Find
Chapter 31: Luqman
31:0-34
34 verses Revelation order 57
سورة لقمان

. ١:٣١ الم

. ٢:٣١ تِلكَ ءايٰتُ الكِتٰبِ الحَكيمِ

. ٣:٣١ هُدًى وَرَحمَةً لِلمُحسِنينَ

. ٤:٣١ الَّذينَ يُقيمونَ الصَّلوٰةَ وَيُؤتونَ الزَّكوٰةَ وَهُم بِالـٔاخِرَةِ هُم يوقِنونَ

. ٥:٣١ أُولٰئِكَ عَلىٰ هُدًى مِن رَبِّهِم وَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ

. ٦:٣١ وَمِنَ النّاسِ مَن يَشتَرى لَهوَ الحَديثِ لِيُضِلَّ عَن سَبيلِ اللَّهِ بِغَيرِ عِلمٍ وَيَتَّخِذَها هُزُوًا أُولٰئِكَ لَهُم عَذابٌ مُهينٌ

. ٧:٣١ وَإِذا تُتلىٰ عَلَيهِ ءايٰتُنا وَلّىٰ مُستَكبِرًا كَأَن لَم يَسمَعها كَأَنَّ فى أُذُنَيهِ وَقرًا فَبَشِّرهُ بِعَذابٍ أَليمٍ

. ٨:٣١ إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم جَنّٰتُ النَّعيمِ

. ٩:٣١ خٰلِدينَ فيها وَعدَ اللَّهِ حَقًّا وَهُوَ العَزيزُ الحَكيمُ

. ١٠:٣١ خَلَقَ السَّمٰوٰتِ بِغَيرِ عَمَدٍ تَرَونَها وَأَلقىٰ فِى الأَرضِ رَوٰسِىَ أَن تَميدَ بِكُم وَبَثَّ فيها مِن كُلِّ دابَّةٍ وَأَنزَلنا مِنَ السَّماءِ ماءً فَأَنبَتنا فيها مِن كُلِّ زَوجٍ كَريمٍ

. ١١:٣١ هٰذا خَلقُ اللَّهِ فَأَرونى ماذا خَلَقَ الَّذينَ مِن دونِهِ بَلِ الظّٰلِمونَ فى ضَلٰلٍ مُبينٍ

. ١٢:٣١ وَلَقَد ءاتَينا لُقمٰنَ الحِكمَةَ أَنِ اشكُر لِلَّهِ وَمَن يَشكُر فَإِنَّما يَشكُرُ لِنَفسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِىٌّ حَميدٌ

. ١٣:٣١ وَإِذ قالَ لُقمٰنُ لِابنِهِ وَهُوَ يَعِظُهُ يٰبُنَىَّ لا تُشرِك بِاللَّهِ إِنَّ الشِّركَ لَظُلمٌ عَظيمٌ

. ١٤:٣١ وَوَصَّينَا الإِنسٰنَ بِوٰلِدَيهِ حَمَلَتهُ أُمُّهُ وَهنًا عَلىٰ وَهنٍ وَفِصٰلُهُ فى عامَينِ أَنِ اشكُر لى وَلِوٰلِدَيكَ إِلَىَّ المَصيرُ

. ١٥:٣١ وَإِن جٰهَداكَ عَلىٰ أَن تُشرِكَ بى ما لَيسَ لَكَ بِهِ عِلمٌ فَلا تُطِعهُما وَصاحِبهُما فِى الدُّنيا مَعروفًا وَاتَّبِع سَبيلَ مَن أَنابَ إِلَىَّ ثُمَّ إِلَىَّ مَرجِعُكُم فَأُنَبِّئُكُم بِما كُنتُم تَعمَلونَ

. ١٦:٣١ يٰبُنَىَّ إِنَّها إِن تَكُ مِثقالَ حَبَّةٍ مِن خَردَلٍ فَتَكُن فى صَخرَةٍ أَو فِى السَّمٰوٰتِ أَو فِى الأَرضِ يَأتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطيفٌ خَبيرٌ

