Find
Chapter 38: Saad
38:0-88
88 verses Revelation order 38
سورة ص

. ١:٣٨ ص وَالقُرءانِ ذِى الذِّكرِ

. ٢:٣٨ بَلِ الَّذينَ كَفَروا فى عِزَّةٍ وَشِقاقٍ

. ٣:٣٨ كَم أَهلَكنا مِن قَبلِهِم مِن قَرنٍ فَنادَوا وَلاتَ حينَ مَناصٍ

. ٤:٣٨ وَعَجِبوا أَن جاءَهُم مُنذِرٌ مِنهُم وَقالَ الكٰفِرونَ هٰذا سٰحِرٌ كَذّابٌ

. ٥:٣٨ أَجَعَلَ الـٔالِهَةَ إِلٰهًا وٰحِدًا إِنَّ هٰذا لَشَىءٌ عُجابٌ

. ٦:٣٨ وَانطَلَقَ المَلَأُ مِنهُم أَنِ امشوا وَاصبِروا عَلىٰ ءالِهَتِكُم إِنَّ هٰذا لَشَىءٌ يُرادُ

. ٧:٣٨ ما سَمِعنا بِهٰذا فِى المِلَّةِ الـٔاخِرَةِ إِن هٰذا إِلَّا اختِلٰقٌ

. ٨:٣٨ أَءُنزِلَ عَلَيهِ الذِّكرُ مِن بَينِنا بَل هُم فى شَكٍّ مِن ذِكرى بَل لَمّا يَذوقوا عَذابِ

. ٩:٣٨ أَم عِندَهُم خَزائِنُ رَحمَةِ رَبِّكَ العَزيزِ الوَهّابِ

. ١٠:٣٨ أَم لَهُم مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما فَليَرتَقوا فِى الأَسبٰبِ

. ١١:٣٨ جُندٌ ما هُنالِكَ مَهزومٌ مِنَ الأَحزابِ

. ١٢:٣٨ كَذَّبَت قَبلَهُم قَومُ نوحٍ وَعادٌ وَفِرعَونُ ذُو الأَوتادِ

. ١٣:٣٨ وَثَمودُ وَقَومُ لوطٍ وَأَصحٰبُ لـَٔيكَةِ أُولٰئِكَ الأَحزابُ

. ١٤:٣٨ إِن كُلٌّ إِلّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقابِ

. ١٥:٣٨ وَما يَنظُرُ هٰؤُلاءِ إِلّا صَيحَةً وٰحِدَةً ما لَها مِن فَواقٍ

. ١٦:٣٨ وَقالوا رَبَّنا عَجِّل لَنا قِطَّنا قَبلَ يَومِ الحِسابِ

. ١٧:٣٨ اصبِر عَلىٰ ما يَقولونَ وَاذكُر عَبدَنا داوۥدَ ذَا الأَيدِ إِنَّهُ أَوّابٌ

. ١٨:٣٨ إِنّا سَخَّرنَا الجِبالَ مَعَهُ يُسَبِّحنَ بِالعَشِىِّ وَالإِشراقِ

. ١٩:٣٨ وَالطَّيرَ مَحشورَةً كُلٌّ لَهُ أَوّابٌ

. ٢٠:٣٨ وَشَدَدنا مُلكَهُ وَءاتَينٰهُ الحِكمَةَ وَفَصلَ الخِطابِ

. ٢١:٣٨ وَهَل أَتىٰكَ نَبَؤُا۟ الخَصمِ إِذ تَسَوَّرُوا المِحرابَ

. ٢٢:٣٨ إِذ دَخَلوا عَلىٰ داوۥدَ فَفَزِعَ مِنهُم قالوا لا تَخَف خَصمانِ بَغىٰ بَعضُنا عَلىٰ بَعضٍ فَاحكُم بَينَنا بِالحَقِّ وَلا تُشطِط وَاهدِنا إِلىٰ سَواءِ الصِّرٰطِ

. ٢٣:٣٨ إِنَّ هٰذا أَخى لَهُ تِسعٌ وَتِسعونَ نَعجَةً وَلِىَ نَعجَةٌ وٰحِدَةٌ فَقالَ أَكفِلنيها وَعَزَّنى فِى الخِطابِ

. ٢٤:٣٨ قالَ لَقَد ظَلَمَكَ بِسُؤالِ نَعجَتِكَ إِلىٰ نِعاجِهِ وَإِنَّ كَثيرًا مِنَ الخُلَطاءِ لَيَبغى بَعضُهُم عَلىٰ بَعضٍ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَليلٌ ما هُم وَظَنَّ داوۥدُ أَنَّما فَتَنّٰهُ فَاستَغفَرَ رَبَّهُ وَخَرَّ راكِعًا وَأَنابَ

. ٢٥:٣٨ فَغَفَرنا لَهُ ذٰلِكَ وَإِنَّ لَهُ عِندَنا لَزُلفىٰ وَحُسنَ مَـٔابٍ

. ٢٦:٣٨ يٰداوۥدُ إِنّا جَعَلنٰكَ خَليفَةً فِى الأَرضِ فَاحكُم بَينَ النّاسِ بِالحَقِّ وَلا تَتَّبِعِ الهَوىٰ فَيُضِلَّكَ عَن سَبيلِ اللَّهِ إِنَّ الَّذينَ يَضِلّونَ عَن سَبيلِ اللَّهِ لَهُم عَذابٌ شَديدٌ بِما نَسوا يَومَ الحِسابِ

. ٢٧:٣٨ وَما خَلَقنَا السَّماءَ وَالأَرضَ وَما بَينَهُما بٰطِلًا ذٰلِكَ ظَنُّ الَّذينَ كَفَروا فَوَيلٌ لِلَّذينَ كَفَروا مِنَ النّارِ

