. ١:٢٨ طسم
. ٢:٢٨ تِلكَ ءايٰتُ الكِتٰبِ المُبينِ
. ٣:٢٨ نَتلوا عَلَيكَ مِن نَبَإِ موسىٰ وَفِرعَونَ بِالحَقِّ لِقَومٍ يُؤمِنونَ
. ٤:٢٨ إِنَّ فِرعَونَ عَلا فِى الأَرضِ وَجَعَلَ أَهلَها شِيَعًا يَستَضعِفُ طائِفَةً مِنهُم يُذَبِّحُ أَبناءَهُم وَيَستَحى ۦ نِساءَهُم إِنَّهُ كانَ مِنَ المُفسِدينَ
. ٥:٢٨ وَنُريدُ أَن نَمُنَّ عَلَى الَّذينَ استُضعِفوا فِى الأَرضِ وَنَجعَلَهُم أَئِمَّةً وَنَجعَلَهُمُ الوٰرِثينَ
. ٦:٢٨ وَنُمَكِّنَ لَهُم فِى الأَرضِ وَنُرِىَ فِرعَونَ وَهٰمٰنَ وَجُنودَهُما مِنهُم ما كانوا يَحذَرونَ
. ٧:٢٨ وَأَوحَينا إِلىٰ أُمِّ موسىٰ أَن أَرضِعيهِ فَإِذا خِفتِ عَلَيهِ فَأَلقيهِ فِى اليَمِّ وَلا تَخافى وَلا تَحزَنى إِنّا رادّوهُ إِلَيكِ وَجاعِلوهُ مِنَ المُرسَلينَ
. ٨:٢٨ فَالتَقَطَهُ ءالُ فِرعَونَ لِيَكونَ لَهُم عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرعَونَ وَهٰمٰنَ وَجُنودَهُما كانوا خٰطِـٔينَ
. ٩:٢٨ وَقالَتِ امرَأَتُ فِرعَونَ قُرَّتُ عَينٍ لى وَلَكَ لا تَقتُلوهُ عَسىٰ أَن يَنفَعَنا أَو نَتَّخِذَهُ وَلَدًا وَهُم لا يَشعُرونَ
. ١٠:٢٨ وَأَصبَحَ فُؤادُ أُمِّ موسىٰ فٰرِغًا إِن كادَت لَتُبدى بِهِ لَولا أَن رَبَطنا عَلىٰ قَلبِها لِتَكونَ مِنَ المُؤمِنينَ
. ١١:٢٨ وَقالَت لِأُختِهِ قُصّيهِ فَبَصُرَت بِهِ عَن جُنُبٍ وَهُم لا يَشعُرونَ
. ١٢:٢٨ وَحَرَّمنا عَلَيهِ المَراضِعَ مِن قَبلُ فَقالَت هَل أَدُلُّكُم عَلىٰ أَهلِ بَيتٍ يَكفُلونَهُ لَكُم وَهُم لَهُ نٰصِحونَ
. ١٣:٢٨ فَرَدَدنٰهُ إِلىٰ أُمِّهِ كَى تَقَرَّ عَينُها وَلا تَحزَنَ وَلِتَعلَمَ أَنَّ وَعدَ اللَّهِ حَقٌّ وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ
. ١٤:٢٨ وَلَمّا بَلَغَ أَشُدَّهُ وَاستَوىٰ ءاتَينٰهُ حُكمًا وَعِلمًا وَكَذٰلِكَ نَجزِى المُحسِنينَ
. ١٥:٢٨ وَدَخَلَ المَدينَةَ عَلىٰ حينِ غَفلَةٍ مِن أَهلِها فَوَجَدَ فيها رَجُلَينِ يَقتَتِلانِ هٰذا مِن شيعَتِهِ وَهٰذا مِن عَدُوِّهِ فَاستَغٰثَهُ الَّذى مِن شيعَتِهِ عَلَى الَّذى مِن عَدُوِّهِ فَوَكَزَهُ موسىٰ فَقَضىٰ عَلَيهِ قالَ هٰذا مِن عَمَلِ الشَّيطٰنِ إِنَّهُ عَدُوٌّ مُضِلٌّ مُبينٌ
. ١٦:٢٨ قالَ رَبِّ إِنّى ظَلَمتُ نَفسى فَاغفِر لى فَغَفَرَ لَهُ إِنَّهُ هُوَ الغَفورُ الرَّحيمُ
. ١٧:٢٨ قالَ رَبِّ بِما أَنعَمتَ عَلَىَّ فَلَن أَكونَ ظَهيرًا لِلمُجرِمينَ
. ١٨:٢٨ فَأَصبَحَ فِى المَدينَةِ خائِفًا يَتَرَقَّبُ فَإِذَا الَّذِى استَنصَرَهُ بِالأَمسِ يَستَصرِخُهُ قالَ لَهُ موسىٰ إِنَّكَ لَغَوِىٌّ مُبينٌ
. ١٩:٢٨ فَلَمّا أَن أَرادَ أَن يَبطِشَ بِالَّذى هُوَ عَدُوٌّ لَهُما قالَ يٰموسىٰ أَتُريدُ أَن تَقتُلَنى كَما قَتَلتَ نَفسًا بِالأَمسِ إِن تُريدُ إِلّا أَن تَكونَ جَبّارًا فِى الأَرضِ وَما تُريدُ أَن تَكونَ مِنَ المُصلِحينَ
. ٢٠:٢٨ وَجاءَ رَجُلٌ مِن أَقصَا المَدينَةِ يَسعىٰ قالَ يٰموسىٰ إِنَّ المَلَأَ يَأتَمِرونَ بِكَ لِيَقتُلوكَ فَاخرُج إِنّى لَكَ مِنَ النّٰصِحينَ
. ٢١:٢٨ فَخَرَجَ مِنها خائِفًا يَتَرَقَّبُ قالَ رَبِّ نَجِّنى مِنَ القَومِ الظّٰلِمينَ
. ٢٢:٢٨ وَلَمّا تَوَجَّهَ تِلقاءَ مَديَنَ قالَ عَسىٰ رَبّى أَن يَهدِيَنى سَواءَ السَّبيلِ
. ٢٣:٢٨ وَلَمّا وَرَدَ ماءَ مَديَنَ وَجَدَ عَلَيهِ أُمَّةً مِنَ النّاسِ يَسقونَ وَوَجَدَ مِن دونِهِمُ امرَأَتَينِ تَذودانِ قالَ ما خَطبُكُما قالَتا لا نَسقى حَتّىٰ يُصدِرَ الرِّعاءُ وَأَبونا شَيخٌ كَبيرٌ
. ٢٤:٢٨ فَسَقىٰ لَهُما ثُمَّ تَوَلّىٰ إِلَى الظِّلِّ فَقالَ رَبِّ إِنّى لِما أَنزَلتَ إِلَىَّ مِن خَيرٍ فَقيرٌ
. ٢٥:٢٨ فَجاءَتهُ إِحدىٰهُما تَمشى عَلَى استِحياءٍ قالَت إِنَّ أَبى يَدعوكَ لِيَجزِيَكَ أَجرَ ما سَقَيتَ لَنا فَلَمّا جاءَهُ وَقَصَّ عَلَيهِ القَصَصَ قالَ لا تَخَف نَجَوتَ مِنَ القَومِ الظّٰلِمينَ
. ٢٦:٢٨ قالَت إِحدىٰهُما يٰأَبَتِ استَـٔجِرهُ إِنَّ خَيرَ مَنِ استَـٔجَرتَ القَوِىُّ الأَمينُ
. ٢٧:٢٨ قالَ إِنّى أُريدُ أَن أُنكِحَكَ إِحدَى ابنَتَىَّ هٰتَينِ عَلىٰ أَن تَأجُرَنى ثَمٰنِىَ حِجَجٍ فَإِن أَتمَمتَ عَشرًا فَمِن عِندِكَ وَما أُريدُ أَن أَشُقَّ عَلَيكَ سَتَجِدُنى إِن شاءَ اللَّهُ مِنَ الصّٰلِحينَ
. ٢٨:٢٨ قالَ ذٰلِكَ بَينى وَبَينَكَ أَيَّمَا الأَجَلَينِ قَضَيتُ فَلا عُدوٰنَ عَلَىَّ وَاللَّهُ عَلىٰ ما نَقولُ وَكيلٌ
. ٢٩:٢٨ فَلَمّا قَضىٰ موسَى الأَجَلَ وَسارَ بِأَهلِهِ ءانَسَ مِن جانِبِ الطّورِ نارًا قالَ لِأَهلِهِ امكُثوا إِنّى ءانَستُ نارًا لَعَلّى ءاتيكُم مِنها بِخَبَرٍ أَو جَذوَةٍ مِنَ النّارِ لَعَلَّكُم تَصطَلونَ
. ٣٠:٢٨ فَلَمّا أَتىٰها نودِىَ مِن شٰطِئِ الوادِ الأَيمَنِ فِى البُقعَةِ المُبٰرَكَةِ مِنَ الشَّجَرَةِ أَن يٰموسىٰ إِنّى أَنَا اللَّهُ رَبُّ العٰلَمينَ
. ٣١:٢٨ وَأَن أَلقِ عَصاكَ فَلَمّا رَءاها تَهتَزُّ كَأَنَّها جانٌّ وَلّىٰ مُدبِرًا وَلَم يُعَقِّب يٰموسىٰ أَقبِل وَلا تَخَف إِنَّكَ مِنَ الـٔامِنينَ
. ٣٢:٢٨ اسلُك يَدَكَ فى جَيبِكَ تَخرُج بَيضاءَ مِن غَيرِ سوءٍ وَاضمُم إِلَيكَ جَناحَكَ مِنَ الرَّهبِ فَذٰنِكَ بُرهٰنانِ مِن رَبِّكَ إِلىٰ فِرعَونَ وَمَلَإِي۟هِ إِنَّهُم كانوا قَومًا فٰسِقينَ
. ٣٣:٢٨ قالَ رَبِّ إِنّى قَتَلتُ مِنهُم نَفسًا فَأَخافُ أَن يَقتُلونِ
. ٣٤:٢٨ وَأَخى هٰرونُ هُوَ أَفصَحُ مِنّى لِسانًا فَأَرسِلهُ مَعِىَ رِدءًا يُصَدِّقُنى إِنّى أَخافُ أَن يُكَذِّبونِ
