Find
Chapter 15: Al-Hijr
15:0-99
99 verses Revelation order 54
سورة الحجر

. ١:١٥ الر تِلكَ ءايٰتُ الكِتٰبِ وَقُرءانٍ مُبينٍ

. ٢:١٥ رُبَما يَوَدُّ الَّذينَ كَفَروا لَو كانوا مُسلِمينَ

. ٣:١٥ ذَرهُم يَأكُلوا وَيَتَمَتَّعوا وَيُلهِهِمُ الأَمَلُ فَسَوفَ يَعلَمونَ

. ٤:١٥ وَما أَهلَكنا مِن قَريَةٍ إِلّا وَلَها كِتابٌ مَعلومٌ

. ٥:١٥ ما تَسبِقُ مِن أُمَّةٍ أَجَلَها وَما يَستَـٔخِرونَ

. ٦:١٥ وَقالوا يٰأَيُّهَا الَّذى نُزِّلَ عَلَيهِ الذِّكرُ إِنَّكَ لَمَجنونٌ

. ٧:١٥ لَو ما تَأتينا بِالمَلٰئِكَةِ إِن كُنتَ مِنَ الصّٰدِقينَ

. ٨:١٥ ما نُنَزِّلُ المَلٰئِكَةَ إِلّا بِالحَقِّ وَما كانوا إِذًا مُنظَرينَ

. ٩:١٥ إِنّا نَحنُ نَزَّلنَا الذِّكرَ وَإِنّا لَهُ لَحٰفِظونَ

. ١٠:١٥ وَلَقَد أَرسَلنا مِن قَبلِكَ فى شِيَعِ الأَوَّلينَ

. ١١:١٥ وَما يَأتيهِم مِن رَسولٍ إِلّا كانوا بِهِ يَستَهزِءونَ

. ١٢:١٥ كَذٰلِكَ نَسلُكُهُ فى قُلوبِ المُجرِمينَ

. ١٣:١٥ لا يُؤمِنونَ بِهِ وَقَد خَلَت سُنَّةُ الأَوَّلينَ

. ١٤:١٥ وَلَو فَتَحنا عَلَيهِم بابًا مِنَ السَّماءِ فَظَلّوا فيهِ يَعرُجونَ

. ١٥:١٥ لَقالوا إِنَّما سُكِّرَت أَبصٰرُنا بَل نَحنُ قَومٌ مَسحورونَ

. ١٦:١٥ وَلَقَد جَعَلنا فِى السَّماءِ بُروجًا وَزَيَّنّٰها لِلنّٰظِرينَ

. ١٧:١٥ وَحَفِظنٰها مِن كُلِّ شَيطٰنٍ رَجيمٍ

. ١٨:١٥ إِلّا مَنِ استَرَقَ السَّمعَ فَأَتبَعَهُ شِهابٌ مُبينٌ

. ١٩:١٥ وَالأَرضَ مَدَدنٰها وَأَلقَينا فيها رَوٰسِىَ وَأَنبَتنا فيها مِن كُلِّ شَىءٍ مَوزونٍ

. ٢٠:١٥ وَجَعَلنا لَكُم فيها مَعٰيِشَ وَمَن لَستُم لَهُ بِرٰزِقينَ

. ٢١:١٥ وَإِن مِن شَىءٍ إِلّا عِندَنا خَزائِنُهُ وَما نُنَزِّلُهُ إِلّا بِقَدَرٍ مَعلومٍ

. ٢٢:١٥ وَأَرسَلنَا الرِّيٰحَ لَوٰقِحَ فَأَنزَلنا مِنَ السَّماءِ ماءً فَأَسقَينٰكُموهُ وَما أَنتُم لَهُ بِخٰزِنينَ

. ٢٣:١٥ وَإِنّا لَنَحنُ نُحى ۦ وَنُميتُ وَنَحنُ الوٰرِثونَ

. ٢٤:١٥ وَلَقَد عَلِمنَا المُستَقدِمينَ مِنكُم وَلَقَد عَلِمنَا المُستَـٔخِرينَ

. ٢٥:١٥ وَإِنَّ رَبَّكَ هُوَ يَحشُرُهُم إِنَّهُ حَكيمٌ عَليمٌ

. ٢٦:١٥ وَلَقَد خَلَقنَا الإِنسٰنَ مِن صَلصٰلٍ مِن حَمَإٍ مَسنونٍ

. ٢٧:١٥ وَالجانَّ خَلَقنٰهُ مِن قَبلُ مِن نارِ السَّمومِ

. ٢٨:١٥ وَإِذ قالَ رَبُّكَ لِلمَلٰئِكَةِ إِنّى خٰلِقٌ بَشَرًا مِن صَلصٰلٍ مِن حَمَإٍ مَسنونٍ

