Find
Chapter 30: Al-Room
30:0-60
60 verses Revelation order 84
سورة الروم

. ١:٣٠ الم

. ٢:٣٠ غُلِبَتِ الرّومُ

. ٣:٣٠ فى أَدنَى الأَرضِ وَهُم مِن بَعدِ غَلَبِهِم سَيَغلِبونَ

. ٤:٣٠ فى بِضعِ سِنينَ لِلَّهِ الأَمرُ مِن قَبلُ وَمِن بَعدُ وَيَومَئِذٍ يَفرَحُ المُؤمِنونَ

. ٥:٣٠ بِنَصرِ اللَّهِ يَنصُرُ مَن يَشاءُ وَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ٦:٣٠ وَعدَ اللَّهِ لا يُخلِفُ اللَّهُ وَعدَهُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ

. ٧:٣٠ يَعلَمونَ ظٰهِرًا مِنَ الحَيوٰةِ الدُّنيا وَهُم عَنِ الـٔاخِرَةِ هُم غٰفِلونَ

. ٨:٣٠ أَوَلَم يَتَفَكَّروا فى أَنفُسِهِم ما خَلَقَ اللَّهُ السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما إِلّا بِالحَقِّ وَأَجَلٍ مُسَمًّى وَإِنَّ كَثيرًا مِنَ النّاسِ بِلِقائِ رَبِّهِم لَكٰفِرونَ

. ٩:٣٠ أَوَلَم يَسيروا فِى الأَرضِ فَيَنظُروا كَيفَ كانَ عٰقِبَةُ الَّذينَ مِن قَبلِهِم كانوا أَشَدَّ مِنهُم قُوَّةً وَأَثارُوا الأَرضَ وَعَمَروها أَكثَرَ مِمّا عَمَروها وَجاءَتهُم رُسُلُهُم بِالبَيِّنٰتِ فَما كانَ اللَّهُ لِيَظلِمَهُم وَلٰكِن كانوا أَنفُسَهُم يَظلِمونَ

. ١٠:٣٠ ثُمَّ كانَ عٰقِبَةَ الَّذينَ أَسٰـُٔوا السّوأىٰ أَن كَذَّبوا بِـٔايٰتِ اللَّهِ وَكانوا بِها يَستَهزِءونَ

. ١١:٣٠ اللَّهُ يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ ثُمَّ إِلَيهِ تُرجَعونَ

. ١٢:٣٠ وَيَومَ تَقومُ السّاعَةُ يُبلِسُ المُجرِمونَ

. ١٣:٣٠ وَلَم يَكُن لَهُم مِن شُرَكائِهِم شُفَعٰؤُا۟ وَكانوا بِشُرَكائِهِم كٰفِرينَ

. ١٤:٣٠ وَيَومَ تَقومُ السّاعَةُ يَومَئِذٍ يَتَفَرَّقونَ

. ١٥:٣٠ فَأَمَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُم فى رَوضَةٍ يُحبَرونَ

. ١٦:٣٠ وَأَمَّا الَّذينَ كَفَروا وَكَذَّبوا بِـٔايٰتِنا وَلِقائِ الـٔاخِرَةِ فَأُولٰئِكَ فِى العَذابِ مُحضَرونَ

. ١٧:٣٠ فَسُبحٰنَ اللَّهِ حينَ تُمسونَ وَحينَ تُصبِحونَ

. ١٨:٣٠ وَلَهُ الحَمدُ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَعَشِيًّا وَحينَ تُظهِرونَ

. ١٩:٣٠ يُخرِجُ الحَىَّ مِنَ المَيِّتِ وَيُخرِجُ المَيِّتَ مِنَ الحَىِّ وَيُحىِ الأَرضَ بَعدَ مَوتِها وَكَذٰلِكَ تُخرَجونَ

. ٢٠:٣٠ وَمِن ءايٰتِهِ أَن خَلَقَكُم مِن تُرابٍ ثُمَّ إِذا أَنتُم بَشَرٌ تَنتَشِرونَ

. ٢١:٣٠ وَمِن ءايٰتِهِ أَن خَلَقَ لَكُم مِن أَنفُسِكُم أَزوٰجًا لِتَسكُنوا إِلَيها وَجَعَلَ بَينَكُم مَوَدَّةً وَرَحمَةً إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَتَفَكَّرونَ

. ٢٢:٣٠ وَمِن ءايٰتِهِ خَلقُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَاختِلٰفُ أَلسِنَتِكُم وَأَلوٰنِكُم إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِلعٰلِمينَ

. ٢٣:٣٠ وَمِن ءايٰتِهِ مَنامُكُم بِالَّيلِ وَالنَّهارِ وَابتِغاؤُكُم مِن فَضلِهِ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَسمَعونَ

. ٢٤:٣٠ وَمِن ءايٰتِهِ يُريكُمُ البَرقَ خَوفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّماءِ ماءً فَيُحى ۦ بِهِ الأَرضَ بَعدَ مَوتِها إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يَعقِلونَ

. ٢٥:٣٠ وَمِن ءايٰتِهِ أَن تَقومَ السَّماءُ وَالأَرضُ بِأَمرِهِ ثُمَّ إِذا دَعاكُم دَعوَةً مِنَ الأَرضِ إِذا أَنتُم تَخرُجونَ