. ٣٥:٢٨ قالَ سَنَشُدُّ عَضُدَكَ بِأَخيكَ وَنَجعَلُ لَكُما سُلطٰنًا فَلا يَصِلونَ إِلَيكُما بِـٔايٰتِنا أَنتُما وَمَنِ اتَّبَعَكُمَا الغٰلِبونَ
. ٣٦:٢٨ فَلَمّا جاءَهُم موسىٰ بِـٔايٰتِنا بَيِّنٰتٍ قالوا ما هٰذا إِلّا سِحرٌ مُفتَرًى وَما سَمِعنا بِهٰذا فى ءابائِنَا الأَوَّلينَ
. ٣٧:٢٨ وَقالَ موسىٰ رَبّى أَعلَمُ بِمَن جاءَ بِالهُدىٰ مِن عِندِهِ وَمَن تَكونُ لَهُ عٰقِبَةُ الدّارِ إِنَّهُ لا يُفلِحُ الظّٰلِمونَ
. ٣٨:٢٨ وَقالَ فِرعَونُ يٰأَيُّهَا المَلَأُ ما عَلِمتُ لَكُم مِن إِلٰهٍ غَيرى فَأَوقِد لى يٰهٰمٰنُ عَلَى الطّينِ فَاجعَل لى صَرحًا لَعَلّى أَطَّلِعُ إِلىٰ إِلٰهِ موسىٰ وَإِنّى لَأَظُنُّهُ مِنَ الكٰذِبينَ
. ٣٩:٢٨ وَاستَكبَرَ هُوَ وَجُنودُهُ فِى الأَرضِ بِغَيرِ الحَقِّ وَظَنّوا أَنَّهُم إِلَينا لا يُرجَعونَ
. ٤٠:٢٨ فَأَخَذنٰهُ وَجُنودَهُ فَنَبَذنٰهُم فِى اليَمِّ فَانظُر كَيفَ كانَ عٰقِبَةُ الظّٰلِمينَ
. ٤١:٢٨ وَجَعَلنٰهُم أَئِمَّةً يَدعونَ إِلَى النّارِ وَيَومَ القِيٰمَةِ لا يُنصَرونَ
. ٤٢:٢٨ وَأَتبَعنٰهُم فى هٰذِهِ الدُّنيا لَعنَةً وَيَومَ القِيٰمَةِ هُم مِنَ المَقبوحينَ
. ٤٣:٢٨ وَلَقَد ءاتَينا موسَى الكِتٰبَ مِن بَعدِ ما أَهلَكنَا القُرونَ الأولىٰ بَصائِرَ لِلنّاسِ وَهُدًى وَرَحمَةً لَعَلَّهُم يَتَذَكَّرونَ
. ٤٤:٢٨ وَما كُنتَ بِجانِبِ الغَربِىِّ إِذ قَضَينا إِلىٰ موسَى الأَمرَ وَما كُنتَ مِنَ الشّٰهِدينَ
. ٤٥:٢٨ وَلٰكِنّا أَنشَأنا قُرونًا فَتَطاوَلَ عَلَيهِمُ العُمُرُ وَما كُنتَ ثاوِيًا فى أَهلِ مَديَنَ تَتلوا عَلَيهِم ءايٰتِنا وَلٰكِنّا كُنّا مُرسِلينَ
. ٤٦:٢٨ وَما كُنتَ بِجانِبِ الطّورِ إِذ نادَينا وَلٰكِن رَحمَةً مِن رَبِّكَ لِتُنذِرَ قَومًا ما أَتىٰهُم مِن نَذيرٍ مِن قَبلِكَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
. ٤٧:٢٨ وَلَولا أَن تُصيبَهُم مُصيبَةٌ بِما قَدَّمَت أَيديهِم فَيَقولوا رَبَّنا لَولا أَرسَلتَ إِلَينا رَسولًا فَنَتَّبِعَ ءايٰتِكَ وَنَكونَ مِنَ المُؤمِنينَ
. ٤٨:٢٨ فَلَمّا جاءَهُمُ الحَقُّ مِن عِندِنا قالوا لَولا أوتِىَ مِثلَ ما أوتِىَ موسىٰ أَوَلَم يَكفُروا بِما أوتِىَ موسىٰ مِن قَبلُ قالوا سِحرانِ تَظٰهَرا وَقالوا إِنّا بِكُلٍّ كٰفِرونَ
. ٤٩:٢٨ قُل فَأتوا بِكِتٰبٍ مِن عِندِ اللَّهِ هُوَ أَهدىٰ مِنهُما أَتَّبِعهُ إِن كُنتُم صٰدِقينَ
. ٥٠:٢٨ فَإِن لَم يَستَجيبوا لَكَ فَاعلَم أَنَّما يَتَّبِعونَ أَهواءَهُم وَمَن أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوىٰهُ بِغَيرِ هُدًى مِنَ اللَّهِ إِنَّ اللَّهَ لا يَهدِى القَومَ الظّٰلِمينَ
. ٥١:٢٨ وَلَقَد وَصَّلنا لَهُمُ القَولَ لَعَلَّهُم يَتَذَكَّرونَ
. ٥٢:٢٨ الَّذينَ ءاتَينٰهُمُ الكِتٰبَ مِن قَبلِهِ هُم بِهِ يُؤمِنونَ
. ٥٣:٢٨ وَإِذا يُتلىٰ عَلَيهِم قالوا ءامَنّا بِهِ إِنَّهُ الحَقُّ مِن رَبِّنا إِنّا كُنّا مِن قَبلِهِ مُسلِمينَ
. ٥٤:٢٨ أُولٰئِكَ يُؤتَونَ أَجرَهُم مَرَّتَينِ بِما صَبَروا وَيَدرَءونَ بِالحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمّا رَزَقنٰهُم يُنفِقونَ
. ٥٥:٢٨ وَإِذا سَمِعُوا اللَّغوَ أَعرَضوا عَنهُ وَقالوا لَنا أَعمٰلُنا وَلَكُم أَعمٰلُكُم سَلٰمٌ عَلَيكُم لا نَبتَغِى الجٰهِلينَ
. ٥٦:٢٨ إِنَّكَ لا تَهدى مَن أَحبَبتَ وَلٰكِنَّ اللَّهَ يَهدى مَن يَشاءُ وَهُوَ أَعلَمُ بِالمُهتَدينَ
. ٥٧:٢٨ وَقالوا إِن نَتَّبِعِ الهُدىٰ مَعَكَ نُتَخَطَّف مِن أَرضِنا أَوَلَم نُمَكِّن لَهُم حَرَمًا ءامِنًا يُجبىٰ إِلَيهِ ثَمَرٰتُ كُلِّ شَىءٍ رِزقًا مِن لَدُنّا وَلٰكِنَّ أَكثَرَهُم لا يَعلَمونَ
. ٥٨:٢٨ وَكَم أَهلَكنا مِن قَريَةٍ بَطِرَت مَعيشَتَها فَتِلكَ مَسٰكِنُهُم لَم تُسكَن مِن بَعدِهِم إِلّا قَليلًا وَكُنّا نَحنُ الوٰرِثينَ
. ٥٩:٢٨ وَما كانَ رَبُّكَ مُهلِكَ القُرىٰ حَتّىٰ يَبعَثَ فى أُمِّها رَسولًا يَتلوا عَلَيهِم ءايٰتِنا وَما كُنّا مُهلِكِى القُرىٰ إِلّا وَأَهلُها ظٰلِمونَ
. ٦٠:٢٨ وَما أوتيتُم مِن شَىءٍ فَمَتٰعُ الحَيوٰةِ الدُّنيا وَزينَتُها وَما عِندَ اللَّهِ خَيرٌ وَأَبقىٰ أَفَلا تَعقِلونَ
. ٦١:٢٨ أَفَمَن وَعَدنٰهُ وَعدًا حَسَنًا فَهُوَ لٰقيهِ كَمَن مَتَّعنٰهُ مَتٰعَ الحَيوٰةِ الدُّنيا ثُمَّ هُوَ يَومَ القِيٰمَةِ مِنَ المُحضَرينَ
. ٦٢:٢٨ وَيَومَ يُناديهِم فَيَقولُ أَينَ شُرَكاءِىَ الَّذينَ كُنتُم تَزعُمونَ
. ٦٣:٢٨ قالَ الَّذينَ حَقَّ عَلَيهِمُ القَولُ رَبَّنا هٰؤُلاءِ الَّذينَ أَغوَينا أَغوَينٰهُم كَما غَوَينا تَبَرَّأنا إِلَيكَ ما كانوا إِيّانا يَعبُدونَ
. ٦٤:٢٨ وَقيلَ ادعوا شُرَكاءَكُم فَدَعَوهُم فَلَم يَستَجيبوا لَهُم وَرَأَوُا العَذابَ لَو أَنَّهُم كانوا يَهتَدونَ
. ٦٥:٢٨ وَيَومَ يُناديهِم فَيَقولُ ماذا أَجَبتُمُ المُرسَلينَ
. ٦٦:٢٨ فَعَمِيَت عَلَيهِمُ الأَنباءُ يَومَئِذٍ فَهُم لا يَتَساءَلونَ
. ٦٧:٢٨ فَأَمّا مَن تابَ وَءامَنَ وَعَمِلَ صٰلِحًا فَعَسىٰ أَن يَكونَ مِنَ المُفلِحينَ
. ٦٨:٢٨ وَرَبُّكَ يَخلُقُ ما يَشاءُ وَيَختارُ ما كانَ لَهُمُ الخِيَرَةُ سُبحٰنَ اللَّهِ وَتَعٰلىٰ عَمّا يُشرِكونَ
. ٦٩:٢٨ وَرَبُّكَ يَعلَمُ ما تُكِنُّ صُدورُهُم وَما يُعلِنونَ
. ٧٠:٢٨ وَهُوَ اللَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ لَهُ الحَمدُ فِى الأولىٰ وَالـٔاخِرَةِ وَلَهُ الحُكمُ وَإِلَيهِ تُرجَعونَ
. ٧١:٢٨ قُل أَرَءَيتُم إِن جَعَلَ اللَّهُ عَلَيكُمُ الَّيلَ سَرمَدًا إِلىٰ يَومِ القِيٰمَةِ مَن إِلٰهٌ غَيرُ اللَّهِ يَأتيكُم بِضِياءٍ أَفَلا تَسمَعونَ