. ١٧:٣١ يٰبُنَىَّ أَقِمِ الصَّلوٰةَ وَأمُر بِالمَعروفِ وَانهَ عَنِ المُنكَرِ وَاصبِر عَلىٰ ما أَصابَكَ إِنَّ ذٰلِكَ مِن عَزمِ الأُمورِ

. ١٨:٣١ وَلا تُصَعِّر خَدَّكَ لِلنّاسِ وَلا تَمشِ فِى الأَرضِ مَرَحًا إِنَّ اللَّهَ لا يُحِبُّ كُلَّ مُختالٍ فَخورٍ

. ١٩:٣١ وَاقصِد فى مَشيِكَ وَاغضُض مِن صَوتِكَ إِنَّ أَنكَرَ الأَصوٰتِ لَصَوتُ الحَميرِ

. ٢٠:٣١ أَلَم تَرَوا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ وَأَسبَغَ عَلَيكُم نِعَمَهُ ظٰهِرَةً وَباطِنَةً وَمِنَ النّاسِ مَن يُجٰدِلُ فِى اللَّهِ بِغَيرِ عِلمٍ وَلا هُدًى وَلا كِتٰبٍ مُنيرٍ

. ٢١:٣١ وَإِذا قيلَ لَهُمُ اتَّبِعوا ما أَنزَلَ اللَّهُ قالوا بَل نَتَّبِعُ ما وَجَدنا عَلَيهِ ءاباءَنا أَوَلَو كانَ الشَّيطٰنُ يَدعوهُم إِلىٰ عَذابِ السَّعيرِ

. ٢٢:٣١ وَمَن يُسلِم وَجهَهُ إِلَى اللَّهِ وَهُوَ مُحسِنٌ فَقَدِ استَمسَكَ بِالعُروَةِ الوُثقىٰ وَإِلَى اللَّهِ عٰقِبَةُ الأُمورِ

. ٢٣:٣١ وَمَن كَفَرَ فَلا يَحزُنكَ كُفرُهُ إِلَينا مَرجِعُهُم فَنُنَبِّئُهُم بِما عَمِلوا إِنَّ اللَّهَ عَليمٌ بِذاتِ الصُّدورِ

. ٢٤:٣١ نُمَتِّعُهُم قَليلًا ثُمَّ نَضطَرُّهُم إِلىٰ عَذابٍ غَليظٍ

. ٢٥:٣١ وَلَئِن سَأَلتَهُم مَن خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ لَيَقولُنَّ اللَّهُ قُلِ الحَمدُ لِلَّهِ بَل أَكثَرُهُم لا يَعلَمونَ

. ٢٦:٣١ لِلَّهِ ما فِى السَّمٰوٰتِ وَالأَرضِ إِنَّ اللَّهَ هُوَ الغَنِىُّ الحَميدُ

. ٢٧:٣١ وَلَو أَنَّما فِى الأَرضِ مِن شَجَرَةٍ أَقلٰمٌ وَالبَحرُ يَمُدُّهُ مِن بَعدِهِ سَبعَةُ أَبحُرٍ ما نَفِدَت كَلِمٰتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزيزٌ حَكيمٌ

. ٢٨:٣١ ما خَلقُكُم وَلا بَعثُكُم إِلّا كَنَفسٍ وٰحِدَةٍ إِنَّ اللَّهَ سَميعٌ بَصيرٌ

. ٢٩:٣١ أَلَم تَرَ أَنَّ اللَّهَ يولِجُ الَّيلَ فِى النَّهارِ وَيولِجُ النَّهارَ فِى الَّيلِ وَسَخَّرَ الشَّمسَ وَالقَمَرَ كُلٌّ يَجرى إِلىٰ أَجَلٍ مُسَمًّى وَأَنَّ اللَّهَ بِما تَعمَلونَ خَبيرٌ

. ٣٠:٣١ ذٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الحَقُّ وَأَنَّ ما يَدعونَ مِن دونِهِ البٰطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ العَلِىُّ الكَبيرُ

