. ١:٤٥ حم
. ٢:٤٥ تَنزيلُ الكِتٰبِ مِنَ اللَّهِ العَزيزِ الحَكيمِ
. ٣:٤٥ إِنَّ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ لَـٔايٰتٍ لِلمُؤمِنينَ
. ٤:٤٥ وَفى خَلقِكُم وَما يَبُثُّ مِن دابَّةٍ ءايٰتٌ لِقَومٍ يوقِنونَ
. ٥:٤٥ وَاختِلٰفِ الَّيلِ وَالنَّهارِ وَما أَنزَلَ اللَّهُ مِنَ السَّماءِ مِن رِزقٍ فَأَحيا بِهِ الأَرضَ بَعدَ مَوتِها وَتَصريفِ الرِّيٰحِ ءايٰتٌ لِقَومٍ يَعقِلونَ
. ٦:٤٥ تِلكَ ءايٰتُ اللَّهِ نَتلوها عَلَيكَ بِالحَقِّ فَبِأَىِّ حَديثٍ بَعدَ اللَّهِ وَءايٰتِهِ يُؤمِنونَ
. ٧:٤٥ وَيلٌ لِكُلِّ أَفّاكٍ أَثيمٍ
. ٨:٤٥ يَسمَعُ ءايٰتِ اللَّهِ تُتلىٰ عَلَيهِ ثُمَّ يُصِرُّ مُستَكبِرًا كَأَن لَم يَسمَعها فَبَشِّرهُ بِعَذابٍ أَليمٍ
. ٩:٤٥ وَإِذا عَلِمَ مِن ءايٰتِنا شَيـًٔا اتَّخَذَها هُزُوًا أُولٰئِكَ لَهُم عَذابٌ مُهينٌ
. ١٠:٤٥ مِن وَرائِهِم جَهَنَّمُ وَلا يُغنى عَنهُم ما كَسَبوا شَيـًٔا وَلا مَا اتَّخَذوا مِن دونِ اللَّهِ أَولِياءَ وَلَهُم عَذابٌ عَظيمٌ
. ١١:٤٥ هٰذا هُدًى وَالَّذينَ كَفَروا بِـٔايٰتِ رَبِّهِم لَهُم عَذابٌ مِن رِجزٍ أَليمٌ
. ١٢:٤٥ اللَّهُ الَّذى سَخَّرَ لَكُمُ البَحرَ لِتَجرِىَ الفُلكُ فيهِ بِأَمرِهِ وَلِتَبتَغوا مِن فَضلِهِ وَلَعَلَّكُم تَشكُرونَ
. ١٣:٤٥ وَسَخَّرَ لَكُم ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ جَميعًا مِنهُ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَتَفَكَّرونَ
. ١٤:٤٥ قُل لِلَّذينَ ءامَنوا يَغفِروا لِلَّذينَ لا يَرجونَ أَيّامَ اللَّهِ لِيَجزِىَ قَومًا بِما كانوا يَكسِبونَ
. ١٥:٤٥ مَن عَمِلَ صٰلِحًا فَلِنَفسِهِ وَمَن أَساءَ فَعَلَيها ثُمَّ إِلىٰ رَبِّكُم تُرجَعونَ
. ١٦:٤٥ وَلَقَد ءاتَينا بَنى إِسرٰءيلَ الكِتٰبَ وَالحُكمَ وَالنُّبُوَّةَ وَرَزَقنٰهُم مِنَ الطَّيِّبٰتِ وَفَضَّلنٰهُم عَلَى العٰلَمينَ
. ١٧:٤٥ وَءاتَينٰهُم بَيِّنٰتٍ مِنَ الأَمرِ فَمَا اختَلَفوا إِلّا مِن بَعدِ ما جاءَهُمُ العِلمُ بَغيًا بَينَهُم إِنَّ رَبَّكَ يَقضى بَينَهُم يَومَ القِيٰمَةِ فيما كانوا فيهِ يَختَلِفونَ
. ١٨:٤٥ ثُمَّ جَعَلنٰكَ عَلىٰ شَريعَةٍ مِنَ الأَمرِ فَاتَّبِعها وَلا تَتَّبِع أَهواءَ الَّذينَ لا يَعلَمونَ
. ١٩:٤٥ إِنَّهُم لَن يُغنوا عَنكَ مِنَ اللَّهِ شَيـًٔا وَإِنَّ الظّٰلِمينَ بَعضُهُم أَولِياءُ بَعضٍ وَاللَّهُ وَلِىُّ المُتَّقينَ
. ٢٠:٤٥ هٰذا بَصٰئِرُ لِلنّاسِ وَهُدًى وَرَحمَةٌ لِقَومٍ يوقِنونَ
. ٢١:٤٥ أَم حَسِبَ الَّذينَ اجتَرَحُوا السَّيِّـٔاتِ أَن نَجعَلَهُم كَالَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَواءً مَحياهُم وَمَماتُهُم ساءَ ما يَحكُمونَ
