Find
Chapter 19: Maryam
19:0-98
98 verses Revelation order 44
سورة مريم

. ١:١٩ كهيعص

. ٢:١٩ ذِكرُ رَحمَتِ رَبِّكَ عَبدَهُ زَكَرِيّا

. ٣:١٩ إِذ نادىٰ رَبَّهُ نِداءً خَفِيًّا

. ٤:١٩ قالَ رَبِّ إِنّى وَهَنَ العَظمُ مِنّى وَاشتَعَلَ الرَّأسُ شَيبًا وَلَم أَكُن بِدُعائِكَ رَبِّ شَقِيًّا

. ٥:١٩ وَإِنّى خِفتُ المَوٰلِىَ مِن وَراءى وَكانَتِ امرَأَتى عاقِرًا فَهَب لى مِن لَدُنكَ وَلِيًّا

. ٦:١٩ يَرِثُنى وَيَرِثُ مِن ءالِ يَعقوبَ وَاجعَلهُ رَبِّ رَضِيًّا

. ٧:١٩ يٰزَكَرِيّا إِنّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ اسمُهُ يَحيىٰ لَم نَجعَل لَهُ مِن قَبلُ سَمِيًّا

. ٨:١٩ قالَ رَبِّ أَنّىٰ يَكونُ لى غُلٰمٌ وَكانَتِ امرَأَتى عاقِرًا وَقَد بَلَغتُ مِنَ الكِبَرِ عِتِيًّا

. ٩:١٩ قالَ كَذٰلِكَ قالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَقَد خَلَقتُكَ مِن قَبلُ وَلَم تَكُ شَيـًٔا

. ١٠:١٩ قالَ رَبِّ اجعَل لى ءايَةً قالَ ءايَتُكَ أَلّا تُكَلِّمَ النّاسَ ثَلٰثَ لَيالٍ سَوِيًّا

. ١١:١٩ فَخَرَجَ عَلىٰ قَومِهِ مِنَ المِحرابِ فَأَوحىٰ إِلَيهِم أَن سَبِّحوا بُكرَةً وَعَشِيًّا

. ١٢:١٩ يٰيَحيىٰ خُذِ الكِتٰبَ بِقُوَّةٍ وَءاتَينٰهُ الحُكمَ صَبِيًّا

. ١٣:١٩ وَحَنانًا مِن لَدُنّا وَزَكوٰةً وَكانَ تَقِيًّا

. ١٤:١٩ وَبَرًّا بِوٰلِدَيهِ وَلَم يَكُن جَبّارًا عَصِيًّا

. ١٥:١٩ وَسَلٰمٌ عَلَيهِ يَومَ وُلِدَ وَيَومَ يَموتُ وَيَومَ يُبعَثُ حَيًّا

. ١٦:١٩ وَاذكُر فِى الكِتٰبِ مَريَمَ إِذِ انتَبَذَت مِن أَهلِها مَكانًا شَرقِيًّا

. ١٧:١٩ فَاتَّخَذَت مِن دونِهِم حِجابًا فَأَرسَلنا إِلَيها روحَنا فَتَمَثَّلَ لَها بَشَرًا سَوِيًّا

. ١٨:١٩ قالَت إِنّى أَعوذُ بِالرَّحمٰنِ مِنكَ إِن كُنتَ تَقِيًّا

. ١٩:١٩ قالَ إِنَّما أَنا۠ رَسولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلٰمًا زَكِيًّا

. ٢٠:١٩ قالَت أَنّىٰ يَكونُ لى غُلٰمٌ وَلَم يَمسَسنى بَشَرٌ وَلَم أَكُ بَغِيًّا

. ٢١:١٩ قالَ كَذٰلِكِ قالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَلِنَجعَلَهُ ءايَةً لِلنّاسِ وَرَحمَةً مِنّا وَكانَ أَمرًا مَقضِيًّا

. ٢٢:١٩ فَحَمَلَتهُ فَانتَبَذَت بِهِ مَكانًا قَصِيًّا

. ٢٣:١٩ فَأَجاءَهَا المَخاضُ إِلىٰ جِذعِ النَّخلَةِ قالَت يٰلَيتَنى مِتُّ قَبلَ هٰذا وَكُنتُ نَسيًا مَنسِيًّا

. ٢٤:١٩ فَنادىٰها مِن تَحتِها أَلّا تَحزَنى قَد جَعَلَ رَبُّكِ تَحتَكِ سَرِيًّا

. ٢٥:١٩ وَهُزّى إِلَيكِ بِجِذعِ النَّخلَةِ تُسٰقِط عَلَيكِ رُطَبًا جَنِيًّا

. ٢٦:١٩ فَكُلى وَاشرَبى وَقَرّى عَينًا فَإِمّا تَرَيِنَّ مِنَ البَشَرِ أَحَدًا فَقولى إِنّى نَذَرتُ لِلرَّحمٰنِ صَومًا فَلَن أُكَلِّمَ اليَومَ إِنسِيًّا

. ٢٧:١٩ فَأَتَت بِهِ قَومَها تَحمِلُهُ قالوا يٰمَريَمُ لَقَد جِئتِ شَيـًٔا فَرِيًّا

. ٢٨:١٩ يٰأُختَ هٰرونَ ما كانَ أَبوكِ امرَأَ سَوءٍ وَما كانَت أُمُّكِ بَغِيًّا

. ٢٩:١٩ فَأَشارَت إِلَيهِ قالوا كَيفَ نُكَلِّمُ مَن كانَ فِى المَهدِ صَبِيًّا

. ٣٠:١٩ قالَ إِنّى عَبدُ اللَّهِ ءاتىٰنِىَ الكِتٰبَ وَجَعَلَنى نَبِيًّا

. ٣١:١٩ وَجَعَلَنى مُبارَكًا أَينَ ما كُنتُ وَأَوصٰنى بِالصَّلوٰةِ وَالزَّكوٰةِ ما دُمتُ حَيًّا

. ٣٢:١٩ وَبَرًّا بِوٰلِدَتى وَلَم يَجعَلنى جَبّارًا شَقِيًّا

. ٣٣:١٩ وَالسَّلٰمُ عَلَىَّ يَومَ وُلِدتُ وَيَومَ أَموتُ وَيَومَ أُبعَثُ حَيًّا

. ٣٤:١٩ ذٰلِكَ عيسَى ابنُ مَريَمَ قَولَ الحَقِّ الَّذى فيهِ يَمتَرونَ

. ٣٥:١٩ ما كانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍ سُبحٰنَهُ إِذا قَضىٰ أَمرًا فَإِنَّما يَقولُ لَهُ كُن فَيَكونُ

. ٣٦:١٩ وَإِنَّ اللَّهَ رَبّى وَرَبُّكُم فَاعبُدوهُ هٰذا صِرٰطٌ مُستَقيمٌ

. ٣٧:١٩ فَاختَلَفَ الأَحزابُ مِن بَينِهِم فَوَيلٌ لِلَّذينَ كَفَروا مِن مَشهَدِ يَومٍ عَظيمٍ