. ٧٢:٢٨ قُل أَرَءَيتُم إِن جَعَلَ اللَّهُ عَلَيكُمُ النَّهارَ سَرمَدًا إِلىٰ يَومِ القِيٰمَةِ مَن إِلٰهٌ غَيرُ اللَّهِ يَأتيكُم بِلَيلٍ تَسكُنونَ فيهِ أَفَلا تُبصِرونَ
. ٧٣:٢٨ وَمِن رَحمَتِهِ جَعَلَ لَكُمُ الَّيلَ وَالنَّهارَ لِتَسكُنوا فيهِ وَلِتَبتَغوا مِن فَضلِهِ وَلَعَلَّكُم تَشكُرونَ
. ٧٤:٢٨ وَيَومَ يُناديهِم فَيَقولُ أَينَ شُرَكاءِىَ الَّذينَ كُنتُم تَزعُمونَ
. ٧٥:٢٨ وَنَزَعنا مِن كُلِّ أُمَّةٍ شَهيدًا فَقُلنا هاتوا بُرهٰنَكُم فَعَلِموا أَنَّ الحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنهُم ما كانوا يَفتَرونَ
. ٧٦:٢٨ إِنَّ قٰرونَ كانَ مِن قَومِ موسىٰ فَبَغىٰ عَلَيهِم وَءاتَينٰهُ مِنَ الكُنوزِ ما إِنَّ مَفاتِحَهُ لَتَنوأُ بِالعُصبَةِ أُولِى القُوَّةِ إِذ قالَ لَهُ قَومُهُ لا تَفرَح إِنَّ اللَّهَ لا يُحِبُّ الفَرِحينَ
. ٧٧:٢٨ وَابتَغِ فيما ءاتىٰكَ اللَّهُ الدّارَ الـٔاخِرَةَ وَلا تَنسَ نَصيبَكَ مِنَ الدُّنيا وَأَحسِن كَما أَحسَنَ اللَّهُ إِلَيكَ وَلا تَبغِ الفَسادَ فِى الأَرضِ إِنَّ اللَّهَ لا يُحِبُّ المُفسِدينَ
. ٧٨:٢٨ قالَ إِنَّما أوتيتُهُ عَلىٰ عِلمٍ عِندى أَوَلَم يَعلَم أَنَّ اللَّهَ قَد أَهلَكَ مِن قَبلِهِ مِنَ القُرونِ مَن هُوَ أَشَدُّ مِنهُ قُوَّةً وَأَكثَرُ جَمعًا وَلا يُسـَٔلُ عَن ذُنوبِهِمُ المُجرِمونَ
. ٧٩:٢٨ فَخَرَجَ عَلىٰ قَومِهِ فى زينَتِهِ قالَ الَّذينَ يُريدونَ الحَيوٰةَ الدُّنيا يٰلَيتَ لَنا مِثلَ ما أوتِىَ قٰرونُ إِنَّهُ لَذو حَظٍّ عَظيمٍ
. ٨٠:٢٨ وَقالَ الَّذينَ أوتُوا العِلمَ وَيلَكُم ثَوابُ اللَّهِ خَيرٌ لِمَن ءامَنَ وَعَمِلَ صٰلِحًا وَلا يُلَقّىٰها إِلَّا الصّٰبِرونَ
. ٨١:٢٨ فَخَسَفنا بِهِ وَبِدارِهِ الأَرضَ فَما كانَ لَهُ مِن فِئَةٍ يَنصُرونَهُ مِن دونِ اللَّهِ وَما كانَ مِنَ المُنتَصِرينَ
. ٨٢:٢٨ وَأَصبَحَ الَّذينَ تَمَنَّوا مَكانَهُ بِالأَمسِ يَقولونَ وَيكَأَنَّ اللَّهَ يَبسُطُ الرِّزقَ لِمَن يَشاءُ مِن عِبادِهِ وَيَقدِرُ لَولا أَن مَنَّ اللَّهُ عَلَينا لَخَسَفَ بِنا وَيكَأَنَّهُ لا يُفلِحُ الكٰفِرونَ
. ٨٣:٢٨ تِلكَ الدّارُ الـٔاخِرَةُ نَجعَلُها لِلَّذينَ لا يُريدونَ عُلُوًّا فِى الأَرضِ وَلا فَسادًا وَالعٰقِبَةُ لِلمُتَّقينَ
. ٨٤:٢٨ مَن جاءَ بِالحَسَنَةِ فَلَهُ خَيرٌ مِنها وَمَن جاءَ بِالسَّيِّئَةِ فَلا يُجزَى الَّذينَ عَمِلُوا السَّيِّـٔاتِ إِلّا ما كانوا يَعمَلونَ
. ٨٥:٢٨ إِنَّ الَّذى فَرَضَ عَلَيكَ القُرءانَ لَرادُّكَ إِلىٰ مَعادٍ قُل رَبّى أَعلَمُ مَن جاءَ بِالهُدىٰ وَمَن هُوَ فى ضَلٰلٍ مُبينٍ
. ٨٦:٢٨ وَما كُنتَ تَرجوا أَن يُلقىٰ إِلَيكَ الكِتٰبُ إِلّا رَحمَةً مِن رَبِّكَ فَلا تَكونَنَّ ظَهيرًا لِلكٰفِرينَ
. ٨٧:٢٨ وَلا يَصُدُّنَّكَ عَن ءايٰتِ اللَّهِ بَعدَ إِذ أُنزِلَت إِلَيكَ وَادعُ إِلىٰ رَبِّكَ وَلا تَكونَنَّ مِنَ المُشرِكينَ
. ٨٨:٢٨ وَلا تَدعُ مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ لا إِلٰهَ إِلّا هُوَ كُلُّ شَىءٍ هالِكٌ إِلّا وَجهَهُ لَهُ الحُكمُ وَإِلَيهِ تُرجَعونَ
28:1. T. S. M.*
*28:1 See Appendix 1 for details of the Quran's miraculous mathematical code, and the meaning or significance of these Quranic Initials.
28:2. These (letters) constitute proofs of this profound book.
28:3. We recite to you herein some history of Moses and Pharaoh, truthfully, for the benefit of people who believe.
28:4. Pharaoh turned into a tyrant on earth, and discriminated against some people. He persecuted a helpless group of them, slaughtering their sons, while sparing their daughters. He was indeed wicked.
28:5. We willed to compensate those who were oppressed on earth, and to turn them into leaders, and make them the inheritors.
28:6. And to establish them on earth, and to give Pharaoh, Hãmãn, and their troops a taste of their own medicine.
28:7. We inspired Moses' mother: "Nurse him, and when you fear for his life, throw him into the river without fear or grief. We will return him to you, and will make him one of the messengers."
28:8. Pharaoh's family picked him up, only to have him lead the opposition and to be a source of grief for them. That is because Pharaoh, Hãmãn, and their troops were transgressors.
28:9. Pharaoh's wife said, "This can be a joyous find for me and you. Do not kill him, for he may be of some benefit for us, or we may adopt him to be our son." They had no idea.
28:10. The mind of Moses' mother was growing so anxious that she almost gave away his identity. But we strengthened her heart, to make her a believer.
28:11. She said to his sister, "Trace his path." She watched him from afar, while they did not perceive.
28:12. We forbade him from accepting all the nursing mothers. (His sister) then said, "I can show you a family that can raise him for you, and take good care of him."
28:13. Thus, we restored him to his mother, in order to please her, remove her worries, and to let her know that God's promise is the truth. However, most of them do not know.
28:14. When he reached maturity and strength, we endowed him with wisdom and knowledge. We thus reward the righteous.