. ٢٩:١٥ فَإِذا سَوَّيتُهُ وَنَفَختُ فيهِ مِن روحى فَقَعوا لَهُ سٰجِدينَ

. ٣٠:١٥ فَسَجَدَ المَلٰئِكَةُ كُلُّهُم أَجمَعونَ

. ٣١:١٥ إِلّا إِبليسَ أَبىٰ أَن يَكونَ مَعَ السّٰجِدينَ

. ٣٢:١٥ قالَ يٰإِبليسُ ما لَكَ أَلّا تَكونَ مَعَ السّٰجِدينَ

. ٣٣:١٥ قالَ لَم أَكُن لِأَسجُدَ لِبَشَرٍ خَلَقتَهُ مِن صَلصٰلٍ مِن حَمَإٍ مَسنونٍ

. ٣٤:١٥ قالَ فَاخرُج مِنها فَإِنَّكَ رَجيمٌ

. ٣٥:١٥ وَإِنَّ عَلَيكَ اللَّعنَةَ إِلىٰ يَومِ الدّينِ

. ٣٦:١٥ قالَ رَبِّ فَأَنظِرنى إِلىٰ يَومِ يُبعَثونَ

. ٣٧:١٥ قالَ فَإِنَّكَ مِنَ المُنظَرينَ

. ٣٨:١٥ إِلىٰ يَومِ الوَقتِ المَعلومِ

. ٣٩:١٥ قالَ رَبِّ بِما أَغوَيتَنى لَأُزَيِّنَنَّ لَهُم فِى الأَرضِ وَلَأُغوِيَنَّهُم أَجمَعينَ

. ٤٠:١٥ إِلّا عِبادَكَ مِنهُمُ المُخلَصينَ

. ٤١:١٥ قالَ هٰذا صِرٰطٌ عَلَىَّ مُستَقيمٌ

. ٤٢:١٥ إِنَّ عِبادى لَيسَ لَكَ عَلَيهِم سُلطٰنٌ إِلّا مَنِ اتَّبَعَكَ مِنَ الغاوينَ

. ٤٣:١٥ وَإِنَّ جَهَنَّمَ لَمَوعِدُهُم أَجمَعينَ

. ٤٤:١٥ لَها سَبعَةُ أَبوٰبٍ لِكُلِّ بابٍ مِنهُم جُزءٌ مَقسومٌ

. ٤٥:١٥ إِنَّ المُتَّقينَ فى جَنّٰتٍ وَعُيونٍ

. ٤٦:١٥ ادخُلوها بِسَلٰمٍ ءامِنينَ

. ٤٧:١٥ وَنَزَعنا ما فى صُدورِهِم مِن غِلٍّ إِخوٰنًا عَلىٰ سُرُرٍ مُتَقٰبِلينَ

. ٤٨:١٥ لا يَمَسُّهُم فيها نَصَبٌ وَما هُم مِنها بِمُخرَجينَ

. ٤٩:١٥ نَبِّئ عِبادى أَنّى أَنَا الغَفورُ الرَّحيمُ

. ٥٠:١٥ وَأَنَّ عَذابى هُوَ العَذابُ الأَليمُ

. ٥١:١٥ وَنَبِّئهُم عَن ضَيفِ إِبرٰهيمَ

. ٥٢:١٥ إِذ دَخَلوا عَلَيهِ فَقالوا سَلٰمًا قالَ إِنّا مِنكُم وَجِلونَ

. ٥٣:١٥ قالوا لا تَوجَل إِنّا نُبَشِّرُكَ بِغُلٰمٍ عَليمٍ

. ٥٤:١٥ قالَ أَبَشَّرتُمونى عَلىٰ أَن مَسَّنِىَ الكِبَرُ فَبِمَ تُبَشِّرونَ

. ٥٥:١٥ قالوا بَشَّرنٰكَ بِالحَقِّ فَلا تَكُن مِنَ القٰنِطينَ

. ٥٦:١٥ قالَ وَمَن يَقنَطُ مِن رَحمَةِ رَبِّهِ إِلَّا الضّالّونَ

. ٥٧:١٥ قالَ فَما خَطبُكُم أَيُّهَا المُرسَلونَ

. ٥٨:١٥ قالوا إِنّا أُرسِلنا إِلىٰ قَومٍ مُجرِمينَ

. ٥٩:١٥ إِلّا ءالَ لوطٍ إِنّا لَمُنَجّوهُم أَجمَعينَ

. ٦٠:١٥ إِلَّا امرَأَتَهُ قَدَّرنا إِنَّها لَمِنَ الغٰبِرينَ

. ٦١:١٥ فَلَمّا جاءَ ءالَ لوطٍ المُرسَلونَ

. ٦٢:١٥ قالَ إِنَّكُم قَومٌ مُنكَرونَ

. ٦٣:١٥ قالوا بَل جِئنٰكَ بِما كانوا فيهِ يَمتَرونَ

. ٦٤:١٥ وَأَتَينٰكَ بِالحَقِّ وَإِنّا لَصٰدِقونَ

. ٦٥:١٥ فَأَسرِ بِأَهلِكَ بِقِطعٍ مِنَ الَّيلِ وَاتَّبِع أَدبٰرَهُم وَلا يَلتَفِت مِنكُم أَحَدٌ وَامضوا حَيثُ تُؤمَرونَ

