Find
Chapter 26: Al-Shu`ara'
26:0-227
227 verses Revelation order 47
سورة الشعراء

. ١:٢٦ طسم

. ٢:٢٦ تِلكَ ءايٰتُ الكِتٰبِ المُبينِ

. ٣:٢٦ لَعَلَّكَ بٰخِعٌ نَفسَكَ أَلّا يَكونوا مُؤمِنينَ

. ٤:٢٦ إِن نَشَأ نُنَزِّل عَلَيهِم مِنَ السَّماءِ ءايَةً فَظَلَّت أَعنٰقُهُم لَها خٰضِعينَ

. ٥:٢٦ وَما يَأتيهِم مِن ذِكرٍ مِنَ الرَّحمٰنِ مُحدَثٍ إِلّا كانوا عَنهُ مُعرِضينَ

. ٦:٢٦ فَقَد كَذَّبوا فَسَيَأتيهِم أَنبٰؤُا۟ ما كانوا بِهِ يَستَهزِءونَ

. ٧:٢٦ أَوَلَم يَرَوا إِلَى الأَرضِ كَم أَنبَتنا فيها مِن كُلِّ زَوجٍ كَريمٍ

. ٨:٢٦ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ٩:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٠:٢٦ وَإِذ نادىٰ رَبُّكَ موسىٰ أَنِ ائتِ القَومَ الظّٰلِمينَ

. ١١:٢٦ قَومَ فِرعَونَ أَلا يَتَّقونَ

. ١٢:٢٦ قالَ رَبِّ إِنّى أَخافُ أَن يُكَذِّبونِ

. ١٣:٢٦ وَيَضيقُ صَدرى وَلا يَنطَلِقُ لِسانى فَأَرسِل إِلىٰ هٰرونَ

. ١٤:٢٦ وَلَهُم عَلَىَّ ذَنبٌ فَأَخافُ أَن يَقتُلونِ

. ١٥:٢٦ قالَ كَلّا فَاذهَبا بِـٔايٰتِنا إِنّا مَعَكُم مُستَمِعونَ

. ١٦:٢٦ فَأتِيا فِرعَونَ فَقولا إِنّا رَسولُ رَبِّ العٰلَمينَ

. ١٧:٢٦ أَن أَرسِل مَعَنا بَنى إِسرٰءيلَ

. ١٨:٢٦ قالَ أَلَم نُرَبِّكَ فينا وَليدًا وَلَبِثتَ فينا مِن عُمُرِكَ سِنينَ

. ١٩:٢٦ وَفَعَلتَ فَعلَتَكَ الَّتى فَعَلتَ وَأَنتَ مِنَ الكٰفِرينَ

. ٢٠:٢٦ قالَ فَعَلتُها إِذًا وَأَنا۠ مِنَ الضّالّينَ

. ٢١:٢٦ فَفَرَرتُ مِنكُم لَمّا خِفتُكُم فَوَهَبَ لى رَبّى حُكمًا وَجَعَلَنى مِنَ المُرسَلينَ

. ٢٢:٢٦ وَتِلكَ نِعمَةٌ تَمُنُّها عَلَىَّ أَن عَبَّدتَ بَنى إِسرٰءيلَ

. ٢٣:٢٦ قالَ فِرعَونُ وَما رَبُّ العٰلَمينَ

. ٢٤:٢٦ قالَ رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما إِن كُنتُم موقِنينَ

. ٢٥:٢٦ قالَ لِمَن حَولَهُ أَلا تَستَمِعونَ

. ٢٦:٢٦ قالَ رَبُّكُم وَرَبُّ ءابائِكُمُ الأَوَّلينَ

. ٢٧:٢٦ قالَ إِنَّ رَسولَكُمُ الَّذى أُرسِلَ إِلَيكُم لَمَجنونٌ

. ٢٨:٢٦ قالَ رَبُّ المَشرِقِ وَالمَغرِبِ وَما بَينَهُما إِن كُنتُم تَعقِلونَ

. ٢٩:٢٦ قالَ لَئِنِ اتَّخَذتَ إِلٰهًا غَيرى لَأَجعَلَنَّكَ مِنَ المَسجونينَ

. ٣٠:٢٦ قالَ أَوَلَو جِئتُكَ بِشَىءٍ مُبينٍ

. ٣١:٢٦ قالَ فَأتِ بِهِ إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

. ٣٢:٢٦ فَأَلقىٰ عَصاهُ فَإِذا هِىَ ثُعبانٌ مُبينٌ

. ٣٣:٢٦ وَنَزَعَ يَدَهُ فَإِذا هِىَ بَيضاءُ لِلنّٰظِرينَ

. ٣٤:٢٦ قالَ لِلمَلَإِ حَولَهُ إِنَّ هٰذا لَسٰحِرٌ عَليمٌ

. ٣٥:٢٦ يُريدُ أَن يُخرِجَكُم مِن أَرضِكُم بِسِحرِهِ فَماذا تَأمُرونَ

. ٣٦:٢٦ قالوا أَرجِه وَأَخاهُ وَابعَث فِى المَدائِنِ حٰشِرينَ

. ٣٧:٢٦ يَأتوكَ بِكُلِّ سَحّارٍ عَليمٍ

. ٣٨:٢٦ فَجُمِعَ السَّحَرَةُ لِميقٰتِ يَومٍ مَعلومٍ

. ٣٩:٢٦ وَقيلَ لِلنّاسِ هَل أَنتُم مُجتَمِعونَ

. ٤٠:٢٦ لَعَلَّنا نَتَّبِعُ السَّحَرَةَ إِن كانوا هُمُ الغٰلِبينَ

. ٤١:٢٦ فَلَمّا جاءَ السَّحَرَةُ قالوا لِفِرعَونَ أَئِنَّ لَنا لَأَجرًا إِن كُنّا نَحنُ الغٰلِبينَ

. ٤٢:٢٦ قالَ نَعَم وَإِنَّكُم إِذًا لَمِنَ المُقَرَّبينَ

. ٤٣:٢٦ قالَ لَهُم موسىٰ أَلقوا ما أَنتُم مُلقونَ

. ٤٤:٢٦ فَأَلقَوا حِبالَهُم وَعِصِيَّهُم وَقالوا بِعِزَّةِ فِرعَونَ إِنّا لَنَحنُ الغٰلِبونَ

. ٤٥:٢٦ فَأَلقىٰ موسىٰ عَصاهُ فَإِذا هِىَ تَلقَفُ ما يَأفِكونَ

. ٤٦:٢٦ فَأُلقِىَ السَّحَرَةُ سٰجِدينَ

. ٤٧:٢٦ قالوا ءامَنّا بِرَبِّ العٰلَمينَ

. ٤٨:٢٦ رَبِّ موسىٰ وَهٰرونَ

. ٤٩:٢٦ قالَ ءامَنتُم لَهُ قَبلَ أَن ءاذَنَ لَكُم إِنَّهُ لَكَبيرُكُمُ الَّذى عَلَّمَكُمُ السِّحرَ فَلَسَوفَ تَعلَمونَ لَأُقَطِّعَنَّ أَيدِيَكُم وَأَرجُلَكُم مِن خِلٰفٍ وَلَأُصَلِّبَنَّكُم أَجمَعينَ

. ٥٠:٢٦ قالوا لا ضَيرَ إِنّا إِلىٰ رَبِّنا مُنقَلِبونَ

. ٥١:٢٦ إِنّا نَطمَعُ أَن يَغفِرَ لَنا رَبُّنا خَطٰيٰنا أَن كُنّا أَوَّلَ المُؤمِنينَ

. ٥٢:٢٦ وَأَوحَينا إِلىٰ موسىٰ أَن أَسرِ بِعِبادى إِنَّكُم مُتَّبَعونَ

. ٥٣:٢٦ فَأَرسَلَ فِرعَونُ فِى المَدائِنِ حٰشِرينَ

. ٥٤:٢٦ إِنَّ هٰؤُلاءِ لَشِرذِمَةٌ قَليلونَ

. ٥٥:٢٦ وَإِنَّهُم لَنا لَغائِظونَ

. ٥٦:٢٦ وَإِنّا لَجَميعٌ حٰذِرونَ

. ٥٧:٢٦ فَأَخرَجنٰهُم مِن جَنّٰتٍ وَعُيونٍ

. ٥٨:٢٦ وَكُنوزٍ وَمَقامٍ كَريمٍ

. ٥٩:٢٦ كَذٰلِكَ وَأَورَثنٰها بَنى إِسرٰءيلَ

. ٦٠:٢٦ فَأَتبَعوهُم مُشرِقينَ

. ٦١:٢٦ فَلَمّا تَرٰءَا الجَمعانِ قالَ أَصحٰبُ موسىٰ إِنّا لَمُدرَكونَ

. ٦٢:٢٦ قالَ كَلّا إِنَّ مَعِىَ رَبّى سَيَهدينِ

. ٦٣:٢٦ فَأَوحَينا إِلىٰ موسىٰ أَنِ اضرِب بِعَصاكَ البَحرَ فَانفَلَقَ فَكانَ كُلُّ فِرقٍ كَالطَّودِ العَظيمِ