. ٢٨:٣٨ أَم نَجعَلُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالمُفسِدينَ فِى الأَرضِ أَم نَجعَلُ المُتَّقينَ كَالفُجّارِ

. ٢٩:٣٨ كِتٰبٌ أَنزَلنٰهُ إِلَيكَ مُبٰرَكٌ لِيَدَّبَّروا ءايٰتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُوا الأَلبٰبِ

. ٣٠:٣٨ وَوَهَبنا لِداوۥدَ سُلَيمٰنَ نِعمَ العَبدُ إِنَّهُ أَوّابٌ

. ٣١:٣٨ إِذ عُرِضَ عَلَيهِ بِالعَشِىِّ الصّٰفِنٰتُ الجِيادُ

. ٣٢:٣٨ فَقالَ إِنّى أَحبَبتُ حُبَّ الخَيرِ عَن ذِكرِ رَبّى حَتّىٰ تَوارَت بِالحِجابِ

. ٣٣:٣٨ رُدّوها عَلَىَّ فَطَفِقَ مَسحًا بِالسّوقِ وَالأَعناقِ

. ٣٤:٣٨ وَلَقَد فَتَنّا سُلَيمٰنَ وَأَلقَينا عَلىٰ كُرسِيِّهِ جَسَدًا ثُمَّ أَنابَ

. ٣٥:٣٨ قالَ رَبِّ اغفِر لى وَهَب لى مُلكًا لا يَنبَغى لِأَحَدٍ مِن بَعدى إِنَّكَ أَنتَ الوَهّابُ

. ٣٦:٣٨ فَسَخَّرنا لَهُ الرّيحَ تَجرى بِأَمرِهِ رُخاءً حَيثُ أَصابَ

. ٣٧:٣٨ وَالشَّيٰطينَ كُلَّ بَنّاءٍ وَغَوّاصٍ

. ٣٨:٣٨ وَءاخَرينَ مُقَرَّنينَ فِى الأَصفادِ

. ٣٩:٣٨ هٰذا عَطاؤُنا فَامنُن أَو أَمسِك بِغَيرِ حِسابٍ

. ٤٠:٣٨ وَإِنَّ لَهُ عِندَنا لَزُلفىٰ وَحُسنَ مَـٔابٍ

. ٤١:٣٨ وَاذكُر عَبدَنا أَيّوبَ إِذ نادىٰ رَبَّهُ أَنّى مَسَّنِىَ الشَّيطٰنُ بِنُصبٍ وَعَذابٍ

. ٤٢:٣٨ اركُض بِرِجلِكَ هٰذا مُغتَسَلٌ بارِدٌ وَشَرابٌ

. ٤٣:٣٨ وَوَهَبنا لَهُ أَهلَهُ وَمِثلَهُم مَعَهُم رَحمَةً مِنّا وَذِكرىٰ لِأُولِى الأَلبٰبِ

. ٤٤:٣٨ وَخُذ بِيَدِكَ ضِغثًا فَاضرِب بِهِ وَلا تَحنَث إِنّا وَجَدنٰهُ صابِرًا نِعمَ العَبدُ إِنَّهُ أَوّابٌ

. ٤٥:٣٨ وَاذكُر عِبٰدَنا إِبرٰهيمَ وَإِسحٰقَ وَيَعقوبَ أُولِى الأَيدى وَالأَبصٰرِ

. ٤٦:٣٨ إِنّا أَخلَصنٰهُم بِخالِصَةٍ ذِكرَى الدّارِ

. ٤٧:٣٨ وَإِنَّهُم عِندَنا لَمِنَ المُصطَفَينَ الأَخيارِ

. ٤٨:٣٨ وَاذكُر إِسمٰعيلَ وَاليَسَعَ وَذَا الكِفلِ وَكُلٌّ مِنَ الأَخيارِ

. ٤٩:٣٨ هٰذا ذِكرٌ وَإِنَّ لِلمُتَّقينَ لَحُسنَ مَـٔابٍ

. ٥٠:٣٨ جَنّٰتِ عَدنٍ مُفَتَّحَةً لَهُمُ الأَبوٰبُ

. ٥١:٣٨ مُتَّكِـٔينَ فيها يَدعونَ فيها بِفٰكِهَةٍ كَثيرَةٍ وَشَرابٍ

. ٥٢:٣٨ وَعِندَهُم قٰصِرٰتُ الطَّرفِ أَترابٌ

. ٥٣:٣٨ هٰذا ما توعَدونَ لِيَومِ الحِسابِ

. ٥٤:٣٨ إِنَّ هٰذا لَرِزقُنا ما لَهُ مِن نَفادٍ

. ٥٥:٣٨ هٰذا وَإِنَّ لِلطّٰغينَ لَشَرَّ مَـٔابٍ

. ٥٦:٣٨ جَهَنَّمَ يَصلَونَها فَبِئسَ المِهادُ

. ٥٧:٣٨ هٰذا فَليَذوقوهُ حَميمٌ وَغَسّاقٌ

. ٥٨:٣٨ وَءاخَرُ مِن شَكلِهِ أَزوٰجٌ

. ٥٩:٣٨ هٰذا فَوجٌ مُقتَحِمٌ مَعَكُم لا مَرحَبًا بِهِم إِنَّهُم صالُوا النّارِ

. ٦٠:٣٨ قالوا بَل أَنتُم لا مَرحَبًا بِكُم أَنتُم قَدَّمتُموهُ لَنا فَبِئسَ القَرارُ

. ٦١:٣٨ قالوا رَبَّنا مَن قَدَّمَ لَنا هٰذا فَزِدهُ عَذابًا ضِعفًا فِى النّارِ

. ٦٢:٣٨ وَقالوا ما لَنا لا نَرىٰ رِجالًا كُنّا نَعُدُّهُم مِنَ الأَشرارِ

. ٦٣:٣٨ أَتَّخَذنٰهُم سِخرِيًّا أَم زاغَت عَنهُمُ الأَبصٰرُ

. ٦٤:٣٨ إِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخاصُمُ أَهلِ النّارِ