. ٢٢:٤٥ وَخَلَقَ اللَّهُ السَّمٰوٰتِ وَالأَرضَ بِالحَقِّ وَلِتُجزىٰ كُلُّ نَفسٍ بِما كَسَبَت وَهُم لا يُظلَمونَ
. ٢٣:٤٥ أَفَرَءَيتَ مَنِ اتَّخَذَ إِلٰهَهُ هَوىٰهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلىٰ عِلمٍ وَخَتَمَ عَلىٰ سَمعِهِ وَقَلبِهِ وَجَعَلَ عَلىٰ بَصَرِهِ غِشٰوَةً فَمَن يَهديهِ مِن بَعدِ اللَّهِ أَفَلا تَذَكَّرونَ
. ٢٤:٤٥ وَقالوا ما هِىَ إِلّا حَياتُنَا الدُّنيا نَموتُ وَنَحيا وَما يُهلِكُنا إِلَّا الدَّهرُ وَما لَهُم بِذٰلِكَ مِن عِلمٍ إِن هُم إِلّا يَظُنّونَ
. ٢٥:٤٥ وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ ما كانَ حُجَّتَهُم إِلّا أَن قالُوا ائتوا بِـٔابائِنا إِن كُنتُم صٰدِقينَ
. ٢٦:٤٥ قُلِ اللَّهُ يُحييكُم ثُمَّ يُميتُكُم ثُمَّ يَجمَعُكُم إِلىٰ يَومِ القِيٰمَةِ لا رَيبَ فيهِ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ
. ٢٧:٤٥ وَلِلَّهِ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَيَومَ تَقومُ السّاعَةُ يَومَئِذٍ يَخسَرُ المُبطِلونَ
. ٢٨:٤٥ وَتَرىٰ كُلَّ أُمَّةٍ جاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدعىٰ إِلىٰ كِتٰبِهَا اليَومَ تُجزَونَ ما كُنتُم تَعمَلونَ
. ٢٩:٤٥ هٰذا كِتٰبُنا يَنطِقُ عَلَيكُم بِالحَقِّ إِنّا كُنّا نَستَنسِخُ ما كُنتُم تَعمَلونَ
. ٣٠:٤٥ فَأَمَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُدخِلُهُم رَبُّهُم فى رَحمَتِهِ ذٰلِكَ هُوَ الفَوزُ المُبينُ
. ٣١:٤٥ وَأَمَّا الَّذينَ كَفَروا أَفَلَم تَكُن ءايٰتى تُتلىٰ عَلَيكُم فَاستَكبَرتُم وَكُنتُم قَومًا مُجرِمينَ
. ٣٢:٤٥ وَإِذا قيلَ إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ وَالسّاعَةُ لا رَيبَ فيها قُلتُم ما نَدرى مَا السّاعَةُ إِن نَظُنُّ إِلّا ظَنًّا وَما نَحنُ بِمُستَيقِنينَ
. ٣٣:٤٥ وَبَدا لَهُم سَيِّـٔاتُ ما عَمِلوا وَحاقَ بِهِم ما كانوا بِهِ يَستَهزِءونَ
. ٣٤:٤٥ وَقيلَ اليَومَ نَنسىٰكُم كَما نَسيتُم لِقاءَ يَومِكُم هٰذا وَمَأوىٰكُمُ النّارُ وَما لَكُم مِن نٰصِرينَ
. ٣٥:٤٥ ذٰلِكُم بِأَنَّكُمُ اتَّخَذتُم ءايٰتِ اللَّهِ هُزُوًا وَغَرَّتكُمُ الحَيوٰةُ الدُّنيا فَاليَومَ لا يُخرَجونَ مِنها وَلا هُم يُستَعتَبونَ
. ٣٦:٤٥ فَلِلَّهِ الحَمدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الأَرضِ رَبِّ العٰلَمينَ
. ٣٧:٤٥ وَلَهُ الكِبرِياءُ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَهُوَ العَزيزُ الحَكيمُ
45:1. H. M.