. ٣١:٣١ أَلَم تَرَ أَنَّ الفُلكَ تَجرى فِى البَحرِ بِنِعمَتِ اللَّهِ لِيُرِيَكُم مِن ءايٰتِهِ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِكُلِّ صَبّارٍ شَكورٍ

. ٣٢:٣١ وَإِذا غَشِيَهُم مَوجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخلِصينَ لَهُ الدّينَ فَلَمّا نَجّىٰهُم إِلَى البَرِّ فَمِنهُم مُقتَصِدٌ وَما يَجحَدُ بِـٔايٰتِنا إِلّا كُلُّ خَتّارٍ كَفورٍ

. ٣٣:٣١ يٰأَيُّهَا النّاسُ اتَّقوا رَبَّكُم وَاخشَوا يَومًا لا يَجزى والِدٌ عَن وَلَدِهِ وَلا مَولودٌ هُوَ جازٍ عَن والِدِهِ شَيـًٔا إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ فَلا تَغُرَّنَّكُمُ الحَيوٰةُ الدُّنيا وَلا يَغُرَّنَّكُم بِاللَّهِ الغَرورُ

. ٣٤:٣١ إِنَّ اللَّهَ عِندَهُ عِلمُ السّاعَةِ وَيُنَزِّلُ الغَيثَ وَيَعلَمُ ما فِى الأَرحامِ وَما تَدرى نَفسٌ ماذا تَكسِبُ غَدًا وَما تَدرى نَفسٌ بِأَىِّ أَرضٍ تَموتُ إِنَّ اللَّهَ عَليمٌ خَبيرٌ

Luqmaan

31:1. A. L. M.*

*31:1 See Appendix 1 for the important role of these initials.

31:2. These (letters) constitute proofs of this book of wisdom.

31:3. A beacon and a mercy for the righteous.

31:4. Who observe the Contact Prayers (Salat), give the obligatory charity (Zakat), and as regards the Hereafter, they are absolutely certain.

31:5. They are following the guidance from their Lord, and they are the winners.

31:6. Among the people, there are those who uphold baseless Hadith, and thus divert others from the path of God without knowledge, and take it in vain. These have incurred a shameful retribution.

31:7. And when our revelations are recited to the one of them, he turns away in arrogance as if he never heard them, as if his ears are deaf. Promise him a painful retribution.

31:8. Surely, those who believe and lead a righteous life have deserved the gardens of bliss.

31:9. Eternally they abide therein. This is the truthful promise of God. He is the Almighty, Most Wise.

31:10. He created the heavens without pillars that you can see. He established on earth stabilizers (mountains) lest it tumbles with you, and He spread on it all kinds of creatures. We send down from the sky water to grow all kinds of beautiful plants.

31:11. Such is the creation of God; show me what the idols you set up beside Him have created. Indeed, the transgressors are far astray.

31:12. We have endowed Luqmãn with wisdom: "You shall be appreciative of God." Whoever is appreciative is appreciative for his own good. As for those who turn unappreciative, God is in no need, Praiseworthy.

31:13. Recall that Luqmãn said to his son, as he enlightened him, "O my son, do not set up any idols beside God; idolatry is a gross injustice."*

*31:13 How will you feel if you take care of a child, give him the best education, and prepare him for life, only to see him thank someone else? Thus is idolatry; injustice.

31:14. We enjoined the human being to honor his parents. His mother bore him, and the load got heavier and heavier. It takes two years (of intensive care) until weaning. You shall be appreciative of Me, and of your parents. To Me is the ultimate destiny.

31:15. If they try to force you to set up any idols beside Me, do not obey them. But continue to treat them amicably in this world. You shall follow only the path of those who have submitted to Me. Ultimately, you all return to Me, then I will inform you of everything you have done.

31:16. "O my son, know that even something as tiny as a mustard seed, deep inside a rock, be it in the heavens or the earth, God will bring it. God is Sublime, Cognizant.

31:17. "O my son, you shall observe the Contact Prayers (Salat). You shall advocate righteousness and forbid evil, and remain steadfast in the face of adversity. These are the most honorable traits.

31:18. "You shall not treat the people with arrogance, nor shall you roam the earth proudly. God does not like the arrogant showoffs.