. ٦٤:٢٦ وَأَزلَفنا ثَمَّ الـٔاخَرينَ

. ٦٥:٢٦ وَأَنجَينا موسىٰ وَمَن مَعَهُ أَجمَعينَ

. ٦٦:٢٦ ثُمَّ أَغرَقنَا الـٔاخَرينَ

. ٦٧:٢٦ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ٦٨:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ٦٩:٢٦ وَاتلُ عَلَيهِم نَبَأَ إِبرٰهيمَ

. ٧٠:٢٦ إِذ قالَ لِأَبيهِ وَقَومِهِ ما تَعبُدونَ

. ٧١:٢٦ قالوا نَعبُدُ أَصنامًا فَنَظَلُّ لَها عٰكِفينَ

. ٧٢:٢٦ قالَ هَل يَسمَعونَكُم إِذ تَدعونَ

. ٧٣:٢٦ أَو يَنفَعونَكُم أَو يَضُرّونَ

. ٧٤:٢٦ قالوا بَل وَجَدنا ءاباءَنا كَذٰلِكَ يَفعَلونَ

. ٧٥:٢٦ قالَ أَفَرَءَيتُم ما كُنتُم تَعبُدونَ

. ٧٦:٢٦ أَنتُم وَءاباؤُكُمُ الأَقدَمونَ

. ٧٧:٢٦ فَإِنَّهُم عَدُوٌّ لى إِلّا رَبَّ العٰلَمينَ

. ٧٨:٢٦ الَّذى خَلَقَنى فَهُوَ يَهدينِ

. ٧٩:٢٦ وَالَّذى هُوَ يُطعِمُنى وَيَسقينِ

. ٨٠:٢٦ وَإِذا مَرِضتُ فَهُوَ يَشفينِ

. ٨١:٢٦ وَالَّذى يُميتُنى ثُمَّ يُحيينِ

. ٨٢:٢٦ وَالَّذى أَطمَعُ أَن يَغفِرَ لى خَطيـَٔتى يَومَ الدّينِ

. ٨٣:٢٦ رَبِّ هَب لى حُكمًا وَأَلحِقنى بِالصّٰلِحينَ

. ٨٤:٢٦ وَاجعَل لى لِسانَ صِدقٍ فِى الـٔاخِرينَ

. ٨٥:٢٦ وَاجعَلنى مِن وَرَثَةِ جَنَّةِ النَّعيمِ

. ٨٦:٢٦ وَاغفِر لِأَبى إِنَّهُ كانَ مِنَ الضّالّينَ

. ٨٧:٢٦ وَلا تُخزِنى يَومَ يُبعَثونَ

. ٨٨:٢٦ يَومَ لا يَنفَعُ مالٌ وَلا بَنونَ

. ٨٩:٢٦ إِلّا مَن أَتَى اللَّهَ بِقَلبٍ سَليمٍ

. ٩٠:٢٦ وَأُزلِفَتِ الجَنَّةُ لِلمُتَّقينَ

. ٩١:٢٦ وَبُرِّزَتِ الجَحيمُ لِلغاوينَ

. ٩٢:٢٦ وَقيلَ لَهُم أَينَ ما كُنتُم تَعبُدونَ

. ٩٣:٢٦ مِن دونِ اللَّهِ هَل يَنصُرونَكُم أَو يَنتَصِرونَ

. ٩٤:٢٦ فَكُبكِبوا فيها هُم وَالغاوۥنَ

. ٩٥:٢٦ وَجُنودُ إِبليسَ أَجمَعونَ

. ٩٦:٢٦ قالوا وَهُم فيها يَختَصِمونَ

. ٩٧:٢٦ تَاللَّهِ إِن كُنّا لَفى ضَلٰلٍ مُبينٍ

. ٩٨:٢٦ إِذ نُسَوّيكُم بِرَبِّ العٰلَمينَ

. ٩٩:٢٦ وَما أَضَلَّنا إِلَّا المُجرِمونَ

. ١٠٠:٢٦ فَما لَنا مِن شٰفِعينَ

. ١٠١:٢٦ وَلا صَديقٍ حَميمٍ

. ١٠٢:٢٦ فَلَو أَنَّ لَنا كَرَّةً فَنَكونَ مِنَ المُؤمِنينَ

. ١٠٣:٢٦ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ١٠٤:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٠٥:٢٦ كَذَّبَت قَومُ نوحٍ المُرسَلينَ

. ١٠٦:٢٦ إِذ قالَ لَهُم أَخوهُم نوحٌ أَلا تَتَّقونَ

. ١٠٧:٢٦ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ

. ١٠٨:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٠٩:٢٦ وَما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ إِن أَجرِىَ إِلّا عَلىٰ رَبِّ العٰلَمينَ

. ١١٠:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١١١:٢٦ قالوا أَنُؤمِنُ لَكَ وَاتَّبَعَكَ الأَرذَلونَ

. ١١٢:٢٦ قالَ وَما عِلمى بِما كانوا يَعمَلونَ

. ١١٣:٢٦ إِن حِسابُهُم إِلّا عَلىٰ رَبّى لَو تَشعُرونَ

. ١١٤:٢٦ وَما أَنا۠ بِطارِدِ المُؤمِنينَ

. ١١٥:٢٦ إِن أَنا۠ إِلّا نَذيرٌ مُبينٌ

. ١١٦:٢٦ قالوا لَئِن لَم تَنتَهِ يٰنوحُ لَتَكونَنَّ مِنَ المَرجومينَ

. ١١٧:٢٦ قالَ رَبِّ إِنَّ قَومى كَذَّبونِ

. ١١٨:٢٦ فَافتَح بَينى وَبَينَهُم فَتحًا وَنَجِّنى وَمَن مَعِىَ مِنَ المُؤمِنينَ

. ١١٩:٢٦ فَأَنجَينٰهُ وَمَن مَعَهُ فِى الفُلكِ المَشحونِ

. ١٢٠:٢٦ ثُمَّ أَغرَقنا بَعدُ الباقينَ

. ١٢١:٢٦ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ١٢٢:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٢٣:٢٦ كَذَّبَت عادٌ المُرسَلينَ

. ١٢٤:٢٦ إِذ قالَ لَهُم أَخوهُم هودٌ أَلا تَتَّقونَ

. ١٢٥:٢٦ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ

. ١٢٦:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٢٧:٢٦ وَما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ إِن أَجرِىَ إِلّا عَلىٰ رَبِّ العٰلَمينَ

. ١٢٨:٢٦ أَتَبنونَ بِكُلِّ ريعٍ ءايَةً تَعبَثونَ

. ١٢٩:٢٦ وَتَتَّخِذونَ مَصانِعَ لَعَلَّكُم تَخلُدونَ

. ١٣٠:٢٦ وَإِذا بَطَشتُم بَطَشتُم جَبّارينَ

. ١٣١:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٣٢:٢٦ وَاتَّقُوا الَّذى أَمَدَّكُم بِما تَعلَمونَ

. ١٣٣:٢٦ أَمَدَّكُم بِأَنعٰمٍ وَبَنينَ

. ١٣٤:٢٦ وَجَنّٰتٍ وَعُيونٍ

. ١٣٥:٢٦ إِنّى أَخافُ عَلَيكُم عَذابَ يَومٍ عَظيمٍ

. ١٣٦:٢٦ قالوا سَواءٌ عَلَينا أَوَعَظتَ أَم لَم تَكُن مِنَ الوٰعِظينَ

. ١٣٧:٢٦ إِن هٰذا إِلّا خُلُقُ الأَوَّلينَ

. ١٣٨:٢٦ وَما نَحنُ بِمُعَذَّبينَ

. ١٣٩:٢٦ فَكَذَّبوهُ فَأَهلَكنٰهُم إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ١٤٠:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٤١:٢٦ كَذَّبَت ثَمودُ المُرسَلينَ

. ١٤٢:٢٦ إِذ قالَ لَهُم أَخوهُم صٰلِحٌ أَلا تَتَّقونَ

. ١٤٣:٢٦ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ

. ١٤٤:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٤٥:٢٦ وَما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ إِن أَجرِىَ إِلّا عَلىٰ رَبِّ العٰلَمينَ

. ١٤٦:٢٦ أَتُترَكونَ فى ما هٰهُنا ءامِنينَ

. ١٤٧:٢٦ فى جَنّٰتٍ وَعُيونٍ

. ١٤٨:٢٦ وَزُروعٍ وَنَخلٍ طَلعُها هَضيمٌ

. ١٤٩:٢٦ وَتَنحِتونَ مِنَ الجِبالِ بُيوتًا فٰرِهينَ

. ١٥٠:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٥١:٢٦ وَلا تُطيعوا أَمرَ المُسرِفينَ

. ١٥٢:٢٦ الَّذينَ يُفسِدونَ فِى الأَرضِ وَلا يُصلِحونَ

. ١٥٣:٢٦ قالوا إِنَّما أَنتَ مِنَ المُسَحَّرينَ

. ١٥٤:٢٦ ما أَنتَ إِلّا بَشَرٌ مِثلُنا فَأتِ بِـٔايَةٍ إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