. ٦٦:١٥ وَقَضَينا إِلَيهِ ذٰلِكَ الأَمرَ أَنَّ دابِرَ هٰؤُلاءِ مَقطوعٌ مُصبِحينَ

. ٦٧:١٥ وَجاءَ أَهلُ المَدينَةِ يَستَبشِرونَ

. ٦٨:١٥ قالَ إِنَّ هٰؤُلاءِ ضَيفى فَلا تَفضَحونِ

. ٦٩:١٥ وَاتَّقُوا اللَّهَ وَلا تُخزونِ

. ٧٠:١٥ قالوا أَوَلَم نَنهَكَ عَنِ العٰلَمينَ

. ٧١:١٥ قالَ هٰؤُلاءِ بَناتى إِن كُنتُم فٰعِلينَ

. ٧٢:١٥ لَعَمرُكَ إِنَّهُم لَفى سَكرَتِهِم يَعمَهونَ

. ٧٣:١٥ فَأَخَذَتهُمُ الصَّيحَةُ مُشرِقينَ

. ٧٤:١٥ فَجَعَلنا عٰلِيَها سافِلَها وَأَمطَرنا عَلَيهِم حِجارَةً مِن سِجّيلٍ

. ٧٥:١٥ إِنَّ فى ذٰلِكَ لَـٔايٰتٍ لِلمُتَوَسِّمينَ

. ٧٦:١٥ وَإِنَّها لَبِسَبيلٍ مُقيمٍ

. ٧٧:١٥ إِنَّ فى ذٰلِكَ لَـٔايَةً لِلمُؤمِنينَ

. ٧٨:١٥ وَإِن كانَ أَصحٰبُ الأَيكَةِ لَظٰلِمينَ

. ٧٩:١٥ فَانتَقَمنا مِنهُم وَإِنَّهُما لَبِإِمامٍ مُبينٍ

. ٨٠:١٥ وَلَقَد كَذَّبَ أَصحٰبُ الحِجرِ المُرسَلينَ

. ٨١:١٥ وَءاتَينٰهُم ءايٰتِنا فَكانوا عَنها مُعرِضينَ

. ٨٢:١٥ وَكانوا يَنحِتونَ مِنَ الجِبالِ بُيوتًا ءامِنينَ

. ٨٣:١٥ فَأَخَذَتهُمُ الصَّيحَةُ مُصبِحينَ

. ٨٤:١٥ فَما أَغنىٰ عَنهُم ما كانوا يَكسِبونَ

. ٨٥:١٥ وَما خَلَقنَا السَّمٰوٰتِ وَالأَرضَ وَما بَينَهُما إِلّا بِالحَقِّ وَإِنَّ السّاعَةَ لَـٔاتِيَةٌ فَاصفَحِ الصَّفحَ الجَميلَ

. ٨٦:١٥ إِنَّ رَبَّكَ هُوَ الخَلّٰقُ العَليمُ

. ٨٧:١٥ وَلَقَد ءاتَينٰكَ سَبعًا مِنَ المَثانى وَالقُرءانَ العَظيمَ

. ٨٨:١٥ لا تَمُدَّنَّ عَينَيكَ إِلىٰ ما مَتَّعنا بِهِ أَزوٰجًا مِنهُم وَلا تَحزَن عَلَيهِم وَاخفِض جَناحَكَ لِلمُؤمِنينَ

. ٨٩:١٥ وَقُل إِنّى أَنَا النَّذيرُ المُبينُ

. ٩٠:١٥ كَما أَنزَلنا عَلَى المُقتَسِمينَ

. ٩١:١٥ الَّذينَ جَعَلُوا القُرءانَ عِضينَ

. ٩٢:١٥ فَوَرَبِّكَ لَنَسـَٔلَنَّهُم أَجمَعينَ

. ٩٣:١٥ عَمّا كانوا يَعمَلونَ

. ٩٤:١٥ فَاصدَع بِما تُؤمَرُ وَأَعرِض عَنِ المُشرِكينَ

. ٩٥:١٥ إِنّا كَفَينٰكَ المُستَهزِءينَ

. ٩٦:١٥ الَّذينَ يَجعَلونَ مَعَ اللَّهِ إِلٰهًا ءاخَرَ فَسَوفَ يَعلَمونَ

. ٩٧:١٥ وَلَقَد نَعلَمُ أَنَّكَ يَضيقُ صَدرُكَ بِما يَقولونَ

. ٩٨:١٥ فَسَبِّح بِحَمدِ رَبِّكَ وَكُن مِنَ السّٰجِدينَ

. ٩٩:١٥ وَاعبُد رَبَّكَ حَتّىٰ يَأتِيَكَ اليَقينُ

Al-Hijr Valley

15:1. A.L.R.* These (letters) are proofs of this scripture; a profound Quran.

*15:1 & *15:9 The divine source and the perfect preservation of the Quran are proven by the Quran's mathematical code (Appendix 1). God's Messenger of the Covenant was destined to unveil this great miracle. The word "Dhikr" denotes the Quran's code in several verses (15:6, 21:2, 26:5, 38:1, 38:8, 74:31). The value of "Rashad Khalifa" (1230)+15+9=1254, 19x66.

15:2. Certainly, those who disbelieved will wish they were submitters.

15:3. Let them eat, enjoy, and remain blinded by wishful thinking; they will find out.