31:19. "Walk humbly and lower your voice - the ugliest voice is the donkey's voice."

31:20. Do you not see that God has committed in your service everything in the heavens and the earth, and has showered you with His blessings - obvious and hidden? Yet, some people argue about God without knowledge, without guidance, and without the enlightening scripture.

31:21. When they are told, "Follow these revelations of God," they say, "No, we follow only what we found our parents doing." What if the devil is leading them to the agony of Hell?

31:22. Those who submit completely to God, while leading a righteous life, have gotten hold of the strongest bond. For God is in full control of all things.

31:23. As for those who disbelieve, do not be saddened by their disbelief. To us is their ultimate return, then we will inform them of everything they had done. God is fully aware of the innermost thoughts.

31:24. We let them enjoy temporarily, then commit them to severe retribution.

31:25. If you ask them, "Who created the heavens and the earth," they will say, "God." Say, "Praise be to God." Yet, most of them do not know.

31:26. To God belongs everything in the heavens and the earth. God is the Most Rich, Most Praiseworthy.

31:27. If all the trees on earth were made into pens, and the ocean supplied the ink, augmented by seven more oceans, the words of God would not run out. God is Almighty, Most Wise.

31:28. The creation and resurrection of all of you is the same as that of one person. God is Hearer, Seer.

31:29. Do you not realize that God merges the night into the day and merges the day into the night, and that He has committed the sun and the moon in your service, each running in its orbit for a specific life span, and that God is fully Cognizant of everything you do?

31:30. This proves that God is the truth, while any idol they set up beside Him is falsehood, and that God is the Most High, Most Great.

31:31. Do you not see that the ships roam the sea, carrying God's provisions, to show you some of His proofs? Indeed, these should be sufficient proofs for everyone who is steadfast, appreciative.

31:32. When violent waves surround them, they implore God, sincerely devoting their prayers to Him alone. But as soon as He saves them to the shore, some of them revert. None discards our revelations except those who are betrayers, unappreciative.

31:33. O people, you shall reverence your Lord, and fear a day when a father cannot help his own child, nor can a child help his father. Certainly, God's promise is truth. Therefore, do not be distracted by this life; do not be distracted from God by mere illusions.

31:34. With God is the knowledge regarding the Hour (end of the world).* He is the One who sends down the rain, and He knows the contents of the womb. No soul knows what will happen to it tomorrow, and no one knows in which land he or she will die. God is Omniscient, Cognizant.

*31:34 God reveals His knowledge whenever He wills. We learn from this verse that we may be able to predict the rain, and the gender of the fetus. But we can never know the time or place of death. In accordance with 72:27, God has revealed the end of the world through His Messenger of the Covenant. See 15:87, 20:15, and Appendix 25 for the details.

லுக்மான்

31:1. அ. ல. ம.*

*31:1 இந்த துவக்க எழுத்துக்களின் முக்கியமான பணிக்கு, பின் இணைப்பு 1 ஐப் பார்க்கவும்.

31:2. (எழுத்துக்களாகிய) இவை ஞானத்தைக் கொண்ட இப்புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.

31:3. நன்னெறியாளர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கும் ஒரு கருணையுமாகும்.

31:4. அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைபிடிப்பார்கள், கடமையான (ஜகாத்) தர்மத்தைக் கொடுப்பார்கள், மேலும் மறுவுலகைக் குறித்து, அவர்கள் பரிபூரணமான உறுதியோடிருப்பார்கள்.

31:5. அவர்கள் தங்கள் இரட்சகரிடமிருந்து வந்த வழி காட்டலைப் பின்பற்றுகின்றனர், மேலும் அவர்களே வெற்றியாளர்கள்.

31:6. மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ஹதீஸ்களை ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.

31:7. மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப்பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒரு போதும் கேளாததைப் போலவும், அவனது காதுகள் செவிடானதைப் போலவும் ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலி நிறைந்ததொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.

31:8. நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர் ஆனந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதி பெற்று விட்டனர்.

