. ١:٢٢ يٰأَيُّهَا النّاسُ اتَّقوا رَبَّكُم إِنَّ زَلزَلَةَ السّاعَةِ شَىءٌ عَظيمٌ
. ٢:٢٢ يَومَ تَرَونَها تَذهَلُ كُلُّ مُرضِعَةٍ عَمّا أَرضَعَت وَتَضَعُ كُلُّ ذاتِ حَملٍ حَملَها وَتَرَى النّاسَ سُكٰرىٰ وَما هُم بِسُكٰرىٰ وَلٰكِنَّ عَذابَ اللَّهِ شَديدٌ
. ٣:٢٢ وَمِنَ النّاسِ مَن يُجٰدِلُ فِى اللَّهِ بِغَيرِ عِلمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيطٰنٍ مَريدٍ
. ٤:٢٢ كُتِبَ عَلَيهِ أَنَّهُ مَن تَوَلّاهُ فَأَنَّهُ يُضِلُّهُ وَيَهديهِ إِلىٰ عَذابِ السَّعيرِ
. ٥:٢٢ يٰأَيُّهَا النّاسُ إِن كُنتُم فى رَيبٍ مِنَ البَعثِ فَإِنّا خَلَقنٰكُم مِن تُرابٍ ثُمَّ مِن نُطفَةٍ ثُمَّ مِن عَلَقَةٍ ثُمَّ مِن مُضغَةٍ مُخَلَّقَةٍ وَغَيرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُم وَنُقِرُّ فِى الأَرحامِ ما نَشاءُ إِلىٰ أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخرِجُكُم طِفلًا ثُمَّ لِتَبلُغوا أَشُدَّكُم وَمِنكُم مَن يُتَوَفّىٰ وَمِنكُم مَن يُرَدُّ إِلىٰ أَرذَلِ العُمُرِ لِكَيلا يَعلَمَ مِن بَعدِ عِلمٍ شَيـًٔا وَتَرَى الأَرضَ هامِدَةً فَإِذا أَنزَلنا عَلَيهَا الماءَ اهتَزَّت وَرَبَت وَأَنبَتَت مِن كُلِّ زَوجٍ بَهيجٍ
. ٦:٢٢ ذٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الحَقُّ وَأَنَّهُ يُحىِ المَوتىٰ وَأَنَّهُ عَلىٰ كُلِّ شَىءٍ قَديرٌ
. ٧:٢٢ وَأَنَّ السّاعَةَ ءاتِيَةٌ لا رَيبَ فيها وَأَنَّ اللَّهَ يَبعَثُ مَن فِى القُبورِ
. ٨:٢٢ وَمِنَ النّاسِ مَن يُجٰدِلُ فِى اللَّهِ بِغَيرِ عِلمٍ وَلا هُدًى وَلا كِتٰبٍ مُنيرٍ
. ٩:٢٢ ثانِىَ عِطفِهِ لِيُضِلَّ عَن سَبيلِ اللَّهِ لَهُ فِى الدُّنيا خِزىٌ وَنُذيقُهُ يَومَ القِيٰمَةِ عَذابَ الحَريقِ
. ١٠:٢٢ ذٰلِكَ بِما قَدَّمَت يَداكَ وَأَنَّ اللَّهَ لَيسَ بِظَلّٰمٍ لِلعَبيدِ
. ١١:٢٢ وَمِنَ النّاسِ مَن يَعبُدُ اللَّهَ عَلىٰ حَرفٍ فَإِن أَصابَهُ خَيرٌ اطمَأَنَّ بِهِ وَإِن أَصابَتهُ فِتنَةٌ انقَلَبَ عَلىٰ وَجهِهِ خَسِرَ الدُّنيا وَالـٔاخِرَةَ ذٰلِكَ هُوَ الخُسرانُ المُبينُ
. ١٢:٢٢ يَدعوا مِن دونِ اللَّهِ ما لا يَضُرُّهُ وَما لا يَنفَعُهُ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ البَعيدُ
. ١٣:٢٢ يَدعوا لَمَن ضَرُّهُ أَقرَبُ مِن نَفعِهِ لَبِئسَ المَولىٰ وَلَبِئسَ العَشيرُ
. ١٤:٢٢ إِنَّ اللَّهَ يُدخِلُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ إِنَّ اللَّهَ يَفعَلُ ما يُريدُ
. ١٥:٢٢ مَن كانَ يَظُنُّ أَن لَن يَنصُرَهُ اللَّهُ فِى الدُّنيا وَالـٔاخِرَةِ فَليَمدُد بِسَبَبٍ إِلَى السَّماءِ ثُمَّ ليَقطَع فَليَنظُر هَل يُذهِبَنَّ كَيدُهُ ما يَغيظُ
. ١٦:٢٢ وَكَذٰلِكَ أَنزَلنٰهُ ءايٰتٍ بَيِّنٰتٍ وَأَنَّ اللَّهَ يَهدى مَن يُريدُ
. ١٧:٢٢ إِنَّ الَّذينَ ءامَنوا وَالَّذينَ هادوا وَالصّٰبِـٔينَ وَالنَّصٰرىٰ وَالمَجوسَ وَالَّذينَ أَشرَكوا إِنَّ اللَّهَ يَفصِلُ بَينَهُم يَومَ القِيٰمَةِ إِنَّ اللَّهَ عَلىٰ كُلِّ شَىءٍ شَهيدٌ
. ١٨:٢٢ أَلَم تَرَ أَنَّ اللَّهَ يَسجُدُ لَهُ مَن فِى السَّمٰوٰتِ وَمَن فِى الأَرضِ وَالشَّمسُ وَالقَمَرُ وَالنُّجومُ وَالجِبالُ وَالشَّجَرُ وَالدَّوابُّ وَكَثيرٌ مِنَ النّاسِ وَكَثيرٌ حَقَّ عَلَيهِ العَذابُ وَمَن يُهِنِ اللَّهُ فَما لَهُ مِن مُكرِمٍ إِنَّ اللَّهَ يَفعَلُ ما يَشاءُ
. ١٩:٢٢ هٰذانِ خَصمانِ اختَصَموا فى رَبِّهِم فَالَّذينَ كَفَروا قُطِّعَت لَهُم ثِيابٌ مِن نارٍ يُصَبُّ مِن فَوقِ رُءوسِهِمُ الحَميمُ
. ٢٠:٢٢ يُصهَرُ بِهِ ما فى بُطونِهِم وَالجُلودُ
. ٢١:٢٢ وَلَهُم مَقٰمِعُ مِن حَديدٍ
. ٢٢:٢٢ كُلَّما أَرادوا أَن يَخرُجوا مِنها مِن غَمٍّ أُعيدوا فيها وَذوقوا عَذابَ الحَريقِ
. ٢٣:٢٢ إِنَّ اللَّهَ يُدخِلُ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجرى مِن تَحتِهَا الأَنهٰرُ يُحَلَّونَ فيها مِن أَساوِرَ مِن ذَهَبٍ وَلُؤلُؤًا وَلِباسُهُم فيها حَريرٌ
. ٢٤:٢٢ وَهُدوا إِلَى الطَّيِّبِ مِنَ القَولِ وَهُدوا إِلىٰ صِرٰطِ الحَميدِ
. ٢٥:٢٢ إِنَّ الَّذينَ كَفَروا وَيَصُدّونَ عَن سَبيلِ اللَّهِ وَالمَسجِدِ الحَرامِ الَّذى جَعَلنٰهُ لِلنّاسِ سَواءً العٰكِفُ فيهِ وَالبادِ وَمَن يُرِد فيهِ بِإِلحادٍ بِظُلمٍ نُذِقهُ مِن عَذابٍ أَليمٍ
. ٢٦:٢٢ وَإِذ بَوَّأنا لِإِبرٰهيمَ مَكانَ البَيتِ أَن لا تُشرِك بى شَيـًٔا وَطَهِّر بَيتِىَ لِلطّائِفينَ وَالقائِمينَ وَالرُّكَّعِ السُّجودِ
. ٢٧:٢٢ وَأَذِّن فِى النّاسِ بِالحَجِّ يَأتوكَ رِجالًا وَعَلىٰ كُلِّ ضامِرٍ يَأتينَ مِن كُلِّ فَجٍّ عَميقٍ
. ٢٨:٢٢ لِيَشهَدوا مَنٰفِعَ لَهُم وَيَذكُرُوا اسمَ اللَّهِ فى أَيّامٍ مَعلومٰتٍ عَلىٰ ما رَزَقَهُم مِن بَهيمَةِ الأَنعٰمِ فَكُلوا مِنها وَأَطعِمُوا البائِسَ الفَقيرَ
. ٢٩:٢٢ ثُمَّ ليَقضوا تَفَثَهُم وَليوفوا نُذورَهُم وَليَطَّوَّفوا بِالبَيتِ العَتيقِ
. ٣٠:٢٢ ذٰلِكَ وَمَن يُعَظِّم حُرُمٰتِ اللَّهِ فَهُوَ خَيرٌ لَهُ عِندَ رَبِّهِ وَأُحِلَّت لَكُمُ الأَنعٰمُ إِلّا ما يُتلىٰ عَلَيكُم فَاجتَنِبُوا الرِّجسَ مِنَ الأَوثٰنِ وَاجتَنِبوا قَولَ الزّورِ
. ٣١:٢٢ حُنَفاءَ لِلَّهِ غَيرَ مُشرِكينَ بِهِ وَمَن يُشرِك بِاللَّهِ فَكَأَنَّما خَرَّ مِنَ السَّماءِ فَتَخطَفُهُ الطَّيرُ أَو تَهوى بِهِ الرّيحُ فى مَكانٍ سَحيقٍ
. ٣٢:٢٢ ذٰلِكَ وَمَن يُعَظِّم شَعٰئِرَ اللَّهِ فَإِنَّها مِن تَقوَى القُلوبِ
. ٣٣:٢٢ لَكُم فيها مَنٰفِعُ إِلىٰ أَجَلٍ مُسَمًّى ثُمَّ مَحِلُّها إِلَى البَيتِ العَتيقِ
. ٣٤:٢٢ وَلِكُلِّ أُمَّةٍ جَعَلنا مَنسَكًا لِيَذكُرُوا اسمَ اللَّهِ عَلىٰ ما رَزَقَهُم مِن بَهيمَةِ الأَنعٰمِ فَإِلٰهُكُم إِلٰهٌ وٰحِدٌ فَلَهُ أَسلِموا وَبَشِّرِ المُخبِتينَ
. ٣٥:٢٢ الَّذينَ إِذا ذُكِرَ اللَّهُ وَجِلَت قُلوبُهُم وَالصّٰبِرينَ عَلىٰ ما أَصابَهُم وَالمُقيمِى الصَّلوٰةِ وَمِمّا رَزَقنٰهُم يُنفِقونَ