15:4. We never annihilated any community, except in accordance with a specific, predetermined time.

15:5. The end of any community can never be advanced, nor delayed.

15:6. They said, "O you who received this reminder, you are crazy.

15:7. "Why do you not bring down the angels, if you are truthful?"

15:8. We do not send down the angels except for specific functions. Otherwise, no one will be respited.

15:9. Absolutely, we have revealed the reminder, and, absolutely, we will preserve it.

*15:1 & *15:9 The divine source and the perfect preservation of the Quran are proven by the Quran's mathematical code (Appendix 1). God's Messenger of the Covenant was destined to unveil this great miracle. The word "Dhikr" denotes the Quran's code in several verses (15:6, 21:2, 26:5, 38:1, 38:8, 74:31). The value of "Rashad Khalifa" (1230)+15+9=1254, 19x66.

15:10. We have sent (messengers) before you to the communities in the past.

15:11. Every time a messenger went to them, they ridiculed him.

15:12. We thus control the minds of the guilty.

15:13. Consequently, they cannot believe in him. This has been the system since the past generations.

15:14. Even if we opened for them a gate into the sky, through which they climb;

15:15. they will say, "Our eyes have been deceived. We have been bewitched."

15:16. We placed galaxies in the sky, and adorned it for the beholders.

15:17. And we guarded it against every rejected devil.

15:18. If any of them sneaks around to listen, a mighty projectile will chase him back.

15:19. As for the earth, we constructed it, and placed on it stabilizers (mountains), and we grew on it a perfect balance of everything.

15:20. We made it habitable for you,* and for creatures you do not provide for.

*15:20 When we send astronauts into space, we provide them with precisely measured quantities of food, water, and oxygen. God created the spaceship Earh with billions of astronauts who work and reproduce; He supplied them with a self-supporting system that generates oxygen, fresh water, and a great variety of delicious foods and drinks.

15:21. There is nothing that we do not own infinite amounts thereof. But we send it down in precise measure.

15:22. And we send the winds as pollinators, and cause water to come down from the sky for you to drink. Otherwise, you could not keep it palatable.

15:23. It is we who control life and death, and we are the ultimate inheritors.

15:24. And we fully know those among you who advance, and we fully know those who regress.

15:25. Your Lord will surely summon them. He is Most Wise, Omniscient.

15:26. We created the human being from aged mud, like the potter's clay.

15:27. As for the jinns, we created them, before that, from blazing fire.

15:28. Your Lord said to the angels, "I am creating a human being from aged mud, like the potter's clay.

15:29. "Once I perfect him, and blow into him from My spirit, you shall fall prostrate before him."

15:30. The angels fell prostrate; all of them,

15:31. except Iblis (Satan). He refused to be with the prostrators.

15:32. He said, "O Iblis (Satan), why are you not with the prostrators?"

15:33. He said, "I am not to prostrate before a human being, whom You created from aged mud, like the potter's clay."

15:34. He said, "Therefore, you must get out; you are banished.

15:35. "You have incurred My condemnation until the Day of Judgment."

15:36. He said, "My Lord, respite me until the day they are resurrected."

15:37. He said, "You are respited.

15:38. "Until the specified day and time."

15:39. He said, "My Lord, since You have willed that I go astray, I will surely entice them on earth; I will send them all astray.

15:40. "Except those among Your worshipers who are devoted absolutely to You alone."

15:41. He said, "This is a law that is inviolable.

15:42. "You have no power over My servants. You only have power over the strayers who follow you.

15:43. "And Hell awaits them all.

15:44. "It will have seven gates. Each gate will get a specific share of them."

15:45. As for the righteous, they will enjoy gardens and springs.

15:46. Enter therein, peaceful and secure.

15:47. We remove all jealousy from their hearts. Like one family, they will be on adjacent furnishings.

15:48. Never will they suffer any fatigue therein; never will they be evicted therefrom.

15:49. Inform My servants that I am the Forgiver, Most Merciful.

15:50. And that My retribution is the most painful retribution.

15:51. Inform them about Abraham's guests.

15:52. When they entered his quarters, they said, "Peace." He said, "We are apprehensive about you."

15:53. They said, "Do not be apprehensive. We have good news for you: an enlightened son."

15:54. He said, "How can you give me such good news, when I am so old? Do you still give me this good news?"

15:55. They said, "The good news we give you is true; do not despair."

15:56. He said, "None despairs of his Lord's mercy, except the strayers."

15:57. He said, "What is your mission, O messengers?"

15:58. They said, "We are being dispatched to guilty people.

15:59. "As for Lot's family, we will save them all.

15:60. "But not his wife; she is destined to be with the doomed."

15:61. The messengers went to Lot's town.

15:62. He said, "You are unknown people."

15:63. They said, "We bring to you what they have been doubting.

15:64. "We bring to you the truth; we are truthful.

15:65. "You shall take your family during the night. Stay behind them, and make sure that none of you looks back. Go straight as commanded."

15:66. We delivered to him this command: those people are to be annihilated in the morning.

15:67. The people of the city came joyfully.

15:68. He said, "These are my guests; do not embarrass me.