31:9. நிரந்தரமாக அங்கு அவர்கள் தங்கியிருப்பார்கள். இது கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதியாகும். அவர் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

31:10. நீங்கள் காணக்கூடிய தூண்கள் இன்றி வானங்களை அவர் படைத்தார். உங்களோடு சேர்ந்து அது உருண்டு விடாதிருக்கும் பொருட்டு பூமியின் மீது நிலைப்படுத்திகளை (மலைகள்) அவர் நிர்மாணித்தார், மேலும் அனைத்து வகைப் பிராணிகளையும் அதன் மீது அவர் பரப்பினார். அனைத்து வகையான அழகிய தாவரங்களையும் வளர்ப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.

31:11. கடவுள்-ன் படைப்பு இத்தகையதே; அவருடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் போலித் தெய்வங்கள் எதனைப் படைத்திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டுங்கள். உண்மையில், வரம்புமீறுபவர்கள் மிக நெடிய வழிகேட்டில் இருக்கின்றனர்.

31:12. லுக்மானுக்கு நாம் ஞானத்தைக் கொடையளித்தோம்: "நீ கடவுள்-க்கு நன்றியுடையவனாக இருக்க வேண்டும்." எவரொருவர் நன்றியுடையவராக இருக்கிறாரோ, அவர் தன் சொந்த நலனுக்காகவே நன்றியுடையவராக இருக்கின்றார். நன்றி கெட்டவர்களாக மாறிவிட்டவர்களைப் பொறுத்த வரை, கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.

31:13. லுக்மான் தன்னுடைய மகனிடம் அவருக்கு உபதேசம் செய்தவராக, அவர் கூறியதை நினைவு கூர்வீராக, "என் மகனே, கடவுள்-வுடன் போலித் தெய்வங்கள் எதனையும் அமைத்துக் கொள்ளாதே; போலித் தெய்வ வழிபாடு மிகப்பெரியதோர் அநீதியாகும்.*"

*31:13 நீங்கள் ஒரு குழந்தையின் மீது அக்கறை எடுத்து, அவனுக்கு மிகச் சிறந்த கல்வியைக் கொடுத்து, மேலும் வாழ்க்கைக்காக அவனைத் தயார் செய்வது, பிறகு வேறு எவரோ ஒருவருக்கு அவன் நன்றி தெரிவிப்பதை நீங்கள் காணத்தான் என்றால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? போலித்தெய்வ வழிபாடு இவ்விதமானதேயாகும்; அநீதியானது.

31:14. அவனுடைய பெற்றோரைக் கண்ணியப்படுத்துமாறு மனிதப்படைப்பை நாம் ஏவினோம். அவனுடைய தாய் அவனைச் சுமந்தாள், மேலும் அந்தச் சுமை கனத்துடன் மேலும் கனம் கூடிக்கொண்டே சென்றது. பால் குடி மறக்கச் செய்யப்படும் வரை அதற்கு இரண்டு வருடங்கள் (தீவிர கவனம்) எடுத்துக் கொள்ள வேண்டியது இருக்கின்றது. நீங்கள் எனக்கும் உங்களுடைய பெற்றோர்களுக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். இறுதி விதி என் வசமே உள்ளது.

31:15. என்னுடன் ஏதேனும் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்ள அவர்கள் உம்மை நிர்பந்திக்க முயற்சித்தால், அவர்களுக்குக் கீழ்ப்படியாதீர். ஆனால் தொடர்ந்து அவர்களை இவ்வுலகில் நல்லமுறையில் நடத்துவீராக. என்னைச் சரணடைந்தோருடைய பாதையை மட்டும் நீர் பின்பற்ற வேண்டும். இறுதியாக, நீங்கள் அனைவரும் என்னிடம் திரும்புவீர்கள், பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

31:16. "என் மகனே, ஒரு பாறையின் ஆழத்தினுள் உள்ள, ஒரு கடுகின் வித்தளவு மிகச் சிறியதான ஒன்றாக இருந்தாலும், அது வானங்களிலோ அல்லது பூமியிலோ இருந்த போதிலும், கடவுள் அதனைக் கொண்டு வருவார் என்பதை அறிந்து கொள். கடவுள் கம்பீரமானவர், நன்கறிந்தவர்.