. ٦٥:٣٨ قُل إِنَّما أَنا۠ مُنذِرٌ وَما مِن إِلٰهٍ إِلَّا اللَّهُ الوٰحِدُ القَهّارُ

. ٦٦:٣٨ رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُمَا العَزيزُ الغَفّٰرُ

. ٦٧:٣٨ قُل هُوَ نَبَؤٌا۟ عَظيمٌ

. ٦٨:٣٨ أَنتُم عَنهُ مُعرِضونَ

. ٦٩:٣٨ ما كانَ لِىَ مِن عِلمٍ بِالمَلَإِ الأَعلىٰ إِذ يَختَصِمونَ

. ٧٠:٣٨ إِن يوحىٰ إِلَىَّ إِلّا أَنَّما أَنا۠ نَذيرٌ مُبينٌ

. ٧١:٣٨ إِذ قالَ رَبُّكَ لِلمَلٰئِكَةِ إِنّى خٰلِقٌ بَشَرًا مِن طينٍ

. ٧٢:٣٨ فَإِذا سَوَّيتُهُ وَنَفَختُ فيهِ مِن روحى فَقَعوا لَهُ سٰجِدينَ

. ٧٣:٣٨ فَسَجَدَ المَلٰئِكَةُ كُلُّهُم أَجمَعونَ

. ٧٤:٣٨ إِلّا إِبليسَ استَكبَرَ وَكانَ مِنَ الكٰفِرينَ

. ٧٥:٣٨ قالَ يٰإِبليسُ ما مَنَعَكَ أَن تَسجُدَ لِما خَلَقتُ بِيَدَىَّ أَستَكبَرتَ أَم كُنتَ مِنَ العالينَ

. ٧٦:٣٨ قالَ أَنا۠ خَيرٌ مِنهُ خَلَقتَنى مِن نارٍ وَخَلَقتَهُ مِن طينٍ

. ٧٧:٣٨ قالَ فَاخرُج مِنها فَإِنَّكَ رَجيمٌ

. ٧٨:٣٨ وَإِنَّ عَلَيكَ لَعنَتى إِلىٰ يَومِ الدّينِ

. ٧٩:٣٨ قالَ رَبِّ فَأَنظِرنى إِلىٰ يَومِ يُبعَثونَ

. ٨٠:٣٨ قالَ فَإِنَّكَ مِنَ المُنظَرينَ

. ٨١:٣٨ إِلىٰ يَومِ الوَقتِ المَعلومِ

. ٨٢:٣٨ قالَ فَبِعِزَّتِكَ لَأُغوِيَنَّهُم أَجمَعينَ

. ٨٣:٣٨ إِلّا عِبادَكَ مِنهُمُ المُخلَصينَ

. ٨٤:٣٨ قالَ فَالحَقُّ وَالحَقَّ أَقولُ

. ٨٥:٣٨ لَأَملَأَنَّ جَهَنَّمَ مِنكَ وَمِمَّن تَبِعَكَ مِنهُم أَجمَعينَ

. ٨٦:٣٨ قُل ما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ وَما أَنا۠ مِنَ المُتَكَلِّفينَ

. ٨٧:٣٨ إِن هُوَ إِلّا ذِكرٌ لِلعٰلَمينَ

. ٨٨:٣٨ وَلَتَعلَمُنَّ نَبَأَهُ بَعدَ حينٍ

S.

38:1. S. (Saad),* and the Quran that contains the proof.**

*38:1 This Initial (Saad) occurs in suras 7, 19, & 38 a total of 152 times, 19x8 (Appendix 1). **38:1 The word "Zikr" is made distinct from the Quran and clearly points at the Quran's miraculous mathematical code. See 15:6, 9; 16:44; 21:2, 24; 26:5; & 36:11, 69.

38:2. Those who disbelieve have plunged into arrogance and defiance.

38:3. Many a generation before them we annihilated. They called for help, in vain.

38:4. They wondered that a warner should come to them, from among them. The disbelievers said, "A magician, a liar.

38:5. "Did he make the gods into one god? This is really strange."

38:6. The leaders announced, "Go and steadfastly persevere in worshiping your gods. This is what is desired.

38:7. "We never heard of this from the religion of our fathers. This is a lie.

38:8. "Why did the proof come down to him, instead of us?" Indeed, they are doubtful of My proof. Indeed, they have not yet tasted My retribution.

38:9. Do they own the treasures of mercy of your Lord, the Almighty, the Grantor.

38:10. Do they possess the sovereignty of the heavens and the earth, and everything between them? Let them help themselves.

38:11. Instead, whatever forces they can muster - even if all their parties banded together - will be defeated.

38:12. Disbelieving before them were the people of Noah, `Ãd, and the mighty Pharaoh.

38:13. Also, Thamoud, the people of Lot, the dwellers of the Woods (of Midyan); those were the opponents.

38:14. Each of them disbelieved the messengers and thus, My retribution was inevitable.

38:15. These people can expect a single blow, from which they never recover.

38:16. They challenged: "Our Lord, why do you not rush the retribution for us, before the Day of Reckoning."

38:17. Be patient in the face of their utterances, and remember our servant David, the resourceful; he was obedient.

38:18. We committed the mountains in his service, glorifying with him night and day.

38:19. Also the birds were committed to serve him; all were obedient to him.

38:20. We strengthened his kingship, and endowed him with wisdom and good logic.

38:21. Have you received news of the feuding men who sneaked into his sanctuary?

38:22. When they entered his room, he was startled. They said, "Have no fear. We are feuding with one another, and we are seeking your fair judgment. Do not wrong us, and guide us in the right path.

38:23. "This brother of mine owns ninety nine* sheep, while I own one sheep. He wants to mix my sheep with his, and continues to pressure me."