. ٢٦:٣٠ وَلَهُ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ كُلٌّ لَهُ قٰنِتونَ

. ٢٧:٣٠ وَهُوَ الَّذى يَبدَؤُا۟ الخَلقَ ثُمَّ يُعيدُهُ وَهُوَ أَهوَنُ عَلَيهِ وَلَهُ المَثَلُ الأَعلىٰ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ وَهُوَ العَزيزُ الحَكيمُ

. ٢٨:٣٠ ضَرَبَ لَكُم مَثَلًا مِن أَنفُسِكُم هَل لَكُم مِن ما مَلَكَت أَيمٰنُكُم مِن شُرَكاءَ فى ما رَزَقنٰكُم فَأَنتُم فيهِ سَواءٌ تَخافونَهُم كَخيفَتِكُم أَنفُسَكُم كَذٰلِكَ نُفَصِّلُ الـٔايٰتِ لِقَومٍ يَعقِلونَ

. ٢٩:٣٠ بَلِ اتَّبَعَ الَّذينَ ظَلَموا أَهواءَهُم بِغَيرِ عِلمٍ فَمَن يَهدى مَن أَضَلَّ اللَّهُ وَما لَهُم مِن نٰصِرينَ

. ٣٠:٣٠ فَأَقِم وَجهَكَ لِلدّينِ حَنيفًا فِطرَتَ اللَّهِ الَّتى فَطَرَ النّاسَ عَلَيها لا تَبديلَ لِخَلقِ اللَّهِ ذٰلِكَ الدّينُ القَيِّمُ وَلٰكِنَّ أَكثَرَ النّاسِ لا يَعلَمونَ

. ٣١:٣٠ مُنيبينَ إِلَيهِ وَاتَّقوهُ وَأَقيمُوا الصَّلوٰةَ وَلا تَكونوا مِنَ المُشرِكينَ

. ٣٢:٣٠ مِنَ الَّذينَ فَرَّقوا دينَهُم وَكانوا شِيَعًا كُلُّ حِزبٍ بِما لَدَيهِم فَرِحونَ

. ٣٣:٣٠ وَإِذا مَسَّ النّاسَ ضُرٌّ دَعَوا رَبَّهُم مُنيبينَ إِلَيهِ ثُمَّ إِذا أَذاقَهُم مِنهُ رَحمَةً إِذا فَريقٌ مِنهُم بِرَبِّهِم يُشرِكونَ

. ٣٤:٣٠ لِيَكفُروا بِما ءاتَينٰهُم فَتَمَتَّعوا فَسَوفَ تَعلَمونَ

. ٣٥:٣٠ أَم أَنزَلنا عَلَيهِم سُلطٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِما كانوا بِهِ يُشرِكونَ

. ٣٦:٣٠ وَإِذا أَذَقنَا النّاسَ رَحمَةً فَرِحوا بِها وَإِن تُصِبهُم سَيِّئَةٌ بِما قَدَّمَت أَيديهِم إِذا هُم يَقنَطونَ

. ٣٧:٣٠ أَوَلَم يَرَوا أَنَّ اللَّهَ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ وَيَقدِرُ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِقَومٍ يُؤمِنونَ

. ٣٨:٣٠ فَـٔاتِ ذَا القُربىٰ حَقَّهُ وَالمِسكينَ وَابنَ السَّبيلِ ذٰلِكَ خَيرٌ لِلَّذينَ يُريدونَ وَجهَ اللَّهِ وَأُولٰئِكَ هُمُ المُفلِحونَ

. ٣٩:٣٠ وَما ءاتَيتُم مِن رِبًا لِيَربُوَا۟ فى أَموٰلِ النّاسِ فَلا يَربوا عِندَ اللَّهِ وَما ءاتَيتُم مِن زَكوٰةٍ تُريدونَ وَجهَ اللَّهِ فَأُولٰئِكَ هُمُ المُضعِفونَ

. ٤٠:٣٠ اللَّهُ الَّذى خَلَقَكُم ثُمَّ رَزَقَكُم ثُمَّ يُميتُكُم ثُمَّ يُحييكُم هَل مِن شُرَكائِكُم مَن يَفعَلُ مِن ذٰلِكُم مِن شَىءٍ سُبحٰنَهُ وَتَعٰلىٰ عَمّا يُشرِكونَ

. ٤١:٣٠ ظَهَرَ الفَسادُ فِى البَرِّ وَالبَحرِ بِما كَسَبَت أَيدِى النّاسِ لِيُذيقَهُم بَعضَ الَّذى عَمِلوا لَعَلَّهُم يَرجِعونَ

. ٤٢:٣٠ قُل سيروا فِى الأَرضِ فَانظُروا كَيفَ كانَ عٰقِبَةُ الَّذينَ مِن قَبلُ كانَ أَكثَرُهُم مُشرِكينَ

. ٤٣:٣٠ فَأَقِم وَجهَكَ لِلدّينِ القَيِّمِ مِن قَبلِ أَن يَأتِىَ يَومٌ لا مَرَدَّ لَهُ مِنَ اللَّهِ يَومَئِذٍ يَصَّدَّعونَ

