Find
Chapter 25: Al-Furqan
25:0-77
77 verses Revelation order 42
سورة الفرقان

. ١:٢٥ تَبارَكَ الَّذى نَزَّلَ الفُرقانَ عَلىٰ عَبدِهِ لِيَكونَ لِلعٰلَمينَ نَذيرًا

. ٢:٢٥ الَّذى لَهُ مُلكُ السَّمٰوٰتِ وَالأَرضِ وَلَم يَتَّخِذ وَلَدًا وَلَم يَكُن لَهُ شَريكٌ فِى المُلكِ وَخَلَقَ كُلَّ شَىءٍ فَقَدَّرَهُ تَقديرًا

. ٣:٢٥ وَاتَّخَذوا مِن دونِهِ ءالِهَةً لا يَخلُقونَ شَيـًٔا وَهُم يُخلَقونَ وَلا يَملِكونَ لِأَنفُسِهِم ضَرًّا وَلا نَفعًا وَلا يَملِكونَ مَوتًا وَلا حَيوٰةً وَلا نُشورًا

. ٤:٢٥ وَقالَ الَّذينَ كَفَروا إِن هٰذا إِلّا إِفكٌ افتَرىٰهُ وَأَعانَهُ عَلَيهِ قَومٌ ءاخَرونَ فَقَد جاءو ظُلمًا وَزورًا

. ٥:٢٥ وَقالوا أَسٰطيرُ الأَوَّلينَ اكتَتَبَها فَهِىَ تُملىٰ عَلَيهِ بُكرَةً وَأَصيلًا

. ٦:٢٥ قُل أَنزَلَهُ الَّذى يَعلَمُ السِّرَّ فِى السَّمٰوٰتِ وَالأَرضِ إِنَّهُ كانَ غَفورًا رَحيمًا

. ٧:٢٥ وَقالوا مالِ هٰذَا الرَّسولِ يَأكُلُ الطَّعامَ وَيَمشى فِى الأَسواقِ لَولا أُنزِلَ إِلَيهِ مَلَكٌ فَيَكونَ مَعَهُ نَذيرًا

. ٨:٢٥ أَو يُلقىٰ إِلَيهِ كَنزٌ أَو تَكونُ لَهُ جَنَّةٌ يَأكُلُ مِنها وَقالَ الظّٰلِمونَ إِن تَتَّبِعونَ إِلّا رَجُلًا مَسحورًا

. ٩:٢٥ انظُر كَيفَ ضَرَبوا لَكَ الأَمثٰلَ فَضَلّوا فَلا يَستَطيعونَ سَبيلًا

. ١٠:٢٥ تَبارَكَ الَّذى إِن شاءَ جَعَلَ لَكَ خَيرًا مِن ذٰلِكَ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ وَيَجعَل لَكَ قُصورًا

. ١١:٢٥ بَل كَذَّبوا بِالسّاعَةِ وَأَعتَدنا لِمَن كَذَّبَ بِالسّاعَةِ سَعيرًا

. ١٢:٢٥ إِذا رَأَتهُم مِن مَكانٍ بَعيدٍ سَمِعوا لَها تَغَيُّظًا وَزَفيرًا

. ١٣:٢٥ وَإِذا أُلقوا مِنها مَكانًا ضَيِّقًا مُقَرَّنينَ دَعَوا هُنالِكَ ثُبورًا

. ١٤:٢٥ لا تَدعُوا اليَومَ ثُبورًا وٰحِدًا وَادعوا ثُبورًا كَثيرًا

. ١٥:٢٥ قُل أَذٰلِكَ خَيرٌ أَم جَنَّةُ الخُلدِ الَّتى وُعِدَ المُتَّقونَ كانَت لَهُم جَزاءً وَمَصيرًا

. ١٦:٢٥ لَهُم فيها ما يَشاءونَ خٰلِدينَ كانَ عَلىٰ رَبِّكَ وَعدًا مَسـٔولًا

. ١٧:٢٥ وَيَومَ يَحشُرُهُم وَما يَعبُدونَ مِن دونِ اللَّهِ فَيَقولُ ءَأَنتُم أَضلَلتُم عِبادى هٰؤُلاءِ أَم هُم ضَلُّوا السَّبيلَ

. ١٨:٢٥ قالوا سُبحٰنَكَ ما كانَ يَنبَغى لَنا أَن نَتَّخِذَ مِن دونِكَ مِن أَولِياءَ وَلٰكِن مَتَّعتَهُم وَءاباءَهُم حَتّىٰ نَسُوا الذِّكرَ وَكانوا قَومًا بورًا

. ١٩:٢٥ فَقَد كَذَّبوكُم بِما تَقولونَ فَما تَستَطيعونَ صَرفًا وَلا نَصرًا وَمَن يَظلِم مِنكُم نُذِقهُ عَذابًا كَبيرًا

. ٢٠:٢٥ وَما أَرسَلنا قَبلَكَ مِنَ المُرسَلينَ إِلّا إِنَّهُم لَيَأكُلونَ الطَّعامَ وَيَمشونَ فِى الأَسواقِ وَجَعَلنا بَعضَكُم لِبَعضٍ فِتنَةً أَتَصبِرونَ وَكانَ رَبُّكَ بَصيرًا

. ٢١:٢٥ وَقالَ الَّذينَ لا يَرجونَ لِقاءَنا لَولا أُنزِلَ عَلَينَا المَلٰئِكَةُ أَو نَرىٰ رَبَّنا لَقَدِ استَكبَروا فى أَنفُسِهِم وَعَتَو عُتُوًّا كَبيرًا

. ٢٢:٢٥ يَومَ يَرَونَ المَلٰئِكَةَ لا بُشرىٰ يَومَئِذٍ لِلمُجرِمينَ وَيَقولونَ حِجرًا مَحجورًا

. ٢٣:٢٥ وَقَدِمنا إِلىٰ ما عَمِلوا مِن عَمَلٍ فَجَعَلنٰهُ هَباءً مَنثورًا

. ٢٤:٢٥ أَصحٰبُ الجَنَّةِ يَومَئِذٍ خَيرٌ مُستَقَرًّا وَأَحسَنُ مَقيلًا

. ٢٥:٢٥ وَيَومَ تَشَقَّقُ السَّماءُ بِالغَمٰمِ وَنُزِّلَ المَلٰئِكَةُ تَنزيلًا

. ٢٦:٢٥ المُلكُ يَومَئِذٍ الحَقُّ لِلرَّحمٰنِ وَكانَ يَومًا عَلَى الكٰفِرينَ عَسيرًا

. ٢٧:٢٥ وَيَومَ يَعَضُّ الظّالِمُ عَلىٰ يَدَيهِ يَقولُ يٰلَيتَنِى اتَّخَذتُ مَعَ الرَّسولِ سَبيلًا