*38:23 This is the only place where the number 99 occurs. Thirty different numbers are mentioned in the Quran, and their total comes to 162146, 19x8534. See Appendix 1.

38:24. He said, "He is being unfair to you by asking to combine your sheep with his. Most people who combine their properties treat each other unfairly, except those who believe and work righteousness, and these are so few." Afterwards, David wondered if he made the right judgment. He thought that we were testing him. He then implored his Lord for forgiveness, bowed down, and repented.*

*38:24 In this clear example, 99 on one side vs 1 on the other side, David's extreme care to render the correct judgment caused him to ask forgiveness. Are we this careful?

38:25. We forgave him in this matter. We have granted him a position of honor with us, and a beautiful abode.

38:26. O David, we have made you a ruler on earth. Therefore, you shall judge among the people equitably, and do not follow your personal opinion, lest it diverts you from the way of God. Surely, those who stray off the way of God incur severe retribution for forgetting the Day of Reckoning.

38:27. We did not create the heaven and the earth, and everything between them, in vain. Such is the thinking of those who disbelieve. Therefore, woe to those who disbelieve; they will suffer in Hell.

38:28. Shall we treat those who believe and lead a righteous life as we treat those who commit evil on earth? Shall we treat the righteous as we treat the wicked?

38:29. This is a scripture that we sent down to you, that is sacred - perhaps they reflect on its verses. Those who possess intelligence will take heed.

38:30. To David we granted Solomon; a good and obedient servant.

38:31. One day he became preoccupied with beautiful horses, until the night fell.

38:32. He then said, "I enjoyed the material things more than I enjoyed worshiping my Lord, until the sun was gone.*

*38:32 Solomon missed his afternoon prayer because of his horses. To nullify Satan's possible claim that Solomon loved his horses more than loving God, he got rid of his horses.

38:33. "Bring them back." (To bid farewell,) he rubbed their legs and necks.

38:34. We thus put Solomon to the test; we blessed him with vast material wealth, but he steadfastly submitted.*

*38:34 & 41 Solomon and Job represent both ends of the testing spectrum. We are put to the test through wealth, health, or lack of them, to see if we worship God alone under all circumstances.

38:35. He said, "My Lord, forgive me, and grant me a kingship never attained by anyone else. You are the Grantor."

38:36. We (answered his prayer and) committed the wind at his disposal, pouring rain wherever he wanted.

38:37. And the devils, building and diving.

38:38. Others were placed at his disposal.

38:39. "This is our provision to you; you may give generously, or withhold, without limits."

38:40. He has deserved an honorable position with us, and a wonderful abode.

38:41. Remember our servant Job: he called upon his Lord, "The devil has afflicted me with hardship and pain."

*38:34 & 41 Solomon and Job represent both ends of the testing spectrum. We are put to the test through wealth, health, or lack of them, to see if we worship God alone under all circumstances.

38:42. "Strike the ground with your foot. A spring will give you healing and a drink."

38:43. We restored his family for him; twice as many. Such is our mercy; a reminder for those who possess intelligence.

38:44. "Now, you shall travel the land and preach the message, to fulfill your pledge." We found him steadfast. What a good servant! He was a submitter.

38:45. Remember also our servants Abraham, Isaac, and Jacob. They were resourceful, and possessed vision.

38:46. We bestowed upon them a great blessing: awareness of the Hereafter.

38:47. They were chosen, for they were among the most righteous.

38:48. Remember Ismail, Elisha, and Zal-Kifl; among the most righteous.

38:49. This is a reminder: The righteous have deserved a wonderful destiny.

38:50. The gardens of Eden will open up their gates for them.

38:51. Relaxing therein, they will be given many kinds of fruits and drinks.

38:52. They will have wonderful spouses.

38:53. This is what you have deserved on the Day of Reckoning.

38:54. Our provisions are inexhaustible.

38:55. As for the transgressors, they have incurred a miserable destiny.

38:56. Hell is where they burn; what a miserable abode!

38:57. What they taste therein will be hellish drinks and bitter food.

38:58. And much more of the same kind.

38:59. "This is a group to be thrown into Hell with you." They will not be welcomed (by the residents of Hell). They have deserved to burn in the hellfire.

38:60. The newcomers will respond, "Nor are you welcomed. You are the ones who preceded us and misled us. Therefore, suffer this miserable end."

38:61. They will also say, "Our Lord, these are the ones who led us into this; double the retribution of hellfire for them."

38:62. They will say, "How come we do not see (in Hell) people we used to count among the wicked?

38:63. "We used to ridicule them; we used to turn our eyes away from them."

38:64. This is a predetermined fact: the people of Hell will feud with one another.

38:65. Say, "I warn you; there is no other god beside God, the One, the Supreme.

38:66. "The Lord of the heavens and the earth, and everything between them; the Almighty, the Forgiving."

38:67. Say, "Here is awesome news.

38:68. "That you are totally oblivious to.

38:69. "I had no knowledge previously, about the feud in the High Society.*

*38:69 The feud in the High Society was triggered by Satan's challenge to God's absolute authority. This is definitely the most important event in the history of the human race. We failed to make a firm stand regarding God's absolute authority. This life represents the third and final chance to redeem ourselves (See the Introduction and Appendix 7).

38:70. "I am inspired that my sole mission is to deliver the warnings to you."

38:71. Your Lord said to the angels, "I am creating a human being from clay.

38:72. "Once I design him, and blow into him from My spirit, you shall fall prostrate before him."

38:73. The angels fell prostrate, all of them,

38:74. except Satan; he refused, and was too arrogant, unappreciative.

38:75. He said, "O Satan, what prevented you from prostrating before what I created with My hands? Are you too arrogant? Have you rebelled?"

38:76. He said, "I am better than he; You created me from fire, and created him from clay."

38:77. He said, "Therefore, you must be exiled, you will be banished.