15:69. "Fear God, and do not shame me."

15:70. They said, "Did we not enjoin you from contacting anyone?"

15:71. He said, "Here are my daughters, if you must."

15:72. But, alas, they were totally blinded by their lust.

15:73. Consequently, the disaster struck them in the morning.

15:74. We turned it upside down, and showered them with devastating rocks.

15:75. This is a lesson for those who possess intelligence.

15:76. This will always be the system.

15:77. This is a sign for the believers.

15:78. The people of the woods also were transgressors.

15:79. Consequently, we avenged from them, and both communities are fully documented.

15:80. The people of Al-Hijr disbelieved the messengers.

15:81. We gave them our revelations, but they disregarded them.

15:82. They used to carve secure homes out of the mountains.

15:83. The disaster hit them in the morning.

15:84. What they hoarded did not help them.

15:85. We did not create the heavens and the earth, and everything between them, except for a specific purpose. The end of the world will come, so treat them with benign neglect.

*15:85-88 One of the functions of God's Messenger of the Covenant is to deliver the Quranic assertion that the world will end in AD 2280 (20:15, 72:27 & Appendix 25).

15:86. Your Lord is the Creator, the Omniscient.

15:87. We have given you the seven pairs, and the great Quran.

15:88. Do not be jealous of what we bestowed upon the other (messengers), and do not be saddened (by the disbelievers), and lower your wing for the believers.

15:89. And proclaim: "I am the manifest warner."

15:90. We will deal with the dividers.

15:91. They accept the Quran only partially.

15:92. By your Lord, we will question them all,

15:93. about everything they have done.

15:94. Therefore, carry out the orders given to you, and disregard the idol worshipers.

15:95. We will spare you the mockers,

15:96. who set up another god beside God. They will surely find out.

15:97. We know full well that you may be annoyed by their utterances.

15:98. You shall sing the praises of your Lord, and be with the prostrators.

15:99. And worship your Lord, in order to attain certainty.*

*15:99 The practices of worship are our means of attaining certainty (Appendix 15).

அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு

15:1. அ.ல.ர.* (எழுத்துகளான) இவை இந்த வேதத்தின் சான்றுகளாகும்; ஆழ்ந்ததொரு குர்ஆன்.

*15:1 & *15:9 குர்ஆனுடைய தெய்வீக மூலமும் அதன் பரிபூரணமான பாதுகாப்பும் குர்ஆனின் கணிதக் குறியீட்டின் மூலம்நிரூபிக்கப்பட்டுள்ளது. (பின் இணைப்பு 1). இந்த மாபெரும் அற்புதத்தின் திரையை விலக்குவதற்கெனக் கடவுளின் உடன் படிக்கைத் தூதர் விதிக்கப்பட்டிருந்தார். "திக்ர்" என்ற வார்த்தை பல வசனங்களில் குர்ஆனின் குறியீட்டைக் குறிக்கின்றது (15:6, 21:2, 26:5, 38:1, 38:8, 74:31). "ரஷாத் கலீஃபா" வின் எழுத்தெண்மதிப்பு (1230)+15+9=1254, 19x66.

15:2. மிக நிச்சயமாக, நம்பமறுத்தவர்கள், தாங்கள் சரணடைந்தோராக இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுவார்கள்

15:3. அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், மேலும் ஆசைமிகு எண்ணங்களால் குருட்டுத்தனமாக இருக்கட்டும்; அவர்கள் கண்டு கொள்வார்கள்.

15:4. ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்ப அன்றி, நாம் எந்தச் சமூகத்தையும் ஒரு போதும் அழித்ததில்லை.

15:5. எந்தச் சமூகத்தின் முடிவும், ஒருபோதும் முற்படுத்தப்படவோ, அல்லது தாமதப்படுத்தப்படவோ இயலாது.

15:6. அவர்கள் கூறினர், இந்த நினைவூட்டலைப் பெற்றவரே உம்மைத்தான், நீர் பித்துப்பிடித்தவர்.

15:7. "நீர் உண்மையாளராக இருந்தால், நீர் ஏன் வானவர்களைக் கீழே கொண்டு வரவில்லை?"

15:8. குறிப்பிட்ட காரியங்களுக்காகவே அன்றி வானவர்களை நாம் கீழே அனுப்புவதில்லை. அவ்வாறெனில், ஒருவரும் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

15:9. நிச்சயமாக, நாம் இந்நினைவூட்டலை வெளிப்படுத்தினோம், மேலும் நிச்சயமாக, நாம் இதனைப் பாதுகாப்போம்.*

15:10. கடந்துபோன சமூகங்களுக்கு உமக்கு முன்னர் நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம்.

15:11. ஒவ்வொரு முறை ஒரு தூதர் அவர்களிடம் சென்ற போதும், அவர்கள் அவரை ஏளனம் செய்தனர்.

15:12. இவ்விதமாக நாம் குற்றவாளிகளின் மனங்களைக் கட்டுப்படுத்துகின்றோம்.

15:13. அதன் விளைவாக, அவர் மீது அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது. கடந்து போன தலைமுறை யினரிலிருந்தே இதுதான் வழிமுறையாக இருந்து வந்துள்ளது.