. ٣٦:٢٢ وَالبُدنَ جَعَلنٰها لَكُم مِن شَعٰئِرِ اللَّهِ لَكُم فيها خَيرٌ فَاذكُرُوا اسمَ اللَّهِ عَلَيها صَوافَّ فَإِذا وَجَبَت جُنوبُها فَكُلوا مِنها وَأَطعِمُوا القانِعَ وَالمُعتَرَّ كَذٰلِكَ سَخَّرنٰها لَكُم لَعَلَّكُم تَشكُرونَ
. ٣٧:٢٢ لَن يَنالَ اللَّهَ لُحومُها وَلا دِماؤُها وَلٰكِن يَنالُهُ التَّقوىٰ مِنكُم كَذٰلِكَ سَخَّرَها لَكُم لِتُكَبِّرُوا اللَّهَ عَلىٰ ما هَدىٰكُم وَبَشِّرِ المُحسِنينَ
. ٣٨:٢٢ إِنَّ اللَّهَ يُدٰفِعُ عَنِ الَّذينَ ءامَنوا إِنَّ اللَّهَ لا يُحِبُّ كُلَّ خَوّانٍ كَفورٍ
. ٣٩:٢٢ أُذِنَ لِلَّذينَ يُقٰتَلونَ بِأَنَّهُم ظُلِموا وَإِنَّ اللَّهَ عَلىٰ نَصرِهِم لَقَديرٌ
. ٤٠:٢٢ الَّذينَ أُخرِجوا مِن دِيٰرِهِم بِغَيرِ حَقٍّ إِلّا أَن يَقولوا رَبُّنَا اللَّهُ وَلَولا دَفعُ اللَّهِ النّاسَ بَعضَهُم بِبَعضٍ لَهُدِّمَت صَوٰمِعُ وَبِيَعٌ وَصَلَوٰتٌ وَمَسٰجِدُ يُذكَرُ فيهَا اسمُ اللَّهِ كَثيرًا وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِىٌّ عَزيزٌ
. ٤١:٢٢ الَّذينَ إِن مَكَّنّٰهُم فِى الأَرضِ أَقامُوا الصَّلوٰةَ وَءاتَوُا الزَّكوٰةَ وَأَمَروا بِالمَعروفِ وَنَهَوا عَنِ المُنكَرِ وَلِلَّهِ عٰقِبَةُ الأُمورِ
. ٤٢:٢٢ وَإِن يُكَذِّبوكَ فَقَد كَذَّبَت قَبلَهُم قَومُ نوحٍ وَعادٌ وَثَمودُ
. ٤٣:٢٢ وَقَومُ إِبرٰهيمَ وَقَومُ لوطٍ
. ٤٤:٢٢ وَأَصحٰبُ مَديَنَ وَكُذِّبَ موسىٰ فَأَملَيتُ لِلكٰفِرينَ ثُمَّ أَخَذتُهُم فَكَيفَ كانَ نَكيرِ
. ٤٥:٢٢ فَكَأَيِّن مِن قَريَةٍ أَهلَكنٰها وَهِىَ ظالِمَةٌ فَهِىَ خاوِيَةٌ عَلىٰ عُروشِها وَبِئرٍ مُعَطَّلَةٍ وَقَصرٍ مَشيدٍ
. ٤٦:٢٢ أَفَلَم يَسيروا فِى الأَرضِ فَتَكونَ لَهُم قُلوبٌ يَعقِلونَ بِها أَو ءاذانٌ يَسمَعونَ بِها فَإِنَّها لا تَعمَى الأَبصٰرُ وَلٰكِن تَعمَى القُلوبُ الَّتى فِى الصُّدورِ
. ٤٧:٢٢ وَيَستَعجِلونَكَ بِالعَذابِ وَلَن يُخلِفَ اللَّهُ وَعدَهُ وَإِنَّ يَومًا عِندَ رَبِّكَ كَأَلفِ سَنَةٍ مِمّا تَعُدّونَ
. ٤٨:٢٢ وَكَأَيِّن مِن قَريَةٍ أَملَيتُ لَها وَهِىَ ظالِمَةٌ ثُمَّ أَخَذتُها وَإِلَىَّ المَصيرُ
. ٤٩:٢٢ قُل يٰأَيُّهَا النّاسُ إِنَّما أَنا۠ لَكُم نَذيرٌ مُبينٌ
. ٥٠:٢٢ فَالَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُم مَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ
. ٥١:٢٢ وَالَّذينَ سَعَوا فى ءايٰتِنا مُعٰجِزينَ أُولٰئِكَ أَصحٰبُ الجَحيمِ
. ٥٢:٢٢ وَما أَرسَلنا مِن قَبلِكَ مِن رَسولٍ وَلا نَبِىٍّ إِلّا إِذا تَمَنّىٰ أَلقَى الشَّيطٰنُ فى أُمنِيَّتِهِ فَيَنسَخُ اللَّهُ ما يُلقِى الشَّيطٰنُ ثُمَّ يُحكِمُ اللَّهُ ءايٰتِهِ وَاللَّهُ عَليمٌ حَكيمٌ
. ٥٣:٢٢ لِيَجعَلَ ما يُلقِى الشَّيطٰنُ فِتنَةً لِلَّذينَ فى قُلوبِهِم مَرَضٌ وَالقاسِيَةِ قُلوبُهُم وَإِنَّ الظّٰلِمينَ لَفى شِقاقٍ بَعيدٍ
. ٥٤:٢٢ وَلِيَعلَمَ الَّذينَ أوتُوا العِلمَ أَنَّهُ الحَقُّ مِن رَبِّكَ فَيُؤمِنوا بِهِ فَتُخبِتَ لَهُ قُلوبُهُم وَإِنَّ اللَّهَ لَهادِ الَّذينَ ءامَنوا إِلىٰ صِرٰطٍ مُستَقيمٍ
. ٥٥:٢٢ وَلا يَزالُ الَّذينَ كَفَروا فى مِريَةٍ مِنهُ حَتّىٰ تَأتِيَهُمُ السّاعَةُ بَغتَةً أَو يَأتِيَهُم عَذابُ يَومٍ عَقيمٍ
. ٥٦:٢٢ المُلكُ يَومَئِذٍ لِلَّهِ يَحكُمُ بَينَهُم فَالَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فى جَنّٰتِ النَّعيمِ
. ٥٧:٢٢ وَالَّذينَ كَفَروا وَكَذَّبوا بِـٔايٰتِنا فَأُولٰئِكَ لَهُم عَذابٌ مُهينٌ
. ٥٨:٢٢ وَالَّذينَ هاجَروا فى سَبيلِ اللَّهِ ثُمَّ قُتِلوا أَو ماتوا لَيَرزُقَنَّهُمُ اللَّهُ رِزقًا حَسَنًا وَإِنَّ اللَّهَ لَهُوَ خَيرُ الرّٰزِقينَ
. ٥٩:٢٢ لَيُدخِلَنَّهُم مُدخَلًا يَرضَونَهُ وَإِنَّ اللَّهَ لَعَليمٌ حَليمٌ
. ٦٠:٢٢ ذٰلِكَ وَمَن عاقَبَ بِمِثلِ ما عوقِبَ بِهِ ثُمَّ بُغِىَ عَلَيهِ لَيَنصُرَنَّهُ اللَّهُ إِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفورٌ
. ٦١:٢٢ ذٰلِكَ بِأَنَّ اللَّهَ يولِجُ الَّيلَ فِى النَّهارِ وَيولِجُ النَّهارَ فِى الَّيلِ وَأَنَّ اللَّهَ سَميعٌ بَصيرٌ
. ٦٢:٢٢ ذٰلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الحَقُّ وَأَنَّ ما يَدعونَ مِن دونِهِ هُوَ البٰطِلُ وَأَنَّ اللَّهَ هُوَ العَلِىُّ الكَبيرُ
. ٦٣:٢٢ أَلَم تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّماءِ ماءً فَتُصبِحُ الأَرضُ مُخضَرَّةً إِنَّ اللَّهَ لَطيفٌ خَبيرٌ
. ٦٤:٢٢ لَهُ ما فِى السَّمٰوٰتِ وَما فِى الأَرضِ وَإِنَّ اللَّهَ لَهُوَ الغَنِىُّ الحَميدُ
. ٦٥:٢٢ أَلَم تَرَ أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم ما فِى الأَرضِ وَالفُلكَ تَجرى فِى البَحرِ بِأَمرِهِ وَيُمسِكُ السَّماءَ أَن تَقَعَ عَلَى الأَرضِ إِلّا بِإِذنِهِ إِنَّ اللَّهَ بِالنّاسِ لَرَءوفٌ رَحيمٌ
. ٦٦:٢٢ وَهُوَ الَّذى أَحياكُم ثُمَّ يُميتُكُم ثُمَّ يُحييكُم إِنَّ الإِنسٰنَ لَكَفورٌ
. ٦٧:٢٢ لِكُلِّ أُمَّةٍ جَعَلنا مَنسَكًا هُم ناسِكوهُ فَلا يُنٰزِعُنَّكَ فِى الأَمرِ وَادعُ إِلىٰ رَبِّكَ إِنَّكَ لَعَلىٰ هُدًى مُستَقيمٍ
. ٦٨:٢٢ وَإِن جٰدَلوكَ فَقُلِ اللَّهُ أَعلَمُ بِما تَعمَلونَ
. ٦٩:٢٢ اللَّهُ يَحكُمُ بَينَكُم يَومَ القِيٰمَةِ فيما كُنتُم فيهِ تَختَلِفونَ
. ٧٠:٢٢ أَلَم تَعلَم أَنَّ اللَّهَ يَعلَمُ ما فِى السَّماءِ وَالأَرضِ إِنَّ ذٰلِكَ فى كِتٰبٍ إِنَّ ذٰلِكَ عَلَى اللَّهِ يَسيرٌ
. ٧١:٢٢ وَيَعبُدونَ مِن دونِ اللَّهِ ما لَم يُنَزِّل بِهِ سُلطٰنًا وَما لَيسَ لَهُم بِهِ عِلمٌ وَما لِلظّٰلِمينَ مِن نَصيرٍ
. ٧٢:٢٢ وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ تَعرِفُ فى وُجوهِ الَّذينَ كَفَرُوا المُنكَرَ يَكادونَ يَسطونَ بِالَّذينَ يَتلونَ عَلَيهِم ءايٰتِنا قُل أَفَأُنَبِّئُكُم بِشَرٍّ مِن ذٰلِكُمُ النّارُ وَعَدَهَا اللَّهُ الَّذينَ كَفَروا وَبِئسَ المَصيرُ
. ٧٣:٢٢ يٰأَيُّهَا النّاسُ ضُرِبَ مَثَلٌ فَاستَمِعوا لَهُ إِنَّ الَّذينَ تَدعونَ مِن دونِ اللَّهِ لَن يَخلُقوا ذُبابًا وَلَوِ اجتَمَعوا لَهُ وَإِن يَسلُبهُمُ الذُّبابُ شَيـًٔا لا يَستَنقِذوهُ مِنهُ ضَعُفَ الطّالِبُ وَالمَطلوبُ
