Find
Chapter 39: Al-Zumar
39:0-75
75 verses Revelation order 59
سورة الزمر

. ١:٣٩ تَنزيلُ الكِتٰبِ مِنَ اللَّهِ العَزيزِ الحَكيمِ

. ٢:٣٩ إِنّا أَنزَلنا إِلَيكَ الكِتٰبَ بِالحَقِّ فَاعبُدِ اللَّهَ مُخلِصًا لَهُ الدّينَ

. ٣:٣٩ أَلا لِلَّهِ الدّينُ الخالِصُ وَالَّذينَ اتَّخَذوا مِن دونِهِ أَولِياءَ ما نَعبُدُهُم إِلّا لِيُقَرِّبونا إِلَى اللَّهِ زُلفىٰ إِنَّ اللَّهَ يَحكُمُ بَينَهُم فى ما هُم فيهِ يَختَلِفونَ إِنَّ اللَّهَ لا يَهدى مَن هُوَ كٰذِبٌ كَفّارٌ

. ٤:٣٩ لَو أَرادَ اللَّهُ أَن يَتَّخِذَ وَلَدًا لَاصطَفىٰ مِمّا يَخلُقُ ما يَشاءُ سُبحٰنَهُ هُوَ اللَّهُ الوٰحِدُ القَهّارُ

. ٥:٣٩ خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ بِالحَقِّ يُكَوِّرُ الَّيلَ عَلَى النَّهارِ وَيُكَوِّرُ النَّهارَ عَلَى الَّيلِ وَسَخَّرَ الشَّمسَ وَالقَمَرَ كُلٌّ يَجرى لِأَجَلٍ مُسَمًّى أَلا هُوَ العَزيزُ الغَفّٰرُ

. ٦:٣٩ خَلَقَكُم مِن نَفسٍ وٰحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنها زَوجَها وَأَنزَلَ لَكُم مِنَ الأَنعٰمِ ثَمٰنِيَةَ أَزوٰجٍ يَخلُقُكُم فى بُطونِ أُمَّهٰتِكُم خَلقًا مِن بَعدِ خَلقٍ فى ظُلُمٰتٍ ثَلٰثٍ ذٰلِكُمُ اللَّهُ رَبُّكُم لَهُ المُلكُ لا إِلٰهَ إِلّا هُوَ فَأَنّىٰ تُصرَفونَ

. ٧:٣٩ إِن تَكفُروا فَإِنَّ اللَّهَ غَنِىٌّ عَنكُم وَلا يَرضىٰ لِعِبادِهِ الكُفرَ وَإِن تَشكُروا يَرضَهُ لَكُم وَلا تَزِرُ وازِرَةٌ وِزرَ أُخرىٰ ثُمَّ إِلىٰ رَبِّكُم مَرجِعُكُم فَيُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ إِنَّهُ عَليمٌ بِذاتِ الصُّدورِ

. ٨:٣٩ وَإِذا مَسَّ الإِنسٰنَ ضُرٌّ دَعا رَبَّهُ مُنيبًا إِلَيهِ ثُمَّ إِذا خَوَّلَهُ نِعمَةً مِنهُ نَسِىَ ما كانَ يَدعوا إِلَيهِ مِن قَبلُ وَجَعَلَ لِلَّهِ أَندادًا لِيُضِلَّ عَن سَبيلِهِ قُل تَمَتَّع بِكُفرِكَ قَليلًا إِنَّكَ مِن أَصحٰبِ النّارِ

. ٩:٣٩ أَمَّن هُوَ قٰنِتٌ ءاناءَ الَّيلِ ساجِدًا وَقائِمًا يَحذَرُ الـٔاخِرَةَ وَيَرجوا رَحمَةَ رَبِّهِ قُل هَل يَستَوِى الَّذينَ يَعلَمونَ وَالَّذينَ لا يَعلَمونَ إِنَّما يَتَذَكَّرُ أُولُوا الأَلبٰبِ

. ١٠:٣٩ قُل يٰعِبادِ الَّذينَ ءامَنُوا اتَّقوا رَبَّكُم لِلَّذينَ أَحسَنوا فى هٰذِهِ الدُّنيا حَسَنَةٌ وَأَرضُ اللَّهِ وٰسِعَةٌ إِنَّما يُوَفَّى الصّٰبِرونَ أَجرَهُم بِغَيرِ حِسابٍ

. ١١:٣٩ قُل إِنّى أُمِرتُ أَن أَعبُدَ اللَّهَ مُخلِصًا لَهُ الدّينَ

. ١٢:٣٩ وَأُمِرتُ لِأَن أَكونَ أَوَّلَ المُسلِمينَ

. ١٣:٣٩ قُل إِنّى أَخافُ إِن عَصَيتُ رَبّى عَذابَ يَومٍ عَظيمٍ

. ١٤:٣٩ قُلِ اللَّهَ أَعبُدُ مُخلِصًا لَهُ دينى

. ١٥:٣٩ فَاعبُدوا ما شِئتُم مِن دونِهِ قُل إِنَّ الخٰسِرينَ الَّذينَ خَسِروا أَنفُسَهُم وَأَهليهِم يَومَ القِيٰمَةِ أَلا ذٰلِكَ هُوَ الخُسرانُ المُبينُ

. ١٦:٣٩ لَهُم مِن فَوقِهِم ظُلَلٌ مِنَ النّارِ وَمِن تَحتِهِم ظُلَلٌ ذٰلِكَ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبادَهُ يٰعِبادِ فَاتَّقونِ

. ١٧:٣٩ وَالَّذينَ اجتَنَبُوا الطّٰغوتَ أَن يَعبُدوها وَأَنابوا إِلَى اللَّهِ لَهُمُ البُشرىٰ فَبَشِّر عِبادِ

. ١٨:٣٩ الَّذينَ يَستَمِعونَ القَولَ فَيَتَّبِعونَ أَحسَنَهُ أُولٰئِكَ الَّذينَ هَدىٰهُمُ اللَّهُ وَأُولٰئِكَ هُم أُولُوا الأَلبٰبِ

. ١٩:٣٩ أَفَمَن حَقَّ عَلَيهِ كَلِمَةُ العَذابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِى النّارِ

. ٢٠:٣٩ لٰكِنِ الَّذينَ اتَّقَوا رَبَّهُم لَهُم غُرَفٌ مِن فَوقِها غُرَفٌ مَبنِيَّةٌ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ وَعدَ اللَّهِ لا يُخلِفُ اللَّهُ الميعادَ

. ٢١:٣٩ أَلَم تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّماءِ ماءً فَسَلَكَهُ يَنٰبيعَ فِى الأَرضِ ثُمَّ يُخرِجُ بِهِ زَرعًا مُختَلِفًا أَلوٰنُهُ ثُمَّ يَهيجُ فَتَرىٰهُ مُصفَرًّا ثُمَّ يَجعَلُهُ حُطٰمًا إِنَّ فى ذٰلِكَ لَذِكرىٰ لِأُولِى الأَلبٰبِ

. ٢٢:٣٩ أَفَمَن شَرَحَ اللَّهُ صَدرَهُ لِلإِسلٰمِ فَهُوَ عَلىٰ نورٍ مِن رَبِّهِ فَوَيلٌ لِلقٰسِيَةِ قُلوبُهُم مِن ذِكرِ اللَّهِ أُولٰئِكَ فى ضَلٰلٍ مُبينٍ

. ٢٣:٣٩ اللَّهُ نَزَّلَ أَحسَنَ الحَديثِ كِتٰبًا مُتَشٰبِهًا مَثانِىَ تَقشَعِرُّ مِنهُ جُلودُ الَّذينَ يَخشَونَ رَبَّهُم ثُمَّ تَلينُ جُلودُهُم وَقُلوبُهُم إِلىٰ ذِكرِ اللَّهِ ذٰلِكَ هُدَى اللَّهِ يَهدى بِهِ مَن يَشاءُ وَمَن يُضلِلِ اللَّهُ فَما لَهُ مِن هادٍ