. ٣٨:١٩ أَسمِع بِهِم وَأَبصِر يَومَ يَأتونَنا لٰكِنِ الظّٰلِمونَ اليَومَ فى ضَلٰلٍ مُبينٍ

. ٣٩:١٩ وَأَنذِرهُم يَومَ الحَسرَةِ إِذ قُضِىَ الأَمرُ وَهُم فى غَفلَةٍ وَهُم لا يُؤمِنونَ

. ٤٠:١٩ إِنّا نَحنُ نَرِثُ الأَرضَ وَمَن عَلَيها وَإِلَينا يُرجَعونَ

. ٤١:١٩ وَاذكُر فِى الكِتٰبِ إِبرٰهيمَ إِنَّهُ كانَ صِدّيقًا نَبِيًّا

. ٤٢:١٩ إِذ قالَ لِأَبيهِ يٰأَبَتِ لِمَ تَعبُدُ ما لا يَسمَعُ وَلا يُبصِرُ وَلا يُغنى عَنكَ شَيـًٔا

. ٤٣:١٩ يٰأَبَتِ إِنّى قَد جاءَنى مِنَ العِلمِ ما لَم يَأتِكَ فَاتَّبِعنى أَهدِكَ صِرٰطًا سَوِيًّا

. ٤٤:١٩ يٰأَبَتِ لا تَعبُدِ الشَّيطٰنَ إِنَّ الشَّيطٰنَ كانَ لِلرَّحمٰنِ عَصِيًّا

. ٤٥:١٩ يٰأَبَتِ إِنّى أَخافُ أَن يَمَسَّكَ عَذابٌ مِنَ الرَّحمٰنِ فَتَكونَ لِلشَّيطٰنِ وَلِيًّا

. ٤٦:١٩ قالَ أَراغِبٌ أَنتَ عَن ءالِهَتى يٰإِبرٰهيمُ لَئِن لَم تَنتَهِ لَأَرجُمَنَّكَ وَاهجُرنى مَلِيًّا

. ٤٧:١٩ قالَ سَلٰمٌ عَلَيكَ سَأَستَغفِرُ لَكَ رَبّى إِنَّهُ كانَ بى حَفِيًّا

. ٤٨:١٩ وَأَعتَزِلُكُم وَما تَدعونَ مِن دونِ اللَّهِ وَأَدعوا رَبّى عَسىٰ أَلّا أَكونَ بِدُعاءِ رَبّى شَقِيًّا

. ٤٩:١٩ فَلَمَّا اعتَزَلَهُم وَما يَعبُدونَ مِن دونِ اللَّهِ وَهَبنا لَهُ إِسحٰقَ وَيَعقوبَ وَكُلًّا جَعَلنا نَبِيًّا

. ٥٠:١٩ وَوَهَبنا لَهُم مِن رَحمَتِنا وَجَعَلنا لَهُم لِسانَ صِدقٍ عَلِيًّا

. ٥١:١٩ وَاذكُر فِى الكِتٰبِ موسىٰ إِنَّهُ كانَ مُخلَصًا وَكانَ رَسولًا نَبِيًّا

. ٥٢:١٩ وَنٰدَينٰهُ مِن جانِبِ الطّورِ الأَيمَنِ وَقَرَّبنٰهُ نَجِيًّا

. ٥٣:١٩ وَوَهَبنا لَهُ مِن رَحمَتِنا أَخاهُ هٰرونَ نَبِيًّا

. ٥٤:١٩ وَاذكُر فِى الكِتٰبِ إِسمٰعيلَ إِنَّهُ كانَ صادِقَ الوَعدِ وَكانَ رَسولًا نَبِيًّا

. ٥٥:١٩ وَكانَ يَأمُرُ أَهلَهُ بِالصَّلوٰةِ وَالزَّكوٰةِ وَكانَ عِندَ رَبِّهِ مَرضِيًّا

. ٥٦:١٩ وَاذكُر فِى الكِتٰبِ إِدريسَ إِنَّهُ كانَ صِدّيقًا نَبِيًّا

. ٥٧:١٩ وَرَفَعنٰهُ مَكانًا عَلِيًّا

. ٥٨:١٩ أُولٰئِكَ الَّذينَ أَنعَمَ اللَّهُ عَلَيهِم مِنَ النَّبِيّـۧنَ مِن ذُرِّيَّةِ ءادَمَ وَمِمَّن حَمَلنا مَعَ نوحٍ وَمِن ذُرِّيَّةِ إِبرٰهيمَ وَإِسرٰءيلَ وَمِمَّن هَدَينا وَاجتَبَينا إِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُ الرَّحمٰنِ خَرّوا سُجَّدًا وَبُكِيًّا

. ٥٩:١٩ فَخَلَفَ مِن بَعدِهِم خَلفٌ أَضاعُوا الصَّلوٰةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوفَ يَلقَونَ غَيًّا

. ٦٠:١٩ إِلّا مَن تابَ وَءامَنَ وَعَمِلَ صٰلِحًا فَأُولٰئِكَ يَدخُلونَ الجَنَّةَ وَلا يُظلَمونَ شَيـًٔا

. ٦١:١٩ جَنّٰتِ عَدنٍ الَّتى وَعَدَ الرَّحمٰنُ عِبادَهُ بِالغَيبِ إِنَّهُ كانَ وَعدُهُ مَأتِيًّا

. ٦٢:١٩ لا يَسمَعونَ فيها لَغوًا إِلّا سَلٰمًا وَلَهُم رِزقُهُم فيها بُكرَةً وَعَشِيًّا

. ٦٣:١٩ تِلكَ الجَنَّةُ الَّتى نورِثُ مِن عِبادِنا مَن كانَ تَقِيًّا

. ٦٤:١٩ وَما نَتَنَزَّلُ إِلّا بِأَمرِ رَبِّكَ لَهُ ما بَينَ أَيدينا وَما خَلفَنا وَما بَينَ ذٰلِكَ وَما كانَ رَبُّكَ نَسِيًّا

. ٦٥:١٩ رَبُّ السَّمٰوٰتِ وَالأَرضِ وَما بَينَهُما فَاعبُدهُ وَاصطَبِر لِعِبٰدَتِهِ هَل تَعلَمُ لَهُ سَمِيًّا

. ٦٦:١٩ وَيَقولُ الإِنسٰنُ أَءِذا ما مِتُّ لَسَوفَ أُخرَجُ حَيًّا

. ٦٧:١٩ أَوَلا يَذكُرُ الإِنسٰنُ أَنّا خَلَقنٰهُ مِن قَبلُ وَلَم يَكُ شَيـًٔا

. ٦٨:١٩ فَوَرَبِّكَ لَنَحشُرَنَّهُم وَالشَّيٰطينَ ثُمَّ لَنُحضِرَنَّهُم حَولَ جَهَنَّمَ جِثِيًّا