. ١٥٥:٢٦ قالَ هٰذِهِ ناقَةٌ لَها شِربٌ وَلَكُم شِربُ يَومٍ مَعلومٍ

. ١٥٦:٢٦ وَلا تَمَسّوها بِسوءٍ فَيَأخُذَكُم عَذابُ يَومٍ عَظيمٍ

. ١٥٧:٢٦ فَعَقَروها فَأَصبَحوا نٰدِمينَ

. ١٥٨:٢٦ فَأَخَذَهُمُ العَذابُ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ١٥٩:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٦٠:٢٦ كَذَّبَت قَومُ لوطٍ المُرسَلينَ

. ١٦١:٢٦ إِذ قالَ لَهُم أَخوهُم لوطٌ أَلا تَتَّقونَ

. ١٦٢:٢٦ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ

. ١٦٣:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٦٤:٢٦ وَما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ إِن أَجرِىَ إِلّا عَلىٰ رَبِّ العٰلَمينَ

. ١٦٥:٢٦ أَتَأتونَ الذُّكرانَ مِنَ العٰلَمينَ

. ١٦٦:٢٦ وَتَذَرونَ ما خَلَقَ لَكُم رَبُّكُم مِن أَزوٰجِكُم بَل أَنتُم قَومٌ عادونَ

. ١٦٧:٢٦ قالوا لَئِن لَم تَنتَهِ يٰلوطُ لَتَكونَنَّ مِنَ المُخرَجينَ

. ١٦٨:٢٦ قالَ إِنّى لِعَمَلِكُم مِنَ القالينَ

. ١٦٩:٢٦ رَبِّ نَجِّنى وَأَهلى مِمّا يَعمَلونَ

. ١٧٠:٢٦ فَنَجَّينٰهُ وَأَهلَهُ أَجمَعينَ

. ١٧١:٢٦ إِلّا عَجوزًا فِى الغٰبِرينَ

. ١٧٢:٢٦ ثُمَّ دَمَّرنَا الـٔاخَرينَ

. ١٧٣:٢٦ وَأَمطَرنا عَلَيهِم مَطَرًا فَساءَ مَطَرُ المُنذَرينَ

. ١٧٤:٢٦ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ١٧٥:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٧٦:٢٦ كَذَّبَ أَصحٰبُ لـَٔيكَةِ المُرسَلينَ

. ١٧٧:٢٦ إِذ قالَ لَهُم شُعَيبٌ أَلا تَتَّقونَ

. ١٧٨:٢٦ إِنّى لَكُم رَسولٌ أَمينٌ

. ١٧٩:٢٦ فَاتَّقُوا اللَّهَ وَأَطيعونِ

. ١٨٠:٢٦ وَما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ إِن أَجرِىَ إِلّا عَلىٰ رَبِّ العٰلَمينَ

. ١٨١:٢٦ أَوفُوا الكَيلَ وَلا تَكونوا مِنَ المُخسِرينَ

. ١٨٢:٢٦ وَزِنوا بِالقِسطاسِ المُستَقيمِ

. ١٨٣:٢٦ وَلا تَبخَسُوا النّاسَ أَشياءَهُم وَلا تَعثَوا فِى الأَرضِ مُفسِدينَ

. ١٨٤:٢٦ وَاتَّقُوا الَّذى خَلَقَكُم وَالجِبِلَّةَ الأَوَّلينَ

. ١٨٥:٢٦ قالوا إِنَّما أَنتَ مِنَ المُسَحَّرينَ

. ١٨٦:٢٦ وَما أَنتَ إِلّا بَشَرٌ مِثلُنا وَإِن نَظُنُّكَ لَمِنَ الكٰذِبينَ

. ١٨٧:٢٦ فَأَسقِط عَلَينا كِسَفًا مِنَ السَّماءِ إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

. ١٨٨:٢٦ قالَ رَبّى أَعلَمُ بِما تَعمَلونَ

. ١٨٩:٢٦ فَكَذَّبوهُ فَأَخَذَهُم عَذابُ يَومِ الظُّلَّةِ إِنَّهُ كانَ عَذابَ يَومٍ عَظيمٍ

. ١٩٠:٢٦ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً وَما كانَ أَكثَرُهُم مُؤمِنينَ

. ١٩١:٢٦ وَإِنَّ رَبَّكَ لَهُوَ العَزيزُ الرَّحيمُ

. ١٩٢:٢٦ وَإِنَّهُ لَتَنزيلُ رَبِّ العٰلَمينَ

. ١٩٣:٢٦ نَزَلَ بِهِ الرّوحُ الأَمينُ

. ١٩٤:٢٦ عَلىٰ قَلبِكَ لِتَكونَ مِنَ المُنذِرينَ

. ١٩٥:٢٦ بِلِسانٍ عَرَبِىٍّ مُبينٍ

. ١٩٦:٢٦ وَإِنَّهُ لَفى زُبُرِ الأَوَّلينَ

. ١٩٧:٢٦ أَوَلَم يَكُن لَهُم ءايَةً أَن يَعلَمَهُ عُلَمٰؤُا۟ بَنى إِسرٰءيلَ

. ١٩٨:٢٦ وَلَو نَزَّلنٰهُ عَلىٰ بَعضِ الأَعجَمينَ

. ١٩٩:٢٦ فَقَرَأَهُ عَلَيهِم ما كانوا بِهِ مُؤمِنينَ

. ٢٠٠:٢٦ كَذٰلِكَ سَلَكنٰهُ فى قُلوبِ المُجرِمينَ

. ٢٠١:٢٦ لا يُؤمِنونَ بِهِ حَتّىٰ يَرَوُا العَذابَ الأَليمَ

. ٢٠٢:٢٦ فَيَأتِيَهُم بَغتَةً وَهُم لا يَشعُرونَ

. ٢٠٣:٢٦ فَيَقولوا هَل نَحنُ مُنظَرونَ

. ٢٠٤:٢٦ أَفَبِعَذابِنا يَستَعجِلونَ

. ٢٠٥:٢٦ أَفَرَءَيتَ إِن مَتَّعنٰهُم سِنينَ

. ٢٠٦:٢٦ ثُمَّ جاءَهُم ما كانوا يوعَدونَ

. ٢٠٧:٢٦ ما أَغنىٰ عَنهُم ما كانوا يُمَتَّعونَ

. ٢٠٨:٢٦ وَما أَهلَكنا مِن قَريَةٍ إِلّا لَها مُنذِرونَ

. ٢٠٩:٢٦ ذِكرىٰ وَما كُنّا ظٰلِمينَ

. ٢١٠:٢٦ وَما تَنَزَّلَت بِهِ الشَّيٰطينُ

. ٢١١:٢٦ وَما يَنبَغى لَهُم وَما يَستَطيعونَ

. ٢١٢:٢٦ إِنَّهُم عَنِ السَّمعِ لَمَعزولونَ

. ٢١٣:٢٦ فَلا تَدعُ مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ فَتَكونَ مِنَ المُعَذَّبينَ

. ٢١٤:٢٦ وَأَنذِر عَشيرَتَكَ الأَقرَبينَ

. ٢١٥:٢٦ وَاخفِض جَناحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ المُؤمِنينَ

. ٢١٦:٢٦ فَإِن عَصَوكَ فَقُل إِنّى بَرىءٌ مِمّا تَعمَلونَ

. ٢١٧:٢٦ وَتَوَكَّل عَلَى العَزيزِ الرَّحيمِ

. ٢١٨:٢٦ الَّذى يَرىٰكَ حينَ تَقومُ

. ٢١٩:٢٦ وَتَقَلُّبَكَ فِى السّٰجِدينَ

. ٢٢٠:٢٦ إِنَّهُ هُوَ السَّميعُ العَليمُ

. ٢٢١:٢٦ هَل أُنَبِّئُكُم عَلىٰ مَن تَنَزَّلُ الشَّيٰطينُ

. ٢٢٢:٢٦ تَنَزَّلُ عَلىٰ كُلِّ أَفّاكٍ أَثيمٍ

. ٢٢٣:٢٦ يُلقونَ السَّمعَ وَأَكثَرُهُم كٰذِبونَ

. ٢٢٤:٢٦ وَالشُّعَراءُ يَتَّبِعُهُمُ الغاوۥنَ

. ٢٢٥:٢٦ أَلَم تَرَ أَنَّهُم فى كُلِّ وادٍ يَهيمونَ

. ٢٢٦:٢٦ وَأَنَّهُم يَقولونَ ما لا يَفعَلونَ

. ٢٢٧:٢٦ إِلَّا الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللَّهَ كَثيرًا وَانتَصَروا مِن بَعدِ ما ظُلِموا وَسَيَعلَمُ الَّذينَ ظَلَموا أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبونَ

The Poets

26:1. T. S. M.*

*26:1 See Appendix 1 for the significance of these previously mysterious letters.

26:2. These (letters) constitute proofs of this clarifying scripture.

26:3. You may blame yourself that they are not believers.

26:4. If we will, we can send from the sky a sign that forces their necks to bow.

26:5. Whenever a reminder from the Most Gracious comes to them, that is new, they turn away in aversion.

26:6. Since they disbelieved, they have incurred the consequences of their heedlessness.

26:7. Have they not seen the earth, and how many kinds of beautiful plants we have grown thereon?

26:8. This should be a sufficient proof for them, but most of them are not believers.

26:9. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:10. Recall that your Lord called Moses: "Go to the transgressing people.

