Find
Chapter 42: Al-Shoora
42:0-53
53 verses Revelation order 62
سورة الشورى

. ١:٤٢ حم

. ٢:٤٢ عسق

. ٣:٤٢ كَذٰلِكَ يوحى إِلَيكَ وَإِلَى الَّذينَ مِن قَبلِكَ اللَّهُ العَزيزُ الحَكيمُ

. ٤:٤٢ لَهُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ وَهُوَ العَلِىُّ العَظيمُ

. ٥:٤٢ تَكادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرنَ مِن فَوقِهِنَّ وَالمَلٰئِكَةُ يُسَبِّحونَ بِحَمدِ رَبِّهِم وَيَستَغفِرونَ لِمَن فِى الأَرضِ أَلا إِنَّ اللَّهَ هُوَ الغَفورُ الرَّحيمُ

. ٦:٤٢ وَالَّذينَ اتَّخَذوا مِن دونِهِ أَولِياءَ اللَّهُ حَفيظٌ عَلَيهِم وَما أَنتَ عَلَيهِم بِوَكيلٍ

. ٧:٤٢ وَكَذٰلِكَ أَوحَينا إِلَيكَ قُرءانًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ القُرىٰ وَمَن حَولَها وَتُنذِرَ يَومَ الجَمعِ لا رَيبَ فيهِ فَريقٌ فِى الجَنَّةِ وَفَريقٌ فِى السَّعيرِ

. ٨:٤٢ وَلَو شاءَ اللَّهُ لَجَعَلَهُم أُمَّةً وٰحِدَةً وَلٰكِن يُدخِلُ مَن يَشاءُ فى رَحمَتِهِ وَالظّٰلِمونَ ما لَهُم مِن وَلِىٍّ وَلا نَصيرٍ

. ٩:٤٢ أَمِ اتَّخَذوا مِن دونِهِ أَولِياءَ فَاللَّهُ هُوَ الوَلِىُّ وَهُوَ يُحىِ المَوتىٰ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

. ١٠:٤٢ وَمَا اختَلَفتُم فيهِ مِن شَىءٍ فَحُكمُهُ إِلَى اللَّهِ ذٰلِكُمُ اللَّهُ رَبّى عَلَيهِ تَوَكَّلتُ وَإِلَيهِ أُنيبُ

. ١١:٤٢ فاطِرُ السَّمٰوٰتِ وَالأَرضِ جَعَلَ لَكُم مِن أَنفُسِكُم أَزوٰجًا وَمِنَ الأَنعٰمِ أَزوٰجًا يَذرَؤُكُم فيهِ لَيسَ كَمِثلِهِ شَىءٌ وَهُوَ السَّميعُ البَصيرُ

. ١٢:٤٢ لَهُ مَقاليدُ السَّمٰوٰتِ وَالأَرضِ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ وَيَقدِرُ إِنَّهُ بِكُلِّ شَىءٍ عَليمٌ

. ١٣:٤٢ شَرَعَ لَكُم مِنَ الدّينِ ما وَصّىٰ بِهِ نوحًا وَالَّذى أَوحَينا إِلَيكَ وَما وَصَّينا بِهِ إِبرٰهيمَ وَموسىٰ وَعيسىٰ أَن أَقيمُوا الدّينَ وَلا تَتَفَرَّقوا فيهِ كَبُرَ عَلَى المُشرِكينَ ما تَدعوهُم إِلَيهِ اللَّهُ يَجتَبى إِلَيهِ مَن يَشاءُ وَيَهدى إِلَيهِ مَن يُنيبُ

. ١٤:٤٢ وَما تَفَرَّقوا إِلّا مِن بَعدِ ما جاءَهُمُ العِلمُ بَغيًا بَينَهُم وَلَولا كَلِمَةٌ سَبَقَت مِن رَبِّكَ إِلىٰ أَجَلٍ مُسَمًّى لَقُضِىَ بَينَهُم وَإِنَّ الَّذينَ أورِثُوا الكِتٰبَ مِن بَعدِهِم لَفى شَكٍّ مِنهُ مُريبٍ

. ١٥:٤٢ فَلِذٰلِكَ فَادعُ وَاستَقِم كَما أُمِرتَ وَلا تَتَّبِع أَهواءَهُم وَقُل ءامَنتُ بِما أَنزَلَ اللَّهُ مِن كِتٰبٍ وَأُمِرتُ لِأَعدِلَ بَينَكُمُ اللَّهُ رَبُّنا وَرَبُّكُم لَنا أَعمٰلُنا وَلَكُم أَعمٰلُكُم لا حُجَّةَ بَينَنا وَبَينَكُمُ اللَّهُ يَجمَعُ بَينَنا وَإِلَيهِ المَصيرُ

. ١٦:٤٢ وَالَّذينَ يُحاجّونَ فِى اللَّهِ مِن بَعدِ مَا استُجيبَ لَهُ حُجَّتُهُم داحِضَةٌ عِندَ رَبِّهِم وَعَلَيهِم غَضَبٌ وَلَهُم عَذابٌ شَديدٌ

. ١٧:٤٢ اللَّهُ الَّذى أَنزَلَ الكِتٰبَ بِالحَقِّ وَالميزانَ وَما يُدريكَ لَعَلَّ السّاعَةَ قَريبٌ

. ١٨:٤٢ يَستَعجِلُ بِهَا الَّذينَ لا يُؤمِنونَ بِها وَالَّذينَ ءامَنوا مُشفِقونَ مِنها وَيَعلَمونَ أَنَّهَا الحَقُّ أَلا إِنَّ الَّذينَ يُمارونَ فِى السّاعَةِ لَفى ضَلٰلٍ بَعيدٍ