. ٢٨:٢٥ يٰوَيلَتىٰ لَيتَنى لَم أَتَّخِذ فُلانًا خَليلًا

. ٢٩:٢٥ لَقَد أَضَلَّنى عَنِ الذِّكرِ بَعدَ إِذ جاءَنى وَكانَ الشَّيطٰنُ لِلإِنسٰنِ خَذولًا

. ٣٠:٢٥ وَقالَ الرَّسولُ يٰرَبِّ إِنَّ قَومِى اتَّخَذوا هٰذَا القُرءانَ مَهجورًا

. ٣١:٢٥ وَكَذٰلِكَ جَعَلنا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِنَ المُجرِمينَ وَكَفىٰ بِرَبِّكَ هادِيًا وَنَصيرًا

. ٣٢:٢٥ وَقالَ الَّذينَ كَفَروا لَولا نُزِّلَ عَلَيهِ القُرءانُ جُملَةً وٰحِدَةً كَذٰلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤادَكَ وَرَتَّلنٰهُ تَرتيلًا

. ٣٣:٢٥ وَلا يَأتونَكَ بِمَثَلٍ إِلّا جِئنٰكَ بِالحَقِّ وَأَحسَنَ تَفسيرًا

. ٣٤:٢٥ الَّذينَ يُحشَرونَ عَلىٰ وُجوهِهِم إِلىٰ جَهَنَّمَ أُولٰئِكَ شَرٌّ مَكانًا وَأَضَلُّ سَبيلًا

. ٣٥:٢٥ وَلَقَد ءاتَينا موسَى الكِتٰبَ وَجَعَلنا مَعَهُ أَخاهُ هٰرونَ وَزيرًا

. ٣٦:٢٥ فَقُلنَا اذهَبا إِلَى القَومِ الَّذينَ كَذَّبوا بِـٔايٰتِنا فَدَمَّرنٰهُم تَدميرًا

. ٣٧:٢٥ وَقَومَ نوحٍ لَمّا كَذَّبُوا الرُّسُلَ أَغرَقنٰهُم وَجَعَلنٰهُم لِلنّاسِ ءايَةً وَأَعتَدنا لِلظّٰلِمينَ عَذابًا أَليمًا

. ٣٨:٢٥ وَعادًا وَثَمودَا۟ وَأَصحٰبَ الرَّسِّ وَقُرونًا بَينَ ذٰلِكَ كَثيرًا

. ٣٩:٢٥ وَكُلًّا ضَرَبنا لَهُ الأَمثٰلَ وَكُلًّا تَبَّرنا تَتبيرًا

. ٤٠:٢٥ وَلَقَد أَتَوا عَلَى القَريَةِ الَّتى أُمطِرَت مَطَرَ السَّوءِ أَفَلَم يَكونوا يَرَونَها بَل كانوا لا يَرجونَ نُشورًا

. ٤١:٢٥ وَإِذا رَأَوكَ إِن يَتَّخِذونَكَ إِلّا هُزُوًا أَهٰذَا الَّذى بَعَثَ اللَّهُ رَسولًا

. ٤٢:٢٥ إِن كادَ لَيُضِلُّنا عَن ءالِهَتِنا لَولا أَن صَبَرنا عَلَيها وَسَوفَ يَعلَمونَ حينَ يَرَونَ العَذابَ مَن أَضَلُّ سَبيلًا

. ٤٣:٢٥ أَرَءَيتَ مَنِ اتَّخَذَ إِلٰهَهُ هَوىٰهُ أَفَأَنتَ تَكونُ عَلَيهِ وَكيلًا

. ٤٤:٢٥ أَم تَحسَبُ أَنَّ أَكثَرَهُم يَسمَعونَ أَو يَعقِلونَ إِن هُم إِلّا كَالأَنعٰمِ بَل هُم أَضَلُّ سَبيلًا

. ٤٥:٢٥ أَلَم تَرَ إِلىٰ رَبِّكَ كَيفَ مَدَّ الظِّلَّ وَلَو شاءَ لَجَعَلَهُ ساكِنًا ثُمَّ جَعَلنَا الشَّمسَ عَلَيهِ دَليلًا

. ٤٦:٢٥ ثُمَّ قَبَضنٰهُ إِلَينا قَبضًا يَسيرًا

. ٤٧:٢٥ وَهُوَ الَّذى جَعَلَ لَكُمُ الَّيلَ لِباسًا وَالنَّومَ سُباتًا وَجَعَلَ النَّهارَ نُشورًا

. ٤٨:٢٥ وَهُوَ الَّذى أَرسَلَ الرِّيٰحَ بُشرًا بَينَ يَدَى رَحمَتِهِ وَأَنزَلنا مِنَ السَّماءِ ماءً طَهورًا

. ٤٩:٢٥ لِنُحـِۧىَ بِهِ بَلدَةً مَيتًا وَنُسقِيَهُ مِمّا خَلَقنا أَنعٰمًا وَأَناسِىَّ كَثيرًا

. ٥٠:٢٥ وَلَقَد صَرَّفنٰهُ بَينَهُم لِيَذَّكَّروا فَأَبىٰ أَكثَرُ النّاسِ إِلّا كُفورًا

. ٥١:٢٥ وَلَو شِئنا لَبَعَثنا فى كُلِّ قَريَةٍ نَذيرًا

. ٥٢:٢٥ فَلا تُطِعِ الكٰفِرينَ وَجٰهِدهُم بِهِ جِهادًا كَبيرًا

. ٥٣:٢٥ وَهُوَ الَّذى مَرَجَ البَحرَينِ هٰذا عَذبٌ فُراتٌ وَهٰذا مِلحٌ أُجاجٌ وَجَعَلَ بَينَهُما بَرزَخًا وَحِجرًا مَحجورًا

. ٥٤:٢٥ وَهُوَ الَّذى خَلَقَ مِنَ الماءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهرًا وَكانَ رَبُّكَ قَديرًا

. ٥٥:٢٥ وَيَعبُدونَ مِن دونِ اللَّهِ ما لا يَنفَعُهُم وَلا يَضُرُّهُم وَكانَ الكافِرُ عَلىٰ رَبِّهِ ظَهيرًا

. ٥٦:٢٥ وَما أَرسَلنٰكَ إِلّا مُبَشِّرًا وَنَذيرًا

. ٥٧:٢٥ قُل ما أَسـَٔلُكُم عَلَيهِ مِن أَجرٍ إِلّا مَن شاءَ أَن يَتَّخِذَ إِلىٰ رَبِّهِ سَبيلًا

. ٥٨:٢٥ وَتَوَكَّل عَلَى الحَىِّ الَّذى لا يَموتُ وَسَبِّح بِحَمدِهِ وَكَفىٰ بِهِ بِذُنوبِ عِبادِهِ خَبيرًا

. ٥٩:٢٥ الَّذى خَلَقَ السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما فى سِتَّةِ أَيّامٍ ثُمَّ استَوىٰ عَلَى العَرشِ الرَّحمٰنُ فَسـَٔل بِهِ خَبيرًا