. ٤٤:٣٠ مَن كَفَرَ فَعَلَيهِ كُفرُهُ وَمَن عَمِلَ صٰلِحًا فَلِأَنفُسِهِم يَمهَدونَ

. ٤٥:٣٠ لِيَجزِىَ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِن فَضلِهِ إِنَّهُ لا يُحِبُّ الكٰفِرينَ

. ٤٦:٣٠ وَمِن ءايٰتِهِ أَن يُرسِلَ الرِّياحَ مُبَشِّرٰتٍ وَلِيُذيقَكُم مِن رَحمَتِهِ وَلِتَجرِىَ الفُلكُ بِأَمرِهِ وَلِتَبتَغوا مِن فَضلِهِ وَلَعَلَّكُم تَشكُرونَ

. ٤٧:٣٠ وَلَقَد أَرسَلنا مِن قَبلِكَ رُسُلًا إِلىٰ قَومِهِم فَجاءوهُم بِالبَيِّنٰتِ فَانتَقَمنا مِنَ الَّذينَ أَجرَموا وَكانَ حَقًّا عَلَينا نَصرُ المُؤمِنينَ

. ٤٨:٣٠ اللَّهُ الَّذى يُرسِلُ الرِّيٰحَ فَتُثيرُ سَحابًا فَيَبسُطُهُ فِى السَّماءِ كَيفَ يَشاءُ وَيَجعَلُهُ كِسَفًا فَتَرَى الوَدقَ يَخرُجُ مِن خِلٰلِهِ فَإِذا أَصابَ بِهِ مَن يَشاءُ مِن عِبادِهِ إِذا هُم يَستَبشِرونَ

. ٤٩:٣٠ وَإِن كانوا مِن قَبلِ أَن يُنَزَّلَ عَلَيهِم مِن قَبلِهِ لَمُبلِسينَ

. ٥٠:٣٠ فَانظُر إِلىٰ ءاثٰرِ رَحمَتِ اللَّهِ كَيفَ يُحىِ الأَرضَ بَعدَ مَوتِها إِنَّ ذٰلِكَ لَمُحىِ المَوتىٰ وَهُوَ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ

. ٥١:٣٠ وَلَئِن أَرسَلنا ريحًا فَرَأَوهُ مُصفَرًّا لَظَلّوا مِن بَعدِهِ يَكفُرونَ

. ٥٢:٣٠ فَإِنَّكَ لا تُسمِعُ المَوتىٰ وَلا تُسمِعُ الصُّمَّ الدُّعاءَ إِذا وَلَّوا مُدبِرينَ

. ٥٣:٣٠ وَما أَنتَ بِهٰدِ العُمىِ عَن ضَلٰلَتِهِم إِن تُسمِعُ إِلّا مَن يُؤمِنُ بِـٔايٰتِنا فَهُم مُسلِمونَ

. ٥٤:٣٠ اللَّهُ الَّذى خَلَقَكُم مِن ضَعفٍ ثُمَّ جَعَلَ مِن بَعدِ ضَعفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعدِ قُوَّةٍ ضَعفًا وَشَيبَةً يَخلُقُ ما يَشاءُ وَهُوَ العَليمُ القَديرُ

. ٥٥:٣٠ وَيَومَ تَقومُ السّاعَةُ يُقسِمُ المُجرِمونَ ما لَبِثوا غَيرَ ساعَةٍ كَذٰلِكَ كانوا يُؤفَكونَ

. ٥٦:٣٠ وَقالَ الَّذينَ أوتُوا العِلمَ وَالإيمٰنَ لَقَد لَبِثتُم فى كِتٰبِ اللَّهِ إِلىٰ يَومِ البَعثِ فَهٰذا يَومُ البَعثِ وَلٰكِنَّكُم كُنتُم لا تَعلَمونَ

. ٥٧:٣٠ فَيَومَئِذٍ لا يَنفَعُ الَّذينَ ظَلَموا مَعذِرَتُهُم وَلا هُم يُستَعتَبونَ

. ٥٨:٣٠ وَلَقَد ضَرَبنا لِلنّاسِ فى هٰذَا القُرءانِ مِن كُلِّ مَثَلٍ وَلَئِن جِئتَهُم بِـٔايَةٍ لَيَقولَنَّ الَّذينَ كَفَروا إِن أَنتُم إِلّا مُبطِلونَ

. ٥٩:٣٠ كَذٰلِكَ يَطبَعُ اللَّهُ عَلىٰ قُلوبِ الَّذينَ لا يَعلَمونَ

. ٦٠:٣٠ فَاصبِر إِنَّ وَعدَ اللَّهِ حَقٌّ وَلا يَستَخِفَّنَّكَ الَّذينَ لا يوقِنونَ

The Romans

30:1. A. L. M.*

*30:1 See Appendix 1 for the detailed explanation of these previously mysterious initials.

30:2. Certainly, the Romans will be defeated.

30:3. In the nearest land. After their defeat, they will rise again and win.

30:4. Within several years. Such is God's decision, both in the first prophecy, and the second. On that day, the believers shall rejoice

30:5. in God's victory. He grants victory to whomever He wills. He is the Almighty, Most Merciful.

30:6. Such is God's promise - and God never breaks His promise - but most people do not know.