. ١٩:٤٢ اللَّهُ لَطيفٌ بِعِبادِهِ يَرزُقُ مَن يَشاءُ وَهُوَ القَوِىُّ العَزيزُ

. ٢٠:٤٢ مَن كانَ يُريدُ حَرثَ الـٔاخِرَةِ نَزِد لَهُ فى حَرثِهِ وَمَن كانَ يُريدُ حَرثَ الدُّنيا نُؤتِهِ مِنها وَما لَهُ فِى الـٔاخِرَةِ مِن نَصيبٍ

. ٢١:٤٢ أَم لَهُم شُرَكٰؤُا۟ شَرَعوا لَهُم مِنَ الدّينِ ما لَم يَأذَن بِهِ اللَّهُ وَلَولا كَلِمَةُ الفَصلِ لَقُضِىَ بَينَهُم وَإِنَّ الظّٰلِمينَ لَهُم عَذابٌ أَليمٌ

. ٢٢:٤٢ تَرَى الظّٰلِمينَ مُشفِقينَ مِمّا كَسَبوا وَهُوَ واقِعٌ بِهِم وَالَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فى رَوضاتِ الجَنّاتِ لَهُم ما يَشاءونَ عِندَ رَبِّهِم ذٰلِكَ هُوَ الفَضلُ الكَبيرُ

. ٢٣:٤٢ ذٰلِكَ الَّذى يُبَشِّرُ اللَّهُ عِبادَهُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ قُل لا أَسـَٔلُكُم عَلَيهِ أَجرًا إِلَّا المَوَدَّةَ فِى القُربىٰ وَمَن يَقتَرِف حَسَنَةً نَزِد لَهُ فيها حُسنًا إِنَّ اللَّهَ غَفورٌ شَكورٌ

. ٢٤:٤٢ أَم يَقولونَ افتَرىٰ عَلَى اللَّهِ كَذِبًا فَإِن يَشَإِ اللَّهُ يَختِم عَلىٰ قَلبِكَ وَيَمحُ اللَّهُ البٰطِلَ وَيُحِقُّ الحَقَّ بِكَلِمٰتِهِ إِنَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

. ٢٥:٤٢ وَهُوَ الَّذى يَقبَلُ التَّوبَةَ عَن عِبادِهِ وَيَعفوا عَنِ السَّيِّـٔاتِ وَيَعلَمُ ما تَفعَلونَ

. ٢٦:٤٢ وَيَستَجيبُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَيَزيدُهُم مِن فَضلِهِ وَالكٰفِرونَ لَهُم عَذابٌ شَديدٌ

. ٢٧:٤٢ وَلَو بَسَطَ اللَّهُ الرِّزقَ لِعِبادِهِ لَبَغَوا فِى الأَرضِ وَلٰكِن يُنَزِّلُ بِقَدَرٍ ما يَشاءُ إِنَّهُ بِعِبادِهِ خَبيرٌ بَصيرٌ

. ٢٨:٤٢ وَهُوَ الَّذى يُنَزِّلُ الغَيثَ مِن بَعدِ ما قَنَطوا وَيَنشُرُ رَحمَتَهُ وَهُوَ الوَلِىُّ الحَميدُ

. ٢٩:٤٢ وَمِن ءايٰتِهِ خَلقُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَثَّ فيهِما مِن دابَّةٍ وَهُوَ عَلىٰ جَمعِهِم إِذا يَشاءُ قَديرٌ

. ٣٠:٤٢ وَما أَصٰبَكُم مِن مُصيبَةٍ فَبِما كَسَبَت أَيديكُم وَيَعفوا عَن كَثيرٍ

. ٣١:٤٢ وَما أَنتُم بِمُعجِزينَ فِى الأَرضِ وَما لَكُم مِن دونِ اللَّهِ مِن وَلِىٍّ وَلا نَصيرٍ

. ٣٢:٤٢ وَمِن ءايٰتِهِ الجَوارِ فِى البَحرِ كَالأَعلٰمِ

. ٣٣:٤٢ إِن يَشَأ يُسكِنِ الرّيحَ فَيَظلَلنَ رَواكِدَ عَلىٰ ظَهرِهِ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِكُلِّ صَبّارٍ شَكورٍ

. ٣٤:٤٢ أَو يوبِقهُنَّ بِما كَسَبوا وَيَعفُ عَن كَثيرٍ

. ٣٥:٤٢ وَيَعلَمَ الَّذينَ يُجٰدِلونَ فى ءايٰتِنا ما لَهُم مِن مَحيصٍ

. ٣٦:٤٢ فَما أوتيتُم مِن شَىءٍ فَمَتٰعُ الحَيوٰةِ الدُّنيا وَما عِندَ اللَّهِ خَيرٌ وَأَبقىٰ لِلَّذينَ ءامَنوا وَعَلىٰ رَبِّهِم يَتَوَكَّلونَ

. ٣٧:٤٢ وَالَّذينَ يَجتَنِبونَ كَبٰئِرَ الإِثمِ وَالفَوٰحِشَ وَإِذا ما غَضِبوا هُم يَغفِرونَ

. ٣٨:٤٢ وَالَّذينَ استَجابوا لِرَبِّهِم وَأَقامُوا الصَّلوٰةَ وَأَمرُهُم شورىٰ بَينَهُم وَمِمّا رَزَقنٰهُم يُنفِقونَ

. ٣٩:٤٢ وَالَّذينَ إِذا أَصابَهُمُ البَغىُ هُم يَنتَصِرونَ

. ٤٠:٤٢ وَجَزٰؤُا۟ سَيِّئَةٍ سَيِّئَةٌ مِثلُها فَمَن عَفا وَأَصلَحَ فَأَجرُهُ عَلَى اللَّهِ إِنَّهُ لا يُحِبُّ الظّٰلِمينَ