. ٧٤:٢٢ ما قَدَرُوا اللَّهَ حَقَّ قَدرِهِ إِنَّ اللَّهَ لَقَوِىٌّ عَزيزٌ
. ٧٥:٢٢ اللَّهُ يَصطَفى مِنَ المَلٰئِكَةِ رُسُلًا وَمِنَ النّاسِ إِنَّ اللَّهَ سَميعٌ بَصيرٌ
. ٧٦:٢٢ يَعلَمُ ما بَينَ أَيديهِم وَما خَلفَهُم وَإِلَى اللَّهِ تُرجَعُ الأُمورُ
. ٧٧:٢٢ يٰأَيُّهَا الَّذينَ ءامَنُوا اركَعوا وَاسجُدوا وَاعبُدوا رَبَّكُم وَافعَلُوا الخَيرَ لَعَلَّكُم تُفلِحونَ
. ٧٨:٢٢ وَجٰهِدوا فِى اللَّهِ حَقَّ جِهادِهِ هُوَ اجتَبىٰكُم وَما جَعَلَ عَلَيكُم فِى الدّينِ مِن حَرَجٍ مِلَّةَ أَبيكُم إِبرٰهيمَ هُوَ سَمّىٰكُمُ المُسلِمينَ مِن قَبلُ وَفى هٰذا لِيَكونَ الرَّسولُ شَهيدًا عَلَيكُم وَتَكونوا شُهَداءَ عَلَى النّاسِ فَأَقيمُوا الصَّلوٰةَ وَءاتُوا الزَّكوٰةَ وَاعتَصِموا بِاللَّهِ هُوَ مَولىٰكُم فَنِعمَ المَولىٰ وَنِعمَ النَّصيرُ
22:1. O people, you shall reverence your Lord, for the quaking of the Hour is something horrendous.
22:2. The day you witness it, even a nursing mother will discard her infant, and a pregnant woman will abort her fetus. You will see the people staggering, as if they are intoxicated, even though they are not intoxicated. This is because, God's retribution is so awesome.
22:3. Among the people, there are those who argue about God without knowledge, and follow every rebellious devil.
22:4. It is decreed that anyone who allies himself with him, he will mislead him and guide him to the agony of Hell.
22:5. O people, if you have any doubt about resurrection, (remember that) we created you from dust, and subsequently from a tiny drop, which turns into a hanging (embryo), then it becomes a fetus that is given life or deemed lifeless. We thus clarify things for you. We settle in the wombs whatever we will for a predetermined period.* We then bring you out as infants, then you reach maturity. While some of you die young, others live to the worst age, only to find out that no more knowledge can be attained beyond a certain limit. Also, you look at a land that is dead, then as soon as we shower it with water, it vibrates with life and grows all kinds of beautiful plants.
*22:5 The Quran's mathematical miracle is based on the number 19. As it turns out, this number represents the Creator's signature on His creations. Thus, you and I have 209 bones in our bodies (209=19x11). The length of pregnancy for a full term fetus is 266 days (19x14) (Langman's Medical Embryology, T. W. Sadler, Page 88, 1985).
22:6. This proves that God is the Truth, and that He revives the dead, and that He is Omnipotent.
22:7. And that the Hour is coming, no doubt about it, and that God resurrects those who are in the graves.
22:8. Among the people there is the one who argues about God without knowledge, and without guidance, and without an enlightening scripture.
22:9. Arrogantly he strives to divert the people from the path of God. He thus incurs humiliation in this life, and we commit him on the Day of Resurrection to the agony of burning.
22:10. This is what your hands have sent ahead for you. God is never unjust towards the people.
22:11. Among the people there is the one who worships God conditionally. If things go his way, he is content. But if some adversity befalls him, he makes an about-face. Thus, he loses both this life and the Hereafter. Such is the real loss.
22:12. He idolizes beside God what possesses no power to harm him or benefit him; such is the real straying.
22:13. He idolizes what is more apt to harm him than benefit him. What a miserable lord! What a miserable companion!
22:14. God admits those who believe and lead a righteous life into gardens with flowing streams. Everything is in accordance with God's will.
22:15. If anyone thinks that God cannot support him in this life and in the Hereafter, let him turn completely to (his Creator in) heaven, and sever (his dependence on anyone else). He will then see that this plan eliminates anything that bothers him.
22:16. We have thus revealed clear revelations herein, then God guides whoever wills(to be guided).
22:17. Those who believe, those who are Jewish, the converts, the Christians, the Zoroastrians, and the idol worshipers, God is the One who will judge among them on the Day of Resurrection. God witnesses all things.
22:18. Do you not realize that to God prostrates everyone in the heavens and the earth, and the sun, and the moon, and the stars, and the mountains, and the trees, and the animals, and many people? Many others among the people are committed to doom. Whomever God shames, none will honor him. Everything is in accordance with God's will.
22:19. Here are two parties feuding with regard to their Lord. As for those who disbelieve, they will have clothes of fire tailored for them. Hellish liquid will be poured on top of their heads.
*22:19-22 People who have insisted upon going to Hell will inevitably complain: `Had we known how bad this is, we would have behaved differently.' They will be told that the horrors of Hell have been pointed out to them in the most graphic, though symbolic, terms. It should be noted that Heaven and Hell are almost invariably mentioned together in the Quran.