. ٦٠:٢٥ وَإِذا قيلَ لَهُمُ اسجُدوا لِلرَّحمٰنِ قالوا وَمَا الرَّحمٰنُ أَنَسجُدُ لِما تَأمُرُنا وَزادَهُم نُفورًا

. ٦١:٢٥ تَبارَكَ الَّذى جَعَلَ فِى السَّماءِ بُروجًا وَجَعَلَ فيها سِرٰجًا وَقَمَرًا مُنيرًا

. ٦٢:٢٥ وَهُوَ الَّذى جَعَلَ الَّيلَ وَالنَّهارَ خِلفَةً لِمَن أَرادَ أَن يَذَّكَّرَ أَو أَرادَ شُكورًا

. ٦٣:٢٥ وَعِبادُ الرَّحمٰنِ الَّذينَ يَمشونَ عَلَى الأَرضِ هَونًا وَإِذا خاطَبَهُمُ الجٰهِلونَ قالوا سَلٰمًا

. ٦٤:٢٥ وَالَّذينَ يَبيتونَ لِرَبِّهِم سُجَّدًا وَقِيٰمًا

. ٦٥:٢٥ وَالَّذينَ يَقولونَ رَبَّنَا اصرِف عَنّا عَذابَ جَهَنَّمَ إِنَّ عَذابَها كانَ غَرامًا

. ٦٦:٢٥ إِنَّها ساءَت مُستَقَرًّا وَمُقامًا

. ٦٧:٢٥ وَالَّذينَ إِذا أَنفَقوا لَم يُسرِفوا وَلَم يَقتُروا وَكانَ بَينَ ذٰلِكَ قَوامًا

. ٦٨:٢٥ وَالَّذينَ لا يَدعونَ مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ وَلا يَقتُلونَ النَّفسَ الَّتى حَرَّمَ اللَّهُ إِلّا بِالحَقِّ وَلا يَزنونَ وَمَن يَفعَل ذٰلِكَ يَلقَ أَثامًا

. ٦٩:٢٥ يُضٰعَف لَهُ العَذابُ يَومَ القِيٰمَةِ وَيَخلُد فيهِ مُهانًا

. ٧٠:٢٥ إِلّا مَن تابَ وَءامَنَ وَعَمِلَ عَمَلًا صٰلِحًا فَأُولٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّـٔاتِهِم حَسَنٰتٍ وَكانَ اللَّهُ غَفورًا رَحيمًا

. ٧١:٢٥ وَمَن تابَ وَعَمِلَ صٰلِحًا فَإِنَّهُ يَتوبُ إِلَى اللَّهِ مَتابًا

. ٧٢:٢٥ وَالَّذينَ لا يَشهَدونَ الزّورَ وَإِذا مَرّوا بِاللَّغوِ مَرّوا كِرامًا

. ٧٣:٢٥ وَالَّذينَ إِذا ذُكِّروا بِـٔايٰتِ رَبِّهِم لَم يَخِرّوا عَلَيها صُمًّا وَعُميانًا

. ٧٤:٢٥ وَالَّذينَ يَقولونَ رَبَّنا هَب لَنا مِن أَزوٰجِنا وَذُرِّيّٰتِنا قُرَّةَ أَعيُنٍ وَاجعَلنا لِلمُتَّقينَ إِمامًا

. ٧٥:٢٥ أُولٰئِكَ يُجزَونَ الغُرفَةَ بِما صَبَروا وَيُلَقَّونَ فيها تَحِيَّةً وَسَلٰمًا

. ٧٦:٢٥ خٰلِدينَ فيها حَسُنَت مُستَقَرًّا وَمُقامًا

. ٧٧:٢٥ قُل ما يَعبَؤُا۟ بِكُم رَبّى لَولا دُعاؤُكُم فَقَد كَذَّبتُم فَسَوفَ يَكونُ لِزامًا

The Statute Book

25:1. Most blessed is the One who revealed the Statute Book to His servant, so he can serve as a warner to the whole world.

25:2. The One to whom belongs all sovereignty of the heavens and the earth. He never had a son, nor does He have any partners in sovereignty. He created everything in exact measure; He precisely designed everything.*

*25:2 When we launch astronauts into space, we measure precisely the amount of food, water, oxygen, and other needs throughout the journey. Similarly, God has launched us into space - on board spaceship Earth - and He has designed all kinds of renewable provisions for us and other creatures, a perfect design. Think, for example, of the symbiotic relationship between us and the plants; we use the oxygen they produce in photosynthesis, while they use the carbon dioxide we produce in respiration.

25:3. Yet, they set up beside Him gods who do not create anything - they themselves are created - and who possess no power to even harm or benefit themselves, nor do they possess any power to control life, or death, or resurrection.

25:4. Those who disbelieved said, "This is a fabrication that he produced, with the help of some other people." They have uttered a blasphemy and a falsehood.

25:5. They also said, "Tales from the past that he wrote down; they were dictated to him day and night."*

*25:5 Muhammad's contemporaries knew that he was a literate man who could read and write; he wrote God's revelations with his own hand (see Appendix 28).

25:6. Say, "This was revealed by the One who knows the Secret* in the heavens and the earth. He is Forgiving, Most Merciful."

*25:6 The Quran's miraculous mathematical code, the incontrovertible answer to the disbelievers' claims, remained a divinely guarded secret for 1400 years. God's Messenger of the Covenant was destined to unveil it by God's leave (Appendices 1, 2, & 26).

25:7. And they said, "How come this messenger eats the food and walks in the markets? If only an angel could come down with him, to serve with him as a preacher!"

25:8. Or, "If only a treasure could be given to him!" Or, "If only he could possess an orchard from which he eats!" The transgressors also said, "You are following a bewitched man."

25:9. Note how they called you all kinds of names, and how this led them astray, never to find their way back.

25:10. Most blessed is the One who can, if He wills, give you much better than their demands - gardens with flowing streams, and many mansions.

25:11. In fact, they have disbelieved in the Hour (Day of Resurrection), and we have prepared for those who disbelieve in the Hour a flaming Hell.

25:12. When it sees them from afar, they will hear its rage and fuming.

25:13. And when they are thrown into it, through a narrow place, all shackled, they will declare their remorse.

25:14. You will not declare just a single remorse, on that day; you will suffer through a great number of remorses.

25:15. Say, "Is this better or the eternal Paradise that is promised for the righteous? It is their well deserved reward; a well deserved destiny."

25:16. They get anything they wish therein, forever. This is your Lord's irrevocable promise.

25:17. On the day when He summons them, together with the idols they had set up beside God, He will say, "Have you misled these servants of Mine, or did they go astray on their own?"

25:18. They will say, "Be You glorified, it was not right for us to set up any lords beside You. But You allowed them to enjoy, together with their parents. Consequently, they disregarded the message and thus became wicked people."