28:15. Once he entered the city unexpectedly, without being recognized by the people. He found two men fighting; one was (a Hebrew) from his people, and the other was (an Egyptian) from his enemies. The one from his people called on him for help against his enemy. Moses punched him, killing him. He said, "This is the work of the devil; he is a real enemy, and a profound misleader."
28:16. He said, "My Lord, I have wronged my soul. Please forgive me," and He forgave him. He is the Forgiver, Most Merciful.
28:17. He said, "My Lord, in return for Your blessings upon me, I will never be a supporter of the guilty ones."
28:18. In the morning, he was in the city, afraid and watchful. The one who sought his help yesterday, asked for his help again. Moses said to him, "You are really a troublemaker."
28:19. Before he attempted to strike their common enemy, he said, "O Moses, do you want to kill me, as you killed the other man yesterday? Obviously, you wish to be a tyrant on earth; you do not wish to be righteous."
28:20. A man came running from the other side of the city, saying, "O Moses, the people are plotting to kill you. You better leave immediately. I am giving you good advice."
28:21. He fled the city, afraid and watchful. He said, "My Lord, save me from the oppressive people."
28:22. As he traveled towards Midyan, he said, "May my Lord guide me in the right path."
28:23. When he reached Midyan's water, he found a crowd of people watering, and noticed two women waiting on the side. He said, "What is it that you need?" They said, "We are not able to water, until the crowd disperses, and our father is an old man."
28:24. He watered for them, then turned to the shade, saying, "My Lord, whatever provision you send to me, I am in dire need for it."
28:25. Soon, one of the two women approached him, shyly, and said, "My father invites you to pay you for watering for us." When he met him, and told him his story, he said, "Have no fear. You have been saved from the oppressive people."
28:26. One of the two women said, "O my father, hire him. He is the best one to hire, for he is strong and honest."
28:27. He said, "I wish to offer one of my two daughters for you to marry, in return for working for me for eight pilgrimages; if you make them ten, it will be voluntary on your part. I do not wish to make this matter too difficult for you. You will find me, God willing, righteous."
28:28. He said, "It is an agreement between me and you. Whichever period I fulfill, you will not be averse to either one. God is the guarantor of what we said."
28:29. When he had fulfilled his obligation, he traveled with his family (towards Egypt). He saw from the slope of Mount Sinai a fire. He said to his family, "Stay here. I have seen a fire. Maybe I can bring to you news, or a portion of the fire to warm you."
28:30. When he reached it, he was called from the edge of the right side of the valley, in the blessed spot where the burning bush was located: "O Moses, this is Me. God; Lord of the universe.
28:31. "Throw down your staff." When he saw it moving like a demon, he turned around and fled. "O Moses, come back; do not be afraid. You are perfectly safe.
28:32. "Put your hand into your pocket; it will come out white without a blemish. Fold your wings and settle down from your fear. These are two proofs from your Lord, to be shown to Pharaoh and his elders; they have been wicked people."
28:33. He said, "My Lord, I killed one of them, and I fear lest they kill me.
28:34. "Also, my brother Aaron is more eloquent than I. Send him with me as a helper to confirm and strengthen me. I fear lest they disbelieve me."
28:35. He said, "We will strengthen you with your brother, and we will provide you both with manifest authority. Thus, they will not be able to touch either one of you. With our miracles, the two of you, together with those who follow you, will be the victors."
28:36. When Moses went to them with our proofs, clear and profound, they said, "This is fabricated magic. We have never heard of this from our ancient ancestors."
28:37. Moses said, "My Lord knows best who brought the guidance from Him, and who will be the ultimate victors. Surely, the transgressors never succeed."
28:38. Pharaoh said, "O you elders, I have not known of any god for you other than me. Therefore, fire the adobe, O Hãmãn, in order to build a tower, that I may take a look at the god of Moses. I am sure that he is a liar."
28:39. Thus, he and his troops continued to commit arrogance on earth, without any right, and thought that they would not be returned to us.
28:40. Consequently, we punished him and his troops, by throwing them into the sea. Note the consequences for the transgressors.
28:41. We made them imams who led their people to Hell. Furthermore, on the Day of Resurrection, they will have no help.
28:42. They incurred in this life condemnation, and on the Day of Resurrection they will be despised.
28:43. We gave Moses the scripture - after having annihilated the previous generations, and after setting the examples through them - to provide enlightenment for the people, and guidance, and mercy, that they may take heed.
*28:43 The Torah is the collection of all the scriptures revealed to all the prophets of Israel, including the book of Moses. The Quran consistently states that Moses was given a book, or "the Statute Book." Nowhere in the Quran do we see that Moses was given "the Torah." Today's Old Testament, therefore, is the Torah (see 3:50, 5:46).
28:44. You were not present on the slope of the western mount, when we issued the command to Moses; you were not a witness.*
*28:44 The name of this messenger is confirmed mathematically: by placing the gematrical value of "Rashad Khalifa" (1230) next to the verse number (44), we get 123044=19x6476.
28:45. But we established many generations, and, because of the length of time, (they deviated). Nor were you among the people of Midyan, reciting our revelations to them. But we did send messengers.
28:46. Nor were you on the slope of Mount Sinai when we called (Moses). But it is mercy from your Lord, (towards the people,) in order to warn people who received no warner before you, that they may take heed.
28:47. Thus, they cannot say, when a disaster strikes them as a consequence of their own deeds, "Our Lord, had You sent a messenger to us, we would have followed Your revelations, and would have been believers."
28:48. Now that the truth has come to them from us, they said, "If only we could be given what was given to Moses!" Did they not disbelieve in what was given to Moses in the past? They said, "Both (scriptures) are works of magic that copied one another." They also said, "We are disbelievers in both of them."
28:49. Say, "Then produce a scripture from God with better guidance than the two, so I can follow it, if you are truthful."
28:50. If they fail to respond to you, then know that they follow only their own opinions. Who is farther astray than those who follow their own opinions, without guidance from God? God does not guide such wicked people.
28:51. We have delivered the message to them, that they may take heed.
28:52. Those whom we blessed with the previous scriptures will believe in this.
28:53. When it is recited to them, they will say, "We believe in it. This is the truth from our Lord. Even before we heard of it, we were submitters."
28:54. To these we grant twice the reward, because they steadfastly persevere. They counter evil works with good works, and from our provisions to them, they give.
28:55. When they come across vain talk, they disregard it and say, "We are responsible for our deeds, and you are responsible for your deeds. Peace be upon you. We do not wish to behave like the ignorant ones."
28:56. You cannot guide the ones you love. God is the only One who guides in accordance with His will, and in accordance with His knowledge of those who deserve the guidance.
28:57. They said, "If we follow your guidance, we will suffer persecution." Did we not establish for them a Sacred Sanctuary, to which all kinds of fruits are offered, as a provision from us? Indeed, most of them do not know.
28:58. Many a community we annihilated for turning unappreciative of their lives. Consequently, here are their homes, nothing but uninhabited ruins after them, except a few. We were the inheritors.
28:59. For your Lord never annihilates any community without sending a messenger in the midst thereof, to recite our revelations to them. We never annihilate any community, unless its people are wicked.
28:60. Everything that is given to you is only the material of this life, and its vanity. What is with God is far better, and everlasting. Do you not understand?
28:61. Is one whom we promised a good promise that will surely come to pass, equal to one whom we provide with the temporary materials of this life, then suffers eternal doom on the Day of Resurrection?
28:62. The day will come when He calls upon them, saying, "Where are those idols you had set up beside Me?"
28:63. Those who incurred the judgment will say, "Our Lord, these are the ones we misled; we misled them only because we ourselves had gone astray. We now devote ourselves totally to You. They were not really worshiping us."
28:64. It will be said, "Call upon your idols (to help you)." They will call upon them, but they will not respond. They will suffer the retribution, and wish that they were guided!
28:65. On that day, He will ask everyone, "How did you respond to the messengers?"
28:66. They will be so stunned by the facts on that day, they will be speechless.
28:67. As for those who repent, believe, and lead a righteous life, they will end up with the winners.
28:68. Your Lord is the One who creates whatever He wills, and chooses; no one else does any choosing. Glory be to God, the Most Exalted. He is far above needing partners.
28:69. Your Lord knows the innermost thoughts hidden in their chests, as well as everything they declare.
28:70. He is the one God; there is no other god beside Him. To Him belongs all praise in this first life, and in the Hereafter. All judgment belongs with Him, and to Him you will be returned.
28:71. Say, "What if God made the night perpetual, until the Day of Resurrection? Which god, other than God, can provide you with light? Do you not hear?"
28:72. Say, "What if God made the daylight perpetual, until the Day of Resurrection? Which god, other than God, can provide you with a night for your rest? Do you not see?"
28:73. It is mercy from Him that He created for you the night and the day in order to rest (during the night), then seek His provisions (during the day), that you may be appreciative.
28:74. The day will come when He asks them, "Where are the idols you had fabricated to rank with Me?"
28:75. We will select from every community a witness, then say, "Present your proof." They will realize then that all truth belongs with God, while the idols they had fabricated will abandon them.
28:76. Qãroon (the slave driver) was one of Moses' people who betrayed them and oppressed them. We gave him so many treasures that the keys thereof were almost too heavy for the strongest band. His people said to him, "Do not be so arrogant; God does not love those who are arrogant.