22:20. It will cause their insides to melt, as well as their skins.
22:21. They will be confined in iron pots.
22:22. Whenever they try to exit such misery, they will be forced back in: "Taste the agony of burning."
22:23. God will admit those who believe and lead a righteous life into gardens with flowing streams. They will be adorned therein with bracelets of gold, and pearls, and their garments therein will be silk.
22:24. They have been guided to the good words; they have been guided in the path of the Most Praised.
22:25. Surely, those who disbelieve and repulse others from the path of God, and from the Sacred Masjid that we designated for all the people - be they natives or visitors - and seek to pollute it and corrupt it, we will afflict them with painful retribution.
22:26. We appointed Abraham to establish the Shrine: "You shall not idolize any other god beside Me, and purify My shrine for those who visit it, those who live near it, and those who bow and prostrate.
*22:26-27 Abraham was the original messenger of Submission (Islam). See 22:78 and App. 9.
22:27. "And proclaim that the people shall observe Hajj pilgrimage. They will come to you walking or riding on various exhausted (means of transportation). They will come from the farthest locations."
*22:26-27 Abraham was the original messenger of Submission (Islam). See 22:78 and App. 9.
22:28. They may seek commercial benefits, and they shall commemorate God's name during the specified days for providing them with livestock. "Eat therefrom and feed the despondent and the poor."
22:29. They shall complete their obligations, fulfill their vows, and visit the ancient shrine.
22:30. Those who reverence the rites decreed by God have deserved a good reward at their Lord. All livestock is made lawful for your food, except for those specifically prohibited for you. You shall avoid the abomination of idol worship, and avoid bearing false witness.
22:31. You shall maintain your devotion absolutely to God alone. Anyone who sets up any idol beside God is like one who fell from the sky, then gets snatched up by vultures, or blown away by the wind into a deep ravine.
22:32. Indeed, those who reverence the rites decreed by God demonstrate the righteousness of their hearts.
22:33. The (livestock) provide you with many benefits for a period, before being donated to the ancient shrine.
*22:36 Animal offerings from the pilgrims conserve the resources at the pilgrimage site. Note that almost 2,000,000 pilgrims converge on Mecca during pilgrimage.
22:34. For each congregation we have decreed rites whereby they commemorate the name of God for providing them with the livestock. Your god is one and the same god; you shall all submit to Him. Give good news to the obedient.
22:35. They are the ones whose hearts tremble upon mentioning God, they steadfastly persevere during adversity, they observe the Contact Prayers (Salat), and from our provisions to them, they give to charity.
22:36. The animal offerings are among the rites decreed by God for your own good.* You shall mention God's name on them while they are standing in line. Once they are offered for sacrifice, you shall eat therefrom and feed the poor and the needy. This is why we subdued them for you, that you may show your appreciation.
*22:36 Animal offerings from the pilgrims conserve the resources at the pilgrimage site. Note that almost 2,000,000 pilgrims converge on Mecca during pilgrimage.
22:37. Neither their meat, nor their blood reaches God. What reaches Him is your righteousness. He has subdued them for you, that you may show your appreciation by glorifying God for guiding you. Give good news to the charitable.
22:38. God defends those who believe. God does not love any betrayer, unappreciative.
22:39. Permission is granted to those who are being persecuted, since injustice has befallen them, and God is certainly able to support them.
22:40. They were evicted from their homes unjustly, for no reason other than saying, "Our Lord is God." If it were not for God's supporting of some people against others, monasteries, churches, synagogues, and masjids - where the name of God is commemorated frequently - would have been destroyed. Absolutely, God supports those who support Him. God is Powerful, Almighty.
22:41. They are those who, if we appointed them as rulers on earth, they would establish the Contact Prayers (Salat) and the obligatory charity (Zakat), and would advocate righteousness and forbid evil. God is the ultimate ruler.
22:42. If they reject you, the people of Noah, `Ãd, and Thamoud have also disbelieved before them.
22:43. Also the people of Abraham, and the people of Lot.
22:44. And the dwellers of Midyan. Moses was also rejected. I led all those people on, then I called them to account; how (devastating) was My requital!
22:45. Many a community we have annihilated because of their wickedness. They ended up in ruins, stilled wells, and great empty mansions.
22:46. Did they not roam the earth, then use their minds to understand, and use their ears to hear? Indeed, the real blindness is not the blindness of the eyes, but the blindness of the hearts inside the chests.
22:47. They challenge you to bring retribution, and God never fails to fulfill His prophecy. A day of your Lord is like a thousand of your years.
22:48. Many a community in the past committed evil, and I led them on for awhile, then I punished them. To Me is the ultimate destiny.
22:49. Say, "O people, I have been sent to you as a profound warner."
*22:49 This command is directed specifically to God's Messenger of the Covenant. This fact, and the specific name of the messenger are mathematically coded into the Quran. See the details, together with the irrefutable proofs, in Appendices 2 and 26.
22:50. Those who believe and lead a righteous life have deserved forgiveness and a generous recompense.
22:51. As for those who strive to challenge our revelations, they incur Hell.
22:52. We did not send before you any messenger, nor a prophet, without having the devil interfere in his wishes. God then nullifies what the devil has done. God perfects His revelations. God is Omniscient, Most Wise.*
*22:52 Throughout this worldly test, Satan is allowed to present his point of view (we are born with a representative of Satan in our bodies). This allows the people to make a choice between God's evidence and Satan's evidence. Satan's evidence is invariably based on lies. This system explains the fact that the devil's agents continuously come up with the most absurd lies, insults and accusations against every messenger (see 6:33-34, 8:30, 17:76-77, 27:70).
22:53. He thus sets up the devil's scheme as a test for those who harbor doubts in their hearts, and those whose hearts are hardened. The wicked must remain with the opposition.
22:54. Those who are blessed with knowledge will recognize the truth from your Lord, then believe in it, and their hearts will readily accept it. Most assuredly, God guides the believers in the right path.
22:55. As for those who disbelieve, they will continue to harbor doubts until the Hour comes to them suddenly, or until the retribution of a terrible day comes to them.
22:56. All sovereignty on that day belongs to God, and He will judge among them. As for those who believe and lead a righteous life, they have deserved the gardens of bliss.
22:57. While those who disbelieved and rejected our revelations have incurred a shameful retribution.
22:58. Those who emigrate for the sake of God, then get killed, or die, God will surely shower them with good provisions. God is certainly the best Provider.
22:59. Most assuredly, He will admit them an admittance that will please them. God is Omniscient, Clement.
22:60. It is decreed that if one avenges an injustice that was inflicted upon him, equitably, then he is persecuted because of this, God will surely support him. God is Pardoner, Forgiving.
22:61. It is a fact that God merges the night into the day, and merges the day into the night, and that God is Hearer, Seer.
22:62. It is a fact that God is the Truth, while the setting up of any idols beside Him constitutes a falsehood, and that God is the Most High, the Supreme.
22:63. Do you not see that God sends down from the sky water that turns the land green? God is Sublime, Cognizant.
22:64. To Him belongs everything in the heavens and everything on earth. Absolutely, God is the Most Rich, Most Praiseworthy.
22:65. Do you not see that God has committed in your service everything on earth? The ships run in the ocean by His command. He prevents the heavenly bodies from crashing onto the earth, except in accordance with His command. God is Most Kind towards the people, Most Merciful.
22:66. He is the One who granted you life, then He puts you to death, then He brings you back to life. Surely, the human being is unappreciative.
22:67. For each congregation, we have decreed a set of rites that they must uphold. Therefore, they should not dispute with you. You shall continue to invite everyone to your Lord. Most assuredly, you are on the right path.
22:68. If they argue with you, then say, "God is fully aware of everything you do."
22:69. God will judge among you on the Day of Resurrection regarding all your disputes.
22:70. Do you not realize that God knows everything in the heavens and everything on earth? All this is recorded in a record. This is easy for God to do.
22:71. Yet, they idolize beside God idols wherein He placed no power, and they know nothing about them. The transgressors have no helper.
22:72. When our revelations are recited to them, clearly, you recognize wickedness on the faces of those who disbelieve. They almost attack those who recite our revelations to them. Say, "Shall I inform you of something much worse? Hell is promised by God for those who disbelieve; what a miserable destiny."
22:73. O people, here is a parable that you must ponder carefully: the idols you set up beside God can never create a fly, even if they banded together to do so. Furthermore, if the fly steals anything from them, they cannot recover it; weak is the pursuer and the pursued.
22:74. They do not value God as He should be valued. God is the Most Powerful, the Almighty.
22:75. God chooses from among the angels messengers, as well as from among the people. God is Hearer, Seer.
22:76. He knows their past and their future. To God belongs the ultimate control of all matters.
22:77. O you who believe, you shall bow, prostrate, worship your Lord, and work righteousness, that you may succeed.
22:78. You shall strive for the cause of God as you should strive for His cause. He has chosen you and has placed no hardship on you in practicing your religion - the religion of your father Abraham. He is the one who named you "Submitters" originally. Thus, the messenger shall serve as a witness among you, and you shall serve as witnesses among the people. Therefore, you shall observe the Contact Prayers (Salat) and give the obligatory charity (Zakat), and hold fast to God; He is your Lord, the best Lord and the best Supporter.