. ٤١:٤٢ وَلَمَنِ انتَصَرَ بَعدَ ظُلمِهِ فَأُولٰئِكَ ما عَلَيهِم مِن سَبيلٍ

. ٤٢:٤٢ إِنَّمَا السَّبيلُ عَلَى الَّذينَ يَظلِمونَ النّاسَ وَيَبغونَ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ أُولٰئِكَ لَهُم عَذابٌ أَليمٌ

. ٤٣:٤٢ وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذٰلِكَ لَمِن عَزمِ الأُمورِ

. ٤٤:٤٢ وَمَن يُضلِلِ اللَّهُ فَما لَهُ مِن وَلِىٍّ مِن بَعدِهِ وَتَرَى الظّٰلِمينَ لَمّا رَأَوُا العَذابَ يَقولونَ هَل إِلىٰ مَرَدٍّ مِن سَبيلٍ

. ٤٥:٤٢ وَتَرىٰهُم يُعرَضونَ عَلَيها خٰشِعينَ مِنَ الذُّلِّ يَنظُرونَ مِن طَرفٍ خَفِىٍّ وَقالَ الَّذينَ ءامَنوا إِنَّ الخٰسِرينَ الَّذينَ خَسِروا أَنفُسَهُم وَأَهليهِم يَومَ القِيٰمَةِ أَلا إِنَّ الظّٰلِمينَ فى عَذابٍ مُقيمٍ

. ٤٦:٤٢ وَما كانَ لَهُم مِن أَولِياءَ يَنصُرونَهُم مِن دونِ اللَّهِ وَمَن يُضلِلِ اللَّهُ فَما لَهُ مِن سَبيلٍ

. ٤٧:٤٢ استَجيبوا لِرَبِّكُم مِن قَبلِ أَن يَأتِىَ يَومٌ لا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ ما لَكُم مِن مَلجَإٍ يَومَئِذٍ وَما لَكُم مِن نَكيرٍ

. ٤٨:٤٢ فَإِن أَعرَضوا فَما أَرسَلنٰكَ عَلَيهِم حَفيظًا إِن عَلَيكَ إِلَّا البَلٰغُ وَإِنّا إِذا أَذَقنَا الإِنسٰنَ مِنّا رَحمَةً فَرِحَ بِها وَإِن تُصِبهُم سَيِّئَةٌ بِما قَدَّمَت أَيديهِم فَإِنَّ الإِنسٰنَ كَفورٌ

. ٤٩:٤٢ لِلَّهِ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ يَخلُقُ ما يَشاءُ يَهَبُ لِمَن يَشاءُ إِنٰثًا وَيَهَبُ لِمَن يَشاءُ الذُّكورَ

. ٥٠:٤٢ أَو يُزَوِّجُهُم ذُكرانًا وَإِنٰثًا وَيَجعَلُ مَن يَشاءُ عَقيمًا إِنَّهُ عَليمٌ قَديرٌ

. ٥١:٤٢ وَما كانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ اللَّهُ إِلّا وَحيًا أَو مِن وَرائِ حِجابٍ أَو يُرسِلَ رَسولًا فَيوحِىَ بِإِذنِهِ ما يَشاءُ إِنَّهُ عَلِىٌّ حَكيمٌ

. ٥٢:٤٢ وَكَذٰلِكَ أَوحَينا إِلَيكَ روحًا مِن أَمرِنا ما كُنتَ تَدرى مَا الكِتٰبُ وَلَا الإيمٰنُ وَلٰكِن جَعَلنٰهُ نورًا نَهدى بِهِ مَن نَشاءُ مِن عِبادِنا وَإِنَّكَ لَتَهدى إِلىٰ صِرٰطٍ مُستَقيمٍ

. ٥٣:٤٢ صِرٰطِ اللَّهِ الَّذى لَهُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ أَلا إِلَى اللَّهِ تَصيرُ الأُمورُ

Consultation

42:1. H. M.*

*42:1 These initials constitute a significant part of the Quran's miracle (Footnote 40:1).

42:2. `A. S. Q.*

*42:2 This is the only sura where we see the initials `A.S.Q. (`Ayn Seen Qaf), and the total occurrence of these three letters in this sura is 209, 19x11. Also, the letter ``Q'' occurs in this sura 57 times, 19x3. The only other sura where we see the initial ``Q'' is Sura 50, and this letter occurs in that sura also 57 times (See Appendix 1).

42:3. Inspiring you, and those before you, is God, the Almighty, Most Wise.

42:4. To Him belongs everything in the heavens and everything on earth, and He is the Most High, the Great.

42:5. The heavens above them almost shatter, out of reverence for Him, and the angels praise and glorify their Lord, and they ask forgiveness for those on earth. Absolutely, God is the Forgiver, Most Merciful.

42:6. Those who set up other lords beside Him, God is the One in charge of them; you are not their advocate.

42:7. We thus reveal to you an Arabic Quran to warn the central community and all around it, and to warn about the Day of Summoning that is inevitable. Some will end up in Heaven, and some in Hell.

42:8. Had God willed, He could have made them one community. But He redeems into His mercy whomever He wills. As for the transgressors, they have no master, nor a helper.

42:9. Did they find other lords beside Him? God is the only Lord and Master. He is the One who resurrects the dead, and He is the Omnipotent One.

42:10. If you dispute any part of this message, the judgment for doing this rests with God. Such is God my Lord. In Him I trust, and to Him I submit.

42:11. Initiator of the heavens and the earth. He created for you from among yourselves spouses - and also for the animals. He thus provides you with the means to multiply. There is nothing that equals Him. He is the Hearer, the Seer.

42:12. To Him belongs absolute control of the heavens and the earth. He is the One who increases the provision for whomever He wills, or reduces it. He is fully aware of all things.

42:13. He decreed for you the same religion decreed for Noah, and what we inspired to you, and what we decreed for Abraham, Moses, and Jesus: "You shall uphold this one religion, and do not divide it." The idol worshipers will greatly resent what you invite them to do. God redeems to Himself whomever He wills; He guides to Himself only those who totally submit.

