If one group aggresses against the other, you shall fight the aggressing group until they submit to God's command. Once they submit, you shall reconcile the two groups equitably. You shall maintain justice; God loves those who are just.

49:10. The believers are members of one family; you shall keep the peace within your family and reverence God, that you may attain mercy.

49:11. O you who believe, no people shall ridicule other people, for they may be better than they. Nor shall any women ridicule other women, for they may be better than they. Nor shall you mock one another, or make fun of your names. Evil indeed is the reversion to wickedness after attaining faith. Anyone who does not repent after this, these are the transgressors.

49:12. O you who believe, you shall avoid any suspicion, for even a little bit of suspicion is sinful. You shall not spy on one another, nor shall you backbite one another; this is as abominable as eating the flesh of your dead brother. You certainly abhor this. You shall observe God. God is Redeemer, Most Merciful.

49:13. O people, we created you from the same male and female, and rendered you distinct peoples and tribes, that you may recognize one another. The best among you in the sight of God is the most righteous. God is Omniscient, Cognizant.

49:14. The Arabs said, "We are Mu'mens (believers)." Say, "You have not believed; what you should say is, `We are Muslims (submitters),' until belief is established in your hearts." If you obey God and His messenger, He will not put any of your works to waste. God is Forgiver, Most Merciful.

49:15. Mu'mens (believers) are those who believe in God and His messenger, then attain the status of having no doubt whatsoever, and strive with their money and their lives in the cause of God. These are the truthful ones.

49:16. Say, "Are you informing God about your religion? God knows everything in the heavens and the earth. God is Omniscient."

49:17. They act as if they are doing you a favor by embracing Submission! Say, "You are not doing me any favors by embracing Submission. God is the One who is doing you a great favor by guiding you to the faith, if you are sincere."

49:18. God knows all the secrets in the heavens and the earth; God is Seer of everything you do.

சுவர்கள்

49:1. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், உங் களுடைய அபிப்பிராயங்களை கடவுள் மற்றும் அவருடைய தூதருடையவற்றிற்கு மேலாக வைக்காதீர்கள். நீங்கள் கடவுள் மீது பக்தி செலுத்த வேண்டும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

49:2. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், நபியின்* குரலுக்கு மேலாக உங்களுடைய குரல்களை உயர்த்தாதீர்கள், அன்றியும் நீங்கள் உணர்ந்து கொள்ளாத பொழுதே உங்களுடைய காரியங்கள் மதிப்பற்றதாக ஆகிவிடாதிருக்கும் பொருட்டு, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் கூச்சலிடுவதைப் போன்று அவரிடம் நீங்கள் கூச்சலிட வேண்டாம்.

*49:2 முஹம்மதைக் குறிப்பதாக நபி என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் பொழுதெல்லாம், அது மாற்றமேதுமின்றி அவரு டைய வாழ்வின் போது அவரைக் குறிக்கின்றதே அல்லாமல், அவருடைய இறப்பிற்குப் பின்னர் அல்ல. மிகத் தெளிவாக, இப் பொழுது அவர் இறந்து விட்டதால் முஹம்மதின் குரலுக்கு மேலாக நம்முடைய குரல்களை உயர்த்துவதற்கு சாத்தியமே யில்லை. மேலும் பார்க்க 33:56.

49:3. நிச்சயமாக, கடவுள்-வுடைய தூதரிடத்தில் தங்களுடைய குரல்களைத் தாழ்த்திக் கொள்பவர்களுடைய இதயங்கள்தான் நன்னெறியுடையவையாக இருப்பதற்காக கடவுள்-ஆல் தயார் செய்யப்படுகின்றன.* அவர்கள் மன்னிப்பிற்கும் மகத்தானதொரு பிரதி பலனுக்கும் தகுதி பெற்று விட்டனர்.

*49:3 தூதருக்கு மதிப்பளிப்பது வெளியாட்களும், சந்திக்க வருபவர்களும் கடவுளின் தூதுச் செய்திக்குள் வருவதற்கு உதவுகின்றது.

49:4. சுவர்களுக்கு வெளியே இருந்து கொண்டு உம்மை அழைப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்களில் அதிகமானோர் புரிந்து கொள்வதில்லை.

49:5. நீர் அவர்களிடம் வெளியே வரும் வரை அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், அது அவர்களுக்கு மேலானதாக இருந்திருக்கும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

49:6. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், தீய மனிதன் ஒருவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால், அறியாமையின் காரணத்தால் சில மனிதர்களுக்கு எதிராக நீங்கள் அநியாயம் புரிந்து விட்டு, பின்னர் நீங்கள் செய்தவற்றுக்காக வருத்தமும் கைசேதமும் அடையாதிருக்கும் பொருட்டு, முதலில் நீங்கள் விசாரித்துக் கொள்ள வேண்டும்.