30:7. They care only about things of this world that are visible to them, while being totally oblivious to the Hereafter.

30:8. Why do they not reflect on themselves? God did not create the heavens and the earth, and everything between them, except for a specific purpose, and for a specific life span. However, most people, with regard to meeting their Lord, are disbelievers.

30:9. Have they not roamed the earth and noted the consequences for those who preceded them? They used to be more powerful, more prosperous, and more productive on earth. Their messengers went to them with clear signs. Consequently, God was not the One who wronged them, they are the ones who wronged their own souls.

30:10. The consequences for those who committed evil had to be evil. That is because they rejected God's revelations, and ridiculed them.

30:11. God is the One who initiates the creation and repeats it. Ultimately, you will be returned to Him.

30:12. On the Day when the Hour comes to pass, the guilty will be shocked.

30:13. Their idols will have no power to intercede on their behalf; on the contrary, they will disown their idols.

30:14. On the day when the Hour comes to pass, they will part company.

30:15. As for those who believe and lead a righteous life, they will be in Paradise, rejoicing.

30:16. As for those who disbelieve, and reject our revelations and the meeting of the Hereafter, they will last in the retribution forever.

30:17. Therefore, you shall glorify God when you retire at night, and when you rise in the morning.

30:18. All praise is due to Him in the heavens and the earth, throughout the evening, as well as in the middle of your day.

30:19. He produces the live from the dead, and produces the dead from the live, and He revives the land after it had died; you are similarly resurrected.

30:20. Among His proofs is that He created you from dust, then you became reproducing humans.

30:21. Among His proofs is that He created for you spouses from among yourselves, in order to have tranquility and contentment with each other, and He placed in your hearts love and care towards your spouses. In this, there are sufficient proofs for people who think.

30:22. Among His proofs are the creation of the heavens and the earth, and the variations in your languages and your colors. In these, there are signs for the knowledgeable.

30:23. Among His proofs is your sleeping during the night or the day, and your working in pursuit of His provisions. In this, there are sufficient proofs for people who can hear.

30:24. Among His proofs is that He shows you the lightning as a source of fear, as well as hope, then He sends down from the sky water to revive a land that has been dead. In these, there are sufficient proofs for people who understand.

30:25. Among His proofs is that the heaven and the earth are standing at His disposal. Finally, when He calls you out of the earth, one call, you will immediately come out.

30:26. To Him belongs everyone in the heavens and the earth; all are subservient to Him.

30:27. And He is the One who initiates the creation, then repeats it; this is even easier for Him. To Him belongs the most sublime similitude, in the heavens and the earth, and He is the Almighty, Most Wise.

30:28. He cites for you herein an example from among yourselves: Do you ever elevate your servants or subordinates to the level where they rival you, and to the point that you pay them as much allegiance as is being paid to you? We thus explain the revelations for people who understand.

30:29. Indeed, the transgressors have followed their own opinions, without knowledge. Who then can guide those who have been sent astray by God? No one can ever help them.

30:30. Therefore, you shall devote yourself to the religion of strict monotheism. Such is the natural instinct placed into the people by God. Such creation of God will never change. This is the perfect religion, but most people do not know.

*30:30 Recognizing God ALONE as our Lord and Master is a natural instinct. We are born into this world with such an instinct. See 7:172-173 and Appendix 7.

30:31. You shall submit to Him, reverence Him, observe the Contact Prayers (Salat), and - whatever you do - do not ever fall into idol worship.

30:32. (Do not fall in idol worship,) like those who divide their religion into sects; each party rejoicing with what they have.

30:33. When adversity afflicts the people, they turn to their Lord, totally devoting themselves to Him. But then, as soon as He showers them with mercy, some of them revert to idol worship.*

*30:33 A common example is the classified advertisements we note in the newspapers, placed by people thanking St. Jude for healing them. Before undergoing surgery, they sincerely implore God to heal them. But as soon as the surgery succeeds, they thank St. Jude!!!

30:34. Let them be unappreciative of what we have given them. Enjoy temporarily; you will surely find out.

30:35. Have we given them authorization that justifies their idolatry?

30:36. When we bestow mercy upon the people, they rejoice therein. But when adversity befalls them, as a consequence of their own works, they become despondent.

30:37. Do they not realize that God increases the provision for whomever He wills, or reduces it? These should be lessons for people who believe.

30:38. Therefore, you shall give the relatives their rightful share (of charity), as well as the poor, and the traveling alien. This is better for those who sincerely seek God's pleasure; they are the winners.

30:39. The usury that is practiced to increase some people's wealth, does not gain anything at God. But if you give to charity, seeking God's pleasure, these are the ones who receive their reward manifold.

30:40. God is the One who created you. He is the One who provides for you. He is the One who puts you to death. He is the One who resurrects you. Can any of your idols do any of these things? Be He glorified. He is much too exalted to have any partners.

30:41. Disasters have spread throughout the land and sea, because of what the people have committed. He thus lets them taste the consequences of some of their works, that they may return (to the right works).

30:42. Say, "Roam the earth and note the consequences for those before you." Most of them were idol worshipers.

30:43. Therefore, you shall devote yourself completely to this perfect religion, before a day comes which is made inevitable by God. On that day, they will be shocked.