15:14. அவர்கள் ஏறுவதற்காக, விண்ணிற்குள் ஒரு வாயிலை அவர்களுக்காக நாம் திறந்தாலும்;

15:15. அவர்கள் கூறுவர், "எங்களுடைய கண்கள் ஏமாற்றப்பட்டு விட்டன. நாங்கள் சூனியம் செய்யபட்டவர்களாகி விட்டோம்."

15:16. விண்ணில் நட்சத்திர மண்டலங்களை நாம் அமைத்தோம், மேலும் காண்பவர்களுக்கு அழகாக அதனை ஆக்கினோம்.

15:17. மேலும் விரட்டப்பட்ட ஒவ்வொரு சாத்தானுக்கெதிராகவும் அதனை நாம் பாதுகாத்தோம்.

15:18. அவர்களில் எவரேனும் கவனித்துக் கேட்பதற்காக அதனருகில் இரகசியமாக நெருங்கினால், சக்தி மிக்கதொரு ஏவுகணை அவனைப் பின்னால் துரத்தும்.

15:19. பூமியைப் பொறுத்தவரை, நாம் அதனை நிர்மாணித்தோம், மேலும் நிலைப்படுத்திகளை (மலைகளை) அதன்மீது அமைத்தோம், மேலும் அதன் மீது முற்றிலும் சமச்சீராக ஒவ்வொன்றையும் நாம் வளர்த்தோம்.

15:20. உங்களுக்கும், நீங்கள் வாழ்வாதாரம் அளித்திடாத படைப்புகளுக்கும், வசிக்கத்தக்கதாக* நாம் அதனை ஆக்கினோம்.

*15:20 விண்வெளி வீரர்களை நாம் அண்டவெளிக்குள் அனுப்பும் போது, உணவு, நீர் மற்றும் பிராணவாயு ஆகியவற்றை மிகச் சரியாக அளவிட்டு நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். பணிபுரிந்து இனப்பெருக்கம் செய்யும் கோடிக்கணக்கான விண் வெளி வீரர்களுடன் இந்தப் பூமி எனும் விண்கலத்தைக் கடவுள் படைத்தார். பிராணவாயு, புத்தம் புதிய நீர், மேலும் ஏராளமான வகைகளில் சுவையான உணவு மற்றும் பானங்களைத் தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும் திறன் கொண்ட சுயசார்பு கொண்ட ஓர் ஒழுங்கமைப்பை அவர்களுக்கு அவர் வழங்கினார்.

15:21. அதில் உள்ள எந்த ஒன்றும், எல்லையற்ற அளவில், நமக்குச் சொந்தமாக இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அவற்றை மிகச் சரியான அளவில் கீழே இறக்குகின்றோம்.

15:22. மேலும் கருக்கொள்ளச் செய்பவையாகக் காற்றுகளை நாம் அனுப்புகின்றோம், மேலும் நீங்கள் அருந்துவதற்காக விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழிறங்கி வரச் செய்கின்றோம். இல்லையெனில், சுவைக்கத் தக்கதாக அதனை வைத்திருக்க உங்களால் இயலாது.

15:23. நாம் தாம் வாழ்வையும் மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம், மேலும் நாமே இறுதியான வாரிசு களாவோம்.

15:24. மேலும், உங்களில் முன்னேறிச் செல்பவர்களை முற்றிலும் நாம் அறிவோம், பின்வாங்கிச் செல்பவர்களையும் முற்றிலும் நாம் அறிவோம்.

15:25. நிச்சயமாக உம்முடைய இரட்சகர் அவர்களை ஒன்று திரட்டுவார். அவர் ஞானம் மிகுந்தவர், எல்லாம் அறிந்தவர்.

15:26. குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து, மனிதனை நாம் படைத்தோம்.

15:27. ஜின்களை பொறுத்தவரை, அதற்கு முன்னர், கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து, அவர்களை நாம் படைத்தோம்.

15:28. உம்முடைய இரட்சகர் வானவர்களிடம் கூறினார், "குயவனின் களிமண்ணைப் போன்ற பழமையான சேற்றில் இருந்து ஒரு மனிதனை நான் படைக்கின்றேன்.

15:29. "அவரை நான் பூரணப்படுத்தி, மேலும் என் ஆவியில் இருந்து அவருள் நான் ஊதியவுடன், அவர் முன்னர் நீங்கள் சிரம்பணிந்து விழுந்திட வேண்டும்."

15:30. வானவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர்; அவர்கள் அனைவரும்,

15:31. (சாத்தான்) இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர்களுடன் இருந்திட அவன் மறுத்து விட்டான்.

15:32. அவர் கூறினார், "(சாத்தான்) இப்லீஸே, சிரம் பணிந்தவர்களுடன் நீ ஏன் இருக்கவில்லை?"

15:33. அவன் கூறினான், "குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து நீர் படைத்த ஒரு மனிதர் முன், நான் சிரம் பணிவதற்கில்லை."

15:34. அவர் கூறினார், "அப்படியானால், கண்டிப்பாக நீ வெளியேறி விடத்தான் வேண்டும்; நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்.