31:17. "என் மகனே, (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளை நீ கடைப்பிடிக்க வேண்டும். நன்மைகளை ஆதரிப்பதுடன் தீமைகளை நீ தடுக்கவும் வேண்டும், மேலும் இன்னல்களை எதிர்கொள்ளும் போது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருக்க வேண்டும். இவை மிகவும் கண்ணியமான பண்புகளாகும்.

31:18. "மக்களை நீ ஆணவத்துடன் நடத்த வேண்டாம், அன்றி பெருமையாக பூமியில் சுற்றித் திரியவும் வேண்டாம். காட்டிக் கொள்ளும் ஆணவக்காரர்களைக் கடவுள் நேசிப்பதில்லை.

31:19. "எளிமையாக நடைபோடு, மேலும் உனது குரலைத் தாழ்த்திக் கொள்-குரல்களிலேயே அருவருப்பானது கழுதையின் குரலே ஆகும்."

31:20. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணி செய்வதற்காகக் கடவுள் ஆக்கியிருக்கின்றார், மேலும் தன் ஆசிகளை-கண் கூடானவையும், மறைந்திருப்பவையும்-உங்கள் மீது பொழிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இருப்பினும், சில மனிதர்கள் அறிவில்லாமலும், வழிகாட்டல் இல்லாமலும், மேலும் ஒளியூட்டும் வேதமில்லாமலும் கடவுள்-ஐப் பற்றித் தர்க்கிக்கின்றனர்.

31:21. "கடவுள்-ன் இந்த வெளிப்பாடுகளைப் பின்பற்றுங்கள்," என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் கூறுகின்றனர், "அல்ல, எங்கள் பெற்றோர்கள் எதனைச் செய்ய நாங்கள் கண்டோமோ அதனை மட்டுமே நாங்கள் பின்பற்றுகின்றோம்." சாத்தான் அவர்களை நரக வேதனையின்பால் வழிநடத்தினாலுமா?

31:22. கடவுள்-க்கு முழுமையாகச் சரணடைந்து, அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், மிகவும் உறுதியான பிடிமானத்தைப் பற்றிக் கொண்டு விட் டனர். ஏனெனில் கடவுள் அனைத்து விஷயங்களையும் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்.

31:23. நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய நம்பமறுத்தலால் கவலைக்குள்ளாகாதீர். அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம்மிடமே உள்ளது, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அவர்களுக்கு அறிவிப்போம். உள்ளார்ந்த எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.

31:24. நாம் அவர்களைத் தற்காலிகமாகச் சுகமனுபவிக்க விடுகின்றோம், பின்னர் அவர்களைக் கடுமையான தண்டனைக்கு ஆட்படுத்துவோம்.

31:25. "வானங்களையும் பூமியையும் படைத்தவர் யார்," என அவர்களிடம் நீர் கேட்டால், அவர்கள் கூறுவார்கள், "கடவுள்." கூறுவீராக, "புகழ்ச்சி கடவுள்-க் குரியது." இருப்பினும், அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

31:26. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. கடவுள்தான் மிக்க செல்வந்தர், மிக்க புகழுக்குத் தகுதியானவர்.

31:27. பூமியின் மீதுள்ள மரங்கள் அனைத்தும் எழுது கோல்களாக ஆக்கப்பட்டு, அந்தப் பெருங்கடல் மையை வழங்க, இன்னும் ஏழு பெருங்கடல்கள் அதிகரிக்கப் பட்டாலும், கடவுள்-ன் வார்த்தைகள் தீர்ந்திடாது. கடவுள் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

31:28. உங்கள் அனைவருடைய படைப்பும் உயிர்த்தெழுப்புதலும் ஒரு நபருடையதைப் போன்றதேயாகும். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.