42:14. Ironically, they broke up into sects only after the knowledge had come to them, due to jealousy and resentment among themselves. If it were not for a predetermined decision from your Lord to respite them for a definite interim, they would have been judged immediately. Indeed, the later generations who inherited the scripture are full of doubts.

42:15. This is what you shall preach, and steadfastly maintain what you are commanded to do, and do not follow their wishes. And proclaim: "I believe in all the scriptures sent down by God. I was commanded to judge among you equitably. God is our Lord and your Lord. We have our deeds and you have your deeds. There is no argument between us and you. God will gather us all together; to Him is the ultimate destiny."

42:16. Those who argue about God, after receiving His message, their argument is nullified at their Lord. They have incurred condemnation, and have deserved a severe retribution.

42:17. God is the One who sent down the scripture, to deliver the truth and the law. For all that you know, the Hour (Day of Judgment) may be very close.

42:18. Challenging it are those who do not believe in it. As for those who believe, they are concerned about it, and they know that it is the truth. Absolutely, those who deny the Hour have gone far astray.

42:19. God is fully aware of all His creatures; He provides for whomever He wills. He is the Powerful, the Almighty.

42:20. Whoever seeks the rewards of the Hereafter, we multiply the rewards for him. And whoever seeks the materials of this world, we give him therefrom, then he receives no share in the Hereafter.

42:21. They follow idols who decree for them religious laws never authorized by God. If it were not for the predetermined decision, they would have been judged immediately. Indeed, the transgressors have incurred a painful retribution.*

*42:21 The Islam of today's Muslim world has been so distorted, it has become a Satanic cult. The Ulama, or religious scholars, have added many extraneous laws, prohibitions, dress codes, dietary regulations, and religious practices never authorized by God. This is one of the main reasons for sending God's Messenger of the Covenant (9:31, 33:67, and Appendix 33).

42:22. You will see the transgressors worried about everything they had committed; everything will come back and haunt them. As for those who believed and led a righteous life, they will be in the gardens of Paradise. They will receive whatever they wish from their Lord. This is the great blessing.

42:23. This is the good news from God to His servants who believe and lead a righteous life. Say, "I do not ask you for any wage. I do ask each of you to take care of your own relatives." Anyone who does a righteous work, we multiply his reward for it. God is Forgiver, Appreciative.

42:24. Are they saying, "He (Rashad)* has fabricated lies about God!"? If God willed, He could have sealed your mind, but God erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts.

*42:24 The disbelievers added 2 false statements at the end of Sura 9 to commemorate their idol, the prophet Muhammad. God has revealed overwhelming evidence to erase this blasphemy and establish the truth. By adding the gematrical value of "Rashad Khalifa" (1230), plus the verse number (24), we get 1254, 19x66 (please see Appendices 2 & 24 for the details).

42:25. He is the One who accepts the repentance from His servants, and remits the sins. He is fully aware of everything you do.

42:26. Responding to Him are those who believe and lead a righteous life. He will shower them with His blessings. As for the disbelievers, they have incurred a severe retribution.

42:27. If God increased the provision for His servants, they would transgress on earth. This is why He sends it precisely measured to whomever He wills. He is fully Cognizant and Seer of His servants.

42:28. He is the One who sends down the rain after they had despaired, and spreads His mercy. He is the only Master, Most Praiseworthy.

42:29. Among His proofs is the creation of the heavens and the earth, and the creatures He spreads in them. He is able to summon them, when He wills.

42:30. Anything bad that happens to you is a consequence of your own deeds, and He overlooks many (of your sins).

42:31. You can never escape, and you have none beside God as a Lord and Master.

42:32. Among His proofs are the ships that sail the sea with sails like flags.

42:33. If He willed, He could have stilled the winds, leaving them motionless on top of the water. These are proofs for those who are steadfast, appreciative.

42:34. He can annihilate them, as a consequence of their own works. Instead, He overlooks many (of their sins).

42:35. Those who argue against our proofs will find out that they have no basis.

42:36. Whatever you are given is no more than temporary material of this life. What God possesses is far better and everlasting, for those who believe and trust in their Lord.

42:37. They avoid gross sins and vice, and when angered they forgive.

42:38. They respond to their Lord by observing the Contact Prayers (Salat). Their affairs are decided after due consultation among themselves, and from our provisions to them they give (to charity).

42:39. When gross injustice befalls them, they stand up for their rights.

42:40. Although the just requital for an injustice is an equivalent retribution, those who pardon and maintain righteousness are rewarded by God. He does not love the unjust.

42:41. Certainly, those who stand up for their rights, when injustice befalls them, are not committing any error.

42:42. The wrong ones are those who treat the people unjustly, and resort to aggression without provocation. These have incurred a painful retribution.

42:43. Resorting to patience and forgiveness reflects a true strength of character.

42:44. Whomever God sends astray will never find any other lord, and you will see such transgressors, when they see the retribution, saying, "Can we get another chance?"

42:45. You will see them facing it, humiliated and debased, and looking, yet trying to avoid looking. Those who believed will proclaim: "The real losers are those who lost their souls and their families on the Day of Resurrection. The transgressors have deserved an everlasting retribution."

42:46. There will be no allies to help them against God. Whomever God sends astray can never be guided.

42:47. You shall respond to your Lord before a day comes which is decreed inevitable by God. There will be no refuge for you on that day, nor an advocate.

42:48. If they turn away, we did not send you as their guardian. Your sole mission is delivering the message. When we shower the human beings with mercy, they become proud, and when adversity afflicts them, as a consequence of their own deeds, the human beings turn into disbelievers.

42:49. To God belongs the sovereignty of the heavens and the earth. He creates whatever He wills, granting daughters to whomever He wills, and granting sons to whomever He wills.