26:11. "Pharaoh's people; perhaps they reform."

26:12. He said, "My Lord, I fear lest they disbelieve me.

26:13. "I may lose my temper. My tongue gets tied; send for my brother Aaron.

26:14. "Also, they consider me a fugitive; I fear lest they kill me."

26:15. He said, "No, (they will not). Go with My proofs. We will be with you, listening.

26:16. "Go to Pharaoh and say, `We are messengers from the Lord of the universe.'

26:17. " `Let the Children of Israel go.' "

26:18. He said, "Did we not raise you from infancy, and you spent many years with us?

26:19. "Then you committed the crime that you committed, and you were ungrateful."

26:20. He said, "Indeed, I did it when I was astray.

26:21. "Then I fled, when I feared you, and my Lord endowed me with wisdom and made me one of the messengers.

26:22. "You are boasting that you did me a favor, while enslaving the Children of Israel!"

26:23. Pharaoh said, "What is the Lord of the universe?"

26:24. He said, "The Lord of the heavens and the earth, and everything between them. You should be certain about this."

26:25. He said to those around him, "Did you hear this?"

26:26. He said, "Your Lord and the Lord of your ancestors."

26:27. He said, "Your messenger who is sent to you is crazy."

26:28. He said, "The Lord of the east and the west, and everything between them, if you understand."

26:29. He said, "If you accept any god, other than me, I will throw you in the prison."

26:30. He said, "What if I show you something profound?"

26:31. He said, "Then produce it, if you are truthful."

26:32. He then threw his staff, whereupon it became a profound snake.

26:33. And he took out his hand, and it was white to the beholders.

26:34. He said to the elders around him, "This is an experienced magician.

26:35. "He wants to take you out of your land, with his magic. What do you suggest?"

26:36. They said, "Respite him and his brother, and send summoners to every town.

26:37. "Let them summon every experienced magician."

26:38. The magicians were gathered at the appointed time, on the appointed day.

26:39. The people were told: "Come one and all; let us gather together here.

26:40. "Maybe we will follow the magicians, if they are the winners."

26:41. When the magicians came, they said to Pharaoh, "Do we get paid, if we are the winners?"

26:42. He said, "Yes indeed; you will even be close to me."

26:43. Moses said to them "Throw what you are going to throw."

26:44. They threw their ropes and sticks, and said, "By Pharaoh's majesty, we will be the victors."

26:45. Moses threw his staff, whereupon it swallowed what they fabricated.

26:46. The magicians fell prostrate.

26:47. They said, "We believe in the Lord of the universe.

26:48. "The Lord of Moses and Aaron."

26:49. He said, "Did you believe with him before I give you permission? He must be your teacher, who taught you magic. You will surely find out. I will cut your hands and feet on alternate sides. I will crucify you all."

26:50. They said, "This will not change our decision; to our Lord we will return.

26:51. "We hope that our Lord will forgive us our sins, especially that we are the first believers."

26:52. We inspired Moses: "Travel with My servants; you will be pursued."

26:53. Pharaoh sent to the cities callers.

26:54. (Proclaiming,) "This is a small gang.

26:55. "They are now opposing us.

26:56. "Let us all beware of them."

26:57. Consequently, we deprived them of gardens and springs.

26:58. And treasures and an honorable position.

26:59. Then we made it an inheritance for the Children of Israel.

26:60. They pursued them towards the east.

26:61. When both parties saw each other, Moses' people said, "We will be caught."

26:62. He said, "No way. My Lord is with me; He will guide me."

26:63. We then inspired Moses: "Strike the sea with your staff," whereupon it parted. Each part was like a great hill.

26:64. We then delivered them all.

26:65. We thus saved Moses and all those who were with him.

26:66. And we drowned the others.

26:67. This should be a sufficient proof, but most people are not believers.

26:68. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:69. Narrate to them Abraham's history.

26:70. He said to his father and his people, "What is this you are worshiping?"

26:71. They said, "We worship statues; we are totally devoted to them."

26:72. He said, "Can they hear you when you implore?

26:73. "Can they benefit you, or harm you?"

26:74. They said, "No; but we found our parents doing this."

26:75. He said, "Do you see these idols that you worship.

26:76. "You and your ancestors.

26:77. "I am against them, for I am devoted only to the Lord of the universe.

26:78. "The One who created me, and guided me.

26:79. "The One who feeds me and waters me.

26:80. "And when I get sick, He heals me.

26:81. "The One who puts me to death, then brings me back to life.

26:82. "The One who hopefully will forgive my sins on the Day of Judgment.

26:83. "My Lord, grant me wisdom, and include me with the righteous.

26:84. "Let the example I set for the future generations be a good one.

26:85. "Make me one of the inheritors of the blissful Paradise.

26:86. "And forgive my father, for he has gone astray.

26:87. "And do not forsake me on the Day of Resurrection."

26:88. That is the day when neither money, nor children, can help.

26:89. Only those who come to God with their whole heart (will be saved).

26:90. Paradise will be presented to the righteous.

26:91. Hell will be set up for the strayers.

26:92. They will be asked, "Where are the idols you had worshiped

26:93. "beside God? Can they help you now? Can they help themselves?"

26:94. They will be thrown therein, together with the strayers.

26:95. And all of Satan's soldiers.

26:96. They will say as they feud therein,

26:97. "By God, we were far astray.

26:98. "How could we set you up to rank with the Lord of the universe?

26:99. "Those who misled us were wicked.

26:100. "Now we have no intercessors.

26:101. "Nor a single close friend.

26:102. "If only we could get another chance, we would then believe."

26:103. This should be a good lesson. But most people are not believers.

26:104. Your Lord is the Almighty, Most Merciful.

26:105. The people of Noah disbelieved the messengers.

26:106. Their brother Noah said to them, "Would you not be righteous?

26:107. "I am an honest messenger to you.

26:108. "You shall reverence God and obey me.

26:109. "I do not ask you for any wage. My wage comes from the Lord of the universe.

26:110. "You shall reverence God and obey me."

26:111. They said, "How can we believe with you, when the worst among us have followed you?"

26:112. He said, "How do I know what they did?

26:113. "Their judgment rests only with my Lord, if you could perceive.

26:114. "I will never dismiss the believers.

26:115. "I am no more than a clarifying warner."

26:116. They said, "Unless you refrain, O Noah, you will be stoned."

26:117. He said, "My Lord, my people have disbelieved me.

26:118. "Grant me victory against them, and deliver me and my company of believers."

26:119. We delivered him and those who accompanied him in the loaded ark.

26:120. Then we drowned the others.

26:121. This should be a lesson, but most people are not believers.

26:122. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:123. `Ãd disbelieved the messengers.

26:124. Their brother Hûd said to them, "Would you not be righteous?

26:125. "I am an honest messenger to you.

26:126. "You shall reverence God, and obey me.

26:127. "I do not ask you for any wage; my wage comes from the Lord of the universe.

26:128. "You build on every hill a mansion for vanity's sake.

26:129. "You set up buildings as if you last forever.

26:130. "And when you strike, you strike mercilessly.

26:131. "You shall reverence God and obey me.

26:132. "Reverence the One who provided you with all the things you know.

26:133. "He provided you with livestock and children.

26:134. "And gardens and springs.

26:135. "I fear for you the retribution of an awesome day."

26:136. They said, "It is the same whether you preach, or not preach.

26:137. "That affliction was limited to our ancestors.

26:138. "No retribution will ever befall us."

26:139. They thus disbelieved and, consequently, we annihilated them. This should be a lesson, but most people are not believers.

26:140. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:141. Thamoud disbelieved the messengers.

26:142. Their brother Sãleh said to them, "Would you not be righteous?

26:143. "I am an honest messenger to you.

26:144. "You shall reverence God, and obey me.

26:145. "I do not ask you for any wage; my wage comes only from the Lord of the universe.

26:146. "Do you suppose you will be left forever, secure in this state?

26:147. "You enjoy gardens and springs.

26:148. "And crops and date palms with delicious fruits.

26:149. "You carve out of the mountains luxurious mansions.

26:150. "You shall reverence God, and obey me.

26:151. "Do not obey the transgressors.

26:152. "Who commit evil, not good works."

26:153. They said, "You are bewitched.

26:154. "You are no more than a human like us. Produce a miracle, if you are truthful."

26:155. He said, "Here is a camel that will drink only on a day that is assigned to her; a day that is different from your specified days of drinking.

26:156. "Do not touch her with any harm, lest you incur retribution on an awesome day."

26:157. They slaughtered her, and thus incurred sorrow.

26:158. The retribution overwhelmed them. This should be a lesson, but most people are not believers.

26:159. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:160. The people of Lot disbelieved the messengers.

26:161. Their brother Lot said to them, "Would you not be righteous?

26:162. "I am an honest messenger to you.

26:163. "You shall reverence God, and obey me.

26:164. "I do not ask you for any wage; my wage comes only from the Lord of the universe.

26:165. "Do you have sex with the males, of all the people?

26:166. "You forsake the wives that your Lord has created for you! Indeed, you are transgressing people."

26:167. They said, "Unless you refrain, O Lot, you will be banished."

26:168. He said, "I deplore your actions."