*22:78 Although all messengers preached one and the same message, ``Worship God alone,'' Abraham was the first messenger to coin the terms "Submission" (Islam) and "Submitter" (Muslim) (2:128). What did Abraham contribute to Submission? We learn from 16:123 that all religious duties in Submission were revealed through Abraham (see Appendices 9 & 26).
22:1. மனிதர்களே, நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருக்க வேண்டும், ஏனெனில், நேரத்தின் அதிர்வானது படுபயங்கரமான ஒன்றாகும்.
22:2. அதனை நீங்கள் காணும் நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒரு தாய் கூடத் தன் சிசுவைத் தள்ளி விட்டு விடுவாள், மேலும் ஒரு கர்ப்பிணியான பெண் தன் கருவைச் சிதைத்துக் கொள்வாள். மக்களை அவர்கள் போதையில் இல்லாதிருந்த போதிலும், அவர்கள் போதையிலிருப்பவர்களைப் போல் தள்ளாடியவர்களாக நீர் காண்பீர், இதன் காரணமாவது, கடவுள்-ன் தண்டனை மிகவும் அச்சமூட்டக்கூடியவராக உள்ளது.
22:3. மனிதர்களில், அறிவின்றிக் கடவுள்-ஐப்பற்றித் தர்க்கிப்பவர்கள் இருக்கின்றனர், மேலும் கலகக் காரனான ஒவ்வொரு சாத்தானையும் பின்பற்றுகின்றனர்.
22:4. அவனுடன் எவரேனும் தன்னைக் கூட்டாளியாக்கிக் கொண்டால், அவரை அவன் தவறாக வழி நடத்துவதுடன் நரகமெனும் மீளாத்துயரின்பால் அவரை வழிநடத்தி விடுவான் என்றும் விதிக்கப்பட்டுள்ளது.
22:5. மனிதர்களே, உயிர்த்தெழுப்புதல் பற்றி நீங்கள் ஏதேனும் ஐயம் கொண்டிருப்பின் (நினைவில் கொள்ளுங்கள்), நாம் உங்களை மண்ணிலிருந்தும், அதன் பின்னர் தொங்குகின்ற ஒரு (கருவாக) மாறும் மிகச் சிறியதொரு துளியிலிருந்தும் படைத்தோம், பின்னர் அது உயிரளிக்கப்பட்ட ஒரு சிசுவாக ஆகிவிடுகின்றது, அல்லது உயிரற்றதெனக் கருதப்படுகின்றது. இவ்விதமாக நாம் விஷயங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம். முன்னரே தீர்மானிக்கப் பட்டதொரு காலத்திற்கு* நாம் நாடியவற்றைக் கருவறைகளில் நாம் தங்கச் செய்கின்றோம். உங்களைச் சிசுக்களாக நாம் வெளிக் கொண்டு வந்தோம், பின்னர் நீங்கள் முதிர்ச்சியை அடைகின்றீர்கள். உங்களில் சிலர் இளவயதில் இறந்து விடும் அதே சமயம், மற்றவர்கள் குறிப்பிட்ட ஒர் எல்லைக்கு அப்பால், மேலும் அதிகமாக எந்த அறிவையும் அடைந்து கொள்ள முடியாது என்பதைக் கண்டு கொள்வதற்காகவே, மிக மோசமான வயது வரை உயிர் வாழ்கின்றீர்கள். இன்னும், நீங்கள் இறந்து விட்ட ஒரு நிலத்தைப் பார்க்கின்றீர்கள், பின்னர் அதில் நாம் தண்ணீரைப் பொழிந்தவுடன், அதில் உயிர் தளிர்க்கின்றது, மேலும் எல்லா வகைகளிலான அழகிய தாவரங்களையும் முளைப்பிக்கின்றது.
*22:5 குர்ஆனுடைய கணித அற்புதம் 19 என்ற எண்ணின் அடைப்படையிலானது. இப்போது வெளிப்பட்டுள்ளபடி, இந்த எண்ணானது, அவருடைய படைப்புகள் மீது படைப்பாளரின் கையொப்பமாகத் திகழ்கின்றது. இவ்விதமாக, நீங்களும் நானும் நமது உடல்களில் 209 எலும்புகளைக் கொண்டிருக்கின்றோம். (209=19x11) ஒரு கருவின் முழுகர்ப்ப கால அளவாவது, 266 நாட்களாகும் (19x14) (லாங்மன்ஸ் மெடிக்கல் எம்ப்ரையாலஜி கூ.று. சாட்லர், பக்கம் 88,1985).
22:6. இது, கடவுள்தான் சத்தியம் எனவும், இறந்தவற்றை அவர் உயிர்ப்பிக்கின்றார் எனவும், அவர் சர்வசக்தியுடையவர் எனவும் நிரூபிக்கின்றது.
22:7. மேலும் அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது, அது பற்றி ஐயமில்லை எனவும், மேலும் மண்ணறைகளில் உள்ளோரைக் கடவுள் உயிர்த்தெழுப்புவார் எனவும்.
22:8. அறிவு இன்றி, வழிகாட்டல் இன்றி, ஒளி தரும் ஒரு வேதமுமின்றி கடவுள்-ஐக் குறித்துத் தர்க்கிக்கின்றவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
22:9. ஆணவத்துடன் அவன் மக்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பப் பாடுபடுகின்றான். எனவே அவன் இவ்வுலகில் இழிவுக்கு உள்ளாகின்றான், மேலும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று பொசுக்குகின்ற வேதனையில் அவனை நாம் போட்டு விடுவோம்.
22:10. இதுதான் உன் கரங்கள் உனக்காக முற்படுத்தி அனுப்பியது. கடவுள் ஒருபோதும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை.
22:11. கடவுள்-ஐ நிபந்தனையுடன் வழிபடுபவனும் மனிதர்களில் இருக்கின்றான். அவன் நினைத்தபடி விஷயங்கள் நடந்தால், அவன் திருப்தி அடைகின்றான். ஆனால் அவனுக்கு ஏதேனும் கஷ்டம் நேரிட்டால், அவன் முகம் திருப்பிச் சென்று விடுகின்றான். எனவே, அவன் இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம், இரண்டையும் இழந்து விடுகின்றான். மெய்யான நஷ்டம் இத்தகையதுதான்.
22:12. அவனுக்குப் பயனளிக்கவோ அல்லது அவனுக்குத் தீங்கிழைக்கவோ சக்தியற்றவற்றைக் கடவுள்-வுடன் அவன் இணைவழிபாடு செய்கின்றான்; மெய்யான வழிதவறுதல் இத்தகையதுதான்.
22:13. அவனுக்குப் பயன்தருவதை விட அவனுக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளவற்றை அவன் இணைவழிபாடு செய்கின்றான். என்ன ஒரு துன்பகரமான எஜமானன்! என்ன ஒரு துன்பகரமான தோழன்!
22:14. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களை பாயும் ஆறுகள் கொண்ட தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிக்கின்றார். கடவுள்-ன் நாட்டத்திற்கொப்பவே ஒவ்வொரு விஷயமும் உள்ளது.
22:15. எவனொருவன் இந்த வாழ்விலும் மறுவுலகிலும் தனக்குக் கடவுள் ஆதரவளிக்க முடியாதென எண்ணுகின்றானோ, அவன் வானத்தில் (உள்ள தன் படைப்பாளரை) நோக்கி முற்றிலும் திரும்பிக் கொள்ளட்டும், மேலும் (வேறு எவர் ஒருவரையும் அவன் சார்ந்திருப்பதை) துண்டித்துக் கொள்ளட்டும். இத் திட்டம் அவனை வருத்திக் கொண்டிருக்கின்ற எந்த ஒன்றையும், நீக்கிவிடுவதை அப்போது அவன் காண்பான்.
22:16. நாம் இவ்விதமாக இதிலே மிகத்தெளிவான வெளிப்பாடுகளையே வெளிப்படுத்தியுள்ளோம், பின்னர் தான் நாடுகின்ற எவரையும் கடவுள் வழிநடத்துகின்றார்.
22:17. நம்பிக்கை கொண்டோர், யூதர்களாக இருப்பவர்கள், மதம்மாறியவர்கள், கிறிஸ்துவர்கள், ஜோராஷ்டிரியர்கள், மற்றும் போலித் தெய்வ வழிபாடு செய்பவர்கள், அவர்களுக்கிடையில் கடவுள்தான் உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று தீர்ப்பளிக்க இருப்பவர். கடவுள் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றார்.
22:18. வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும், மேலும் சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் மலைகளும், மரங்களும் விலங்குகளும், ஏராளமான மனிதர்களும் கடவுள்-க்குச் சரணடைகின்றன என்பதை நீங்கள் உணரவில்லையா? மக்களில் ஏராளமான மற்றவர்கள் அழிவுக்கு ஆட்பட்டுவிட்டார்கள். எவனொருவனைக் கடவுள் இழிவாக்குகின்றாரோ, அவனை எவரும் கண்ணியப்படுத்த மாட்டார். ஒவ்வொன்றும் கடவுள்-ன் நாட்டத்திற்கொப்பவே உள்ளது.