42:50. Or, He may have the males and the females marry each other, then render whomever He wills sterile. He is Omniscient, Omnipotent.

42:51. No human being can communicate with God except through inspiration, or from behind a barrier, or by sending a messenger through whom He reveals what He wills. He is the Most High, Most Wise.

42:52. Thus, we inspired to you a revelation proclaiming our commandments. You had no idea about the scripture, or faith. Yet, we made this a beacon to guide whomever we choose from among our servants. Surely, you guide in a straight path.

42:53. The path of God, to whom belongs everything in the heavens and everything on earth. Absolutely, all matters are controlled by God.

கலந்தாலோசித்தல்

42:1. ஹ்ஹ. ம.*

*42:1 இந்த துவக்க எழுத்துகள் குர்ஆனுடைய அற்புதத்தின் முக்கியமானதொரு அங்கமாக அமைகின்றது. (40:1ன் அடிக் குறிப்பு).

42:2. ‘அ. ச. க.*

*42:2 ‘அ.ச.க. (‘அயன் ஸீன் காஃப்), என்ற இந்த துவக்க எழுத்துகளை இந்த ஒரு அத்தியாயத்தில் மட்டுமே நாம் காண்கின்றோம், மேலும் இந்த சூராவில் இந்த மூன்று எழுத்துகளும் இடம்பெறும் மொத்த எண்ணிக்கை 209, 19x11 ஆகும். அத்துடன் "க" என்ற இந்த எழுத்து இந்த சூராவில் 57 முறை, 19x3 இடம் பெறுகின்றது. "க" என்ற இந்த துவக்க எழுத்தை நாம் காணும் வேறு ஒரே சூரா, சூரா 50 ஆகும், மேலும் அந்த சூராவிலும் இந்த எழுத்து 57 முறைதான் இடம் பெறுகின்றது (பார்க்க பின் இணைப்பு1).

42:3. உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும், உள்ளுணர்வளிப்பது கடவுள் ஆகும், எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

42:4. வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்குரியது, மேலும் அவர் மிக உயர்ந்தவர், மகத்தானவர்.

42:5. அவர்களுக்கு மேலே வானங்கள், அவர் மீதுள்ள பக்தியின் காரணத்தால், ஏறத்தாழ வெடித்துப் பிளந்து விடுகின்றது, மேலும் வானவர்கள் தங்கள் இரட்சகரைப் புகழ்ந்து துதிக்கின்றனர், மேலும் பூமியில் உள்ளவர்களுக்காக அவர்கள் பாவமன்னிப்புக் கேட்கின்றனர். நிச்சயமாக, கடவுள்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

42:6. அவருடன் மற்ற எஜமானர்களை அமைத்துக் கொள்பவர்கள், கடவுள்தான் அவர்களுடைய பொறுப்பாளராக இருக்கின்றார்; நீர் அவர்களுடைய வழக்குரைஞர் அல்லர்.

42:7. மையமான சமூகத்தையும் அதனைச் சுற்றியுள்ள அனைவரையும் எச்சரிப்பதற்காக, மேலும் தவிர்த்து விட முடியாத அந்த ஒன்று திரட்டும் நாளைப் பற்றி எச்சரிப்பதற்காக, அரபியிலானதொரு குர்ஆனை இவ்விதமாக நாம் உமக்கு வெளிப்படுத்துகின்றோம். சிலர் சுவனத்தைச் சென்றடைவார்கள், இன்னும் சிலர் நரகத்தை.

42:8. கடவுள் நாடியிருந்தால், அவர்களை ஒரே சமுதாயமாக அவர் ஆக்கியிருக்க முடியும். ஆனால் தான் நாடுகின்ற எவரையும் தன் கருணைக்குள் அவர் மீட்டுக் கொள்கின்றார். வரம்புமீறுபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அதிபதியோ அன்றி ஓர் உதவியாளரோ கிடையாது.

42:9. அவருடன் வேறு எஜமானர்களை அவர்கள் கண்டு விட்டனரா? கடவுள்தான் ஒரே எஜமானரும் அதிபதியும் ஆவார். அவர்தான் இறந்தவர்களை உயிர்த்தெழுப்புகின்றார், மேலும் அவர்தான் சர்வசக்தியுடையவர்.

42:10. இந்த தூதுச்செய்தியின் எந்தப் பகுதியையேனும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டால், இதனைச் செய்ததற்குரிய தீர்ப்பு கடவுள்-யிடமே உள்ளது. என் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவர் மீது நான் பொறுப்பேற்படுத்துகின்றேன், மேலும் அவருக்கே நான் சரணடைகின்றேன்.

42:11. வானங்கள் மற்றும் பூமியின் ஆரம்பகர்த்தா. உங்களிலிருந்தே வாழ்க்கைத் துணைகளை அவர் உங்களுக்காக படைத்தார்-அத்துடன் விலங்குகளுக்கும் கூட. இவ்விதமாக அவர் இனப்பெருக்கத்திற்குரிய வழி முறைகளை உங்களுக்கு வழங்குகின்றார். அவருக்கு நிகராக எந்த ஒன்றும் இல்லை. அவர்தான் செவியேற்பவர், பார்ப்பவர்.