. ٦٩:١٩ ثُمَّ لَنَنزِعَنَّ مِن كُلِّ شيعَةٍ أَيُّهُم أَشَدُّ عَلَى الرَّحمٰنِ عِتِيًّا

. ٧٠:١٩ ثُمَّ لَنَحنُ أَعلَمُ بِالَّذينَ هُم أَولىٰ بِها صِلِيًّا

. ٧١:١٩ وَإِن مِنكُم إِلّا وارِدُها كانَ عَلىٰ رَبِّكَ حَتمًا مَقضِيًّا

. ٧٢:١٩ ثُمَّ نُنَجِّى الَّذينَ اتَّقَوا وَنَذَرُ الظّٰلِمينَ فيها جِثِيًّا

. ٧٣:١٩ وَإِذا تُتلىٰ عَلَيهِم ءايٰتُنا بَيِّنٰتٍ قالَ الَّذينَ كَفَروا لِلَّذينَ ءامَنوا أَىُّ الفَريقَينِ خَيرٌ مَقامًا وَأَحسَنُ نَدِيًّا

. ٧٤:١٩ وَكَم أَهلَكنا قَبلَهُم مِن قَرنٍ هُم أَحسَنُ أَثٰثًا وَرِءيًا

. ٧٥:١٩ قُل مَن كانَ فِى الضَّلٰلَةِ فَليَمدُد لَهُ الرَّحمٰنُ مَدًّا حَتّىٰ إِذا رَأَوا ما يوعَدونَ إِمَّا العَذابَ وَإِمَّا السّاعَةَ فَسَيَعلَمونَ مَن هُوَ شَرٌّ مَكانًا وَأَضعَفُ جُندًا

. ٧٦:١٩ وَيَزيدُ اللَّهُ الَّذينَ اهتَدَوا هُدًى وَالبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيرٌ عِندَ رَبِّكَ ثَوابًا وَخَيرٌ مَرَدًّا

. ٧٧:١٩ أَفَرَءَيتَ الَّذى كَفَرَ بِـٔايٰتِنا وَقالَ لَأوتَيَنَّ مالًا وَوَلَدًا

. ٧٨:١٩ أَطَّلَعَ الغَيبَ أَمِ اتَّخَذَ عِندَ الرَّحمٰنِ عَهدًا

. ٧٩:١٩ كَلّا سَنَكتُبُ ما يَقولُ وَنَمُدُّ لَهُ مِنَ العَذابِ مَدًّا

. ٨٠:١٩ وَنَرِثُهُ ما يَقولُ وَيَأتينا فَردًا

. ٨١:١٩ وَاتَّخَذوا مِن دونِ اللَّهِ ءالِهَةً لِيَكونوا لَهُم عِزًّا

. ٨٢:١٩ كَلّا سَيَكفُرونَ بِعِبادَتِهِم وَيَكونونَ عَلَيهِم ضِدًّا

. ٨٣:١٩ أَلَم تَرَ أَنّا أَرسَلنَا الشَّيٰطينَ عَلَى الكٰفِرينَ تَؤُزُّهُم أَزًّا

. ٨٤:١٩ فَلا تَعجَل عَلَيهِم إِنَّما نَعُدُّ لَهُم عَدًّا

. ٨٥:١٩ يَومَ نَحشُرُ المُتَّقينَ إِلَى الرَّحمٰنِ وَفدًا

. ٨٦:١٩ وَنَسوقُ المُجرِمينَ إِلىٰ جَهَنَّمَ وِردًا

. ٨٧:١٩ لا يَملِكونَ الشَّفٰعَةَ إِلّا مَنِ اتَّخَذَ عِندَ الرَّحمٰنِ عَهدًا

. ٨٨:١٩ وَقالُوا اتَّخَذَ الرَّحمٰنُ وَلَدًا

. ٨٩:١٩ لَقَد جِئتُم شَيـًٔا إِدًّا

. ٩٠:١٩ تَكادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرنَ مِنهُ وَتَنشَقُّ الأَرضُ وَتَخِرُّ الجِبالُ هَدًّا

. ٩١:١٩ أَن دَعَوا لِلرَّحمٰنِ وَلَدًا

. ٩٢:١٩ وَما يَنبَغى لِلرَّحمٰنِ أَن يَتَّخِذَ وَلَدًا

. ٩٣:١٩ إِن كُلُّ مَن فِى السَّمٰوٰتِ وَالأَرضِ إِلّا ءاتِى الرَّحمٰنِ عَبدًا

. ٩٤:١٩ لَقَد أَحصىٰهُم وَعَدَّهُم عَدًّا

. ٩٥:١٩ وَكُلُّهُم ءاتيهِ يَومَ القِيٰمَةِ فَردًا

. ٩٦:١٩ إِنَّ الَّذينَ ءامَنوا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجعَلُ لَهُمُ الرَّحمٰنُ وُدًّا

. ٩٧:١٩ فَإِنَّما يَسَّرنٰهُ بِلِسانِكَ لِتُبَشِّرَ بِهِ المُتَّقينَ وَتُنذِرَ بِهِ قَومًا لُدًّا

. ٩٨:١٩ وَكَم أَهلَكنا قَبلَهُم مِن قَرنٍ هَل تُحِسُّ مِنهُم مِن أَحَدٍ أَو تَسمَعُ لَهُم رِكزًا

Mary

19:1. K. H. Y. `A. S.* (Kãf Hã Yã `Ayn Sãd)

*19:1 This is the maximum number of Quranic Initials, because this sura deals with such crucial matters as the miraculous birth of John and the virgin birth of Jesus, and strongly condemns the gross blasphemy that considers Jesus to be a son of God. The five initials provide a powerful physical evidence to support these issues (See Appendices 1 & 22).

19:2. A narration about your Lord's mercy towards His servant Zachariah.

19:3. He called his Lord, a secret call.

19:4. He said, "My Lord, the bones have turned brittle in my body, and my hair is aflame with gray. As I implore You, my Lord, I never despair.

19:5. "I worry about my dependants after me, and my wife has been sterile. Grant me, from You, an heir.

19:6. "Let him be my heir and the heir of Jacob's clan, and make him, my Lord, acceptable."

19:7. "O Zachariah, we give you good news; a boy whose name shall be John (Yahya). We never created anyone like him before."

19:8. He said, "My Lord, will I have a son despite my wife's sterility, and despite my old age?"

19:9. He said, "Thus said your Lord: `It is easy for Me to do. I created you before that, and you were nothing.' "

19:10. He said, "My Lord, give me a sign." He said, "Your sign is that you will not speak to the people for three consecutive nights."

19:11. He came out to his family, from the sanctuary, and signaled to them: "Meditate (on God) day and night."

19:12. "O John, you shall uphold the scripture, strongly." We endowed him with wisdom, even in his youth.

19:13. And (we endowed him with) kindness from us and purity, for he was righteous.

19:14. He honored his parents, and was never a disobedient tyrant.

19:15. Peace be upon him the day he was born, the day he dies, and the day he is resurrected back to life.

19:16. Mention in the scripture Mary. She isolated herself from her family, into an eastern location.