38:78. "You have incurred My condemnation until the Day of Judgment."

38:79. He said, "My Lord, respite me till the Day of Resurrection."

38:80. He said, "You are respited.

38:81. "Until the appointed day."

38:82. He said, "I swear by Your majesty, that I will send them all astray.

38:83. "Except Your worshipers who are devoted absolutely to You alone."

38:84. He said, "This is the truth, and the truth is all that I utter.

38:85. "I will fill Hell with you and all those who follow you."

38:86. Say, "I do not ask you for any wage, and I am not an imposter.

38:87. "This is a reminder for the world.

38:88. "And you will certainly find out in awhile."

38:1. ஸ. (ஸாத்),* மேலும் சான்றைக் கொண்டிருக்கின்ற இந்தக் குர்ஆன்.**

*38:1 இந்த துவக்க எழுத்து (ஸாத்) 7, 19, 38 ஆகிய சூராக்களில் 152 முறைகள் 19ஒ8 இடம் பெறுகின்றது (பின் இணைப்பு 1).**38:1 திக்ர் எனும் வார்த்தை குர்ஆனிலிருந்து தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது, மேலும் மிகத் தெளிவாக குர்ஆனின் அற்புதக் கணிதக் குறியீட்டைச் சுட்டிக்காட்டுகின்றது. பார்க்க 15:6,9, 16:44, 21:2,24; 26:5, 36:11,69.

38:2. நம்பமறுப்பவர்கள் ஆணவத்திலும் எதிர்ப்பிலும் மூழ்கி விட்டனர்.

38:3. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தொழித்து உள்ளோம். அவர்கள் உதவிக்கு அழைத்தனர்; வீணாக.

38:4. அவர்களிலிருந்தே ஓர் எச்சரிப்பவர் அவர்களிடம் வந்தது பற்றி அவர்கள் வியப்படைந்தனர். நம்பமறுப்பவர்கள் கூறினர், "ஒரு மந்திரவாதி; ஒரு பொய்யர்.

38:5. "தெய்வங்களையெல்லாம் ஒரே தெய்வமாக அவர் ஆக்கிவிட்டாரா? இது மெய்யாகவே ஆச்சர்யமாக இருக்கின்றது".

38:6. அந்தத் தலைவர்கள் அறிவித்தனர், "சென்று உங்களுடைய தெய்வங்களை வழிபடுவதில் உறுதியோடு விடாமுயற்சியுடனிருங்கள். இதுவே விரும்பத்தக்கதாகும்.

38:7. "நம்முடைய தந்தையரின் மார்க்கத்திலிருந்து இதனைப்பற்றி நாம் ஒருபோதும் கேள்விப்பட்ட தில்லை. இது ஒரு பொய்யேயாகும்.

38:8. "நமக்கு அல்லாமல் அந்தச் சான்று அவருக்கு ஏன் இறங்கி வந்தது?" உண்மையில், என் சான்றைக் குறித்து அவர்கள் சந்தேகத்திலிருக்கின்றனர். உண்மையில், என் தண்டனையை அவர்கள் இன்னும் சுவைக்கவில்லை.

38:9. எல்லாம் வல்லவர், கொடையளிப்பவரான உம் இரட்சகரின் கருணைப் பொக்கிஷங்களை அவர்கள் சொந்தங் கொண்டிருக்கின்றனரா.

38:10. வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரத்தைத் தம் வசம் அவர்கள் கொண்டுள்ளனரா? அவர்கள் தங்களுக்கே உதவிக் கொள்ளட்டும்.

38:11. மாறாக, அவர்கள் ஒன்றுதிரட்ட இயன்ற எந்தப் படைகளானாலும் - அவர்களுடைய கட்சியினர் அனைவரும் கூட்டமாகச் சேர்ந்து கொண்டாலும் - தோற்கடிக்கப்படுவார்கள்.

38:12. அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத்தார், ஆத், அபார பலம் கொண்ட ஃபேரோ ஆகியோர் நம்ப மறுத்தனர்.

38:13. அத்துடன், தமூது, லோத்தின் சமூகத்தார், (மித்யனின்) வனங்களில் வசித்த மக்கள்; அவர்கள் எதிரணியினராக இருந்தனர்.

38:14. அவர்கள் ஒவ்வொருவரும் தூதர்களை நம்பமறுத்தனர், எனவே இவ்விதமாக, என்னுடைய தண்டனை தவிர்க்க முடியாததானது.

38:15. இந்த மக்கள் ஒரே ஓர் அடியை எதிர் நோக்கலாம், அதிலிருந்து அவர்கள் ஒருபோதும் மீண்டுவிட முடியாது.

38:16. அவர்கள் சவால் விடுத்தனர்: "எங்கள் இரட்சகரே, கணக்குக் கேட்கும் நாளுக்கு முன்னர், எங்களுக்கு உரிய தண்டனையை ஏன் நீர் விரைவு படுத்தவில்லை."

38:17. அவர்களுடைய கூற்றுகளைக் குறித்து நீர் பொறுமையுடன் இருப்பீராக, மேலும் வளம் நிறைந்தவரான, நம் ஊழியர் டேவிட்டை நினைவில் கொள்வீராக; அவர் கீழ்ப்படிந்தவராக இருந்தார்.

38:18. அவருடன் சேர்ந்து இரவும் பகலும் துதிக்குமாறு, மலைகளை அவருடைய பணிக்கென நாம் ஒப்படைத்தோம்.

38:19. அத்துடன் பறவைகளும் அவருக்குப் பணி செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டன; அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படிந்தவையாக இருந்தன.

38:20. நாம் அவருடைய அரசுரிமையைப் பலப்படுத்தினோம், மேலும் ஞானம் மற்றும் நல்ல சிந்தனைத் திறன் கொண்டு அவருக்குக் கொடையளித்தோம்.