15:35. "தீர்ப்பளிக்கப்படும் நாள் வரை எனது கண்டனத்திற்கு நீ உள்ளாகி விட்டாய்."

15:36. அவன் கூறினான், "என் இரட்சகரே, அவர்கள் உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பீராக."

15:37. அவர் கூறினார், "உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

15:38. "குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரம் வரை."

15:39. அவன் கூறினான், "என் இரட்சகரே, நான் வழி தவறிச் செல்வதை நீர் நாடிவிட்டதால், பூமியின் மீது நிச்சயமாக நான் அவர்களை வசீகரிப்பேன்; அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் செலுத்தி விடுவேன்.

15:40. "உம்மை வழிபடுபவர்களில் உமக்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைத் தவிர."

15:41. அவர் கூறினார், "இது மீற முடியாததொரு சட்டம் ஆகும்."

15:42. "என்னுடைய ஊழியர்கள் மீது உனக்கு எந்த ஆதிக்கமுமில்லை. உன்னைப் பின்பற்றும் வழி தவறியவர்கள் மீது மட்டுமே உனக்கு ஆதிக்கம் உள்ளது.

15:43. "மேலும் அவர்கள் அனைவரையும் நரகம் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

15:44. "அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் அவர்களில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பெற்றுக் கொள்ளும்."

15:45. நல்லோர்களைப் பொறுத்தவரை, தோட்டங்களையும், நீருற்றுகளையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.

15:46. சாந்தி நிறைந்தவர்களாகவும், பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் அதில் நுழையுங்கள்.

15:47. அவர்களுடைய இதயங்களிலிருந்து பொறாமை அனைத்தையும் நாம் அகற்றி விடுகின்றோம். ஒரு குடும்பத்தினரைப் போல், அவர்கள் அருகருகில் உள்ள ஆசனங்கள் மீது இருப்பார்கள்.

15:48. அங்கே அவர்கள் ஒருபோதும் எந்தக் களைப்பிற்கும் உள்ளாக மாட்டார்கள்; அங்கிருந்து அவர்கள் ஒரு போதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.

15:49. நானே மன்னிப்பவன், மிக்க கருணையாளன் என்பதை என் ஊழியர்களுக்குத் தெரியப்படுத்துவீராக.

15:50. மேலும் எனது தண்டனையோ மிகவும் வலி நிறைந்த தண்டனை ஆகும்.

15:51. ஆப்ரஹாமின் விருந்தினர்களைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.

15:52. அவருடைய குடியிருப்பிற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள் கூறினர், "சாந்தி." அவர் கூறினார், "நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் அஞ்சியவர்களாக இருக்கின்றோம்."

15:53. அவர்கள் கூறினர், "அஞ்சாதீர். நாங்கள் உமக்கு ஒரு நற்செய்தியை வைத்திருக்கின்றோம்: அறிவூட்டப் பெற்ற ஒரு மகன்."

15:54. அவர் கூறினார், "நான் இத்தனை வயதானவனாக இருக்கும்போது, இத்தகைய நற்செய்தியை எப்படி நீங்கள் எனக்குத் தர முடியும்? இப்பொழுதுமா இந்த நற்செய்தியை நீங்கள் எனக்குத் தருகின்றீர்கள்?"

15:55. அவர்கள் கூறினர், "நாங்கள் உமக்குத் தரும் நற்செய்தி உண்மையானதே; விரக்தியடைந்து விடாதீர்."

15:56. அவர் கூறினார், "வழிதவறியவர்களைத் தவிர, எவரும் தன் இரட்சகரின் கருணையில் விரக்தியடைய மாட்டார்கள்."

15:57. அவர் கூறினார், "தூதர்களே, உங்களுடைய பணி என்ன?"

15:58. அவர்கள் கூறினர், "குற்றம் புரிந்த மக்களிடம் நாங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றோம்.

15:59. "லோத்தின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றி விடுவோம்.

15:60. "ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அழிந்தவர்களுடன் இருந்திட அவள் விதிக்கப்பட்டுள்ளாள்."

15:61. அத்தூதர்கள் லோத்தின் நகரத்திற்குச் சென்றனர்.

15:62. அவர் கூறினார், "நீங்கள் அறிமுகமில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்."

15:63. அவர்கள் கூறினர், "அவர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருந்ததை நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.

15:64. "நாங்கள் சத்தியத்தையே உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; நாங்கள் உண்மையாளர்களாக இருக்கின்றோம்.

15:65. "இரவுப் பொழுதில் உம்முடைய குடும்பத்தினரை அழைத்துச் சென்றுவிடும். அவர்களுக்குப் பின்னால் இருந்து கொள்ளும், மேலும் உங்களில் எவரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும். கட்டளையிடப்பட்டபடி நேராகச் சென்று விடும்."

15:66. இக்கட்டளையை நாம் அவரிடம் சேர்ப்பித்தோம்: காலையில் அம்மக்கள் அழிக்கப்பட இருக்கின்றனர்.

15:67. அந்த நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.