25:19. They have disbelieved in the message you have given them, and, consequently, you can neither protect them from the retribution they have incurred, nor can you help them in any way. Anyone among you who commits evil, we will commit him to severe retribution.

25:20. We did not send any messengers before you who did not eat food and walk in the markets. We thus test you by each other; will you steadfastly persevere? Your Lord is Seer.

25:21. Those who do not expect to meet us said, "If only the angels could come down to us, or we could see our Lord (we would then believe)!" Indeed, they have committed a gross arrogance, and have produced a gross blasphemy.

25:22. The day they see the angels, it will not be good news for the guilty; they will say, "Now, we are irreversibly confined."

25:23. We will look at all the works they have done, and render them null and void.

25:24. The dwellers of Paradise are far better on that day; they will hear better news.

25:25. The heaven will break apart, into masses of clouds, and the angels will descend in multitudes.

25:26. All sovereignty on that day belongs to the Most Gracious. For the disbelievers, it will be a difficult day.

25:27. The day will come when the transgressor will bite his hands (in anguish) and say, "Alas, I wish I had followed the path with the messenger.

*25:27-30 This verse refers also to God's Messenger of the Covenant whose name is mathematically coded in the Quran as ``Rashad Khalifa.'' If you write down the gematrical value of ``Rashad'' (505), followed by the gematrical value of ``Khalifa'' (725), followed by this sura number (25), followed by verses 27, 28, 29, and 30, the final number (5057252527282930) is a multiple of 19 (see Appendices 2 & 26 for details). The prophet Muhammad will also make such a statement as in 25:30 on the Day of Judgment.

25:28. "Alas, woe to me, I wish I did not take that person as a friend.

25:29. "He has led me away from the message after it came to me. Indeed, the devil lets down his human victims."

25:30. The messenger* said, "My Lord, my people have deserted this Quran."

*25:27-30 This verse refers also to God's Messenger of the Covenant whose name is mathematically coded in the Quran as ``Rashad Khalifa.'' If you write down the gematrical value of ``Rashad'' (505), followed by the gematrical value of ``Khalifa'' (725), followed by this sura number (25), followed by verses 27, 28, 29, and 30, the final number (5057252527282930) is a multiple of 19 (see Appendices 2 & 26 for details). The prophet Muhammad will also make such a statement as in 25:30 on the Day of Judgment.

25:31. We also set up against every prophet enemies from among the guilty. Your Lord suffices as a guide, a master.

25:32. Those who disbelieved said, "Why did not the Quran come through him all at once?" We have released it to you gradually, in order to fix it in your memory. We have recited it in a specific sequence.

25:33. Whatever argument they come up with, we provide you with the truth, and a better understanding.

25:34. Those who are forcibly summoned to Hell are in the worst position; they are the farthest from the right path.

25:35. We have given Moses the scripture, and appointed his brother Aaron to be his assistant.

25:36. We said, "Go, both of you, to the people who rejected our revelations," and subsequently, we utterly annihilated the rejectors.

25:37. Similarly, when the people of Noah disbelieved the messengers, we drowned them, and we set them up as a sign for the people. We have prepared for the transgressors a painful retribution.

25:38. Also `Ãd, Thamoud, the inhabitants of Al-Russ, and many generations between them.

25:39. To each of these groups, we delivered sufficient examples, before we annihilated them.

25:40. They have passed by the community that was showered with a miserable shower (Sodom). Did they not see it? The fact is, they never believed in resurrection.

25:41. When they saw you, they always ridiculed you: "Is this the one chosen by God to be a messenger?

25:42. "He almost diverted us from our gods, if it were not that we steadfastly persevered with them." They will certainly find out, when they see the retribution, who are the real strayers from the path.

25:43. Have you seen the one whose god is his own ego? Will you be his advocate?

25:44. Do you think that most of them hear, or understand? They are just like animals; no, they are far worse.

25:45. Have you not seen how your Lord designed the shadow? If He willed, He could have made it fixed, then we would have designed the sun accordingly.

25:46. But we designed it to move slowly.

25:47. He is the One who designed the night to be a cover, and for you to sleep and rest. And He made the day a resurrection.

25:48. He is the One who sends the winds with good omens of His mercy, and we send down from the sky pure water.

25:49. With it, we revive dead lands and provide drink for our creations - multitudes of animals and humans.

25:50. We have distributed it among them in exact measure, that they may take heed. But most people insist upon disbelieving.

25:51. If we willed, we could have sent to every community a warner.

25:52. Therefore, do not obey the disbelievers, and strive against them with this, a great striving.

25:53. He is the One who merges the two seas; one is fresh and palatable, while the other is salty and undrinkable. And He separated them with a formidable, inviolable barrier (evaporation).

25:54. He is the One who created from water a human being, then made him reproduce through marriage and mating. Your Lord is Omnipotent.

25:55. Yet, they still set up beside God idols that cannot benefit them, nor harm them. Indeed, the disbeliever is an enemy of his Lord.

25:56. We have sent you (Rashad) as a deliverer of good news, as well as a warner.*

*25:56 The gematrical value of "Rashad Khalifa" (1230), plus the sura and verse number (25+56) give a total of 1230+25+56=1311=19x69.

25:57. Say, "I do not ask you for any money. All I seek is to help you find the right path to your Lord, if this is what you choose."

25:58. You shall put your trust in the One who is Alive - the One who never dies - and praise Him and glorify Him. He is fully Cognizant of His creatures' sins.

25:59. He is the One who created the heavens and the earth, and everything between them, in six days, then assumed all authority. The Most Gracious; ask about Him those who are well founded in knowledge.

25:60. When they are told, "Fall prostrate before the Most Gracious," they say, "What is the Most Gracious? Shall we prostrate before what you advocate?" Thus, it only augments their aversion.

25:61. Most blessed is the One who placed constellations in the sky, and placed in it a lamp, and a shining moon.

25:62. He is the One who designed the night and the day to alternate: a sufficient proof for those who wish to take heed, or to be appreciative.

25:63. The worshipers of the Most Gracious are those who tread the earth gently, and when the ignorant speak to them, they only utter peace.

25:64. In the privacy of the night, they meditate on their Lord, and fall prostrate.

25:65. And they say, "Our Lord, spare us the agony of Hell; its retribution is horrendous.

25:66. "It is the worst abode; the worst destiny."

25:67. When they give, they are neither extravagant nor stingy; they give in moderation.

25:68. They never implore beside God any other god, nor do they kill anyone - for God has made life sacred - except in the course of justice. Nor do they commit adultery. Those who commit these offenses will have to pay.

25:69. Retribution is doubled for them on the Day of Resurrection, and they abide therein humiliated.

25:70. Exempted are those who repent, believe, and lead a righteous life. God transforms their sins into credits. God is Forgiver, Most Merciful.

25:71. Those who repent and lead a righteous life, God redeems them; a complete redemption.

25:72. They do not bear false witness. When they encounter vain talk, they ignore it.

25:73. When reminded of their Lord's revelations, they never react to them as if they were deaf and blind.