22:19. இதோ இரு கூட்டத்தினர் தாங்கள் இரட்சகரைக் குறித்துத் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். நம்பமறுப்போரைப் பொறுத்தவரை, அவர்களுக்காகத்தைக்கப்பட்ட நெருப்பினாலான ஆடைகளை அவர்கள் கொண்டிருப்பார்கள். நரகத்தின் திரவங்கள் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.
*22:19-22 நரகத்திற்குச் செல்வதை வலியுறுத்திய மக்கள் தவிர்த்துவிட முடியாதவாறு புகார் கூறவே செய்வார்கள்: ‘இது எவ்வளவு கெட்டது என்பதை நாங்கள் அறித்திருந்தால், நாங்கள் வேறு விதமாக நடந்து கொண்டிருப்போம்.’ உதாரண மான வார்த்தைகளாக இருந்த போதிலும், நரகின் பயங்கரங்கள் அவர்களுக்கு மிகவும் தத்ரூபமாகச் சுட்டிக் காட்டப் பட்டிருந்தது என்று அவர்களிடம் கூறப்படும். சொர்க்கமும் நரகமும் ஏறத்தாழ ஒரே சீராக, இணைத்தே குர்ஆனில் குறிப்பிடப் படுவது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
22:20. அவர்களுடைய உட்புறங்களையும், அத்துடன் அவர்களுடைய தோல்களையும் அது உருக்கிவிடும்.
22:21. இரும்புக் கொப்பரைகளில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.
22:22. இத்தகைய துன்பத்திலிருந்து அவர்கள் வெளியேற முயலும்போதெல்லாம், வலுக்கட்டாயமாக அவர்கள் உள்ளே திருப்பப்படுவார்கள்: "பொசுக்குகின்ற வேதனையைச் சுவையுங்கள்."
22:23. நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரை, ஆறுகள் பாயும் தோட்டங்களுக்குள் கடவுள் அனுமதிப்பார். தங்கத்திலும் முத்துக்களிலுமான கடகங்கள் கொண்டு அங்கே அவர்கள் அலங்கரிக்கப்படுவார்கள், மேலும் அங்கே அவர்களுடைய ஆடைகள் பட்டாக இருக்கும்.
22:24. நல்ல வார்த்தைகளின் பால் வழிநடத்தப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்; மிகவும் புகழுக்குரியவரின் பாதையில் வழிநடத்தப்பட்டவர்களாக அவர்கள் இருந்தனர்.
22:25. நிச்சயமாக, நம்பமறுத்து மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையில் இருந்தும், - ஊர்வாசிகளாயினும், தரிசனத்திற்கு வந்தவர்களாயினும் - மக்கள் அனை வருக்காகவும் நாம் நியமித்த புனிதப் பள்ளியை விட்டும் தடுப்பவர்கள், மேலும் அதனை மாசுபடுத்தவும், அதனை சீர்கெடுக்கவும் முனைகின்ற அவர்களை வலி நிறைந்த தண்டனை கொண்டு நாம் வேதனை செய்வோம்.
22:26. ஆலயத்தை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: "என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணைவழிபாடு செய்ய வேண்டாம், மேலும் அதனைத் தரிசிக்க வருவோர், மற்றும் அதன் அருகில் வசிப்போர், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காக என் ஆலயத்தை தூய்மைப்படுத்துவீராக.
*22:26-27 (இஸ்லாம்) சரணடைதலின் ஆரம்பத் தூதர் ஆப்ரஹாமாவார். பார்க்க (22:78) மற்றும் பின் இணைப்பு 9.
22:27. "மேலும் மக்கள் ஹஜ் புனிதயாத்திரை மேற்கொள்ள வேண்டுமெனப் பிரகடனிப்பீராக.* அவர்கள் உம்மிடம் நடந்து அல்லது களைத்துப்போன பல்வேறு (போக்கு வரத்து சாதனங்கள் மீது) சவாரி செய்தவர்களாக உம்மிடம் வருவார்கள். மிகத் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து அவர்கள் வருவார்கள்."
22:28. அவர்கள் வணிகப்பலன்களைத் தேடித் கொள்ளலாம், மேலும் கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியமைக்காக குறிப்பிட்ட நாட்களின் போது கடவுள்-ன் பெயரை அவர்கள் நினைவு கூர்ந்திட வேண்டும். "அதிலிருந்து உண்ணுங்கள் மேலும் நிராதரவானவர்களுக்கும் ஏழைகளுக்கும் உணவளியுங்கள்."
22:29. அவர்கள் தங்கள் கடமைகளைப் பூர்த்தி செய்யவும், தங்களுடைய நேர்ச்சைகளை நிறைவேற்றவும், மேலும் தொன்மை மிகு ஆலயத்தைத் தரிசிக்கவும் வேண்டும்.
22:30. கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளை கண்ணியம் செய்வோர் தங்கள் இரட்சகரிடம் நல்லதொரு வெகுமதிக்குத் தகுதியாகி விட்டனர். குறிப்பிடப்பட்டு உங்களுக்குத் தடுக்கப்பட்டவற்றைத் தவிர, அனைத்துக் கால்நடைகளும் உங்களுடைய உணவுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. நீங்கள் போலித் தெய்வ வழிபாடு எனும் அருவருப்பைத் தவிர்த்துக் கொள்ளவும், பொய்சாட்சி பகர்வதைத் தவிர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
22:31. நீங்கள் உங்களுடைய அர்ப்பணிப்பை கடவுள்-க்கு மட்டுமே பரிபூரணமாகப் பேணிவர வேண்டும். கடவுள்-வுடன் போலித் தெய்வங்களை அமைத்துக் கொள்கின்ற எவரும், விண்ணிலிருந்து விழுந்து, பின்னர் வல்லூறுகளால் பிடுங்கிச் செல்லப்பட்ட, அல்லது ஆழமானதொரு கணவாய்க்குள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவருக்கு ஒப்பாவார்.
22:32. உண்மையில், கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளைக் கண்ணியம் செய்வோர் தங்களுடைய இதயங்களிலுள்ள நன்னெறியைச் செயல்படுத்திக் காட்டுகின்றனர்.
22:33. தொன்மைமிகு ஆலயத்திற்கு நன்கொடையளிக் கப்படுவதற்கு முன்னர், ஒரு பருவம் வரை ஏராளமான பயன்களை (கால்நடைகள்) உங்களுக்கு வழங்குகின்றன.
22:34. கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியமைக்காகக் கடவுள்-ன் பெயரைஅவர்கள் நினைவு கூர்ந்திடும் முகமாக ஒவ்வொரு சமூகத்திற்கும் நாம் சடங்குகளை விதித்துள்ளோம். உங்கள் இறைவன் அதே ஒரே இறைவன்தான்; நீங்கள் அனைவரும் அவரைச் சரணடைய வேண்டும். கீழ்ப்படிவோருக்கு நற்செய்தி வழங்குவீராக.
22:35. கடவுள் என்று குறிப்பிடப்படும்போது நடுங்கிடும் இதயம் கொண்டவர்கள் அவர்கள்தான், துன்பத்தின் போது அவர்கள் உறுதியோடு சகித்துக் கொண்டிருப்பார்கள், அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிப்பார்கள், மேலும் நம்முடைய வாழ்வாதாரங்களில் அவர்களுக்கு உரியவற்றில் இருந்து, அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்.
22:36. பிராணிப்பலிகளானது, உங்கள் சொந்த நலனுக்காகக் கடவுள்-ஆல் விதிக்கப்பெற்ற சடங்குகளில் உள்ளதாகும்.* வரிசையில் அவை நிற்கும் போது நீங்கள் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரை மொழிய வேண்டும். பலிக்காக அவை அர்ப்பணிக்கப்பட்டவுடன், நீங்கள் அதிலிருந்து உண்ணுவதுடன் ஏழைகளுக்கும் தேவையுடையோருக்கும் உணவளிக்கவும் வேண்டும். இதற்காகத்தான் அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தினோம், நீங்கள் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டு.
*22:36 புனித யாத்திரிகர்களின் பிராணிப் பலியானது, புனித யாத்திரைத் தலத்திலுள்ள வளங்களைப் பாதுகாக்கின்றது. புனித யாத்திரையின் போது மக்காவில் ஏறத்தாழ 2,000,000 யாத்திரிகள் குழுமுகின்றனர் என்பதைக் கவனிக்கவும்.
22:37. அவற்றின் இறைச்சியோ, அன்றி அவற்றின் இரத்தமோ கடவுள்-ஐ அடைவதில்லை. அவரை அடைவது உங்களுடைய பயபக்திதான். உங்களுக்கு வழி காட்டியதற்காக கடவுள்-ஐத் துதிப்பதன் மூலம் உங்களுடைய நன்றியறிதலைக் காட்டும் பொருட்டு, அவர் அவற்றை உங்களுக்கு வசப்படுத்தினார். தர்மவான்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.