49:7. மேலும் கடவுள்-ன் தூதர் உங்கள் மத்தியில் வந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல விஷயங்களில் அவர் உங்களுடைய பேச்சைக் கேட்டிருந்தால், காரியங்களை நீங்கள் உங்களுக்கே கடினமானதாக ஆக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் கடவுள் உங்களை விசுவாசத்தை நேசிக்கும் படிச்செய்தார், மேலும் உங்களுடைய இதயங்களில் அதனை அழகானதாக ஆக்கினார் மேலும் அவர் உங்களை நம்பமறுத்தல், தீய நடத்தை, மற்றும் கீழ்ப்படியாமையை வெறுக்கும்படிச் செய்தார். இவர்கள் தான் வழிநடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

49:8. கடவுள்-யிடம் இருந்து அருளும் அவருடைய ஆசீர்வாதங்களும் இத்தகையதேயாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிகுந்தவர்.

49:9. நம்பிக்கையாளர்களின் இரு குழுமங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், நீங்கள் அவர்களை இணக்கப்படுத்த வேண்டும். ஒரு குழுமம் மற்றதற்கு எதிராக அத்துமீறல் செய்தால், அவர்கள் கடவுள்-ன் கட்டளைக்குச் சரணடையும் வரை, அத்துமீறும் குழுமத்துடன் நீங்கள் சண்டையிட வேண்டும். அவர்கள் சரணடைந்தவுடன், இருகுழுமங்களையும் நீங்கள் நீதத்துடன் இணக்கப்படுத்த வேண்டும். நீங்கள் நீதியைப் பராமரிக்க வேண்டும்; நீதமாக இருப்பவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

49:10. நம்பிக்கையாளர்கள் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆவர்; உங்களுடைய குடும்பத்திற்குள் நீங்கள் சமாதானம் பேணவும், மேலும் கடவுள் மீது பக்தி செலுத்தவும் வேண்டும், நீங்கள் கருணையை அடைந்திடும் பொருட்டு.

49:11. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், எந்த சமூகத்தவரும் மற்ற சமூகத்தவரைப் பரிகசிக்க வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றி எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை பரிகசிக்க வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றியும் நீங்கள் ஒருவர் மற்றவரைக் கேலி செய்யவோ, உங்களுடைய பெயர்களில் கிண்டல் செய்யவோ வேண்டாம். விசு வாசத்தை அடைந்து விட்ட பின்னர் தீய நடத்தையின்பால் திரும்புவது மெய்யாகவே கெட்டதாகும். எவரொருவர் இதன் பின்னரும் வருந்தவில்லையோ, இவர்கள் தான் வரம்புமீறுபவர்கள் ஆவர்.

49:12. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், எந்தச் சந்தேகத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ஒரு சிறு அளவு சந்தேகம் கூடப் பாவகரமானதாகும். நீங்கள் ஒருவர் மற்றவரை வேவு பார்க்க வேண்டாம், அன்றி நீங்கள் ஒருவர் மற்ற வரைப் புறங்கூறவும் வேண்டாம்; இது உங்களுடைய இறந்து போன சகோதரனுடைய மாமிசத்தைத் தின்பதைப் போல வெறுப்புக்குரியதாகும். நீங்கள் நிச்சயமாக இதனை வெறுப்பீர்கள். நீங்கள் கடவுள்-க்கு அஞ்ச வேண்டும். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.

49:13. மக்களே, ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம், மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக, உங்களை வெவ்வேறு சமூகங்களாகவும் இனங்களாகவும் ஆக்கினோம். கடவுள்-ன் பார்வையில் உங்களில் மிகவும் சிறந்தவர் மிகவும் நன்னெறி மிக்கவரே ஆவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கு அறிந்தவர்.

49:14. அரேபியர்கள் கூறினார்கள், "நாங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்)." கூறுவீராக, நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; நம்பிக்கை உங்கள் இதயங்களில் நிலைபெறும் வரை, நீங்கள் கூற வேண்டியது என்ன வென்றால், ‘நாங்கள் முஸ்லிம்கள்(சரணடைந்தவர்கள்).’" கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்தால், உங்களுடைய காரியங்களில் எதனையும் அவர் வீணாக்கிவிட மாட்டார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

49:15. முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) எவர்கள் என்றால் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொண்டு, பின்னர் எத்தகைய சந்தேகமுமற்ற நிலைப்பாட்டை அடைந்து, மேலும் தங்களுடைய பணத்தையும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-ன் நிமித்தம் பாடுபடுபவர்களேயாவர். இவர்கள்தான் உண்மையாளர்கள் ஆவர்.

49:16. கூறுவீராக, "உங்களுடைய மார்க்கத்தைப் பற்றி கடவுள்-க்கே நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா ? வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் கடவுள் - க்குத் தெரியும்.கடவுள் எல்லாம் அறிந்தவர்."

49:17. சரணடைதலைத் தழுவுவதன் மூலம் உமக்கு ஏதோ ஓர் உபகாரம் புரிந்து விடுவதைப் போல் அவர்கள் நடந்து கொள்கின்றனர்! கூறுவீராக, சரணடை தலைத் தழுவுவதன் மூலம் நீங்கள் எனக்கு எந்த உபகாரங்களும் புரிந்து விட வில்லை.நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால், விசுவாசத்தின் பால் உங்களை வழிநடத்தியதன் மூலம் கடவுள்தான் உங்களுக்கு மகத்தானதொரு உபகாரம் புரிந்துள்ளார்.

49:18. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்து இரகசியங்களும் கடவுள்-க்குத் தெரியும்; நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்ப்பவராக இருக்கின்றார்.