25:74. And they say, "Our Lord, let our spouses and children be a source of joy for us, and keep us in the forefront of the righteous."

25:75. These are the ones who attain Paradise in return for their steadfastness; they are received therein with joyous greetings and peace.

25:76. Eternally they abide therein; what a beautiful destiny; what a beautiful abode.

25:77. Say, "You attain value at my Lord only through your worship. But if you disbelieve, you incur the inevitable consequences."

சட்டப்புத்தகம்

25:1. முழு உலகுக்கும் ஓர் எச்சரிப்பவராகப் அவர் பணியாற்றுவதற்காக, தன் ஊழியருக்கு, இந்தச் சட்டப் புத்தகத்தை வெளிப்படுத்திய அந்த ஒருவர், பாக்கியம் மிக்கவர்.

25:2. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் உரிய ஒருவர். ஒருபோதும் அவர் ஒரு மகனைக் கொண்டிருக்கவில்லை, அன்றியும் ஆட்சியதிகாரத்தில் எந்தப் பங்குதாரர்களும் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொன்றையும் மிகச் சரியான அளவில் படைத்தார்; ஒவ்வொன்றையும் அவர் மிகத் துல்லியமாக வடிவமைத்தார்.*

*25:2 விண்வெளி வீரர்களை அண்டவெளிக்குள் நாம் மிதக்க விடும்போது, நாம் உணவு, நீர், பிராணவாயு, மற்றும் பயணம் முழுவதற்குமான மற்றத் தேவைகளை மிகத் துல்லியமாக அளவிடுகின்றோம். அது போலவே, பூமியெனும் விண்கலத்தின் மீது அண்டவெளியில் கடவுள் நம்மை மிதக்க விட்டுள்ளார்-மேலும் நமக்கும் மற்றப் படைப்பினங்களுக்கும் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய அனைத்து வகை வாழ்வாதாரங்களையும், ஒரு மிகச் சரியான வடிவில் வடிவமைத்துள்ளார். உதாரணத்திற்கு, நமக்கும் தாவரங்களுக்கும் இடையில் உள்ள ஒன்றுக்கொன்று இசைவான தொடர்பினை எண்ணிப் பாருங்கள்; ஒளிச்சேர்க்கையின் மூலம் அவை உருவாக்கும் பிராணவாயுவை நாம் பயன்படுத்துகின்றோம், அதே சமயம் சுவாசிக்கும் போது நாம் வெளிப்படுத்தும் கரியமிலவாயுவை அவை பயன்படுத்திக் கொள்கின்றன.

25:3. இருப்பினும், எந்த ஒன்றையும் படைக்காதவற்றை -அவர்களே படைக்கப்பட்டவர்களாக உள்ளனர்-மேலும் தங்களுக்கே நன்மையோ தீமையோ செய்து கொள்ளச் சக்தியற்றவற்றை, அவருடன் தெய்வங்களாக அவர்கள் அமைத்துக் கொள்கின்றனர், அன்றியும் வாழ்வையோ அல்லது மரணத்தையோ அல்லது உயிர்த்தெழுப்புதலையோ கட்டுப்படுத்தும் எந்தச் சக்தியையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை.

25:4. நம்பமறுப்பவர்கள் கூறினர், "இது மற்ற சில மனிதர்களின் உதவியுடன், அவர் உருவாக்கி கொண்ட ஓர் இட்டுக்கட்டலேயாகும்." அவர்கள் ஓர் இறைநிந்தனையையும் ஒரு பொய்மையையும் உதிர்த்து விட்டனர்.

25:5. அத்துடன் அவர்கள் கூறினர், "அவர் எழுதிக் கொண்ட கடந்த காலக் கட்டுக்கதைகள்; அவை அவருக்கு இரவும் பகலும் எழுதிக் கொள்வதற்காக எடுத்துக் கூறப்பட்டன".*

*25:5 முஹம்மதின் சமகாலத்தவர்கள், அவர் எழுதவும் படிக்கவும் தெரிந்த கல்வி கற்ற ஒருவர் என்பதை அறிந்திருந்தனர்; கடவுளின் வெளிப்பாடுகளை அவர் தன் சொந்தக் கரங்களால் எழுதிக் கொண்டார் (பார்க்க பின் இணைப்பு 28).

25:6. கூறும், "வானங்கள் மற்றும் பூமியின் இரகசியங்களை* அறிந்த ஒருவரால் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்."

*25:6 நம்பமறுப்பவர்களின் கூற்றுக்களுக்கு மறுக்க முடியாத பதிலான, குர்ஆனின் அற்புதக் கணிதக் குறியீடு, 1400 வருடங்களாக தெய்வீகமாகப் பாதுகாக்கப்பட்டதோர் இரகசியமாக இருந்து வந்தது. கடவுளின் அனுமதிப்படி அதனைத் திரைவிலக்க, கடவுளின் உடன்படிக்கைத் தூதர் விதிக்கப்பட்டிருந்தார் (பின்இணைப்பு 1, 2 & 26).

25:7. மேலும் அவர்கள் கூறினர், இந்தத் தூதர் உணவுண்டு கொண்டும் அங்காடிகளில் நடந்து கொண்டும் இருப்பது எப்படி? அவருடன் ஒரு பிரசாரகராகப் பணிபுரிய ஒரு வானவர் மட்டும் அவருடன் இறங்கி வரக்கூடு மானால்!

25:8. அல்லது, ஒரு புதையல் மட்டும் அவருக்குக் கொடுக்கப்பட்டால்! அல்லது, அதிலிருந்து அவர் உண்ணுகின்ற ஒரு தோட்டத்தை மட்டும் அவர் பெற்றிருப்பாரானால்! வரம்புமீறுபவர்கள் மேலும் கூறினர், நீங்கள் சூன்யம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகின்றீர்கள்.

25:9. அவர்கள் எப்படி உம்மை எல்லாவிதமான பட்டப் பெயர்களையும் கொண்டு அழைத்தார்கள் என்றும், மேலும் எவ்வாறு இது அவர்களை ஒருபோதும் தங்கள் வழியைத் திரும்பக் காணாதவாறு வழி தவறிச் செல்லச் செய்தது என்பதையும் கவனிப்பீராக.

25:10. பாக்கியம் மிக்க ஒருவரான அவர் நாடினால், அவர்களுடைய கோரிக்கைகளை விடவும் மிகச்சிறந்தவற்றை - பாயும் ஆறுகள் கொண்ட தோட்டங்களையும், ஏராளமான மாளிகைகளையும் - உமக்குத் தர இயலும்.

25:11. உண்மையில், அவர்கள் வேளையின் (உயிர்த்தெழுப் பப்படுகின்ற நாள்), மீது நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டனர், மேலும் வேளையின் மீது நம்பிக்கை கொள்ள மறுத்தவர்களுக்காக கொழுந்து விட்டெரியும் நரகத்தை நாம் தயார் செய்துள்ளோம்.