45:2. The revelation of this scripture is from God, the Almighty, Most Wise.
45:3. The heavens and the earth are full of proofs for the believers.
45:4. Also in your creation, and the creation of all the animals, there are proofs for people who are certain.
45:5. Also, the alternation of the night and the day, and the provisions that God sends down from the sky to revive dead lands, and the manipulation of the winds; all these are proofs for people who understand.
45:6. These are God's revelations that we recite to you truthfully. In which Hadith other than God and His revelations do they believe?
*45:6-7 God condemns "Hadith" by name, and informs us that it is a blasphemous fabrication.
45:7. Woe to every fabricator, guilty.*
*45:6-7 God condemns "Hadith" by name, and informs us that it is a blasphemous fabrication.
45:8. The one who hears God's revelations recited to him, then insists arrogantly on his way, as if he never heard them. Promise him a painful retribution.
45:9. When he learns anything about our revelations, he mocks them. These have incurred a shameful retribution.
45:10. Awaiting them is Gehenna. Their earnings will not help them, nor the idols they had set up beside God. They have incurred a terrible retribution.
45:11. This is a beacon, and those who disbelieve in these revelations of their Lord have incurred condemnation and a painful retribution.
45:12. God is the One who committed the sea in your service, so that the ships can roam it in accordance with His laws. You thus seek His provisions, that you may be appreciative.
45:13. He committed in your service everything in the heavens and the earth; all from Him. These are proofs for people who reflect.
45:14. Tell those who believed to forgive those who do not expect the days of God. He will fully pay everyone for whatever they have earned.
45:15. Whoever works righteousness does so for his own good, and whoever works evil does so to his own detriment. To your Lord you will be returned.
45:16. We have given the Children of Israel the scripture, wisdom, and prophethood, and provided them with good provisions; we bestowed upon them more blessings than any other people.
45:17. We have given them herein clear commandments. Ironically, they did not dispute this until the knowledge had come to them. This is due to jealousy on their part. Surely, your Lord will judge them on the Day of Resurrection regarding everything they have disputed.
45:18. We then appointed you to establish the correct laws; you shall follow this, and do not follow the wishes of those who do not know.
45:19. They cannot help you at all against God. It is the transgressors who ally themselves with one another, while God is the Lord of the righteous.
45:20. This provides enlightenments for the people, and guidance, and mercy for those who are certain.
45:21. Do those who work evil expect that we will treat them in the same manner as those who believe and lead a righteous life? Can their life and their death be the same?* Wrong indeed is their judgment.
*45:21 We now realize that the righteous do not really die - they go straight to Heaven (16:32) - while the unrighteous are beaten up by the angels of death (8:50 & 47:27).
45:22. God created the heavens and the earth for a specific purpose, in order to pay each soul for whatever it earned, without the least injustice.*
*45:22 God granted us this life as a precious chance to redeem ourselves, denounce ancient alliance with Satan, and rejoin God's kingdom. See Introduction and Appendix 7.
45:23. Have you noted the one whose god is his ego? Consequently, God sends him astray, despite his knowledge, seals his hearing and his mind, and places a veil on his eyes. Who then can guide him, after such a decision by God? Would you not take heed?
45:24. They said, "We only live this life; we live and die and only time causes our death!" They have no sure knowledge about this; they only conjecture.
45:25. When our revelations are recited to them, clearly, their only argument is to say, "Bring back our forefathers, if you are truthful."
45:26. Say, "God has granted you life, then He puts you to death, then He will summon you to the Day of Resurrection, which is inevitable. But most people do not know."
45:27. To God belongs all sovereignty of the heavens and the earth. The day the Hour (Judgment) comes to pass, that is when the falsifiers lose.
45:28. You will see every community kneeling. Every community will be called to view their record. Today, you get paid for everything you have done.
45:29. This is our record; it utters the truth about you. We have been recording everything you did.