38:21. அவருடைய தொழுமிடத்திற்குள் இரகசியமாக நுழைந்த, சச்சரவிட்டுக் கொண்ட மனிதர்களைப் பற்றிய செய்தியை நீர் பெற்றீரா?

38:22. அவருடைய அறைக்குள் அவர்கள் நுழைந்த பொழுது, அவர் திடுக்குற்றார். அவர்கள் கூறினர், "அச்சம் கொள்ளாதீர். நாங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சர விட்டுக் கொண்டிருக்கின்றோம், மேலும் நாங்கள் உம்முடைய நியாயமான தீர்ப்பை பெற விரும்புகின்றோம். எங்களுக்கு அநீதி இழைத்து விடாதீர், மேலும் சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக.

38:23. "இந்த என்னுடைய சகோதரர் தொன்னூற்றொன்பது* ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளார், அதே சமயம் நான் ஒரே ஆட்டைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஆட்டையும் அவருடையவற்றுடன் கலந்து விட அவர் விரும்புகின்றார், மேலும் தொடர்ந்து என்னை நெருக்கிக் கொண்டிருக்கின்றார்.

*38:23 எண்99 இடம்பெறும் ஒரே இடம் இதுதான். குர்ஆனில் முப்பது வெவ்வேறு எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும் அவற்றின் கூட்டுத்தொகை 162146 ஆக வருகின்றது, 162146, 19x8534. பார்க்க பின் இணைப்பு1.

38:24. அவர் கூறினார், "உம்முடைய ஆட்டை அவருடையவற்றுடன் சேர்த்துவிடும்படி கேட்டதன் மூலம் அவர் உம்மிடம் நியாயமற்றவராக இருந்துள்ளார். தங்களுடைய சொத்துகளை ஒன்றிணைத்துக் கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் ஒருவரையொருவர் அநியாயமாக நடத்திக் கொள்கின்றனர், நம்பிக்கை கொண்டு நன்னெறிகள் புரிபவர்களைத் தவிர, மேலும் இத்தகையவர்கள் மிகச் சிலரே" அதன் பின்னர், தான் சரியான தீர்ப்பைத்தான் அளித்தோமா என டேவிட் ஐயம் கொண்டார். நாம் அவரைச் சோதிக்கின்றோம் என்று அவர் எண்ணினார். அவர் பின்னர் தன் இரட்சகரிடம் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினார், கீழே குனிந்தார், மேலும் வருந்தினார்.*

*38:24 ஒரு புறத்தில் 99, அதற்கெதிராக மற்றொரு புறத்தில் 1 என்ற இந்தத் தெளிவான உதாரணத்தில், சரியான தீர்ப்பை வழங்க வேண்டுமென்ற டேவிட்டின் அதீத கவனம் அவரை மன்னிப்புக் கேட்கும்படிச் செய்தது. நாம் இந்த அளவுக்குக் கவனம் கொண்டிருக்கின்றோமா?

38:25. நாம் இந்த விஷயத்தில் அவரை மன்னித்தோம்.நம்மிடம் கண்ணியமானதொரு அந்தஸ்தையும், அழகியதொரு தங்குமிடத்தையும் நாம் அவருக்கு அளித்தோம்.

38:26. டேவிட்டே, உம்மை நாம் பூமியின் மீது ஒர் ஆட்சியாளராக ஆக்கியுள்ளோம். எனவே, மக்களுக்கிடையில் நீர் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும், மேலும் உம்முடைய சுய அபிப்பிராயத்தைப் பின்பற்றாதீர், கடவுள்-ன் பாதையிலிருந்து உம்மை அது திசை திருப்பி விடாதிருக்கும் பொருட்டு. நிச்சயமாக, கடவுள்-ன் பாதையிலிருந்து வழிதவறிச் செல்பவர்கள், கேள்விக் கணக்கு நாளை மறந்தமைக்காக கடுமையான தண்டனைக்கு உள்ளாகின்றனர்.

38:27. வானத்தையும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இத்தகைய நினைப்பானது நம்ப மறுப்பவர்களுடையதேயாகும். ஆகவே, நம்பமறுப்பவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் நரகத்தில் துயரமடைவார்கள்.

38:28. பூமியில் தீமைகள் செய்பவர்களை நாம் நடத்துவதைப் போன்று நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை நாம் நடத்துவோமா? தீயவர்களை நாம் நடத்துவதைப் போன்று நன்னெறியாளர்களை நாம் நடத்துவோமா?

38:29. இது உமக்கு நாம் இறக்கி அனுப்பிய புனிதமான ஒரு வேதமாகும்-ஒருவேளை அதன் வசனங்களை அவர்கள் சிந்திக்கக் கூடும். அறிவுத் திறனுடையவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

38:30. டேவிட்டுக்கு சாலமனை நாம் அளித்தோம்; ஒரு நல்லவர், மேலும் கீழ்ப்படிந்த ஊழியர்.

38:31. ஒருநாள் இரவு சூழும் வரை, அழகிய குதிரைகளுடன் அவர் தன்னை மறந்து மூழ்கி இருந்தார்.

38:32. அப்போது அவர் கூறினார், "என் இரட்சகரை வழி படுவதில் நான் மகிழ்வடைவதை விடவும், பொருள் சார்ந்த விஷயங்களில் நான் மகிழ்ந்திருந்து விட்டேன், சூரியன் மறைந்து விடும் வரை.*

*38:32 தன் குதிரைகளினால் ஸாலமன் தன்னுடைய பிற்பகல் தொழுகையைத் தவறவிட்டார். கடவுளை நேசிப்பதை விடவும் ஸாலமன் தன் குதிரைகளை அதிகமாக நேசித்தார் என்று சாத்தான் வாதிடக்கூடிய சாத்தியத்தை ரத்துச் செய்யும் விதமாக, அவர் தன் குதிரைகளை விட்டு நீங்கிக் கொண்டார்.