15:68. அவர் கூறினார், "இவர்கள் என்னுடைய விருந்தாளிகள்; என்னைச் சங்கடத்துக்கு உள்ளாக்காதீர்கள்.

15:69. "கடவுள்-ஐ அஞ்சுங்கள் மேலும், என்னைச் சங்கடப்படுத்தாதீர்கள்."

15:70. அவர்கள் கூறினர், எவருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என நாங்கள் உம்மைத் தடுத்திருந்தோம் அல்லவா?

15:71. அவர் கூறினார், "உங்களுக்கு வேண்டுமென்றால், இதோ என் மகள்கள் இருக்கின்றனர்."

15:72. ஆனால், அந்தோ, அவர்களுடைய காமத்தால் அவர்கள் முற்றிலும் குருடர்களாக இருந்தனர்.

15:73. அதன் விளைவாக, காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.

15:74. நாம் அதனைத் தலைகீழாகப் புரட்டினோம், மேலும் நாசம் விளைவிக்கும் பாறைகளை அவர்கள் மீது பொழிந்தோம்.

15:75. அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.

15:76. இதுவே எப்பொழுதும் வழிமுறையாக இருக்கும்.

15:77. நம்பிக்கையாளர்களுக்கு இது ஓர் அத்தாட்சியாகும்.

15:78. வனங்களில் வசித்த மக்களும் வரம்புமீறியவர்களாக இருந்தனர்.

15:79. அதன் விளைவாக, அவர்களை நாம் பழிவாங்கினோம், மேலும் இவ்விரு சமூகங்களும் முற்றிலும் பதியப்பட்டவையாக உள்ளன.

15:80. அல்-ஹிஜ்ர் சமூகத்தவரும் தூதர்களை நம்பமறுத்தனர்.

15:81. நம்முடைய வெளிப்பாடுகளை நாம் அவர்களுக்கு கொடுத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்தனர்.

15:82. மலைகளைக் குடைந்து அதிலிருந்து பாதுகாப்பான இல்லங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர்.

15:83. காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.

15:84. அவர்கள் சேர்த்து வைத்தவை அவர்களுக்கு உதவி செய்யவில்லை.

15:85. வானங்களையும் பூமியையும், அவற்றுக்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே அன்றி நாம் படைக்கவில்லை. உலக முடிவு வந்தே தீரும், எனவே கனிவுடன் அவர்களை அலட்சியம் செய்வீராக.

*15:85-88 கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் பணிகளில் ஒன்று, கிபி 2280ல் இந்த உலகம் முடிந்து போகும் என்ற குர்ஆனின் உறுதியான அறிவிப்பைச் சேர்ப்பிப்பதாகும். (20:15, 72:27) மற்றும் பின் இணைப்பு 25).

15:86. உம்முடைய இரட்சகர்தான் படைத்தவர், எல்லாம் அறிந்தவர்.

15:87. நாம் உமக்கு ஏழு ஜோடிகளையும், மகத்தான குர் ஆனையும் தந்துள்ளோம்.

15:88. மற்ற(தூதர்களுக்கு) நாம் வழங்கியவற்றின் மீது பொறாமை கொள்ளாதீர், மேலும் (நம்பமறுப்பவர்களால்) துக்கமடையாதீர், மேலும் நம்பிக்கையாளர்களிடத்தில் உமது இறக்கையைத் தாழ்த்திக் கொள்வீராக.

15:89. மேலும் பிரகடனம் செய்வீராக: நான் தெளிவான எச்சரிப்பவனே ஆவேன்.

15:90. பிரிவினையாளர்கள் மீது நாம் நடவடிக்கை எடுப்போம்.

15:91. அவர்கள் குர்ஆனை பகுதி மட்டுமே ஏற்றுக்கொள்கின்றனர்.

15:92. உம் இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் அனைவரையும் நாம் விசாரிப்போம்,

15:93. அவர்கள் செய்த ஒவ்வொன்றைக் குறித்தும்.

15:94. ஆகவே, உமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல்படுத்துவீராக, மேலும் போலித் தெய்வ வழிபாடு செய்பவர்களைப் பொருட்படுத்தாது இருப்பீராக.

15:95. கேலி செய்பவர்களிடமிருந்து உம்மை நாம் காப்பாற்றி விடுவோம்,

15:96. அவர்கள் கடவுள்-வுடன் மற்றொரு தெய்வத்தை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.

15:97. அவர்களுடைய கூற்றுகளால் நீர் தொல்லைப்படக் கூடும் என்பதை நாம் முற்றிலும் நன்கறிவோம்.

15:98. நீர் உம்முடைய இரட்சகரின் புகழ் பாடவேண்டும், மேலும் சிரம் பணிந்தோருடன் இருந்திட வேண்டும்.

15:99. மேலும், உறுதிப்பாட்டினை* அடைந்திடும் பொருட்டு, உம்முடைய இரட்சகரை வழிபட வேண்டும்.

*15:99 உறுதிப்பாட்டினை அடைவதற்கு வழிபாட்டு அனுஷ்டானங்களே நம்முடைய உபாயங்கள் ஆகும் (பின் இணைப்பு 15).