22:38. நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் காக்கின்றார். நம்பிக்கைத் துரோகி, நன்றிகெட்டவர் எவரையும் கடவுள் நேசிப்பதில்லை.
22:39. அவர்களுக்கு அநீதி நேரிட்டுவிட்ட காரணத்தால், அடக்குமுறை செய்யப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் கடவுள் நிச்சயமாக அவர்களுக்கு ஆதரவளிக்க ஆற்றலுடையவர்.
22:40. "எங்கள் இரட்சகர் கடவுள்தான்" என்று கூறியதைத் தவிர மற்ற காரணம் எதற்காகவுமின்றி, அவர்கள் தங்களுடைய வீடுகளை விட்டு நியாயமின்றி வெளியேற்றப்பட்டனர். மற்றவர்களுக்கெதிராக சில மக்களுக்குக் கடவுள் ஆதரவளிக்கவில்லையெனில், மடங்கள், தேவாலயங்கள், யூத ஆலயங்கள், மற்றும் - கடவுள்-ன் பெயர் அடிக்கடி நினைவு கூர்ந்திடப்படும் - மஸ்ஜித்கள் அழிக்கப்பட்டுப் போயிருக்கும். பரிபூரணமாக, அவருக்கு ஆதரவளிப்பவர்களுக்குக் கடவுள் ஆதரவளிக்கின்றார். கடவுள் சக்தி நிறைந்தவர், எல்லாம் வல்லவர்.
22:41. அவர்கள் யாரென்றால், பூமியின் ஆட்சியாளர்களாக நாம் அவர்களை நியமித்தால், அவர்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும் நிலைநாட்டுவார்கள், மேலும் நன்னெறியை ஆதரிப்பார்கள், மேலும் தீமையைத் தடுப்பார்கள். கடவுள்தான் மேலான அரசர் ஆவார்.
22:42. அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்களுக்கு முன்னர் நோவாவின் சமூகத்தார், ஆத் மற்றும் தமூது ஆகியோரும் நம்பமறுத்தனர்.
22:43. அத்துடன் ஆப்ரஹாமின் சமூகத்தாரும், லோத்தின் சமூகத்தாரும்
22:44. மேலும் மித்யன்வாசிகளும். மோஸஸும் ஏற்றுக் கொள்ள மறுக்கப்பட்டார். அம்மக்கள் அனைவரையும் நான் தொடர்ந்து இட்டுச் சென்றேன், பின்னர் நான் அவர்களைக் கணக்குக் கொடுக்க அழைத்தேன்; எனது பழிதீர்த்தல் எப்படி (நாசம் விளைவிப்பதாக) இருந்தது!
22:45. எத்தனையோ ஒரு சமூகத்தை அவர்களுடைய தீச் செயல்களின் காரணமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்கள் சிதிலங்களுடனும், பாழடைந்த கிணறுகளுடனும், வெறுமையான பெரும்பெரும் மாளிகைகளுடனும் முடிந்து போயினர்.
22:46. அவர்கள் பூமியைச் சுற்றிப்பார்த்து, பின்னர் புரிந்து கொள்வதற்குத் தங்கள் மனங்களையும், கேட்பதற்குத் தங்கள் காதுகளையும் பயன்படுத்தவில்லையா? உண்மையில், மெய்யான குருடென்பது கண்களின் குருட்டுத்தனம் அல்ல, ஆனால் நெஞ்சங்களில் உள்ள இதயங்களின் குருட்டுத்தனமே ஆகும்.
22:47. தண்டனையைக் கொண்டு வருமாறு அவர்கள் உம்மிடம் சவால் விடுகின்றனர், மேலும் கடவுள் ஒரு போதும் தனது முன்னறிவிப்பைப் பூர்த்தி செய்யத் தவறமாட்டார். உம்முடைய இரட்சகரின் ஒரு நாள் என்பது உங்களுடைய ஓர் ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.
22:48. கடந்த காலத்தில் எத்தனையோ ஒரு சமூகம் தீமைகள் புரிந்தது, மேலும் நான் அவர்களைச் சிறிது காலம் தொடர்ந்து செலுத்தினேன், பின்னர் நான் அவர்களைத் தண்டித்தேன். இறுதி விதி என் வசமே உள்ளது.
22:49. கூறும், "மனிதர்களே, ஆழ்ந்த ஓர் எச்சரிப்பவனாக உங்களிடம் நான் அனுப்பப்பட்டுள்ளேன்."*
*22:49 இக்கட்டளையானது கடவுளின் உடன்படிக்கைத் தூதரை நோக்கிக் குறிப்பாகக் கூறப்படுகின்றது. இந்த நிதர்சனமும், அத்தூதருடைய குறிப்பான பெயரும் குர்ஆனில் கணிதரீதியில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. மறுக்க முடியாத சான்றுகளுடன் விபரங்களை பின்இணைப்பு 2 மற்றும் 26ல் காண்க.
22:50. நம்பிக்கை கொண்டு, மேலும் நேரியதொரு வாழ்வு நடத்துவோர், மன்னிப்பிற்கும் தாராளமானதோர் பிரதிபலனுக்கும் தகுதி பெற்று விட்டார்கள்.
22:51. நம்முடைய வெளிப்பாடுகளுக்குச் சவால் விட முனைவோரைப் பொறுத்த வரை, அவர்கள் நரகிற்கு உள்ளாகின்றனர்.
22:52. உமக்கு முன்னர் எந்தத் தூதரையோ, அன்றி ஒரு நபியையோ, அவருடைய நாட்டத்தில் சாத்தானைச் குறுக்கிடச் செய்தே அல்லாமல் நாம் அனுப்பவில்லை. பின்னர் சாத்தான் செய்தவற்றை கடவுள் செல்லாமல் ஆக்கி விடுகின்றார். கடவுள் தன்னுடைய வெளிப்பாடுகளைப் பூரணப்படுத்துகின்றார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்*
*22:52 இந்த பூலோகச் சோதனை முழுவதும், தனது கண்ணோட்டத்தை எடுத்துக்காட்ட சாத்தான் அனுமதிக்கப்படு கின்றான். (நமது உடல்களில் சாத்தானுடைய ஒரு பிரதிநிதியுடன் நாம் பிறப்பெடுக்கின்றோம்). கடவுளின் சாட்சியம் மற்றும் சாத்தானின் சாட்சியம் ஆகியவற்றுக்கிடையில், மக்கள் ஒன்றைத் தேர்வு செய்ய இது இடம் அளிக்கின்றது. சாத்தானின் சாட்சியங்கள் ஒரே சீராக, பொய்களின் அடிப்படையிலானது. சாத்தானின் பிரதிநிதிகள் ஒவ்வொரு தூதருக்கெதிராகவும் மிகவும் அபத்தமான பொய்களையும், நிந்தனைகளையும், குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர் எனும் நிதர்சனத்தை, இந்த வழிமுறை விவரிக்கின்றது. (காண்க 2(6,33,34) 6:33-34(8,30)>8:30 2(17,76,77)>17:76-77 (27,70)>27:70).
22:53. இவ்விதமாக அவர் சாத்தானின் சூழ்ச்சியை, தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கியவர்களுக்கும், இதயங்கள் கடினமாகிப் போனவர்களுக்கும் ஒரு சோதனையாக அமைத்து விடுகின்றார். தீயவர்கள் எதிரணியில்தான் இருந்தாக வேண்டும்.
*22:52 இந்த பூலோகச் சோதனை முழுவதும், தனது கண்ணோட்டத்தை எடுத்துக்காட்ட சாத்தான் அனுமதிக்கப்படு கின்றான். (நமது உடல்களில் சாத்தானுடைய ஒரு பிரதிநிதியுடன் நாம் பிறப்பெடுக்கின்றோம்). கடவுளின் சாட்சியம் மற்றும் சாத்தானின் சாட்சியம் ஆகியவற்றுக்கிடையில், மக்கள் ஒன்றைத் தேர்வு செய்ய இது இடம் அளிக்கின்றது. சாத்தானின் சாட்சியங்கள் ஒரே சீராக, பொய்களின் அடிப்படையிலானது. சாத்தானின் பிரதிநிதிகள் ஒவ்வொரு தூதருக்கெதிராகவும் மிகவும் அபத்தமான பொய்களையும், நிந்தனைகளையும், குற்றச்சாட்டுக்களையும் தொடர்ந்து கொண்டு வருகின்றனர் எனும் நிதர்சனத்தை, இந்த வழிமுறை விவரிக்கின்றது. (காண்க 6:33-34, 8:30, 17:76-77, 27:70).
22:54. அறிவைக் கொண்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் உம் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள், பின்னர் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள், மேலும் அவர்களுடைய இதயங்கள் உவப்புடன் அதனை ஏற்றுக்கொள்ளும். வெகுநிச்சயமாக, நம்பிக்கையாளர்களைக் கடவுள் சரியான பாதையில் வழிநடத்துகின்றார்.