. ٢٤:٣٩ أَفَمَن يَتَّقى بِوَجهِهِ سوءَ العَذابِ يَومَ القِيٰمَةِ وَقيلَ لِلظّٰلِمينَ ذوقوا ما كُنتُم تَكسِبونَ

. ٢٥:٣٩ كَذَّبَ الَّذينَ مِن قَبلِهِم فَأَتىٰهُمُ العَذابُ مِن حَيثُ لا يَشعُرونَ

. ٢٦:٣٩ فَأَذاقَهُمُ اللَّهُ الخِزىَ فِى الحَيوٰةِ الدُّنيا وَلَعَذابُ الـٔاخِرَةِ أَكبَرُ لَو كانوا يَعلَمونَ

. ٢٧:٣٩ وَلَقَد ضَرَبنا لِلنّاسِ فى هٰذَا القُرءانِ مِن كُلِّ مَثَلٍ لَعَلَّهُم يَتَذَكَّرونَ

. ٢٨:٣٩ قُرءانًا عَرَبِيًّا غَيرَ ذى عِوَجٍ لَعَلَّهُم يَتَّقونَ

. ٢٩:٣٩ ضَرَبَ اللَّهُ مَثَلًا رَجُلًا فيهِ شُرَكاءُ مُتَشٰكِسونَ وَرَجُلًا سَلَمًا لِرَجُلٍ هَل يَستَوِيانِ مَثَلًا الحَمدُ لِلَّهِ بَل أَكثَرُهُم لا يَعلَمونَ

. ٣٠:٣٩ إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَيِّتونَ

. ٣١:٣٩ ثُمَّ إِنَّكُم يَومَ القِيٰمَةِ عِندَ رَبِّكُم تَختَصِمونَ

. ٣٢:٣٩ فَمَن أَظلَمُ مِمَّن كَذَبَ عَلَى اللَّهِ وَكَذَّبَ بِالصِّدقِ إِذ جاءَهُ أَلَيسَ فى جَهَنَّمَ مَثوًى لِلكٰفِرينَ

. ٣٣:٣٩ وَالَّذى جاءَ بِالصِّدقِ وَصَدَّقَ بِهِ أُولٰئِكَ هُمُ المُتَّقونَ

. ٣٤:٣٩ لَهُم ما يَشاءونَ عِندَ رَبِّهِم ذٰلِكَ جَزاءُ المُحسِنينَ

. ٣٥:٣٩ لِيُكَفِّرَ اللَّهُ عَنهُم أَسوَأَ الَّذى عَمِلوا وَيَجزِيَهُم أَجرَهُم بِأَحسَنِ الَّذى كانوا يَعمَلونَ

. ٣٦:٣٩ أَلَيسَ اللَّهُ بِكافٍ عَبدَهُ وَيُخَوِّفونَكَ بِالَّذينَ مِن دونِهِ وَمَن يُضلِلِ اللَّهُ فَما لَهُ مِن هادٍ

. ٣٧:٣٩ وَمَن يَهدِ اللَّهُ فَما لَهُ مِن مُضِلٍّ أَلَيسَ اللَّهُ بِعَزيزٍ ذِى انتِقامٍ

. ٣٨:٣٩ وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ لَيَقولُنَّ اللَّهُ قُل أَفَرَءَيتُم ما تَدعونَ مِن دونِ اللَّهِ إِن أَرادَنِىَ اللَّهُ بِضُرٍّ هَل هُنَّ كٰشِفٰتُ ضُرِّهِ أَو أَرادَنى بِرَحمَةٍ هَل هُنَّ مُمسِكٰتُ رَحمَتِهِ قُل حَسبِىَ اللَّهُ عَلَيهِ يَتَوَكَّلُ المُتَوَكِّلونَ

. ٣٩:٣٩ قُل يٰقَومِ اعمَلوا عَلىٰ مَكانَتِكُم إِنّى عٰمِلٌ فَسَوفَ تَعلَمونَ

. ٤٠:٣٩ مَن يَأتيهِ عَذابٌ يُخزيهِ وَيَحِلُّ عَلَيهِ عَذابٌ مُقيمٌ

. ٤١:٣٩ إِنّا أَنزَلنا عَلَيكَ الكِتٰبَ لِلنّاسِ بِالحَقِّ فَمَنِ اهتَدىٰ فَلِنَفسِهِ وَمَن ضَلَّ فَإِنَّما يَضِلُّ عَلَيها وَما أَنتَ عَلَيهِم بِوَكيلٍ

. ٤٢:٣٩ اللَّهُ يَتَوَفَّى الأَنفُسَ حينَ مَوتِها وَالَّتى لَم تَمُت فى مَنامِها فَيُمسِكُ الَّتى قَضىٰ عَلَيهَا المَوتَ وَيُرسِلُ الأُخرىٰ إِلىٰ أَجَلٍ مُسَمًّى إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَتَفَكَّرونَ

. ٤٣:٣٩ أَمِ اتَّخَذوا مِن دونِ اللَّهِ شُفَعاءَ قُل أَوَلَو كانوا لا يَملِكونَ شَيـًٔا وَلا يَعقِلونَ

. ٤٤:٣٩ قُل لِلَّهِ الشَّفٰعَةُ جَميعًا لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ ثُمَّ إِلَيهِ تُرجَعونَ

. ٤٥:٣٩ وَإِذا ذُكِرَ اللَّهُ وَحدَهُ اشمَأَزَّت قُلوبُ الَّذينَ لا يُؤمِنونَ بِالـٔاخِرَةِ وَإِذا ذُكِرَ الَّذينَ مِن دونِهِ إِذا هُم يَستَبشِرونَ

. ٤٦:٣٩ قُلِ اللَّهُمَّ فاطِرَ السَّمٰوٰتِ وَالأَرضِ عٰلِمَ الغَيبِ وَالشَّهٰدَةِ أَنتَ تَحكُمُ بَينَ عِبادِكَ فى ما كانوا فيهِ يَختَلِفونَ

. ٤٧:٣٩ وَلَو أَنَّ لِلَّذينَ ظَلَموا ما فِى الأَرضِ جَميعًا وَمِثلَهُ مَعَهُ لَافتَدَوا بِهِ مِن سوءِ العَذابِ يَومَ القِيٰمَةِ وَبَدا لَهُم مِنَ اللَّهِ ما لَم يَكونوا يَحتَسِبونَ

. ٤٨:٣٩ وَبَدا لَهُم سَيِّـٔاتُ ما كَسَبوا وَحاقَ بِهِم ما كانوا بِهِ يَستَهزِءونَ

. ٤٩:٣٩ فَإِذا مَسَّ الإِنسٰنَ ضُرٌّ دَعانا ثُمَّ إِذا خَوَّلنٰهُ نِعمَةً مِنّا قالَ إِنَّما أوتيتُهُ عَلىٰ عِلمٍ بَل هِىَ فِتنَةٌ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ

. ٥٠:٣٩ قَد قالَهَا الَّذينَ مِن قَبلِهِم فَما أَغنىٰ عَنهُم ما كانوا يَكسِبونَ

. ٥١:٣٩ فَأَصابَهُم سَيِّـٔاتُ ما كَسَبوا وَالَّذينَ ظَلَموا مِن هٰؤُلاءِ سَيُصيبُهُم سَيِّـٔاتُ ما كَسَبوا وَما هُم بِمُعجِزينَ

. ٥٢:٣٩ أَوَلَم يَعلَموا أَنَّ اللَّهَ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ وَيَقدِرُ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يُؤمِنونَ

. ٥٣:٣٩ قُل يٰعِبادِىَ الَّذينَ أَسرَفوا عَلىٰ أَنفُسِهِم لا تَقنَطوا مِن رَحمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغفِرُ الذُّنوبَ جَميعًا إِنَّهُ هُوَ الغَفورُ الرَّحيمُ