45:30. As for those who believe and work righteousness, their Lord will admit them into His mercy. This is the great triumph.
45:31. As for those who disbelieve: "Were not My revelations recited to you, but you turned arrogant and were wicked people?"
45:32. When it is proclaimed that God's promise is the truth and that the Hour (of Judgment) is inevitable, you said, "We do not know what the Hour is! We are full of conjecture about it; we are not certain."
45:33. The evils of their works will become evident to them, and the very things they mocked will come back and haunt them.
45:34. It will be proclaimed: "Today we forget you, just as you forgot the meeting of this day. Your abode is the hellfire, and you will have no helpers.
45:35. "This is because you took God's revelations in vain, and were preoccupied with the first life." Consequently, they will never exit therefrom, nor will they be excused.
45:36. To God belongs all praise; Lord of the heavens, Lord of the earth, Lord of the universe.
45:37. To Him belongs all supremacy in the heavens and the earth. He is the Almighty, Most Wise.
45:1. ஹ்ஹ. ம.
45:2. இந்த வேதத்தின் வெளிப்பாடானது எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவரான கடவுள்-யிடமிருந்து வந்துள்ளது.
45:3. வானங்களும் பூமியும் நம்பிக்கையாளர்களுக்குச் சான்றுகள் நிரம்பியவையாக உள்ளன.
45:4. அத்துடன் உங்களுடைய படைப்பிலும், அனைத்து விலங்குகளின் படைப்பிலும், உறுதியுடைய மக்களுக்குச் சான்றுகள் உள்ளன.
45:5. அத்துடன், இரவு மற்றும் பகலின் மாறுபாடுகள், மேலும், இறந்த நிலங்களை உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து கடவுள் இறக்கி அனுப்புகின்ற வாழ்வாதாரங்கள், மேலும் காற்றுகளைத் திறம்படக் கையாளுதல்; புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இவை அனைத்தும் சான்றுகளாகும்.
45:6. இவை, சத்தியத்துடன், நாம் உமக்கு எடுத்துரைக்கின்ற கடவுள்-ன் வெளிப்பாடுகளாகும். கடவுள்-க்கும் அவருடைய வெளிப்பாடுகளுக்கும் பின்னர் வேறு எந்த ஹதீஸில் அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்?
*45:6-7 கடவுள் "ஹதீஸ்களைப்" பெயர் குறிப்பிட்டுக் கண்டனம் செய்கின்றார், மேலும் அது இறைநிந்தனையானதொரு புனைந்துரைதான் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றார்.
45:7. புனைந்துரைப்பவனான குற்றவாளி ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.*
45:8. கடவுள்-ன் வெளிப்பாடுகள் அவனிடம் எடுத்துரைக்கப்படுவதைச் செவியேற்றும், பின்னர் அவற்றை அவன் ஒருபோதும் செவியேற்காதவனைப் போல, ஆணவத்துடன் தன் வழியில் பிடிவாதமாக இருக்கின்றவன். வலி நிறைந்ததொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.
45:9. நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதையேனும் அவன் அறிந்து கொள்ளும் போது, அவற்றை அவன் கேலி செய்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.
45:10. எரிகிடங்கு அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய சம்பாத்தியங்களோ அன்றிக் கடவுள்-வுடன் அவர்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்களோ அவர்களுக்கு உதவாது. பயங்கரமானதொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
45:11. இது ஒரு கலங்கரை விளக்காகும், மேலும் தங்கள் இரட்சகரின் இந்த வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் கண்டனத்திற்கும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டனர்.
45:12. கடவுள்தான் அவருடைய விதிமுறைகளுக்கேற்பக் கப்பல்கள் அதில் சுற்றி வருவதற்காக, கடலினை உங்களுடைய சேவைக்கெனப் பணித்தவர். இவ்விதமாக, அவருடைய வாழ்வாதாரங்களை நீங்கள் தேடுகின்றீர்கள், நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு.
45:13. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் உங்கள் சேவைக்கென அவர் பணித்தார்; அனைத்தும் அவரிடமிருந்து. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை சான்றுகளாகும்.