28:77. "Use the provisions bestowed upon you by God to seek the abode of the Hereafter, without neglecting your share in this world. Be charitable, as God has been charitable towards you. Do not keep on corrupting the earth. God does not love the corruptors."
28:78. He said, "I attained all this because of my own cleverness." Did he not realize that God had annihilated before him generations that were much stronger than he, and greater in number? The (annihilated) transgressors were not asked about their crimes.
28:79. One day, he came out to his people in full splendor. Those who preferred this worldly life said, "Oh, we wish that we possess what Qãroon has attained. Indeed, he is very fortunate."
28:80. As for those who were blessed with knowledge, they said, "Woe to you, God's recompense is far better for those who believe and lead a righteous life." None attains this except the steadfast.
28:81. We then caused the earth to swallow him and his mansion. No army could have helped him against God; he was not destined to be a winner.
28:82. Those who were envious of him the day before said, "Now we realize that God is the One who provides for whomever He chooses from among His servants, and withholds. If it were not for God's grace towards us, He could have caused the earth to swallow us too. We now realize that the disbelievers never succeed."
28:83. We reserve the abode of the Hereafter for those who do not seek exaltation on earth, nor corruption. The ultimate victory belongs to the righteous.
28:84. Whoever works righteousness receives a far better reward. As for those who commit sins, the retribution for their sins is precisely equivalent to their works.
28:85. Surely, the One who decreed the Quran for you will summon you to a predetermined appointment. Say, "My Lord is fully aware of those who uphold the guidance, and those who have gone astray."
28:86. You never expected this scripture to come your way; but this is a mercy from your Lord. Therefore, you shall not side with the disbelievers.
28:87. Nor shall you be diverted from God's revelations, after they have come to you, and invite the others to your Lord. And do not ever fall into idol worship.
28:88. You shall not worship beside God any other god. There is no other god beside Him. Everything perishes except His presence. To Him belongs all sovereignty, and to Him you will be returned.
28:1. த. ச. ம.*
*28:1 குர்ஆனுடைய அற்புதமான கணிதக் குறியீட்டின் விபரங்களுக்கும், இந்த துவக்க எழுத்துகளின் அர்த்தம் அல்லது முக்கியத்துவத்திற்கு பின்இணைப்பு 1ஐப் பார்க்கவும்.
28:2. (எழுத்துகளாகிய) இவை இந்த ஆழ்ந்த புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.
28:3. நம்பிக்கை கொண்ட மக்களின் நலனுக்காக, மோஸஸ் மற்றும் ஃபேரோவின் வரலாற்றில் சிலவற்றை சத்தியத்துடன் நாம் உமக்கு இதில் ஓதிக் காட்டுகின்றோம்.
28:4. ஃபேரோ பூமியில் ஒரு கொடுங்கோலனாக ஆனான், மேலும் மக்களில் சிலருக்கெதிராக பாரபட்சம் செய்தான். அவர்களில் உள்ள நாதியற்ற ஒரு கூட்டத்தாரை, அவர்களுடைய மகன்களைக் கொன்று விட்டு, அதே சமயம் அவர்களுடைய மகள்களை உயிருடன் விட்டு வைத்து, வன்கொடுமை செய்தான். அவன் உண்மையிலேயே தீயவனாக இருந்தான்.
28:5. பூமியில் அடக்குமுறை செய்யப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு செய்யவும், அவர்களைத் தலைவர்களாக ஆக்கவும், மேலும் அவர்களை வாரிசுகளாக்கவும் நாம் நாடினோம்.
28:6. அத்துடன் பூமியில் அவர்களை ஸ்திரப்படுத்தவும், மேலும் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர் தயாரித்த மருந்தை அவர்களையே சுவைக்கச் செய்வதற்காகவும்.
28:7. மோஸஸின் தாயாருக்கு நாம் உள்ளுணர்வளித்தோம்: "அவருக்குப் பாலூட்டுவீராக, மேலும் அவருடைய உயிரைக் குறித்து நீர் அச்சம் கொள்ளும் போது, அச்சமோ துக்கமோ இன்றி ஆற்றுக்குள் அவரைத் தள்ளிவிடுவீராக. அவரை நாம் உம்மிடம் திரும்பச் சேர்ப்போம், மேலும் தூதர்களில் ஒருவராகவும் அவரை நாம் ஆக்குவோம்."
28:8. எதிரணிக்கு அவர் தலைமை தாங்குவதற்காகவும் மேலும் தங்களுடைய துக்கத்திற்கு ஒரு மூலமாக இருப்பதற்காக மட்டுமே, ஃபேரோவின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். அது ஏனெனில் ஃபேரோ, ஹாமான் மற்றும் அவனுடைய படையினர் வரம்புமீறியவர்களாக இருந்தனர்.
28:9. ஃபேரோவின் மனைவி கூறினார், "எனக்கும் உமக்கும் மகிழ்ச்சியூட்டக்கூடிய ஒரு கண்டுபிடிப்பாக இது அமையலாம். அவரைக் கொன்றுவிடாதீர், ஏனெனில் அவர் நமக்கு ஏதேனும் பலனளிக்கக் கூடும், அல்லது நம்முடைய மகனாக அவரை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம்." அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை.
28:10. மோஸஸின் தாயாருடைய மனம், கிட்டத்தட்ட அவரை அடையாளம் காட்டிவிடும் அளவுக்கு மிகவும் பதற்றம் அடைந்தது. ஆனால் அவரை ஒரு நம்பிக்கையாளராக்குவதற்காக, அவருடைய இதயத்தை நாம் திடப்படுத்தினோம்.
28:11. அவருடைய சகோதரியிடம் அவர் கூறினார், அவருடைய பாதையைப் பின் தொடர்வாயாக. அவர்கள் உணர்ந்து கொள்ளாத அதே சமயம், அவள் அவரைத் தொலைவிலிருந்து கண்காணித்தாள்.
28:12. செவிலித் தாய்கள் யாவரையும் ஏற்றுக் கொள்வதை விட்டும் நாம் அவரைத் தடுத்தோம். (அவருடைய சகோதரி) பின்னர் கூறினாள், "உங்களுக்காக அவரை வளர்த்தெடுக்கவும், அவர் மீது நல்ல கவனம் எடுத்துக் கொள்ளவும் கூடிய ஒரு குடும்பத்தை என்னால் உங்களுக்குக் காட்ட இயலும்."
28:13. இவ்விதமாக, அவருடைய தாயாரிடம் அவரை மீண்டும் தந்தோம், அவரை மகிழ்வடையச் செய்து, அவருடைய கவலைகளைப் போக்கி, மேலும் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியம்தான் என்பதை அவர் அறிந்து கொள்ளச் செய்யும் பொருட்டு. ஆயினும், அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
28:14. அவர் பக்குவமும் பலமும் அடைந்த போது, ஞானத்தையும் அறிவையும் கொண்டு அவருக்கு நாம் கொடையளித்தோம். இவ்விதமாகவே நன்னெறியாளர்களுக்கு நாம் வெகுமதியளிப்போம்.
28:15. மக்களால் கண்டுகொள்ளப்படாத நிலையில், ஒரு முறை எதிர்பாராதவிதமாக அவர் நகருக்குள் நுழைந்து விட்டார். இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை அவர் கண்டார்; ஒருவன் அவருடைய சமூகத்தாரிலிருந்து (ஒரு எபிரேயனாக) இருந்தான், மேலும் மற்றொருவன் அவருடைய விரோதிகளிலிருந்து (ஓர் எகிப்தியனாக) இருந்தான். அவருடைய சமூகத்தாரிலிருந்தவன் தன்னுடைய விரோதிக்கு எதிராக அவரை உதவிக்கு அழைத்தான். மோஸஸ் அவனைக்குத்தினார், அவனைக் கொன்று விட்டார். அவர் கூறினார், "இது சாத்தானின் வேலையாகும்; அவன் மெய்யான ஒரு விரோதி, மேலும் ஒரு தீவிரமான வழிதவறச் செய்பவன் ஆவான்."
28:16. அவர் கூறினார், என் இரட்சகரே, நான் என் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். தயை கூர்ந்து என்னை மன்னிப்பீராக, மேலும் அவர் அவரை மன்னித்தார். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
28:17. அவர் கூறினார், "என் இரட்சகரே, என் மீதான உமது ஆசிகளுக்குப் பகரமாக, குற்றவாளிகளுக்கு ஓர் ஆதரவாளனாக நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்."
28:18. காலையில், அச்சத்துடனும் விழிப்புடனும், அவர் நகரத்தில் இருந்தார். முந்திய தினம் அவருடைய உதவியைக் கோரியவன் மீண்டும் அவரிடம் உதவி கேட்டான். மோஸஸ் அவனிடம் கூறினார், மெய்யாகவே நீ தொந்தரவை உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றாய்.
28:19. அவர்களுடைய பொதுவான விரோதியை அவர் தாக்க முற்படும் முன்னர், அவன் கூறினான், "மோஸஸே, நேற்று மற்றொரு மனிதனை நீர் கொலை செய்ததைப் போல, என்னையும் நீர் கொன்று விட விரும்புகின்றீரா? கண்கூடாக, பூமியின் மீது ஒரு கொடுங்கோலனாக இருக்கவே நீர் விரும்புகின்றீர்; நன்னெறியாளராக இருக்க நீர் விரும்பவில்லை."