26:169. "My Lord, save me and my family from their works."

26:170. We saved him and all his family.

26:171. But not the old woman; she was doomed.

26:172. We then destroyed the others.

26:173. We showered them with a miserable shower; what a terrible shower for those who had been warned!

26:174. This should be a lesson, but most people are not believers.

26:175. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:176. The People of the Woods disbelieved the messengers.

26:177. Shu`aib said to them, "Would you not be righteous?

26:178. "I am an honest messenger to you.

26:179. "You shall reverence God, and obey me.

26:180. "I do not ask you for any wage; my wage comes only from the Lord of the universe.

26:181. "You shall give full measure when you trade; do not cheat.

26:182. "You shall weigh with an equitable scale.

26:183. "Do not cheat the people out of their rights, and do not roam the earth corruptingly.

26:184. "Reverence the One who created you and the previous generations."

26:185. They said, "You are bewitched.

26:186. "You are no more than a human being like us. In fact, we think you are a liar.

26:187. "Let masses from the sky fall on us, if you are truthful."

26:188. He said, "My Lord is the One who knows everything you do."

26:189. They disbelieved him and, consequently, they incurred the retribution of the Day of the Canopy. It was the retribution of an awesome day.

26:190. This should be a lesson, but most people are not believers.

26:191. Most assuredly, your Lord is the Almighty, Most Merciful.

26:192. This is a revelation from the Lord of the universe.

26:193. The Honest Spirit (Gabriel) came down with it.

26:194. To reveal it into your heart, that you may be one of the warners.

26:195. In a perfect Arabic tongue.

26:196. It has been prophesied in the books of previous generations.

26:197. Is it not a sufficient sign for them that it was known to the scholars among the Children of Israel?

26:198. If we revealed this to people who do not know Arabic.

26:199. And had him recite it (in Arabic), they could not possibly believe in it.

26:200. We thus render it (like a foreign language) in the hearts of the guilty.

26:201. Thus, they cannot believe in it; not until they see the painful retribution.

26:202. It will come to them suddenly, when they least expect it.

26:203. They will then say, "Can we have a respite?"

26:204. Did they not challenge our retribution?

26:205. As you see, we allowed them to enjoy for years.

26:206. Then the retribution came to them, just as promised.

26:207. Their vast resources did not help them in the least.

26:208. We never annihilate any community without sending warners.

26:209. Therefore, this is a reminder, for we are never unjust.

26:210. The devils can never reveal this.

*26:210 A false messenger is a messenger of Satan, for he is the fabricator of the most horrendous lie. Such a messenger can never denounce idolatry, or preach the worship of God ALONE.

26:211. They neither would, nor could.

26:212. For they are prevented from hearing.

26:213. Therefore, do not idolize beside God any other god, lest you incur the retribution.

26:214. You shall preach to the people who are closest to you.

*26:214-223 These verses refer to God's Messenger of the Covenant: the sum of the gematrical value of "Rashad Khalifa" (1230), plus the verse number (214) is 1230+214=1444=19x76= 19x19x4, and the sum of the verse numbers from 214 through 223 is 2185=19x115 (Appendix 1).

26:215. And lower your wing for the believers who follow you.

26:216. If they disobey you, then say, "I disown what you do."

26:217. And put your trust in the Almighty, Most Merciful.

26:218. Who sees you when you meditate during the night.

26:219. And your frequent prostrations.

26:220. He is the Hearer, the Omniscient.

26:221. Shall I inform you upon whom the devils descend?

26:222. They descend upon every guilty fabricator.

26:223. They pretend to listen, but most of them are liars.

26:224. As for the poets, they are followed only by the strayers.

26:225. Do you not see that their loyalty shifts according to the situation?

26:226. And that they say what they do not do?

26:227. Exempted are those who believe, lead a righteous life, commemorate God frequently, and stand up for their rights. Surely, the transgressors will find out what their ultimate destiny is.

கவிஞர்கள்

26:1. த. ச. ம.*

*26:1 இதற்கு முன்னர் மர்மமாக இருந்த இந்த எழுத்துக்களின் தாத்பர்யத்திற்கு பின் இணைப்பு 1ஐப் பார்க்கவும்.

26:2. (எழுத்துக்களாகிய) இவை தெளிவுபடுத்துகின்ற இவ்வேதத்தின் சான்றுகளாக அமைகின்றன.

26:3. அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இல்லாததால் உம்மையே நீர் பழித்துக் கொள்ளக்கூடும்.

26:4. நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துகளை குனியும்படி அழுத்துகின்றதோர் அத்தாட்சியை விண்ணிலிருந்து நாம் அனுப்பியிருக்க முடியும்.

26:5. மிக்க அருளாளரிடமிருந்து, புதிதானதொரு நினைவூட்டல் அவர்களுக்கு வரும்போதெல்லாம் அவர்கள் வெறுப்பினால் திரும்பிச் சென்று விடுகின்றனர்.

26:6. அவர்கள் நம்பமறுத்த காரணத்தால், அவர்களுடைய கவனமின்மையின் பின்விளைவுகளுக்கு அவர்கள் உள்ளானார்கள்.

26:7. பூமியையும், எத்தனையோ வகையான அழகிய தாவரங்களை நாம் அதன் மீது வளர்த்திருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?

26:8. இது அவர்களுக்குப் போதுமானதொரு சான்றாகத் திகழவேண்டும், ஆனால் அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.

26:9. மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:10. மோஸஸை உம்முடைய இரட்சகர் அழைத்ததை நினைவு கூர்வீராக: "வரம்புமீறுகின்ற மக்களிடம் செல்வீராக.

26:11. "ஃபேரோவின் மக்களிடம்; ஒருவேளை அவர்கள் சீர்திருந்தக் கூடும்."

26:12. அவர் கூறினார், "என் இரட்சகரே, அவர்கள் என்னை நம்பமறுத்து விடுவார்களே என்று நான் அஞ்சுகின்றேன்.

26:13. "நான் என் சுபாவத்தை இழந்துவிடக்கூடும். எனது நாவு பின்னிக்கொள்கின்றது; என்னுடைய சகோதரர் ஆரோனை வரவழைப்பீராக.

26:14. "அத்துடன், அவர்கள் என்னைத் தப்பியோடிய ஒருவன் என்றும் கருதுகின்றனர்; அவர்கள் என்னைக் கொன்று விடக்கூடும் என்று நான் அஞ்சுகின்றேன்."

26:15. அவர் கூறினார், "அல்ல, (அவர்கள் செய்ய மாட்டார்கள்). என்னுடைய சான்றுகளுடன் செல்வீராக. கவனத்துடன் செவியேற்றுக் கொண்டு, நாம் உம்முடன் இருப்போம்.

26:16. "ஃபேரோவிடம் சென்று சொல்லுங்கள், ‘நாங்கள் பிரபஞ்சத்தின் இரட்சகருடைய தூதர்களாவோம்.

26:17. "இஸ்ரேலின் சந்ததியினரை விட்டு விடு"

26:18. அவன் கூறினான், "உம்மை நாம் பாலகப் பருவம் முதல் வளர்க்கவும், நீர் எங்களுடன் ஆண்டுகள் பல கழிக்கவும் இல்லையா?

26:19. "பின்னர் நீர் செய்த அந்தக் குற்றத்தை நீர் செய்தீர், மேலும் நன்றி மறந்தவராக நீர் இருந்தீர்."

26:20. அவர் கூறினார், "ஆம், நான் வழிதவறியவனாக இருந்த போது அதனை நான் செய்தேன்.

26:21. "பின்னர் உன்னை நான் அஞ்சியபோது, நான் தப்பியோடினேன், மேலும் என் இரட்சகர் ஞானத்தைக் கொண்டு எனக்குக் கொடையளித்து தூதர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கினார்.

26:22. "இஸ்ரேலின் சந்ததியினரை நீ அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், எனக்கோர் உபகாரம் செய்து விட்டதாக நீ பெருமை பேசிக் கொள்கின்றாய்!"

26:23. ஃபேரோ கூறினான், "பிரபஞ்சத்தின் இரட்சகர் என்றால் என்ன?

26:24. அவர் கூறினார், வானங்கள் மற்றும் பூமி, இன்னும் அவற்றுக்கிடையிலுள்ள ஒவ்வொன்றுக்கும் இரட்சகர். இது குறித்து நீ உறுதியோடிருக்க வேண்டும்.

26:25. தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அவன் கூறினான், "இதனை நீங்கள் செவியேற்றீர்களா?"

26:26. அவர் கூறினார், "உங்களுடைய இரட்சகர் மற்றும் உங்கள் மூதாதையர்களுடைய இரட்சகர்."

26:27. அவன் கூறினான், "உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்களுடைய தூதர் பித்துப்பிடித்தவராக உள்ளார்."

26:28. அவர் கூறினார், "கிழக்கு மற்றும் மேற்கு, மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றுக்கும் இரட்சகர், நீ புரிந்து கொண்டால்."

26:29. அவன் கூறினான், "என்னை விடுத்து வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் ஏற்றுக்கொண்டால், நான் உம்மை சிறையில் தள்ளிவிடுவேன்."

26:30. அவர் கூறினார், "ஆழ்ந்த ஏதேனும் ஒன்றை நான் உனக்குக் காட்டினால்?"