25:12. அது அவர்களைத் தொலைவிலிருந்து காணும் பொழுதே, அவர்கள் அதன் கோபத்தையும் சீற்றத்தையும் செவியேற்பார்கள்.

25:13. மேலும் ஒரு குறுகிய இடத்தின் ஊடே, முற்றிலும் தளைகள் இடப்பட்டவர்களாக, அவர்கள் அதில் எறியப்படும்பொழுது, தங்களுடைய கைசேதத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.

25:14. அந்நாளன்று, நீங்கள் ஒரே ஒரு கைசேதத்தை மட்டும் வெளிப்படுத்தமாட்டீர்கள்; மிக அதிக எண்ணிக்கையிலான கைசேதங்களின் மூலம் நீங்கள் துயரப்படுவீர்கள்.

25:15. கூறுவீராக, "இது மேலானதா, அல்லது நன்னெறியாளர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் நிரந்தரமான சுவனமா? அது அவர்களுக்கு நன்கு தகுதியான வெகுமதி; நன்கு தகுதியான ஒரு விதி."

25:16. அங்கே அவர்கள் விரும்புகின்ற எதுவும், என்றென்றும் அவர்களுக்குக் கிடைக்கும். இது உம்முடைய இரட்சகரின் திரும்பப் பெற முடியாத வாக்குறுதியாகும்.

25:17. கடவுள்-வுடன் அவர்கள் அமைத்துக் கொண்ட போலித் தெய்வங்களுடன் சேர்த்து, அவர்களை அவர் அழைக்கும் அந்நாளில், அவர் கூறுவார், என்னுடைய இந்த சேவகர்களை நீங்கள் வழிகெடுத்தீர்களா, அல்லது அவர்கள் தாங்களாகவே வழிதவறிச் சென்றனரா?

25:18. அவர்கள் கூறுவர், நீரே துதிப்பிற்குரியவர், உம்முடன் எந்த எஜமானர்களையும் அமைத்துக் கொள்வதென்பது எங்களுக்குச் ஏற்புடையதாக இருந்ததில்லை. ஆனால் அவர்களை, அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து மகிழ நீர் அனுமதித்தீர். அதன் விளைவாக, அவர்கள் தூதுச்செய்தியைப் புறக்கணித்தனர், மேலும் இவ்விதமாகத் தீய மக்களானார்கள்.

25:19. நீங்கள் அவர்களுக்குக் கொடுத்த தூதுச் செய்தியை அவர்கள் நம்பமறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் உள்ளாகியிருக்கும் தண்டனையிலிருந்து உங்களால் அவர்களைக்காக்க இயலாது, அன்றியும் எந்த வகையிலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யவும் முடியாது. உங்களில் தீமை செய்கின்ற எவராயினும், அவரை நாம் கடுமையான தண்டனையிலிட்டு விடுவோம்.

25:20. உணவுண்ணாத, மேலும் அங்காடிகளில் நடந்து போகாத எந்தத் தூதர்களையும் உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. இவ்விதமாக நாம் உங்களை ஒருவரையொருவர் மூலம் சோதனை செய்கின்றோம்; நீங்கள் உறுதியோடு சகித்துக் கொண்டிருப்பீர்களா? உம்முடைய இரட்சகர் பார்ப்பவர்.

25:21. நம்மைச் சந்திப்பதை எதிர்பார்க்காதிருப்பவர்கள் கூறினர், "வானவர்கள் மட்டும் நம்மிடம் இறங்கி வரக்கூடுமானால், அல்லது நாம் நம்முடைய இரட்சகரைப் பார்க்க முடிந்தால் (அப்போது நாங்கள் நம்பிக்கை கொள்வோம்)!" உண்மையில், அவர்கள் மிகப் பெரும் ஆணவம் புரிந்து விட்டனர், மேலும் மிகப் பெரியதோர் இறைநிந்தனையைச் செய்து விட்டனர்.

25:22. வானவர்களை அவர்கள் காணும் அந்நாளில், குற்றவாளிகளுக்கு அது நற்செய்தியாக இருக்காது; அவர்கள் கூறுவர், "இப்பொழுது, நாம் திரும்பிச் செல்ல முடியாதவாறு அடைக்கப்பட்டு விட்டோம்."

25:23. அவர்கள் செய்தகாரியங்கள் அனைத்தையும் நாம் நோட்டமிடுவோம், மேலும் அவற்றை செல்லாததாகவும் பயனற்றதாகவும் ஆக்கி விடுவோம்.

25:24. அந்நாளில் சுவர்க்கவாசிகள் மிகவும் மேலானவர்கள் ஆவார்கள்; அவர்கள் நல்ல செய்திகளைக் கேட்பார்கள்.

25:25. மேகங்களின் பாளங்களாக, வானம் உடைந்து துண்டாகி விடும், மேலும் எண்ணிலடங்காமல் வானவர்கள் இறங்கி வருவார்கள்.

25:26. ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் மிக்க அருளாளருக்கே உரியதாகும். நம்பமறுப்பவர்களுக்கோ, அது ஒரு கடினமான நாளாக இருக்கும்.

25:27. வரம்புமீறுபவன் (தாங்கொண்ணாத் துயரத்தால்) தன் கரங்களைக் கடித்துக் கொள்ளும் அந்நாள் வரும், மேலும் கூறுவான், "ஐயோ, தூதருடன் அவ்வழியை நானும் பின்பற்றியிருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

*25:27-30 இந்த வசனம் ரஷாத் கலீஃபா என்று அவருடைய பெயரைக் கணித அடிப்படையில் குர்ஆனில் குறியீடு செய்யப்பட்டுள்ள கடவுளின் உடன்படிக்கைத் தூதரையும் குறிக்கின்றது. ரஷாத் என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (505), தொடர்ந்து கலீஃபா என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725) தொடர்ந்து, இந்தச் சூராவின் எண்ணையும் (25), தொடர்ந்து வசனங்கள் 27, 28, 29 மற்றும் 30 ஆகியவற்றையும் நாம் எழுதினால், இறுதியில் கிடைக்கும் எண் (5057252527282930) 19ன் ஒரு பெருக்குத் தொகையாகும் (விபரங்கட்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐப் பார்க்கவும்). 25:30ல் உள்ளபடி தீர்ப்பு நாளின்போது முஹம்மத் நபியும் இத்தகையதொரு வாக்குமூலத்தை அளிப்பார்.

25:28. "ஐயோ, எனக்குக் கேடே, ஒரு நண்பனாக அந்த மனிதனை நான் எடுத்துக் கொள்ளாதிருந்திருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.

25:29. "தூதுச் செய்தி என்னிடம் வந்து விட்ட பின்னர், அதனை விட்டும் என்னை அவன் திருப்பிவிட்டான். உண்மையில், சாத்தான் தன்னுடைய மனிதப் பலிகளைக் கைவிட்டு விடுகின்றான்."