30:44. Whoever disbelieves, disbelieves to the detriment of his own soul, while those who lead a righteous life, do so to strengthen and develop their own souls.

30:45. For He will generously recompense those who believe and lead a righteous life from His bounties. He does not love the disbelievers.

30:46. Among His proofs is that He sends the winds with good omen, to shower you with His mercy, and to allow the ships to run in the sea in accordance with His rules, and for you to seek His bounties (through commerce), that you may be appreciative.

30:47. We have sent messengers before you to their people, with profound signs. Subsequently, we punished those who transgressed. It is our duty that we grant victory to the believers.

30:48. God is the One who sends the winds, to stir up clouds, to be spread throughout the sky in accordance with His will. He then piles the clouds up, then you see the rain coming down therefrom. When it falls on whomever He chooses from among His servants, they rejoice.

30:49. Before it fell on them, they had resorted to despair.

30:50. You shall appreciate God's continuous mercy, and how He revives the land that has been dead. He will just as certainly resurrect the dead. He is Omnipotent.

30:51. Had we sent upon them instead a yellow sandstorm, they would have continued to disbelieve.

30:52. You cannot make the dead, nor the deaf, hear the call, once they turn away.

30:53. Nor can you guide the blind out of their straying. You can only be heard by those who believe in our revelations, and decide to become submitters.

30:54. God is the One who created you weak, then granted you after the weakness strength, then substituted after the strength weakness and gray hair. He creates whatever He wills. He is the Omniscient, the Omnipotent.

30:55. On the day when the Hour comes to pass, the guilty will swear that they lasted (in this world) only one hour. That is how wrong they were.

30:56. Those who are blessed with knowledge and faith will say, "You have lasted, according to God's decree, until the Day of Resurrection. Now, this is the Day of Resurrection, but you failed to recognize it."

30:57. Therefore, no apology, on that day, will benefit the transgressors, nor will they be excused.

30:58. Thus, we have cited for the people in this Quran all kinds of examples. Yet, no matter what kind of proof you present to the disbelievers, they say, "You are falsifiers."

30:59. God thus seals the hearts of those who do not know.

30:60. Therefore, you shall steadfastly persevere - for God's promise is the truth - and do not be intimidated by those who have not attained certainty.

ரோமானியர்கள்

30:1. அ. ல. ம.*

*30:1 இதற்கு முன்னர் மர்மமாக இருந்து வந்த இந்த துவக்க எழுத்துக்களின் விரிவான விளக்கத்திற்கு பின் இணைப்பு 1 ஐக் காண்க.

30:2. நிச்சயமாக, ரோமர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்.

30:3. அருகில் உள்ள நிலத்தில். அவர்களுடைய தோல்விக்குப் பின்னர், அவர்கள் மீண்டும் எழுச்சி கொண்டு வெற்றி பெறுவார்கள்.

30:4. சில வருடங்களுக்குள். முதல் முன்னறிவிப்பு மற்றும் இரண்டாவது ஆகிய இரண்டிலும், கடவுள்-ன் தீர்மானம் இவ்விதமானதாகும். அந்நாளில், நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்

30:5. கடவுள் தரும் வெற்றியில். தான்நாடிய எவருக்கும் அவர் வெற்றியை வழங்குகின்றார். அவர் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

30:6. கடவுள்-ன் வாக்குறுதி இவ்விதமானதாகும் - மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிப்பதில்லை - ஆனால், மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

30:7. அவர்களால் காண முடிகின்ற இவ்வுலக விஷயங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கின்ற அதே சமயம், மறுவுலகின்பால் அவர்கள் முற்றிலும் அலட்சியமாக இருக்கின்றனர்.

30:8. அவர்கள் ஏன் தங்களைப் பற்றியே சிந்தித்துப் பார்க்கவில்லை? வானங்களையும் பூமியையும், இன்னும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தவணைக்காகவுமே தவிர, கடவுள் படைக்கவில்லை. எப்படியிருப்பினும், அதிகமான மக்கள், தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, நம்பமறுப்பவர்களாக உள்ளனர்.

30:9. பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த விளைவுகளை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? அவர்கள் மிகவும் வலிமை நிறைந்தவர்களாக, மிகவும் வளமானவர்களாக, மேலும் பூமியின் மீது அதிகம் விளைவித்தவர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் சென்றனர். ஆகவே, அவர்களுக்கு அநீதியிழைத்தது கடவுள் அல்ல, அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆத்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.

30:10. தீமைகள் புரிந்தவர்களுக்குரிய பின்விளைவுகள் தீயவையாகவே இருத்தல் வேண்டும். அது ஏனெனில் அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைப் பரிகாசம் செய்தனர்.

30:11. கடவுள்தான் படைப்பைத் துவங்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.

30:12. வேளை நிகழ்ந்தேறும் அந்நாளில், குற்றவாளிகள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.

30:13. அவர்கள் சார்பாகப் பரிந்துரைக்க அவர்களுடைய போலித் தெய்வங்களுக்கு சக்தி எதுவுமிருக்காது; அதற்கு மாறாக, தங்களுடைய போலித் தெய்வங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள்.

30:14. வேளை நிகழ்ந்தேறும் அந்நாளின் போது, அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

30:15. நம்பிக்கை கொண்டு நன்னெறியான வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் களிப்புடன் சுவனத்தில் இருப்பார்கள்.