19:17. While a barrier separated her from them, we sent to her our Spirit. He went to her in the form of a human being.

19:18. She said, "I seek refuge in the Most Gracious, that you may be righteous."

19:19. He said, "I am the messenger of your Lord, to grant you a pure son."

19:20. She said, "How can I have a son, when no man has touched me; I have never been unchaste."

19:21. He said, "Thus said your Lord, `It is easy for Me. We will render him a sign for the people, and mercy from us. This is a predestined matter.' "

19:22. When she bore him, she isolated herself to a faraway place.

19:23. The birth process came to her by the trunk of a palm tree. She said, "(I am so ashamed;) I wish I were dead before this happened, and completely forgotten."

19:24. (The infant) called her from beneath her, saying, "Do not grieve. Your Lord has provided you with a stream.

19:25. "If you shake the trunk of this palm tree, it will drop ripe dates for you.*

*19:25 Thus, Jesus was born in late September or early October. This is when dates ripen in the Middle East to the point of falling off the tree.

19:26. "Eat and drink, and be happy. When you see anyone, say, `I have made a vow of silence, [to the Most Gracious]*; I am not talking today to anyone.' "

*19:26 The statement [to the Most Gracious] occurs in the original Arabic Quran after “vow of silence” and is not included in the English translation.

19:27. She came to her family, carrying him. They said, "O Mary, you have committed something that is totally unexpected.

19:28. "O descendant of Aaron, your father was not a bad man, nor was your mother unchaste."

19:29. She pointed to him. They said, "How can we talk with an infant in the crib?"

19:30. (The infant spoke and) said, "I am a servant of God. He has given me the scripture, and has appointed me a prophet.

19:31. "He made me blessed wherever I go, and enjoined me to observe the Contact Prayers (Salat) and the obligatory charity (Zakat) for as long as I live.

19:32. "I am to honor my mother; He did not make me a disobedient rebel.

19:33. "And peace be upon me the day I was born, the day I die, and the day I get resurrected."

19:34. That was Jesus, the son of Mary, and this is the truth of this matter, about which they continue to doubt.

19:35. It does not befit God that He begets a son, be He glorified. To have anything done, He simply says to it, "Be," and it is.

19:36. He also proclaimed, "God is my Lord and your Lord; you shall worship Him alone. This is the right path."*

*19:36 This is similar to the statement attributed to Jesus in the Gospel of John 20:17.

19:37. The various parties disputed among themselves (regarding the identity of Jesus). Therefore, woe to those who disbelieve from the sight of a terrible day.

19:38. Wait till you hear them and see them when they come to face us. The transgressors on that day will be totally lost.

19:39. Warn them about the day of remorse, when judgment will be issued. They are totally oblivious; they do not believe.

19:40. We are the ones who inherit the earth and everyone on it; to us everyone will be returned.

19:41. Mention in the scripture Abraham; he was a saint, a prophet.

19:42. He said to his father, "O my father, why do you worship what can neither hear, nor see, nor help you in any way?

19:43. "O my father, I have received certain knowledge that you did not receive. Follow me, and I will guide you in a straight path.

19:44. "O my father, do not worship the devil. The devil has rebelled against the Most Gracious.

19:45. "O my father, I fear lest you incur retribution from the Most Gracious, then become an ally of the devil."

19:46. He said, "Have you forsaken my gods, O Abraham? Unless you stop, I will stone you. Leave me alone."

19:47. He said, "Peace be upon you. I will implore my Lord to forgive you; He has been Most Kind to me.

19:48. "I will abandon you and the gods you worship besides God. I will worship only my Lord. By imploring my Lord alone, I cannot go wrong."

19:49. Because he abandoned them and the gods they worshiped beside God, we granted him Isaac and Jacob, and we made each of them a prophet.

19:50. We showered them with our mercy, and we granted them an honorable position in history.

19:51. Mention in the scripture Moses. He was devoted, and he was a messenger prophet.

19:52. We called him from the right side of Mount Sinai. We brought him close, to confer with him.

19:53. And we granted him, out of our mercy, his brother Aaron as a prophet.

19:54. And mention in the scripture Ismail. He was truthful when he made a promise, and he was a messenger prophet.

19:55. He used to enjoin his family to observe the Contact Prayers (Salat) and the obligatory charity (Zakat); he was acceptable to his Lord.

19:56. And mention in the scripture Idris. He was a saint, a prophet.

19:57. We raised him to an honorable rank.

19:58. These are some of the prophets whom God blessed. They were chosen from among the descendants of Adam, and the descendants of those whom we carried with Noah, and the descendants of Abraham and Israel, and from among those whom we guided and selected. When the revelations of the Most Gracious are recited to them, they fall prostrate, weeping.

19:59. After them, He substituted generations who lost the Contact Prayers (Salat), and pursued their lusts. They will suffer the consequences.

19:60. Only those who repent, believe, and lead a righteous life will enter Paradise, without the least injustice.

19:61. The gardens of Eden await them, as promised by the Most Gracious for those who worship Him, even in privacy. Certainly, His promise must come to pass.

19:62. They will not hear any nonsense therein; only peace. They receive their provisions therein, day and night.

19:63. Such is Paradise; we grant it to those among our servants who are righteous.

19:64. We do not come down except by the command of your Lord. To Him belongs our past, our future, and everything between them. Your Lord is never forgetful.

19:65. The Lord of the heavens and the earth, and everything between them; you shall worship Him and steadfastly persevere in worshiping Him. Do you know of anyone who equals Him?

19:66. The human being asks, "After I die, do I come back to life?"

19:67. Did the human being forget that we created him already, and he was nothing?

19:68. By your Lord, we will certainly summon them, together with the devils, and will gather them around Hell, humiliated.

19:69. Then we will pick out from each group the most ardent opponent of the Most Gracious.

19:70. We know full well those who are most deserving of burning therein.

19:71. Every single one of you must see it; this is an irrevocable decision of your Lord.

*19:71 As detailed in Appendix 11, we will be resurrected prior to God's physical arrival to our universe. That will be a temporary taste of Hell, since the absence of God is Hell. When God comes (89:22), the righteous will be rescued. See 19:72.

19:72. Then we rescue the righteous, and leave the transgressors in it, humiliated.

19:73. When our revelations are recited to them, clearly, those who disbelieve say to those who believe, "Which of us is more prosperous? Which of us is in the majority?"

19:74. Many a generation have we annihilated before them; they were more powerful, and more prosperous.

19:75. Say, "Those who choose to go astray, the Most Gracious will lead them on, until they see what is promised for them - either the retribution or the Hour. That is when they find out who really is worse off, and weaker in power."

19:76. God augments the guidance of those who choose to be guided. For the good deeds are eternally rewarded by your Lord, and bring far better returns.

19:77. Have you noted the one who rejected our revelations then said, "I will be given wealth and children"?!

19:78. Has he seen the future? Has he taken such a pledge from the Most Gracious?

19:79. Indeed, we will record what he utters, then commit him to ever-increasing retribution.