42:12. வானங்கள் மற்றும் பூமியின் பூரண கட்டுப்பாடு அவருக்கே உரியது. தான் நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதோ அல்லது குறைப்பதோ அவர்தான். அனைத்து விஷயங்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

42:13. நோவாவுக்கு விதிக்கப்பட்ட அதே மார்க்கத்தைத் தான் அவர் உங்களுக்கும் விதித்துள்ளார், மேலும் நாம் உமக்கு உள்ளுணர்வளித்ததும், ஆப்ரஹாம், மோஸஸ் மற்றும் ஜீஸஸுக்கு விதித்ததுமாவது: "இந்த ஒரு மார்க்கத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும், மேலும் அதனைப் பிரித்து விடாதீர்கள்." ஏகத்துவ்வாதிகளுக்கெதிராக போலித் தெய்வ வழிபாடு செய்பவர்கள் அவர்கள் எதனைச் செய்ய வேண்டுமென்று நீர் அழைக்கின்றீரோ அதன்பால் போலித் தெய்வ வழி பாடு செய்பவர்கள் பெரும் சீற்றம் அடைவார்கள். தான் நாடுகின்ற எவரையும் கடவுள் தன்பால் மீட்டுக் கொள்கின்றார். முற்றிலும் சரணடைந்தவர்களை மட்டுமே அவர் தன்பால் வழிநடத்துகின்றார்.

42:14. முரண் நகையாக, அவர்களிடம் அறிவு வந்ததற்குப் பின்னர்தான் தங்களுக்கிடையே பொறாமை மற்றும் சீற்ற உணர்வின் காரணமாக, அவர்கள் பிரிவுகளாகச் சிதறிப் போனார்கள். வரையறுக்கப்பட்டதொரு தவணைவரை அவர்களுக்கு அவகாசமளிப்பதென உம் இரட்சகரிடமிருந்து முன்னரே நிர்ணயிக்கப்பட்டதொரு தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப் பட்டிருப்பார்கள். உண்மையில், வேதத்திற்கு வாரிசுகளான பிந்திய தலைமுறையினர் முற்றிலும் ஐயங்களுடனே இருக்கின்றனர்.

42:15. இதனைத்தான் நீர் பிரச்சாரம் செய்ய வேண்டும், மேலும் செய்துவர வேண்டுமென உமக்கு கட்டளையிடப்பட்டவற்றை உறுதிப்பாட்டுடன் கடைப்பிடிப்பீராக, மேலும் அவர்களுடைய ஆசைகளைப் பின்பற்றாதீர். மேலும் பிரகடனிப்பீராக: "கடவுள்-ஆல் இறக்கி அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களிலும் நான் நம்பிக்கை கொள்கின்றேன். உங்களுக்கிடையில் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். கடவுள்தான் எங்களுடைய இரட்சகரும் உங்களுடைய இரட்சகருமாவார். எங்களுடைய செயல்கள் எங்களுக்கு, மேலும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு. எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் எந்தத் தர்க்கமும் இல்லை. கடவுள் நம் அனைவரையும் ஒன்றாகத் திரட்டுவார்; இறுதிவிதி அவரிடமே உள்ளது."

42:16. எவர்கள் அவருடைய தூதுச் செய்தியைப் பெற்ற பின்னர், கடவுள்-ஐப் பற்றித்தர்க்கிக்கின்றனரோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இரட்சகரிடத்தில் செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது. அவர்கள் கண்டனத்திற்கு உள்ளாகி விட்டனர், மேலும் கடுமையானதொரு தண்டனைக்குத் தகுதியாகிவிட்டனர்.

42:17. கடவுள்தான் சத்தியத்தையும் சட்டத்தையும் சேர்ப்பிப்பதற்காக, வேதத்தை இறக்கி அனுப்பியவர். நீங்கள் அறிந்துள்ள அனைத்தின்படியும், வேளை (தீர்ப்பு நாள்) மிக அருகில் இருக்கக்கூடும்.

42:18. அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான் அதற்கு எதிராக அறைகூவல் விடுகின்றனர். நம்பிக்கை கொண்டோரைப் பொறுத்தவரை, அவர்கள் அதனைக் குறித்துக் கவலையுற்றவர்களாக இருக்கின்றனர், மேலும் அது சத்தியம்தான் என்பதை அவர்கள் அறிவார்கள். நிச்சயமாக, வேளையை மறுப்பவர்கள் மிக நெடிய வழிகேட்டில் சென்று விட்டனர்.

42:19. கடவுள் தன்னுடைய அனைத்துப் படைப்புகளையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்; தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வழங்குகின்றார். அவர்தான் சக்தி மிக்கவர், எல்லாம் வல்லவர்.

42:20. எவர் மறுமையின் வெகுமதிகளைத் தேடுகின்றாரோ, அவருடைய வெகுமதிகளை நாம் பெருகும்படிச் செய்கின்றோம். மேலும் எவர் இவ்வுலகப் பொருட்களைத் தேடுகின்றாரோ, அவருக்கு அதிலிருந்து நாம் வழங்குகின்றோம், பின்னர் மறுவுலகில் அவர் எந்தப் பங்கையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

42:21. கடவுள்-ஆல் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத மார்க்கச் சட்டங்களை அவர்களுக்கு விதிக்கின்ற போலித் தெய்வங்களை அவர்கள் பின்பற்றுகின்றனர். முன்னரே நிர்ணயிக்கப்பட்ட தீர்மானம் இல்லாதிருந்தால், அவர்கள் உடனடியாகத் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில், வரம்புமீறுபவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.*

*42:21 இன்றைய முஸ்லிம் உலகின் இஸ்லாமானது ஒரு சாத்தானிய மார்க்கமாகி விட்ட அளவுக்கு மிகவும் சிதைக்கப்பட்டு விட்டது. உலமாக்கள், அதாவது மார்க்க அறிஞர்கள் கடவுளால் ஒருபோதும் அங்கீகரிக்கப்படாத, சம்பந்தமில்லாத சட்டங்கள், தடைகள், ஆடைக் கட்டுப்பாடுகள், உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் மார்க்க அனுஷ்டானங்களைச் சேர்த்து விட்டனர். கடவுளின் உடன்படிக்கைத் தூதரை அனுப்புவதற்கான முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். (9:31), (33:67), மற்றும் பின் இணைப்பு 33).