45:14. கடவுள்-ன் நாட்களை எதிர்பார்க்காதவர்களை மன்னித்து விடும்படி நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறுவீராக. ஒவ்வொருவருக்கும் அவர்கள் சம்பாதித்தவற்றுக்காக அவர் முழுமையாகக் கூலி கொடுப்பார்.
45:15. நன்னெறியான காரியங்கள் புரிகின்ற எவராயினும் தன் சொந்த நலனுக்காகவே அவ்வாறு செய்கின்றார், மேலும் தீய செயல்கள் புரிகின்ற எவராயினும் தனக்கே கேடாகத்தான் அவ்வாறு செய்கின்றார். உங்களுடைய இரட்சகரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
45:16. இஸ்ரேலின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் நாம் கொடுத்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங்களை அவர்களுக்கு வழங்கினோம்; மற்றெந்த மக்களை விடவும் அதிகமான ஆசீர்வாதங்களை அவர்கள் மீது நாம் அருளினோம்.
45:17. தெளிவான கட்டளைகளை இதிலே நாம் அவர்களுக்குக் கொடுத்துள்ளோம். முரண்நகையாக, அறிவு அவர்களிடம் வரும் வரை இதனை அவர்கள் தர்க்கிக்கவில்லை. இது அவர்கள் பக்கம் உள்ள பொறாமையின் காரணமாகவேயாகும். நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளன்று அவர்கள் தர்க்கித்த ஒவ்வொன்றைக் குறித்தும் தீர்ப்பளிப்பார்.
45:18. பின்னர் சரியான சட்டங்களை நிலைநாட்டுவதற்காக உம்மை நாம் நியமித்தோம்; நீர் இதனைப் பின் பற்ற வேண்டும், மேலும் அறியாதவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.
45:19. கடவுள்-க்கெதிராக எவ்விதத்திலும் அவர்கள் உங்களுக்கு உதவவே இயலாது. வரம்புமீறுபவர்கள் தான் தங்களையே ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாக்கிக் கொள்கின்றனர், அதே சமயம் கடவுள் தான் நன்னெறியாளர்களின் இரட்சகராக இருக்கின்றார்.
45:20. இது மக்களுக்கு அறிவூட்டல்களையும், வழிகாட்டலையும், உறுதியுடையவர்களுக்குக் கருணையையும் வழங்குகின்றது.
45:21. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் போன்ற அதேவிதமாக தீய செயல்களைப் புரிபவர்களையும் நாம் நடத்துவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அவர்களுடைய வாழ்வும் அவர்களுடைய மரணமும் ஒரே மாதிரி இருக்க முடியுமா?* உண்மையில் அவர்களுடைய தீர்ப்பு தவறானதேயாகும்.
*45:21 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை என்பதை இப்போது நாம் அறிந்திருக்கின்றோம் -அவர்கள் நேரடியாகச் சுவர்க்கம் செல்கின்றனர் 16:32 - அதே சமயம் நன்னெறியற்றவர்கள் மரணத்தின் வானவர்களால் அடித்து நொறுக்கப்படுகின்றனர் 8:50,47:27
45:22. வானங்களையும் பூமியையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே, கடவுள் படைத்தார், சிறிதளவும் அநீதமின்றி, ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தவற்றிற்கான கூலியைக் கொடுப்பதற்காக.*
*45:22 நம்மை மீட்டுக்கொள்வதற்கு, சாத்தானுடனான நம்முடைய பழமையான கூட்டணியை மறுதலிப்பதற்கு, மேலும் கடவுளின் சாம்ராஜ்யத்தில் மீண்டும் சேர்ந்து கொள்வதற்கு ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பாக இந்த வாழ்வைக் கடவுள் நமக்கு வழங்கியுள்ளார். பார்க்க முன்னுரை & பின் இணைப்பு 7.
45:23. தன்னுடைய அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அதன் விளைவாக, அவனுக்கு அறிவு இருந்தபோதிலும், கடவுள் அவனை வழிகேட்டில் அனுப்பி, அவனுடைய செவிப்புலனிலும் அவனுடைய மனத்திலும் முத்திரையிடுகின்றார், மேலும் அவனுடைய கண்களின் மீது ஒரு திரையை அமைத்து விடுகின்றார். கடவுள்-ன் இத்தகையதொரு தீர்மானத்திற்குப் பின் எவர் அவனை வழி நடத்த இயலும்? நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டீர்களா?