19:80. Then we inherit everything he possessed, and he comes back to us all alone.

19:81. They worship beside God other gods that may be of help to them.

19:82. On the contrary; they will reject their idolatry, and will be their enemies.

19:83. Do you not see how we unleash the devils upon the disbelievers to stir them up?

19:84. Do not be impatient; we are preparing for them some preparation.

19:85. The day will come when we summon the righteous before the Most Gracious in a group.

19:86. And we will herd the guilty to Hell, to be their eternal abode.

19:87. No one will possess the power to intercede, except those who conform to the laws of the Most Gracious.

19:88. They said, "The Most Gracious has begotten a son"!

19:89. You have uttered a gross blasphemy.

19:90. The heavens are about to shatter, the earth is about to tear asunder, and the mountains are about to crumble.

19:91. Because they claim that the Most Gracious has begotten a son.

19:92. It is not befitting the Most Gracious that He should beget a son.

19:93. Every single one in the heavens and the earth is a servant of the Most Gracious.

19:94. He has encompassed them, and has counted them one by one.

19:95. All of them will come before Him on the Day of Resurrection as individuals.

19:96. Surely, those who believe and lead a righteous life, the Most Gracious will shower them with love.

19:97. We thus made this (Quran) elucidated in your tongue, in order to deliver good news to the righteous, and to warn with it the opponents.

19:98. Many a generation before them we annihilated; can you perceive any of them, or hear from them any sound?

மேரி

19:1. க. ஹ. ய. ஐ. ஸ* (காஃப் ஹா யா ஐன் ஸாத்)

*19:1 இதுவே அதிகபட்ச எண்ணிக்கையிலான குர்ஆனின் துவக்க எழுத்துகள் ஆகும், ஏனெனில் இந்த சூரா ஜானின் அற்புதப் பிறப்பு மற்றும் ஜீஸஸின் கன்னிப் பிறப்பு போன்ற முக்கிய விஷயங்களைக் குறித்துப் பேசுகின்றது, மேலும் ஜீஸஸைக் கடவுளின் மகனாகக் கருதும் மாபெரும் இறைநிந்தனையை கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. இந்த ஐந்து துவக்க எழுத்துகளும் இவ்விஷயங்களுக்கு ஆதரவான வலிமைவாய்ந்த கண்கூடான ஆதாரங்களை வழங்குகின்றன. (பார்க்க பின் இணைப்புகள் 1 &22).

19:2. தன் சேவகர் ஜகரிய்யாவின் பால் உம்முடைய இரட்சகரின் கருணையைப் பற்றிய ஒரு விவரிப்பு.

19:3. அவர் தன் இரட்சகரை அழைத்தார், இரகசியமானதோர் அழைப்பு.

19:4. அவர் கூறினார், "என் இரட்சகரே, எனது உடலில் எலும்புகள் மக்கிப்போய் விட்டன, மேலும் எனது தலைமுடியோ நரையினால் ஜொலிக்கின்றது. உம்மை இறைஞ்சுவதால், என் இரட்சகரே, நான் ஒருபோதும் விரக்தி அடைவதில்லை.

19:5. "எனக்குப் பிறகு என்னைச் சார்ந்திருப்பவர்களைக் குறித்து நான் கவலையடைகின்றேன், மேலும் என் மனைவியோ மலடியாக இருக்கின்றாள். உம்மிட மிருந்து ஒரு வாரிசை எனக்கு வழங்குவீராக.

19:6. "என்னுடைய வாரிசாகவும் ஜேகபின் வம்சத்திற்கு வாரிசாகவும் அவர் இருக்கட்டும், மேலும் என் இரட்சகரே, ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராகவும் அவரை ஆக்குவீராக."

19:7. "ஜகரிய்யாவே, நாம் உமக்கு நற்செய்தி தருகின்றோம்; ஜான் (யஹ்யா) என்ற பெயரைக் கொண்ட ஒரு பையன். அதற்கு முன்னர் அவரைப் போன்று எவர் ஒருவரையும் நாம் ஒருபோதும் படைக்கவில்லை."

19:8. அவர் கூறினார், "என் இரட்சகரே, என் மனைவியின் மலட்டுத்தனத்திற்குப் பின்னரும், என் முதிர்ந்த வயதிற்குப் பின்னரும் நான் ஒரு மகனைப் பெறுவேனா?"

19:9. அவர் கூறினார், "இவ்விதமே உம்முடைய இரட்சகர் கூறினார்: ‘அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. அதற்கு முன்னர் நீர் எதுவுமாக இல்லாதிருந்த போதே உம்மை நான் படைத்தேன்.’"

19:10. அவர் கூறினார், "என் இரட்சகரே, ஓர் அறிகுறியை எனக்குத் தருவீராக அவர் கூறினார், உமக்குரிய அறிகுறியாவது, தொடர்ந்த மூன்று இரவுகளுக்கு மக்களிடம் நீர் பேசமாட்டீர் என்பதாகும்."

19:11. ஆலயத்திலிருந்து, அவர் தன் குடும்பத்தாரிடம் வெளியில் வந்தார், மேலும் அவர்களிடம் சைகை செய்தார்: "பகலும் இரவும் (கடவுளைத்) தியானம் செய்யுங்கள்."

19:12. "ஜானே, உறுதியோடு, நீர் வேதத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்." அவருடைய இளமையிலேயே, அவருக்கு நாம் ஞானத்தைக் கொடையளித்தோம்.

19:13. மேலும் நம்மிடமிருந்து கனிவையும் தூய்மையையும் (அவருக்கு நாம் கொடையளித்தோம்), ஏனெனில் அவர் நன்னெறியுடையவராக இருந்தார்.

19:14. அவர் தன் பெற்றோரைக் கண்ணியம் செய்தார், மேலும் அவர் ஒருபோதும் கீழ்ப்படியாதவொரு கொடுங்கோலனாக இருந்ததில்லை.

19:15. அவர் பிறந்த அந்நாளிலும், அவர் இறக்கும் அந்நாளிலும், மேலும் அவர் மீண்டும் வாழ்வுக்குக் கொண்டு வரப்படுகின்ற உயிர்த்தெழுப்பப்படும் அந் நாளிலும் அவர் மீது சாந்தி நிலவுவதாக.

19:16. மேரியை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. தன் குடும்பத்தாரிடமிருந்து தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார், கிழக்கில் ஓர் இடத்திற்குள்.

19:17. அவர்களிடமிருந்து அவரை ஒரு தடுப்பு பிரித்து வைத்த சமயம் நம்முடைய ஆவியை நாம் அவரிடம் அனுப்பினோம். அவர் ஒரு மனித உருவத்தில் அவரிடம் சென்றார்.

19:18. அவர் கூறினார், "நீர் நன்னெறியுடையவராக இருக்க வேண்டும், என மிக்க அருளாளரிடம் நான் புகலிடம் தேடுகின்றேன்."