42:22. அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் கவலையுற்றவர்களாக வரம்புமீறுபவர்களை நீர் காண்பீர்; ஒவ்வொன்றும் திரும்பி வந்து அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யும். நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தின் தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்ற எதனை யும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார்கள். இதுவே மகத்தான ஆசீர்வாதமாகும்.

42:23. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்ற தன் ஊழியர்களுக்குக் கடவுள்-யிட மிருந்துள்ள நற்செய்தி இதுவேயாகும். கூறுவீராக, "உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. உங்களுடைய சொந்த உறவினர்களைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே உங்களில் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கின்றேன்." எவரொருவர் ஒரு நன்னெறியான காரியத்தைப் புரிகின்றாரோ, அதற்குரிய வெகுமதியை அவருக்கு நாம் பெருக்குவோம். கடவுள் மன்னிப்பவர், நன்றி பாராட்டுபவர்.

42:24. "கடவுள்-ஐப் பற்றிப் பொய்களை அவர் (ரஷாத்)* புனைந்து கொண்டார்!" என்று அவர்கள் கூறுகின்றனரோ? கடவுள் நாடியிருந்தால், உம்முடைய மனத்தை அவர் முத்திரையிட்டிருக்க இயலும், ஆனால் கடவுள் பொய்மையை அகற்றுவதுடன் தன்னுடைய வார்த்தைகளால் சத்தியத்தை உறுதிப்படுத்துகின்றார். உள்ளார்ந்த எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

*42:24 நம்பமறுப்பவர்கள் தங்களுடைய போலித் தெய்வமான நபி முஹம்மதின் ஞாபகார்த்தமாக 9வது சூராவின் இறுதியில் 2 போலி வாசகங்களைச் சேர்த்தனர். இந்த இறைநிந்தனையை அகற்றி சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக மூழ்கடிக்கும் ஆதாரங்களைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார். "ரஷாத் கலீஃபா" என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), வசன எண்ணை (24) நாம் கூட்டினால், நமக்குக் கிடைக்கப் பெறுவது 1254, 19x66 (தயவு செய்து விபரங்களுக்கு பின் இணைப்பு 2 & 24 ஐப் பார்க்கவும்).

42:25. அவர்தான் தன்னுடைய ஊழியர்களிடமிருந்து வருந்துதலை ஏற்றுக் கொள்கின்றவர், மேலும் பாவங்களை மன்னிக்கின்றவர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

42:26. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள் தான் அவருக்கு மறுமொழி அளிக்கின்றனர். தன்னுடைய ஆசிகளை அவர்கள் மீது அவர் பொழிவார். நம்பமறுப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் கடுமையானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

42:27. கடவுள் தன்னுடைய ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகரித்தால், பூமியில் அவர்கள் வரம்புமீற விழைவார்கள். இதன் காரணமாகவே அவர் தான் நாடுகின்ற எவருக்கும் மிகச் சரியாக அளவிட்டு அதனை அனுப்புகின்றார். தன்னுடைய ஊழியர்களை முற்றிலும் நன்கறிந்தவராகவும் பார்ப்பவராகவும் அவர் இருக்கின்றார்.

42:28. அவர்தான் அவர்கள் விரக்தியுற்ற பின்னர் மழையை இறக்கி அனுப்புகின்றார், மேலும் தன் கருணையைப் பரப்புகின்றார். அவர்தான் ஒரே எஜமானர், மிகுந்த புகழுக்குத் தகுதியானவர்.

42:29. வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், அவற்றில் அவர் பரப்புகின்ற உயிரினங்களும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். தான் நாடும் போது, அவற்றை ஒன்று திரட்ட அவர் ஆற்றலுடையவர்.

42:30. உங்களுக்கு நேரிடும் எந்த ஒரு கெட்டதும் உங்களுடைய சொந்தச் செயல்களின் பின்விளைவேயாகும். மேலும் (உங்களுடைய பாவங்களில்) அதிகமானவற்றை அவர் பிழை பொறுத்துக் கொள்கின்றார்.

42:31. நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட முடியாது, மேலும் கடவுள்-வுடன் ஓர் இரட்சகராகவும் அதிபதியாகவும் உங்களுக்கு எவரும் கிடையாது.

42:32. கொடிகளைப் போன்ற பாய்மரங்களுடன் கடலில் மிதந்து செல்லும் கப்பல்கள் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.

42:33. அவர் நாடியிருந்தால், நீரின் மேல் அவை இயங்காது விட்டு விடும் வண்ணம், காற்றுகளை அசைவற்றதாக ஆக்கியிருக்க அவரால் இயலும். உறுதிப்பாடு உடையவர்களாகவும், நன்றியுடையவர்களாகவும் இருப்பவர்களுக்கு இவை சான்றுகளாகும்.

42:34. அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின்விளைவாக, அவர்களை அவர் அழித்தொழித்து விட இயலும். மாறாக, (அவர்களுடைய பாவங்களில்) அதிகமானவற்றை அவர் பிழைபொறுத்துக் கொள்கின்றார்.

42:35. நம்முடைய சான்றுகளுக்கெதிராக வாதிடுபவர்கள் தங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதைக் கண்டு கொள்வார்கள்.

42:36. உங்களுக்குக் கொடுக்கப்பட்டது எதுவாயினும், இவ்வுலகின் தற்காலிகப் பொருள் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. தங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொண்டு மேலும் பொறுப்பேற்படுத்துபவர்களுக்கு, கடவுள் வசம் இருப்பவை மிகவும் மேலானதும் நிலைத் திருப்பதுமாகும்.

42:37. அவர்கள் பெரும் பாவங்களையும் ஒழுக்கக்கேட்டையும் தவிர்த்துக் கொள்வார்கள், மேலும் அவர்கள் கோபம் கொண்டால் மன்னித்து விடுவார்கள்.