25:30. தூதர்* கூறினார், என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்.

25:31. ஒவ்வொரு நபிக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதிகளையும் நாம் அமைக்கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.

25:32. நம்பமறுப்பவர்கள் கூறினர், "ஏன் இந்தக் குர்ஆன் மொத்தமும் ஒரே தடவையில் அவர் மூலம் வரவில்லை?" உமது நினைவில் அதனை நிறுத்துவதற்காக, அதனை நாம் உமக்குப் படிப்படியாக விடுவித்தோம். குறிப்பிட்டதொரு வரிசைக் கிரமத்தில் அதனை நாம் ஓதிக்காட்டியுள்ளோம்.

25:33. எவ்விதமான வாதத்துடன் அவர்கள் வந்தாலும், உமக்கு நாம் சத்தியத்தையும், மேலானதொரு புரிந்து கொள்ளுதலையும் வழங்குகின்றோம்.

25:34. வலுக்கட்டாயமாக நரகத்திற்கு வரவழைக்கப்படுபவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர்; அவர்கள்தான் சரியான பாதையிலிருந்து வெகு தொலைவில் இருப்பவர்கள்.

25:35. நாம் மோஸஸுக்கு வேதத்தைக் கொடுத்தோம், மேலும் அவருக்கு உதவியாளராக இருப்பதற்காக அவருடைய சகோதரர் ஆரோனை நியமித்தோம்.

25:36. நாம் கூறினோம், "நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்த மக்களிடம், நீங்கள் இருவரும் செல்லுங்கள்," மேலும் அதன் பின்னர், நிராகரித்தவர்களை நாம் முற்றிலுமாக அழித்து விட்டோம்.

25:37. அது போலவே, நோவாவின் சமூகத்தார் தூதர்களை நம்பமறுத்தபோது, அவர்களை நாம் மூழ்கடித்தோம், மேலும் அவர்களை மக்களுக்கான ஓர் அத்தாட்சியாகவும் நாம் அமைத்தோம். வரம்புமீறுபவர்களுக்கு வலிநிறைந்ததொரு தண்டனையை நாம் தயாரித்துள்ளோம்.

25:38. அத்துடன் ஆத், தமூது, அல்-ரஸ் வாசிகள், மேலும் அவர்களுக்கிடையில் ஏராளமான தலைமுறையினர்.

25:39. இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும், அவர்களை நாம் அழித்திடும் முன்னர், போதுமான உதாரணங்களை நாம் சேர்ப்பித்தோம்.

25:40. துன்பகரமானதொரு பொழிவினைக் கொண்டு பொழியப்பட்ட (ஸாடம்) சமுதாயத்தைக் கடந்து அவர்கள் கடந்துள்ளனர். அவர்கள் அதனைப் பார்க்க வில்லையா? நிதர்சனமாவது, உயிர்த்தெழுப்புதல் மீது அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள வில்லை.

25:41. அவர்கள் உம்மைக் கண்ட போதெல்லாம், அவர்கள் உம்மை எப்பொழுதும் கேலி செய்தனர்: ஒரு தூதராக இருப்பதற்குக் கடவுள்-ஆல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்தானா?

25:42. "நம்முடைய தெய்வங்களிலிருந்து அவர் கிட்டத்தட்ட நம்மைத் திருப்பி விட்டார், நாம் அவற்றுடன் உறுதியோடு சகித்துக் கொண்டு இருந்திராவிட்டால்." தண்டனையை அவர்கள் காணும்போது, பாதையிலிருந்து மெய்யாகவே வழிதவறியவர்கள் யார் என்பதை அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.

25:43. தன் சொந்த அகந்தையையே தெய்வமாகக் கொண்ட ஒருவனை நீர் பார்த்தீரா? அவனுடைய வழக்குரைஞராக நீர் இருப்பீரா?

25:44. அவர்களில் அதிகமானோர் செவியேற்கின்றனர், அல்லது புரிந்து கொள்கின்றனர் என்று நீர் நினைக்கின்றீரா? அவர்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்களே; அல்ல, அவர்கள் அதைவிடவும் மோசமானவர்கள்.

25:45. உம் இரட்சகர் எவ்வாறு நிழலை வடிவமைத்துள்ளார் என்பதை நீர் பார்க்கவில்லையா? அவர் நாடியிருந்தால், அதனை அவர் நிலையானதாக ஆக்கியிருக்க முடியும், அப்போது நாம் அதற்கேற்றவாறு சூரியனை வடிவமைத்திருப்போம்.

25:46. ஆனால் அதனை மெதுவாக நகரும்படி நாம் வடிவமைத்தோம்.

25:47. அவர்தான் ஒரு மறைப்பாகவும், நீங்கள் உறங்கி ஓய்வெடுப்பதற்காகவும் இரவை வடிவமைத்தவர். மேலும் பகலை ஓர் உயிர்த்தெழுப்புதலாக அவர் ஆக்கினார்.

25:48. அவர்தான் தன்னுடைய கருணையின் நற்சகுனங்களுடன் காற்றுகளை அனுப்புபவர், மேலும் விண்ணிலிருந்து தூய்மையான தண்ணீரை நாம் இறக்கி அனுப்புகின்றோம்.

25:49. அதனைக் கொண்டு, இறந்த நிலங்களை நாம் உயிர்ப்பிக்கின்றோம், மேலும் நம் படைப்புக்களுக்கு -எண்ணற்ற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும்- பானம் வழங்குகின்றோம்.

25:50. அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கிடையில் மிகச் சரியாக அதனை நாம் பங்கிட்டோம். ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பமறுப்பதை வலியுறுத்துகின்றனர்.

25:51. நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஊருக்கும் ஓர் எச்சரிப்பவரை அனுப்பியிருக்க நம்மால் முடியும்.

25:52. எனவே, நம்பமறுப்பவர்களுக்குக் கீழ்ப்படியாதீர், மேலும் இதனைக்கொண்டு அவர்களுக்கெதிராகப் பாடுபடுவீராக, ஒரு மிகப்பெரும் பாடு.

25:53. அவர்தான் இரு கடல்களையும் கலப்பவர்; ஒன்று புத்துணர்வூட்டுவதாகவும் நாவிற்கினியதாகவும் உள்ளது, அதே சமயம் மற்றொன்று உப்பாகவும் அருந்த முடியாததாகவும் உள்ளது. மேலும் அவர் வலிமையான, மீறமுடியாததொரு தடை (ஆவியாதல்) கொண்டு அவற்றைப் பிரித்தார்.

25:54. அவர்தான் தண்ணீரிலிருந்து ஒரு மனிதனைப் படைத்து, பின்னர் திருமணம் மற்றும் கலவியின் மூலம் அவனை இனப்பெருக்கம் செய்யச் செய்தார். உம் இரட்சகர் சர்வ சக்தியுடையவர்.