22:55. நம்பமறுப்போரைப் பொறுத்தவரையில், வேளை அவர்களிடம் திடீரென வரும் வரை, அல்லது பயங்கரமானதொரு நாளின் தண்டனை அவர்களிடம் வரும் வரை, அவர்கள் தொடர்ந்து சந்தேகங்களைத் தாங்கிய வண்ணமே இருப்பார்கள்.
22:56. ஆட்சியதிகாரம் அனைத்தும் அந்நாளில் கடவுள்-க்கே உரியதாகும், எனவே அவர்களுக்கிடையில் அவர் தீர்ப்பளிப்பார். நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் ஆனந்தமயமான தோட்டங்களுக்குத் தகுதியாகி விட்டார்கள்.
22:57. அதேசமயம் நம்பிக்கை கொள்ள மறுத்து மேலும் நமது வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
22:58. கடவுள்-ன் நிமித்தம் புலம்பெயர்ந்து, பின்னர் கொல்லப் பட்ட, அல்லது இறந்துவிட்ட, அவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக நல்ல வாழ்வாதாரங்களைப் பொழிவார். வழங்குபவர்களில் நிச்சயமாகக் கடவுள் மிகச் சிறந்தவர்.
22:59. மிகவும் உறுதியாக, அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் ஒரு நுழைவில் அவர் அவர்களை நுழையச் செய்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், கனிவானவர்.
22:60. தன் மீது நேரிட்ட ஓர் அநீதிக்காக, நீதமாகப் பழி தீர்த்த ஒருவன், பின்னர் அதன் காரணமாக அடக்கு முறை செய்யப்படுவானாயின், நிச்சயமாகக் கடவுள் அவனுக்கு ஆதரவளிப்பார் என விதிக்கப்பட்டுள்ளது. கடவுள் பிழைபொறுப்பவர், மன்னிக்கின்றவர்.
22:61. கடவுள் பகலுக்குள் இரவைச் சேர்க்கின்றார், மேலும் இரவுக்குள் பகலைச் சேர்க்கின்றார் என்பதும், மேலும் கடவுள் கேட்பவர், பார்ப்பவர், என்பதும் ஒரு நிதர்சனமாகும்.
22:62. கடவுள்தான் சத்தியம், அதே சமயம் அவருடன் போலித் தெய்வங்கள் எதனையும் அமைத்துக் கொள்ளுதல் ஒரு பொய்மையாக அமைகின்றது என்பதும், கடவுள் மிகவும் உயர்ந்தவர், மேலதிகாரமிக்கவர் என்பதும் ஒரு நிதர்சனமாகும்.
22:63. நிலத்தைப் பசுமையாக மாற்றி விடும் தண்ணீரை விண்ணிலிருந்து கடவுள் இறக்கி அனுப்புகின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? கடவுள் மாண்புமிக்கவர், நன்கறிந்தவர்.
22:64. வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், பூமியில் உள்ள ஒவ்வொன்றும், அவருக்குரியது. மிக நிச்சயமாக, கடவுள்தான் மிக்க செல்வந்தர், மிகவும் புகழுக்குத் தகுதியானவர்.
22:65. பூமியின் மீது ஒவ்வொன்றையும் உங்களுக்குப் பணி செய்வதற்காகக் கடவுள் ஆக்கியிருக்கின்றார் என்பதை நீங்கள் காணவில்லையா? அவருடைய கட்டளைப்படி கப்பல்கள் பெருங்கடலில் ஒடுகின்றன. அவருடைய கட்டளைக்கேற்பவே தவிர, விண்ணகப் பொருட்கள் பூமியின் மீது மோதி விடாதவாறு அவர் தடுத்துக் கொண்டிருக்கின்றார். மனிதர்கள் மீது கடவுள் மிக்க கனிவுடையவராக இருக்கின்றார், மிக்க கருணையாளர்.
22:66. அவர்தான் உங்களுக்கு வாழ்வளித்தவர், பின்னர் அவர் உங்களை மரணத்தில் ஆழ்த்துகின்றார், பின்னர் அவர் மீண்டும் உங்களை வாழ்வுக்குக் கொண்டு வருகின்றார். நிச்சயமாக, மானிடன் நன்றியற்றவனாக இருக்கின்றான்.
22:67. ஒவ்வொரு சமூகத்திற்கும், அவர்கள் ஆதரித்தாக வேண்டிய சடங்குகளின் ஒரு தொகுப்பினை நாம் விதித்துள்ளோம். எனவே, அவர்கள் உம்முடன் சச்சரவிட வேண்டாம். ஒவ்வொருவரையும் உம் இரட்சகரின் பால் நீர் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். மிக நிச்சயமாக, நீர் சரியான பாதையிலேயே இருக்கின்றீர்.
22:68. அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது கூறும், "நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் அறிந்திருக்கின்றார்".
22:69. உயிர்த்தெழுப்பப்படும் நாள் அன்று உங்களுடைய அனைத்துத் தர்க்கங்கள் குறித்தும், கடவுள் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பார்.
22:70. வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா? இவை அனைத்தும் ஒரு பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்
22:71. இருப்பினும், அவற்றுக்குச் சக்தி எதையும் அவர் வழங்கியிருக்காத போலித்தெய்வங்களை அவர்கள் கடவுள்-வுடன் இணை வழிபாடு செய்கின்றனர், மேலும் அவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. வரம்புமீறுபவர்களுக்கு உதவியாளர் எவருமிலர்.
22:72. நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களுக்குத் தெளிவாக ஓதிக்காட்டப்படும் போது, நம்பமறுப்பவர்களின் முகங்களில் பொல்லாத்தனத்தை நீர் காண்பீர். நமது வெளிப்பாடுகளை அவர்களிடம் ஓதிக் காட்டுபவர்களை அவர்கள் கிட்டத்தட்டத் தாக்கி விடுகின்றனர். கூறும், "இதனை விட மிகவும் மோசமான ஒன்றைப்பற்றி நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? நம்பமறுப்பவர்களுக்குக் கடவுள்-ஆல் நரகம் வாக்களிக்கப்பட்டுள்ளது; என்ன ஒரு துன்பகரமான விதி".
22:73. மனிதர்களே, நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொரு நீதிபோதனை இங்கே: கடவுள்-வுடன் நீங்கள் அமைத்துக் கொள்ளும் போலித் தெய்வங்கள் ஒரு போதும் ஓர் ஈயைப் படைக்கவும் இயலாது, அவ்வாறு செய்வதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து கொண்ட போதிலும். அது மட்டுமின்றி, அந்த ஈ அவர்களிடமிருந்து எதையேனும் திருடி விட்டால், அவர்களால் அதனை மீட்டுக் கொள்ளவும் இயலாது; தொடர்பவனும் தொடரப்படுபவனும் பலவீனர்களே.
22:74. கடவுள்-ஐ மதிக்க வேண்டியவாறு அவர்கள் அவரை மதிக்கவில்லை. கடவுள் மிகவும் சக்தி நிறைந்தவர், எல்லாம் வல்லவர்.
22:75. வானவர்களில் இருந்தும், அவ்வண்ணமே மனிதர்களில் இருந்தும் தூதர்களைக் கடவுள் தேர்ந்தெடுக்கின்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
22:76. அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர்களுடைய எதிர்காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். அனைத்து விஷயங்களின் இறுதிக் கட்டுப்பாடும் கடவுள்-க்குரியதே ஆகும்.
22:77. நம்பிக்கை கொண்டவர்களே உங்களைத்தான், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, நீங்கள் குனியவும், சிரம் பணியவும், உங்கள் இரட்சகரை வழிபடவும், நன்னெறிகள் புரியவும் வேண்டும்.
22:78. நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவர் நிமித்தமாக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார், மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள் மார்க்கத்தைப் பயில்வதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் முதலில் உங்களுக்கு "சரணடைந்தோர்" எனப் பெயரிட்டார். இப்படியாக, தூதர் உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகத் திகழ வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாகத் திகழவேண்டும், எனவே நீங்கள் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கவும், மேலும் (ஜகாத்) கடமையான தர்மத்தைக் கொடுத்து வரவும், மேலும் கடவுள் -ஐ பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகர், மிகச்சிறந்த இரட்சகர், மேலும் மிகச் சிறந்த ஆதரவாளர்.
*22:78 கடவுளை மட்டும் வழிபடுங்கள் என்ற அதே ஒரே செய்தியைத்தான் தூதர்கள் அனைவரும் உபதேசித்தனர் என்ற போதிலும், சரணடைதல் (இஸ்லாம்) மற்றும் "சரணடைந்தவர்"(முஸ்லிம்) (2:128) எனும் வார்த்தையை உருவாக்கிய முதல் தூதர் ஆப்ரஹாம் ஆவார். சரணடைதலுக்கு ஆப்ரஹாமின் பங்களிப்பு என்ன? சரணடைதலின் மார்க்கக் கடமைகள் அனைத்தும் ஆப்ரஹாமின் மூலமாகவே வெளிப்படுத்தப்பட்டதென (16:123லிருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம் (காண்க பின் இணைப்புக்கள் 9 & 26).