19:19. அவர் கூறினார், "நான் உம் இரட்சகரின் தூதன் ஆவேன், தூய்மையான ஒரு மகனை உமக்கு அளிப்பதற்காக."

19:20. அவர் கூறினார், "எந்த ஒரு மனிதனும் என்னைத் தொட்டிருக்காத போது, எப்படி நான் ஒரு மகனைப் பெற முடியும்; நான் ஒருபோதும் ஒழுக்கம் தவறியவளாகவும் இருந்ததில்லை."

19:21. அவர் கூறினார், "உம் இரட்சகர் இவ்விதம் சொன்னார், ‘அதனைச் செய்வது எனக்கு எளிதானதே. மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம்மிடமிருந்துள்ள கருணையாகவும் நாம் அவரை ஆக்குவோம். இது முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயமாகும்.’"

19:22. அவர் அவரைச் சுமந்த போது, மிகத் தொலைவிலுள்ளதோர் இடத்தில் தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

19:23. ஒரு பேரீத்த மரத்தின் கீழ் அவருக்கு பிரசவ வலி வந்தது. அவர் கூறினார், "(நான் மிகவும் வெட்கப் படுகின்றேன்; ) இது நிகழ்வதற்கு முன்னரே நான் மரணித்திருக்கவும், முற்றிலும் மறக்கப்பட்டிருக்கவும் வேண்டுமே என நான் விரும்புகின்றேன்."

19:24. அவருக்குக் கீழிருந்து (அச்சிசு) அவரை அழைத்துக் கூறியது, "துக்கப்படாதீர். உம் இரட்சகர் ஓர் ஓடையை உமக்கு வழங்கியுள்ளார்.

19:25. "இந்தப் பேரீத்த மரத்தின் அடித்தண்டை நீர் உலுக்கினால், பழுத்த பேரீத்தைகளை உமக்காக அது உதிர்க்கும்.*"

*19:25 எனவே, ஜீஸஸ் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் துவக்கத்தில்தான் பிறந்தார். அப்போது தான் மத்தியக் கிழக்கு நாடுகளில் மரங்களில் இருந்து உதிரும் அளவுக்குப் பேரீத்தம் பழங்கள் பழுக்கின்றன.

19:26. "உண்ணுவீராக பருகுவீராக, மேலும் மகிழ்வுடன் இருப்பீராக. எவரையேனும் நீர் காணும் போது, கூறுவீராக, ‘நான் மௌன விரதம் பூண்டுள்ளேன்; இன்றைய தினம் நான் எவருடனும் பேச மாட்டேன்.’"

19:27. அவரைச் சுமந்தவாறு, அவர் தன் குடும்பத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர், "மேரியே, முற்றிலும் எதிர்பாராத ஒன்றை நீர் செய்து விட்டீர்.

19:28. "ஆரோனின் வம்சத்தவரே, உம் தந்தை ஒரு கெட்ட மனிதராக இருந்ததில்லை. அன்றி, உம்முடைய தாயாரும் ஒழுக்கம் தவறியவராக இருந்ததில்லை."

19:29. அவரைச் சுட்டிக் காட்டினார் அவர். அவர்கள் கூறினர், "தொட்டிலில் இருக்கும் ஒரு சிசுவுடன் எப்படி நாங்கள் பேச முடியும்?"

19:30. (அந்தச் சிசு பேசியது, மேலும்) கூறியது, "நான் கடவுள்-ன் ஒரு சேவகன் ஆவேன். அவர் எனக்கு வேதத்தைத் தந்து, என்னை ஒரு நபியாகவும் நியமித்துள்ளார்.

19:31. "நான் செல்லுமிடமெல்லாம் என்னை அவர் ஆசீர்வதித்துள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளையும் (ஜகாத்) கடமையான தர்மத்தையும் நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டுள்ளார்.

19:32. "நான் என் தாயைக் கண்ணியப்படுத்த வேண்டியவன்; கீழ்ப்படியாத ஒரு கலகக்காரனாக என்னை அவர் ஆக்கவில்லை.

19:33. "மேலும் நான் பிறந்த அந்நாளிலும், நான் இறக்கும் அந்நாளிலும், மேலும் நான் உயிர்த்தெழுப்பப்படும் அந்நாளிலும் என் மீது சாந்தி நிலவுவதாக."

19:34. அவர்தான் ஜீஸஸ், மேரியின் மகனாவார், மேலும் அவர்கள் தொடர்ந்து சந்தேகித்துக் கொண்டிருக்கும், இவ்விஷயத்தைப் பற்றிய உண்மை இதுவேயாகும்.

19:35. ஒரு மகனை அவர் பெற்றெடுப்பதென்பது கடவுள்-க் குத் தகுதிக்கேற்றதல்ல, அவர் துதிப்பிற்குரியவர். எந்த ஒன்றையும் செய்து முடிக்க, அவர் அதனை, "ஆகு" என்று மட்டும் கூறுகின்றார், உடன் அது ஆகிவிடுகின்றது.

19:36. அவரும் பிரகடனம் செய்தார், "கடவுள்தான் என் இரட்சகரும் உங்கள் இரட்சகரும் ஆவார்; அவரை மட்டுமே நீங்கள் வழிபட வேண்டும். இதுவே நேரான பாதையாகும்."*

*19:36 இது ஜானின் சுவிசேஷம் 20:17 ல் ஜீஸஸ் கூறுவதாக வரும் வாசகத்திற்கு ஒப்பான ஒன்றாகும்.

19:37. (ஜீஸஸின் தன்மை குறித்து) வெவ்வேறு தரப்பினர் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். எனவே, பயங்கரமான ஒரு நாளின் பார்வையிலிருந்து நம்பமறுப்பவர்களுக்குக் கேடுதான்.

19:38. அவர்கள் நம்மை சந்திக்க வரும்போது நீர் அவர்களைச் செவியேற்கின்ற, மேலும் அவர்களை பார்க்கின்ற வரை காத்திருப்பீராக. வரம்புமீறியவர்கள் அந்நாளில் முற்றிலும் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள்.

19:39. தீர்ப்பு வழங்கப்படுகின்ற கை சேதத்தின் நாள் குறித்து அவர்களை எச்சரிக்கை செய்வீராக. அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களாக உள்ளனர்; அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

19:40. பூமியையும் அதில் உள்ள ஒவ்வொருவரையும் நாமே அனந்தரம் கொள்வோம்; ஒவ்வொருவரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.

19:41. ஆப்ரஹாமை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக; அவர் ஒரு புனிதராக, ஒரு நபியாக இருந்தார்.

19:42. அவர் தன் தந்தையிடம் கூறினார், "என் தந்தையே, செவியேற்கவோ, அல்லது பார்க்கவோ, அன்றியும் உமக்கு எவ்விதத்திலும் உதவி செய்யவோ இயலாதவற்றை நீங்கள் வழிபடுவது ஏன்?

19:43. "என் தந்தையே, நீங்கள் பெற்றிருக்காத குறிப்பிட்ட அறிவை நான் பெற்றிருக்கின்றேன். என்னைப் பின்பற்றுவீராக, நான் உங்களை நேரான பாதையில் வழி நடத்துவேன்.