. ٥٤:٣٩ وَأَنيبوا إِلىٰ رَبِّكُم وَأَسلِموا لَهُ مِن قَبلِ أَن يَأتِيَكُمُ العَذابُ ثُمَّ لا تُنصَرونَ

. ٥٥:٣٩ وَاتَّبِعوا أَحسَنَ ما أُنزِلَ إِلَيكُم مِن رَبِّكُم مِن قَبلِ أَن يَأتِيَكُمُ العَذابُ بَغتَةً وَأَنتُم لا تَشعُرونَ

. ٥٦:٣٩ أَن تَقولَ نَفسٌ يٰحَسرَتىٰ عَلىٰ ما فَرَّطتُ فى جَنبِ اللَّهِ وَإِن كُنتُ لَمِنَ السّٰخِرينَ

. ٥٧:٣٩ أَو تَقولَ لَو أَنَّ اللَّهَ هَدىٰنى لَكُنتُ مِنَ المُتَّقينَ

. ٥٨:٣٩ أَو تَقولَ حينَ تَرَى العَذابَ لَو أَنَّ لى كَرَّةً فَأَكونَ مِنَ المُحسِنينَ

. ٥٩:٣٩ بَلىٰ قَد جاءَتكَ ءايٰتى فَكَذَّبتَ بِها وَاستَكبَرتَ وَكُنتَ مِنَ الكٰفِرينَ

. ٦٠:٣٩ وَيَومَ القِيٰمَةِ تَرَى الَّذينَ كَذَبوا عَلَى اللَّهِ وُجوهُهُم مُسوَدَّةٌ أَلَيسَ فى جَهَنَّمَ مَثوًى لِلمُتَكَبِّرينَ

. ٦١:٣٩ وَيُنَجِّى اللَّهُ الَّذينَ اتَّقَوا بِمَفازَتِهِم لا يَمَسُّهُمُ السّوءُ وَلا هُم يَحزَنونَ

. ٦٢:٣٩ اللَّهُ خٰلِقُ كُلِّ شَىءٍ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ وَكيلٌ

. ٦٣:٣٩ لَهُ مَقاليدُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَالَّذينَ كَفَروا بِـٔايٰتِ اللَّهِ أُولٰئِكَ هُمُ الخٰسِرونَ

. ٦٤:٣٩ قُل أَفَغَيرَ اللَّهِ تَأمُرونّى أَعبُدُ أَيُّهَا الجٰهِلونَ

. ٦٥:٣٩ وَلَقَد أوحِىَ إِلَيكَ وَإِلَى الَّذينَ مِن قَبلِكَ لَئِن أَشرَكتَ لَيَحبَطَنَّ عَمَلُكَ وَلَتَكونَنَّ مِنَ الخٰسِرينَ

. ٦٦:٣٩ بَلِ اللَّهَ فَاعبُد وَكُن مِنَ الشّٰكِرينَ

. ٦٧:٣٩ وَما قَدَرُوا اللَّهَ حَقَّ قَدرِهِ وَالأَرضُ جَميعًا قَبضَتُهُ يَومَ القِيٰمَةِ وَالسَّمٰوٰتُ مَطوِيّٰتٌ بِيَمينِهِ سُبحٰنَهُ وَتَعٰلىٰ عَمّا يُشرِكونَ

. ٦٨:٣٩ وَنُفِخَ فِى الصّورِ فَصَعِقَ مَن فِى السَّمٰوٰتِ وَمَن فِى الأَرضِ إِلّا مَن شاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فيهِ أُخرىٰ فَإِذا هُم قِيامٌ يَنظُرونَ

. ٦٩:٣٩ وَأَشرَقَتِ الأَرضُ بِنورِ رَبِّها وَوُضِعَ الكِتٰبُ وَجِا۟ىءَ بِالنَّبِيّـۧنَ وَالشُّهَداءِ وَقُضِىَ بَينَهُم بِالحَقِّ وَهُم لا يُظلَمونَ

. ٧٠:٣٩ وَوُفِّيَت كُلُّ نَفسٍ ما عَمِلَت وَهُوَ أَعلَمُ بِما يَفعَلونَ

. ٧١:٣٩ وَسيقَ الَّذينَ كَفَروا إِلىٰ جَهَنَّمَ زُمَرًا حَتّىٰ إِذا جاءوها فُتِحَت أَبوٰبُها وَقالَ لَهُم خَزَنَتُها أَلَم يَأتِكُم رُسُلٌ مِنكُم يَتلونَ عَلَيكُم ءايٰتِ رَبِّكُم وَيُنذِرونَكُم لِقاءَ يَومِكُم هٰذا قالوا بَلىٰ وَلٰكِن حَقَّت كَلِمَةُ العَذابِ عَلَى الكٰفِرينَ

. ٧٢:٣٩ قيلَ ادخُلوا أَبوٰبَ جَهَنَّمَ خٰلِدينَ فيها فَبِئسَ مَثوَى المُتَكَبِّرينَ

. ٧٣:٣٩ وَسيقَ الَّذينَ اتَّقَوا رَبَّهُم إِلَى الجَنَّةِ زُمَرًا حَتّىٰ إِذا جاءوها وَفُتِحَت أَبوٰبُها وَقالَ لَهُم خَزَنَتُها سَلٰمٌ عَلَيكُم طِبتُم فَادخُلوها خٰلِدينَ

. ٧٤:٣٩ وَقالُوا الحَمدُ لِلَّهِ الَّذى صَدَقَنا وَعدَهُ وَأَورَثَنَا الأَرضَ نَتَبَوَّأُ مِنَ الجَنَّةِ حَيثُ نَشاءُ فَنِعمَ أَجرُ العٰمِلينَ

. ٧٥:٣٩ وَتَرَى المَلٰئِكَةَ حافّينَ مِن حَولِ العَرشِ يُسَبِّحونَ بِحَمدِ رَبِّهِم وَقُضِىَ بَينَهُم بِالحَقِّ وَقيلَ الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ

The Throngs

39:1. This is a revelation of the scripture, from God, the Almighty, the Wise.

39:2. We sent down to you this scripture, truthfully; you shall worship God, devoting your religion to Him alone.

39:3. Absolutely, the religion shall be devoted to God alone. Those who set up idols beside Him say, "We idolize them only to bring us closer to God; for they are in a better position!" God will judge them regarding their disputes. God does not guide such liars, disbelievers.

39:4. If God wanted to have a son, He could have chosen whomever He willed from among His creations. Be He glorified; He is God, the One, the Supreme.

39:5. He created the heavens and the earth truthfully. He rolls the night over the day, and rolls the day over the night.* He committed the sun and the moon, each running for a finite period. Absolutely, He is the Almighty, the Forgiving.

*39:5 This verse clearly informs us that the earth is round. The Arabic for ``He rolls'' (Yukawwir) is derived from the Arabic word for ``ball'' (Kurah). Since the Earth is not exactly round, a specific reference to its shape is given in 79:30. The Quran is replete with scientific information that became known to us centuries after the revelation of the Quran. See Appendix 20.

39:6. He created you from one person, then created from him his mate. He sent down to you eight kinds of livestock. He creates you in your mothers' bellies, creation after creation, in trimesters of darkness. Such is God your Lord. To Him belongs all sovereignty. There is no other god beside Him. How could you deviate?

39:7. If you disbelieve, God does not need anyone. But He dislikes to see His servants make the wrong decision. If you decide to be appreciative, He is pleased for you. No soul bears the sins of any other soul. Ultimately, to your Lord is your return, then He will inform you of everything you had done. He is fully aware of the innermost thoughts.

39:8. When the human being is afflicted, he implores his Lord, sincerely devoted to Him. But as soon as He blesses him, he forgets his previous imploring, sets up idols to rank with God and to divert others from His path. Say, "Enjoy your disbelief temporarily; you have incurred the hellfire."