31:29. கடவுள் இரவைப் பகலினுள் ஒன்று சேர்க்கின்றார் மேலும் பகலை இரவினுள் ஒன்று சேர்க்கின்றார் என்பதையும், மேலும் சூரியனையும் சந்திரனையும் உங்களுடைய பணிக்கென அவர் ஆக்கியிருக்கின்றார் என்பதையும், ஒவ்வொன்றும் அதன் சுற்றுப் பாதையில் குறிப்பிடப்பட்டதொரு வாழ்க்கைத் தவணைக்கென ஓடிக்கொண்டிருக்கின்றன, மேலும் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா?

31:30. கடவுள்தான் சத்தியம், அதே சமயம் அவருடன் அவர்கள் அமைத்துக் கொள்கின்ற எந்த போலித் தெய்வமும் பொய்மையேயாகும் என்பதையும், மேலும் கடவுள் மிகவும் உயர்ந்தவர், மகாப் பெரியவர் என்பதையும் இது நிரூபிக்கின்றது.

31:31. அவருடைய சான்றுகளில் சிலவற்றை உங்களுக்குக் காட்டுவதற்காக, கடவுள்-ன் வாழ்வாதாரங்களைச் சுமந்துகொண்டு, கப்பல்கள் கடலைச் சுற்றுகின்றன என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உண்மையில், உறுதிப்பாடும், நன்றியுமுடைய ஒவ்வொருவருக்கும் இவை போதிய சான்றுகளாக இருக்க வேண்டும்.

31:32. உக்கிரமான அலைகள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் பொழுது, தங்களுடைய பிரார்த்தனைகளைக் கலப்பின்றி அவருக்கு மட்டுமே அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் கடவுள்-ஐ இறைஞ்சுகின்றனர். ஆனால் அவர்களைக் காப்பாற்றி அவர் கரை சேர்த்தவுடன், அவர்களில் சிலர் திரும்பிச் சென்று விடுகின்றனர். நம்பிக்கைத் துரோகிகளாகவும், நன்றிகெட்டவர்களாகவும் இருப்பவர்களைத் தவிர, எவரும் நம்முடைய வெளிப்பாடுகளைக் கைவிட்டு விடமாட்டார்கள்.

31:33. மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பக்தியோடிருக்கவும், மேலும் ஒரு தந்தை தன் சொந்தப் பிள்ளைக்கு உதவ முடியாத, அன்றி ஒரு பிள்ளை தன் தந்தைக்கு உதவ முடியாத ஒரு நாளுக்கு அஞ்சிக் கொள்ளவும் வேண்டும். நிச்சயமாக, கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமானதாகும். எனவே, இந்த வாழ்க்கையினால் கவனம் திருப்பப்பட்டவராகி விடாதீர்; வெற்று மாயைகளால் கடவுள்-யிடமிருந்து கவனம் திருப்பப்பட்டவராகி விடாதீர்.

31:34. வேளையை (உலக முடிவு)* பற்றிய அறிவு கடவுள்-யிடமே உள்ளது. அவர்தான் மழையை இறக்கி அனுப்புகின்றவர், மேலும் கர்ப்பத்தில் உள்ளவற்றையும் அவர் அறிந்திருக்கின்றார். எந்த ஆத்மாவும் நாளை அதற்கு என்ன நிகழும் என்பதை அறியாது, மேலும் எந்த நிலத்தில் அவனோ அல்லது அவளோ மரணிப்பார் என்பதையும் எவர் ஒருவரும் அறியமாட்டார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.

*31:34 கடவுள் தன்னுடைய அறிவை அவர் நாடும்போதெல்லாம் வெளிப்படுத்துகின்றார். இவ்வசனத்திலிருந்து மழையை யும், கருவின் பால் வகையையும், முன்னரே கணிக்க நம்மால் இயலலாம் என்பதை நாம் கற்றுக் கொள்கின்றோம். ஆனால் நாம் மரணிக்கும் நேரத்தையோ அல்லது இடத்தையோ ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது. (72:27)க்கேற்ப, தன்னுடைய உடன்படிக்கைத் தூதரின் மூலமாக உலக முடிவைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார். விபரங்களுக்கு, (15:87, 20:15) மற்றும் பின் இணைப்பு 25ஐக் காண்க.