19:44. "என் தந்தையே, சாத்தானை வழிபடாதீர். அந்தச் சாத்தான் மிக்க அருளாளருக்கெதிராக கலகம் செய்தவன் ஆவான்.

19:45. "என் தந்தையே, மிக்க அருளாளரிடமிருந்து தண்டனைக்கு நீர் உள்ளாகிப் பின்னர் சாத்தானின் ஒரு கூட்டாளியாகி விடுவீரோ என்று நான் அஞ்சுகின்றேன்."

19:46. அவர் கூறினார், "என்னுடைய தெய்வங்களை நீர் கைவிட்டு விட்டீரா, ஆப்ரஹாமே? நீர் நிறுத்திக் கொள்ளவில்லையென்றால், நான் உம்மைக் கல்லா லடித்துக் கொன்று விடுவேன். என்னைத் தனியே விட்டுச் சென்று விடும்."

19:47. அவர் கூறினார், "உங்கள் மீது சாந்தி நிலவட்டும். உம்மை மன்னிக்கும்படி என் இரட்சகரிடம் நான் இறைஞ்சுவேன்; அவர் என்னிடம் மிக்க கனிவுடன் இருந்து வந்துள்ளார்.

19:48. "உங்களையும் கடவுள்-வுடன் நீங்கள் வழிபடும் தெய்வங்களையும் விட்டு நான் விலகிக் கொள்வேன். என் இரட்சகரை மட்டுமே நான் வழிபடுவேன். என் இரட்சகரை மட்டும் இறைஞ்சுவதனால், நான் தவறிப் போகச் சாத்தியமேயில்லை."

19:49. அவர்களையும் கடவுள்-வுடன் அவர்கள் வழிபட்ட தெய்வங்களையும் விட்டு அவர் விலகிக் கொண்ட தால், நாம் அவருக்கு ஐசக்கையும் ஜேகபையும் அளித்தோம், மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு நபியாகவும் நாம் ஆக்கினோம்.

19:50. நமது கருணையை நாம் அவர்கள் பால் பொழிந்தோம், மேலும் சரித்திரத்தில் ஒரு கௌரவமான இடத்தையும் அவர்களுக்கு நாம் அளித்தோம்.

19:51. மோஸஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் அர்ப்பணித்தவராக இருந்தார், மேலும் அவர் ஒரு தூதர் நபியாக இருந்தார்.

19:52. சினாய் மலையின் வலப்புறத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். அவருடன் உரையாடுவதற்காக, அவரை நாம் அருகில் கொண்டு வந்தோம்.

19:53. மேலும் நமது கருணையிலிருந்து அவருடைய சகோதரர் ஆரோனை ஒரு நபியாக, நாம் அவருக்கு அளித்தோம்.

19:54. மேலும் இஸ்மாயிலை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. வாக்குறுதி ஒன்றினை அவர் செய்த போதெல்லாம் அவர் உண்மையுடையவராக இருந்தார், மேலும் அவர் ஒரு தூதர் நபியாக இருந்தார்.

19:55. தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றும்படித் தன் குடும்பத்தாரை ஏவுபவராக அவர் இருந்தார்; அவருடைய இரட்சகரிடம், ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவராக அவர் இருந்தார்.

19:56. மேலும் இத்ரீஸை இந்த வேதத்தில் குறிப்பிட்டுக் கூறுவீராக. அவர் ஒரு புனிதராக, ஒரு நபியாக இருந்தார்.

19:57. கௌரவமானதொரு அந்தஸ்திற்கு அவரை நாம் உயர்த்தினோம்.

19:58. கடவுள்-ஆல் ஆசீர்வதிக்கப்பட்ட நபிமார்களில் இவர்கள் சிலர் ஆவர். அவர்கள் ஆதமின் சந்ததியினர், மற்றும் நோவாவுடன் நாம் சுமந்து கொண்டவர்களின் சந்ததியினர், மற்றும் ஆப்ரஹாம் மற்றும் இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மேலும் நம்மால் வழிகாட்டப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் உள்ளவர்கள் ஆவர். மிக்க அருளாளரின் வெளிப்பாடுகள் அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டால், அவர்கள் அழுதவர்களாக, சிரம் பணிந்து விழுவார்கள்.

19:59. அவர்களுக்குப் பின்னர், (ஸலாத்) தொடர்புத் தொழுகைகளைத் தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய மோகங்களைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றியமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.

19:60. வருத்தப்பட்டு, நம்பிக்கை கொண்டு, மேலும் நேரிய தொரு வாழ்க்கை நடத்துபவர்கள் மட்டுமே, சிறிதளவும் அநீதமின்றி, சுவர்க்கத்தில் நுழைவார்கள்.

19:61. தனிமையிலிருக்கும் போதும், அவரை வழிபடுவோருக்கு மிக்க அருளாளர் வாக்களித்துள்ளபடி, ஏதேன் தோட்டங்கள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. நிச்சயமாக, அவருடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.

19:62. அபத்தமான எதையும் அவர்கள் அங்கே செவியேற்க மாட்டார்கள்; சாந்தி மட்டுமே. பகலிலும் இரவிலும் அங்கே அவர்களுடைய வாழ்வாதாரங்களை, அவர்கள் பெறுவார்கள்.

19:63. இவ்விதமானது சுவர்க்கம்; நம்முடைய சேவகர்களில் நன்னெறியுடையோருக்கு நாம் அதனை அளிப்போம்.

19:64. உம்முடைய இரட்சகரின் கட்டளைப்படியே அன்றி நாங்கள் கீழே வருவதில்லை. எங்களுடைய கடந்த காலமும், எங்களுடைய எதிர்காலமும், மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியவை. உம்முடைய இரட்சகர் ஒருபோதும் மறதியுடையவரல்லர்.

19:65. வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றுக்கும் இரட்சகர்; நீங்கள் அவரை வழிபடவும் அவரை வழிபடுவதில் உறுதியோடு தொடர்ந்து இருக்கவும் வேண்டும். அவருக்கு நிகரான எவரையேனும் நீர் அறிவீரா?

19:66. மனிதன் கேட்கின்றான், "நான் இறந்து விட்ட பின்னர், மீண்டும் நான் உயிர் பெறுவேனா?"

19:67. முன்னரே நாம் அவனை படைத்ததையும், அவன் எதுவுமாக இல்லாதிருந்தான் என்பதையும், மனிதன் மறந்து விட்டானா?

19:68. உம் இரட்சகர் மீது ஆணையாக,அந்த சாத்தான்களுடன் சேர்த்து, அவர்களை நிச்சயம் நாம் வரவழைப் போம், மேலும் இழிவடைந்தவர்களாக, அவர்களை நாம் நரகத்தில் ஒன்று சேர்ப்போம்.

19:69. பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் மிக்க அருளாளரின் மிகத் தீவிரமான விரோதிகளை நாம் பொறுக்கி எடுப்போம்.