39:9. Is it not better to be one of those who meditate in the night, prostrating and staying up, being aware of the Hereafter, and seeking the mercy of their Lord? Say, "Are those who know equal to those who do not know?" Only those who possess intelligence will take heed.

39:10. Say, "O My servants who believed, you shall reverence your Lord." For those who worked righteousness in this world, a good reward. God's earth is spacious, and those who steadfastly persevere will receive their recompense generously, without limits.

39:11. Say, "I have been commanded to worship God, devoting the religion absolutely to Him alone.

39:12. "And I was commanded to be the utmost submitter."

39:13. Say, "I fear, if I disobeyed my Lord, the retribution of a great day."

39:14. Say, "God is the only One I worship, devoting my religion absolutely to Him alone.

39:15. "Therefore, worship whatever you wish besides Him." Say, "The real losers are those who lose their souls, and their families, on the Day of Resurrection." Most certainly, this is the real loss.

39:16. They will have masses of fire on top of them, and under them. God thus alerts His servants: O My servants, you shall reverence Me.

39:17. As for those who discard the worship of all idols, and devote themselves totally to God alone, they have deserved happiness. Give good news to My servants.

39:18. They are the ones who examine all words, then follow the best. These are the ones whom God has guided; these are the ones who possess intelligence.

39:19. With regard to those who have deserved the retribution, can you save those who are already in Hell?

39:20. As for those who reverence their Lord, they will have mansions upon mansions constructed for them, with flowing streams. This is God's promise, and God never breaks His promise.

39:21. Do you not see that God sends down from the sky water, then places it into underground wells, then produces with it plants of various colors, then they grow until they turn yellow, then He turns them into hay? This should be a reminder for those who possess intelligence.

39:22. If God renders one's heart content with Submission, he will be following a light from his Lord. Therefore, woe to those whose hearts are hardened against God's message; they have gone far astray.

39:23. God has revealed herein the best Hadith; a book that is consistent, and points out both ways (to Heaven and Hell). The skins of those who reverence their Lord cringe therefrom, then their skins and their hearts soften up for God's message. Such is God's guidance; He bestows it upon whoever wills (to be guided). As for those sent astray by God, nothing can guide them.

39:24. What is better than saving one's face from the terrible retribution on the Day of Resurrection? The transgressors will be told, "Taste the consequences of what you earned."

39:25. Others before them have disbelieved and, consequently, the retribution afflicted them whence they never expected.

39:26. God has condemned them to humiliation in this life, and the retribution in the Hereafter will be far worse, if they only knew.

39:27. We have cited for the people every kind of example in this Quran, that they may take heed.

39:28. An Arabic Quran, without any ambiguity, that they may be righteous.

39:29. God cites the example of a man who deals with disputing partners (Hadith), compared to a man who deals with only one consistent source (Quran). Are they the same? Praise be to God; most of them do not know.

39:30. You (Muhammad) will surely die, just like they will die.

39:31. On the Day of Resurrection, before your Lord, you people will feud with one another.

39:32. Who is more evil than one who attributes lies to God, while disbelieving in the truth that has come to him? Is Hell not a just requital for the disbelievers?

39:33. As for those who promote the truth, and believe therein, they are the righteous.

39:34. They will get everything they wish, at their Lord. Such is the reward for the righteous.

39:35. God remits their sinful works, and rewards them generously for their good works.

39:36. Is God not sufficient for His servant? They frighten you with the idols they set up beside Him. Whomever God sends astray, nothing can guide him.

39:37. And whomever God guides, nothing can send him astray. Is God not Almighty, Avenger?

39:38. If you ask them, "Who created the heavens and the earth?" they will say, "God." Say, "Why then do you set up idols beside God? If God willed any adversity for me, can they relieve such an adversity? And if He willed a blessing for me, can they prevent such a blessing?" Say, "God is sufficient for me." In Him the trusters shall trust.

39:39. Say, "O my people, do your best and I will do my best; you will surely find out.

39:40. "(You will find out) who has incurred shameful punishment, and has deserved an eternal retribution."

39:41. We have revealed the scripture through you for the people, truthfully. Then, whoever is guided is guided for his own good, and whoever goes astray goes astray to his own detriment. You are not their advocate.

39:42. God puts the souls to death when the end of their life comes, and also at the time of sleep. Thus, He takes some back during their sleep, while others are allowed to continue living until the end of their predetermined interim. This should provide lessons for people who reflect.

39:43. Have they invented intercessors to mediate between them and God? Say, "What if they do not possess any power, nor understanding?"

39:44. Say, "All intercession belongs to God." To Him belongs all sovereignty of the heavens and the earth, then to Him you will be returned.

39:45. When God ALONE is mentioned, the hearts of those who do not believe in the Hereafter shrink with aversion. But when others are mentioned beside Him, they become satisfied.*

*39:45 Despite the clear commandment in 3:18 that the First Pillar of Islam is proclaiming: ``Ash-hadu An Laa Elaaha Ellaa Allah (there is no other god beside God),'' the majority of ``Muslims'' insist upon adding the name of Muhammad. This Greatest Criterion alerts us that rejoicing in adding the name of Muhammad, or any other name, exposes disbelief in the Hereafter. See also Footnote 17:46.

39:46. Proclaim: "Our god, Initiator of the heavens and the earth, Knower of all secrets and declarations, You are the only One who judges among Your servants regarding their disputes."

39:47. If those who transgressed owned everything on earth, even twice as much, they would readily give it up to avoid the terrible retribution on the Day of Resurrection. They will be shown by God what they never expected.

39:48. The sinful works they had earned will be shown to them, and the very things they used to mock will come back to haunt them.

39:49. If the human is touched by adversity, he implores us, but as soon as we bestow a blessing upon him, he says, "I attained this because of my cleverness!" Indeed, this is only a test, but most of them do not know.

39:50. Those before them have uttered the same thing, and their earnings did not help them in the least.

39:51. They suffered the consequences of their evil works. Similarly, the transgressors among the present generation will suffer the consequences of their evil works; they cannot escape.

39:52. Do they not realize that God is the One who increases the provision for whomever He chooses, and withholds? These are lessons for people who believe.

39:53. Proclaim: "O My servants who exceeded the limits, never despair of God's mercy. For God forgives all sins. He is the Forgiver, Most Merciful."

39:54. You shall obey your Lord, and submit to Him totally, before the retribution overtakes you, then you cannot be helped.

39:55. And follow the best path that is pointed out for you by your Lord, before the retribution overtakes you suddenly when you least expect it.

39:56. Lest a soul may say, "How sorry I am for disregarding God's commandments; I was certainly one of the mockers."

39:57. Or say, "Had God guided me, I would have been with the righteous."

39:58. Or say, when it sees the retribution, "If I get another chance, I will work righteousness."

39:59. Yes indeed (you did get enough chances). My proofs came to you, but you rejected them, turned arrogant, and became a disbeliever.

39:60. On the Day of Resurrection you will see the faces of those who lied about God covered with misery. Is Hell not the right retribution for the arrogant ones?

39:61. And God will save those who have maintained righteousness; He will reward them. No harm will touch them, nor will they have any grief.

39:62. God is the Creator of all things, and He is in full control of all things.

39:63. To Him belongs all decisions in the heavens and the earth, and those who disbelieve in God's revelations are the real losers.

39:64. Say, "Is it other than God you exhort me to worship, O you ignorant ones?"

39:65. It has been revealed to you, and to those before you that if you ever commit idol worship, all your works will be nullified, and you will be with the losers.

39:66. Therefore, you shall worship God alone, and be appreciative.

39:67. They can never fathom the greatness of God. The whole earth is within His fist on the Day of Resurrection. In fact, the universes are folded within His right hand.* Be He glorified; He is much too high above needing any partners.