26:31. அவன் கூறினான், "நீர் உண்மையானவராக இருந்தால், அப்போது அதனைக் கொண்டுவாரும்."

26:32. பின்னர் அவர் தனது தடியை வீசினார், உடனே அது பெரியதொரு பாம்பாக ஆனது.

26:33. மேலும் அவர் தனது கரத்தை வெளியில் எடுத்தார், அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.

26:34. தன்னைச் சுற்றி இருந்த பிரதானிகளிடம் அவன் கூறினான், "இவர் அனுபவமிக்கதோர் மந்திரவாதி.

26:35. "தனது மந்திரத்தால், உங்களுடைய நாட்டை விட்டு உங்களை வெளியேற்ற அவர் விரும்புகின்றார். உங்களுடைய ஆலோசனை என்ன?"

26:36. அவர்கள் கூறினர், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் அவகாசம் அளித்து விட்டு, ஒவ்வொரு நகரத்திற்கும் அழைப்பவர்களை அனுப்புவீராக.

26:37. "அனுபவமிக்க மந்திரவாதி ஒவ்வொருவனையும் அவர்கள் வரவழைக்கட்டும்."

26:38. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், நிர்ணயிக்கப்பட்ட நாள் அன்று, மந்திரவாதிகள் ஒன்று திரட்டப்பட்டிருந்தனர்.

26:39. அந்த மக்களிடம் கூறப்பட்டது: "நீங்கள் அனைவரும் ஒன்றாக வாருங்கள்; நாம் ஒருங்கிணைந்து இங்கே ஒன்றுதிரள்வோம்.

26:40. "மந்திரவாதிகள் வெற்றி பெற்றுவிட்டால், நாம் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்து கொள்ளலாம்."

26:41. மந்திரவாதிகள் வந்தபோது, அவர்கள் ஃபேரோவிடம் கூறினர், "நாங்கள் வெற்றிபெற்று விட்டால், எங்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் அல்லவா?"

26:42. அவன் கூறினான், "ஆம் நிச்சயமாக; நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகவும் இருப்பீர்கள்."

26:43. மோஸஸ் அவர்களிடம் கூறினார் "நீங்கள் வீசப்போவதை வீசுங்கள்."

26:44. அவர்கள் தங்களுடைய கயிறுகளையும் கோல்களையும் வீசினர், மேலும் கூறினர், "ஃபேரோவின் மாட்சிமை மீது ஆணையாக, நாம்தாம் வெற்றி பெற்றவர்களாக இருப்போம்."

26:45. மோஸஸ் தனது கோலை வீசினார், உடனே அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கி விட்டது.

26:46. மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.

26:47. அவர்கள் கூறினர், "பிரபஞ்சத்தின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்.

26:48. "மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்"

26:49. அவன் கூறினான், "நான் உங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்னர் அவருடன் நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மந்திரத்தைக் கற்றுக்கொடுத்த, உங்களுடைய குருவாகத் தான் அவர் இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள், நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்களை வெட்டிவிடுவேன். உங்கள் அனைவரையும் நான் சிலுவையில் அறைந்து விடுவேன்."

26:50. அவர்கள் கூறினர், "இது எங்களுடைய தீர்மானத்தை மாற்றிவிடாது; எங்கள் இரட்சகரிடமே நாங்கள் திரும்பிச் செல்வோம்.

26:51. "குறிப்பிடத்தக்கவாறு, நாங்கள் முதல் நம்பிக்கையாளர்களாக உள்ளோம் என்பதால், எங்கள் இரட்சகர் எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னிப்பார் என நாங்கள் நம்பி எதிர்பார்க்கின்றோம்."

26:52. நாம் மோஸஸுக்கு உள்ளுணர்வளித்தோம்: என் ஊழியர்களுடன் பயணிப்பீராக; நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.

26:53. ஃபேரோ அழைப்பாளர்களை நகரங்களுக்கு அனுப்பினான்.

26:54. "இது ஒரு சிறு கூட்டமே, (எனப் பிரகடனித்தவாறு).

26:55. "இப்போது அவர்கள் நம்மை எதிர்க்கின்றனர்.

26:56. "நாம் அனைவரும் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்வோம்."

26:57. பின் விளைவாக, நாம் அவர்களிடமிருந்து தோட்டங்களையும் ஊற்றுக்களையும் பறித்துக் கொண்டோம்.

26:58. அத்துடன் பொக்கிஷங்களையும் கண்ணியமானதொரு அந்தஸ்தையும்.

26:59. பின்னர் இஸ்ரேலின் சந்ததியினருக்கு ஒரு வாரிசுரிமையாக அதனை நாம் ஆக்கினோம்.

26:60. அவர்கள் கிழக்கு நோக்கி அவர்களைத் தொடர்ந்தனர்.

26:61. இரு கூட்டத்தாரும் ஒருவர் மற்றவரைப் பார்த்த போது, மோஸஸின் சமூகத்தினர் கூறினர், "நாம் பிடிபட்டு விடுவோம்."

26:62. அவர் கூறினார், "வாய்ப்பே இல்லை. என் இரட்சகர் என்னுடன் இருக்கின்றார்; அவர் என்னை வழி நடத்துவார்."

26:63. பின்னர் மோஸஸுக்கு நாம் உள்ளுணர்வளித்தோம்: உமது தடியைக் கொண்டு கடலினை அடிப்பீராக," உடனே அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் மிகப் பெரியதொரு மலையைப் போன்று இருந்தது.

26:64. பின்னர் அவர்கள் அனைவரையும் நாம் கரைசேர்த்தோம்.

26:65. இவ்விதமாக, மோஸஸையும் அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.

26:66. மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.

26:67. போதுமானதொரு சான்றாக இது திகழ வேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

26:68. மிகவும் நிச்சயமாக, உம் இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:69. ஆப்ரஹாமின் வரலாறுதனை அவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக.

26:70. அவர் தன் தந்தையிடமும் தன் சமூகத்தாரிடமும் கூறினார், "நீங்கள் வழிபடுகின்ற இவை என்ன?"

26:71. அவர்கள் கூறினர், "நாங்கள் சிலைகளை வழிபடுகின்றோம்; அவற்றுக்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணித்தவர்களாக உள்ளோம்."

26:72. அவர் கூறினார், "நீங்கள் இறைஞ்சும் போது உங்களைச் செவியேற்க அவற்றால் இயலுமா?

26:73. "உங்களுக்குப் பயன்தரவோ, அல்லது உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அவற்றால் இயலுமா?"

26:74. அவர்கள் கூறினர், "இல்லை; ஆனால் எங்கள் பெற்றோர்கள் இதனைச் செய்ய நாங்கள் கண்டோம்."

26:75. அவர் கூறினார், "நீங்கள் வழிபடுகின்ற இந்தச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்களா.

26:76. "நீங்களும் உங்கள் முன்னோர்களும்.

26:77. "நான் அவற்றுக்கு எதிரானவன், ஏனெனில் நான் பிரபஞ்சத்தின் இரட்சகருக்கு மட்டுமே அர்ப்பணித்துக் கொண்டவன் ஆவேன்.

26:78. "என்னைப் படைத்து, மேலும் எனக்கு வழிகாட்டிய அந்த ஒருவர்.

26:79. "எனக்கு உணவூட்டவும் எனக்கு நீர் புகட்டவும் செய்கின்ற அந்த ஒருவர்.

26:80. "மேலும் நான் நோயுறும் போது, அவர் என்னைக் குணப்படுத்துகின்றார்.

26:81. என்னை மரணத்தில் ஆழ்த்தி, பின்னர் மீண்டும் எனக்கு உயிர் கொடுக்கின்ற அந்த ஒருவர்.

26:82. "தீர்ப்பு நாள் அன்று என் பாவங்களை மன்னிப்பார் என்று நம்பி எதிர்பார்க்கப்படுகின்ற அந்த ஒருவர்.

26:83. "என் இரட்சகரே, எனக்கு ஞானத்தை அருள்வீராக, மேலும் என்னை நன்னெறியாளர்களுடன் சேர்த்துக் கொள்வீராக.

26:84. "வருங்காலத் தலைமுறையினருக்கு நான் அமைக்கும் முன்மாதிரியை நல்லதான ஒன்றாக இருக்கச் செய்வீராக.

26:85. "ஆனந்தமயமான சுவனபதியின் வாரிசுகளில் ஒருவனாக என்னை ஆக்குவீராக.

26:86. "மேலும் என் தந்தையை மன்னிப்பீராக, ஏனெனில் அவர் வழிதவறிச் சென்று விட்டார்.

26:87. "மேலும் உயிர்த்தெழுப்பப்படும் நாள்அன்று என்னைக் கைவிட்டு விடாதிருப்பீராக."

26:88. பணமோ அன்றிப் பிள்ளைகளோ உதவ இயலாத நாள் அதுவாகும்.

26:89. தங்களுடைய முழு இதயத்துடன் கடவுள்-யிடம் வருபவர்கள் மட்டுமே (காப்பாற்றப்படுவார்கள்).

26:90. நன்னெறியாளர்களின் முன்னர் சுவனபதி கொண்டு வரப்படும்.