30:16. நம்பமறுத்து, நமது வெளிப்பாடுகளையும் மறுவுலகின் சந்திப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தண்டனையில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

30:17. எனவே, இரவில் நீங்கள் ஓய்வெடுக்கும் போதும், காலையில் நீங்கள் விழித்தெழும் போதும் நீங்கள் கடவுள்-ஐத் துதிக்க வேண்டும்.

30:18. மாலை முழுவதும், அவ்வண்ணமே உங்களுடைய நாளின் நடுவிலும், வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்துப் புகழும் அவருக்குரியது.

30:19. இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை அவர் கொண்டு வருகின்றார், மேலும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றைக் கொண்டு வருகின்றார், மேலும் நிலத்தை அது இறந்துவிட்ட பின்னர் அவர் உயிர்ப்பிக்கின்றார்; அதைப்போலவே நீங்கள் உயிர்த் தெழுப்பப்படுகின்றீர்கள்.

30:20. மண்ணிலிருந்து அவர் உங்களை படைத்திருப்பதும், பின்னர் நீங்கள் இனவிருத்தி செய்கின்ற மனிதர்களானதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.

30:21. நீங்கள் ஒருவரைக் கொண்டு மற்றவர் மனஅமைதியும் திருப்தியும் கொள்வதற்காக, உங்களிலிருந்தே உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களுக்காக அவர் படைத்திருப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும், மேலும் உங்கள் இதயங்களில் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின்பால் அன்பையும் அக்கறையையும் அவர் அமைத்தார். இதில், எண்ணிப் பார்க்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

30:22. வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் உங்களுடைய மொழிகளிலும் நிறங்களிலும் உள்ள வேறுபாடுகளும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.

30:23. இரவுப் பொழுதில் அல்லது பகலில் நீங்கள் உறங்குவதும், அவருடைய வாழ்வதாரங்களைத் தேடி நீங்கள் வேலை செய்வதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இதில், செவியேற்க இயலும் மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

30:24. அச்சத்திற்கும், அவ்வண்ணமே எதிர்ப்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை அவர் உங்களுக்குக் காட்டுவதும், பின்னர் இறந்துபோயிருந்த ஒரு நிலத்தை உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை அவர் இறக்குவதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், புரிந்து கொள்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

30:25. வானமும் பூமியும் அவருடைய கட்டளையின் கீழ் நிற்கின்றன என்பது அவருடைய சான்றுகளில் உள்ள வையாகும். இறுதியில், பூமியை விட்டு வெளியே அவர் உங்களை அழைக்கும் போது, ஒரே அழைப்பு, நீங்கள் உடனடியாக வெளி வருவீர்கள்.

30:26. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள்; அனைவரும் அவருக்கு அடங்கி நடப்பவர்களாகவே இருக்கின்றனர்.

30:27. மேலும் அவர்தான் படைப்பைத் துவக்குபவர், மேலும் அதனை மீண்டும் செய்பவர்; இது அவருக்கு இன்னமும் எளிதானதேயாகும். வானங்களிலும் பூமியிலும் உள்ள மிகச் சிறப்பான உவமானங்கள் அவருக்குரியன, மேலும் அவர்தான் எல்லாம் வல்லவர், ஞானம் மிகுந்தவர்.

30:28. உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை அவர் இங்கே உங்களுக்கு உரைக்கின்றார்: நீங்கள் உங்களுடைய ஊழியர்களையோ அல்லது கீழுள்ளவர்களையோ உங்களுக்கே அவர்கள் போட்டியாக ஆகும் அளவுக்கு, உங்களுக்குச் செலுத்தப்படும் அதே அளவு மரியாதையை அவர்களுக்கு நீங்கள் செலுத்தும் அளவுக்கு எப்பொழுதாவது உயர்த்துகின்றீர்களா? புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் விவரிக்கின்றோம்.

30:29. உண்மையில், வரம்புமீறியவர்கள் அறிவின்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றினார்கள். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களைப் பின்னர் எவரால் வழிநடத்த முடியும்? எவரும் எக்காலத்திலும் அவர்களுக்கு உதவ இயலாது.

30:30. எனவே, கண்டிப்பான ஏகத்துவ மார்க்கத்திற்கு உங்களையே நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடவுள்-ஆல் மனிதர்களுக்குள் வைக்கப்பட்ட இயற்கை உள்ளுணர்வு இவ்விதமானதே. கடவுள்-ன் இவ்விதமான படைப்பு ஒருபோதும் மாறாது. இதுவே பூரணமான மார்க்கமாகும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறியமாட்டார்கள்.

*30:30 கடவுளை மட்டுமே நம்முடைய இரட்சகராகவும் எஜமானராகவும் அடையாளம் கண்டுகொள்வது ஓர் இயற்கையான உள்ளுணர்வாகும். இத்தகையதொரு உள்ளுணர்வுடன்தான் நாம் இவ்வுலகில் அவதரித்துள்ளோம். பார்க்க 7:172- 173மற்றும் பின் இணைப்பு 7.