*39:67 Our universe, with its billion galaxies, a billion trillion stars, uncountable decillions of heavenly bodies, spanning many billions of light-years, is the smallest and innermost of seven universes. This incomprehensible vastness of the seven universes is within God's hand. Such is the greatness of God. See Appendix 6.

39:68. The horn will be blown, whereupon everyone in the heavens and the earth will be struck unconscious, except those who will be spared by God. Then it will be blown another time, whereupon they will all rise up, looking.*

*39:68 The sequence of events on the Day of Resurrection begins with the symbolic blowing of the horn. The second blowing of the horn - by a creature who was spared from unconsciousness - marks the resurrection of all people; they will be resurrected on today's earth. This earth will then be destroyed by the physical coming of God, then a new earth and new heavens will be created (14:48). We will then be stratified according to our degree of development (Appendix 11).

39:69. Then the earth will shine with the light of its Lord. The record will be proclaimed, and the prophets and the witnesses will be brought forth. Everyone will then be judged equitably, without the least injustice.

39:70. Every soul will be paid for whatever it did, for He is fully aware of everything they have done.

39:71. Those who disbelieved will be led to Hell in throngs. When they get to it, and its gates are opened, its guards will say, "Did you not receive messengers from among you, who recited to you the revelations of your Lord, and warned you about meeting this day?" They will answer, "Yes indeed. But the word `retribution' was already stamped upon the disbelievers."

39:72. It will be said, "Enter the gates of Hell, wherein you abide forever." What a miserable destiny for the arrogant.

39:73. Those who reverenced their Lord will be led to Paradise in throngs. When they get to it, and its gates are opened, its guards will say, "Peace be upon you; you have won. Therefore, you abide herein forever."

39:74. They will say, "Praise be to God, who fulfilled His promise to us, and made us inherit the earth, enjoying Paradise as we please." What a beautiful recompense for the workers!

39:75. You will see the angels floating around the throne, glorifying and praising their Lord. After the equitable judgment is issued to all, it will be proclaimed: "Praise be to God, Lord of the universe."

மக்கள் கூட்டங்கள்

39:1. எல்லாம் வல்லர், ஞானம் நிறைந்தவரான, கடவுள்-யிடமிருந்து வந்த வேதத்தின் ஒரு வெளிப்பாடாக இது உள்ளது.

39:2. சத்தியத்துடன், இந்த வேதத்தை உமக்கு நாம் இறக்கி அனுப்பினோம்; அவருக்கு மட்டுமே உங்கள் மார்க்கத்தை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக, நீங்கள் கடவுள்-ஐ வழிபட வேண்டும்.

39:3. நிச்சயமாக, மார்க்கம் கடவுள்-க்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட வேண்டும். அவருடன் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள் கூறுகின்றனர், "கடவுள்-க்கு நெருக்கமாக எங்களைக் கொண்டு செல்வதற்காகவே நாங்கள் அவர்களை இணைவழிபாடு செய்கின்றோம்; ஏனெனில் அவர்கள் மேலானதொரு நிலையில் இருக்கின்றனர்!" அவர்களுடைய தர்க்கங்கள் குறித்து கடவுள் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். இத்தகைய பொய்யர்களை, நம்பமறுப்பவர்களைக் கடவுள் வழிநடத்துவதில்லை.

39:4. ஒரு மகனைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பினால், தன்னுடைய படைப்புகளில் இருந்து அவர் நாடுகின்ற எவரையும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பார். அவர் துதிப்பிற்குரியவர்; ஒருவர், மேலதிகாரம் கொண்டவரான, அவரே கடவுள்.

39:5. வானங்களையும் பூமியையும் சத்தியத்துடன் அவர் படைத்தார். அவர் பகலின் மீது இரவை உருட்டுகின்றார், மேலும் இரவின் மீது பகலை உருட்டுகின்றார்.* சூரியன் மற்றும் சந்திரன் ஒவ்வொன்றையும் ஒரு வரையறைக்குட்பட்ட காலத்திற்கு ஓடும்படி அவர் ஆக்கினார். நிச்சயமாக, அவர்தான் எல்லாம் வல்லவர், மன்னிக்கின்றவர்.

*39:5 பூமி உருண்டையானது என்பதை நமக்கு இந்த வசனம் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது. "அவர் உருட்டுகின்றார்" என்பதற்குரிய அரபி வார்த்தை (யுகவ்விர்) "பந்து "என்பதற்குரிய அரபி வார்த்தையான (குராஹ்) என்பதிலிருந்து பெறப்படுகின்றது. பூமியானது மிகச் சரியான உருண்டையாக இல்லாத காரணத்தால், அதன் வடிவத்தைப் பற்றிய ஒரு பிரத்தியேகக் குறிப்பு (79:30) ல் கொடுக்கப்பட்டுள்ளது. குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்குப் பல நூற்றாண்டுகள் கழித்து நாம் அறிந்து கொண்ட விஞ்ஞானத் தகவல்கள் நிறைந்ததாகக் குர்ஆன் உள்ளது. பார்க்க பின் இணைப்பு 20.

39:6. ஒரு நபரிலிருந்து அவர் உங்களைப் படைத்தார், பின்னர் அவரிலிருந்து அவருடைய ஜோடியைப் படைத்தார். அவர் எட்டு வகைக் கால்நடைகளை உங்களுக்கு இறக்கி அனுப்பினார். படைப்புக்குப் பின் படைப்பாக, இருள் நிறைந்த மூன்று கால கட்டங்களில், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் அவர் உங்களைப் படைத்தார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அனைத்து ஆட்சியதிகாரமும் அவருக்குரியது. அவருடன் வேறு தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் விலகிச் செல்ல முடியும்?

39:7. நீங்கள் நம்பமறுத்தால், கடவுள் எவரொருவருடைய தேவையும் இல்லாதவர். ஆனால் தன் ஊழியர்கள் தவறான முடிவெடுப்பதைக்காண அவர் விரும்புவதில்லை. நன்றியுடையவராக இருக்க நீங்கள் முடி வெடுத்தால், அவர் உங்கள்பால் திருப்தி கொள்கின்றார். எந்த ஆத்மாவும் மற்றொரு ஆத்மாவின் பாவங்களைச் சுமப்பதில்லை. இறுதியாக, உங்கள் இரட்சகரிடமே உங்களுடைய திரும்புதல் இருக்கின்றது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்கு அவர் அறிவிப்பார். உள்ளார்ந்த எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

39:8. மானிடன் ஏதேனும் சிரமத்திற்குள்ளானால், கலப்பின்றி அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டு, அவன் தன் இரட்சகரை இறைஞ்சுகின்றான். ஆனால் அவர் அவனை ஆசீர்வதித்தவுடன், அவன் முன்னர் இறைஞ்சியதை மறந்தவனாக, கடவுள்-க்குச் சமமாக்குவதற்காகவும், மற்றவர்களை அவருடைய பாதையிலிருந்து திருப்புவதற்காகவும் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றான். கூறுவீராக, "உங்களுடைய நம்பமறுத்தலில் தற்காலிகமாக சுகமனுபவியுங்கள்; நீங்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டீர்கள்."

39:9. தங்களுடைய இரட்சகரின் கருணையைத் தேடியவாறு, மறுவுலகைக் குறித்து விழிப்புடன் இருந்த வண்ணம், சிரம்பணிந்தும் விழித்திருந்தும், இரவில் தியானம் செய்பவர்களில் ஒருவனாக இருப்பது மேலானதல்லவா? கூறுவீராக, "அறிந்திருப்பவர்கள் அறியாதிருப்பவர்களுக்குச் சமமாவார்களா?" அறிவுத்திறனைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

39:10. கூறுவீராக, "நம்பிக்கை கொண்ட என் ஊழியர்களே, உங்கள் இரட்சகரிடம் நீங்கள் பக்தி செலுத்த வேண்டும்." ஏனெனில் இவ்வுலகில் நன்னெறிகள் புரிந்தவர்களுக்கு, நல்லதொரு வெகுமதி. கடவுள்-ன் பூமி விசாலமானது, மேலும் உறுதிப்பாட்டுடன் விடா முயற்சி செய்பவர்கள், எல்லைகளின்றி, தங்களுடைய பிரதிபலனை தாராளமாகப் பெற்றுக் கொள்வார்கள்.