26:91. வழிதவறித் திரிந்தவர்களுக்காக நரகம் அமைக்கப் படும்.

26:92. அவர்களிடம் கேட்கப்படும், "நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்த போலித் தெய்வங்கள் எங்கே

26:93. கடவுள்-வுடன்? அவர்களால் இப்போது உங்களுக்கு உதவ முடியுமா? அவர்கள் தங்களுக்கேனும் உதவிக் கொள்ள முடியுமா?

26:94. வழிதவறித் திரிந்தவர்களுடன் சேர்த்து, அவர்கள் அதிலே தள்ளப்படுவார்கள்.

26:95. மேலும் சாத்தானின் படைவீரர்கள் அனைவரும்.

26:96. தங்களுக்குள் தர்க்கித்தவர்களாக அங்கே அவர்கள் கூறுவார்கள்,

26:97. "கடவுள் மீது ஆணையாக, நாம் வெகுதூரம் வழி தவறி இருந்தோம்.

26:98. "பிரபஞ்சத்தின் இரட்சகருடன் சமமாக எப்படி நாங்கள் உங்களை அமைத்திருக்கக் கூடும்?

26:99. "எங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தனர்.

26:100. "இப்போது எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் இல்லை.

26:101. "அன்றி ஒரே ஒரு நெருங்கிய நண்பர் கூட.

26:102. மற்றொரு வாய்ப்பை மட்டும் நாங்கள் பெற முடிந்தால், அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்.

26:103. நல்லதொரு படிப்பினையாக இது திகழவேண்டும். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.

26:104. உம்முடைய இரட்சகர் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:105. நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்பமறுத்தனர்.

26:106. அவர்களுடைய சகோதரர் நோவா அவர்களிடம் கூறினார், "நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?

26:107. "நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்.

26:108. "நீங்கள் கடவுள்-யிடம் பக்திசெலுத்தவும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:109. "உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்தே வருகின்றது.

26:110. "நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:111. அவர்கள் கூறினர், "எங்களுக்கிடையில் மிகவும் மோசமானவர்கள் உம்மைப் பின்பற்றிக்கொண்டு இருக்கும்போது, நாங்கள் எப்படி உம்முடன் நம்பிக்கை கொள்ள முடியும்?"

26:112. அவர் கூறினார், "அவர்கள் என்ன செய்தார்கள் என நான் எப்படி அறிவேன்?

26:113. "அவர்களுடைய தீர்ப்பு என் இரட்சகரிடம் மட்டுமே உள்ளது, உங்களால் உணர முடிந்தால்.

26:114. "நம்பிக்கையாளர்களை நான் ஒருபோதும் வெளியேற்றிவிட மாட்டேன்.

26:115. "நான் தெளிவுபடுத்துகின்ற ஓர் எச்சரிப்பவன் என் பதை விட அதிகம் எதுவுமில்லை."

26:116. அவர்கள் கூறினர், நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், நோவாவே, நீர் கல்லாலடித்துக் கொல்லப்படுவீர்."

26:117. அவர் கூறினார், "என் இரட்சகரே, என் சமூகத்தார் என்னை நம்பமறுத்து விட்டனர்.

26:118. "அவர்களுக்கெதிராக எனக்கு வெற்றியை வழங்குவீராக, மேலும் என்னையும் நம்பிக்கை கொண்ட என் குழுமத்தையும் காப்பீராக."

26:119. அவரையும் சுமை நிரம்பிய படகில் அவருடன் கூட இருந்தவர்களையும் நாம் கரை சேர்த்தோம்

26:120. பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்.

26:121. இது ஒரு படிப்பினையாகத் திகழவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

26:122. மிக நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்

26:123. ஆதுகள் தூதர்களை நம்பமறுத்தனர்.

26:124. அவர்களுடைய சகோதரர் ஹூத் அவர்களிடம் கூறினார், "நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?

26:125. "நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்.

26:126. "நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும், எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:127. "நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்தே வருகின்றது

26:128. "நீங்கள் வீண் பகட்டுக்காக ஒவ்வொரு குன்றின் மீதும் ஒரு மாளிகையை கட்டிக்கொள்கின்றீர்கள்.

26:129. "நீங்கள் நிரந்தரமாக நிலைத்திருக்கப் போவதைப் போல் கட்டடங்களை நீங்கள் அமைத்துக் கொள்கின்றீர்கள்.

26:130. "மேலும் நீங்கள் தாக்கும்போது, நீங்கள் ஈவிரக்கமின்றித் தாக்குகின்றீர்கள்.

26:131. "நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:132. "நீங்கள் அறிந்திருக்கும் அனைத்துப் பொருட்களையும் உங்களுக்கு வழங்கிய அந்த ஒருவரிடம் பக்தி செலுத்துங்கள்.

26:133. "அவர் உங்களுக்குக் கால்நடைகளையும் பிள்ளைகளையும் வழங்கினார்.

26:134. "மேலும் தோட்டங்களையும் ஊற்றுக்களையும்.

26:135. "அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்."

26:136. அவர்கள் கூறினர், "நீர் உபதேசித்தாலும், அல்லது உபதேசிக்கவில்லையென்றாலும் அது சமமேயாகும்.

26:137. "அந்தத் துன்பம் எங்களுடைய முன்னோர்கள்வரை மட்டிலுமே இருந்தது.

26:138. "எப்பொழுதும் எங்களுக்கு எந்தத் தண்டனையும் ஏற்படாது."

26:139. இவ்விதமாக அவர்கள் நம்பமறுத்தனர், மேலும், அதன் பின்விளைவாக, அவர்களை நாம் அழித்தோம். இது ஒரு படிப்பினையாகத் திகழ வேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

26:140. மிக நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:141. தமூதுகள் தூதர்களை நம்பமறுத்தனர்.

26:142. அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்," நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?

26:143. "நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்.

26:144. நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும், எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:145. "நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.

26:146. "பாதுகாப்பாக இந்த நிலையிலேயே, நிரந்தரமாக நீங்கள் விட்டு விடப்படுவீர்கள் என்று கருதிக் கொண்டீர்களா?

26:147. "நீங்கள் தோட்டங்களையும் ஊற்றுக்களையும் அனுபவிக்கின்றீர்கள்.

26:148. "மேலும் பயிர்களையும், ருசியான பழங்களுடன் பேரீத்த மரங்களையும்.

26:149. "மலைகளிலிருந்து ஆடம்பரமான மாளிகைகளை நீங்கள் குடைந்து கொள்கின்றீர்கள்.

26:150. "நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும், எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:151. "வரம்புமீறுபவர்களுக்குக் கீழ்ப்படியாதீர்கள்.

26:152. "நல்ல காரியங்கள் அல்லாது, தீமைகள் புரிகின்றவர்களுக்கு."

26:153. அவர்கள் கூறினர், "நீர் சூன்யம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.

26:154. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீர் உண்மையானவராக இருந்தால், ஓர் அற்புதத்தைக் கொண்டு வாரும்."

26:155. "அவர் கூறினார், இதோ, அதற்கென நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாளில் மட்டும் அருந்துகின்ற ஓர் ஒட்டகம்; உங்களுடைய அருந்துதலுக்கெனக் குறிப்பிடப்பட்ட நாட்களிலிருந்து வேறுபட்ட ஒரு நாள்.

26:156. "அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விடாதிருக்கும் பொருட்டு, எந்தத் தீங்கையும் கொண்டு அதனைத் தீண்டாதீர்கள்."

26:157. அவர்கள் அதனை அறுத்துவிட்டனர், மேலும் இவ்விதமாக துக்கத்திற்கு உள்ளாகினர்.

26:158. தண்டனை அவர்களைச் சூழ்ந்து கொண்டது. இது ஒரு படிப்பினையாகத் திகழவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

26:159. மிக நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:160. லோத்தின் சமூகத்தார் தூதர்களை நம்பமறுத்தனர்.

26:161. அவர்களுடைய சகோதரர் லோத் அவர்களிடம் கூறினார், "நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?

26:162. "நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்

26:163. "நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும், எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:164. "நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.

26:165. "மக்கள் அனைவரிலும், ஆண்களுடனா நீங்கள் காமம் கொள்கின்றீர்கள்?

26:166. "உங்களுக்காக உங்களுடைய இரட்சகர் படைத்த மனைவியரை நீங்கள் கைவிட்டு விடுகின்றீர்கள்! உண்மையில், நீங்கள் வரம்புமீறுகின்ற மக்களாகவே இருக்கின்றீர்கள்.

26:167. அவர்கள் கூறினர், "நீர் விலகிக் கொள்ளவில்லை யென்றால், லோத்தே, நீர் நாடுகடத்தப்பட்டவராகி விடுவீர்."

26:168. அவர் கூறினார், "உங்களுடைய செய்கைகளுக்காக நான் மிகவும் வருந்துகின்றேன்.

26:169. "என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக."

26:170. அவரையும் அவருடைய குடும்பம் முழுவதையும் நாம் காப்பாற்றினோம்.

26:171. ஆனால் அந்தக் கிழவியை அல்ல; அவள் அழிக்கப்பட்டவளாக இருந்தாள்.