30:31. நீங்கள் அவருக்குச் சரணடையவும், அவரிடம் பக்தியோடிருக்கவும், மேலும் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும், மேலும் -நீங்கள் என்ன செய்தாலும் - போலித்தெய்வ வழி பாட்டிற்குள் மட்டும் எக்காலத்திலும் விழுந்து விடாதீர்கள்.

30:32. தங்களுடைய மார்க்கத்தைப் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டவர்களைப் போல் (போலித் தெய்வ வழிபாட் டில் விழுந்து விடாதீர்கள்); ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு களிப்படைகின்றது.

30:33. துன்பம் மக்களை வருத்தும் பொழுது, தங்களையே முற்றிலும் அவருக்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் தங்கள் இரட்சகரின்பால் திரும்புகின்றனர். ஆனால் பின்னர், அவர்கள் மீது அவர் கருணையைப் பொழிந்தவுடன், அவர்களில் சிலர் போலித் தெய்வ வழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்.*

*30:33 தங்களைக் குணப்படுத்தியதற்காக புனித ஜூடுக்கு நன்றி தெரிவித்து மக்கள் தினசரிகளில் கொடுக்கின்ற வகைப் படுத்தப்பட்ட விளம்பரங்களை நாம் காண்பது ஒரு பொதுவான உதாரணமாகும். அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் தங்களைக் குணப்படுத்தும்படிக் கடவுளிடம் கபடமின்றி இறைஞ்சுகின்றனர். ஆனால் அறுவை சிசிச்சை வெற்றியடைந்தவுடன், அவர்கள் புனித ஜூடுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்!!!

30:34. நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றுக்கு அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்து கொள்ளட்டும். தற்காலிகமாகச் சுகமனுபவியுங்கள்; நீங்கள் நிச்சயமாக கண்டு கொள்வீர்கள்.

30:35. அவர்களுடைய போலித்தெய்வ வழிபாட்டை நியாயப்படுத்துகின்ற அதிகாரத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோமா?

30:36. மனிதர்கள் மீது நாம் கருணையை அருளும் பொழுது அவர்கள் அதில் கழிப்படைகின்றனர் . ஆனால் அவர்களுடைய செயல்களின் விளைவாக, அவர்களுக்குத் துன்பம் நேரிடும் பொழுது, அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர்.

30:37. கடவுள் தான்நாடுகின்ற எவருக்கும் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கின்றார், அல்லது குறைக்கின்றார் என்பதை அவர்கள் உணரவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாக இருக்க வேண்டும்.

30:38. எனவே, உறவினர்களுக்கும், அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்களுக்கு உரிமையுள்ள (தர்மப்) பங்கை கொடுக்க வேண்டும். மெய்யாகவே கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடுபவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும்; அவர்களே வெற்றியாளர்கள்.

30:39. சில மனிதர்களுடைய வளத்தைப் பெருக்குவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பெருவட்டியானது, கடவுள்-யிடம் எந்த ஒரு லாபத்தையும் அடைவதில்லை. ஆனால் நீங்கள் கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடியவர்களாக, தர்மம் வழங்கினால், இவர்கள்தான் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காக்கிப் பெற்றுக் கொள்பவர்கள்.

30:40. கடவுள்தான் உங்களைப் படைத்தவர். அவர்தான் உங்களுக்கு வழங்குபவர். அவர்தான் உங்களை மரணத்தில் ஆழ்த்துபவர். அவர்தான் உங்களை உயிர்ப்பித்தெழுப்புபவர். உங்களுடைய போலித் தெய்வங்கள் எதுவேனும் இவ்விஷயங்களில் எதையேனும் செய்ய இயலுமா? அவர் துதிப்பிற்குரியவர். பங்குதாரர்கள் எவரையும் கொள்வதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.

30:41. மனிதர்கள் செய்தவற்றின் காரணத்தால், நிலம் மற்றும் கடல் எங்கிலும் பேரழிவுகள் பரவி விட்டன. இவ்விதமாக அவர்களுடைய சில செயல்களின் பின் விளைவுகளை அவர்கள் சுவைக்கும்படி அவர் செய்கின்றார், அவர்கள் (சரியான காரியங்களுக்கு) திரும்பும் பொருட்டு.

30:42. கூறுவீராக, "பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு நேர்ந்த பின்விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்." அவர்களில் பெரும் பாலோர் போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்தனர்.

30:43. எனவே, தவிர்க்கப்பட முடியாததாக கடவுள்-ஆல் ஆக்கப்பட்டிருக்கின்ற ஒரு நாள் வருமுன்னர், பூரணமான இந்த மார்க்கத்திற்கு நீங்கள் உங்களையே முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அந்நாளில், அவர்கள் அதிர்ச்சியடைவார்கள்.

30:44. நம்பமறுக்கின்ற எவரொருவரும், தன் சொந்த ஆத்மாவுக்குக் கேடாகவே நம்பமறுக்கின்றார், அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், தங்களுடைய சொந்த ஆத்மாக்களை பலப்படுத்திக் கொள்ளவும் வளர்த்துக் கொள்ளவுமே அவ்வாறு செய்கின்றனர்.