39:11. கூறுவீராக, "மார்க்கத்தை அவருக்கு மட்டும் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டவாறு, கடவுள்-ஐ வழி பட வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

39:12. "மேலும் மிகவும் அதிகமாகச் சரணடைந்தவனாக இருக்க வேண்டுமென நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்."

39:13. கூறுவீராக, "என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படிய மறுத்தால், மகத்தானதொரு நாளின் தண்டனைக்கு, நான் அஞ்சுகின்றேன்."

39:14. கூறுவீராக, "மார்க்கத்தைப் பூரணமாக அவருக்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவாறு, கடவுள் ஒருவரை மட்டுமே நான் வழிபடுகின்றேன்.

39:15. "ஆகையால், நீங்கள் விரும்புகின்ற எதனையும் அவருடன் வழிபட்டுக் கொள்ளுங்கள்." கூறுவீராக, "உயிர்த்தெழுப்பப்படும் நாளில் தங்களுடைய, மற்றும் தங்கள் குடும்பத்தாருடைய ஆத்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்தான், மெய்யாகவே நஷ்டப்பட்டவர்கள் ஆவார்கள்" மிக உறுதியாக, இதுதான் மெய்யான நஷ்டமாகும்.

39:16. அவர்களுக்கு மேலும் அவர்களுக்குக் கீழும் நெருப்பின் பாளங்களை அவர்கள் கொண்டிருப்பார்கள். கடவுள் இவ்விதமாகத் தன் ஊழியர்களை எச்சரிக்கின்றார்: என்னுடைய ஊழியர்களே, நீங்கள் என்னிடம் பக்தியோடிருக்க வேண்டும்.

39:17. போலித்தெய்வங்கள் அனைத்தையும் வழிபடுவதைக் கைவிட்டு விட்டு, தங்களையே முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதி பெற்று விட்டார்கள். என்னுடைய ஊழியர்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.

39:18. அவர்கள்தான் அனைத்து வார்த்தைகளையும் பரிசீலித்து, பின்னர் சிறந்தவற்றைப் பின்பற்றுபவர்கள். கடவுள் வழிநடத்தியவர்கள் இவர்கள்தான்; அறிவுத் திறன் பெற்றிருப்பவர்கள் இவர்கள்தான்.

39:19. தண்டனைக்குத் தகுதியாகி விட்டவர்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே நரகத்தில் இருப்பவர்களை நீர் காப்பாற்றி விட முடியுமா?

39:20. தங்கள் இரட்சகரிடம் பக்தி செலுத்துபவர்களைப் பொறுத்தவரை, பாயும் ஆறுகளுடன், அவர்களுக்காகக் கட்டப்பட்ட மாளிகைகளுக்கு மேல் மாளிகைகளை அவர்கள் பெற்றிருப்பார்கள். இது கடவுள்-ன் வாக்குறுதியாகும், மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிப்பதில்லை.

39:21. கடவுள் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், பின்னர் அதனை நிலத்தடிக் கிணறுகளில் தேக்கி வைக்கின்றார், பின்னர் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட தாவரங்களை முளைப்பிக்கின்றார், பின்னர் அவை மஞ்சள் நிறமாக மாறும் வரை வளர்கின்றன, பின்னர் அவர் அவற்றைக் கூளங்களாக மாற்றி விடுகின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு நினைவூட்டலாகத் திகழ வேண்டும்.

39:22. ஒருவருடைய இதயத்தை சரணடைதலைக் கொண்டு திருப்தியுற்றதாகக் கடவுள் ஆக்கி விட்டால், அவர் தன் இரட்சகரிடமிருந்து ஓர் ஒளியைப் பின்பற்றிக் கொண்டிருப்பார். எனவே, கடவுள்-ன் தூதுச் செய்திக்கு எதிராகத் தங்கள் இதயங்கள் கடினமாகிப் போனவர்களுக்கு கேடுதான்; அவர்கள் மிகநெடிய வழிகேட்டில் சென்று விட்டார்கள்.

39:23. கடவுள் இதிலே மிகச்சிறந்த ஹதீஸ்களை வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சொர்க்கத்திற்கும் நரகத்திற்குமுரிய) இரு வழிகளையும் சுட்டிக்காட்டுகின்றது. தங்கள் இரட்சகரிடம் பக்தியோடிருப்பவர்களின் தோல்கள் அதன் மூலம் சிலிர்த்து விடுகின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக இளகி விடுகின்றன. கடவுள்-ன் வழி காட்டல் இத்தகையதாகும்; தான்நாடுகின்ற எவர் மீதும் அதனை அவர் அருள்கின்றார். கடவுள் -ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.

39:24. உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையிலிருந்து ஒருவருடைய முகத்தைக் காத்துக் கொள்வதை விட மிகச்சிறந்தது எது? வரம்புமீறுபவர்களிடம் கூறப்படும், "நீங்கள் சம்பாதித்தவற்றின் பின் விளைவுகளைச் சுவையுங்கள்."

39:25. அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களும் நம்பமறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் ஒருபோதும் எதிர்பாராதிருந்த போது தண்டனை அவர்களைத் துன்பத்திற்குள்ளாக்கியது.

39:26. இந்த வாழ்வில் கடவுள் அவர்களை இழிவுக்குக் கண்டனம் செய்து விட்டார், மேலும் மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாக இருக்கும், அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்.

39:27. அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தக் குர்ஆனில் ஒவ்வொருவகையான உதாரணத்தையும் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம்.

39:28. அவர்கள் நன்னெறியாளர்களாக இருக்கும் பொருட்டு, இருவேறு கருத்துகளுக்கு இடம் எதுவுமின்றி, அரபி மொழியிலான ஒரு குர்ஆன்.

39:29. தர்க்கித்துக் கொள்ளும் பங்குதாரர்களை (ஹதீஸ்) கையாளுகின்ற ஒரு மனிதனுடன் ஒப்பிட்டு, முரணற்ற ஒரே ஒரு மூலாதாரத்தினை (குர்ஆன்) கையாளுகின்ற ஒரு மனிதனைக் கடவுள் உதாரணமாக எடுத்துரைக்கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ்ச்சி கடவுள்-க்குரியது; அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

39:30. நிச்சயமாக (முஹம்மதே) நீர் மரணிப்பீர், அவர்கள் மரணிக்கப் போகின்ற அதே போல்.

39:31. உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று, உங்களுடைய இரட் சகரின் முன்னால், மக்களாகிய நீங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொள்வீர்கள்.

39:32. தன்னிடம் வந்துள்ள சத்தியத்தை நம்பமறுத்துக் கொண்டிருக்கும் அதே சமயம், கடவுள் மீது பொய்களைச் சாட்டுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? நம்பமறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான கூலிதான் அல்லவா?

39:33. சத்தியத்தை ஆதரித்து, மேலும் அதில் நம்பிக்கை கொள்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள்தான் நன்னெறியாளர்கள்.

39:34. அவர்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும், தங்கள் இரட்சகரிடம் அவர்கள் பெறுவார்கள். நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.

39:35. அவர்களுடைய பாவகரமான காரியங்களைக் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் அவர்களுடைய நற்காரியங்களுக்காக அவர்களுக்குத் தாராளமாக வெகுமதியளிக்கின்றார்.

39:36. அவருடைய ஊழியருக்குக் கடவுள் போதுமானவர் அல்லவா? அவருடன் அவர்கள் அமைத்துக் கொள்கின்ற போலித்தெய்வங்களைக் கொண்டு உம்மை அவர்கள் அச்சுறுத்துகின்றனர். கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த முடியாது.