38:33. "அவற்றை மீண்டும் கொண்டு வாருங்கள்" (வழியனுப்புவதற்காக) அவற்றின் கால்களையும் கழுத்துகளையும் அவர் தடவிக் கொடுத்தார்.

38:34. இவ்விதமாக சாலமனை நாம் சோதனையில் ஆழ்த்தினோம்; திரளான பொருள் வளங்களைக் கொண்டு அவரை நாம் ஆசீர்வதித்தோம், ஆனால் அவர் உறுதியோடு சரணடைந்தார்.*

*38:34 &41 ஸாலமனும் ஜோபும் சோதனை விளிம்பின் இரு எல்லைகளை பிரதிபலிக்கின்றனர். எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் கடவுளை மட்டும் வழிபடுகின்றோமா என்பதைக் காண்பதற்காக, செல்வம், உடல் நலம் அல்லது அவற்றின் குறைவு ஆகியவற்றின் மூலமாக நாம் சோதனையில் ஆழ்த்தப்படுகின்றோம்.

38:35. அவர் கூறினார், "என் இரட்சகரே, என்னை மன்னிப்பீராக, மேலும் வேறு எவரும் ஒருபோதும் அடைந்திராத ஓர் அரசுரிமையை எனக்கு அளிப்பீராக. நீரே கொடையளிப்பவர்."

38:36. நாம் (அவருடைய பிரார்த்தனைக்குப் பதிலளித்தோம், மேலும்) அவர் விரும்பிய இடமெல்லாம் மழை பொழியும் வண்ணம், காற்றை அவருடைய கட்டளையின் கீழ் பணித்தோம்.

38:37. மேலும் சாத்தான்களை, நிறுவிக்கொண்டும் மூழ்கிக் கொண்டும்.

38:38. மற்றவர்கள் அவருடைய கட்டளையின் கீழ் வைக்கப் பட்டனர்.

38:39. "இது உமக்கு நமது வாழ்வாதாரமாகும்; நீர் தாராளமாகக் கொடுக்கலாம், அல்லது நிறுத்திக் கொள்ளவும் செய்யலாம்,வரம்புகள் எதுவுமின்றி."

38:40. நம்மிடத்தில் கண்ணியமானதொரு அந்தஸ்துக்கும், மேலும் அற்புதமானதொரு தங்குமிடத்திற்கும் அவர் தகுதி பெற்று விட்டார்.

38:41. நம் ஊழியர் ஜோபை நினைவில் கொள்வீராக: அவர் தன் இரட்சகரை அழைத்தார், "கஷ்டத்தையும் வலியையும் கொண்டு சாத்தான் என்னைத் துன்பப்படுத்தி விட்டான்."

*38:41 பார்க்க 38:34 & 41ன் அடிக்குறிப்பு .

38:42. "உம் பாதங்களால் தரையில் அடிப்பீராக. ஓர் ஊற்று உமக்கு நிவாரணத்தையும் ஒரு பானத்தையும் தரும்."

38:43. அவருடைய குடும்பத்தாரை நாம் அவருக்குத் திருப்பித்தந்தோம்; இரு மடங்குக்கும் அதிகமாக. நம் கருணை இவ்விதமானதேயாகும்; அறிவுத்திறன் பெற்றிருப்போருக்கு ஒரு நினைவூட்டல்.

38:44. "இப்போது, உமது நேர்ச்சையை நிறைவேற்றுவதற்காக, நீர் பூமியில் பிரயாணம் செய்து தூதுச் செய்தியை பிரசாரம் செய்ய வேண்டும்." நாம் அவரை உறுதியுடையவராகக் கண்டோம். எத்தகையதொரு நல்ல ஊழியர்! அவர் சரணடைந்த ஒருவராக இருந்தார்.

38:45. நம்முடைய ஊழியர்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேகபையும் நினைவில் கொள்வீராக. அவர்கள் வளம் நிறைந்தவர்களாகவும், அகப்பார்வையுடையவர்களாகவும் இருந்தனர்.

38:46. அவர்கள் மீது மகத்தானதொரு ஆசீர்வாதத்தை நாம் அருளினோம்: மறுவுலகத்தைக் குறித்த விழிப்புணர்வு.

38:47. அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் நன்னெறி மிக்கவர்களில் இருந்தனர்.

38:48. மிகவும் நன்னெறியாளர்களில்; இஸ்மாயில், எலிஷா, மற்றும் துல்கிஃப்லை நினைவில் கொள்வீராக.

38:49. இது ஒரு நினைவூட்டல் ஆகும்: அற்புதமானதொரு விதிக்கு நன்னெறியாளர்கள் தகுதி பெற்று விட்டனர்.

38:50. ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காகத் தங்களுடைய வாயில்களைத் திறந்து கொள்ளும்.

38:51. அதில் பொழுது போக்குகையில், பல்வகைக் கனிகளும் பானங்களும் அவர்களுக்குக் கொடுக்கப் படும்.

38:52. அற்புதமான துணைகளை அவர்கள் கொண்டிருப்பார்கள்.

38:53. இதற்குத்தான் கேள்விக் கணக்கு நாளன்று நீங்கள் தகுதி பெற்று இருக்கின்றீர்கள்.

38:54. நம்முடைய வாழ்வாதாரங்கள் தீர்ந்து போகாதவை.

38:55. வரம்புமீறுபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் துன்பகரமானதொரு விதிக்கு உள்ளாகி விட்டனர்.

38:56. நரகத்தில்தான் அவர்கள் கருகுவார்கள்; என்ன ஒரு துன்பகரமான தங்குமிடம்.

38:57. அதில் அவர்கள் சுவைப்பதென்னவென்றால், நரக பானங்களும் கசப்பான உணவுமேயாகும்.

38:58. மேலும் அதே வகையில் இன்னும் மிக அதிகமானவையும்.