26:172. பின்னர் நாம் மற்றவர்களை நிலைகுலைத்து விட்டோம்.

26:173. துன்பகரமானதொரு பொழிவு கொண்டு அவர்கள் மீது நாம் பொழிந்தோம்; எச்சரிக்கப்பட்டவர்களாக இருந்தவர்களுக்கு என்ன பயங்கரமானதொரு பொழிவு!

26:174. இது ஒரு படிப்பினையாகத் திகழவேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

26:175. மிக நிச்சயமாக உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:176. வனங்களில் வசித்த மக்களும் தூதர்களை நம்பமறுத்தனர்.

26:177. ஷுஐப் அவர்களிடம் கூறினார், நீங்கள் நன்னெறியாளர்களாக இருக்க மாட்டீர்களா?

26:178. "நான் உங்களுக்கு நேர்மையானதொரு தூதன் ஆவேன்.

26:179. நீங்கள் கடவுள்-யிடம் பக்தி செலுத்தவும், எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

26:180. "நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை; எனது கூலி பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து மட்டுமே வருகின்றது.

26:181. "நீங்கள் வணிகம் செய்யும்போது அளவையை முழுமையாகக் கொடுக்க வேண்டும்; ஏமாற்றி விடாதீர்கள்.

26:182. "நியாயமானதொரு தராசு கொண்டு நீங்கள் எடை போட வேண்டும்.

26:183. "மக்களுடைய உரிமைகளிலிருந்து அவர்களை நீங்கள் ஏமாற்றி விடாதீர்கள், மேலும் சீர்குலைக்கும் முகமாகப் பூமியில் சுற்றித்திரியாதீர்கள்.

26:184. "உங்களையும் முந்திய தலைமுறையினரையும் படைத்த அந்த ஒருவரிடம் பக்தியோடிருங்கள்."

26:185. அவர்கள் கூறினர், "நீர் சூன்யம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.

26:186. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. உண்மையில், நீர் ஒரு பொய்யர் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

26:187. "நீர் உண்மையாளராக இருந்தால், விண்ணிலிருந்து பாளங்கள் எங்கள் மீது விழட்டும்.

26:188. அவர் கூறினார், "என் இரட்சகர்தான் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அறிந்தவர்."

26:189. அவர்கள் அவரை நம்பமறுத்தனர், மேலும் அதன் விளைவாக, விதானத்தின் நாளுடைய தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள். அச்சுறுத்தும் ஒரு நாளின் தண்டனையாக அது இருந்தது.

26:190. இது ஒரு படிப்பினையாகத் திகழ வேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்லர்.

26:191. மிக நிச்சயமாக, உம்முடைய இரட்சகர்தான் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளர்.

26:192. பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடாக இது உள்ளது.

26:193. நேர்மையான ஆவி (கேப்ரியேல்) அதனுடன் இறங்கி வந்தார்.

26:194. உம்முடைய இதயத்தில் அதனை வெளிப்படுத்துவதற்காக, எச்சரிப்பவர்களில் ஒருவராக நீர் இருக்கும் பொருட்டு.

26:195. பூரணமானதோர் அரபி மொழியில்.

26:196. முந்திய தலைமுறையினரின் புத்தகங்களிலும் இது முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

26:197. இஸ்ரேலின் சந்ததியினர்களுக்கிடையில் உள்ள அறிஞர்கள் இதனை அறிந்திருக்கின்றனர் என்பது அவர்களுக்குப் போதுமான ஓர் அத்தாட்சி அல்லவா?

26:198. அரபி மொழி அறியாத மக்களுக்கு இதனை நாம் வெளிப்படுத்தி இருப்போமாயின்.

26:199. மேலும் அவரை (அரபி மொழியில்) இதனை ஓதிக்காட்டச் செய்திருப்போமாயின், அவர்கள் இதனில் நம்பிக்கை கொண்டிருக்கச் சாத்தியமில்லை.

26:200. இவ்விதமாகக் குற்றவாளிகளின் இதயங்களில் இதனை (ஓர் அந்நிய மொழியைப் போல) நாம் ஆக்கி விடுகின்றோம்.

26:201. இவ்விதமாக, அவர்களால் இதனில் நம்பிக்கை கொள்ள இயலாது; வலி நிறைந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை இயலாது.

26:202. அவர்கள் சற்றும் எதிர்பாராத போது, அது அவர்களிடம் திடீரென வரும்.

26:203. அப்போது அவர்கள் கூறுவார்கள், "எங்களுக்கு ஓர் அவகாசமளிக்கப்படுமா?"

26:204. நமது தண்டனைக்கு அவர்கள் சவால் விடவில்லையா?

26:205. நீங்கள் காண்பதைப் போல், ஆண்டுக்கணக்கில் சுகமனுபவிக்க அவர்களை நாம் அனுமதித்தோம்.

26:206. பின்னர் வாக்களிக்கப்பட்ட அதே விதமாக, தண்டனை அவர்களிடம் வந்தது.

26:207. அவர்களுடைய பரந்த செல்வங்கள் அவர்களுக்குச் சிறிதளவும் உதவி செய்யவில்லை.

26:208. எச்சரிப்பவர்களை அனுப்பாமல் எந்தச் சமுதாயத்தையும் நாம் ஒருபோதும் அழிப்பதில்லை.

26:209. எனவே, இது ஒரு நினைவூட்டலாகும், ஏனெனில் நாம் ஒருபோதும் அநீதமிழைப்பவர்கள் அல்லர்.

26:210. சாத்தான்கள் இதனை ஒருபோதும் வெளிப்படுத்த இயலாது.

*26:210 போலியான ஒரு தூதுவன் சாத்தானின் தூதுவன் ஆவான், ஏனெனில் அவன் மிகப் பயங்கரமான பொய்களைப் புனைபவன் ஆவான். இத்தகையதொரு தூதுவனால் போலித் தெய்வ வழிபாட்டைக் கண்டனம் செய்யவோ, கடவுளை மட்டும் வழிபடுவதைப் பிரசாரம் செய்யவோ ஒரு போதும் இயலாது.

26:211. அவர்கள் செய்யவும் மாட்டார்கள், அன்றி இயலவும் செய்யாது.

26:212. ஏனெனில் அவர்கள் செவியேற்பதை விட்டுத் தடுக்கப்பட்டு இருக்கின்றனர்.

26:213. எனவே, தண்டனைக்கு நீர் உள்ளாகாமல் இருக்கும் பொருட்டு, கடவுள்-வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் இணை வழிபாடு செய்யாதீர்.

26:214. உமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களுக்கு நீர் உபதேசம் செய்ய வேண்டும்.

*26:214-223 இந்த வசனங்கள் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிக்கின்றன: ரஷாத் கலீஃபா என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), வசன எண்னை, (214), நாம் கூட்டினால் கூட்டுத்தொகை 1230+214 = 1444 = 19ஒ76 = 19x19x4, மேலும் வசன எண்கள் 214 முதல் 223 வரையிலான வசன எண்களின் கூட்டுத்தொகை 2185 ஆகும் = 19ஒ115 (பின் இணைப்பு1).

26:215. மேலும் உம்மைப் பின்பற்றுகின்ற நம்பிக்கையாளர்களுக்கு உமது இறக்கையைத் தாழ்த்திக் கொள்வீராக.

26:216. அவர்கள் உமக்கு மாறுசெய்தால், பின்னர் கூறி விடும், "நீங்கள் செய்வதிலிருந்து நான் விலகிக் கொண்டேன்."

26:217. மேலும் எல்லாம் வல்லவர், மிக்க கருணையாளரிடம் உமது பொறுப்புக்களை வைத்து விடுவீராக.

26:218. இரவுப் பொழுதில் நீர் தியானிக்கும்போது உம்மைப் பார்ப்பவர்.

26:219. மேலும் அடிக்கடியான உம்முடைய சிரம்பணிதல்களையும்.

26:220. அவர்தான் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

26:221. சாத்தான்கள் எவர்மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

26:222. இட்டுக்கட்டும் குற்றவாளிகள் ஒவ்வொருவர் மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.

26:223. கவனத்தோடு செவியேற்பதாக அவர்கள் பாவனை செய்கின்றனர், ஆனால் அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள் ஆவர்.

26:224. கவிஞர்களைப் பொறுத்தவரை, வழிதவறியவர்களால் மட்டுமே அவர்கள் பின்பற்றப்படுகின்றனர்.

26:225. நிலைக்குத் தக்கவாறு அவர்களுடைய விசுவாசம் மாறுவதை நீங்கள் பார்க்கவில்லையா?

26:226. மேலும் அவர்கள் செய்யாதவற்றை அவர்கள் கூறுகின்றனர் என்பதையும்?

26:227. நம்பிக்கை கொண்டு, நன்னெறியான வாழ்வு நடத்தி, கடவுள்-ஐ அடிக்கடித் துதித்து, மேலும் தங்களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள் விலக்களிக்கப்படுகின்றனர். நிச்சயமாக, வரம்பு மீறுபவர்கள் தங்களுடைய இறுதி விதி என்ன என்பதை கண்டு கொள்வார்கள்.