39:37. மேலும் கடவுள் எவரை வழிநடத்துகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிகேட்டிற்கு அனுப்பி விட முடியாது. கடவுள் எல்லாம் வல்லவர், பழி தீர்ப்பவர் அல்லவா?

39:38. "வானங்களையும் பூமியையும் படைத்தவர் யார்?" என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், "கடவுள்" என்றே அவர்கள் கூறுவார்கள். கூறுவீராக, "பின்னர் ஏன் நீங்கள் கடவுள்-வுடன் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்றீர்கள்? கடவுள் எனக்கு ஏதேனும் துன்பத்தை நாடினால், அத்தகையதொரு துன்பத்தை நிவர்த்திக்க அவர்களால் இயலுமா? மேலும் அவர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தை நாடினால், அத்தகையதொரு ஆசீர்வாதத்தை அவர்களால் தடுத்துவிட இயலுமா?" கூறுவீராக, "கடவுள் எனக்குப் போதுமானவர்." பொறுப்பேற்படுத்துபவர்கள் அவர் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.

39:39. கூறுவீராக, "என் சமூகத்தாரே, உங்களால் இயன்றதை செய்யுங்கள், என்னால் இயன்றதை நான் செய்வேன்; நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள்.

39:40. "கேவலமான தண்டனைக்கு உள்ளாகி விட்டவர், மேலும் நிலையானதொரு தண்டனைக்குத் தகுதி பெற்று விட்டவர் யார் என (நீங்கள் கண்டுகொள்வீர்கள்)."

39:41. சத்தியம் நிறைந்ததாக, மனிதர்களின்பால் இவ்வேதத்தை உம் மூலமாக நாம் வெளிப்படுத்தியுள்ளோம். பின்னர், வழிநடத்தப்படுகின்ற எவரும் தன் சொந்த நலனுக்காகவே வழிநடத்தப்படுகின்றார். மேலும் வழிதவறிச் செல்கின்ற எவரும் தன் சொந்தக் கேட்டிற்காகவே வழிதவறிச் செல்கின்றார். நீர் அவர்களுக்காக வாதிடுபவர் அல்லர்.

39:42. ஆன்மாக்களை அவற்றுடைய வாழ்க்கையின் முடிவு வரும்பொழுதும், மேலும் தூக்கத்தின் பொழுதும் கடவுள் மரணத்தில் ஆழ்த்துகின்றார். இவ்விதமாக, அவர் சிலவற்றை அவற்றின் தூக்கத்தின் போதே திரும்ப எடுத்துக் கொள்கின்றார், அதே சமயம் மற்றவை அவற்றின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட தவணை வரை தொடர்ந்து உயிர் வாழ அனுமதிக்கப்படுகின்றன. சிந்திக்கின்ற மக்களுக்கு இவை படிப்பினைகளை வழங்க வேண்டும்.

39:43. அவர்களுக்கும் கடவுள்-க்கும் இடையில் மத்தியஸ்தத்திற்குப் பரிந்துரையாளர்களை அவர்கள் கண்டு பிடித்துக் கொண்டனரா? கூறுவீராக, "அவர்கள் எந்தச் சக்தியையோ, அன்றிப் புரிந்து கொள்ளுதலையோ பெற்றிராமல் இருந்தால்?"

39:44. கூறுவீராக, "பரிந்துரை அனைத்தும் கடவுள்-க்குரியது." வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, பின்னர் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.

39:45. கடவுள் மட்டும் மொழியப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டால், அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*

*39:45 இஸ்லாத்தின் முதல் தூணாவது "அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் (கடவுளுடன் வேறு தெய்வம் இல்லை)," எனப் பிரகடனம் செய்வதுதான் என்று 3:18 ல் தெளிவான கட்டளை இருந்த போதிலும், பெரும்பான்மையான "முஸ்லிம்கள்" முஹம்மதின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். முஹம்மதின் பெயரையோ அல்லது வேறு எந்தப் பெயரையோ சேர்த்துக் கொள்வதில் மகிழ்வடைவது, மறுவுலகின் மீதான நம்பமறுத்தலை வெளிப்படுத்துகின்றது என மகத்தான இந்த அளவுகோல் நம்மை எச்சரிக்கின்றது. 17:46 க்குரிய அடிக்குறிப்பையும் பார்க்கவும்.

39:46. பிரகடனிப்பீராக: "எங்கள் இறைவா, வானங்கள் மற்றும் பூமியின் துவக்ககர்த்தாவே, அனைத்து இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அறிந்தவரே, உம்முடைய ஊழியர்களுக்கிடையில் அவர்களுடைய தர்க்கங்களைக் குறித்து தீர்ப்பளிக்கின்ற ஒரே ஒருவர் நீர்தான்."

39:47. பூமியில் உள்ள ஒவ்வொன்றையும், இன்னும் அதைப் போல் இருமடங்கையும் வரம்புமீறியவர்கள் சொந்தமாகக் கொண்டிருந்தாலும், உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று பயங்கரமான தண்டனையைத் தவிர்த்துக் கொள்ள அவர்கள் அதனை உடனடியாக விட்டுக் கொடுத்து விடுவார்கள். அவர்கள் ஒருபோதும் எதிர்பாராதவை கடவுள்-ஆல் அவர்களுக்குக் காட்டப்படும்.

39:48. அவர்கள் சம்பாதித்த பாவகரமான காரியங்கள் அவர்களுக்குக் காட்டப்படும், மேலும் அவர்கள் கேலி செய்த அதே விஷயங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யத் திரும்பி வரும்.

39:49. மானிடன் துன்பத்தால் தீண்டப்பட்டால், அவன் நம்மை இறைஞ்சுகின்றான், ஆனால் ஓர் ஆசீர்வாதத்தை நாம் அவன் மீது அருளியவுடன், அவன் கூறுகின்றான், "இதனை நான் எனது சாமர்த்தியத்தால் அடையப் பெற்றேன்!" உண்மையில், இது ஒரு சோதனையேயாகும், ஆனால் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

39:50. அவர்களுக்கு முன்பிருந்தவர்களும் இதனையே தான் கூறினார்கள், மேலும் அவர்களுடைய சம்பாத்தியங்கள் அவர்களுக்குச் சற்றும் உதவவில்லை.

39:51. அவர்களுடைய தீய காரியங்களின் பின்விளைவுகளை அவர்கள் அனுபவித்தனர். அதைப் போலவே, தற்காலத் தலைமுறையில் உள்ள வரம்புமீறுபவர்களும் அவர்களுடைய தீயகாரியங்களின் பின் விளைவுகளை அனுபவிப்பார்கள்; அவர்கள் தப்பிக்க முடியாது.

39:52. கடவுள்தான் அவர் தேர்ந்தெடுக்கின்ற எவருக்கும் வாழ்வாதாரத்தினை அதிகரிப்பவர், மேலும் தடுத்து நிறுத்துபவர் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாகும்.

39:53. பிரகடனிப்பீராக: "வரம்புகளைத் தாண்டி விட்ட என் ஊழியர்களே, கடவுள்-ன் கருணையில் ஒருபோதும் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். ஏனெனில் கடவுள் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்றார். அவர் தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்."

39:54. தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், நீங்கள் உங்கள் இரட்சகருக்குக் கீழ்ப்படியவும், அவருக்கு முற்றிலும் சரணடையவும் வேண்டும், பின்னர் நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

39:55. மேலும் நீங்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது, தண்டனை உங்களை திடீரென முந்துவதற்கு முன்னர், உங்களுடைய இரட்சகரால் உங்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மிகச்சிறந்த பாதையைப் பின்பற்றுங்கள்.

39:56. "கடவுள்-ன் கட்டளைகளை அலட்சியம் செய்ததற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்; நிச்சயமாக நான் கேலி செய்பவர்களில் ஒருவனாகவே இருந்தேன்," என்று ஓர் ஆத்மா கூறக்கூடாது என்பதற்காக.