38:59. "இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் தள்ளப்பட இருக்கின்றது." (நரகத்தில் வசிப்பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள். நரக நெருப்பில் கருகுவதற்கு அவர்கள் தகுதி பெற்று விட்டனர்.

38:60. புதிதாக வந்தவர்கள் மறுமொழியளிப்பார்கள், "நீங்களும் வரவேற்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. நீங்கள் எங்களுக்கு முந்தியவர்களாக இருந்தீர்கள், மேலும் எங்களை வழிதவறச் செய்தீர்கள். எனவே, துன்பகரமான இந்த முடிவை அனுபவியுங்கள்."

38:61. அத்துடன் அவர்கள் கூறுவார்கள், "எங்கள் இரட்சகரே, இவர்கள்தான் எங்களை இதனுள் இட்டுச் சென்றவர்கள்; நரக நெருப்பின் தண்டனையை அவர்களுக்கு இருமடங்காக்குவீராக."

38:62. அவர்கள் கூறுவார்கள், "தீயவர்களில் உள்ளவர்கள் என நாம் எண்ணிக் கொண்டிருந்த மக்களை (நரகத்தில்) நாம் காணாதிருப்பது எப்படி?

38:63. "நாம் அவர்களைப் பரிகசிப்பவர்களாக இருந்தோம்; அவர்களை விட்டு நம் கண்களைத் திருப்பிக் கொள்பவர்களாக நாம் இருந்தோம்."

38:64. இது முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஒரு நிகழ்வாகும்: நரகத்தின் மக்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவு செய்து கொள்வார்கள்.

38:65. கூறுவீராக, "நான் உங்களை எச்சரிக்கின்றேன்; கடவுள்-வுடன் வேறு தெய்வம் இல்லை, ஒருவர், மேலதிகாரம் கொண்டவர்.

38:66. "வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றின் இரட்சகர்; எல்லாம் வல்லவர், மன்னிக்கின்றவர்."

38:67. கூறுவீராக, இதோ பிரமிப்பூட்டும் செய்தி.

38:68. "நீங்கள் முற்றிலும் கவனமற்று இருக்கும் ஒன்று.

38:69. "மேலான சமூகத்தாரின்* கலகத்தைப் பற்றி, இதற்கு முன்னர் நான் எந்த அறிவையும் கொண்டிருக்கவில்லை.

*38:69 மேலான சமூகத்தாரின் சச்சரவு கடவுளின் பரிபூரண அதிகாரத்திற்கு எதிரான சாத்தானின் அறைகூவல் மூலம் துவங்கியது. நிச்சயமாக இது மானிட இனத்தின் வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கடவுளின் பரிபூரண அதிகாரம் குறித்து ஒர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நாம் தவறி விட்டோம். இந்த வாழ்வு நம்மை மீட்டுக் கொள்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி வாய்ப்பாக அமைகின்றது (அறிமுகவுரையையும் பின் இணைப்பு 7 ஐயும் காண்க).

38:70. "என்னுடைய ஓரே பணி எச்சரிக்கைகளை உங்களிடம் சேர்ப்பிப்பதே என நான் உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ளேன்."

38:71. உம் இரட்சகர் வானவர்களிடம் கூறினார், "களி மண்ணிலிருந்து ஒரு மானிடனை நான் படைக்கின்றேன்.

38:72. "அவரை நான் வடிவமைத்து, என் ஆவியிலிருந்து அவருள் ஊதியவுடன், அவர் முன்னால் நீங்கள் சிரம் பணிந்து விழ வேண்டும்."

38:73. வானவர்கள் சிரம்பணிந்து வீழ்ந்தனர், அவர்கள் அனைவரும்,

38:74. சாத்தானைத் தவிர; அவன் மறுத்தான், மேலும் மிகவும் ஆணவம் கொண்டவனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருந்தான்.

38:75. அவர் கூறினார், "சாத்தானே, என் கரங்களால் நான் படைத்ததன் முன் சிரம்பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ மிகவும் ஆணவம் கொண்டு விட் டாயா? நீ கலகம் செய்கின்றாயா?"

38:76. அவன் கூறினான், "நான் அவரை விடவும் மேலானவன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தீர்."

38:77. அவர் கூறினார், "அப்படியென்றால், நீ துரத்தப்பட வேண்டியவனாகி விட்டாய், நீ விரட்டப்படுவாய்.

38:78. "தீர்ப்பு நாள் வரை என் கண்டனத்துக்கு நீ உள்ளாகி விட்டாய்."

38:79. அவன் கூறினான், "என் இரட்சகரே, உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளிப்பீராக."

38:80. அவர் கூறினார், "நீ அவகாசமளிக்கப்பட்டவனாக இருக்கின்றாய்."

38:81. "நிர்ணயிக்கப்பட்ட அந்நாள் வரை".

38:82. அவன் கூறினான், "அவர்களை மொத்தமாக நான் வழிகேட்டில் அனுப்பிவிடுவேன் என்று உமது மாட்சிமையின் மீது நான் ஆணையிடுகின்றேன்.

38:83. "உமக்கு மட்டும் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்ட உம்முடைய அடியார்களைத் தவிர.

38:84. அவர் கூறினார், "இதுதான் சத்தியம், மேலும் நான் சொல்வதெல்லாம் சத்தியம்தான்.

38:85. "உன்னையும் உன்னைப் பின்பற்றிய அனைவரையும் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன்."

38:86. கூறுவீராக, "நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை, மேலும் நான் ஒரு மோசடிக்காரனும் அல்லன்.

38:87. "உலகத்திற்கு இது ஒரு நினைவூட்டலாகும்.

38:88. "மேலும் குறுகியதொரு காலத்திற்குள் நீங்கள் நிச்சயம் கண்டு கொள்வீர்கள்."