42:38. (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் தங்களுடைய இரட்சகருக்கு அவர்கள் மறுமொழியளிக்கின்றனர். அவர்களுடைய காரியங்கள் அவர்களுக்கிடையில் உரிய கலந்தாலோசனைக்குப் பின்னர் தீர்மானிக்கப்படுகின்றன. மேலும் நம்முடைய வாழ்வாதாரங்களில் அவர்களுக்கு உரியதில் இருந்து அவர்கள் (தர்மம்) கொடுப்பார்கள்.

42:39. அவர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டால், தங்களுடைய உரிமைகளுக்காக அவர்கள் எழுந்து நிற்பார்கள்.

42:40. ஓர் அநியாயத்திற்குரிய நியாயமான பதிலடி அதற்குச் சமமானதொரு தண்டனையாக இருப்பினும், பிழை பொறுத்துவிட்டு மேலும் நன்னெறியைப் பராமரிப்பவர்கள் கடவுள்-ஆல் வெகுமதியளிக்கப்படுகின்றனர். அநியாயக்காரர்களை அவர் நேசிப்பதில்லை.

42:41. நிச்சயமாக, தங்களுக்கு அநியாயம் நேரிடும் பொழுது, தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள் எந்தத் தவறும் செய்து விடவில்லை.

42:42. மக்களை அநீதமாக நடத்துவதுடன், தூண்டுதலின்றி வம்பு செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள். இவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

42:43. பொறுமையையும் மன்னிப்பையும் கைக்கொள்வது, குணநலனின் ஒரு மெய்யான பலத்தைப் பிரதிபலிக்கின்றது.

42:44. கடவுள் வழிகேட்டில் அனுப்பி விட்ட எவரும் வேறு எந்த எஜமானரையும் ஒருபோதும் காணமாட்டார், மேலும் தண்டனையை அவர்கள் காணும் பொழுது, இத்தகைய வரம்புமீறுபவர்கள், "எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்குமா?" என்று கூறுவதை நீர் காண்பீர்.

42:45. பார்த்துக் கொண்டும், ஆயினும் பார்ப்பதைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டும், அவமானப்பட்டவர்களாகவும் இழிவடைந்தவர்களாகவும், அதனை அவர்கள் எதிர்கொள்வதை நீர் காண்பீர். நம்பிக்கை கொண்டவர்கள் பிரகடனம் செய்வார்கள்: "உயிர்த் தெழுப்பப்படும் நாளன்று தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தாருடைய ஆத்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் தான் மெய்யான நஷ்டவாளிகள் ஆவார்கள். வரம்புமீறுபவர்கள் நீடித்திருக்கும் ஒரு தண்டனைக்குத் தகுதியாகி விட்டனர்."

42:46. கடவுள்-க்கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய நண்பர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். கடவுள் வழிகேட்டில் அனுப்பி விட்ட எவரும் ஒருபோதும் வழிநடத்தப்பட்டவராக முடியாது.

42:47. தவிர்த்திட முடியாததெனக் கடவுள்-ஆல் விதிக்கப்பட்ட ஒரு நாள் வருவதற்கு முன்னர் நீங்கள் உங்கள் இரட்சகருக்கு மறுமொழியளிக்க வேண்டும். அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இருக்காது, அன்றி ஒரு வாதாடுபவரும் இருக்க மாட்டார்.

42:48. அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அவர்களுடைய பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை. உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச் செய்தியைச் சேர்ப்பிப்பதேயாகும். மானிடர்களின் மீது நாம் கருணையைப் பொழிந்தால், அவர்கள் பெருமை கொள்கின்றனர், ஆனால் அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின்விளைவாகத் துன்பம் அவர்களை வருத்தும் பொழுது, மானிடர்கள் நம்பமறுப்பவர்களாக மாறி விடுகின்றனர்.

42:49. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. தான்நாடுகின்ற எவருக்கும் மகள்களை வழங்கியும், மேலும் தான்நாடுகின்ற எவருக்கும் மகன்களை வழங்கியும், தான்நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார்.

42:50. அல்லது, அவர் ஆண்களும் பெண்களும் ஒருவரை யொருவர் மணம் புரியச் செய்து, பின்னர் அவர் நாடுகின்ற எவரையும் மலடாக ஆக்கி விடுகின்றார். அவர் சர்வமும் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.

42:51. உள்ளுணர்வின் வாயிலாகவோ, அல்லது ஒரு தடுப்பிற்குப் பின் இருந்தோ, அல்லது தான் நாடுகின்ற எதனையும் அவர் மூலம் வெளிப்படுத்துகின்ற ஒரு தூதரை அனுப்பியோ தவிர, மானிடர் எவரும் கடவுள்-வுடன் தகவல் தொடர்பு கொள்ள முடியாது. அவர்தான் மிகவும் உயர்ந்தவர், ஞானம் மிகுந்தவர்.

42:52. இவ்விதமாக, நம்முடைய கட்டளைகளைப் பிரகடனிக்கின்ற ஒரு வெளிப்பாட்டினை உமக்கு நாம் உள்ளுணர்வளித்தோம். வேதம் அல்லது நம்பிக்கை பற்றி நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர். இருப்பினும், நம்முடைய ஊழியர்களிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கின்ற எவரையும் வழிநடத்துவதற்காக இதனை ஒரு கலங்கரை விளக்காக நாம் ஆக்கினோம். நிச்சயமாக, நேரானதொரு பாதையிலேயே நீர் வழிநடத்துகின்றீர்.

42:53. அப்பாதையானது, வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் பூமியின் மீதுள்ள ஒவ்வொன்றும் எவருக்குரியதோ, அந்தக் கடவுள்-வுடையது. பரிபூரணமாக, அனைத்து விஷயங்களும் கடவுள்-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.