39:57. அல்லது, "கடவுள் என்னை வழிநடத்தியிருந்தால், நானும் நன்னெறியாளர்களுடன் இருந்திருப்பேன்" என்று கூறக்கூடாது என்பதற்காக.

39:58. அல்லது தண்டனையை அது காணும் பொழுது, "மற்றொரு வாய்ப்பை நான் பெற்றால், நான் நன்னெறியான காரியங்கள் புரிவேன்" என்று கூறக்கூடாது என்பதற்காக.

39:59. ஆம், உண்மையில் (போதுமான வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கவே செய்தன). என் சான்றுகள் உன்னிடம் வந்தன, ஆனால் நீ அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தாய், ஆணவம் கொண்டாய், மேலும் ஒரு நம்பமறுப்பவனாக ஆனாய்.

39:60. கடவுள்-ஐப் பற்றிப் பொய்யுரைத்தவர்களின் முகங்கள் உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று துன்பத்தால் சூழப்பட்டிருக்க நீர் காண்பீர். ஆணவம் கொண்டவர்களுக்கு நரகம் சரியான தண்டனைதான் அல்லவா?

39:61. மேலும் நன்னெறியைப் பேணிக்கொண்டவர்களைக் கடவுள் காப்பாற்றுவார்; அவர்களுக்கு அவர் வெகுமதியளிப்பார். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டாது, அன்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது.

39:62. கடவுள்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் அனைத்து விஷயங்களையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

39:63. வானங்களிலும் பூமியிலும் உள்ள தீர்மானங்கள் அனைத்தும் அவருக்கே உரியன, மேலும் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்பமறுப்பவர்கள்தான் மெய்யான நஷ்டவாளிகள்.

39:64. கூறுவீராக, "கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை வழிபடுவதற்காகவா என்னை நீங்கள் தூண்டுகின்றீர்கள், அறிவில்லாதவர்களே?"

39:65. எப்பொழுது நீர் போலித்தெய்வ வழிபாடு செய்தாலும், உம்முடைய அனைத்துக் காரியங்களும் பயனற்றதாகிவிடும், மேலும் நீர் நஷ்டவாளிகளுடன் இருப்பீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

39:66. எனவே, நீர் கடவுள்-ஐ மட்டும் வழிபடவும், மேலும் நன்றியுடையவராக இருக்கவும் வேண்டும்.

39:67. கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒருபோதும் முழுமையாக அளவிட முடியாது. உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் உள்ளது. உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளன. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் எவரும் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.

*39:67 கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களுடனும், பன்னூறு கோடிக்கணக்கான நட்சத்திரங்களுடனும் எண்ண முடியாத கோடானுகோடி விண்ணகப் பொருட்களுடனும், கோடிக்கணக்கான ஒளி வருடங்கள் விரிந்திருக்கும் நமது பிரபஞ்சமானது, ஏழு பிரபஞ்சங்களிலும் மிகச் சிறியதாகவும் மிகவும் உள்ளமைந்ததாகவும் உள்ளது. ஏழு பிரபஞ்சங்களின் கிரகித்துக் கொள்ள முடியாத இந்த விரிந்த பரப்பு கடவுளின் கரத்தினுள் உள்ளது. கடவுளின் மகத்துவம் இத்தகையதாகும். பின் இணைப்பு 6 ஐக் காண்க.

39:68. கொம்பு ஊதப்படும், உடனே கடவுள்-ஆல் தவிர்த்துக் கொள்ளப்படுபவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் மயக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள். பின்னர் அது இன்னொரு முறை ஊதப்படும், உடனே அவர்கள் அனைவரும் உற்று நோக்கியவாறு எழுந்து நிற்பார்கள்.*

*39:68 உயிர்த்தெழுப்பப்படும் நாளன்று நிகழ்வுகளின் வரிசைக்கிரமம், அடையாளமாகக் கொம்பு ஊதப்படுவதுடன் துவங்குகிறது. இரண்டாவது கொம்பு ஊதப்படுவது - மயக்கமடைவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளப்பட்ட ஒரு படைப்பின் மூலம் - எல்லா மக்களும் உயிர்த்தெழுப்பப்படுவதைக் குறிக்கின்றது; அவர்கள் இன்றைய பூமியின் மீது உயிர்த்தெழுப்பப்படுவார்கள். அப்போது கடவுளின் நேரடி வருகையின் மூலம் இந்தப் பூமி சின்னாபின்னமாகி விடும், பின்னர் புதியதொரு பூமியும், புதிய வானங்களும் படைக்கப்படும் (14:48). பின்னர் நம்முடைய வளர்ச்சியின் அளவுக்கேற்ப நாம் அடுக்கப்படுவோம் (பின் இணைப்பு 11 ).

39:69. பின்னர் பூமி தன் இரட்சகரின் ஒளியால் பிரகாசிக்கும். பதிவேடு பகிரங்கமாகக் காட்டப்படும், மேலும் நபிமார்களும் சாட்சிகளும் முன் கொண்டு வரப்படுவார்கள். ஒவ்வொருவரும் பின்னர் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள், சிறிதளவும் அநீதமின்றி.

39:70. ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்தவற்றுக்கான கூலி கொடுக்கப்படும், ஏனெனில் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

39:71. நம்பமறுத்தவர்கள் நரகத்திற்குள் கூட்டங் கூட்டமாக வழிநடத்தப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப்படும் பொழுது, அதன் காவலர்கள் கூறுவார்கள், "உங்கள் இரட்சகருடைய வெளிப்பாடுகளை உங்களுக்கு ஓதிக்காட்டிய, மேலும் இந்த நாளின் சந்திப்பைக் குறித்து உங்களை எச்சரித்த தூதர்களை உங்களில் இருந்தே நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லையா?" அவர்கள் பதிலளிப்பார்கள், "ஆம் மெய்தான். ஆனால் நம்ப மறுப்பவர்கள் மீது ‘தண்டனை’ எனும் வார்த்தை ஏற்கனவே முத்திரையிடப் பட்டுவிட்டது."

39:72. இவ்வாறு கூறப்படும், "அதிலே நீங்கள் என்றென்றும் தங்கியிருக்கக்கூடிய, நரகத்தின் வாயில்களுக்குள் நுழையுங்கள்." ஆணவம் கொண்டவர்களுக்கு என்ன ஒரு துன்பகரமான விதி.

39:73. தங்கள் இரட்சகரிடம் பக்தி கொண்டவர்கள் சுவனத்திற்குக் கூட்டங் கூட்டமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் அதனை அடைந்து, மேலும் அதன் வாயில்கள் திறக்கப்படும் பொழுது, அதன் காவலர்கள் கூறுவார்கள், "உங்கள் மீது சாந்தி நிலவுவதாக; நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆகையால், இங்கேயே நீங்கள் என்றென்றும் தங்கியிருப்பீர்கள்."

39:74. அவர்கள் கூறுவார்கள், "தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு நிறைவேற்றித் தந்து, மேலும் பூமிக்கு எங்களை வாரிசாக ஆக்கி, நாங்கள் விரும்பியவாறு சுவனத்தில் மகிழ்ந்திருக்கச் செய்தவரான கடவுள்-க்கே புகழ்ச்சி உரியது." பணிபுரிவோருக்கு என்ன ஓர் அழகிய வெகுமதி!

39:75. தங்கள் இரட்சகரைத் துதித்தவாறும் புகழ்ந்தவாறும், அரியாசனத்தைச் சுற்றிலும் வானவர்கள் மிதந்து கொண்டிருப்பதை நீர் காண்பீர். நியாயமான தீர்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்ட பின்னர், பிரகடனம் செய்யப்படும்: "பிரபஞ்சத்தின் இரட்சகரான, கடவுள்-க்கே புகழ்ச்சி உரியது."