19:70. அதில் கருகுவதற்கு மிகவும் தகுதியானவர்கள் யார் என்பதை நாம் முற்றிலும் நன்கறிவோம்.

19:71. உங்களில் தனித்த ஒவ்வொருவரும் அதனைப் பார்த்தே தீர வேண்டும்; இது உம் இரட்சகரின் திரும்பப் பெற முடியாத ஒரு தீர்மானமாகும்.

*19:71 பின் இணைப்பு 11ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நமது பிரபஞ்சத்திற்குக் கடவுளின் நேரடி வருகைக்கு முன்னர் நாம் உயிர்த்தெழுப்பப்படுவோம். அது நரகின் ஒரு தற்காலிக ருசிப்பாக இருக்கும், ஏனெனில் கடவுளின் இருப்பு இல்லாத நிலையே நரகமாகும். கடவுள் வரும்போது (89:22), நன்னெறியுடையோர் மீட்கப்பட்டு விடுவார்கள். பார்க்க (19:72)

19:72. பின்னர் நன்னெறியுடையோரை நாம் மீட்டு விடுவோம், மேலும் வரம்புமீறியவர்களை, இழிவடைந்தவர்களாக அதில் விட்டு விடுவோம்.

19:73. நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் தெளிவாக ஓதிக்காட்டப்படும்போது, நம்பிக்கை கொண்டோரிடம் நம்பமறுப்போர் கூறுகின்றனர், "நம்மில் மிகவும் வளமானவர்கள் யார்? நம்மில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் யார்?"

19:74. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்; அவர்கள் அதிக வலிமையுள்ளவர்களாகவும், மிகவும் வளமானவர்களாகவும் இருந்தனர்.

19:75. கூறும், "எவர்கள் வழிதவறிச் செல்வதைத் தேர்ந்தெடுக்கின்றனரோ, மிக்க அருளாளர் அவர்களை அதில் தொடர்ந்து செலுத்துவார், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் வரை-ஒன்று தண்டனை அல்லது அவ்வேளை. அப்போது தான் உண்மையில் மிக மோசமானவர்கள், வலிமையில் குறைந்தவர்கள் யார் என்பதை அவர்கள் கண்டு கொள்வார்கள்."

19:76. வழிகாட்டப்பட்டவர்களாவதைத் தேர்ந்தெடுத்தோருடைய வழிகாட்டலைக் கடவுள் அதிகரிக்கின்றார். ஏனெனில் நல்ல செயல்கள் உம் இரட்சகரால் நிரந்தர வெகுமதியளிக்கப்படுகின்றன, மேலும் மிக மேலான லாபங்களைக் கொண்டு வருகின்றன.

19:77. நமது வெளிப்பாடுகளை ஏற்கமறுத்துவிட்டுப் பின்னர், "நான் வளமும் பிள்ளைகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறியவனை நீர் கவனித்தீரா?!

19:78. அவன் எதிர்காலத்தைக் கண்டுவிட்டானா? மிக்க அருளாளரிடமிருந்து அத்தகையதொரு உறுதி மொழியை அவன் பெற்றிருக்கின்றானா?

19:79. உண்மையில், அவன் கூறுபவற்றை நாம் பதிவு செய்வோம், பின்னர் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் தண்டனைக்கு அவனை நாம் உட்படுத்துவோம்.

19:80. பின்னர் அவன் சொந்தமாகக் கொண்டிருந்த ஒவ்வொன்றையும் நாம் அனந்தரம் கொள்வோம், மேலும் அவன் முற்றிலும் தனியாக நம்மிடம் திரும்பி வருவான்.

19:81. அவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்பதற்காகக் கடவுள்-வுடன் மற்றத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர்.

19:82. அதற்கு நேர்மாறாக; அவர்களுடைய போலித் தெய்வ வழிபாட்டை அவர்கள் ஏற்கமறுத்துவிடுவர், மேலும் அவர்களுடைய விரோதிகளாகவும் ஆகிவிடுவர்.

19:83. நம்பமறுப்பவர்களைத் தூண்டி விடுவதற்காக அவர்கள் மீது நாம் சாத்தான்களை எவ்வாறு அவிழ்த்து விடுகின்றோம் என்பதை அவர்கள் காணவில்லையா?

19:84. அவசரப்படாதீர்; அவர்களுக்காகச் சில தயாரிப்புகளை நாம் தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.

19:85. மிக்க அருளாளரின் முன்னால் நன்னெறியுடை யோரை ஒரு கூட்டமாக நாம் வரவழைக்கும் அந்நாள் வரும்.

19:86. மேலும் குற்றவாளிகளை நரகத்திற்கு நாம் ஓட்டுவோம், அவர்களுடைய நிரந்தரமான தங்குமிடமாக இருப்பதற்காக.

19:87. மிக்க அருளாளரின் சட்டங்களுக்கு அனுசரனையானவர்களைத் தவிர எவரும் பரிந்துரைக்கும் சக்தி பெறமாட்டார்கள்.

19:88. அவர்கள் கூறினர், "மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார்!"

19:89. நீங்கள் மிகப்பெரும் ஓர் இறைநிந்தனையைக் கூறி விட்டீர்கள்.

19:90. வானங்கள் பிளந்து விடக் கூடும், பூமி துண்டுகளாக வெடித்து விடக்கூடும், மேலும் மலைகள் நொறுங்கிப் போய் விடக்கூடும்.

19:91. மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளார் என அவர்கள் கோருவதால்.

19:92. மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுப்பதென்பது அவருக்குச் சற்றும் தகுமானதல்ல.

19:93. வானங்களிலும் பூமியிலும் உள்ள தனித்த ஒவ்வொரு வரும் மிக்க அருளாளரின் ஒரு சேவகரே ஆவார்.

19:94. அவர்களை அவர் சூழ்ந்திருக்கின்றார், மேலும் அவர் களை ஒருவர் பின் ஒருவராக எண்ணி வைத்துள்ளார்.

19:95. உயிர்த்தெழுப்பப்படும் அந்நாளில் அவர்கள் அனைவரும் தன்னந்தனியாக அவர் முன் வருவார்கள்.

19:96. நிச்சயமாக, நம்பிக்கை கொண்டு நேரிய வாழ்வு நடத்துவோர், மிக்க அருளாளர் அவர்களை அன்பால் பொழிவார்.

19:97. இவ்விதமாக (குர்ஆனாகிய) இதனை நாம் உமது மொழியில் தெளிவானதாக ஆக்கியுள்ளோம், நன்னெறியுடையோருக்கு நற்செய்தியைச் சேர்ப்பிப்பதற்காகவும், இதனைக் கொண்டு எதிர்ப்பாளர்களை எச்சரிப்பதற்காகவும்.

19:98. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்துள்ளோம்; அவர்களில் எவரையேனும் உம்மால் காணவோ அல்லது அவர்களிடமிருந்து சப்தம் எதையேனும் கேட்கவோ முடிகின்றதா?