28:20. நகரின் மற்றொரு புறத்திலிருந்து ஒரு மனிதன், "மோஸஸே, மக்கள் உம்மைக் கொன்று விடத் திட்டமிடுகின்றனர். நீர் உடனடியாகப் புறப்பட்டு விடுவதே மேலானதாகும். நான் உமக்கு நல்ல அறிவுரையே கூறுகின்றேன்," என்று கூறியவனாக ஓடி வந்தான்.
28:21. அச்சத்துடனும், விழிப்புடனும், அவர் நகரை விட்டுத் தப்பி ஓடினார். அவர் கூறினார், "என் இரட்சகரே, அடக்குமுறை செய்கின்ற இம்மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக."
28:22. மித்யனை நோக்கி அவர் பிரயாணித்த போது, அவர் கூறினார், "என் இரட்சகர் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவாராக."
28:23. மித்யனின் நீர்நிலையை அவர் அடைந்தபோது, மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார், மேலும் ஓரத்தில் இரு பெண்கள் காத்துக் கொண்டிருப்பதையும் அவர் கவனித்தார். அவர் கூறினார், "உங்களுக்கு வேண்டியதென்ன? அவர்கள் கூறினர், "கூட்டம் கலைந்து செல்லும் வரை, எங்களால் தண்ணீர் எடுத்துக் கொள்ள முடியவில்லை, மேலும் எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த ஒருவராக இருக்கின்றார்."
28:24. அவர்களுக்காக அவர் தண்ணீர் எடுத்துக் கொடுத்தார், பின்னர் "என் இரட்சகரே, எந்த ஒரு வாழ்வாதாரத்தை நீர் எனக்கு அனுப்பினாலும், அதற்காக நான் கடும் தேவையுடையவனாக இருக்கின்றேன்," எனக் கூறியவாறு நிழலின் பால் திரும்பிச் சென்றார்.
28:25. விரைவில், அவ்விரு பெண்களில் ஒருவர் அவரை வெட்கத்துடன் அணுகினார், மேலும் கூறினார், எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்ததற்கான கூலியைத் தருவதற்காக என் தந்தையார் உம்மை அழைக்கின்றார்." அவரைச் சந்தித்து அவர் தனது கதையை அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், அச்சம் கொள்ளாதீர். அடக்குமுறை செய்கின்ற மக்களிடமிருந்து நீர் காப்பாற்றப்பட்டு விட்டீர்."
28:26. அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார், "என் தந்தையே, அவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வீராக. அவர் கூலிக்கு அமர்த்திக் கொள்ள மிகச் சிறந்த ஒருவராக உள்ளார், ஏனெனில் அவர் வலிமையுடையவராகவும் நேர்மையுடையவராகவும் இருக்கின்றார்."
28:27. அவர் கூறினார், "எட்டு புனிதயாத்திரைகள் எனக்கு நீர் வேலை செய்வதற்குப் பிரதியுபகாரமாக, என்னுடைய இரு மகள்களில் ஒருவரை உமக்கு திருமணம் முடித்துத்தர நான் விரும்புகின்றேன்; அவற்றை நீர் பத்தாக ஆக்கினால் அது உமது சொந்த விருப்பத்தின்பாற்பட்டதாகும். இந்த விஷயத்தை உமக்கு மிகவும் கடினமான தாக்கிவிட நான் விரும்பவில்லை. கடவுள் நாடினால், என்னை நீர், நன்னெறியாளனாகக் காண்பீர்."
28:28. அவர் கூறினார்,"எனக்கும் உமக்கும் இடையில் இது ஓர் உடன்படிக்கையாகும். எந்த ஒரு காலகட்டத்தை நான் பூர்த்தி செய்தபோதிலும், அவற்றில் எந்த ஒன்றுக்கும் நீர் வெறுப்புக் கொள்ளமாட்டீர். நாம் கூறியவற்றுக்குக் கடவுள் உத்தரவாதம் அளிப்பவராக இருக்கின்றார்."
28:29. அவர் தன் கடமையைப் பூர்த்தி செய்து விட்ட போது, தன் குடும்பத்தாருடன் அவர் (எகிப்தை நோக்கி) பயணம் செய்தார். சினாய் மலையின் சரிவுகளில் இருந்து ஒரு நெருப்பை அவர் கண்டார். தன்னுடைய குடும்பத்தாரிடம் அவர் கூறினார், "இங்கேயே இருங்கள். நான் ஒரு நெருப்பைக் கண்டேன். ஒரு வேளை உங்களுக்கு நான் செய்தியைக் கொண்டு வரவோ, அல்லது உங்களுக்குக் கதகதப்பு அளிப்பதற்காக நெருப்பிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டுவரவோ கூடும்."
28:30. அவர் அதனை அடைந்தபோது, எரிகின்ற புதர் இருந்த ஆசீர்வதிக்கப்பட்ட இடத்தில், பள்ளத்தாக்கின் வலப்புற ஓரத்திலிருந்து அவர் அழைக்கப்பட்டார்: "மோஸஸே, நான்தான். கடவுள்; பிரபஞ்சத்தின் இரட்சகர்."
28:31. "உமது கைத்தடியைக் கீழே வீசுவீராக." அது ஒரு பிசாசைப் போல் நகர்வதை அவர் கண்ட போது, அவர் திரும்பியடித்து ஓடினார். "மோஸஸே, திரும்பி வாரும்; பயப்படாதீர். நீர் பூரணமான பாதுகாப்புடன் இருக்கின்றீர்.
28:32. "உமது சட்டைப்பைக்குள் உமது கரத்தை வைப்பீராக; ஒரு மாசுமின்றி வெண்மையாக அது வெளிவரும். உமது கரங்களைக் கட்டிக்கொண்டு உம்முடைய அச்சத்திலிருந்து அமைதி அடைவீராக. இவை ஃபேரோவுக்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் காட்டப்படுவதற்காக, உம் இரட்சகரிடமிருந்துள்ள இரு சான்றுகளாகும்; அவர்கள் தீய மக்களாக இருக்கின்றனர்."
28:33. அவர் கூறினார், "என் இரட்சகரே, அவர்களில் ஒருவனை நான் கொலை செய்து விட்டேன், மேலும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.
28:34. "மேலும், என் சகோதரர் ஆரோன் என்னை விட பேச்சுத் திறன் அதிகம் உடையவராக இருக்கின்றார். என்னை உறுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் ஓர் உதவியாளராக அவரை என்னுடன் அனுப்புவீராக. அவர்கள் என்னை நம்பமறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்."
28:35. அவர் கூறினார், "உம்முடைய சகோதரருடன் உம்மை நாம் பலப்படுத்துவோம், மேலும் உங்கள் இருவருக்கும் தெளிவான அதிகாரத்தை நாம் வழங்குவோம். இவ்விதமாக, உங்கள் இருவரில் எவர் ஒருவரையும் அவர்களால் தொட முடியாது. நமது அற்புதங்களுடன், நீங்கள் இருவரும், உம்மைப் பின்பற்றியவர்களு டன் சேர்ந்து, வெற்றியாளர்களாக இருப்பீர்கள்."
28:36. தெளிவான மற்றும் ஆழ்ந்த, நமது சான்றுகளுடன் மோஸஸ் அவர்களிடம் சென்ற போது, அவர்கள் கூறினர், "இது இட்டுக்கட்டப்பட்ட மாயாஜாலமாகும். நம்முடைய பண்டைய மூதாதையர்களிடமிருந்து இதனை நாம் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை."
28:37. மோஸஸ் கூறினார், "என் இரட்சகர், அவரிடமிருந்து வழிகாட்டலைக் கொண்டு வந்திருப்பது யாரென்றும், இறுதி வெற்றியாளர்களாக இருக்கப்போவது யாரென்றும் நன்கறிவார். நிச்சயமாக, வரம்புமீறுபவர்கள் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்."
28:38. ஃபேரோ கூறினான், "ஓ பிரதானிகளே உங்களைத் தான், என்னை விடுத்து உங்களுக்கு வேறு எந்தத் தெய்வத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. எனவே, ஹாமானே, மோஸஸின் தெய்வத்தை நான் ஒரு நோட்டமிடும் பொருட்டு, ஒரு கோபுரத்தை கட்டுவதற்காக சூளையைப் பற்ற வைப்பாயாக. அவர் ஒரு பொய்யர் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்."
28:39. இவ்விதமாக, அவனும் அவனுடைய படையினரும் பூமியின் மீது, எவ்வித நியாயமுமின்றி, தொடர்ந்து ஆணவம் புரிந்தனர், மேலும் நம்மிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படமாட்டார்கள் என்று நினைத்தனர்.
28:40. அதன் விளைவாக, அவர்களைக் கடலினுள் கொண்டு தள்ளியதன் மூலம் அவனையும் அவனுடைய சேனைகளையும் நாம் தண்டித்தோம். வரம்புமீறுவோருக்கான பின்விளைவுகளைக் கவனித்துப் பார்ப்பீராக.
28:41. அவர்களுடைய சமூகத்தாரை நரகத்திற்கு வழிநடத் திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம். அத்துடனன்றி, உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுக்கு எந்த உதவியும் இருக்காது.
28:42. இந்த வாழ்வில் அவர்கள் கண்டனத்திற்கு உள்ளானார்கள், மேலும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்கள் இகழப்பட்டவர்களாக இருப்பார்கள்.