25:55. ஆயினும், அவர்களுக்கு நன்மை செய்யவோ, அன்றி அவர்களுக்குத் தீமை செய்யவோ இயலாத போலித் தெய்வங்களை அப்போதும் அவர்கள் கடவுள்-வுடன் அமைத்துக் கொள்கின்றனர். உண்மையில், நம்பமறுப்பவன் தன்னுடைய இரட்சகரின் ஒரு விரோதியாவான்.

25:56. நற்செய்தியைச் சேர்ப்பிக்கின்ற ஒருவராகவும், அவ் வண்ணமே ஓர் எச்சரிப்பவராகவும் (ரஷாத்) உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.*

*25:56 ரஷாத் கலீஃபா என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), சூரா மற்றும் வசன எண்களை (25+56) நாம் கூட்டினால் கிடைக்கப் பெறும் கூட்டுத் தொகை 1230+25+56 = 1311 = 19x69.

25:57. கூறும், நான் உங்களிடம் பணம் எதுவும் கேட்க வில்லை. நான் முனைவதெல்லாம் உங்கள் இரட்சகரி டம் செல்லும் சரியான பாதையைக் கண்டு கொள்ள உங்களுக்கு உதவி செய்வதுதான், இதனை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வதாக இருந்தால்.

25:58. உயிரோடிருக்கும் ஒருவரிடம் நீர் உமது பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் - ஒருபோதும் இறவாத ஒருவர் - மேலும் அவரைப் புகழவும் அவரை துதிக்கவும் செய்வீராக. தன்னுடைய படைப்பினங்களின் பாவங்களை அவர் முற்றிலும் நன்கறிந்திருக்கின்றார்.

25:59. அவர்தான் வானங்களையும் பூமியையும், மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஆறு நாட்களில் படைத்தவர், பின்னர் அனைத்து அதிகாரங்களையும் ஏற்றுக்கொண்டார். மிக்க அருளாளர்; அறிவில் நன்கு ஊன்றியவர்களிடம் அவரைப் பற்றிக் கேட்பீராக.

25:60. மிக்க அருளாளரின் முன்னர் சிரம் பணிந்து விழுங்கள், என்று அவர்களிடம் கூறப்படும்போது, அவர்கள் கூறுகின்றனர், மிக்க அருளாளர் என்றால் என்ன? நீர் ஆதரிப்பவற்றுக்கு முன்னால் எல்லாம் நாங்கள் சிரம் பணிய வேண்டுமா? இவ்விதமாக, அது அவர்களுடைய வெறுப்பைத்தான் அதிகரிக்கின்றது.

25:61. விண்ணில் நட்சத்திரக் கூட்டங்களை அமைத்து, மேலும் அதில் ஒரு விளக்கையும், பிரகாசிக்கும் ஒரு நிலவையும் அமைத்த அந்த ஒருவர் பாக்கியம் மிக்கவர்.

25:62. அவர்தான் மாறி மாறி வருமாறு இரவையும் பகலையும் வடிவமைத்தவர்: கவனத்தில் எடுத்துக் கொள்ள, அல்லது நன்றியுடையவராக இருக்க விரும்புவோருக்குப் போதுமானதொரு சான்று.

25:63. பூமியில் சாந்தமாக நடமாடுபவர்களே மிக்க அருளாளரை வழிபடுபவர்கள் ஆவர், மேலும் அறியாதவர்கள் அவர்களிடம் பேசும்போது, அவர்கள் சாந்தியை மட்டுமே உதிர்ப்பார்கள்.

25:64. இரவின் தனிமையில், அவர்கள் தங்களுடைய இரட்சகரைத் தியானிப்பார்கள், மேலும் சிரம் பணிந்து விழுவார்கள்.

25:65. மேலும் அவர்கள் கூறுவர், "எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.

25:66. "மிக மோசமான தங்குமிடம் அதுவேயாகும்; மிக மோசமான விதி."

25:67. அவர்கள் கொடுக்கும்பொழுது ஊதாரித்தனமாகவோ அன்றி கஞ்சத்தனமாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்கள் நடுத்தரமாகக் கொடுப்பார்கள்.

25:68. கடவுள்-வுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் அவர்கள் ஒருபோதும் இறைஞ்ச மாட்டார்கள், அன்றியும் எவர் ஒருவரையும் அவர்கள் கொலை செய்ய மாட்டார்கள் - ஏனெனில் கடவுள் உயிரினைப் புனிதமானதாக ஆக்கியிருக்கின்றார் - நீதியின் போக்கிலேயே தவிர. அன்றி அவர்கள் விபசாரமும் செய்ய மாட்டார்கள். இந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும்

25:69. உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று அவர்களுக்குரிய தண்டனை இருமடங்காக்கப்படும், மேலும் இழிவு படுத்தப்பட்டவர்களாக அதிலே அவர்கள் வசிப்பார்கள்.

25:70. வருந்தி, நம்பிக்கை கொண்டு, மேலும் நன்னெறியான வாழ்வு நடத்துபவர்கள் விதிவிலக்களிப்படுகின்றனர். அவர்களுடைய பாவங்களைக் கடவுள் நன்மையின் வரவுகளாக மாற்றிவிடுவார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

25:71. எவர்கள் வருந்தி, மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றனரோ, அவர்களைக் கடவுள் மீட்டுக்கொள்கின்றார்; ஒரு முழுமையான மீட்சி.

25:72. அவர்கள் பொய்சாட்சி பகரமாட்டார்கள். வீண் பேச்சினை அவர்கள் எதிர்கொள்ளும் போது, அவர்கள் அதனை அலட்சியம் செய்து விடுவார்கள்.

25:73. அவர்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளைப் கொண்டு நினைவூட்டப்படும் போது, அவற்றின் பால் அவர்கள் செவிடர்களையும் குருடர்களையும் போன்று ஒருபோதும் அவர்கள் நடந்து கொள்ள மாட்டார்கள்.

25:74. மேலும் அவர்கள் கூறுவர், "எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் பிள்ளைகளும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களின் முன்னணியில் எங்களை வைப்பீராக."

25:75. தங்களுடைய உறுதிப்பாட்டுக்குப் பகரமாக சுவனத்தை அடைபவர்கள் இவர்கள்தான்; இன்பகரமான வாழ்த்துகளுடனும் சாந்தியுடனும் அங்கே அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.

25:76. அங்கே நிரந்தரமாக அவர்கள் தங்கியிருப்பார்கள்; என்ன ஓர் அழகிய விதி; என்ன ஓர் அழகிய தங்குமிடம்.

25:77. கூறுவீராக, "உங்களுடைய வழிபாட்டின் மூலம் மட்டுமே என் இரட்சகரிடம் நீங்கள் நன்மதிப்பை அடைகின்றீர்கள். ஆனால் நீங்கள் நம்பமறுத்து விட்டால், தவிர்த்து விட முடியாத பின்விளைவுகளுக்கு நீங்கள் உள்ளாகின்றீர்கள்."