30:45. ஏனெனில் நம்பிக்கை கொண்டு நன்னெறியான வாழ்வு நடத்துவோருக்குத் தன்னுடைய கொடைகளிலிருந்து அவர் தாராளமான பிரதிபலனளிப்பார். நம்பமறுப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.

30:46. தன்னுடைய கருணையை உங்கள்மீது பொழிவதற்காகவும், அவருடைய விதிகளுக்கேற்பக் கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதற்காகவும், மேலும் (வணிகத்தின் மூலமாக) அவருடைய கொடைகளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும் நற் சகுனங்களுடன் காற்றுகளை அவர் அனுப்புவது என்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும், நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு.

30:47. உமக்கு முன்னரும் தூதர்களை அவர்களுடைய சமூகத்தாருக்கு, ஆழ்ந்த அத்தாட்சிகளுடன் நாம் அனுப்பியுள்ளோம். அதனைத் தொடர்ந்து, வரம்பு மீறியவர்களை நாம் தண்டித்தோம். நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை அளிப்பதென்பது நம்முடைய கடமையாகும்.

30:48. கடவுள்தான் அவருடைய நாட்டத்திற்கேற்ப, ஆகாயம் முழுவதும் பரவி இருக்கும் பொருட்டு, மேகங்களை எழுப்புவதற்காக, காற்றுகளை அனுப்புகின்றவர். பின்னர் அவர் மேகங்களை அடுக்குகின்றார், பின்னர் அதிலிருந்து மழை இறங்கி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள். தன்னுடைய ஊழியர்களில் அவர் தேர்ந்தெடுத்த எவர் மீதும் அது விழும் பொழுது, அவர்கள் களிப்படைகின்றார்கள்.

30:49. அவர்கள் மீது அது விழுவதற்கு முன்னர், அவர்கள் விரக்தியில் தஞ்சமடைந்து இருந்தனர்.

30:50. கடவுள்-ன் தொடர் கருணையையும், மேலும் இறந்து போன நிலத்தை அவர் எவ்வாறு உயிர்ப்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் போற்றிட வேண்டும். நிச்சயமாக அதைப்போலவே இறந்தவர்களை அவர் உயிர்த் தெழுப்புவார். அவர் சர்வ சக்தியுடையவர்.

30:51. அதற்கு மாறாக ஒரு மஞ்சள் நிற மணற்புயலை அவர்கள் மீது நாம் அனுப்பியிருந்தால், அவர்கள் தொடர்ந்து நம்பமறுத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.

30:52. இறந்தவர்களையோ, அன்றிச் செவிடர்களையோ, அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்ய உம்மால் இயலாது.

30:53. அன்றி குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு வெளியே வழிநடத்தவும் உம்மால் இயலாது. நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்வதுடன், சரணடைந்தோராக ஆவதென்று தீர் மானித்தவர்களால் மட்டுமே நீர் செவியேற்கப்பட முடியும்.

30:54. கடவுள்தான் உங்களை பலஹீனமாகப் படைத்தார், பிறகு பலஹீனத்திற்குப் பின்னர் உங்களுக்கு திடகாத்திரமளித்தார், பிறகு திடகாத்திரத்தைத் தொடர்ந்து பலஹீனத்தையும் நரைமுடியையும் மாற்றியமைத்தார். தான்நாடிய எதனையும் அவர் படைக்கின்றார். அவர் அனைத்தையும் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.

30:55. வேளை நிகழ்ந்தேறும் அந்நாள் வரும்போது, குற்றவாளிகள் ஒரு மணிநேரம் மட்டுமே (இவ்வுலகில்) நிலைத்திருந்ததாகச் சத்தியம் செய்வார்கள். அவர்கள் அவ்வளவு தவறாக இருந்தனர்.

30:56. அறிவையும் விசுவாசத்தையும் கொண்டு ஆசீர் வதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள், "கடவுள்-ன் உத்தரவிற்கேற்ப, உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை, நீங்கள் நிலைத்திருந்தீர்கள். இப்பொழுது, இதுதான் உயிர்த்தெழுப்பப்படும் நாளாகும், ஆனால் நீங்கள் இதனை அடையாளம் காணத் தவறி விட்டீர்கள்."

30:57. எனவே, சாக்குபோக்கு எதுவும், அந்நாளில், வரம்பு மீறுபவர்களுக்குப் பலனளிக்காது, அன்றி அவர்கள் பிழைபொறுக்கப்படவும் மாட்டார்கள்.

30:58. இவ்விதமாக, எல்லாவிதமான உதாரணங்களையும் இந்தக் குர்ஆனில் மக்களுக்காக நாம் எடுத்துரைத் துள்ளோம். இருப்பினும், என்ன விதமான சான்றை நீங்கள் நம்பமறுப்பவர்களுக்குக் காட்டினாலும் பொருட்டல்ல, அவர்கள் கூறுகின்றனர், "நீங்கள் பொய்யுரைப்பவர்கள்."

30:59. இவ்விதமாகக் கடவுள் அறியாதவர்களின் இதயங்களை முத்திரையிட்டு விடுகின்றார்.

30:60. எனவே, நீர் உறுதியுடன் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் - ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமானதாகும் - மேலும் உறுதிப்பாட்டை அடையாதவர்களால் கலக்கமடைந்து விடக் கூடாது.