28:43. முந்திய தலைமுறையினரை அழித்து விட்ட பின்னர், மேலும் அவர்கள் மூலமாக உதாரணங்களை அமைத்து விட்ட பின்னர், மக்களுக்கு அறிவூட்டலையும், வழி காட்டலையும், கருணையையும் வழங்குவற்காக - மோஸஸுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம் - அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு.
*28:43 மோஸஸின் புத்தகம் உட்பட, இஸ்ரேலின் நபிமார்கள் அனைவருக்கும் வெளிப்படுத்தப்பட்ட அனைத்து வேதங்களின் தொகுப்பே தோரா ஆகும். குர்ஆன் ஓரே சீராக, மோஸஸுக்கு ஒரு புத்தகம் அல்லது "சட்டப்புத்தகம்" கொடுக்கப் பட்டதாகத்தான் கூறுகின்றது, "தோரா" மோஸஸுக்கு வழங்கப்பட்டதாக குர்ஆனில் எங்கேயும் நாம் காண முடியாது. எனவே இன்றைய பழைய ஏற்பாடுதான் தோரா ஆகும் (பார்க்க (3:50) (5:46).
28:44. மோஸஸுக்கு நாம் கட்டளையை வெளியிட்ட போது, மேற்கத்திய மலையின் சரிவுகளில் நீர் வருகை புரிந்து இருக்கவில்லை; நீர் ஒரு சாட்சியாக* இருக்கவில்லை.
*28:44 இத்தூதரின் பெயர் கணித அடிப்படையில் உறுதிப்படுத்தப்படுகின்றது: "ரஷாத் கலீஃபா" வின் எழுத்தெண் மதிப்பின் (1230) பக்கத்தில் வசன எண்ணை (44), நாம் அமைத்தால், நமக்குக் கிடைப்பது 123044 = 19 x 6476.
28:45. ஆனால் நாம் பல தலைமுறையினரை நிர்மாணித்தோம், மேலும் காலம் நீண்ட காரணத்தால் (அவர்கள் விலகிச் சென்றனர்). அன்றியும் நம் வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக்காட்டிக் கொண்டு மித்யனின் சமூகத்தாருக்கிடையிலும் நீர் இருக்கவில்லை. ஆயினும் நாம் தூதர்களை அனுப்பவேசெய்தோம்.
28:46. அன்றி (மோஸஸை) நாம் அழைத்தபோது சினாய் மலையின் சரிவுகளில் நீர் இருக்கவில்லை. ஆனால் உமக்கு முன்னர் எச்சரிப்பவர் எவரையும் பெற்றுக் கொள்ளாத மக்களை எச்சரிப்பதற்காக, (மனிதர்கள் பால்) இது உம்முடைய இரட்சகரின் கருணையாகவே உள்ளது, அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு.
28:47. இவ்விதமாக, அவர்களுடைய சொந்தச் செயல்களின் பின் விளைவாக ஒரு பேரழிவு அவர்களைத் தாக்கும்போது, "எங்கள் இரட்சகரே, நீர் எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருந்தால், நாங்கள் உம்முடைய வெளிப்பாடுகளைப் பின்பற்றியிருப்போம், மேலும் நம்பிக்கையாளர்களாக இருந்திருப்போம்," என்று அவர்கள் கூற முடியாது.
28:48. இப்போது நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்திருப்பதால், அவர்கள் கூறினர், "மோஸஸுக்குக் கொடுக்கப்பட்டது மட்டும் நமக்கும் கொடுக்கப்பட்டால்! கடந்த காலத்தில் மோஸஸுக்குக் கொடுக்கப்பட்டவற்றை அவர்கள் நம்பமறுக்கவில்லையா? அவர்கள் கூறினர்," இரண்டு (வேதங்களும்) ஒன்றிலிருந்து மற்றொன்று பிரதியெடுக்கப்பட்ட மாயா ஜால வேலைகளே." அத்துடன் அவர்கள் கூறினர், அவை இரண்டையும் நாங்கள் நம்பமறுப்பவர்களாக இருக்கின்றோம்.
28:49. கூறும், "எனில் நான் அதனை பின்பற்றுவதற்காக, இவ்விரண்டையும் விட மேலான வழிகாட்டலைக் கொண்ட வேதத்தை கடவுள்-யிடமிருந்து கொண்டு வாருங்கள், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்."
28:50. அவர்கள் உமக்குப் பதிலளிக்கத் தவறினால், பின்னர் அவர்கள் தங்களுடைய சுயஅபிப்பிராயங்களையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக. கடவுள்-யிடமிருந்து வழிகாட்டல் இன்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களை விட நெடிய வழிகேட்டில் இருப்பவர் யார்? இத்தகைய தீய மக்களைக் கடவுள் வழி நடத்துவதில்லை.
28:51. அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தூதுச் செய்தியை நாம் அவர்களிடம் சேர்ப்பித்தோம்.
28:52. முந்திய வேதங்களைக் கொண்டு நாம் ஆசீர்வதித்தவர்கள் இதில் நம்பிக்கை கொள்வார்கள்.
28:53. அவர்களிடம் இது ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் கூறுவார்கள், "நாங்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றோம். இது நம்முடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் ஆகும். இதனைப் பற்றி நாங்கள் செவியேற்பதற்கு முன்னரே, நாங்கள் சரணடைந்தவர்களாக இருந்தோம்."
28:54. அவர்கள் உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து இருந்த காரணத்தால், அவர்களுக்கு நாம் இருமடங்கு வெகு மதியை வழங்குவோம். அவர்கள் நல்ல செயல்களைக் கொண்டு தீய செயல்களை எதிர் கொள்வார்கள், மேலும் நமது வாழ்வாதாரங்களில் அவர்களுக்குரியதில் இருந்து, அவர்கள் கொடுப்பார்கள்.
28:55. வீணான பேச்சினை அவர்கள் செவியேற்க நேர்ந்தால், அவர்கள் அதனைப் புறக்கணித்து விட்டுக் கூறுவார்கள், "எங்கள் செயல்களுக்கு நாங்கள் பொறுப்பாவோம், மேலும் உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். உங்கள் மீது சாந்தி நிலவுவதாக. அறியாதவர்களைப் போல நடந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை."
28:56. நீர் நேசிப்பவர்களை எல்லாம் உம்மால் வழிநடத்த முடியாது. கடவுள் தான் தன்னுடைய நாட்டத்திற் கேற்பவும், வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர் எவர் என்ற அவருடைய அறிவிற்கேற்பவும் வழி நடத்துகின்ற ஒரே ஒருவர்.
28:57. அவர்கள் கூறினர், "உமது வழிகாட்டலை நாங்கள் பின்பற்றினால், நாங்கள் வன்கொடுமையால் துன்புறுவோம்." நம்மிடமிருந்தொரு வாழ்வாதாரமாக, அனைத்துக் கனிவர்க்கங்களும் முன்வைக்கப்படுகின்ற, ஒரு புனித ஆலயத்தை அவர்களுக்காக நாம் நிர்மாணிக்கவில்லையா? உண்மையில், அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
28:58. தங்களுடைய வாழ்க்கைகளுக்கு நன்றி கெட்டவர்களாக மாறிய எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம். அதன் விளைவாக, ஒரு சிலவற்றைத் தவிர, அவர்களுக்குப் பின்னர் எவரும் வசிக்காத சிதிலங்களாக, இதோ அவர்களுடைய வீடுகள். நாமே அவற்றின் வாரிசுகளாக இருந்தோம்.
28:59. ஏனெனில் உம் இரட்சகர் எந்தச் சமுதாயத்தையும், அதன் மத்தியில் நம் வெளிப்பாடுகளை அவர்களுக்கு ஓதிக்காட்ட ஒரு தூதரை அனுப்பாது, ஒரு போதும் அழித்துவிடுவதில்லை. எந்த ஒரு சமூகத்தையும், அதன் மக்கள் தீயவர்களாக இருந்தாலன்றி, நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.
28:60. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை ஒவ்வொன்றும் இந்த வாழ்வின் பொருட்களும், மேலும் அவற்றின் ஆடம்பரமுமேயாகும். கடவுள்-யிடம் இருப்பவையோ மிகவும் மேலானதாகவும், நிலைத்திருப்பவையாகவும் உள்ளன. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
28:61. நிச்சயமாக நிகழ்ந்தேறக் கூடிய நல்லதொரு வாக்குறுதியை நாம் வாக்களித்த ஒருவனும், இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்கள் நம்மால் வழங்கப்பட்டு, பின்னர் உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று நிரந்தரமான அழிவை அனுபவிக்கும் ஒருவனும் சமமா?
28:62. "என்னுடன் நீங்கள் அமைத்துக் கொண்ட அந்த போலித் தெய்வங்கள் எங்கே?" என்று கூறியவாறு, அவர்களை அவர் அழைக்கின்ற அந்நாள் வரும்.
28:63. தீர்ப்புக்கு உள்ளானவர்கள் கூறுவார்கள், "எங்கள் இரட்சகரே, நாங்கள் வழிதவறச் செய்தவர்கள் இவர்கள்தான்; நாங்களே வழிதவறிச் சென்று விட்டவர்களாக இருந்ததனால்தான் நாங்கள் அவர்களை வழிதவறச் செய்தோம். இப்போது நாங்கள் எங்களை உமக்கு முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்கின்றோம். அவர்கள் உண்மையில் எங்களை வழிபட்டுக் கொண்டிருக்கவில்லை."