45:24. அவர்கள் கூறினர், "இந்த வாழ்வு மட்டுமே நாம் வாழ்கின்றோம்; நாம் வாழ்கின்றோம், மேலும் மரணிக்கின்றோம், மேலும் காலம்தான் நம்முடைய மரணத்திற்குக் காரணமாகின்றது! இதனைப் பற்றி அவர்களுக்கு உறுதியான அறிவு எதுவும் கிடையாது; அவர்கள் அனுமானம் மட்டுமே செய்கின்றனர்.
45:25. நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டால், அவர்களுடைய ஒரே வாதமாவது, "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் முன்னோர்களை மீண்டும் கொண்டு வாருங்கள், என்று கூறுவதாகவே இருந்தது.
45:26. கூறுவீராக, "கடவுள் உங்களுக்கு வாழ்வை வழங்கினார், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார், பின்னர் தவிர்த்து விட முடியாத தான, உயிர்த்தெழுப்பப்படுகின்ற நாளுக்கென உங்களை அவர் ஒன்று திரட்டுவார். ஆனால் அதிகமான மக்கள் அறியமாட்டார்கள்."
45:27. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்தும் கடவுள்-க்குரியது. வேளை (தீர்ப்பு) நிகழ்ந்தேறும் அந்நாள், அப்போதுதான் பொய்ப்பிப்பவர்கள் நஷ்டமடைவார்கள்.
45:28. ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டிருக்க நீர் காண்பீர். ஒவ்வொரு சமுதாயமும் அவர்களுடைய பதிவேட்டைப் பார்ப்பதற்காக அழைக்கப்படும். இன்றைய தினம், நீங்கள் செய்த ஒவ்வொன்றுக்காகவும் நீங்கள் கூலி கொடுக்க பெறுவீர்கள்.
45:29. இது நம்முடைய பதிவேடாகும்; உங்களைப் பற்றிய உண்மைகளை அது கூறுகின்றது. நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் நாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.
45:30. நம்பிக்கை கொண்டு நன்னெறியான காரியங்கள் புரிபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இரட்சகர் தன்னுடைய கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். இதுதான் மகத்தான பெரு வெற்றியாகும்.
45:31. நம்பமறுப்பவர்களைப் பொறுத்த வரை: என்னுடைய வெளிப்பாடுகள் உங்களிடம் எடுத்துரைக்கப்படவில்லையா, ஆனால் நீங்கள் ஆணவம் கொண்டவர்களாகி தீயமக்களாக இருக்கவில்லையா?
45:32. கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் எனவும், (தீர்ப்பின்) வேளை தவிர்த்து விட முடியாதது எனவும் பிரகடனம் செய்யப்பட்டபோது, நீங்கள் கூறினீர்கள், வேளை என்றால் என்ன என்பதை நாங்கள் அறிய மாட்டோம்! அதனைப் பற்றி நாங்கள் முற்றிலும் அனுமானத்துடனேயே இருக்கின்றோம்; நாங்கள் உறுதியுடையவர்களாக இல்லை.
45:33. அவர்களுடைய செயல்களின் தீமைகள் அவர்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டு விடும், மேலும் அவர்கள் கேலி செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும்.
45:34. இவ்வாறு பிரகடனிக்கப்படும்: இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்ததைப் போல அதே விதமாகவே, இன்றைய தினம் நாம் உங்களை மறந்து விடுகின்றோம். நரகநெருப்புதான் உங்களுடைய தங்குமிடமாகும், மேலும் உங்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.
45:35. இது ஏனெனில் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நீங்கள் வீணானதெனக் கருதினீர்கள், மேலும் முந்திய வாழ்வில் மூழ்கியவர்களாக இருந்தீர்கள். அதன் விளைவாக, அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற மாட்டார்கள், அன்றி அவர்கள் பிழை பொறுக்கப்படவும் மாட்டார்கள்.
45:36. அனைத்துப் புகழும் கடவுள்-க்குரியது; வானங்களின் இரட்சகர், பூமியின் இரட்சகர், பிரபஞ்சத்தின் இரட்சகர்.
45:37. வானங்கள் மற்றும் பூமியில் அனைத்து மேன்மையும் அவருக்குரியது. அவர்தான் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.