28:64. இவ்வாறு கூறப்படும், "(உங்களுக்கு உதவ) உங்களுடைய போலித்தெய்வங்களை அழையுங்கள்." அவர்கள் அவர்களை அழைப்பார்கள், ஆனால் அவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் தண்டனையால் துன்புறுவார்கள், மேலும் வழிநடத்தப்பட்டவர்களாக இருந்திருக்க வேண்டுமே என விரும்புவார்கள்!
28:65. அந்நாளில், அவர் ஒவ்வொருவரையும் கேட்பார், "தூதர்களுக்கு எவ்வாறு நீங்கள் மறுமொழி அளித்தீர்கள்?"
28:66. அந்நாளின் நிதர்சனங்களால் அவர்கள் மிகவும் திகைத்துப் போயிருப்பார்கள், அவர்கள் பேச்சற்றிருப்பார்கள்.
28:67. வருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் வெற்றியடைந்தோருடன் இருப்பார்கள்.
28:68. உம்முடைய இரட்சகர்தான் அவர் நாடிய எதனையும் படைப்பவர், மேலும் தேர்ந்தெடுப்பவர்; வேறு எவர் ஒருவரும் எதனையும் தேர்ந்தெடுப்பதில்லை. கடவுள் துதிப்பிற்குரியவர், மிகவும் உயர்ந்தவர். பங்குதாரர்கள் தேவைப்படுவதற்கும் அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.
28:69. அவர்களுடைய நெஞ்சங்களில் மறைக்கப்பட்டிருக்கின்ற உள்ளார்ந்த எண்ணங்களையும், அவ்வண்ணமே அவர்கள் அறிவிக்கும் ஒவ்வொன்றையும் உம் இரட்சகர் அறிந்திருக்கின்றார்.
28:70. அவர்தான் ஒரே கடவுள்; அவருடன் வேறு தெய்வம் இல்லை. இந்த முதல் வாழ்விலும், மறுவுலகிலும் அனைத்துப் புகழும் அவருக்குரியது. அனைத்துத் தீர்ப்பும் அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
28:71. கூறுவீராக, "உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை, கடவுள் இரவை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து வேறு எந்தத் தெய்வம், உங்களுக்கு ஒளியை வழங்க முடியும்? நீங்கள் செவியேற்கவில்லையா?"
28:72. கூறுவீராக, "உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை கடவுள் பகலின் ஒளியை நிலைத்திருக்கச் செய்து விட்டால்? கடவுள்-ஐ விடுத்து வேறு எந்தத் தெய்வம் உங்களுடைய ஓய்வுக்கென ஓர் இரவை வழங்க முடியும்? நீங்கள் பார்க்கவில்லையா?"
28:73. (இரவுப்பொழுதில்) ஓய்வெடுப்பதற்காகவும், பின்னர் (பகற்பொழுதில்) அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடுவதற்காகவும், இரவையும் பகலையும் உங்களுக்காக அவர் படைத்திருப்பது அவரிடமிருந்துள்ள கருணையே ஆகும், நீங்கள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு.
28:74. "எனக்குச் சமமாக நீங்கள் புனைந்து கொண்ட அந்த போலித் தெய்வங்கள் எங்கே,?" என்று அவர்களை அவர் கேட்கின்ற அந்நாள் வரும்.
28:75. ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் தேர்ந்தெடுப்போம், பின்னர் "உங்களுடைய சான்றினைக் காட்டுங்கள்," என்று கூறுவோம். சத்தியம் அனைத்தும் கடவுள்-க்குரியது என்பதை அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள், அதேசமயம் அவர்கள் புனைந்து கொண்ட போலித் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.
28:76. (அடிமை மேய்ப்பனான) காரூன் மோஸஸின் சமூகத்தாரில் உள்ளவனாக இருந்து அவர்களுக்குத் துரோக மிழைத்து, அவர்களை அடக்கு முறை செய்தவன் ஆவான். வலிமையான ஒரு குழுவிற்கே கிட்டத்தட்ட மிகவும் கனமாக இருக்கும் அளவுக்கு அதன் சாவிகளைக் கொண்ட ஏராளமான பொக்கிஷங்களை நாம் அவனுக்குத் தந்தோம். அவனுடைய சமூகத்தார் அவனிடம் கூறினர், "ஆணவம் மிகக் கொள்ளாதே; ஆணவம் கொண்டோரைக் கடவுள் நேசிப்பதில்லை.
28:77. "இவ்வுலகில் உனது பங்கை அலட்சியம் செய்திடாமல், கடவுள் உன் மீது அருளிய வாழ்வாதாரங்களை மறுவுலகின் வீட்டைத் தேடப் பயன்படுத்திக்கொள். கடவுள் உன் பால் தாராளமாக இருந்ததைப் போலவே, தாராளமாக நடந்து கொள். தொடர்ந்து பூமியைச் சீர் குலைத்துக் கொண்டிருக்காதே. சீர்குலைப்போரைக் கடவுள் நேசிப்பதில்லை."
28:78. அவன் கூறினான், "இவை அனைத்தையும் என்னுடைய சொந்தச் சாமர்த்தியத்தால் நான் அடைந்தேன்." அவனுக்கு முன்னர் அவனை விடவும் வலிமை மிகுந்த, மேலும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த தலைமுறைகளை கடவுள் அழித்திருக்கின்றார் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லையா? (அழிக்கப்பட்ட) அந்த வரம்புமீறியவர்களிடம் அவர்களுடைய குற்றங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கப்படவில்லை.
28:79. ஒருநாள், முழு அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடம் அவன் வந்தான். இவ்வுலக வாழ்வை விரும்பியவர்கள் கூறினர், "ஆ, காரூன் அடைந்தவற்றை நாங்கள் பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். மெய்யாகவே, அவன் மிகவும் அதிர்ஷ்டக் காரனாக இருக்கிறான்."
28:80. அறிவு கொண்டு ஆசிர்வதிக்கப் பெற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கூறினர், "உங்களுக்குக் கேடுதான், நம்பிக்கை கொண்டு மேலும் நேரிய வாழ்வு நடத்துவோருக்குக் கடவுள்-ன் சன்மானம் மிகவும் மேலானதாகும்." உறுதியோடு இருப்பவர்களைத் தவிர எவரும் இதனை அடைய மாட்டார்கள்.
28:81. பின்னர் நாம் அவனையும் அவனுடைய மாளிகையையும் பூமி விழுங்கும்படிச் செய்தோம். கடவுள்-க் கெதிராக எந்தப் படையும் அவனுக்கு உதவி செய்திருக்க முடியாது; வெற்றி பெற்ற ஒருவனாக இருக்க அவன் விதிக்கப்படவில்லை.
28:82. முந்திய தினம் அவனைக் குறித்துப் பொறாமைப் பட்டவர்கள் கூறினர்,"தன்னுடைய ஊழியர்களில் தான்தேர்ந்தெடுத்தோருக்கு வழங்குபவரும், மேலும் நிறுத்தி வைத்துக் கொள்பவரும் கடவுள்தான் என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டோம். கடவுள்-ன் அருள் நம் பால் இல்லாதிருந்தால், நம்மையும் கூட பூமி விழுங்கும்படிச் செய்திருக்க அவரால் இயலும். நம்பமறுப்பவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள் என்பதை இப்போது நாங்கள் புரிந்து கொண்டோம்."
28:83. பூமியில் பெருமையையோ, அன்றி சீர்குலைவையோ நாடாதவர்களுக்கென மறுவுலக வீட்டை நாம் ஒதுக்கிவைத்துள்ளோம். இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.
28:84. நன்னெறிகள் புரிகின்ற எவராயினும் மிக மேலான வெகுமதியைப் பெறுகின்றார். பாவங்கள் செய்கின்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பாவங்களுக்கான தண்டனை துல்லியமாக அவர்களுடைய காரியங்களுக்குச் சமமானதேயாகும்.
28:85. நிச்சயமாக, இந்தக் குர்ஆனை உமக்கு விதியாக்கிய அந்த ஒருவர், முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு சந்திப்பிற்காக உம்மை வரவழைப்பார். கூறுவீராக, "வழிகாட்டலை ஆதரிப்பவர் எவர் என்றும், வழிதவறிச் சென்று விட்டவர்கள் எவர் என்றும் என் இரட்சகர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்."
28:86. இந்த வேதம் உமது வழியில் வரும் என நீர் ஒரு போதும் எதிர்பார்த்திருக்கவில்லை; ஆனால் இது உம் இரட்சகரிடமிருந்துள்ள கருணையே ஆகும். எனவே, நம்பமறுப்பவர்களுடன் நீர் அணிசேரக் கூடாது.
28:87. அன்றியும், அவை உம்மிடம் வந்து விட்ட பின்னர், கடவுள்-ன் வெளிப்பாடுகளில் இருந்து நீர் திசை திருப்பப்பட்டு விடவேண்டாம், மேலும் மற்றவர்களை உம் இரட்சகரின் பால் அழைப்பீராக. மேலும் எந்த நிலையிலும் போலித் தெய்வ வழிபாட்டில் வீழ்ந்திடாதீர்.
28:88. கடவுள்-வுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் வழிபட வேண்டாம். அவருடன் வேறு தெய்வம் எதுவும் இல்லை. அவருடைய இருப்பைத்தவிர ஒவ்வொன்றும் அழிந்துவிடும். ஆட்சியதிகாரம் அனைத்தும் அவருக்குரியது, மேலும் அவரிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.